டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
“நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை”
அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து நம் மனம் வேதனை அடைகிறது.
துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் அவர்களது தொழிலின் அவலத்தையும் நம் க்ண்முன்னே காட்சிப்படுத்துவதோடு, நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறார் மலர்வதி !
1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது.
தன்னைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்ததும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு சென்றதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
“என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்” - இரணியன்
வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.
தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.
21 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கிராமப்புற பெண்களை அதிர்ச்சியில் உறையவைத்தது மட்டுமல்ல அவர்களின் சுதந்திரத்தையும் பறித்துள்ளது.
பொதுவுடைமை லட்சியத்திற்கான போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, தோழர் சிவராமன் குறித்த இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய அவசியத் தேவை ஆகும்.
அனீஷ் படுகொலை செய்யப்பட்டப் பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து வெளியான கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
நம் கேள்விகளுக்கு சங்கிகளின் தயார்நிலை பதில்களையும், நம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறையையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை !