செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.
முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும் ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.
“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.
சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது மந்திரங்களும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.
‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல.
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய பேராசிரியர் சௌந்தரராஜன் மீதோ, அவரைக் காப்பாற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களை கைது செய்திருக்கிறது போலீசு
என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் முதலாளித்துவ வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம்
கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களின் மதிப்பெண்களைக் குறைத்தது மட்டுமல்லாமல், அதற்கு நியாயம் கேட்கச் சென்ற மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார் துறைத்தலைவர் சௌந்திர ராஜன்
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள்.
பெண் விடுதலை, பெண்ணியம் என்று பொதுவாக பேசும்போது, உழைக்கும் பெண்களின் மீதான மூலதனத்தின் ஆதிக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதைப் பற்றி பேசாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை
2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 4,05,861. இதில் உபி-யில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஜெர்மனியில் 1911-ம் ஆண்டு 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் போலீசை எதிர்த்து அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர்.