Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 15

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இருதலைக் கொள்ளி-இடையில் மக்கள்!
  • “அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
    அமெரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!”
    -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்
  • வர்ணாசிரம கிரிமினல் இராமன்! ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!
  • இராமன் பாலம்: இந்துவெறியர்களின் பொய்கள் – சதிகள்!
  • ஈழப்போர்
    சிங்களப் பேரினவாதத்தின் பலமுனைத் தோல்வி
  • கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: விசாரணையே தண்டனை
  • விவசாயிகள் தற்கொலை: கந்துவட்டிக் கடன்தான் நிவாரணமா?
  • தேரிக்காட்டில் ஒரு முகம் கேரளாவில் வேறு முகம்
    -சி.பி.எம்.-இன் சதிராட்டம்
  • “நாட்டாமை”யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை
  • தில்லை விளாகம்
    முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள்
  • ரிலையன்ஸ் எதிர்ப்பு: ஓட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!
  • இது பயங்கரவாதமில்லையா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சி.பி.எம்.-இன் இரட்டை நாக்கு
  • அன்னிய முதலீடுகள்: பகற்கொள்ளையின் மறுபெயர்
  • அணுசக்தி ஒப்பந்தம்: அம்மணமானது இந்திய தேசியம்!
  • ரிலையன்ஸ் எதிர்ப்பு: சி.பி.எம்.இன் பித்தலாட்டம்
  • கோவை-மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!
  • ஒரு பச்சோந்தியும் சில “கூஜா”க்களும்ம்
    உருட்டல்-மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?
  • டாடாவின் டைட்டானியம் ஆலை: மண்ணைப் பறித்து முன்னேற்றமா?
  • “காற்றுப் புகமுடியாத இடத்திலும் கம்யூனிஸ்டுகள் நுழைவார்கள்”
    தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் உதயம்
  • உ.பி.: தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி
  • சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
    அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள்
  • குப்பை அள்ளுவதிலும் மோசடி
    தனியார்மயத்தின் மகிமை
  • சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:
    சீழ் பிடித்து நாறும் இரணங்கள்
  • அரசு உதவி கேட்டால் அடக்குமுறை!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நூல் அறிமுகம் – செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்

அன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு,

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நூல் அறிமுகம் செய்கிறோம். பல நெருக்கடியான சூழல்களையும் தாண்டி இந்த நூல் அறிமுகம் செய்வதற்குக் காரணம், இந்நூலின் உள்ளடக்கமும் அது இன்றைய அரசியல் சூழலில் விவாதிக்கப்பட வேண்டிய அவசியமும்தான்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதங்கள் தொடங்கிய காலத்திலேயே, வினவு தளத்தில், அது தொடர்பாக தொடர் கட்டுரைகளைக் கொண்டுவந்துள்ளோம். பின்னர், 2017-ஆம் ஆண்டு ஜூலை, “செயற்கை நுண்ணறிவு: நவீன அடிமை யுகம்” என்று சிறு வெளியீடாகவும் கொண்டுவந்தோம்.

செயற்கை நுண்ணறிவின் அறிவியலை எளிமையான முறையில் அறிமுகம் செய்வதுடன், இது, சமூகத்தில் உருவாக்கப் போகும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டும் வகையில், அந்த சிறு வெளியீடு அமைந்தது.

இந்த எட்டாண்டுகளில், செயற்கை தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இது பெரும் வேலைப் பறிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன் நெருக்கடியை உலகம் இப்போது சந்தித்து வருகிறது. எனினும், இது அனைத்துத் துறைகளிலும் ஆதிக்க நிலையை அடையவில்லை எனும் போது, இதனால் ஏற்படப் போகும் சமூக விளைவுகள் மிக பயங்கரமானவையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இன்றைய சூழலில், செயற்கை நுண்ணறிவைப் பற்றி, பல அறிமுக நூல்கள் வந்தாலும், அதனை மார்க்சியக் கண்ணோட்டத்தில், உற்பத்தி முறையில் செயல்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு விரிவான ஆய்வு நூல் இதுவரை வரவில்லை. அந்தத் தேவையை ஈடு செய்யும் வகையில், ஈரோட்டைச் சேர்ந்த “இடது பதிப்பகம்”, “செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்” என்ற “இடது சிற்றிதழின்” சிறப்பிதழாக இந்நூலைக் கொண்டுவந்துள்ளது.

இந்நூலைக் குறித்த மதிப்பீடாக இந்தக் கட்டுரை அமையவில்லை. அதற்கு காலம் தேவை. விரைவில் அதனை நிறைவேற்றுவோம். அதேவேளையில், உடனடியாக இந்நூலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு, இந்நூலின் பதிப்புரையில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

***

… நவீன அறிவியலின் பெரும் பாய்ச்சலாக, செயற்கை நுண்ணறிவு பெரு வளர்ச்சியையும் செல்வாக்கையும் பெற்று வருவதும், அதன் ஆதிக்கம் எல்லாரையும் திகைக்க வைக்கிறது என்பதும் இடது இதழின் கவனத்திற்கு உரியதாக ஆயிற்று.

செயற்கை நுண்ணறிவை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் போதுமான தெளிவு யாருக்கும் இல்லை. ஆங்கிலத்தில் வெளிவரும் ஃப்ரண்ட்லைன் ஏடு ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவு என்னும் தொழில் நுட்பத்தைப் பற்றிய அறிமுகம் என்ற வகையில் சிலர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில நூல்களைக் கொண்டு வந்தார்கள். ஆனால் எங்களுக்குக் கிடைத்த நூல்களில் எதுவும் செயற்கை நுண்ணறிவைத் தத்துவார்த்த நோக்கில் பார்க்கவில்லை. செயற்கை நுண்ணறிவால் உழைப்புக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் நேரப்போகும் விளைவுகளைப் பற்றியும் யாரும் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில், மார்க்சிய மூல நூல்களை வாசிப்பதிலும், நவீன கால மார்க்சியப் போக்குகள் குறித்த தத்துவார்த்தப் படைப்புகளை வாசிப்பதிலும் மட்டுமின்றி, அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியைப் பற்றிய ஆய்வு நூல்களை வாசிப்பதிலும் கல்லூரியில் பயிலும் காலத்திலிருந்தே தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் தோழர் எஸ். பாலச்சந்திரன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து ஒரு மார்க்சியப் பார்வையை உருவாக்குகிறார். இதுகுறித்து எழுதுவதில் ஏறக்குறைய ஓராண்டுக் காலமாக அவர் ஈடுபட்டு வருகிறார். அதன் விளைச்சலாக உருவாகியுள்ள, “செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்” என்னும் இந்நூல் அவருடைய கடுமையான. அறிவார்ந்த உழைப்பின் வெளிப்பாடு. ஓராண்டுக்காலமாக இந்நூலை அதன் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். இந்தக் காலம் முழுவதிலும் இதைப் பற்றித் தொடர்ந்து உரையாடி வந்திருக்கிறோம். எனக்குத் தெரிந்த வரையில் இந்நூலைத் தோழர் பாலச்சந்திரன் ஏழு அல்லது எட்டு முறை திருத்தித் திருத்தியெழுதி உருவாக்கியுள்ளார். கார்ல் மார்க்ஸ் மனித குல விடுதலைக்கான தனது தத்துவத்தின் அடித்தளமாக உழைப்பு பற்றிய கோட்பாட்டை வைத்து, மாபெரும் தத்துவக் கட்டமைப்பை உருவாக்குவார். அந்த உழைப்புக் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய தொழில் நுட்பத்தையும், இப்புதிய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் பின்னணியில் உழைப்பின் எதிர்காலத்தையும் தோழர் எஸ். பாலச்சந்திரன் இந்நூலில் ஆய்வு செய்துள்ளார்.

இதுவரை செயற்கை நுண்ணறிவு குறித்து எழுதிய யாரும் முதலாளித்துவச் சமுதாயத்தில் உழைப்புச் செயல்பாட்டில், உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியில், உற்பத்தி உறவுகளில் அது என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. இது குறித்து ஆழமான ஆய்வை முன்வைக்கும் தோழர் எஸ்.பாலச்சந்திரன், கார்ல் மார்க்சின் 1844 பொருளாதார- தத்துவக் கையெழுத்துப்படிகள், அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு, கிரண்ட்ரிஸ்ஸே, மூலதனம், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைகள் போன்ற நூல்களின் சாரத்தை உள் வாங்கிக் கொண்டு, தனது அடர்த்தியும் செறிவும் மிக்க நடையில் எழுதி வழங்கியதன் மூலம் தற்கால மார்க்சியத்திற்கு ஒரு கொடையை அல்லது பங்களிப்பை நல்கியுள்ளார் எனில் அது மிகையில்லை.

முதலாளித்துவச் சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் அந்நியமாதலில் ஏற்படும் தாக்கம் பற்றியும், உழைப்புச் செயல்பாட்டின் மீதான இதன் தாக்கம் எவ்வாறு வர்க்கப் போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது அல்லது அதனைத் தீவிரப்படுத்துகிறது என்பதைப் பற்றியும், பண்ட வழிபாடு, பொருளாக்கம், சமூகப் பொது அறிவு, தொழிலாளர் கையிருப்புப் படை, தொழில்நுட்ப நிர்ணய வாதம் போன்ற பல்வேறு மார்க்சியக் கருப்பொருள்களைப் பற்றியும் தோழர் பாலச்சந்திரன் விரிவாகப் பேசுகிறார். ஆழ்ந்த கவனத்துடன் கூடிய தொடர்ச்சியான, காத்திரமான வாசிப்புத்தான் இவற்றைப் புரிய வைக்கும்.

இந்நூலின் முக்கியத்துவம் கருதி, இதனைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அடுத்தடுத்த இதழ்களில் தொடராக வெளியிடுவதற்குப் பதிலாக, முழுமையான வடிவில் அப்படியே வெளியிடுவதே சிறந்த பயனைத் தரும் என்று முடிவு செய்து, இடது இந்நூலை ஓராண்டுச் சிறப்பிதழாக வெளியிடுகிறது.

இந்நூலின் இறுதி அத்தியாயமாக, மக்களுக்கான செயற்கை நுண்ணறிவுக் கொள்கை அறிக்கை என்ற தலைப்பில் தோழர் எஸ்.பாலச்சந்திரன் தயாரித்து அளித்துள்ள கொள்கை அறிக்கையை இடது தனது கொள்கை நிலைப்பாடாகவும் செயல்பாட்டிற்கான அழைப்பாகவும் முன் வைக்கிறது. மார்க்சியச் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், முன்னணி ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், அறிவுத் துறையினர் ஆகிய அனைவரும் தத்துவார்த்த வழிகாட்டிக் கையேடு என்ற முறையிலும் அனைவருக்குமான செயல் திட்டம் என்ற முறையிலும் இக்கொள்கை அறிக்கையைக் கூடுதல் கவனத்துடன் வாசித்து விவாதிக்க வேண்டுகிறோம்.

இதுவே முடிவானதல்ல, இதில் உடன்படுபவர்கள் செழுமைப்படுத்தவும், முரண்படுபவர்கள் விவாதிக்கவும் உரையாடவும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இந்நூலின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையினை முன்வைக்கிறோம். திறந்த மனதுடன் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறோம். இது நிச்சயமாக மார்க்சியக் கோட்பாட்டிற்குப் புதிய பரிமாணங்களைக் கொண்டு வரும் என்று எண்ணுகிறோம்.

இது “நடுக்கடலில் தனிக் கப்பல்தான்”. இருந்த போதிலும் கரை சேரும் என நிச்சயமாக நம்புகிறோம்.

***

அவசியம் இந்நூலை வாங்கிப் படிக்குமாறு அனைத்து வாசர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நூலின் பெயர்: செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்

ஆசிரியர்: தோழர் எஸ். பாலச்சந்திரன்

பக்கங்கள்: 384
விலை: ₹400

வெளியீடு: இடது பதிப்பகம்

முகவரி: 367-முதன்மைச் சாலை,
விசயமங்கலம்,
ஈரோடு – 638 058.

இந்நூலை புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி: புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.

தொடர்புக்கு : 97915 59223

disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குழி பெருத்தால்…
  • காசுமீர்: ‘தேச பக்தி’யால் மறைக்கப்படும் சமூக அவலங்கள்
  • நக்சல்பாரி ‘அபாயம்’: அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?
  • திருச்சி போலீசின் கொட்டடிக் கொலை!
    புகார் கொடுத்தவர் மீதே பொய் வழக்கு!
  • அடுத்தத் தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு!
  • பாலஸ்தீன பிளவும் அமெரிக்கச் சதியும்
  • சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
    அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள்
  • சிங்கூர்: சி.பி.எம்-இன் கிரிமினல் அரசியல்
  • பாலுக்கும் காவல்
    பூனைக்கும் தோழனா?
  • ‘வளர்ச்சி’யில் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்
  • ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?

திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் – கலவர முயற்சி
தற்போதைய நிலை என்ன?

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!

29.11.2025

லெப். சாமுவேல் கமலேசன் பணி நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!

கண்டன அறிக்கை

ராணுவத்தில் லெப்டினன்ட் ஆகப் பணியாற்றும் கிறித்துவரான சாமுவேல் கமலேசன் குருத்துவாராவின் கருவறைக்குள் சென்று பூசை செய்ய மறுத்த காரணத்தால் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அநீதியான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றமும் கட்டாயப் பணி நீக்கத்தை ஏற்றுத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் மிக மேலோட்டமான கருத்துக்களே வந்துள்ளன அது மட்டும் இன்றி கிறித்துவரான சாமுவேல் கமலேசன் இராணுவ உத்தரவை (அதாவது குருத்துவாராவுக்குள் செல்ல மறுத்தார் என்ற வகையில்) மீறி உள்ளார் என்ற வகையில் மட்டுமே செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் ஊடகங்களும் ஆளும் வர்க்கங்களும் தீர்ப்பை ஆதரித்து செய்திகள் வெளியிடுகின்றன.

சாமுவேல் கமலேசன் என்பவர் லெப்டினட் ஆக பொறுப்பேற்ற ராணுவ குழுவானது ராஜபுத்திரர் மற்றும் சீக்கியர்களைக் கொண்டதாகும். அந்த ராணுவ குழுவினர் மத வழிபாடு செய்யும்போது குருத்துவாராவில் உள்ள கருவறை அல்லது குறிப்பிட்ட அறைக்குள் சென்று பூசை செய்ய வேண்டும் என்று அவருடைய மேல் அதிகாரி அளித்த உத்தரவை மறுத்தார் என்று கூறி அவரை இராணுவ நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வது தனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் தான் பின்பற்றக் கூடிய கடவுளைத் தவிர வேறொரு கடவுளுக்கு பூசை செய்ய வேண்டும் என்பதில்தான் தனக்கு மாற்று கருத்து உள்ளதாகவும் சாமுவேல் கமலேசன் உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தை மொத்தமாக புறம் தள்ளிய உச்சநீதிமன்றம் இராணுவ நிர்வாகத்தின் நடவடிக்கையை ஆதரித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25-ஆவது பிரிவானது, அனைத்து மக்களும் மனசாட்சியின் படி சுதந்திரமாகவும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் உரிமை அளிக்கிறது.

மேற்கண்ட அரசியலமைப்புப் பிரிவு 25 -ஐ மறுக்கும் வகையில் தான் சாமுவேல் கமலேசன் பூசை நடத்த வேண்டும் என்று இராணுவ மேலதிகாரியால் உத்தரவிடப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட கட்டாய உத்தரவளித்த மேலதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டிய இராணுவ நிர்வாகம், சாமுவேல் கமலேசனை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கதாகும்.

சாமுவேல் கமலேசன் தொடர்பான தீர்ப்பில், ஆயுதப்படைகள், துணை இராணுவப்படைகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிவோரின் அடிப்படை உரிமைகளை ஒழுங்குபடுத்தும் அல்லது பறிக்கும் அரசமைப்புப் பிரிவு 33 -ஐ உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

ஒரு மதத்தை பின்பற்றுவோரை வேறொரு மத வழிபாட்டுத் தலத்தில் அல்லது மத மறுப்பாளர்களை ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தில் பூசை செய்ய வேண்டும் என்பது எப்படி நியாயமான இராணுவ உத்தரவாகும்?

மேலதிகாரி மாட்டு கோமியத்தை குடிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை எவ்வித மறுப்பும் இன்றி ஒரு பணியாளர் மேற்கொள்ள தான் வேண்டுமா?

ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.

அரசமைப்புப் பிரிவு 51 ஆனது மத, மொழி மற்றும் பிராந்திய அல்லது பிரிவு, வேறுபாடுகளை களைந்து இந்திய நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை வரையறுக்கிறது.

திட்டமிட்டு அரசமைப்புப் பிரிவுகளின் ஒரு பிரிவை இன்னொரு பிரிவுக்கு எதிராக நிறுத்தி தவறான விளக்கங்களுடன் (interpretations) அமைந்திருக்கிறது இத்தீர்ப்பு.

இதனை முன் தீர்ப்பாக கருத்தில் கொண்டு இனி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரசு பணியில் உள்ள சிறுபான்மை மக்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக இந்து கோயில்களில் வழிபாடு செய் என்று மேலதிகாரிகள் மூலம் உத்தரவிடுவார்கள். அதை மறுக்கக் கூடியவர்களை அரசு பொறுப்புகளில் இருந்து விலக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஜெய் ஸ்ரீ ராம் என்று அழைக்காதவர்களை அடித்துக் கொன்று கும்பல் படுகொலைகளை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவாரங்களுக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.

ஆகவே மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்துராஷ்டிக் கனவை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிஸ்டுகள் தேர்தலின் மூலமாக மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளின் வழியாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது இன்றைக்கு எஸ்.ஐ.ஆர் முதலான அனைத்து பாசிச நடவடிக்கைகள் மூலமாக அறிய முடியும்.

ஆக இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்று திட்டத்தை முன்வைத்து மக்களை அணி திரட்ட வேண்டியது ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!

லக நாடுகளின் சந்தைகளை கைப்பற்றுவதற்காக பிற நாடுகளின் மீது அடாவடியாக வரி விதித்துவரும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப், இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்து இந்தியப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் விதித்த 25 சதவிகித பரஸ்பர வரி ஆகஸ்ட் ஏழு அன்று அமலான நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதம் வாங்குவதை காரணம் காட்டி அபராதமாக விதித்த கூடுதல் 25 சதவிகித வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமலானது.

இதனால், இறால், கடல் உணவு, ஜவுளி, ஆயத்த ஆடை, பின்னலாடை, ரத்தினக் கற்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வரி 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து அதன் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் பாதி வழியில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதனால் மேற்கண்ட துறைகளில் அமெரிக்காவை சார்ந்துள்ள தொழிற்சாலைகள் மூடப்படுவதும் அமெரிக்க வணிகர்கள் உடனான ஒப்பந்தங்கள் இரத்தாவதும் தொடர்கதையாகியுள்ளது. இது தொழிலாளர்கள் அதிகமுள்ள தொழில்களிலேயே அரங்கேறுவதால் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலையும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திருப்பூரில், ஆம்பூரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளில் குறைந்தது 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், அமெரிக்க வரி அமலான ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமின்றி அதற்கு முந்தைய மாதங்களிலிருந்தே அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ஜூன் மாதத்தில் 5.7 சதவிகிதமும், ஜூலையில் 3.6 சதவிகிதமும், ஆகஸ்டில் 16.3 சதவிகிதமும் அமெரிக்க ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால், மே மாதத்தில் 8.8 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்க ஏற்றுமதி மதிப்பு ஆகஸ்டில் 6.9 பில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மறுபுறத்தில், யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்காவில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியும் மே மாதத்தை (3.37 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில் ஆகஸ்டில் (1.96 பில்லியன் டாலர்)  41.9 சதவிகிதம் குறைந்திருக்கிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களின் (Smartphone) ஏற்றுமதி மே மாதத்துடன் (2.29 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில் ஆகஸ்டில் (964.8 மில்லியன் டாலர்) 58 சதவிகிதம் சரிந்துள்ளது. மருந்துகளின் ஏற்றுமதியும் மே மாதத்துடன் (745 மில்லியன் டாலர்) ஒப்பிடுகையில் ஆகஸ்டில் (646.6 மில்லியன் டாலர்) 13.3 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மேலும் சரிவை சந்திக்கும் என்றும் 2026 நிதியாண்டின் இறுதிவரை 50 சதவிகித வரி தொடர்ந்தால் அமெரிக்க ஏற்றுமதியில் 30-35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படும் என்றும் “உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி”-இன் (GTRI) அறிக்கை எச்சரித்துள்ளது.

மேலும், இவ்வரி விதிப்பு 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 0.5 முதல் 0.6 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வரி விதிப்பால் இந்தியாவின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 88.75 ரூபாயாக சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பலவீனமாக இருந்துவரும் இந்திய ரூபாய் மதிப்பு இந்தாண்டில் மட்டும் 3.5 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது. டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபரானது முதலே அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களை சங்கிலியால் கட்டி நாடு கடத்தியதிலிருந்து இந்தியாவிற்குத் தண்டத் தொகை (அபராதம்) விதித்தது வரை இந்தியர்களையும் இந்தியாவின் ‘இறையாண்மை’யையும் இழிவுப்படுத்தி வருகிறார். இவை எதற்கும் உறுதியான எதிர்வினையாற்றாமல் மக்களை திசைதிருப்புவதிலேயே முனைப்புக் காட்டிவரும் மோடி அரசு, தற்போதும் அதே உத்தியையே கையாண்டு வருகிறது.

2020-இல் கொரோனா பெருந்தொற்றின் போது மக்கள் இலட்சக்கணக்கில் செத்து மடிந்துக் கொண்டிருந்தபோது, மக்களை காப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் விளக்கேற்றச் சொல்வது, கைத்தட்டச் சொல்வது என மக்களை முட்டாளாக்கிய மோடி அரசு, அதன் உச்சமாக தன்னிறைவு இந்தியாவை (ஆத்ம நிர்பார் பாரத்) உருவாக்குவோம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அவ்வக்கிரம் பிடித்த “ஆத்ம நிர்பார் பாரத்” பிரச்சாரத்தை இந்தாண்டு ‘சுதந்திர’ தின விழா உரையில் மோடி மீண்டும் தொடங்கி வைத்து மக்களை முட்டாளாக்க தயாராகியுள்ளார். இதனையடுத்து, “மேக் இன் இந்தியா” உள்ளிட்ட தோற்றுபோன திட்டங்களை சங்கி கும்பல் மக்களிடத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

அதேபோல், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பாதிப்பைச் சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு நுகர்வை ஊக்குவித்து சந்தையை நகர்த்தும் நோக்கில் ஜி.எஸ்.டி. வரியில் சில திருத்தங்களை செய்து ஜி.எஸ்.டி. 2.0 என்ற பெயரில் மோடி அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், இது கார்ப்பரேட்டுகளுக்கும்  மேட்டுக்குடிகளுக்குமே பயனளிக்கும் என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன, மக்களும் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ளனர்.

மறுபுறம், டிரம்பின் வரிவிதிப்பிற்கு எதிர்வினையாக நடந்துமுடிந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் சீனா-ரஷ்யா அதிபர்களுடன் மோடி கொஞ்சி குலாவியது டிரம்பை ஆத்திரமூட்டியது. இதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதனையெல்லாம் ஊதிப்பெருக்கிய சங்கி கூட்டம் மோடி டிரம்பை அடிபணிய வைத்துவிட்டதாக பிரச்சாரம் செய்தது.

ஆனால், செப்டம்பர் 19 அன்று, அமெரிக்காவில் சிறப்பு பணித் திறன் பணிகளில் வேலை செய்யும் புலம்பெயர் மக்களுக்கான ஹெச்1பி விசா கட்டணத்தை ரூ.1.32 இலட்சத்திலிருந்து ரூ.88 இலட்சமாக உயர்த்தி டிரம்ப் அறிவித்தார். இந்த விசாவை 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய மக்களே (பெரும்பாலும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள்) வாங்கி ஐ.டி. துறைகளில் பணிபுரிந்துவரும் நிலையில் இது மோடி அரசிற்கு மேலும் நெருக்கடியாக அமைந்தது.

மேலும், இக்கட்டண உயர்வு செப்டம்பர் 21 முதலே நடைமுறையாகும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களின் அழைப்பின் பேரில், நவராத்திரிக்காக இந்தியாவிற்கு வந்திருந்த இந்தியர்கள், குறிப்பாக வட இந்தியர்கள் உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்பினர். பாசிச மோடி அரசு ஜி.எஸ்.டி. 2.0-வை  செப்டம்பர் 22 நவராத்திரி அன்று ஆரவாரமாக நடைமுறைப்படுத்த ஆயத்தமாகியிருந்த நிலையில்,  அதற்கு முன்னர் வட இந்தியர்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டது மோடிக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 5.4 மில்லியன் இந்தியர்கள் ஆண்டுதோறும் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு அனுப்பிவரும் நிலையில், இந்த விசா கட்டண உயர்வால் இவ்வரவு கணிசமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26 அன்று அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் (Branded) மற்றும் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளுக்கு டிரம்ப் 100 சதவிகித வரி விதித்தார். இந்தியாவிலிருந்து பெரும்பாலும் ஜெனிரிக் மருந்துகளே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாலும், இந்த வரிவிதிப்பு ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதுநாள்வரை நாடுகளின் மீது வரி விதித்து வந்த டிரம்ப் தற்போது பொருட்களின் மீது வரி விதிக்கத் தொடங்கியிருப்பது, வர்த்தகத்தில் ஏற்கெனவே இருந்துவரும் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து ஏற்றுமதி சரிவை அதிகரிக்கக்கூடும்.

அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் விவசாயம், பால் உற்பத்தித்துறை போன்றவற்றில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளை நுழைப்பதற்கும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்தியாவில் திணிப்பதற்கும் டிரம்ப் அரசு மேற்கண்ட அடக்குமுறைகளை இந்தியா மீது தொடுத்து வருகிறது. ஆனால், பாசிச மோடி அரசு அப்பட்டமாக அமெரிக்க அடிமையாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு, இந்தியா முற்றிலுமாக அமெரிக்க  காலனியாக மாற்றப்படும் அபாயம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  எனவே, மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக, அமெரிக்க வல்லரசிற்கும் அதற்கு அடிமை சேவகம் செய்துவரும் பாசிச மோடி அரசிற்கும் எதிராக இந்திய உழைக்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். பாசிசத்தை வீழ்த்தி, இந்தியா ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்று கட்டமைப்பிற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்

திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் – கலவர முயற்சி
போலீஸ் ஆணையரிடம் புகார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 09 | ஜூலை 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ‘குடியரசு’த் தலைவர்… பெண்ணுரிமையின் வெற்றியா?
  • குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!
  • தமிழுக்கு எதிராகப் பார்ப்பன-‘சூத்திர’க் கூட்டணி
  • குஜ்ஜார் போராட்டமும் “சமூக நீதி”யின் வரம்பும்
  • கோதுமை இறக்குமதி – மறுகாலனியாதிக்கப் பொறி
  • கரும்பு கசக்கிறது – அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும் கரும்பு விவசாயிகளின் அவலக் கதை
  • சத்தீஸ்கர்: “நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!” – அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை
  • சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்… அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
  • மே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள் – ஈயத்தைப் பார்த்து இளிக்கும் “மார்க்சிஸ்டு” ஆட்சி!
  • மாற்றுப் பயிர்-மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!
  • நகரத்தின் ‘அழகு’ ஏழைகளுக்குப் பேரழிவு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கெல்சு | லெனின்

“என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில், “தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எங்கெல்ஸ்” என்ற தலைப்பில், தோழர் லெனின், தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்த எங்கெல்ஸின் நீண்ட மேற்கோளை அப்படியே எடுத்துக்காட்டியிருப்பார்.

எங்கெல்ஸின் 205-வது பிறந்த நாளான இன்று, தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்த, எங்கெல்ஸின் அந்த புகழ்பெற்ற மேற்கோளைப் பதிவிடுகிறோம்.

ஆசிரியர் குழு.

***

மூக-ஜனநாயகவாத இயக்கத்தில் தத்துவம் வகிக்கின்ற குறிப்புகள் பற்றி 1874-இல் எங்கெல்சு சொன்னதை மேற்கோள் காட்டுவோம். சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார். நடைமுறை வகையிலும் அரசியல் வகையிலும் பலமடைந்துவிட்டிருந்த ஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு அவர் அளித்த பரிந்துரைகள் தற்காலப் பிரச்சினைகளின், சர்ச்சைகளின் பார்வை நிலையில் எவ்வளவோ அறிவூட்டுவதாக இருப்பதால் “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” எனும் தமது நூலுக்கு அவர் எழுதிய முகவுரைக் குறிப்பிலிருந்து ஒரு நீண்ட பகுதியை நான் மேற்கோள் காட்டுவதில் வாசகர் வெறுப்படைய மாட்டார் என்று நம்புகிறேன். வெகுகாலமாகவே அந்த நூல் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

“ஐரோப்பாவின் மீதிப் பகுதியிலுள்ள தொழிலாளிகளுக்கு இல்லாத இரண்டு முக்கியமான அனுகூலங்கள் ஜெர்மன் தொழிலாளிகளுக்கு உண்டு. முதலாவது: ஐரோப்பாவின் மிகவும் தத்துவார்த்தப் போக்குள்ள மக்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள்; ஜெர்மனியின் “படித்த” வர்க்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் வர்க்கங்கள் அநேகமாக முற்றும் இழந்துவிட்ட தத்துவ உணர்ச்சியை அவர்கள் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். தனக்கு முற்பட்டதான ஜெர்மன் தத்துவ ஞானம் இல்லாமல், குறிப்பாக ஹெகலின் தத்துவ ஞானம் இல்லாமல், ஜெர்மன் விஞ்ஞான சோசலிசம் – விஞ்ஞான சோசலிசமாக இருந்தது அது ஒன்றுதான் – தோன்றியிராது. தொழிலாளிகளிடையே தத்துவ உணர்ச்சி இல்லாமல் விஞ்ஞான சோசலிசம் அவர்களின் சதையிலே, இரத்தத்திலே இன்று ஊறிப் போயிருக்கிற அளவுக்குப் போயிராது. ஒருபுறத்தில், தனித்தனி தொழிற் சங்கங்கள் நேர்த்தியான அமைப்பு வைத்திருந்துங்கூட ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்க இயக்கம் இவ்வளவு மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகிய தத்துவத்தின்பாலுள்ள அக்கறையின்மை; மற்றொருபுறத்தில், புரூதோன்வாதம்* அதன் ஆதி வடிவத்தில் பிரெஞ்சுக்காரர்களிடையேயும் பெல்ஜியம் நாட்டாரிடையேயும், மற்றும் அதை பக்கூனின் மேலும் கேலிச்சித்திரமாக்கிவிட்ட வடிவத்தில் ஸ்பெயின் நாட்டாரிடையேயும் இத்தாலி நாட்டாரிடையேயும் உண்டாக்கிய தீங்கும் குழப்பமும் -ஆகியவற்றிலிருந்து இது எவ்வளவு அளவிடற்கரிய அனுகூலம் என்று அறியலாம்.

“இரண்டாம் அனுகூலம், காலவரிசையிலே பார்க்கும்போது தொழிலாளர் இயக்கத்தில் அநேகமாகக் கடைசியாக வந்தவர்கள் ஜெர்மானியர்கள். ஜெர்மன் தத்துவார்த்த சோசலிசம் ஸான்-ஸிமோன், ஃபூரியே, ஓவன் ஆகியோரின் தோள்களில் ஏறியமர்ந்திருப்பதை என்றைக்கும் மறக்காது; அம்மூவரும் விசித்திரமான எண்ணப்போக்குகளும் கற்பனாவாதமும் எவ்வளவோ கொண்டிருந்தபோதிலும் எல்லாச் சகாப்தங்களுக்கும் உரிய தலைசிறந்த சிந்தனையாளர்களிடையே இடம் பெற்றவர்கள், அவர்களின் மேதமை எண்ணற்ற விசயங்களை முன்னறிந்து கூறியது, அவை சரியே என்று நாம் அறிவியல் வழியிலே நிரூபித்து வருகிறோம். அதேபோல், ஜெர்மனியிலுள்ள நடைமுறை வழிப்பட்ட தொழிலாளர் இயக்கமும் ஆங்கிலேய, பிரெஞ்சு இயக்கங்களின் அறிவியல் தோள்களின் மீது வளர்ந்திருப்பதையும், அவை எவ்வளவோ விலை கொடுத்துப் பெற்ற அனுபவத்தை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருப்பதையும், தம் காலத்தில் அநேகமாகத் தவிர்க்கமுடியாதவையாக இருந்த அவற்றின் தவறுகளை அது இப்போது தவிர்க்க முடிந்திருப்பதையும் என்றைக்கும் மறக்கலாகாது. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களின், பிரெஞ்சுத் தொழிலாளர் அரசியல் போராட்டங்களின் முன்னுதாரணமின்றி, குறிப்பாக பாரிஸ் கம்யூன் கொடுத்த பிரம்மாண்டமான தூண்டுகையின்றி இன்று நாம் எங்கே இருப்போம்?

“ஜெர்மன் தொழிலாளிகள் தமது நிலைமையின் அனுகூலங்களை அரிய ஞானத்துடன் பயன்படுத்திக் கொண்ட பெருமைக்கு உரியவர்கள் என்பதைச் சொல்லித் தீரவேண்டும். ஒரு தொழிலாளர் இயக்கம் இருந்து வந்ததிலே முதல் தடவையாக போராட்டமானது அதன் மும்முனைகளிலே – தத்துவார்த்த முனை, அரசியல் முனை, நடைமுறைவழிப்பட்ட – பொருளாதார முனை (முதலாளிகளை எதிர்ப்பது) என்று – இசைவுடனும், அதன் பரஸ்பரத் தொடர்புகளோடும், முறையாகவும் நடத்தப்படுகிறது. இவ்வகைப்பட்ட பொது மையத் தாக்குதலிலேதான் ஜெர்மன் இயக்கத்தின் வலிமையும் வெல்லவொண்ணாத் தன்மையும் அடங்கியுள்ளன.

“ஒருபுறத்தில் இந்த அனுகூலமான நிலைமையின் காரணமாகவும், மறுபுறத்தில் ஆங்கிலேயர்களின் தீவுத்தன்மையின்பாற்பட்ட தனிப்பண்புகளின் காரணத்தாலும், பிரெஞ்சு இயக்கம் பலவந்தமாக ஒடுக்கப்பட்ட காரணத்தாலும், தற்சமயத்துக்கு ஜெர்மன் தொழிலாளிகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முன்னணியில் நிறுத்தப் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த மதிப்புள்ள இடத்தை நீடித்து வகித்துவர எவ்வளவு காலத்துக்கு நிகழ்ச்சிகள் அனுமதிக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் இருந்து வருகிற வரை அவ்விடத்தைத் தக்கவிதத்தில் வகித்து வருவார்கள் என்று நம்புவோமாக. இதற்கு ஒவ்வொரு போராட்டத் துறையிலும் கிளர்ச்சித் துறையிலும் இரட்டித்த முயற்சிகள் தேவைப்படும். குறிப்பாக, எல்லாத் தத்துவார்த்தப் பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் செல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோசலிசம் ஒரு அறிவியலாக ஆகிவிட்டதால் அதை ஒரு அறிவியலாகப் பின்பற்றுவது அதாவது அதைப் பயில்வது – அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும். இவ்வாறு பெற்று மேன்மேலும் தெளிவாக்கிக் கொண்ட ஞானத்தைத் தொழிலாளர் திரள்களிடையே அதிகரித்த ஆர்வத்துடன் பரப்புவதும், கட்சியமைப்பையும் தொழிற்சங்கங்களின் அமைப்பையும் ஒருங்கே மேன்மேலும் உறுதியாக இணைத்துப் பிணைத்துவருவதும், பணியாக இருக்கும்…

“… இவ்வழியில் ஜெர்மன் தொழிலாளர்கள் முன்னேறுவார்களேயானால், அவர்கள் இயக்கத்தின் தலைமை நிலையில் நடையிட்டு வருவார்கள் என்பதை விட – எந்தக் குறிப்பிட்ட ஒரு நாட்டின் தொழிலாளர்களும் இவ்வியக்கத்தின் தலைமை நிலையில் நடையிடுவது என்பது இந்த இயக்கத்தின் நலனுக்கு உகந்ததல்ல – போர் அணியில் அவர்கள் மதிப்புள்ள இடத்தை வகிப்பார்கள் எனலாம்; எதிர்பாராத அளவில் கொடிய சோதனைகளோ முக்கியமான நிகழ்ச்சிகளோ மேலும் அதிகமான தைரியத்தையும் மனத்திட்பத் தையும் செயலாற்றலையும் கோருகிறபோது முழுமையான ஆயத்தத்துடன் நிற்பார்கள்.”

எங்கெல்சின் வார்த்தைகள் தொலை நோக்குள்ளவை என்று காட்டிக் கொண்டன. ஒரு சில ஆண்டுகளுக்குள் சோசலிஸ்டுகளுக்கு எதிரான அசாதாரணச் சட்டம் என்கிற வடிவில் எதிர்பாராத அளவில் கொடிய சோதனைகளுக்கு ஜெர்மன் தொழிலாளிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முழுமையான போராயத்தத்துடன் அந்தக் கொடிய சோதனைகளைச் சந்தித்து வெற்றிவாகை சூடினர்.

அதைவிட அளவிடற்கரிய கொடிய சோதனைகளை ரசியப் பாட்டாளி வர்க்கம் அனுபவிக்க வேண்டியிருக்கும்; அது எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் அரக்கனோடு ஒப்பிட்டால் அரசியல் சட்டமுறையில் அமைந்த நாட்டிலுள்ள சோசலிஸ்டு-எதிர்ப்புச் சட்டம் குள்ளனாகவே தெரியும். இன்று வரலாறு நம் முன் வைத்துள்ள உடனடிப் பணியானது எந்த நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தையும் எதிர்கொண்டுள்ள எல்லா உடனடியான பணிகளையும் விட மிகமிகப் புரட்சிகரமானது. இந்தப் பணியை நிறைவேற்றினால், ஐரோப்பாவின் பிற்போக்குக்கு மட்டுமின்றி ஆசியாவின் பிற்போக்குக்கும் (என்று இப்போது சொல்லக்கூடும்) வாய்த்ததாயுள்ள வலுமிக்க கொத்தளத்தை ஒழித்துவிட்டால், அது ரசியப் பாட்டாளி வர்க்கத்தை உலகு தழுவிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக ஆக்கிவிடும். முன்னைவிட ஆயிரம் மடங்காக அகன்றும் ஆழ்ந்தும் வளர்ந்திருக்கும் இயக்கத்திலே அதே பற்றுறுதிமிக்க மனத்திட்பத்தையும் வீரியத்தையும் பாய்ச்சி ஊக்கினால் நமது முன்னோர்களான 1870-களின் புரட்சியாளர்கள் ஏற்கெனவே சம்பாதித்த இந்த மதிப்புமிக்க பட்டத்தைப் பெறுவோம் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை உண்டு.

– லெனின்

(என்ன செய்ய வேண்டும்? என்ற நூலிலிருந்து)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



எங்கெல்ஸ் 205வது பிறந்தநாள்

எங்கெல்ஸ் 205

மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

– லெனின்

***

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும், பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும்.

– லெனின்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 08 | ஜூன் 01-30, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்
  • வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்
  • உ.பி.: தலித் ஆட்சியா? பார்ப்பன மீட்சியா?
  • சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!
    அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!
  • பிரேம்குமார் பதவி நீக்கம்: இது தண்டனை அல்ல!
  • தில்லை போராட்டம்: வெற்றியை நோக்கி ஒரு படி!
  • குஜராத் ‘மோதல்’ படுகொலைகள்: இதுதான் இந்துராஷ்டிரம்!
  • மீண்டும் படரும் காவி இருள்
  • பெருந்தொழில் நிறுவனங்களின் ‘சமூகப் பொறுப்புணர்வு’: ஓநாய்களின் திடீர் கரிசனை
  • சட்டங்கள், ஆணையர்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
    அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள்
  • ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு: வாழ்வுரிமைக்கான போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 2007 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 07 | மே 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அன்னிய மோகத்திற்கு தரப்படும் விலை!
  • லாலுவின் நிர்வாகத் ‘திறமை’
    கொல்லைப்புற வழியில் தனியார்மயம் – கட்டணக் கொள்ளை
  • தேங்காய்திட்டு: அரசின் நிலப்பறி புதுவை மக்களின் போர்க்கோலம்
  • நரேந்திரமோடி: ‘தேசிய’ நாயகனா? அரசு பயங்கரவாத கொலைகாரனா?
  • திருமாவளவன் – ரவிக்குமார்
    ரிலையன்ஸின் புதிய பாதந்த்தாங்கிகள்
  • நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு: மறையாது மடியாது நக்சல்பாரி!
    மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!
  • பெரியார் புரா: தி.க. வீரமணியின் ஏகாதிபத்திய சேவை
  • சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம்: சர்வகட்சி பித்தலாட்டம்
  • நல்லகாமன் வழக்குத் தீர்ப்பு: பாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்…
  • நந்திகிராமப் படுகொலைகள்: சி.பி.எம்.இன் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பிரச்சார இயக்கம்
  • “அடங்கிப் போ; ஒத்து ஊது!” – புதிய தலித்திய முழக்கம்!
  • சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
    அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
  • உத்திரப்பிரதேசம்: தேர்தல் புழுதியில் மறைக்கப்படும் பட்டினிச் சாவுகள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும் புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா

தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும்
புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம்
மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram