வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது.
ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன் ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது.
ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம்.
தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது.
பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.
மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை" என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.
சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில 'பழைய' கதைகளைப் பதிவு செய்கிறோம் - ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை.
என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை" என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.
நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது
ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது.
மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். "சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்" என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம்.
ஒபாமாவின் வெற்றியைக் கண்டு கண் கலங்கும் கறுப்பு நங்கையின் கண்களிலிருந்து மீண்டும் ஒரு முறை கண்ணீரை வரவழைப்பதும் கூட அத்தனை சுலபமாயிராது. 'வெள்ளை' அமெரிக்காவால் அது முடியாது.