1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 06 | ஏப்ரல், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 05 | மார்ச், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தலையங்கம்: ஈழப் போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக் கட்சிகளின் கபடத்தனம்
ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் மறியல்-ஆர்ப்பாட்டங்கள்
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதல்: அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!
முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானோ?
எஸ்.சி.-எஸ்.டி. இட ஒதுக்கீட்டுக்குக் குழிபறிப்பு: பர்ப்பன-பாசிஸ்டுகளின் கொல்லைப்புறச் சதிகள்
தில்லை நடராஜர் ஆலயம்: தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 04 | பிப்ரவரி, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 03 | ஜனவரி, 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச மோடி அரசு புதிய அணுசக்தி மசோதாவை (SHANTI Bill 2025) மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இது, இதுநாள் வரை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த இந்திய அணுசக்தித் துறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்களின் முதலீட்டை அனுமதித்து அவற்றின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளது. மேலும், நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்நிறுவனங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை, முறையாக நட்ட ஈடு கொடுக்கத் தேவையில்லை என்பதுடன் நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்களோ, குடிமை அமைப்புகளோ, ஏன் அரசோ கூட புகாரெழுப்ப முடியாது என்ற நிலையை உருவாக்குகிறது. இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் சுயாதிபத்தியத்தையும் அமெரிக்காவின் காலடியில் மோடி காணிக்கையாக்கியுள்ளார்.
ஆனால், இந்த சட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2008-ஆம் ஆண்டு கையெழுத்தான “இந்திய-அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தமே” (123 ஒப்பந்தம்) ஆகும். இதன் காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு மொண்ணையாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தங்கள் கடமையை முடித்து கொண்டுவிட்டன.
இச்சூழலில், இந்திய-அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் குறித்து ”அக்டோபர் 2008” புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையை இங்கே பதிவிடுகிறோம். தற்போதைய புதிய அணுசக்தி சட்டம் குறித்து விரைவில் கட்டுரை வெளியிடப்படும்.
***
இந்திய-அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம்: துரோகத்தின் வெற்றி!
இந்திய – அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக்கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.
123 ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறி, நடைமுறைக்கு வரும் நாள் நெருங்க நெருங்க, அதனின் உண்மையான முகமும்; இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட “அரும்பாடுபட்டு வரும் மன்மோகன் சிங் – பிரணாப் முகர்ஜி – எம்.கே நாராயணன் சிவசங்கர் மேனன் – அனில் ககோத்கர் என்ற ஐவர் கும்பல் கடைந்தெடுத்த பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் அம்பலமாகி வருகிறது.
அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டி 123 ஒப்பந்தம் குறித்து எழுப்பியிருந்த 45 கேள்விகளுக்கு அமெரிக்க அரசு அளித்துள்ள பதில்களும்; இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக, அதிபர் புஷ் கொடுத்துள்ள விளக்கங்களும் குறிப்புகளும், இந்த அணுசக்திக் கூட்டுறவு ஒப்பந்தம் என்பது இந்தியா அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுத்துள்ள அடிமைச் சாசனம் என்பதை அம்பலப்படுத்திவிட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்கள், விமர்சனங்களுக்கு, மன்மோகன் சிங் அளித்து வரும் பதில்களும், வாக்குறுதிகளும் வெறும் வெத்து வேட்டு என்பதும் நிரூபணமாகி விட்டது.
மன்மோகனின் காலை வாரிய புஷ்
“123 ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவிற்கு யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும் உரிமை மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை (அணு குண்டு தயாரிப்பதற்காக) மறுசுழற்சி செய்து செறிவூட்டும் உரிமையும்; மின்சாரம் உற்பத்தி செய்யவும், அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படும் இரட்டை பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையும் கிடைக்கும்” என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார், மன்மோகன் சிங்.
அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டி இந்த உரிமைகள் அனைத்தும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு நான்கு கேள்விகளை எழுப்பியிருந்தது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்து, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, உரையாடும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
அமெரிக்க அரசு இந்த நான்கு கேள்விகளுக்கும் அளித்துள்ள பதிலில், “இந்திய அமெரிக்க ஒப்பந்தம், இரட்டைப் பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிக்க முன்வந்தாலும், அத்தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளித்தேயாக வேண்டும் என இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை நிர்பந்திக்க முடியாது. அமெரிக்க அரசின் கொள்கைப்படியும், இரட்டைப் பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களை அளிக்கப் போவதில்லை.”
“அதிநுட்பம் வாய்ந்த அணுத் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை இயக்கவும் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவாது.”
“அதிநுட்பம் வாய்ந்த அணுத் தொழில்நுட்பங்களையோ உதிரி பாகங்களையோ இந்தியாவிற்கு அளிப்பதற்கு வசதியாக, இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது.”
“இத்தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிப்பதாக இருந்தாலும், ஹைட் சட்டத்திற்கு உட்பட்டுதான், அமெரிக்கா இந்தியாவிற்கு அளிக்கும்” எனப் பதில் அளித்திருக்கிறது.
எரிபொருள் உறுதிமொழி: காத்தோடு போச்சு
“இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை, அவற்றின் இறுதிக்காலம் வரை இயக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என 123 ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது; இந்த உறுதிமொழியினை அடிப்படையாகக் கொண்டுதான். இந்தியாவின் சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்திக் அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டது.”
“இந்தியாவிற்கு யுரேனியம் தருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதனைத் தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும்; அத்தடைகளை சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கும் உரிமையும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தேவைக்கேற்ப யுரேனியத்தை இறக்குமதி செய்து சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இந்தியாவிற்கு உண்டு” என நாடாளுமன்றத்தில் 123 ஒப்பந்தத்தின் அருமை பெருமைகளை அள்ளி வீசியிருந்தார், மன்மோகன் சிங்.
இந்தியா குறிப்பிடும் இந்த உரிமைகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அரசு, “இந்தியாவிற்குத் தடையின்றி யுரேனியம் வழங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் அளித்துள்ள உறுதிமொழி, அமெரிக்க அரசின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகும். யுரேனியம் வழங்குவதில் தடை ஏற்படும் பொழுது, இந்தியாவின் பக்கம் தவறில்லை எனும் பட்சத்தில்தான் அமெரிக்கா உதவும்.”
“சந்தை நிலைமையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, அதனால் யுரேனியம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே, அமெரிக்கா உதவும்; மாறாக, இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி அதன் விளைவாக யுரேனியம் வழங்குவதில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும், கோளாறுகளையும், தடைகளையும் நீக்கிக் கொடுக்க அமெரிக்கா உதவும் எனப் பொத்தாம் பொதுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”
“இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், யுரேனியம் வழங்குவது உள்ளிட்டு, அணுசக்தி தொடர்பான அனைத்து விதமான ஒத்துழைப்பையும் உடனடியாக, மேலும் தொடராமல் நிறுத்திவிடும் உரிமையும்; அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெற்றுக் கொண்ட யுரேனியம் உள்ளிட்ட அனைத்து அணுப்பொருட்களையும் திரும்பக் கோரும் உரிமையும்; ஒரு வருடகால அவகாசம் கொடுத்து இந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்து கொள்ளும் உரிமையும் அமெரிக்காவிற்கு உண்டு.”
அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விலக்கு அளித்ததை அறிவிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி (நடுவில்), பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் (இடது) மற்றும் அணுசக்தி கமிசனின் தலைவர் அனில் ககோத்கர்.
“இந்தியா, தனது எதிர்காலத் தேவையையொட்டி அணு எரிபொருளைச் சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமை பற்றிய வரையறைகளை எதிர்காலத்தில்தான் வளர்த்தெடுக்க முடியும்; இந்தியாவின் இந்த உரிமை அமெரிக்காவின் ஹைட் சட்டத்திற்குக் கட்டுப்படாது என இப்பொழுதே கூறுவது அவசரக்குடுக்கைத்தனமாகும்; மேலும், அணு உலைகளை இயக்குவதற்கு நியாயமாக எவ்வளவு எரிபொருள் தேவைப்படும் என்பதுகூட இன்னும் வரையறுக்கப்படவில்லை; இந்த வரையறை பற்றி இரண்டு அரசுகளும் கலந்தாலோசனை கூட நடத்தவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.
நிரந்தரமாகும் கண்காணிப்பு
“இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் தடை ஏற்படும் பொழுது, அதனைச் சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கும் உரிமையும்; அப்படித் தடை ஏற்படும் பொழுது, இந்தியா, தனது அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளும் உரிமையும் இந்தியாவிற்கு உண்டா?” என்ற கேள்விகளுக்கு, “சரி செய்யும் நடவடிக்கைகள் குறித்து, இந்தியா, தனக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை; அது குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தோடுதான் பேசி, இந்தியா முடிவெடுக்க வேண்டும்” என நழுவிக் கொள்ளும் விதமாகப் பதில் அளித்துள்ளது, அமெரிக்க அரசு. மேலும், “இந்தியா, தனது அணு உலைகளை அவற்றின் ஆயுட்காலம் முழுவதற்கும் கண்காணிப்புக்கு உட்படுத்த ஒப்புக்கொண்டு வாக்குறுதி அளித்துள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா, சர்வதேச அணுசக்திக் கழகத்தோடு செய்து கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில், சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக எவ்விதமான விரிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை; அந்நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்வது இந்தியாவின் சுயாதிபத்திய உரிமை என்று மட்டுமே பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டாலும் கூட, இந்திய அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்பில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக்கிக் கொள்ள முடியாது என்பதும் அவ்வொப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை செயலர் கண்ட லீசா ரைஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே “நிரந்தரமான கண்காணிப்பு என்பது எவ்விதமான நிபந்தனைகளும் அற்ற நிரந்தரமான கண்காணிப்புதான் என்பதை நாங்கள் இந்தியாவிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்” என அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார்.
“அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட அணு எரி பொருளை, அணு உலைகளில் பயன்படுத்திய பிறகு, அதனை மறுசுழற்சி செய்யும் உரிமை இந்தியாவிற்கு உண்டு என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்; மறுசுழற்சி செய்து கொள்வதற்காக, அமெரிக்காவின் நிரந்தரமான சம்மதத்தைப் பெற்றுள்ளோம்” என ஓராண்டுக்கு முன்பு மன்மோகன் சிங் அடித்துப் பேசினார்.
அமெரிக்க அரசோ,”சம்மதத்தை உரிமைபோல எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவும் இந்தியாவும் மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகளையும்; வரையறைகளையும் கூடிப் பேசி முடிவெடுத்த பிறகுதான், அமெரிக்காவின் சம்மதம் நடைமுறைக்கு வரும்” எனப் பதில் அளித்திருக்கிறது.
மேலும், அமெரிக்கா அளிக்கும் எரிபொருளை தற்போதுள்ள அணு உலைகளில் வைத்து மறுசுழற்சி செய்யக் கூடாது. அதற்காகப் புதிதாகத் தனி ஏற்பாடுகள் செய்வதோடு, அது தொடர்பான வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அமெரிக்காவிடம் அளிக்க வேண்டும் என 123 ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
“மறுசுழற்சி தொடர்பான ஏற்பாடுகளும், வரையறைகளும் முடிவெடுக்கப்பட்டாலும், அமெரிக்காவின் சம்மதத்தை நிரந்தரமானதாக எடுத்துக்கொள்ள முடியாது: இந்த ஏற்பாடுகளும், வரையறைகளும் மறுசுழற்சி உரிமையினை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்வதையும் உள்ளடக்கியே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது, அமெரிக்க அரசு.
மன்மோகன் சிங் உள்ளிட்டு இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவரும், “இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி கூட்டுறவை, ஹைட் சட்டம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என அடித்துப் பேசி வருகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசு, தனது வெளி விவகார கமிட்டிக்கு அளிததுள்ள பதிலில், “இந்த ஒப்பந்தம், ஹைட் சட்டம் மற்றும் அமெரிக்க அணுசக்தி சட்டம் ஆகிய இரண்டு அமெரிக்கச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டதுதான்” எனப் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டுள்ளது.
அணுகுண்டுச்சோதனைக்கு ஆப்பு
“நமது தேசிய பாதுகாப்பு கோரினால், நாம் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை, இந்த ஒப்பந்தம் தடுக்கவில்லை என நான் உறுதியளிக்கிறேன்” என மன் மோகன் சிங் நாடாளுமன்றத்தில் ஜூலை 22, 2008 அன்று தெரிவித்தார்.
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை, இந்த ஒப்பந்தம் வெளிப்படையாகத் தடுக்கவில்லை என்பது உண்மைதான். அதேசமயம், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் மட்டுமின்றி, இந்தியா அணு ஆயுதப் பரவல் தடைகளை மீறி விட்டதாக அமெரிக்கா கருதினாலும்; அமெரிக்கா அணு சக்தி சட்டத்தில் கூறப்பட்டுள்ள விபரீதமான சூழல்கள் எழுந்தாலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அணுப் பொருட்களையும், சாதனங்களையும் இந்தியாவிடமிருந்து திரும்பப் பெறவும் அமெரிக்காவிற்கு இந்த ஒப்பந்தத்தின் 14-ஆவது விதியின் கீழ் உரிமை உண்டு என்பதும் மறுக்கவியலாத உண்மையாகும்.
இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதை அமெரிக்கா அனுமதிக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். “அணு குண்டு சோதனை நடத்த மாட்டோம்” என இந்தியா தன்னிச்சையாக சர்வதேச சமூகத்திடம் அளித்திருக்கும் வாக்குறுதிதான் இந்த ஒப்பந்தத்திற்கே அடிப்படையாக அமைந்திருக்கிறது.
1998-இல் இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்திய அரசு கடைபிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு இத்தடைகள் தொல்லையாக இருக்கவே, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, அமெரிக்காவை தாஜா செய்ய இந்த வாக்குறுதியை அளித்தார். பா.ஜ.க. கூட்டணி அரசு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடக் கூடத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான். பா.ஜ.க. ஆட்சி காலத்திலேயே அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக, அமெரிக்கா-இந்தியா இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் மன்மோகன் சிங் – புஷ் கூட்டறிக்கையும், அதனைத் தொடர்ந்து அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டன. அணுமூலப் பொருட்களை வழங்கும் நாடுகள், இந்தியாவிற்கு அளித்திருக்கும் விதிவிலக்குக்கும் இந்த வாக்குறுதிதான் அடிப்படையாக அமைந்துள்ளது.
அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் கூட்டத்தில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருந்த நேரத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய அரசின் சார்பாக செப்.5 அன்று விடுத்த அறிக்கையில், “அணுகுண்டு சோதனைகள் நடத்துவதற்கு இந்திய அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கும் தடையைக் கடைபிடிப்போம்; அணுஆயுதப் பரவலைத் தடுப்பதற்கு ஆதரவாகச் செயல்படுவோம்; சர்வதேச அணுசக்தி கழகத்தோடு மற்றொரு உடன்பாட்டினை உறுதியாகச் செய்து கொள்வோம்” என்பவை உள்ளிட்ட சில வாக்குறுதிகளை அளித்தார். அமெரிக்காவின் பெரிய அண்ணன்தனமும், இந்தியா அளித்த இந்த வாக்குறுதிகளும்தான் விலக்கு ஒப்பந்தம் நிறைவேற வழிவகுத்தன.
அணு மூலப்பொருளை மறு சுழற்சி செய்யவும், செறிவூட்டவுமான உரிமையினை இந்தியாவிற்கு வழங்குவதை இந்த விலக்கு ஒப்பந்தம் மறுக்கவில்லை என்றாலும், அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமம் அத்தொழில்நுட்பத்தை உடனடியாக இந்தியாவிற்குத் தர விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
(தி இந்து, செப்.7, பக்.11)
அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகளின் குழுமம், எதிர்காலத்தில் வகுக்கும் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் இந்தியா அக்குழுமத்திடம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இரட்டை பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் இந்தியாவிற்கு வழங்கும்பொழுது, அது பற்றி அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு விதி விலக்கு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுமத்தைச் சேர்ந்த ஒரு நாடு, ஒரு குறிப்பிட்ட சாதனத்தை இந்தியாவிற்கு வழங்குவதை அக்குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு நாடு (குறிப்பாக, அமெரிக்கா) விரும்பவில்லை என்றால், இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தடுத்து விட முடியும். அமெரிக்காவின் ஹைட் சட்டத்திற்கு ஏற்பவே இந்த விதி, விலக்கு ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
(ஃபிரெண்ட்லைன், அக். 10, பக்:8)
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 123 ஒப்பந்தம் அனுப்பப்பட்டிருக்கும் இந்நேரத்தில், அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டியின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், “இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், அமெரிக்கா, அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகளையும் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோர வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இவையனைத்தும்,”அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவிற்கு விலக்கு அளித்திருப்பதாக” இந்திய அரசு கூறி வருவதற்கு எதிராகவே அமைந்துள்ளன.
அமெரிக்காவின் போர்வெறிக்கு வாலாட்டும் இந்தியா
123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அளித்துள்ள விளக்கக் குறிப்பில், “123 ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதிமொழிகள், அரசியல் ரீதியானவைதான், அவை அமெரிக்காவைச் சட்டப்படிக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல” என்ற “இரகசியத்தை”ப் போட்டு உடைத்து விட்டார். மேலும் ஈரானைக் கட்டுப்படுத்தும் விசயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு என்னென்ன விதத்தில் ஒத்துழைப்பைத் தந்திருக்கிறது என்பதையும் பட்டியல் போட்டு, மன்மோகன் சிங் கும்பலின் அமெரிக்க அடிவருடித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
வங்காளத்தின் தளபதி மீர்ஜாபரும், ஜெய்சந்தும் ராபர்ட் கிளைவுக்கு உதவியதைப் போல, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியா மீது முழுமையாகத் திணிப்பதற்கு, ஜார்ஜ் புஷ்ஷுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவி வருகிறார்!
குறிப்பாக, செப். 5 அன்று இந்திய அரசின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்திருக்கும் அறிக்கையில், “அணு மூலப் பொருளை மறுசுழற்சி செய்யும், செறிவூட்டும் தொழில்நுட்பங்களைப் பெறாத நாடுகளுக்கு, அத்தொழில்நுட்பங்கள் கிடைப்பதைத் தடுக்கும் சர்வதேச முயற்சிக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்” என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவைத் திருப்திபடுத்த, ஈரானைக் குறி வைத்துக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி என்றுதான் கூறப்படுகிறது.
விமானங்களுக்கும், இந்தியாவில் எரிபொருள் நிரப்புவது மேலும், அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கும், போர் உள்ளிட்டு பல்வேறு வசதிகளைச் செய்து கொடுக்கும் இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஈரான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தத் துடிக்கும் இவ்வேளையில், இந்தியாவை அதற்கான தளமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான், இந்த இராணுவ ஒப்பந்தத்தின் பின்னே மறைந்துள்ளது. மேலும், அமெரிக்கா, இந்தியாவிற்கு விற்பனை செய்யும் இராணுவத் தளவாடங்கள் மற்றும் தொலைதொடர்புச் சாதனங்களை நேரடியாக வந்து ஆய்வு செய்யும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கும் இராணுவ ஒப்பந்தங்களும் தயாராகி வருகின்றன.
மன்மோகன் சிங் மறுகாலனியாதிக்கத்தின் மீர்ஜாபர்
மன்மோகன் சிங், அறிவு நாணயம் உள்ளவராகவும், தன்மானமிக்கவராகவும் இருந்திருந்தால், 123 ஒப்பந்தம் குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் கடிதம் வெளியிடப்பட்டவுடனேயே, “ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விடுவோம்” என எச்சரிக்கையாவது செய்திருக்க வேண்டும்; ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டிப் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, “அமெரிக்க அரசு இப்படியொரு கடிதத்தை எழுதியிருப்பது தமக்கு முன்பே தெரியும்” எனக் கூறி, நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தார். ஒப்பந்தம் தொடர்பாக புஷ்ஷைச் சந்திக்கப் பறந்தோடியதன் மூலம், “நான் அமெரிக்கக் கைக்கூலிதான்” என்பதை வெட்கமின்றி வெளிப்படையாகக் காட்டிக் கொண்டுள்ளார்.
123 ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவரும், இந்தியாவின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக மார் தட்டுகிறார்கள். உண்மைதான். இந்தியாவின் அரை குறை இறையாண்மையும், சுயாதிபத்தியமும் முற்றிலுமாக அம்மணமாகி, இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைக் கூட அமெரிக்கா தீர்மானிக்கும் நிலை உருவாகியிருப்பதை மறுகாலனி ஆதிக்கத்தின் புதிய சகாப்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.
1991-இல் பொருளாதார சீர்திருத்தத்தைத் தொடங்கி வைத்ததன் மூலமும், தற்பொழுது அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமும் மன்மோகன் சிங் இந்தியாவின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதாகப் போற்றப்படுகிறார். மன்மோகன் சிங் தொடங்கி வைத்த பொருளாதாரச் சீர்திருத்தம், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் உயிரைக் காவு வாங்கிவிட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் ஆற்றல் பெற்றிருந்த இந்தியாவை, உணவுப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நாடாக மாற்றியிருக்கிறது; இந்தியாவின் சுயசார்புத் தொழில்களை அழித்து, வேலைவாய்ப்பின்மையையும், வறுமையையும், ஏழ்மையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்படுத்தி வரும் “நன்மை”கள் இவைதான் என்றால், அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவில் இருந்து பாலாறையும், தேனாறையுமா கொண்டு வரும்?
இந்தியா, தனது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான துரோகிகளையும், அடிவருடிகளையும் கண்டிருக்கிறது. அந்த அருவெறுக்கத்தக்க பட்டியலில் மன்மோகன் சிங்குக்கும் “அழியாத” இடமுண்டு! கும்பினியின் ஆட்சியை இந்தியாவில் வேரூன்றச் செய்வதற்கு, வங்கதேசத்து தளபதி மீர் ஜாபரும், ஜெய்சந்தும் ராபர்ட் கிளைவுக்கு உதவியதைப் போல, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியா மீது முழுமையாகத் திணிப்பதற்கு, ஜார்ஜ் புஷ்ஷுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவி வருகிறார்!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 02 | டிசம்பர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தலையங்கம்: மும்பை தாக்குதல்: இந்துவெறி-அரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை!
“முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!!”
-புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதல்: ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த பதிலடி!
கருத்தை ஒபாமவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?
ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிப்போம்!
-புரட்சிகர இயக்கங்களின் பிரச்சார இயக்கம்
இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?
இந்து பயங்கரவாதமும் “இந்து”க்களின் மௌனமும்
பொருளாதார நெருக்கடி: எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம்
அமெரிக்க பயங்கரவாதம்
ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டம் தமிழகத்தின் அவமானம்
மே.வங்கம்: போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி!
இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!
இந்தியாவின் நிலவுப் பயணம்: வல்லாதிக்கக் கனவுக்கு வரிப்பணம் சூறை!
டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. சமீப ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால் காற்று மாசுபாட்டின் தாக்கம் டெல்லியில் உச்சகட்டத்தில் உள்ளது.
காற்று மாசுபாடு அச்சுறுத்தலால், “அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்கள் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்” என அரசு உத்தரவிடும் அளவிற்கு, சூழல் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு டெல்லி அரசு தடை விதித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்நிலையில், டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI – Air Quality Index) 400-ஐ கடந்துவிட்ட நிலையில், அங்கு கிராப் – 3 (GRAP – Graded Response Action Plan) கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது (காற்றுத் தரக் குறியீட்டின் அளவை பொறுத்து கிராப் கட்டுப்பாடுகளின் படிநிலைகள் மாறுபடும்).
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஆளும் பா.ஜ.க. அரசு செயற்கை மழையை வரவழைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நவம்பர் 26 அன்று, பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டெல்லியில் 37 சதவிகிதம் அளவிற்கு பி.எஸ்-3 (BS3 – Bharat Stage 3) வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதைக் குறைப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்துவது, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது ஆகிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காற்று மாசுபாட்டுக்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு தேட முயற்சிக்காமல், அபாயகரமான இப்பிரச்சினையை தற்காலிக பிரச்சினை போல் அரசு கையாள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேசமயம், பாசிச பா.ஜ.க. அரசோ, “பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசுபாடு ஏற்படுகிறது” என விவசாயிகள் மீது குற்றஞ்சுமத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.
ஆனால், இது காற்று மாசுபாட்டிற்கான முதன்மையான காரணமல்ல. மேலும், விவசாயிகள் பயிர் கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கு அரசு எந்தவகையிலும் உதவிகரமாக இருப்பதில்லை என்பதே களநிலைமை.
டெல்லி காற்று மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், “அரசின் நடவடிக்கைகளில் பெரிய போதாமை இருக்கிறது. அதிகப்படியான வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காற்று மாசுக்கான முதன்மையான காரணங்கள்” என்று கூறுகிறார்.
குறிப்பாக, வாகனப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் இருக்கும் அளவிற்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை என காற்று மாசுபாட்டுக்கான காரணங்களை சுந்தர்ராஜன் வரிசைப்படுத்துகிறார்.
இதற்கான மாற்றாக, இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடுவது அல்லது ஊருக்கு வெளியில் அமைக்க உத்தரவிடுவது, நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது, கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பது போன்றவற்றை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால், டெல்லியில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றத்தின் மூலம் நீக்கியது. இதனால் டெல்லியில் தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீடு 2,000-ஐ எட்டியது. அதாவது, 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசுபாட்டின் அளவு இது. இந்தளவிற்கு மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நம்முடைய வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். பாசிஸ்டுகளுக்கு மக்களின் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வே சிறந்த சான்று.
இந்நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த நவம்பர் 10 மற்றும் நவம்பர் 23 ஆகிய தேதிகளில், இதுவரை இல்லாத வகையிலான முன்னெடுப்பாக, டெல்லியின் இந்தியா கேட் பகுதியிலும், நகரின் மற்ற பகுதிகளிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் தாய்மார்களும் குழந்தைகளும் தங்களின் சுகாதாரமான சுவாச உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், காற்று மாசுபாட்டைத் தடுக்க வக்கற்ற பாசிச பா.ஜ.க. அரசு போராட்டக்காரர்கள் மீது போலீசின் மூலம் கொடூர அடக்குமுறையை ஏவியது.
இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் 15 இலட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று “இந்தியாவில் காலநிலை, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாடு ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பு” (CHAIR-India – Consortium for Climate, Health and Air pollution Research in India) வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 சதவிகித மக்கள் (110 கோடி மக்கள்) உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் காற்று மாசுபாடானது, இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மைக் கொண்டது. கர்ப்ப காலம் நிறைவடைவதற்கு முன்பே பிறக்கும் குழந்தைகளின் மரணத்திற்கு 60 சதவிகிதம் வரை காற்று மாசுபாடுதான் காரணம் என்று ஐ.சி.எம்.ஆர். (ICMR) ஆய்வு முடிவு கூறுகிறது. டெல்லியில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக 22 லட்சம் குழந்தைகள் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி மட்டுமல்ல, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவு அதிகரித்து வருகிறது.
காற்று மாசுபாடு பிரச்சினை, இன்று, நேற்றைய பிரச்சினையல்ல. கடந்த பல பத்தாண்டுகளாக மக்களின் உயிரையும் இயற்கையையும் அச்சுறுத்திவரும் பிரச்சினையாகும். அதுமட்டுமல்ல, காற்று மாசுபாடானது புவி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, ஏற்படுகின்ற காலநிலை மாற்றப் பிரச்சினைகள் மக்களின் உயிரைத் தொடர்ச்சியாக காவு வாங்கி வருகின்றன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பெருவெள்ளப் பாதிப்புகள் இதற்கு துலக்கமான சான்றுகளாகும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தின் துணையோடு, இயற்கையும், சுற்றுச்சூழலும் கற்பனைக்கு எட்டாத வகையில் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாசிச பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதானி – அம்பானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலை அழிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு எந்தவொரு கேள்வியுமின்றி அனுமதி அளித்து வருகிறது, அதற்கேற்ப சட்டங்களை திருத்தி வருகிறது.
புதைபடிவ எரிபொருளை வரைமுறையின்றி சுரண்டுவது, தொழிற்சாலைகள் மூலம் சுத்திகரிக்கப்படாத வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவது, பெருமளவில் பெருகிவரும் தனியார் வாகனப் பயன்பாடு ஆகிய அம்சங்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு எந்தவொரு பங்கமும் வராத வகையில்தான் அரசுகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் அபாயகரமான நிலையைத் தொடும்போது, மேம்போக்காக சில நடவடிக்கைகளை எடுப்பது போல் நடிக்கின்றன. ‘நீதி’மன்றங்களோ சில கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு தங்கள் ‘கடமையை’ முடித்துக் கொள்கின்றன.
தீர்வு என்ன ?
சுற்றுச்சூழலை நாசமாக்கும் தொழில்களை தடை செய்வது, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, இயற்கை வளக் கொள்ளையைத் தடை செய்வது, சுற்றுச்சூழலை அழிக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிப்பது என்ற கோரிக்கைகளை மையப்படுத்தி உழைக்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வையும், போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சிப் போக்கோடு, இயற்கைப் பேரழிவின் அடிப்படைக் காரணமாக உள்ள கார்ப்பரேட்மயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றான, இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வை உத்தரவாதப்படுத்தும் மாற்று அரசியல் – பொருளாதாரக் கட்டமைப்பின் தேவைக்கான, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான விவாதங்களை பல்வேறு தளங்களில் தீவிரமாகத் தொடங்க வேண்டும். டெல்லி மாணவர்கள், உழைக்கும் மக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அதனை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 24, இதழ் 01 | நவம்பர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
சூடான் உள்நாட்டுப் போரால் அந்நாட்டிலிருந்து லட்சக்கணக்கில் வெளியேறும் மக்கள்.
தெருக்களில் குவிக்கப்பட்டிருக்கும் பிணங்கள்; குழந்தைகளின் விளையாட்டு பூங்காக்களில் நிறைந்திருக்கும் மனித எலும்பு கூடுகள்; மனித படுகொலை கூடங்களாக மருத்துவமனைகள். இவைதான் சூடானின் தற்போதைய நிலை. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரங்களையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோரங்களையும் சூடான் மக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் எகிப்துக்குக் கீழே உள்ள நாடுதான் சூடான். இங்கு 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சூடானின் இராணுவத் தளபதி அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவப் படைக்கும் (SAF – Sudanese Armed Forces), முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான விரைவு ஆதரவுப் படைக்கும் (RSF – Rapid Support Forces) இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். விலங்குகளின் தீவனங்கள், இறந்த விலங்குகளை உண்டு வாழக்கூடிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். ஆனால், உண்மை நிலவரங்கள் இதைவிட மோசமானதாகவே இருக்கும்.
இரண்டு இராணுவக் குழுக்களும் எண்ணிலடங்கா பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. சூடானின் விரைவு ஆதரவுப் படையானது, அகதிகள் முகாம்களின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நிவாரண உதவிகள் செய்யும் நிறுவனங்களிடமிருந்தே உணவுப் பொருட்களை சூறையாடுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கற்பனைக்கெட்டாத அளவில் அரங்கேற்றி வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் குழந்தைகளின் நிலை மேலும் மோசமாக உள்ளது. குழந்தைகளின் கண் முன்னே படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும், சொல்லொணா துன்புறுத்தல்களும் அரங்கேற்றப்படுகின்றன. அத்துடன், சுமார் அறுபது இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
சூடானிலிருந்து வெளியேறும் மக்களில் 57 சதவிகிதம் பேர் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள். ஆனால், அவர்களுக்கு போதுமான எண்ணிக்கையில் பள்ளிகள் இல்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் பிரதிநிதி ஜாந்பால் ஹப-முங்கு கூறுகிறார். குறைந்தபட்சம் தற்காலிக பள்ளிகள், கற்றல் நிலையங்களை கட்டுவதற்கு கூட தங்களிடம் போதிய நிதியில்லை என்கிறார்.
அத்துடன், தற்போது சூடான் உலகின் மிக மோசமான இடப்பெயர்வை சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூடானின் அண்டை நாடான சாட்டிற்குள் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். சூடான் மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லை நகரமான டைனில் தினமும் பல குடும்பங்கள் தொடர்ந்து அகதிகளாக தஞ்சமடைகின்றன. தற்போது டைன் நகரத்திலும் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரங்கேறும் இனப்படுகொலை அமைதி காக்கும் உலக நாடுகள்
இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 அன்று விரைவு ஆதரவுப் படை மேற்கு சூடானின் டார்ஃபுர் பிராந்தியத்தின் தலைநகரான எல்-ஃபாஷரை சுமார் 18 மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியது. எல்-ஃபாஷரை கைப்பற்றிய பிறகு அந்நகரத்தில் மருத்துவ சேவைகளை வழங்கிவந்த ஒரே மருத்துவமனையான சவூதி மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியது. இக்கொடூரத் தாக்குதலில் 460-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும், விரைவு ஆதரவுப் படையினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைக் சுட்டுக்கொல்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர். எல்-ஃபாஷரைக் கைப்பற்றியதிலிருந்து மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சூடானிய மக்களை கொன்றொழித்து அப்பட்டமான இனப்படுகொலையை விரைவு ஆதரவுப் படை அரங்கேற்றியுள்ளது.
மேலும், இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்களின் உடல்களை ஒன்றாக குழித்தோண்டி புதைப்பது அல்லது எரிப்பது உள்ளிட்ட கொடூரங்களிலும் இப்படை ஈடுபட்டு வருவதாக “சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு” (The Sudan Doctors Network) குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, விரைவு ஆதரவுப் படையின் 18 மாத முற்றுகையின் போது குண்டுவீச்சு, பஞ்சம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் காரணமாக, சுமார் 14,000 சூடானிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மனித பேரவலத்தை சூடானிய மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாகவும், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைவதற்குள் தடுத்ததாகவும் சவடால் அடித்துவரும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப், ஈராண்டுகளாகத் தொடரும் சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. கொன்று குவிக்கப்பட்டு வருவது கருப்பின மக்கள் என்பதால் மேற்கத்திய ஊடகங்களும் இந்த அவலம் குறித்து வாய் திறப்பதில்லை.
ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சூடானில், தங்கம், வெள்ளி, யுரேனியம் முதலான கனிம வளங்களும், வளமான விவசாய நிலங்களும் உள்ளன. உலகின் மிக நீண்ட நைல் நதி பாய்ந்தோடுகிறது. இருந்த போதிலும், சூடான் நீண்ட நெடுங்காலமாக ஏழ்மையான நாடாகவே உள்ளது. சூடான் மக்கள் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் இந்நாட்டு வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் பிராந்திய வல்லரசுகளும் சூறையாடிக் கொண்டிருப்பதுதான்.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் பகுதியில், பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் சூடான் உள்ளது. தங்கம் உள்ளிட்டு ஏராளமான கனிம வளங்களும் சூடானில் நிறைந்துள்ளது. எனவே, சூடானில் செல்வாக்கு செலுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நாடுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.
தற்போது, சூடானில் இரண்டு இராணுவக் குழுக்களுக்கிடையில் உள்நாட்டு போர் நடந்து வருவதற்கும், அதனை உலக நாடுகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பதற்கும், சூடான் மீதான ஆதிக்க – அதிகாரப் போட்டாபோட்டியே காரணம்.
2021-ஆம் ஆண்டு சூடானின் இராணுவ தளபதிகளான அல்-புர்ஹானும் டகாலோவும் இணைந்து இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தி இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவினர். ஆனால், சூடானின் இராணுவத் தளபதி அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், டகாலோ தலைமையிலான விரைவு ஆதரவுப் படைக்கும் இடையிலான அதிகாரப் போட்டாபோட்டி முற்றத் தொடங்கியது. நாட்டின் கனிம வளங்களை யார் கைப்பற்றிக் கொள்வது; குறிப்பாக, சூடானின் டார்ஃபுர், கோர்டாஃபான் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தங்கச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவது என்பதாக தீவிரமடைந்து, இரு தரப்புக்கும் இடையிலான உள்நாட்டுப் போராக வெடித்தது.
இந்நிலையில், சில அந்நிய ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள், தமது சூறையாடலுக்கும் ஆதிக்கத்துக்கும் சாதகமாக உள்ள இராணுவக் கும்பலுக்கு மறைமுகமாக உதவுகின்றன. சான்றாக, “வளர்ச்சிக்கான ஜட்னா சர்வதேச கம்பெனி லிமிடெட்” என்ற கார்ப்பரேட் நிறுவனம் சூடான் இராணுவத்திற்கு உதவுகிறது; “அல்-ஃபாஹர் அட்வான்ஸ் ஒர்க்ஸ் கம்பெனி லிமிடெட்” மற்றும் “அல் ஹாலிஜ் வங்கி கம்பெனி லிமிடெட்” ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்கள் விரைவு ஆதரவுப் படைக்கு உதவுகின்றன.
மேலும், தனது அண்டை நாடான சூடான் மீது ஆதிக்கம் செலுத்த எகிப்து முயற்சிக்கிறது. அதற்காக, ஏறத்தாழ மூன்று லட்சம் பேரைக் கொண்டுள்ள சூடான் இராணுவப் படைக்கு எகிப்து அனைத்து வழிகளிலும் உதவுகிறது. இராணுவத்தின் துணையோடு பெயரளவிலான ஒரு ஜனநாயக ஆட்சியை சூடானில் நிறுவ எகிப்து முயற்சிக்கிறது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சூடானின் விரைவு ஆதரவுப் படைக்கு ஆதரவாக நின்று ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. சூடானுக்குள் இஸ்லாமிய பயங்கரவாத கூலிப்படைகள் நுழைந்து போராடுவதற்கு ஏற்ப சூடானின் மேற்கு எல்லைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது.
ஏறத்தாழ ஒரு லட்சம் சிப்பாய்களைக் கொண்டுள்ள சூடானின் விரைவு ஆதரவுப் படைக்கு ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவியும், ஆயுத உதவிகளும், ஆளில்லா போர் விமானங்களும் கொடுத்துள்ளதை ஐ.நா. மன்றமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டி கண்டித்துள்ளன. மறுபுறம் அமெரிக்கா வல்லரசானது அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 160 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியானது சூடானின் விரைவு ஆதரவுப் படைக்குச் செல்கிறது.
இவ்வாறு, சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்தி அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட எந்த நாடும் முயற்சிப்பதில்லை. மாறாக, இரு தரப்பு இராணுவக் கும்பலில் ஒன்றை ஆதரித்து கொம்பு சீவி விடுவதன் மூலம் சூடானில் ஆதிக்கம் செலுத்தி, கனிம வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக உள்ளன.
தற்போது மேற்கு சூடானில் உள்ள வடக்கு டார்ஃபுர் மாநிலத்தின் தலைநகரான எல்-ஃபஷாரில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து சர்வதேச அளவில் எழுந்த கண்டனங்கள், மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. அமெரிக்கா மற்றும் குவாட் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தத் திட்டத்தை நவம்பர் மாத தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டதாக விரைவு ஆதரவுப் படை கூறியது.
ஆனால், ஒரு வாரத்திலேயே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடங்கப்பட்டது. இரு இராணுவ கும்பலும் நாட்டின் மத்திய பகுதியில் போரை தீவிரப்படுத்துவதற்கான துருப்புகளையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர். நாட்டு மக்களை இன மற்றும் பிராந்திய அடையாளங்களின் அடிப்படையில் பிளவுபடுத்தி தங்கள் சொந்த நோக்கங்களுக்காக இராணுவக் கும்பல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஏகாதிபத்தியங்களின் இந்த லாபவெறி, மேலாதிக்கவெறிக்காக ஒட்டுமொத்த சூடான் நாட்டு மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு வருகிறது, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சூடானின் உள்நாட்டுப் போரை இயக்கிவரும் ஏகாதிபத்தியங்களுக்கும், அவற்றின் அடியாட்களான பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது சர்வதேச உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மேலும், சூடான் இராணுவத்திற்கும் அதன் துணைப்படையான விரைவு ஆதரவுப் படைக்கும் ஆயுதங்கள், நிதியுதவி அளித்துவரும் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்திய மேலாதிக்க நாடுகளின் மீது பொருளாதார உறவுகளை துண்டிக்குமாறும், இப்போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டி நிவாரண உதவிகளை வழங்குமாறும் உலக நாடுகளை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை கட்டியமைப்பது அனைத்துலக உழைக்கும் மக்களின் கடமையாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 12 | அக்டோபர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இந்தியா முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) எனும் பாசிச நடவடிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மோடி அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் பீகாரில் மட்டும் 68 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அதேசமயம், எஸ்.ஐ.ஆர். என்பது மக்களின் வாக்குரிமையை பறிப்பதைத் தாண்டி, மறைமுகமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens) அமல்படுத்தி குடியுரிமையை பறிப்பதற்கான சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது.
இச்சூழலில், பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில், நேரடியாகவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தி, இலட்சக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறித்து, அம்மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறைகள் தொடுக்கப்பட்டுவருவது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் 2019-இல் வெளியானது. இதில், 19 இலட்சம் மக்கள் “வெளிநாட்டினர்” என்று முத்திரை குத்தப்பட்டு நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் கணிசமானோர் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் ஆவர்.
இம்மக்களில் பலர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்குகளில் வெளிநாட்டினர் என்று தீர்ப்பு வழங்கியும், வழக்கு நிலுவையில் உள்ள போதிலும், அம்மக்களை கைது செய்து, தடுப்பு முகாம்களில் (Detention camps) அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்து வருகிறது பாசிச அசாம் அரசு. இது அசாமில் இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது.
அதற்காக, 3,000 பேரை அடைத்து வைக்கக்கூடிய வகையிலான நாட்டிலேயே மிகப்பெரிய “மத்தியா தடுப்பு முகாம்”-ஐ (Matia detention camp) கடந்த 2021-ஆம் ஆண்டில் அசாம் அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இம்முகாமில், கடந்த செப்டம்பரில் 49 வயதான அம்சாத் அலி என்பவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்தாண்டு மே 28-ஆம் தேதி வெளிநாட்டவர் என்று கூறி போலீசால் கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில் அம்சாத் அலிக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான நிலையில், அவரை மருத்துவ சிகிச்சைக்காக விடுவிக்கக்கோரி உறவினர்கள் அரசுக்கு கடிதங்கள் எழுதினர். ஆனால், அவர் விடுவிக்கப்படாமல் போலீசு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அப்துல் மாட்லெப் என்ற மற்றொரு இஸ்லாமியரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்முகாம்களில் மிக மோசமான, சுகாதாரமற்ற வகையில் மக்கள் அடைத்து வைக்கப்படுவதால் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர். மேலும், விலங்குகள் உண்பதற்குக் கூட தரமற்ற வகையிலான உணவுகளே இம்மக்களுக்கு வழங்கப்படுகின்றன. முக்கியமாக, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை மறுப்பதன் மூலம் அவர்களை படுகொலை செய்து வருகிறது அசாம் அரசு.
மேலும், வங்க மொழி பேசும் இஸ்லாமிய குடும்பங்களில் அனைவரும் அல்லது பெரும்பாலானோரும் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களில் ஒருவரை மட்டும் கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைப்பது; குழந்தைகளிடம் இருந்து தாயை அல்லது தந்தையை பிரிப்பது; உறவினர்களை பார்க்கக்கூட அனுமதி மறுப்பது என அம்மக்களின் குடும்பங்களை சிதைத்து வருகிறது பா.ஜ.க. அரசு.
இத்தகைய பாசிச ஒடுக்குமுறைகள் மூலம், தாங்களோ அல்லது தங்களது உறவினர்களோ எப்போது வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்படலாம் என்ற அச்ச உணர்விலேயே வாழும் நிலையை வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.
மறுபுறத்தில், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் சட்டவிரோதமாக அசாமின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி, அவர்களின் வீடுகளையும் மசூதிகளையும் புல்டோசர் மூலம் இடித்து, அம்மக்களை தற்காலிக தங்குமிட முகாம்களுக்கு (Makeshift Shelter Camps) விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது அசாம் பா.ஜ.க. அரசு. நீல நிற தார்ப்பாயால் குடிசைகள் அமைக்கப்பட்ட, எந்த அடிப்படை வசதிகளுமற்ற இம்முகாம்களில் அம்மக்களும் வேறு வழியின்றி வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இம்மக்கள் எந்த வகையிலும் கன்னியமாக வாழ்ந்துவிடக் கூடாது என்ற கொடூர சிந்தனையிலிருந்து இப்பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவியேற்ற 2021, மே மாதத்திலிருந்து 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்திலிருந்து 50,000 மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்திய மாதங்களில் புல்டோசர் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நடவடிக்கைகளின் மூலம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்களை மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அடைத்து, எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு “ஆபரேஷன் புஷ்பேக்” எனும் பாசிச நடவடிக்கையை தீவிரப்படுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை திடீரென கைது செய்து சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் விரட்டியடிக்கிறது.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அசாமிற்குள் குடியேறிய மக்கள் மீதான ‘அந்நியர்’ வெறுப்பு அசாம் மக்களிடையே விதைக்கப்பட்டிருந்தது. இதனை இஸ்லாமிய வெறுப்புணர்வாக முனைவாக்கம் செய்ததன் மூலம், வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் மீது பகிரங்கமாக பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது பா.ஜ.க. கும்பல்.
இந்நிலையில், அசாமை முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான பணியிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி, “குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025”-ஐ மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்களை கட்ட வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மேலும், நாட்டின் தலைநகரான புது டெல்லியிலும், கர்நாடகா, கோவா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கெனவே தடுப்பு முகாம்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான அறிவிப்பை பாசிச மோடி அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையுடனும், பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் நிலைநாட்டப்படுவதுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த நவம்பர் 22 அன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ஊடுருவல்காரர்’களையும், ‘சட்டவிரோத குடியேறி’களையும் கையாள்வதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார். அதாவது, எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறித்து பாசிச கொடூரங்களை அரங்கேற்றுவதற்கு யோகி அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆர். மூலம் குடியுரிமை பறிக்கப்படும் பாசிச பேரபாயமானது இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல; தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், இந்துராஷ்டிரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் எதிர்நோக்கியுள்ளது. அதேபோல், தற்போது பா.ஜ.க. அரசால் அமைக்கப்படும் இந்த தடுப்பு முகாம்கள் பிற்காலத்தில் ஹிட்லரின் வதை முகாம்களாக மாற்றப்படும் அபாயமும் உள்ளது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 11 | செப்டம்பர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 10 | ஆகஸ்ட், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய