Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 18

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2006 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேர்தல் கூட்டணிகள்: சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்
  • “விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!” – தாராளமயத்தின் கோரம்
  • நிரந்தர பசுமைப் புரட்சி: வந்தது பேராபத்து!
  • கேரளா: நாற்காலி பிடிக்குமுன்னே நாய்ச்சண்டை
  • நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள் – தொடரும் மாணவர் போராட்டம்!
  • இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: அடிமைக்கு எதற்கு அணு ஆயுதம்?
  • பட்ஜெட்: தனியார்மயத்திற்கு கவர்ச்சி முகமூடி
  • பறவைக் காய்ச்சல்: சந்தைப் பொருளாதாரத்தின் கோர விளைவு ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்
  • அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்.
  • “போர்க் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷே, திரும்பிப் போ!” – தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
  • கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டம்: மறுகாலனியாக்க எதிர்ப்பு தீ பரவட்டும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2006 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 5 | மார்ச் 01-31, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொலைகாரன், கொள்ளைக்காரன், உலகமேலாதிகக்கப் போர்வெறியன்
    ஜார்ஜ் புஷ்ஷைத் துரத்தியடிப்போம்!
  • தீண்டாமை எதிர்ப்பைச் சுவாசிக்கும் மாவீரன்!
  • மானங்கெட்ட சிங்கின் துரோகம்
    அணுசக்தி என்ற பெயரால் அரசியல் – இராணுவ அடிமைத்தனம்
  • தமிழக தேர்தல்: பதவியைப் பிடிக்க லாவணி! ஏகாதிபத்திய சேவையில் ஓரணி!
  • ‘மார்க்சிஸ்டு’களைக் கவிழ்த்த மன்மோகன் சிங்
  • அமைதிப் பேச்சுவார்த்தை: முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்ட விடுதலைப்புலிகள்
  • நீரின்றி அமையுமா உலகு? பவானி நதியை நாசமாக்கும் கிரிமினல் முதலாளிகளைக் கைது செய்!
  • மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்
  • கொலைகார ‘கோக்’குடன் சர்வகட்சி கூட்டணி
  • தயா நாயக்: போலீசு பயங்கரவாதியின் மறுபக்கம்
  • நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது
  • மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்
  • இட்லருக்கு ஒரு நீதி! புஷ்ஷுக்கு ஒரு நீதியா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01-28, 2006 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 4 | பிப்ரவரி 01-28, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அடிமை+அடியாள் = வல்லரசு!
  • “கொலைகார ‘கோக்’கைக் குடிக்காதே!”
    அமெரிக்க மாணவர்களின் ‘கோக்’ புறக்கணிப்பு இயக்கம்
  • உலக வங்கி உத்தரவு! உணவு மானியம் குறைப்பு!
    பரவும் பட்டினிச் சாவுகள்
  • தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க ‘கோக்’கே வெளியேறு!
  • கொலைகார ‘கோக்’கின் பணபலம் – அதிகாரத் திமிருக்கு விழுந்த அடி
  • வெள்ளி விழா ஆண்டில் பா.ஜ.க.: ஒழுக்கக் கேடே ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் ஒழுக்கம்!
  • நகர்ப்புற புத்தாக்கத் திட்டம்: ஏழைகளை விரட்டியடிக்கும் ஏகாதிபத்திய சதி!
  • ஏழை நாடுகளின் சுற்றுப்புறச் சூழலை அழிப்பது யார்?
  • ஒப்பந்த விவசாய மோசடி: பஞ்சாப் தரும் படிப்பினை
  • ஒரிசா: மறுகாலனியாதிக்கத்தின் கோரம் பழங்குடி மக்களின் யுத்தம்
  • விமான நிலைய ஊழியர் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகம்
  • சில்லறை வணிகத்தின் பன்னாட்டு மூலதனம்: பேரழிவுக்கு ஒரு முன்னோட்டம்
  • தமிழகமெங்கும் கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!

ணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு தொடங்கிய இன அழிப்புக் கலவரம் இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

இந்த இன அழிப்புக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது அங்கு எட்டிக் கூடப் பார்க்காத பிரதமர் மோடி, சுமார் “864” நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 13 அன்றுதான் மணிப்பூருக்கு சென்றிருக்கிறார். மொத்தமாக ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே மணிப்பூரில் செலவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல், பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசிவிட்டு மோடி கிளம்பியிருக்கிறார். அதிலும், இப்பொதுக்கூட்டத்திற்கு வந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று மக்கள் மிரட்டி வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களும் மோடிக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர் என்பது மீண்டும் அம்பலமாகிறது.

மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் இனக்கலவரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல், மணிப்பூரின் பெருமையையும், மணிப்பூருக்காக இந்திய அரசு உள்ளது என்றும் அயோக்கியத்தனமாக வாய்ச்சவடால் அடித்துள்ளார்.

ஆனால், மோடியின் வருகையையொட்டி மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளே அங்கு நிலவும் வன்முறைச் சூழலை எடுத்துக்காட்டுகிறது. மோடி வருகைக்காக இராணுவம், மத்தியப் படைகள், மாநில போலீசுத்துறை என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டன. பொதுக்கூட்டத்தில் மக்களை வெகு தொலைவில் நிற்க வைத்துவிட்டு மோடி உரையாற்றியதன் மூலம் மணிப்பூர் மக்களை இழிவுப்படுத்தினார்.

அதேபோல், மணிப்பூரில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட மோடி சந்திக்க மறுத்துள்ளார்.

மணிப்பூருக்குச் சென்றபோது மோடி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்கள் மீது மோடிக்கு துளியளவும் அக்கறை இல்லை என்பதையும் அம்மக்கள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக காட்டுகிறது.

உண்மையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த அடிவாங்கிய மோடி-அமித்ஷா கும்பல், இழந்த தனது மக்கள் அடித்தளத்தை சரிசெய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாசிச கும்பலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் மணிப்பூர் கலவரம் முக்கியமானதாக அமைந்தது.

குக்கி இன மக்களை காடுகளில் இருந்து விரட்டியடித்து கேள்விக்கிடமற்ற வகையில் அங்குள்ள கனிமவளங்களை சுரண்டுவதற்கும், மெய்தி இன மக்களை தன்னுடைய அடித்தளமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டு மணிப்பூரில் இன அழிப்புக் கலவரத்தை பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பல் தூண்டிவிட்டது.


படிக்க: மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!


ஆனால், ஒரு கட்டத்தில் மணிப்பூர் பிரச்சினை பாசிச கும்பலுக்கே நெருக்கடியாக மாறியது. பா.ஜ.க. அடித்தளமாக மாற்றத் துடித்த மெய்தி இன மக்களே மோடி கும்பலுக்கு எதிராக திரும்பினர். குக்கி பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி ஒட்டுமொத்த நாட்டையும் கொதித்தெழ செய்தது. சர்வதேச அளவில் பாசிச மோடியின் உண்மை முகம் கிழிந்து தொங்கியது.

எனவே, இந்நெருக்கடிகளை தீர்ப்பதற்காகவும், இழந்த மக்கள் அடித்தளத்தை திரும்ப பெறுவதற்காகவும், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல், 2027 மணிப்பூர் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மோடியின் மணிப்பூர் வருகை நடந்துள்ளது.

ஆனால், பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 13 அன்று மோடி ஊர்வலம் செல்லும் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோடிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதேபோல், மெய்தி மக்களை அடிப்படையாக கொண்டுள்ள மணிப்பூர் மக்கள் கட்சியை (MPP – Manipur People’s Party) சேர்ந்தவர்களும் மோடிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் “மோடி வெளியே போ” என்ற முழக்கங்களை முன்வைத்து போராட்டம் நடத்தினர். சூரசந்பூர் எனும் பகுதியில் மணிப்பூர் பெண்கள் மோடிக்கு எதிராக பேரணி நடத்தினர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இளைஞர்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக, பூங்கையார் தொகுதியில் 43 பா.ஜ.க. உறுப்பினர்கள் மோடி வருகைக்கு முன்னர் பா.ஜ.க. கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இவை அனைத்தும் பாசிச கும்பலின் நயவஞ்சக நாடகங்களையும், மோடியின் வெற்று வாய்ச்சவடாலையும் மணிப்பூர் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன.


அசுரன்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம் – 3)

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த
சரியான அரசியலும்
உறுதியான போராட்டங்களும்
(பாகம் – 3)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்ற கொக்கரிப்புடன் சங்கிக் கும்பல் மதுரையில் மேற்கொண்டுவரும் கலவர சதி வேலைகளை முறியடிக்கும் விதமாக, எமது மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் தொடர்ந்து போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்தப் போராட்ட அனுபவங்களை தொடர்ந்து பதிவு செய்தும் வருகிறோம். அந்தவகையில், கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் இப்பிரச்சினை தொடர்பாக எமது அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. சங்கிக் கும்பலின் ஜூன் 22 ‘முருக பக்தர்கள்’ மாநாடு, புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் முயற்சியால் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன், உடனடியாக, இந்த மாநாடு எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தி காணொளி வெளியிடப்பட்டது. பொதுவில் மாநாட்டின் கூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரும் இம்மாநாட்டை மதிப்பிட்டுவந்த நிலையில், அரசியல் ரீதியாக இம்மாநாடு தோல்வி அடைந்துள்ளது என்பதை அக்காணொளி உணர்த்தியது. இது, பல்வேறு ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

2. மேலும், ஜூன் 22 மாநாட்டில் அண்ணாமலை உள்ளிட்டு சங்கிகள் அனைவரும் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் துளியும் மதிக்காமல் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசினர். அவ்வாறு பேசிய பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை போலீசு ஆணையர் அலுவலகத்தில் ஜூன் 24 அன்று மனு கொடுக்கப்பட்டது.

3. ஜூன் 24 அன்று திருப்பரங்குன்றத்தில் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவது தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி நிஷா பானு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு-கோழி பலியிட்டு வழிபடும் மரபு ஆண்டாண்டு காலமாக இருந்து வந்ததை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். ஆனால், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில், உண்மைக்கு மாறான விவரங்களை அடிப்படையாகக் கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவில் ஆடு-கோழி பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

சங்கிகளின் பொய்ப் பிரச்சாரங்களையே நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பாக வழங்கியதை அம்பலப்படுத்தி, உடனடியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ஒரு காணொளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த மாறுபட்ட தீர்ப்பை விமர்சித்து தொடர்ச்சியாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. ஜூன் 22 மாநாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க-இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை போலீசு கொடுக்க மறுத்தது. இதனை கண்டித்து மதுரை அண்ணாநகர் போலீசு நிலையத்தின் முன்பு மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நேரலை செய்தோம். இப்போராட்டத்தின் விளைவாக, போலீசு முதல் தகவல் அறிக்கை நகலை ஒப்படைத்தது.

5. ஜூலை மாதம் புதிய ஜனநாயகம் இதழில், “பக்தி-மதவெறி-கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்”, “மதுரை: இந்து முன்னணி மாநாடு நீதிமன்றமே துணை!”, “இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’”, “‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு” ஆகிய தலைப்புகளின் கீழ் சிறப்புக் கட்டுரைகளையும் எமது தொடர்ச்சியான போராட்டங்களையும் தொகுத்து, “தொடரும் போராட்டங்கள்” என்ற தலைப்பில் சிறு வெளியீடு கொண்டுவந்து ஜனநாயக சக்திகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது. இது அனைத்து ஜனநாயக சக்திகளாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

6. ஜூலை 10-ஆம் தேதி முதல், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து, “மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!” என்ற தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டு பிரசுரம் மற்றும் இணையதளப் போஸ்டர்கள் வெளியிட்டு பரப்புரைத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 30-ஆம் தேதியன்று மாறுபட்ட தீர்ப்புகள் குறித்து மதுரையில் சட்டக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தொடக்கம் முதல் நமக்கு சட்ட ரீதியாக உதவிகளை செய்துவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் மருது ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பெருமளவு மாணவர்களையும் இளம் வழக்கறிஞர்களையும் ஜனநாயக சக்திகளையும் திரட்டி இக்கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதே காலகட்டத்தில், கோவையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கருத்தரங்கம் நடத்துவதற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கருத்தரங்கம் நடத்துவதற்கு மண்டபம் வழங்கியவர்களை சங்கிகளின் உந்துதலால் போலீசு தொடர்ந்து மிரட்டி வருவதால் கருத்தரங்கம் நடத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று, பெரியார் திடல் மணியம்மை அரங்கத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.  இக்கருத்தரங்கில், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,  ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்கள், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் விரிவாகப் பிரச்சாரம் செய்தனர்.

7. சிவகங்கை மக்களின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஜூலை 12 அன்று ம.க.இ.க. சார்பாக “சிவகங்கை அல்லாக் கோயில் பூக்குழித் திருவிழா” தொடர்பான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

8. திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே அமைந்துள்ள மசூதிக்கு சொந்தமான இடத்தில் பழுதடைந்த ஒலிபெருக்கி குழாயைக் கூட சீரமைக்க விடாமல் போலீசு தடுத்து வருகிறது. மதுரை போலீசின் இந்த இஸ்லாமிய விரோதப் போக்கைக் கண்டித்தும், அவற்றை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தும் விதமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

9. ஜூலை 30-ஆம் தேதி சிக்கந்தர் தர்கா நிர்வாகத்திற்கு போலீசு கொடுத்துவரும் தொடர் நெருக்கடியை அம்பலப்படுத்தி ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் காணொளி வெளியிட்டார்.

10. ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ம.க.இ.க., மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினையை பொதுவெளியில் கொண்டுவந்து அவர்களுக்கு ஆதரவைத் திரட்டினர். அத்துடன் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து பேசாத இந்து முன்னணி கும்பல், மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டுவதற்காக எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அம்பலப்படுத்தி காணொளி வெளியிட்டனர்.

11. தர்காவிற்கு செல்லும் மக்களை வழிமறித்து மலை மீதிருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு போக சொல்வது; தர்காவிடம் அனுமதி பெறாமல், தர்காவிற்கு சொந்தமான இடத்தில் கேமராக்கள் வைப்பது; மின் கம்பங்களை ஊன்றுவது; பழுதடைந்த தர்கா கட்டடத்தின் மேல் இடிதாங்கி வைக்கக் கூட அனுமதி கொடுக்காமல் நெருக்கடி கொடுப்பது; மலை மீது உணவு எடுத்துக்கொண்டு சாப்பிட போகும் மக்களை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவது என போலீசு மேற்கொண்டு வந்த தொடர் அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று மக்கள் அதிகாரக் கழகம், ம.க.இ.க. தோழர்கள் தலைமையில் தர்கா நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை திரட்டி மாநகர போலீசு ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

12. இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கில் நாமும் ஒரு தரப்பினராக இணைந்து சட்ட ரீதியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

13. திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும், தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்கியதன் சாட்சியாகவும் விளங்கும் தர்கா நிர்வாகி பாஷாவையும், தர்காவில் ஆடு வெட்டி வந்தவரான பரமசிவத்தையும் ஆவணப்படுத்தும் விதமாக “பரமசிவமும் பாஷாவும்” என்ற ஆவணப்படம் தயார் செய்யப்பட்டது. இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி மதுரையில் ஆகஸ்டு 25 அன்று நடக்க இருந்ததையொட்டி தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், மதுரை போலீசு, ஆவணப்படத்தைத் திரையிடக் கூடாது என கடைசி நேரத்தில் தடுத்தது. ஆகையால், ஆவணப்படம் திரையிடும் கூட்டமானது, போலீசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் கூட்டமாக நடந்தேறியது. தற்போது இந்த ஆவணப்படம் வினவு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, சங்கிக் கும்பலின் கலவர முயற்சிகளையும் அதற்கு உறுதுணையாக செயல்படும் போலீசு, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் எமது தோழர்கள், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தியும், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடியும் வருகின்றனர். சங்கிக் கும்பலின் சதித்திட்டத்தை முறியடிக்கும் இப்போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள், பாசிச கும்பலை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.


(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2006 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 3 | ஜனவரி 01-31, 2006 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வெள்ள நிவாரணம்: “அரசியல் பண்ணுவது” தவறா?
  • வெள்ள நிவாரணப் படுகொலைகள்: கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கப் போராடுவதே உண்மையான அஞ்சலி
  • நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு விலையில் எம்.பி.க்கள் தயார்!
    இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்
  • சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!
  • சென்னை வெள்ள நிவாரணப் படுகொலை! கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்போம்!
  • வெள்ளப் பகுதியில் புரட்சிகர அமைப்புகளின்
    நிவாரணப் பணிகள் போராட்டப் பணிகள்
  • பெங்களூர் “கால் சென்டர்” பெண் ஊழியர் கொலை: அந்நியச் செலாவணி வருமானத்தின் பலிகிடாக்கள்!
  • இங்கேயும் ஒரு அபு-கிரைப்
  • உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம்: மறுகாலானியாதிக்கத்தின் பிடி இறுகிறது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!

காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு

இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட், காஷ்மீர் பெருவெள்ளம்:
இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!

தீத வெப்பம், வெப்ப அலை, வறட்சி, காட்டுத்தீ, அதீத கனமழை, பெருவெள்ளம், மேக வெடிப்பு இவையெல்லாம் அன்றாட செய்திகளில் அடிக்கடி விவாதிக்கப்படும் பெயர்களாகிவிட்டன. அந்தளவிற்கு காலநிலை மாற்றமும், அதனால் ஏற்படும் பேரிடர்களும் இயல்பாகிவிட்டன.

ஒரு அரசியல் நெருக்கடிக் காலத்தில், அரசியல் கைதுகளும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவதும் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற அச்சம் சமூகத்தையே ஆட்கொண்டிருக்கும்.

அதுபோல, காலநிலையில் ஏற்படும் தீவிர மாற்றத்தால், ஒரு பருவ காலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை மேகவெடிப்பினால் ஓரிரு மணி நேரங்களில் கொட்டித் தீர்ப்பது, கோடை காலம் முடிந்தும் அதீத வெப்பம், வெப்ப அலை வீசுவது, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ என எப்பொழுது என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் மனித சமூகம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதையே காலநிலை நெருக்கடி என்கிறோம்.

தீவிரமாகும் காலநிலை நெருக்கடி

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் (ஜூன் – செப்டம்பர்) இயல்பைக் காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தின்போது நாட்டில் வழக்கமாக 868 மி.மீ. மழை அளவு பதிவாகும். ஆனால், இம்முறை 937 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேசமயம், இந்த மழைப்பொழிவும் அனைத்து மாநிலங்களிலும் சீரானதாக இல்லை.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 1,089.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பாக பதிவாகும் 1,367 மி.மீ. மழையைக் காட்டிலும் 20 சதவிகிதம் குறைவாகும். குறிப்பாக, பீகார், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் பற்றாக்குறையாகவே பருவ மழை பெய்துள்ளது.

அதேசமயம், வடமேற்கு இந்தியாவில் 747.9 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 587.6 மி.மீ. அதிகமாகும். குறிப்பாக பஞ்சாப், உத்தராகண்ட், காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பருவக் காலத்தில் பெருமழையும் பெருவெள்ளமும் ஏற்பட்டது.

இதில், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். பலர் காணாமல் போயுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள், சாலைகள், கட்டடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. சமவெளிப் பகுதியில், இப்பெரு வெள்ளத்தால் இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 11.30 மணியிலிருந்து 23-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை 180 மி.மீ. வரையிலான மழை பெய்திருக்கிறது. கரியா, காலிகட், ஜோத்பூர், டப்சியா மற்றும் பல்லிகுஞ்ச் (Ballygunge) ஆகிய தெற்கு கல்கத்தா நகரங்களில் முறையே 340 மி.மீ., 297 மி.மீ., 290 மி.மீ., 284 மி.மீ. மற்றும் 279 மி.மீ. என ஒரே நாளில் மழை பெய்திருக்கிறது.

காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக கதுவார் மாவட்டத்திலுள்ள சசோடி கிராமத்திலும் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. அதே சமயம் இக்கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் கொஞ்சம் கூட மழை பெய்யவில்லை.

மகாராஷ்டிராவிலும் இந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை 1,000 மி.மீ. அளவிற்கு மழை பெய்திருக்கிறது. இது சராசரி மழை அளவைவிட 109  சதவிகிதம் அதிகமாகும். இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் மழை பெய்திருப்பதோடு, பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்திருக்கின்றன.

உத்தராகண்டிலும் மேகவெடிப்பால் பெரு மழையும், பெரு வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் டேராடூன், உதம்சிங் நகர், சமோலி மாவட்டத்தில் பெய்த பெருமழையால், அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால், உத்திரகாசி மாவட்டம் தாராலியில் பெருமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேரா என்கிற ஆழமான வடிகாலில் நீர்மட்டம் திடீரென அதிகரித்து, தராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

மொத்தத்தில், காலநிலை நெருக்கடி காரணமாக இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைக் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. காலநிலை ஆபத்துக் குறியீட்டில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் இப்பேரிடர்கள், இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கின்றன.

ஒன்றிய – மாநில அரசுகளின் ‘வளர்ச்சி’த் திட்டங்களும் பேரிடர்களும்

பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்த பெருமழைக்கும், பெரும் சேதத்திற்கும் காலநிலை நெருக்கடி எவ்வாறு முக்கியமான காரணமாக இருக்கிறதோ, அதேபோல் ஒன்றிய – மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் விரோத நடவடிக்கைகளும் முக்கியமான காரணமாகும். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அரசுகள் செய்யும் சேவையே, சுருக்கமாகச் சொன்னால், ஒன்றிய, மாநில அரசுகளின் ‘வளர்ச்சித்’ திட்டங்களின் விளைவாகவும் இப்பேரிடர்களை பார்க்க வேண்டியுள்ளது.

சான்றாக, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு, நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாராதது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மாஃபியாக்களின் மணற்கொள்ளை, சூழலியலுக்குப் பொருத்தமற்ற பக்ராநங்கல் அணை, நீர்மின் திட்டங்கள், இத்திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு போன்றவை  முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி சோ நதிக்கரையில் திட்டமின்றி விரிவாக்கப்படும் சண்டிகர் நகரமயமாக்கமும், மழைநீர் வடிகால் திட்டமின்றி மேற்கொள்ளப்படுகிற சண்டிகர்-அம்பாலா, சண்டிகர்-சிம்லா பசுமைவழிச் சாலைத் திட்டங்களும் பஞ்சாபை பேரிடரில் தள்ளி வருகின்றன.

அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில் “பீஸ்” ஆற்றுப் படுகையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அரசுக் கட்டடங்களும், எல்லையின்றி விரிவாக்கப்படும் தேசிய-உள்ளூர் நெடுஞ்சாலைகளும் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்திருப்பதால் வெள்ளம் வடிவதற்கான வடிகாலின்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், உலகின் மிக இளமையான மலையான இமயமலையில் பெரும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற சூழலியலாளர்களின் எச்சரிக்கையையும் மீறி ஒன்றிய மோடி அரசு பெரும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், 2013-இல் உத்தராகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, அம்மாநிலத்தில் ஓடும் ஆற்றுப் பகுதிகளை சூழலியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், அம்மாநிலத்தில் பெரும் கட்டுமானத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தராகண்டின் வெள்ளம் குறித்தான ஆய்வுக் குழு 2014-இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், இதனையெல்லாம் மீறிதான், ‘வளர்ச்சி’ மற்றும் ‘சுற்றுலா’ என்ற பெயரில் விமானநிலைய விரிவாக்கம், ரிஷிகேஷ்-ஹரித்துவார் ஆன்மீகப் பாதைத் திட்டம், சார் தாம் சாலைத் திட்டம் (Char Dham Road Project) போன்ற நாசகார திட்டங்கள் பா.ஜ.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் மற்றும் காவி கும்பலின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்கள்தான் உத்தராகண்ட் மாநிலத்தை பெருந்துயரில் தள்ளியிருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு இந்த காவி ஓநாய்களே மக்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாக கண்ணீர் வடிக்கின்றன.

அதேபோல், இதுபோன்ற பேரிடர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு நிவாரணம் வழங்காமல் மக்களை வஞ்சிக்கும் போக்கையும் பாசிச மோடி அரசு கொண்டுள்ளது.

புவி வெப்பமயமாதலும் கேள்விக்குள்ளாகும் உயிர்க்கோளமும்!

காலநிலை மாற்றத்திற்கு முதன்மை காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதலே. புவி வெப்பமயமாதல் என்றவுடன், இதற்குக் காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்கள் முதலாளித்துவ சிந்தனையாளர்கள்.

புவி வெப்பமயமாவதற்கு புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதும், அதிலிருந்து வெளியேறுகிற பசுமை இல்ல வாயுக்களும்தான் காரணம் என்று அறிவியல் விளக்கமளிக்கிறது. இந்த பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியேற்றுவது யார்?

குறிப்பாக, தொழிற்துறைப் புரட்சிக்குப் பின்னரே புவி வெப்பமயமாதல் அதிகரிக்கத் தொடங்கியது. மேற்கத்திய, தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள்தான் புவிவெப்பமடைவதற்கு உண்மையான காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள்தான் 67 சதவிகித கார்பன் உமிழ்விற்குக் காரணமாகும். இதில் அமெரிக்கா 15 சதவிகித கார்பனை உமிழ்கிறது. இந்நாடுகள் தங்கள் கார்பன் உழிழ்வைக் குறைத்துக் கொண்டாலே புவி வெப்பமடைவதைக் குறைக்க முடியும்.

பூமியின் சராசரி வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதிலிருந்துதான் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் உடன்படிக்கை 2015-இல் கையெழுத்திடப்பட்டு, 2016 நவம்பரில் நடைமுறைக்கு வந்தது. பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

எனவே, பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும். ஆனால், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரான பிறகு, இரண்டாவது முறையாக பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. இது ஏகாதிபத்திய நாடுகள் கார்பன் உமிழ்வை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற ஜ.நா. மன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, காலநிலை மாற்றத்தைக் குறைக்க ஏழை நாடுகளுக்கு நிதி உதவி செய்வதை கேடுகெட்ட வேலை என்று வன்மத்துடன் கூறியிருக்கிறார்.

அதேபோல், காலநிலை மாற்றத்தைக் குறைக்க, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 29 மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. இறுதியாக நடந்த 29-வது மாநாட்டில், 2035-ஆம் ஆண்டு வரை ஏழை நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏழை நாடுகளுக்கான நிதியுதவியை வளர்ந்த நாடுகள் பகிர்ந்து கொள்வதை, அமெரிக்க முதலாளிகள் விரும்பவில்லை. இதைத்தான் டிரம்ப் அமெரிக்க வரிக் கட்டுபவர்களுக்கு எதற்காக சுமையை ஏற்ற வேண்டும் என்று கேள்வியெழுப்பி, பாரீஸ் உடன்பாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

மேலும், இம்மாநாடுகளில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் நடைமுறைக்குச் சென்றதில்லை; செல்லப்போவதும் இல்லை என்பதையே டிரம்பின் வன்மம் நிறைந்த பேச்சுக் காட்டுகிறது.

இம்மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி கார்பன் உமிழ்வை குறைப்பது என்ற பெயரில் அவரது எஜமான் அதானிக்கு சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாலும், கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் 0.8 சதவிகிதம் கார்பன் உமிழ்வு அதிகரித்திருக்கிறது. கார்பன் உமிழ்வைக் குறைப்பது, மின்சார வாகனங்களை அதிகரிப்பது என்ற பெயரில் மின்சார வாகன உற்பத்தியில் எலான் மஸ்க்கிற்கு கம்பளம் விரிக்கவும், காஷ்மீரின் லித்தியத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுமே மோடி அரசின் நோக்கமாக உள்ளது. அதேசமயம் அம்பானி கொள்ளையடிக்க ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் குறைக்கவில்லை. ஆக, உச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் கண் துடைப்பிற்கானவையே.

அதுமட்டுமின்றி புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மின்சார வாகனங்கள், அரிய வகைக் கனிமங்களுக்காக ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கிடையே சண்டையிடுவதையே துரிதப்படுத்துகிறது. இவை ஒருபுறம் போரையும் மறுபுறம் காடுகள் அழிவை நோக்கியுமே இட்டுச் செல்லும். இது மேலும் புவிக்கோளத்தின் இருப்பை கேள்விக்குள்ளாகும். எனவே முதலாளித்துவக் கண்ணோட்டத்தில், அதாவது லாப நோக்கில் முன்வைக்கப்படும் தீர்வுகள் சமூகத்தையும் பூமியையும் மேலும் மேலும் மீள முடியாத புதை குழிக்குள்ளே இட்டுச் செல்லும்.

எனினும், உடனடியாக, தற்காலிகமாக புவிவெப்பமடைவதைக் குறைக்க வேண்டுமானால் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நமது நாட்டில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலைகள், சிறுநிறுவனங்கள் நகரங்களில் குவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். மக்கள்தொகை பரவலாக்கப்பட வேண்டும், மறுசுழற்சிக்கு முதலீடு செய்யப்பட வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட முடியாத நெகிழிகள் உற்பத்திக்குத் தடை விதிக்க வேண்டும். இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிராக இமயமலைப் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்கள் மற்றும் எட்டுவழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், மீத்தேன் எடுப்பு, பெட்ரோலியம் எடுப்பு, கனிமவளக் கொள்ளை, மணற்கொள்ளை, சட்டவிரோத கல்குவாரி போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும்.

மேலும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சூழலியல் கண்ணோட்டத்தில் சூழலியலாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம், பன்னாட்டு – உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யக்கூடிய மோடி-ஷா கும்பலோ அல்லது எதிர்க்கட்சிகளோ செய்யாது. எனவே, பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 2 | டிசம்பர் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: துயர வெள்ளத்தில் தமிழகம்
    தேவை: மறுவாழ்வு; அற்ப நிவாரணமல்ல!
  • அமெரிக்க எதிர்ப்பு: சி.பி.எம்.-இன் பித்தலாட்டம்
  • தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க ‘கோக்’கை அடித்து விரட்டுவோம்!
    -தொடரும் பிரச்சார இயக்கம்
  • விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை
  • பீகார் சிறை தகர்ப்பு: நக்சல்பாரிகளின் புரட்சிகர வீரசாகசம்
  • தொல்.திருமாவளவன்: ஒரு தலித் என்பதாலா..?
  • பற்றியெரியும் பாரீ நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்
  • ராமன்குட்டி மணியப்பன் கொலை: பலிகிடாவாக்கியது இந்திய அரசே!
  • தென்னமெரிக்காவை உலுக்கிய புஷ் எதிர்ப்புப் போராட்டம்
  • அமெரிக்காவின் போர் குற்றங்கள்: அன்று வியட்நாம்; இன்று ஈராக்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 21, இதழ் 1 | நவம்பர் 01-30, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எங்கெங்கும் போலீசு அதிகாரம் – ஆதிக்கம்!
  • புத்ததேவ் பட்டாச்சார்யா: போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தும் ‘தோழர்!’
  • குஷ்பு – தங்கர்பச்சான் விவகாரம்: பெண்ணியவாதிகளும் பழமைவாதிகளும்
  • ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி: மறுகாலானியாதிக்கத்தின் ‘மனித முகம்’
  • தனியார்மயத்தின் தாக்குதலும் தொழிற்சங்கவாதத்தின் தோல்வியும் – ஹோண்டா தொழிலாளர் போராட்டப் படிப்பினை
  • பன்னாட்டுக் கம்பெனிக்கு வெண்ணெய் தாழ்த்தப்பட்டோருக்கு சுண்ணாம்பு
  • குடிநீர் பிரச்சினை குறித்த உலக வங்கியின் அறிக்கை: ஓநாயின் கவலை
  • பாரதீயம், சாதியம், இனவாதம், திரிபுவாதம்
    த.தே.பொ.க.வின் கலக்கல் தயாரிப்பு
  • ஜெயா – கராத்தே விவகாரம்: மர்ம ஆட்சியின் கூத்து!
  • அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அமெரிக்க சேவையில் இந்தியாவின் துரோகம்
  • “ஜாட்” சாதிவெறி பெருநெருப்பில் கருகும் தலித் மக்களின் வாழ்வு
  • அமெரிக்க மாயையைக் கலைத்த கத்ரீனா
  • பு.மா.இ.மு. தோழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! அ.தி.மு.க. ரவுடிகள் – போலீசு கூட்டுச்சதி!
  • ஏகாதிபத்திய சேவையில் போட்டா போட்டி: சிவப்புத் தரகர்களாக சி.பி.எம்.
  • அடிப்படைக் கட்டமைப்புத் துறையின் ‘வளர்ச்சி”: ஒட்டுண்ணித்தனத்தின் புதிய பரிமாணம்
  • தண்ணீரை வியாபாரமாக்காதே! தண்ணீரை தனியார்மயமாக்காதே!
    நெல்லையைக் குலுக்கிய ‘கோக்’ எதிர்ப்புப் போராட்டம்
  • கூலிக்கு மாரடிப்பதுதான் தன்னார்வத் தொண்டா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கல்விக் கொள்ளையர்களுடன் கைகோர்த்த உச்சநீதிமன்றம்
  • அமெரிக்காவின் மனசாட்சியை உலுக்கும்
    ஒரு தாயின் போராட்டம்!
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்
    புண்ணுக்குப் புனுகு தடவும் காங்கிரசின் மோசடி
  • சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு
    சிறு வியாபாரிகளை ஒழிக்கும் சிலந்தி வலை
  • போஸ்கோ ஒப்பந்தம்: தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட ஒரிசா மாநிலம்
  • தண்ணீர் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா? உலக வங்கிக்கா?
  • “கம்பெனி” நாயகமே அமெரிக்காவின் ஜனநாயகம்
  • சிறுமுகை நகரம்: இன்னுமொரு போபால்?
  • மக்கள் கண்காணிப்பகத்தின் மகாத்மியம்
    ஊருக்கு நீதி; ஊழியருக்கு அநீதி!
  • தண்ணீரைத் தனியார்மயமாக்காதே! தண்ணீரை வியாபாரமாக்காதே!
    ஏகாதிபத்திய குறியீடு ‘கோக்’கிற்கு எதிராக தமிழகம் தழுவிய வீச்சான இயக்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க

25.10.2025

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.

நெல் கொள்முதலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கொள்முதல் நிலையங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டு கொள்கிறது.

தமிழ்நாடு அரசே!

  1. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் கலத்திற்கு வந்தவுடன் 3 அல்லது 4 நாட்களுக்குள் கொள்முதல் செய்திடு!
  2. கொள்முதல் செய்யும் போது நெல் மூட்டைகளை எடைபோடுவதற்கு விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 40 முதல் 60 ரூபாய் வசூல் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்து!
  3. நெல் கொட்டும் கலங்களை அரசு இடத்தில் உருவாக்கி காங்கிரீட் (சிமன்ட்) தரை அமைத்துக் கொடுத்திடு!
  4. அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகபடுத்திடு!
  5. மழை நீரினால் நெல் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு!
  6. நெல்லுக்கான விலையை எம்.எஸ். சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குர்கான்: மறுகாலனியாக்கத்தின் ஜாலியன்வாலா பாக்?
  • அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில் புதிய அத்தியாயம்
  • குற்றவியல் சட்டத் திருத்தங்கள் “போலீசே நீதிபதி!”
  • விஜயகாந்தின் அரசியல்
    கவர்ச்சி பாதி காவி பாதி கருப்புப் பணம் மீதி
  • கார்ல் மார்க்ஸ்: இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி
  • அயோத்தி ராமர் கோயில் தாக்குதல்
    வினை விதைத்தால் தினை அறுக்க முடியுமா?
  • தமிழகம்: ஆதிக்க சாதிவெறியர்களின் சொர்க்க பூமி
  • ஒப்பந்த விவசாயம்: விவசாயிகளைப் போண்டியாக்க இன்னுமொரு சதி!
  • சிறீராம் ஃபைபர்ஸ்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகக் கொதித்தெழும் தொழிலாளர்கள்
  • விவசாயம் அழிகிறது இந்தியா ‘ஒளிர்கிறது’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி அஷ்பகுல்லா கான் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

அஷ்பகுல்லா கான்: போர்ப்பாடல் பாடி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன்!

(அக்டோபர் 22 சுதந்திர போராட்ட வீரத் தியாகி அஷ்ஃபாகுல்லா கானின் 125வது பிறந்தநாள்)

ர்ஃபரோஷி கி தமன்னா அப் ஹமாரே தில் மே ஹே
தேக்னா ஹே ஸோர் கித்னா பாஹு ஏ காத்தில் மே ஹே

(“தியாகத்திற்கான வேட்கை இப்போது எங்கள் இதயத்தில் உள்ளது; கொலையாளியின் கரங்களுக்கு எவ்வளவு வலிமை என்று நாங்கள் பார்க்க வேண்டும்”)

குடியுரிமைப் போராட்டங்கள் உட்பட அண்மைக் காலங்களில் நடந்த பொது உரிமைகளுக்கான எழுச்சிகளில் எதிரொலித்த இந்த வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த பிஸ்மில் அஸிமாபாதி எழுதிய இந்தப் புரட்சிக் கவிதை, முக்கியமாக இரண்டு தியாகிகளின் பெயர்களுடன் இணைத்து பேசப்படுகிறது. ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகிய இருவரும் சிறையில் தினமும் பாடி நடந்த வீரப் பாடல் இதுவே.

1900 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில், செல்வாக்குமிக்க ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் ஷஃபிகுல்லா கான் மற்றும் மசஹருன்னிசா பேகம் ஆகியோரின் மகனாக அஷ்பகுல்லா கான் பிறந்தார். தாயின் செல்வாக்கால் இலக்கிய ஆர்வம் கொண்டவராக வளர்ந்த அஷ்பகுல்லா கான், சிறுவயதிலிருந்தே உருது கவிதைகளை எழுதினார். அந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை, ஆட்சிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் மக்களின் வலிகளையும் ஆழமாக வெளிப்படுத்தின.

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அவரது தணியாத வேட்கை, அவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் (HRA) தலைவரான ராம் பிரசாத் பிஸ்மிலுடன் நெருக்கமாக்கியது. ஒரு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை ஆரம்பத்தில் பிஸ்மில் சேர்த்துக் கொள்ளத் தயங்கினாலும், அஷ்பகுல்லாவின் தீரத்தையும், தேசப்பற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் உணர்ந்து அவரை அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு, சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உன்னதமான ஒரு உதாரணமாகக் கருதப்படுகிறது.

புரட்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்குப் பணம் திரட்ட, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணத்துடன் செல்லும் ஒரு ரயிலைக் கொள்ளையடிக்க பிஸ்மில் திட்டமிட்டார். இத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால், பிரிட்டிஷ் அரசு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவிவிடும் என்றும், அது போராட்ட வழிமுறைகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அஷ்பகுல்லா கடுமையாக எதிர்த்தார். இருப்பினும், அமைப்பிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவை மதித்து, அவர் அந்தத் திட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தார்.

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, அரசாங்கக் கருவூலத்திற்கான பணத்துடன் சென்ற சஹாரன்பூர்-லக்னோ பயணிகள் ரயிலை, லக்னோவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகோரி கிராமத்தில் வைத்து புரட்சியாளர்கள் கொள்ளையடித்தனர். பிஸ்மில், அஷ்பகுல்லா ஆகியோருடன் ராஜேந்திர லாஹிரி, சந்திரசேகர் ஆசாத், சச்சீந்திரநாத் பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத் நாத் குப்தா, முராரி ஷர்மா, முகுந்த் லால், பன்வாரி லால் ஆகியோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டனர். அன்று கவரப்பட்ட தொகை 4,679 ரூபாய் ஒரு அணா ஆறு பைசா ஆகும். இந்த அதிர்ச்சியூட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசு நாடு முழுவதும் தீவிரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிஸ்மில் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு நேபாளத்திற்கும் (இப்போதைய ஜார்கண்டின்) டால்ட்டன் கஞ்சிற்கும் தப்பிச் சென்ற அஷ்பகுல்லாவைக் கண்டுபிடிக்க பிரிட்டிஷார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதும் முடியவில்லை. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு, கிராமவாசிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால், போலீசார் அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

விசாரணையின் போது, பிஸ்மிலைக் காப்பாற்றுவதற்காக, கொள்ளையின் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக அஷ்பகுல்லா பகிரங்கமாக அறிவித்தார். வழக்கறிஞரின் ஆலோசனைகளை ஏற்க மறுத்து, தன்னைக் குற்றவாளியாகக் காண வேண்டும் என்று அவர் பிரிவி கவுன்சிலிடம் வேண்டினார்.

பிஸ்மில், அஷ்பகுல்லா, ராஜேந்திர லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து பேர் ஆயுள் தண்டனைக்காக காலாவதிக்கு நாடு கடத்தப்பட்டனர். சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை (பின்னர் அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் சுயமாகச் சுட்டுக் கொண்டு உயிர் நீத்தார்).

1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, ‘ஸர்ஃபரோஷி கி தமன்னா’ பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.

ஆக்கிரமிப்பாளர்களிடம்  மன்னிப்பு கேட்கவோ,  கருணையை யாசிக்கவோ மறுத்த, அஷ்பகுல்லா கானைப் போன்ற தீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியருக்கும் கடமை உண்டு.

மலையாளத்தில் மாத்யமம் நாளிதழ்…


முகநூலில்: சையது அலி

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2005 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 9 | ஜூலை 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நுழைவுத் தேர்வு: என்ன செய்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும்?
  • உத்தமர்சீலி தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல்: முத்தரையர் சாதிவெறியர்கள்-போலீசு கள்ளக்கூட்டு
  • நச்சு ஆலைக்கு எதிராக… தொடரும் விவசாயிகளின் போராட்டம்
  • ஏற்றுமதி கொள்ளைக்காக திருப்பூர் முதலாளிகளின் பயங்கரவாதம்
  • பார்ப்பன சேவையுடன் பிழைப்புவாதம்
    தலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள்
  • உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம்
    பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள்
  • திருப்பூரைக் கைப்பற்றிய தண்ணீர் கொள்ளையர்கள்
  • பொலிவியா: பஞ்சைப் பராரிகளின் பேரெழுச்சி
    ஏகாதிபத்திய வாயிலில் இடிமுழக்கம்
  • இராஜஸ்தான்: குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒடுக்கி உயிரைப் பறிக்கிறார்கள்
    பா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம்
  • டால்மியா சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் பலி
    விபத்தாகத் திரிக்கப்பட்ட படுகொலைகள்
  • மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram