Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 12

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 04 | பிப்ரவரி, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விலையேற்றம்: மக்கள் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்!
  • காட்டு வேட்டை: மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சி.
  • அவலத்தில் அரசு மருத்துவமனை போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்
  • கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு:
    டாட்டா-பிர்லாவின் கூட்டாளி? பாட்டாளிக்குப் பகையாளி!
  • பி.டி.கத்தரிக்காய்: மறுகாலனியாக்கத்தின் அடுத்த குண்டு!
  • ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத் தன்மை’!
  • வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை
  • கிரிமினல் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரம்: இது எந்த வகையில் நியாயம்?
  • ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!
  • பாக்ராம்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் புதிய கொலைகார முகம்
  • பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்
  • காட்டு வேட்டை: நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காதல் திருமணங்களை தடுப்பது ஆர்.எஸ்.எஸ். வேலைத்திட்டம் | தோழர் தொல்.திருமாவளவன் | வாழ்த்துரை

காதல் திருமணங்களை தடுப்பது ஆர்.எஸ்.எஸ். வேலைத்திட்டம்
தோழர் தொல்.திருமாவளவன் | வாழ்த்துரை

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கம்யூனிஸ்டுகள், நக்சல்பாரிகள் சாதி மறுப்பு திருமணங்களை உயர்த்திப் பிடிப்பவர்கள்! | தோழர் வெற்றிவேல் செழியன் | வாழ்த்துரை

கம்யூனிஸ்டுகள், நக்சல்பாரிகள்
சாதி மறுப்பு திருமணங்களை உயர்த்திப் பிடிப்பவர்கள்!
தோழர் வெற்றிவேல் செழியன் | வாழ்த்துரை

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”

ந்தியாவிலேயே முதல் மாநிலமாக சி.பி.ஐ.(எம்) கட்சி ஆளும் கேரளாவில் தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். கேரள மாநிலம் உருவான தினமான நவம்பர் 1 அன்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவர் இதனை பெருமையாக அறிவித்தார்.

கேரளாவில் தீவிர வறுமையால் பாதிக்கப்பட்ட 64,006 குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குடும்பங்களின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப குறிப்பான நுண் திட்டங்களை உருவாக்கியதன் மூலம் இது சாத்தியமாயிற்று என்று பினராயி விஜயன் கூறியிருக்கிறார். “இதற்காக ரூ.1000 கோடி செலவில் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டன. உணவு, இருப்பிடம், மருத்துவத் தேவை, ஆவணங்கள் இல்லாதவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 5,400-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5,522 வீடுகள் பழுது பார்க்கப்பட்டுள்ளன. 2,713 நிலமற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 21,263 நபர்களுக்கு முதல் முறையாக ரேஷன் அட்டை, ஆதார் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 20,648 குடும்பங்களுக்கான தினசரி உணவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,210 பேருக்கு சூடான உணவு வழங்கப்பட்டது. 85,721 நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று நீண்ட பட்டியலை அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இது ‘நவகேரள மாடல்’-இன் வெற்றி என்றும் மக்கள் மையத் திட்ட மாதிரி என்றும் புகழ்ந்திருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” (People’s Democracy).

அதேசமயம், கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர வறுமை ஒழிப்பு என்பது மோசடி என்று விமர்சித்து சட்டப் பேரவையிலிருந்து வெளியேறியிருக்கிறது. கேரள மக்கள் மத்தியிலிருந்தும் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

கேரள மக்களின் எதார்த்த வாழ்நிலை

தீவிர வறுமை ஒழிக்கப்பட்டதாக மார்தட்டிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியின் ஆட்சியில்தான், ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கேரளாவின் தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆஷா தொழிலாளர்கள்.

கொரோனா பெருந்தொற்று, வயநாடு நிலச்சரிவு எனப் பேரழிவு காலங்களில், இறந்த பிணங்களை அகற்றுவது, பிறப்பு – இறப்பு கணக்கெடுப்பு எடுப்பது, மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது என ஆஷா தொழிலாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

இத்தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதியிலிருந்து, 200 நாட்களுக்கும் மேலாக, அம்மாநில தலைமைச் செயலகத்தின் முன்பு போராடி வருகின்றனர். 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களே இதில் அதிகம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆவர்.

சுகாதார முன்களப் பணியாளர்களான இத்தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ வெறும் ரூ.7,000 மட்டுமே. இந்தியா முழுவதும், தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளமாக ரூ.15,000 நிர்ணயிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்ற சி.பி.எம். கட்சி, தங்கள் மாநிலத்தில் பணியாற்றுகின்ற பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு வெறும் ரூ.7,000 மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கான எந்தவித சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்துவது கிடையாது.

இந்நிலையில்தான், கடுமையான வேலைப் பளுவில், நியாயமான ஊதியமின்றி, சமூகப் பாதுகாப்புத் திட்டமின்றி, பணியாற்றும் பெண்கள் தங்கள் உரிமைக்காக களமிறங்கி இருக்கின்றனர். தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும்; தங்களது ஊதியத்தை ரூ.21,000-ஆக உயர்த்த வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் ரூ.5 லட்சம் வழங்க வெண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். தீவிர வறுமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நேரம் வரை இத்தொழிலாளர்கள் தலைமை செயலகத்தின் முன்பு போராடிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் இப்பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கொச்சைப்படுத்தினார். தற்போது தொழிலாளர்களின் தீவிரப் போராட்டத்தால் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த ரூ.8,000-ஐ வைத்து உணவு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகளை கூட பெற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

தொழிலாளர்களின் நிலை இவ்வாறிருக்க, “தீவிர வறுமையை” ஒழித்துவிட்டதாக கேரள சி.பி.எம். அரசு பேசுவது அப்பட்டமான மோசடியே.

அடுத்ததாக, கேரளாவில் 4.85 சதவிகிதம் அளவிற்கு உள்ள பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களது நில உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பழங்குடித் தலைவர் மணிக்குட்டன் கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு அறிவிப்பு குறித்து வயநாட்டில் கூறுகையில், “அவர்கள் கடந்த ஆண்டு டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுடன் இங்கு வந்தனர். அவர்கள் எங்கள் உணவு, எங்கள் வருமானம் மற்றும் எங்கள் உடல்நலம் பற்றி கேட்டார்கள். எங்களுக்கு வீடுகளும் நிலங்களும் கிடைக்கும் என்று சொன்னார்கள். இப்போது கேரளா வறுமை இல்லாத மாநிலம் என்கிறார்கள். ஆனால் எங்களுடைய நிலம் எங்கே? வீடு எங்கே?” என்று கேரள அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

அதேபோல், கேரளாவின் பெரும்பாலான மீனவர்களின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாகும். கடல் அரிப்புப் பகுதியில் வாழ்கின்ற இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. இவர்களும் இந்த தீவர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

மேலும், அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரமானது, கேரளாவில் 29.9 சதவிகித மக்கள் கடனாளிகளாக இருக்கின்றனர் என்றும் அத்தியாவசிய செலவுகள், கல்வி மற்றும் விவசாய செலவுகள், இ.எம்.ஐ. (EMI) ஆகியவற்றுக்காக கடன் வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கடன் வாங்குவதில், இந்தியாவிலேயே கேரளா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

ஏனெனில், கேரளாவில் நிலையான வேலை கிடையாது. அரசு புள்ளிவிவரப்படியே கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.5 சதவிகிதமாகும். எனவேதான், பெண்கள் உட்பட பலர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். கேரளப் பொருளாதாரத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதேபோல, காலனியக் காலத்திலிருந்தே தேயிலை தோட்டத்தின் வரிசை வீடுகளில் வாழ்ந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறு அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அடித்தட்டு உழைக்கும் மக்களை புறக்கணித்துவிட்டு, தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக சி.பி.எம். அரசு ஜம்பமடிப்பது அயோக்கித்தனமாகும்.

அதுமட்டுமின்றி, “64,000 குடும்பங்கள்தான் தீவிர வறுமையில் இருப்பதாக கண்டறிந்ததற்கு என்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன? இது தேர்தலுக்கான அரசியல் நாடகம்” என்கிறார், கேரள சமூக விஞ்ஞானி ஜே.பிரபாஸ்.

மேலும், சமூக செயற்பாட்டாளர் ஆர்.வி.ஜி. மேனன், பொருளாதார வல்லுநர்கள் எம்.ஏ. உம்மன் மற்றும் கே.பி. கண்ணன் உள்ளிட்டு 24 பேர் கையெழுத்திட்ட கடிதத்தில், ஏழைகளை தெளிவாக அடையாளம் காணும் நம்பகமான மற்றும் விரிவான ஆய்வையும், எந்த நிபுணர் குழு இக்கணக்கெடுப்பை மேற்கொண்டது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

“ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “அந்தியோதயா அன்ன யோஜனா” திட்டத்தில் 5.92 இலட்சம் மக்கள் பயன்பெறுவதாக உணவுத் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். வறுமையில் வாழ்கின்ற இவர்களுக்கு அரிசியும் கோதுமையும் வழங்கப்படுகிறது. கேரளாவில் 64,000 குடும்பங்கள்தான் தீவிர வறுமையில் இருந்தன என்றால், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்களா?” என்று காட்டமாகக் கேள்வியெழுப்புகிறார், கே.பி. கண்ணன்.

மேலும், 2021-இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பான வீடு, குறைந்தபட்ச வருமானம் மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்பொழுது தங்களைப் பராமரித்துக்கொள்ள இயலாதவர்கள் மட்டுமே  இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இக்கேள்விகள் எதற்கும் கேரள சி.பி.எம். அரசு பதிலளிக்கத் தயாராக இல்லை. மாறாக, கேரளாவில் தீவிர வறுமையின் விகிதம் 0.72-தான் என்று நிதி ஆயோக்கின் புள்ளிவிவரத்தைக் கைக்காட்டுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்கே அரசுத் திட்டங்களை நம்பியிருக்கின்ற சூழலில், தீவிர வறுமையை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது மட்டுமல்ல, பினராயி விஜயன் அரசு அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆற்றும் சேவையை மூடிமறைக்கின்ற திரையுமாகும்.

திரிபுவாதத்தின் உச்சம்

மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்த ஓட்டாண்டித்தனத்திற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டாக இந்தத் தீவிர வறுமை ஒழிப்பு நாடகம் உள்ளது.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் ஒரு போதும் வறுமையை ஒழிக்க முடியாது என்பது மார்க்சியத்தின் அடிப்படை. முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் அடிப்படையாக இருப்பது உற்பத்திச் சாதனங்களின் தனியுடைமையே. அது பொதுவுடைமையாக, ஒட்டுமொத்த சமூகத்தின் உடைமையாக மாற்றப்பட வேண்டும். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலமே சாத்தியம் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. ஆனால், “மார்க்சிஸ்டுகள்” என்று சொல்லிக் கொள்கிற சி.பி.எம். கட்சியினர், அதானிக்கு சேவை செய்து கொண்டே ‘தீவிர வறுமையை’ ஒழித்துவிட்டதாகக் கூறுவது மார்க்சியத்திற்கு செய்யும் துரோகமாகும்.

லெனின் காலத்திய திரிபுவாதிகள் முதலாளித்துவத்திலிருந்து படிப்படியாக சோசலிசத்தை நோக்கி செல்ல முடியும் என்றார்கள். அவர்களின் வாரிசுகளான சி.பி.எம். கட்சியோ நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பதுடன், அதன் நீட்சியாக, வறுமையை ஒழிக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமெல்லாம் தேவையில்லை, முதலாளிகளுக்கு சேவை செய்துகொண்டே வறுமையை ஒழித்துவிட முடியும், அதுதான் கேரள மாடல் என்று நம்ப சொல்கிறது. இது திரிபுவாதத்தின் உச்சமாகும்.

அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 03 | ஜனவரி, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்
  • “தோழர் ஸ்டாலின் வழி நடப்போம்! முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!
  • தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்
  • நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகிவரும் இந்திய அரசின் சதிகள்
  • கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி
  • விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமான்களின் வக்கிர ஆட்சி!
  • தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!
  • “நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”
  • எது பயங்கரவாதம்?
  • அணுசக்தி கடப்பாடு மசோதா: மலிவானதா மக்களின் உயிர்?
  • துபாய் நெருக்கடி: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!
  • ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
  • சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!
    -அடக்குமுறைக்கு எதிராக அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்
  • ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புரட்சிகர மணவிழா: அநீதிக்கு எதிரான பண்பாட்டு போரின் தொடக்கவிழா | தோழர் ஆ.கா.சிவா | வாழ்த்துரை

புரட்சிகர மணவிழா: அநீதிக்கு எதிரான பண்பாட்டு போரின் தொடக்கவிழா
தோழர் ஆ.கா.சிவா | வாழ்த்துரை

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 02 | டிசம்பர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விவசாயிகள்-மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
  • “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்!” “மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!”
    -புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
  • முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம்.-இன் பித்தலாட்டம்!
  • சிவப்பஞ்சலி முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
  • கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
  • தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
  • மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’
  • இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?
  • தில்லை கோயிலை மீண்டும் தீட்சிதர் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க..
    உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!
  • “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுக்கு நீதிமன்றமே பக்கமேளம்!
  • பொறுக்கி அரசியல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 01 | நவம்பர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க. – காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்
  • நக்சல்வேட்டை… அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!
  • கோவா குண்டு வெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்
  • தமிழக எம்.பி.க்களின் ஈழச் சுற்றுலா: துரோகிகளுக்குப் புரியுமா மக்களின் அவலம்?
  • இந்தியா-ஏசியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: விவசாயிகளுக்குப் பேரிடி!
  • ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!
  • ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும் அமெரிக்காவின் நப்பாசையும்
  • திராவிட-தமிழினக் கட்சிகளின் சமூக நீதி: ஊழலின் கவசமா?
  • இது இன்னும் நீடிக்கலாமா?
  • “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது!”
  • “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடு! விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!”
    -விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்
  • குர்கான் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி: மறுகாலனியாதிக்க எதிர்ப்பில் புதிய அத்தியாயம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”

லக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க வல்லரசு, தனது மேலாதிக்கத்தை தக்கவைத்து கொள்வதற்கும், மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கும் பல்வேறு கொள்கைகள், திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் “அனைத்துலக வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை”யும் (USAID – United States Agency for International Development) அதன் கீழ் வழங்கப்பட்டு வந்த உலகளாவிய நிதியுதவிகளும்.

1961-இல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் உருவாக்கப்பட்ட யு.எஸ். எய்ட் முகமை சோவியத் ஒன்றிய ஆதரவு நாடுகளில், ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்புவது, சீர்குலைவு, ஆட்சிக் கவிழ்ப்புகளில் ஈடுபடுவது போன்ற சதிகளை செயல்படுத்தி வந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் பொதுக் கருத்தை உருவாக்குவதற்கு இம்முகமை பயன்படுத்தப்பட்டு வந்தது.

மேலும், இயற்கை சீற்றங்கள், போரினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உணவு, மருத்துவ உதவிகள் செய்யும் மனிதாபிமான நிறுவனமாக வேடமிட்டுக் கொண்டு, பல ஏழை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் படிப்படியாக தலையிட்டு, அந்நாடுகளை அமெரிக்காவின் அணிவரிசையில் இணைத்துக் கொள்வதை உத்தியாக கையாண்டது. இதற்காக அமெரிக்க வல்லரசு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வந்தது.

இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தன்னார்வ நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், ஜனநாயக மேம்பாட்டுக்கான அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடக அமைப்புகள் போன்ற பெயர்களில் உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெச்.ஐ.வி., காசநோய், போலியோ மற்றும் நோய் தொற்றுகளை தடுப்பது, தாய்மார்களின் பேறுகால இறப்பு, குழந்தை இறப்புகளை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். பல ஏழை நாடுகள் தங்களது சுகாதார – மருத்துவத் தேவைகளுக்காக பெரும்பாலும் அமெரிக்காவின் யு.எஸ். எய்ட் நிதியைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்தாண்டு ஜனவரியில் பாசிஸ்ட் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, யு.எஸ். எய்ட் நிறுவனம் 90 நாட்களுக்கு முடக்கப்பட்டது. அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) முகவர்கள், யு.எஸ். எய்ட் அலுவலகங்களை சோதனையிட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் இணையதள பக்கம் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டது. மார்ச் மாத நிலவரப்படி, யு.எஸ். எய்டின் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஜூலை 1 அன்று யு.எஸ். எய்ட்-ஐ அதிகாரப்பூர்வமாக  இழுத்து மூடியது பாசிச டிரம்ப் அரசு.

யு.எஸ். எய்ட் மூடப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்ச மக்களும், 2030-ஆம் ஆண்டிற்குள் 1.4 கோடி மக்களும் கொல்லப்படுவர், அதில் 45 லட்சம் பேர் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருப்பர் என்று “தி லான்செட்” மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யு.எஸ். எய்ட் நிதி முடக்கத்தால் கென்யாவில் உள்ள அகதிகள் முகாம்களில், ஊட்டச்சத்து மற்றும் உணவு உதவிகள் நிறுத்தப்பட்டு அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிற்கு கொடூரமான நிலநடுக்கம் ஏற்பட்டு 3,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், யு.எஸ். எய்ட் நிதி முடக்கம் அந்நாட்டு மக்களுக்கு மேலும் பேரழிவாக அமைந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பரில் “தி நியூயார்க் டைம்ஸ்” வெளியிட்ட செய்தியில், “யு.எஸ். எய்ட் முடக்கத்தால் ஏற்கெனவே ஆறு லட்சம் மக்கள் இறந்துவிட்டனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள்” என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. போரைப் போலல்லாமல், இம்மரணங்கள் உலகம் முழுவதும் பரவி மெதுவாகவும் பொதுவெளியில் தெரியாமலும் அரங்கேறி வருவதாக அச்செய்தி இந்த அபாயத்தை எடுத்துரைத்துள்ளது.

மேலும், யு.எஸ். எய்ட் நிதி நேரடியாக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, பிற மனிதாபிமான நிறுவனங்களுக்கு நிதியுதவியாகவும் அளிக்கப்படுகிறது. சான்றாக, யு.என். எய்ட்ஸ் (UNAIDS) நிறுவனத்தின் சர்வதேச எச்.ஐ.வி. நிதியில் 75 சதவிகிதம் யு.எஸ். எய்ட் நிதியிலிருந்தே பெறப்படுகிறது. அது தற்போது துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக யு.என். எய்ட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிதி முடக்கத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ள யு.என். எய்ட்ஸ்-இன் அறிக்கை, ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்ய முடியாமல் பெண்கள், குழந்தைகள் கைவிடப் பட்டுள்ளதாகவும், 20 லட்சத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் அத்தியாவசிய சுகாதார சேவைகளை இழந்துள்ளதாகவும் அம்பலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நிதி முடக்கத்தால் 25 லட்சம் மக்களால் பிஆர்.ஈ.பி. (PrEP) எனப்படும் ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான புருண்டியில் 64 சதவிகிதமும், உகாண்டாவில் 38 சதவிகிதமும் இம்மருந்து பயன்பாடு குறைந்துள்ளது. அதேபோல், நைஜீரியாவில் ஆணுறை விநியோகம் 55 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்தகைய காரணங்களால் உலகம் முழுவதும் ஹெச்.ஐ.வி. இறப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த நிதி முடக்கத்தால் இந்தியா ஆண்டுதோறும் பெற்றுவந்த சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பாதிப்புகளும் இறப்புகளும் இந்தியாவிலும் அரங்கேறும் அபாயம் உள்ளது. ஆனால், எது குறித்தும் முறையாக புள்ளிவிவரத்தை வெளியிடாமல் மோசடிகளில் ஈடுபட்டுவரும் பாசிச மோடியின் ஆட்சியில் இந்த பாதிப்புகள் குறித்த உண்மை தரவுகளை கூட அறிந்துகொள்ள முடியாத அவல நிலையே உள்ளது.

இவ்வாறு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரை குடித்துவரும் யு.எஸ். எய்ட் நிதி முடக்கத்திற்கு நியாயம் கற்பிக்கும் பாசிச டிரம்ப் அரசு, உலக நாடுகளுக்கு அமெரிக்கா செலவிட்டு வருவது மோசடி என்றும் வெட்டிச் செலவு என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்த சொற்ப பணத்தை ஒதுக்கிவிட்டு, அந்நாடுகளின் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் வரைமுறையின்றி கொள்ளையடித்து வருகிறது என்பதே நிதர்சனம்.

உண்மையில், மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு இந்த சொற்ப பணத்தை கூட செலவிட வேண்டியதில்லை; மிரட்டல், வரி தாக்குதல், போர் அறிவிப்பு போன்ற உத்திகளை கையாள்வதன் மூலமே அந்நாடுகளை அடிமைப்படுத்தி விடலாம் என்பதே டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பலின் அணுகுமுறையாக உள்ளது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஏகாதிபத்திய கழுகுகளுக்கு மனிதாபிமான உதவிகள் குறித்தெல்லாம் கவலை இல்லை, கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையும் மேலாதிக்க நலனுமே முக்கியம் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இது அமெரிக்க வல்லரசிற்கு எதிராக சர்வதேச உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தியுள்ளது.

துலிபா

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 12 | அக்டோபர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் யார்?
  • செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர்
    “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டுவோம்!” – மாணவிகளின் போர்க்கோலம்!
  • மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்!
  • “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை!”
  • போலி மோதல் கொலைகள்: அரசு பயங்கரவாதமே!
  • கோபாட் காந்தி கைது: சட்டவிரோதமானது! மனித உரிமைகளுக்கு எதிரானது!
  • சி.பி.எம். இன் நில அபகரிப்பு: திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு?
  • விடுதலைச் சிறுத்தைகளின் ரவுடித்தனம் – கொலைவெறித் தாக்குதல்
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?
  • “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது!”
  • முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலை விட கொடிய கிருமி!
  • அணுகுண்டு சோதனைகள் புஸ்வாணமானதா?
  • காங்கிரசின் ‘சிக்கனம்”: ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 11 | செப்டம்பர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!
  • மணிப்பூர்: தலைவிரித்தாடும் இராணுவ-போலீசு பயங்கரவாதம்
  • வறட்சியின் பிடியில் விவசாயிகள் கொண்டாட்டத்தில் முதலாளிகள்
  • நீதியின் வறட்சியும் பாயும் நிதியும்
  • பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்
  • தமிழ்நாடு வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்: யாருக்கு இலாபம்?
  • இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
  • உங்கள் ஓட்டு அம்பானிகளின் ஆட்சி
  • இலங்கைத் தூதரகத்தின் கைக்கூலி பத்திரிகையாளர்கள்!
  • செல்வராசா பத்பநாதன் கைது: சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் தாக்குதல் தொடர்கிறது
  • நேபாளக் குண்டு வெடிப்பு: இந்து மதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்
  • தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?
  • பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்!
  • விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 10 | ஆகஸ்ட், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!
  • “சிவனடியார் ஆறுமுகசாமியத் தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சிதக் கும்பலைக் கைது செய்!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டம்
  • “ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தி தண்டனை கொடு! ஈழத் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி, மறுவாழ்வு கொடு!!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  • பட்ஜெட்: விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?
  • தொழிலாளர்களின் உயிரையும் பறிக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!
  • “கொள்கையைக் குப்பையில் போடு! ஊழலைக் கோபுரத்தில் வை!!”
    -சி.பி.எம்.-இன் புதிய சித்தாந்தம்
  • வெடி விபத்தல்ல, பச்சைப் படுகொலை!
  • கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப் புத்தி
  • மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு: பித்தலாட்டத்தின் புது அவதாரம்
  • ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!
  • கோயபல்சை விஞ்சிய “இந்து” என்.ராம்.
  • தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்குத் தாரைவார்ப்பு: பிஞ்சு குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
  • ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம்! சூட்கேசுக்குப் பல்கலைக்கழகம்!!
  • கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! கல்வி தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவோம்!
    -புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் (RSYF) பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  • விவசாயம் அழிகிறது விலைவாசி உயர்கிறது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 09 | ஜூலை, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்
  • ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
  • ஈழத் தமிழினத் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
  • சி.பி.எம். – காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்
  • ஈரான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா
  • கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
  • ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
  • கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?
  • சி.பி.எம் – காங்கிரசு
    இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்!
  • இந்து வெறியர்களுக்கு, குஜராத்! இந்திய இராணுவத்துக்கு, காஷ்மீர்!!
  • அமெரிக்கா: மாயை கலைந்தது! உண்மை சுடுகிறது!!
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள்: பலனடைந்தது யார்? பன்னாட்டு நிறுவனங்களா, அடித்தட்டுப் பெண்களா?
  • கலாவதியின் துயரக் கதையும் ராகுலின் வக்கிரப் புத்தியும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 08 | ஜூன், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழம்: பேரழிவு-பின்னடைவு ஏன்?
  • “பாசிச ராஜபக்சே கும்பலை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டனை கொடு!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  • நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?
  • சி.பி.எம்.இன் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை
  • பன்றிக் காய்ச்சல்: பன்றிகளைக் குற்றவாளியாக்காதீர்கள்!
  • பெரும் இருபது நாடுகள் (G-20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம் இந்தியாவின் துரோகம்
  • ரமாபாய் நகர் துப்பாக்கிச் சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை!
  • பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!
  • நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி ஓட்டுக் கட்சிகளின் துரோகம்
  • கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடு நெருப்பா? இலாப வெறியா?
  • தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்
  • குஜராத் இனப் படுகொலை: பாதிக் கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்
  • பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2009 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 07 | மே, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்
  • “ஈழத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்-பிரச்சார இயக்கம்
  • மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்
  • குலேசன் குபேரனான கதை
  • கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்
  • சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது சி.பி.எம்.
  • ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க. கம்பெனியின் நாடகம்
  • ஈழப் போரும் இந்திய மேலாதிக்க நலன்களும்
  • பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்
  • அமெரிக்கா – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்
    வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?
  • காங்கிரசு கயவாளிகளுக்குச் செருப்படி மட்டும் போதாது!
  • கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram