Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 600

பட்டினியில் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் – ஆய்வுக் கட்டுரை

0
DADAAB, KENYA - JULY 23: Somalian refugees queue for a bus to transport them from the IFO camp registration centre to the Dagahaley refugee camp, which makes up part of the giant Dadaab refugee settlement on July 23, 2011 in Dadaab, Kenya. The refugee camp at Dadaab, located close to the Kenyan border with Somalia, was originally designed in the early 1990s to accommodate 90,000 people but the UN estimates over 4 times as many reside there. The ongoing civil war in Somalia and the worst drought to affect the Horn of Africa in six decades has resulted in an estimated 12 million people whose lives are threatened. (Photo by Oli Scarff/Getty Images)

கோடிக்கணக்கானோரைப் பசியால் வாட்டிச் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்தல்

துண்டுத் தாள்களும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட குவளைகளும் அந்த அறையில் தரை முழுக்க இறைந்து கிடக்கின்றன. அதுதான் உலக உணவு வர்த்தகத்தின் கட்டுப்பாட்டு அறை. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள சிக்காகோ வர்த்தக மன்றத்தின் செயல் தளத்தில் நாம் நிற்கின்றோம். மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ண வண்ண மேலாடைகளை அணிந்து வியர்வையில் நனைந்த பல ஆண்கள் தம் பாதங்களில் மிதிபடும் குப்பைகளைக் கண்டுகொள்ளாமல் அங்குமிங்கும் ஆரவாரத்துடன் நடமாடிக்கொண்டுள்ளனர். சோயா மொச்சை. இறைச்சி, கோதுமை உள்ளிட்ட பண்டங்களில் அவர்கள் ஊக வணிகத்தை முழு வீச்சில் நடத்திக்கொண்டுள்ளனர்.

உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் ஊக வணிகம் உலகில் சில நகரங்களில் நடக்கிறது. சிக்காகோ வர்த்தக மன்றம் என்பது அவையனைத்திலும் மிகப் பெரிய வணிகக் குழுமம். உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் இங்கு நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்மூலம் பல கோடி மக்களுடைய தலைவிதியையும் இவர்கள் முடிவு செய்கின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகில் பசி, பட்டினி ஆகியவற்றின்மீதும் சில முதலீட்டாளர்களின் செல்வ வளத்தின்மீதும் தாக்கம் செலுத்துகின்றன.

இதோ இவர்தான் ஏலன் நக்மென். ஆரவாரம் மிக்க இந்த அறை இவருக்கு மிகவும் பிடித்த இடம். “இங்குதான் முதலாளியம் தன் தூய வடிவில் இயங்குகிறது” என்று மகிழ்கிறார் இவர். “இங்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.” நாற்பத்திரண்டு அகவையான இவர் முகத்தில் மகிழ்ச்சி நடமாடுகிறது.

இவர் இங்கு வேலைக்கு வந்து இருபத்தேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வர்த்தகத் தளத்தில் கீழ் பதவியில் இருந்து வேகமாக மேலே வந்துவிட்டார். ஊக வணிகத்தில் முதலீடு செய்வது இவருடைய பணி. அதில் பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றிய பருவ இதழ் ஒன்றை இவர் வெளியிடுகிறார். “எந்தெந்தப் பொருள்களின் வணிகத்தில் குறுகிய காலத்தில் நிரம்பப் பணம் சம்பாதிக்க முடியுமோ அவற்றில் எல்லாம் நான் வர்த்தகம் செய்கிறேன். என் நோக்கமே பணம் சம்பாதிப்பதுதான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார் நக்மென்.

ஊகச் சந்தையை முழுக்க நம்புவதாகக் கூறும் இவர் தான் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைக் குறித்து அதிகம் நினைப்பதில்லை. கன்னெயம் (பெட்ரோலியம்), வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், உணவுப் பொருள்கள் எனப் பலவற்றில் அவர் ஊக வணிகம் நடத்துகிறார். “நான் அரசியல் ஈடுபாடற்றவன். சந்தையை மட்டுமே நம்புகிறேன். சந்தை எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கும்” என்கிறார்.

உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார்? அவரைப் பொறுத்தவரை பண்டங்களின் இருப்பும் மக்களின் தேவைகளுமே விலைகளை முடிவு செய்கின்றன.

ஊக வணிகர்களைப் பற்றிய அவருடைய கருத்து என்ன?

“சந்தைக்கு அவர்கள் நன்மை செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து விடுகின்றார்கள்.”

ஊக வணிகம் மிக அதிகமாகிவிட்டதா என்றால், தான் அப்படிக் கருதவில்லை என அவர் சொல்வது வியப்பளிக்கின்றது. உலக அளவில் உணவுப் பண்டங்களின் வணிகத்தில் முன்பு எப்போதும் இருந்ததைக்காட்டிலும் இப்போது மிக அதிக அளவில் பணம் புரள்கிறது. ஊக வணிகத்தில் செய்யப்பட்ட முதலீட்டைப் பொருத்தவரை, 2010-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்ததைவிட மும்மடங்குப் பணம் இறுதிக் காலாண்டில் அத்துறையில் நுழைந்தது. பல நாடுகளில் அண்மையில் நேர்ந்த பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து அரசுகள் தொழில், வணிகத் துறைகளில் மூலதனத்தைப் பெருக்கின.

விளைபொருள்களின் ஊக வணிகம் பல முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களைப் பற்றி அவர்கள் குறிப்பாக அக்கறை கொள்வதில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்தவர்கள் இப்போது உணவுப் பண்ட வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வளவுதான்.

ஓய்வூதிய நிதிகளை மூலதனமாகக் கொண்டு பெருமளவில் பணம் சம்பாதிக்க முனையும் பெரிய நிதி நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட முறையில் ஊக வணிகத்தில் சம்பாதிக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்கள் வரை பலரும் விளைபொருள் ஊக வணிகத்தில் நுழைகின்றனர்.

தேவையை முழுமை செய்தல்

வைப்பகங்களும் இதற்கேற்றவாறு பெருமளவில் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன. நிறுவனங்களின் பங்குகள் எப்படி வணிகப் பொருள்களாக உள்ளனவோ அதேபோல உலகின் உணவுப் பண்டங்களும் திடீரென வணிகப் பொருள்களாகிவிட்டன.

விளைபொருள்களின் ஊக வணிகம் இவ்வாறு பெருகுவதைத் தொடர்ந்து உலகெங்கும் அவற்றின் விலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளன என்பது வேதனை தரும் நிகழ்வு. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் விளைபொருள்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து உலகில் பல பகுதிகளில் பசி, பட்டினி அதிகரித்தது. அதைவிட இந்த ஆண்டு விலைகள் அதிகரித்துவிட்டதாக மார்ச் மாதம் ஒன்றிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் உணவுப் பண்டங்களின் விலைகள் முப்பத்தொன்பது விழுக்காடு உயர்ந்தன. தானியங்கள், சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றின் விலைகள் எழுபத்தொரு விழுக்காடு உயர்ந்தன.

“மலிவான உணவு கிடைக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று கட்டியங்கூறுகிறார் நக்மென். இது அமெரிக்கர்களுக்கு அவ்வளவு மோசமான நிகழ்வல்ல என்கிறார். “பெரும்பாலான அமெரிக்கர்கள் அளவுக்கதிகம் உண்கின்றார்கள்.”

அமெரிக்கர் ஒவ்வொருவரும் சராசரியாகத் தம் வருமானத்தில் பதின்மூன்று விழுக்காட்டினைத்தான் உணவுப் பொருள்களை வாங்குவதில் செலவிடுகிறார். உணவுப் பண்டங்களின் விலையேற்றம் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மட்டும் தென்படலாம். ஆனால் உலக அளவில் ஏழைகள் தம் குறுகிய வருமானத்தில் எழுபது விழுக்காட்டினை உணவுக்காகச் செலவிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த விலையேற்றம் அவர்களுடைய வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.

விலையேற்றம் காரணமாக 2011 சூன் மாதத்தில் மட்டும் புதிதாகச் சுமார் நான்கரைக் கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக உலக வைப்பகம் சொல்கிறது. நாளொன்றுக்கு ஒன்றேகால் அமெரிக்க டாலருக்குக் (2011-இல் சுமார் அறுபது ரூபாய்களுக்கு) குறைந்த தொகையில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதாக உலக வைப்பகம் வரையறுக்கிறது. [இது மிகக் குறைவான, எதார்த்தத்துக்கு முற்றிலும் புறம்பான தொகை என்பது வெளிப்படை.]

உலகெங்கிலும் சுமார் நூறு கோடிப் பேர் பட்டினி கிடக்கின்றனர். ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதியில் (சோமாலியா, எத்தியோப்பியா, எரிட்ரியா முதலிய நாடுகளில்) இப்போது பட்டினி வாட்டுகிறது. மழையின்மை, உள்நாட்டுப் போர்கள், ஊழல் மலிந்த அரசுகள் முதலியன மட்டுமே இதற்குக் காரணங்கள் அல்ல. விளைபொருள்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதும் ஒரு முதன்மையான காரணியாகும். [1943-44 வங்காளப் பஞ்சம் குறித்த தன் ஆய்வில், ‘பசி, பட்டினி ஆகியவற்றுக்குக் காரணம் உணவுப் பண்டங்களின் பற்றாக்குறை அன்று. மக்களிடம் அவற்றை வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததுதான் அவர்கள் பட்டினி கிடப்பதற்குக் காரணம்’ என்கிறார் பொருளாதாரத்தில் நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென்.]

விரும்பத் தகாத ‘பக்க விளைவுகள்’!

வறியவர்கள் தம் உணவு ஆதாரத்தை இழந்துள்ளது குறித்து நக்மென் என்ன நினைக்கிறார்? அது “சந்தைப் பொருளாதாரத்தின் விரும்பத்தகாத பக்கவிளைவுகள்” என்கிறார்.

அத்தகைய பக்கவிளைவுகளை நேரடியாக எதிர்கொள்பவர்களின் நிலை என்ன என்று சற்றுக் கூர்ந்து பார்ப்போமா?

இதோ இவர் பெயர் அலிமா அபூபக்கர். இருபத்தைந்து அகவை நிரம்பிய இந்தத் தாய் கென்ய நாட்டின் மிகப் பெரும் சேரியான கிபேரா-வில் சிறு குடிசை ஒன்றில் வாழ்கிறார்.

தன் இரண்டு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் இன்றிரவு என்ன உணவு படைக்கமுடியும் என்று சிந்திக்கிறார். அண்மைக் காலம் வரை இந்தச் சேரியில் அதிகம் சம்பாதித்தவர்களில் இவரும் இவருடைய கணவரும் அடங்குவர். அலிமாவின் கணவர் சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். அவருடைய மாதச் சம்பளம் நூற்றைம்பது யூரோக்கள். இச்சம்பளத்தில் பாதி அவருடைய குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருந்தது.

ஆனால், இப்போது திடீரென நிலைமை மாறிவிட்டது. கென்ய மக்களின் முதன்மையான உணவுப் பொருள் மக்காச்சோள மாவு. கடந்த ஐந்து மாதங்களில் அதன் விலை இரட்டிப்பாகிவிட்டது. உருளைக் கிழங்கின் விலை முப்பது விழுக்காடு உயர்ந்தது. பால், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளும் ஏறிவிட்டன.

இந்த அதிரடி விலையேற்றத்தின் காரணம் என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், இனி உணவுக்காகச் செலவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பது மட்டும் அவருக்குப் புரிகிறது. முதல் கட்டமாக விலை குறைந்த மக்காச்சோள மாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். அது சுவையற்றதாக இருக்கிறது. ஆனால் வயிற்றை நிரப்பியாகவேண்டுமே! தன் குழந்தைகளுக்குப் போதுமான உணவு தருவதற்காகச் சில சமயங்களில் அந்தத் தாய் தான் சாப்பிடாதிருக்கப் பழகிக்கொண்டார்.

கும்பி என்ற சிற்றூர் மலாவி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. 2008-ம் ஆண்டு அவ்வூர் மக்கள் திடீரெனக் கடும் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வழக்கமாகத் தென் ஆப்ரிக்காவில் பசி, பட்டினி, சத்துப் பற்றாக்குறை ஆகியவை நிலவுவதற்குக் காரணம் வறட்சிதான். ஆனால் இம்முறை அப்பகுதியில் வறட்சி இல்லை. உணவுப் பண்டங்கள் சந்தையில் நிறைய இருந்தன. மக்காச்சோளம், அரிசி ஆகிய அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகள் எந்த வெளிப்படைக் காரணமும் இன்றி சில மாதங்களில் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டன. இம்முறை உள்ளூர் வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைக்கவும் இல்லை.

நூற்றுக்கு மேற்பட்ட வளரும் நாடுகளில் இதே நிலை நிலவிற்று.

விலையேற்றத்துக்குச் சொல்லப்படும் காரணங்கள்

வளரும் நாடுகளில் உள்ள மக்கள் இந்த விலையேற்றத்தால் படும் அவதியைப் பற்றிக் கூறும் உலக வைப்பகத் தலைவர், “ஏற்கெனவே அதிகமாக உள்ள உணவுப் பண்டங்களின் விலைகள் மேன்மேலும் அதிகமாகி வருவதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அல்லலுறுகின்றனர். ஏழைகளின் எண்ணிக்கையும் வளர்ந்துவருகின்றது” என்கிறார்.

கருத்தரங்குகள் உள்ளிட்ட கூட்டங்களில் விலைகள் தாறுமாறாக உயர்வதற்கு அடிக்கடி சொல்லப்படும் காரணங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

  • சூழல் மாற்றத்தால் வறட்சி, வெள்ளம், புயல் முதலியன அதிகம் நிகழ்கின்றன. அதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
  • கன்னெயத்துடன் கலந்து ஊர்திகளை இயக்குவதற்கு உயிரெரிபொருளாகப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பயிர்களை வளர்க்கவேண்டும். அதற்கு விளைநிலங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் உணவு உற்பத்திக்குப் பயன்படும் நிலப்பரப்பு குறைகிறது.
  • பெருகிவரும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உலக உணவு உற்பத்தி பெருகவில்லை.
  • சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக உயர்வதால் அந்நாட்டு மக்கள் முன்பைவிட உயர்தரமான உணவுவகைகளை உட்கொள்கின்றனர். அதனால் தேவை அதிகரிக்கிறது.
  • கச்சா எண்ணெய்ப் பொருள்களின் விலையேற்றத்தால் உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றின் செலவு அதிகரிக்கின்றது.
  • இறைச்சி அதிகம் உட்கொள்ளப்படுகிறது. அதற்கான கால்நடைகளை வளர்ப்பதற்கு அதிக அளவில் தானியங்கள் தேவைப்படுகின்றன.
  • பல்லாண்டுகளாக அரசுகள் – குறிப்பாகப் பசி, பட்டினி அதிகம் உள்ள நாடுகளின் அரசுகள் – வேளாண்மையில் போதுமான முதலீடு செய்யாமல் புறக்கணித்துவந்துள்ளன. இதனால் மொத்த விளைச்சல் குறைகிறது.

இவையனைத்துமே சரியான காரணங்களைப் போலத்தான் தோன்றுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆயினும், இந்த அளவு கிடுகிடுவென விலைகள் ஏறுவதற்கு இவை காரணங்கள் அல்ல.

விலையேற்றத்தின் உண்மையான பின்னணியை எடுத்துரைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் ஒலீவியர் டீ சூட்டர் என்பவர். இவர் ஒன்றிய நாடுகளவையின் உணவு உரிமைக்கான சிறப்பு அதிகாரி. உயிரெரிபொருள் உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட உற்பத்திச் சிக்கல்களும் விளைச்சல் குறைதல், ஏற்றுமதி நிறுத்தம் ஆகியவையும் விலையேற்றத்திற்கு மிகச் சிறிய காரணங்கள் என்று அவர் அண்மையில் எழுதினார். “உலகளவில் நிதிச் சூழலில் ஏற்கெனவே சிக்கல் அதிகம் இருந்தது. அத்துடன் ஊக வணிகமும் சேர்ந்துகொண்டது. அதனால்தான் உணவுப் பண்டங்களின் விலைகள் கடுமையாக ஏறின” என்கிறார் அவர். நிதிச் சந்தையில் கடும் தேக்கம் நிலவியதால் பெரிய நிதி முதலீட்டாளர்கள் பண்ட வர்த்தகத்திற்கு மிகப் பெரிய அளவில் தாவினார்கள். அதனால் ஊக வணிகம் கட்டுக்கடங்காமல் ஏற்றங்கண்டது. என்று டீ சூட்டர் விளக்குகிறார்.

உயிரி எரிபொருள் பயன்பாடு
உயிரி எரிபொருள் பயன்பாடு

பண்ட வர்த்தகத்தைக் கூர்ந்து கவனித்தால் உணவுப் பண்டங்களின் விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் ஐயத்திற்கிடமானவையே என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு வீக்கத்தின் பின்புலத்திலும் ஒரு கதை இருக்கும்

உணவு உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதில் உண்மை இருக்கிறது. ஆனால், அண்மைக்காலம்வரை மொத்த தானிய உற்பத்தியில் ஆறு விழுக்காடுதான் உயிரெரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. உணவுப் பண்டங்களின் விலையேற்றத்தில் உயிரெரிபொருள்களின் பங்கு பரவலாக அறியப்பட்டதைவிட மிகக் குறைவுதான் என்ற உலக வைப்பகத்தின் கூற்று கவனிக்கத்தக்கது. மேலும், உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்குத் தரும் மானியத்தை அதிகப்படுத்துவதற்கு எதிராகக் கடந்த சூன் மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. உயிரெரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முகமாகத்தான் இந்த வாக்கெடுப்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதேபோல, வளரும் நாடுகளில் இறைச்சித் தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு சிறு காரணந்தான். சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இறைச்சி இறக்குமதியைப் பெரிய அளவில் அதிகரிக்காமலே தம் இறைச்சித் தேவையைச் சமாளிக்கமுடியும் என்கிறது அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம். “வளரும் நாடுகளில் தேவை அதிகரிப்பதால் உலகளவில் விலைகள் ஏறியதற்கான தடயங்களே இல்லை” என்று உலக வைப்பக அறிக்கையொன்று கூறுகிறது.

சூழல் மாற்றம் காரணமா? கண்டிப்பாக அதற்கும் ஒரு பங்கு இருக்கிறது. உலகெங்கும் உணவுப் பண்டகசாலைகளில் இருப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும், உணவு விற்பனையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளது என்பதே இன்றைய நிலவரம்.

பிரேசிலின் பெரிய மக்காச்சோள பண்ணையில் அறுவடை
பிரேசிலின் பெரிய மக்காச்சோள பண்ணையில் அறுவடை

உணவுத் துறையில் அவசர நிலை நிலவுவதாகப் பரப்புரை செய்யப்படுவது சூழ்ச்சிகரமான செயலுத்தியின் ஒரு பங்கு. எந்தவொரு துறையிலும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவேண்டுமானால் அதன் பின்புலத்தில் ஒரு கட்டுக்கதை தேவை.

  • சில ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய வீக்கம் நேர்ந்தது. பொது அறிவு மட்டுமன்றிப் பாரம்பரியப் பொருளாதார முறையின் விதிகளும் இப்போது மதிப்பிழந்துவிட்டன என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிய “புதிய பொருளாதாரம்” அந்த வீக்கத்தின் கட்டுக்கதைப் பின்புலமாகத் திகழ்ந்தது.
  • வீடு வாங்குவது மிகப் பாதுகாப்பான முதலீடு என்ற கட்டுக்கதை அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்கும் துறையில் உருவான வீக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது.
  • ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத் தேவையாக விளங்குவது உணவு. அதில் பற்றாக்குறை வரப்போகிறது என்று அச்சமூட்டுவது மேற்கண்ட கட்டுக்கதைகளின் வேறொரு வடிவமே.

உலக உணவுத் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உணவுச் சந்தை நிதிச் சந்தையாக உருமாற்றம் பெற்றுள்ளது என விவரிக்கிறது வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் (வமேஒநாக). இதன் வெளிப்பாடாகத்தான் நம் அடிப்படைத் தேவையான உணவு பங்கு வர்த்தகத்தில் சூதாட்டப் பொருளாக மாறியிருக்கிறது.

தாறுமாறான விலைகள்

வமேஒநாக-வின் தலைமைப் பொருளாதார அதிகாரியான கெய்னெர் ப்லாசுபெக் இது குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். செருமானிய நிதி அமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரியான இவர் உணவுப் பண்டங்களில் ஊக வணிகம் நடைபெறுவது குறித்துப் பல ஆண்டுகளாக அக்கறை கொண்டுள்ளார்.

2008-ம் ஆண்டு நேர்ந்த உலக நிதி நெருக்கடிக்குப்பின் உலக நாடுகளின் நாணயங்கள், பண்டங்கள், அரசு கடனீட்டு ஆவணங்கள், பங்குகள் ஆகியவற்றின் விலை மதிப்புகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை இவர் கண்காணிக்கத் தொடங்கினார். இவை ஒவ்வொன்றின் விலைகளும் மாறுவதில் ஏதோ ஓர் ஒற்றுமை தெரிந்தாற்போல் இருந்தது. அதைக் கூர்ந்து கவனிப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை ப்லாசுபெக் அமைத்தார்.

foodstuff-price“நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு” என்ற பெயரில் அந்தக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தத் தலைப்பு பொத்தாம்பொதுவானது போலத் தோன்றுகிறது. ஆனால், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் மிகவும் முதன்மை வாய்ந்தது. பண்டப் பரிமாற்றச் சந்தை நல்லபடி நடக்கவில்லை என்று அந்த வல்லுநர் குழு தெரிவிக்கிறது. பொருளாதார மாதிரிகளின் அடிப்படையில் சந்தைகள் எப்படி இயங்கவேண்டுமோ அப்படிப் பண்டச் சந்தை இயங்கவில்லை. ஒரு பண்டத்தின் இருப்பும் அதன் தேவையும்தாம் அப்பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், நிதிச் சூதாட்டச் சந்தையில் கலந்துகொள்பவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் விலைகளைத் தள்ளிச்செல்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.

இதன் காரணமாக விலைகள் மிக மோசமான முறையில் சிதைக்கப்படுகின்றன. இருப்புதேவை என்கிற எதார்த்த நிலைமைகளுக்கும் விலைகளுக்கும் தொடர்பே இல்லை. வருங்காலத்தில் பொருளாதார நிலைமை எவ்வாறு மாறும் என்ற ஊகத்தின் அடிப்படையில் விலைகள் முடிவு செய்யப்படுகின்றன.

பண்டங்களின் ஊக வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு அந்தப் பண்டங்களைக் குறித்த புரிதல் இல்லை. ஒரு பண்டத்தை விற்றல், வாங்குதல் ஆகியன குறித்து அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் அந்தப் பண்டத்திற்கும் எந்தத் தொடர்புமே இல்லை. விலைகளை முடிவு செய்வதற்குத் தக்க அடிப்படைக் காரணங்களைப் பயன்படுத்தாமல் ஒருவரைப் பார்த்து மற்றவர் விலை சொல்வது அதிகம் நிகழ்கிறது.

உலக உணவாதாரத்துடன் சூதாடுதல்

டுனீசியாவில் ரொட்டி விலை, கென்யாவில் மக்காச்சோள மாவின் விலை, மெக்சிக்கோவில் மக்காச்சோளத்தின் விலை ஆகியவற்றை நிதி முதலீட்டு வைப்பகங்களும் பெருநிதி முதலாளிகளும் முடிவு செய்யும் இந்த நிலை எப்படித் தோன்றிற்று? பெரிய ஓய்வூதிய நிதியங்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவரும் உலக உணவாதாரத்தின் மீது சூதாட்டம் நடத்தும் நிலை வரக் காரணம் என்ன? உலக அளவில் எவ்வளவு பேர் பசியுடன் கிடக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் வல்லமை சிக்காகோ, நியூ யார்க், லண்டன் ஆகிய வல்லரசு நகரங்களின் சந்தைகளுக்கு எப்படிக் கிடைத்தது?

பரவலாகக் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முக்கியமானதொரு சந்தை மாற்றமே இந்தத் தவறுக்கு அடிப்படை. பெருநிதி நிறுவனங்கள் செய்த பல மாறுதல்கள்தாம் மனித குலத்தின் உணவாதாரத்தை நிதிச் சூதாட்டச் சந்தைப் பொருளாக மாற்றின.

பன்னெடுங்காலமாக இருப்பும் தேவையுமே உணவுப் பண்டங்களின் சந்தையைக் கட்டுப்படுத்திவந்தன. உழவர்கள் விளைவித்த உணவுப் பண்டங்களை விநியோகிப்பவர்களும் சில்லறை விற்பனையாளர்களும் நுகர்வோருக்குக் கொண்டுசேர்த்தனர்.

வெளிப்படையாக நடக்கும் ஊகச் சந்தை இடைக்காலத்தில் உருவாகிற்று. விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் முகமாக உற்பத்தியாளர்கள் தம் பண்டங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட விலைக்கு விற்றார்கள். வழக்கமாக அந்த விலை அப்போதைய நிலவரத்தைவிடக் குறைவானதாக இருந்தது. ஊக வணிக ஒப்பந்தம் முழுமையடைந்த நாளில் பண்டம் உற்பத்தியாளரிடமிருந்து கை மாறிற்று. அப்போதைய விலை முன்பே ஒப்புக்கொண்ட விலையைவிடக் குறைவாக இருந்தால் உழவருக்கு நன்மை. அதிகமாக இருந்தால் ஊக வணிகருக்கு நன்மை. உழவர்களும் உணவுப் பண்டங்களுக்கு மதிப்புக் கூட்டுவோரும் தத்தம் இடரைக் குறைத்துக்கொள்வதற்கு ஒரு வழி செய்தது இத்தகைய ஊக வணிகம். இந்தச் சந்தையில் புழங்குவதற்குத் தேவையான நிதியை ஊக வணிகர்கள் தந்துதவினர். நுகர்வோருக்குப் பண்டங்கள் தொடர்ந்து கிடைத்தன.

இந்தச் சந்தையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வேளாண் தொழிலுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்: உழவர்கள், மதிப்புக் கூட்டுபவர்கள், சேமிப்புக் கிடங்கு வைத்திருப்பவர்கள், உணவு வழங்கலில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியோர்.

வைப்பகங்கள் இதில் ஒரு சிறு பங்கினைத் தான் வகித்தன. சந்தையில் பங்கு பெறுவோருக்குக் கடன் தரும் பணியை வைப்பகங்கள் செய்தன. அது நன்றாக நடந்தது. சந்தைகள் பல ஆண்டுகள் நிலையாக, அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் நடந்துவந்தன. நிதித்துறை நிறுவனங்களின் கண் படும்வரை.

அரசுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல்

இந்தப் புது வணிகத் துறையில் நிதி நிறுவனங்கள் புகுவதற்கேற்பச் சந்தை நுழைவு விதிகள் விரிவாக்கப்பட வேண்டியிருந்தன. அதுவரை அந்த விதிகள் கடுமையானவையாக இருந்தன. அதற்கு நல்ல காரணம் இருந்தது. ஆனால், நிதி நிறுவனங்களின் வல்லமை படைத்த மேலதிகாரிகள் அமெரிக்க அரசின் மேல்மட்டங்களில் இருப்பவர்களுடன் கமுக்கமாக வேலை செய்தார்கள், அதன் விளைவாக 1999-ல் அமெரிக்க அரசின் பண்டங்கள் ஊக வணிக ஆணையம்ஊக வணிகச் சந்தை விதிகளைப் பெருமளவு தளர்த்திவிட்டது. பண்டங்களின் பங்குரிமைச் சான்றிதழ்களைப் பெருமளவு வாங்குவதற்கு வைப்பகங்கள் அனுமதிக்கப்பட்டன.

லேமென் பிரதர்சு, மார்கன் இசுடேன்லி, பேய்ர் இசுடெய்ர்ன்சு, சே.பி. மார்கன் ஆகியன உலகளவில் மிகப் பெரிய நிதி முதலீட்டு வைப்பகங்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான அரசு விதிகளைத் தளர்த்தவேண்டும் என்று இந்த வைப்பகங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்க அரசின் ‘பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம்’ 2004-ம் ஆண்டு வைப்பகங்களின் செயல்தளத்தை மேலும் விரிவாக்கிற்று. அதன் விளைவாக நிதித்துறைச் சூதாடிகள் தம் கைவசம் இருக்கும் துணைப்பிணையத் தொகையைக் காட்டிலும் நாற்பது மடங்குத் தொகை வரை ஊக வணிகத்தில் முதலீடு செய்ய முடிந்தது. இப்படியாக முன்னைக் காட்டிலும் மிக அதிகப் பணம் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிற்று.

ஆனால், தனிப்பட்ட பண்டங்கள் மீது பந்தயம் வைப்பது இடர் மிக்க செயல். அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலில் இந்த வர்த்தகத்தில் நுழையத் தயங்குவார்கள். அவர்களைக் கவர்வதற்கான வழிகளை வைப்பகங்கள் தேடின. கோல்ட்மென் சேக்சு நிறுவனத்திற்கு ஒரு சிந்தனை உதித்தது: தனிப்பட்ட பண்டங்களில் வாணிகம் செய்யாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்களில் மொத்தமாக வாணிகம் செய்தல். (இந்தச் சிந்தனை எவ்வளவு பரவியுள்ளது என்பது அமெரிக்க வீட்டுக்கடன் குமிழ் உடைந்தபின் தெளிவாகத் தெரிகிறது.) கன்னெயம் முதல் கோதுமை வரை பரந்த அளவில் பண்டங்கள் மீது ஊக வணிகம் நடத்துவதற்கேற்பக் ‘குறியீட்டு நிதிகள்’ உருவாக்கப்பட்டன. ஒரேயொரு பண்டத்தின்மீது பந்தயம் வைப்பதால் அதிகரிக்கும் இடரைப் பல பண்டங்கள் மீது பந்தயம் வைப்பதன்மூலம் பரவலாக்குவதற்கு இவை உதவின. அதனால் அந்த நிதிகளின் ‘கடன் நம்பகத்தன்மை’ உயர்கிறது. அதன் விளைவாகப் பெரு நிதி முதலீட்டாளர்கள் அந்த நிதிகளில் முதலீடு செய்ய ஈர்க்கப்படுகின்றனர்.

சூதாடிகள் இந்த ஊக வணிகப் பங்குகளை அவற்றின் மூலப் பண்டங்களாக எப்போதுமே மாற்றுவதில்லை என்பதில்தான் சூழ்ச்சி அடங்கியுள்ளது. நிதி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை விற்கின்றன. அந்த ஒப்பந்தங்கள் சுமார் எழுபது நாள்களுக்கு நீடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றின் கெடு முடிவதற்குள் அவற்றை விற்று அதில் கிடைக்கும் உபரியைக் கொண்டு புதிய ஒப்பந்தங்களில் முதலீடு செய்வது நிதி நிறுவனங்களின் வணிகத் தொழில். இப்படியாக இது வெளியில் இருந்து ஆற்றல் தேவைப்படாமல் என்றென்றைக்கும் தொடர்ந்து இயங்கும் இயந்திரம் போலச் செயல்படுகிறது. ஊக வணிக முதலீட்டாளர்கள் நேரடியாகப் பண்டங்களின் சந்தை மதிப்புடன் எந்தவிதத் தொடர்பும் அற்றவர்களாகின்றனர்.

இவ்வாறாக, ஊக வணிக முதலீட்டாளர்கள் பண்டங்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளாதிருப்பதால் பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவதற்கு ஊக வணிகத்தைக் குற்றம் சொல்லக்கூடாது என்பது இந்தத் தொழில் செய்வோரின் வாதம். “எங்கள் சூதாட்டத்திற்கும் பொருள்களின் இருப்பு-தேவைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!” என்கின்றனர்.

நச்சு வளையம்

ஆனால், ‘அவர்களுடைய இந்த வாதம் தவறானது. ஊக வணிகம் பண்டங்களின் விலைகளை பாதிக்கிறது’ என்கிறார் இதை ஆராய்ந்த மேக்சிமோ டொரேரோ என்ற வல்லுநர். அவர் அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகத்தின் சந்தை, வணிகம், மற்றும் நிறுவனத் துறையின் இயக்குநர். மக்காச்சோளம், சோயா, கோதுமை ஆகியவற்றின் சந்தைகளை அவர் மிகக் கவனமாக ஆராய்ந்திருக்கிறார். அவற்றின் விலைகள் வருங்காலத்தில் எப்படி மாறும் என்று ஊக வணிகர்கள் பேரம் செய்கிறார்களோ அதைப் பொருத்து உண்மையாகவே விலைகள் மாறுகின்றன என்பதை அவருடைய ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டின.

மேலும், விலைகள் ஏறுமுகமாக இருக்கையில் பண்டங்களைத் தம் கைவசம் வைத்திருப்பவர்கள் அவற்றை விற்காமல் காக்கின்றனர். அதன் காரணமாக விலைகள் மேலும் உயர்கின்றன.

சீனாவின் சாங்காயில் பன்றி இறைச்சி
சீனாவின் சாங்காயில் பன்றி இறைச்சி

இப்படியாக, முன்னர் ஓரளவு கணிக்கக்கூடியனவாக இருந்த உணவுச் சந்தைகள் இப்போது முற்றிலுமாக ஆட்டங்கண்டுவிட்டன. “தானியம், சமையல் எண்ணெய், கால்நடைகள் ஆகியவற்றின் சந்தைகளில் உலகளவில் எழுந்துள்ள புதிய ஊக வணிக வாய்ப்புகள் ஒரு நச்சு வளையத்தை உருவாக்கிவிட்டன” என்கிறார் ப்ரெடெரிக் காப்மேன். “கோல்ட்மென் சேக்சு எவ்வாறு உணவுப் பற்றாக்குறையைத் தோற்றுவித்தது” என்பது அவர் ஏப்ரல் 2011-இல் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. அவர் தெளிந்த முடிவாகச் சொல்வது இதுதான்: “உணவுப் பண்டங்களின் விலை ஏற ஏற அவற்றின் ஊக வணிகத்தில் மேன்மேலும் நிதி குவிகிறது. அதன் விளைவாக விலைகள் மேன்மேலும் உயர்கின்றன.”

2003-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களுடன் தொடர்புள்ள ஊக வணிகம் 2300 விழுக்காடு (அதாவது, 23 மடங்கு!) அதிகரித்தது. பண்டங்களின் ஊக வணிக ஒப்பந்தங்களில் இரண்டு விழுக்காடு மட்டும் மெய்யாகவே பண்டங்கள் கை மாறுவதற்கு வழிகோலியதாக ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. அது நடப்பதற்கு முன்னர் மீதமுள்ள (நூற்றுக்குத் தொண்ணூற்று எட்டு) ஒப்பந்தங்கள் குறுகிய காலத்தில் நிறைய ஊதியம் அள்ளும் நோக்கம் உள்ள முதலீட்டாளர்களால் ஒருவருக்கொருவர் கைமாற்றப்பட்டன. அந்த இடைநிலை முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்களில் உள்ள பண்டங்களைப் பற்றித் துளிக்கூட அக்கறை இல்லை.

ஊக வணிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்

அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மென் சேக்சு உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பட்ட மூலதனக்காரர்களும் இந்தச் சூதாட்டத்தில் விளையாடுகின்றனர். 2009-ஆம் ஆண்டு கோல்ட்மென் சேக்சு எனும் அந்த முதலீட்டு வைப்பகம் பண்டங்களின் ஊக வணிகத்தில் மட்டும் ஐநூறு கோடி டாலர்கள் (அப்போதைய மதிப்பில் சுமார் 21,000 கோடி ரூபாய்கள்) சம்பாதித்தது. அந்நிறுவனத்தின் மொத்தச் சம்பாதனையில் இது மூன்றில் ஒரு பங்கு.

உணவுத் துறையில் நிலவும் கடும் சிக்கல் குறித்து 2008-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவைக் குழு ஒன்று விசாரணை நடத்திற்று. மைக்கேல் மாசுட்டர்சு என்னும் ஊக வணிக நிதி மேலாளர் அக்குழுவின் முன் பின்வருமாறு வாக்குமூலம் அளித்தார்: “பண்டங்களின் ஊக வணிகச் சந்தையில் புது வகையான சூதாடிகள் நுழைந்ததால் அவற்றின் தேவை வெகுவேகமாக உயர்ந்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாம் இப்போது காண்கிறோம்.”

இந்தச் சந்தையை அரசுகள் ஒழுங்குபடுத்தவேண்டும் என்கிறார் பொருளாதார வல்லுநர் ப்லாசுபெக். இல்லையேல் ஊக வணிகச் சூதாடிகளின் எண்ணிக்கையும் பசி பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் உயரும்; அதன் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும் என்கிறார் அவர்.

உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் பத்து விழுக்காடு உயர்ந்தால் மேலும் ஒரு கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவதாக உலக வைப்பகம் கூறுகிறது. அனைவருக்கும் போதுமான உணவு உலகில் உள்ளது. ஆனால், அதை வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லாததால் நிறையப்பேர் பசியால் சாகின்றனர்.

“பண்டச் சந்தைகள் சரியாக இயங்கவேண்டுமானால் உடனடியாக உலகளவில் அரசியல் செயல்பாடுகள் தேவை” என்று ஒன்றிய நாடுகளவையின் வாணிபம் மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. அது மேலும் பின்வருமாறு தெரிவிக்கிறது: ‘சந்தைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். சூதாடிகளின் செயல்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.’

அந்த ஆய்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் முன்வைத்தனர்: விலைகள் திடீரென உயரும்போது அதைக் குறைப்பதற்கென அரசுகள் தனி நிதியை இருப்பில் வைத்திருக்கவேண்டும். நிதிச் சந்தைச் செயல்பாடுகளின் வேகத்தை மட்டுப்படுத்தி ஊக வணிகத்தைக் குறைப்பதற்காக அத்தகைய வர்த்தகத்தில் சம்பாதிக்கும் பணத்தின்மீது ‘பரிமாற்ற வரி’ விதிக்கவேண்டும்.

சுவடின்றிச் செத்து மடிதல்

ஆப்பிரிக்காவில் பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்ட அகதிகளின் வரிசை
ஆப்பிரிக்காவில் பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்ட அகதிகளின் வரிசை

அத்தகைய ஆலோசனைகளை அந்தச் சமயத்தில் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்கள்போலத் தெரிந்தது. வட ஆப்ரிக்காவில் உணவு விலையேற்றத்தை எதிர்த்து வெடித்த கிளர்ச்சிகளைக் கண்டு பணக்காரர்கள் அஞ்சினர். “பசிப் போராட்டங்கள்” பரவும் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. ஆனால் அதுவும் கற்பனையாகிவிட்டது.

“கன்னெயப் போராட்டங்கள் என்றும் அவற்றைக் குறிப்பிடலாம்” என்கிறார் பெட்டீனா எங்கெல்சு. அவர் செருமனி நாட்டு பெர்லின் நகரில் உள்ள அரசியல் ஆய்வுக் கழகம் ஒன்றில் அமைதி மற்றும் போர்கள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். “ஆளுமையில் மக்கள் பங்கு பெறுதல், செல்வத்தை அனைவருக்கும் மறுபங்கீடு செய்தல்” ஆகியனதாம் இந்தப் போராட்டங்களில் நடுநாயகமாகனவை என்கிறார். ட்யூனிசு, கைரோ, ட்ரிப்போலி உள்ளிட்ட பல நகரங்களில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் நடுத்தர மக்கள்தாம், வறியவர்கள் அல்லர் என்பது அவருடைய வாதத்திற்கு வலுச் சேர்க்கிறது.

“பசியால் வாடுபவர்களுக்குப் போராடுவதற்கு நேரமில்லை” என்கிறார் ரால்ப் சூதாப். இவர் ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டத்தின் பெர்லின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். பசியால் வாடுபவர்களில் பெரும்பாலானோர் சிறு குறு உழவர்கள். அவர்கள் செத்து மடிவது வெளியுலகுக்குத் தெரியவருவதில்லை.

இருப்பினும், உணவுப் பண்டங்களின் விலை உயர்வு எனும் சிக்கல் அரசியல் செயல்நிரலில் மேல்நிலைக்கு வந்துள்ளது. தங்குதடையில்லா வர்த்தகத்தை முன்னிறுத்தும் செருமன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூட உணவுப் பண்டங்களில் இப்போது நிகழும் “பொறுப்பற்ற சூதாட்டத்தைக்” கண்டித்துள்ளார். “ஐயத்துக்கு இடந்தரும் நிதித்துறைச் செயல்பாடுகளால் உணவுப் பண்டங்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துவிட்டன. அதனால் 2006-2009 ஆண்டுகளில் பல கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பசியால் தவிக்கின்றனர்” என்று மே மாதம் செருமன் வெளியுறவுத் துறை நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறினார்.

சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவருதல்

“சந்தை என்றாலே அது ஒழுங்குபடுத்தப்படவேண்டும். அது சந்தையின் இயல்பு.” அப்படியில்லையேல் அது திக்குத் தெரியாத அடர்ந்த காடு போலாகிவிடும் என்றார் அப்போதைய பிரெஞ்சு அதிபர் நிக்கொலசு சார்க்கோசி. தொழில் துறையில் உலகில் முன்னணியில் உள்ள எட்டு நாடுகளைக் கொண்ட G8 அமைப்பு, உலகளவில் தொழில் துறையில் முன்னணியில் உள்ளவையும் முன்னுக்கு வந்துகொண்டிருப்பவையுமான இருபது நாடுகளைக் கொண்ட G20 அமைப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்ந்தாற்போல 2011-இல் அவர் தலைவராக இருந்தார். ஊக வணிகம் காரணமாக உணவுப் பண்டங்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் ஏறுவதைக் குறி வைத்துள்ளார்.

G20 வேளாண் அமைச்சர்களின் மாநாடு 2011 சூன் 22-23 தேதிகளில் பாரிசில் நடந்தது. அப்போது மேற்கண்ட சிக்கல் மீது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டது. வேளாண் பொருள்களின் சந்தைகள் மீது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று சார்க்கோசி அம்மாநாட்டில் வாதிட்டார். “ஒழுங்குபடுத்தப்படாத சந்தை சந்தையே அல்ல. மாறாக, அது நன்மையில் நம்பிக்கையற்ற ஒரு சிலருக்குப் பணத்தை அள்ளித் தரும் சூதாட்டம் தான்” என்றார்.

ஆனால், உலகளாவிய வேளாண் சந்தைத் தகவல் முறை ஒன்றினை அறிமுகப்படுத்தவேண்டும் என ஒப்புக்கொண்ட அந்த அரசியல்வாதிகள் இந்தச் சிக்கல் குறித்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அரசுகள் அந்தத் தகவல் முறையைப் பயன்படுத்தி உணவுப் பண்டங்களின் விலைகளைக் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளமுடியும். அப்படிச் செய்வதன் மூலம் வருங்காலத்தில் கோதுமை, மக்காச்சோளம், அரிசி, சோயாமொச்சை ஆகியவற்றின் விலைகள் ஏறுகையில் அரசுகள் உடனுக்குடன் தலையிடமுடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

இருப்பினும், உணவுப் பண்டங்கள் தொடர்பான நிதி கைமாறுதல்களை ஒழுங்குபடுத்துவதற்கெனப் பருண்மையான சட்டங்கள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. அப்படிச் செய்வதற்கு வலுத்த எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் பிரிட்டனும் அதைக் கடுமையாக எதிர்க்கின்றன. தம் நாடுகளில் உள்ள நிதிச் சந்தைகள் அத்தகைய சட்டங்களால் பெருமளவு பாதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசுகள் கவலைப்படுகின்றன.

வர்த்தகத்தை வெளிப்படையானதாக மாற்றுதல்

பண்ட வர்த்தகத்தில் ஒளிவுமறைவுகளை அகற்றவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. மேலும், ஊக வணிகத்தில் ஒவ்வொரு பண்டத்துக்கும் உயர்ந்த அளவு விலையை நிர்ணயம் செய்வது குறித்தும் அந்நாடுகள் சிந்தித்துவருகின்றன. ஐரோப்பாவைப் போலன்றி, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பல பொருள்களுக்கு ஏற்கெனவே அத்தகைய வரையறைகள் உள்ளன. அவற்றை பால், பருத்தி, காபி, கோக்கோ போன்ற உணவுப் பண்டங்களுக்கும் விரிவாக்குவது குறித்து அமெரிக்க அரசு சிந்தித்துவருகிறது.

ஆனால், அப்படிப்பட்ட வரையறைகளைச் செயல்படுத்துவது கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஏனெனில், உலகளாவிய பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் மிகச் சிறு அளவுதான் சட்டப்படியான சந்தைகளில் நடைபெறுகிறது. சட்டங்கள் கடுமையாகும்போது வைப்பகங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தம் ஊக வணிகத்தை அரசுக் கட்டுப்பாட்டுக்கப்பால் தமக்குள் வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய ஆபத்தான, கட்டுக்கடங்காத வளர்ச்சியை உள்ளடக்கிய வணிகத்தை அரசுகள் மிகக் கவனத்துடன் ஒழுங்குபடுத்தவேண்டும் என்பது தெளிவு. அமெரிக்காவிலுங்கூட அத்தகைய திட்டங்களை அரசு உருவாக்கிவருகிறது. ஆனால், அத்தகைய சட்ட முன்வரைவுகள் சட்டமாகாமல் தடுப்பதில் நிதி நிறுவனங்களின் கையாள்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகின்றனர்.

மக்களுக்கு உணவு தருவது குறித்துச் செயல்பட அரசியல்வாதிகள் தயங்குகின்றனர். அதே சமயம் பங்குச் சந்தை வணிகர்கள் ‘புகுந்து விளையாடுவதற்கு’ ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

வாய்ப்புகளைத் தேடி …

வேளாண்மையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கு கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்தபோது நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். வைப்பகர்கள், தரகர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், பெருநிதி நிறுவன மேலாளர்கள், பெரிய முதலீட்டாளர்கள் ஆகியோருடன் சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் முதலீட்டு அதிகாரிகளும் ஒரு அமெரிக்க நகரின் காவல் மற்றும் தீயணைப்புத் துறை ஓய்வூதிய நிதி மேலாளர்களும் அங்கு திரண்டனர்.

உணவுப் பண்டங்களின் விலை உயர்வைக் கொண்டு தம் ஊதியத்தைப் பெருக்கிக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள அவர்கள் அனைவரும் விரும்பினர். அமெரிக்க விளைநிலங்களில் முதலீடு செய்வது நல்லதா, இல்லை ப்ரெசீல் நாட்டு விளைநிலங்களில் முதலீடு செய்வது சிறந்ததா? உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு உகந்த நிலம் எங்கு மலிவு விலையில் கிடைக்கும்? ஆப்ரிக்காவிலா அல்லது தென் அமெரிக்காவிலா? அத்தகைய பகுதிகளில் முதலீடு செய்த பிறகு ஏதாவது சிக்கல் [அரசியல் கலவரம் உள்ளிட்டவை] நேர்ந்தால் அங்கிருந்து எவ்வளவு விரைவில் முதலீட்டைப் பாதுகாப்பாக வெளிக்கொணரமுடியும்? [இவைபோன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினர்.]

தம் முதலீடுகள் அவை இயங்கும் நாடுகளில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நிதி முதலீட்டாளர்களுக்குத் துளிக்கூட அக்கறை இல்லை. அம்முதலீடுகளால் குமுகங்களும் சூழலும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேளாண்மையில் [குமுகப்] பொறுப்புடன் முதலீடு செய்வதை முன்னிலைப்படுத்தும் கூட்டத்திற்கும் மேற்கண்ட கருத்தரங்கில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அந்தக் கூட்டம் கருத்தரங்கின் இறுதிக் கட்டத்தில் நிகழுமாறு கவனமாக நிகழ்ச்சி நிரலை உருவாக்கியிருந்தனர். அதற்கான நேரம் வருவதற்குள் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தோரில் பெரும்பாலானோர் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதற்காக வானூர்தி நிலையங்களுக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.

பிற நாடுகளில் விளை நிலங்களை வாங்குபவர்களை “நிலத் திருடர்கள்” என்று நடுநிலையறிஞர்கள் குறிப்பிடுவர். அவர்கள் [மக்களை அடிமைப்படுத்தும்] “புதுப் பிரபுக்கள்” என்கிறார் ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் முன்னாள் பொது இயக்குநர் சேக் டியூப்.

ஆனால், அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு அவர்கள் தவறு செய்வதாகவே தெரியவில்லை. தம் முதலீடு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். வேகமாகப் பெருகிவரும் மக்கள்திரளுக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்வதற்குத் தாங்கள் உதவுவதாக அவர்கள் வாதாடுகின்றார்கள்.

நிலங்களைத் திருடுதல்

கடந்த நாற்பது ஆண்டுகளில் உலக மக்கள் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்தது. இப்போது மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், 2050-ஆம் ஆண்டுக்குள் மக்கள் எண்ணிக்கை முப்பது விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நிகழ்ந்தால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் தொள்ளாயிரம் கோடி மக்கள் இருப்பார்கள்.

இந்நிலையில் நிலத் திருட்டுகள் அவ்வளவு மோசமானவையாக முதலில் தெரியவில்லை. உலக வைப்பகமும் வளர்ச்சியடையா நாடுகளில் அத்தகைய முதலீடுகளைப் பரிந்துரைத்தது. அந்நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் பெருகி வேலை வாய்ப்பு அதிகரித்தால் அனைவருக்கும் நல்லது என உலக வைப்பகம் நம்பிற்று [அல்லது, நம்புவதாக நடித்தது!].

ஆனால், முதலீட்டாளர்களின் பேராசையையும் பசி, பட்டினிக்கு எதிரான போரையும் இணைத்தால் அனைவருக்கும் நல்லது என்ற திட்டம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரிட்டானியப் பல்கலை ஒன்றில் நடந்த கருத்தரங்கிலும் உலக வைப்பகத்தின் ஆய்வொன்றிலும் எட்டப்பட்ட முடிவுகள் மேற்கண்ட நிலத் திருட்டின் கொடிய விளைவுகளை அம்பலப்படுத்துகின்றன:

  • ஆதிக்க ஆற்றல்கள் சிறு குறு உழவர்களை ஏமாற்றி அவர்களுடைய நிலங்களைப் பெரு முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட்டன
  • வேலை வாய்ப்புத் தொடர்பாக மக்கள் ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டனர்
  • உள்ளூர் மக்களுக்கு வேண்டிய தண்ணீரைத் திருடும்வண்ணம் பாசன முறைகள் கட்டமைக்கப்பட்டன
  • காடழிப்பு (உயிரினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படுதல்)
  • வேதி உயிர்க் கொல்லிகளால் மாசடைந்த ஓரினப் பயிர்கள்
  • மக்கள் வாழிடங்களில் இருந்து கட்டாயத்தின்பேரில் அப்புறப்படுத்தப்படுதல்.

2011 வரையான சில ஆண்டுகளில் உலக அளவில் சுமார் எட்டுக் கோடி எக்ட்டேர் நிலம் (20 கோடி ஏக்கர்கள்) வெளிநாட்டு முதலீட்டாளர்களுடைய கைககளுக்கு மாறிவிட்டதாக உலக வைப்பகம் தெரிவிக்கிறது.

‘மக்களுக்குப் போதிய உணவு தருதல் அரசின் பொறுப்பு’

speculation-graph
ஊக வணிகர்களின் திருவிளையாடல் – மக்காச்சோள உற்பத்தியும் ஊக வணிகமும்

இந்தச் சிக்கல்கள் எத்தியோப்பிய நாட்டில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. பசி, பட்டினி என்றாலே பலருடைய நினைவுக்கு வருவது எத்தியோப்பியா தான். ஐம்பத்தேழு லட்சம் எத்தியோப்பியர்கள் தம் உணவுக்குப் பன்னாட்டு உதவியை நம்பி வாழ்கின்றனர். அந்நிலையில் எத்தியோப்பிய அரசு பெருமளவில் வளமான விளைநிலங்களைப் பிற நாட்டு முதலாளிகளுக்கு விற்றல், குத்தகைக்குத் தருதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த முதலீட்டாளர்கள் அந்நிலங்களின் விளைபொருள்களை எத்தியோப்பியாவில் இருந்து ஏற்றுமதி செய்துவிடுகின்றார்கள்!

2007-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நிதியுதவி பெறும் வேளாண் திட்டங்கள் 815-க்கு எத்தியோப்பிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சௌதி நிறுவனங்கள், பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், பிரிட்டானிய ஓய்வூதிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியன அங்கு முதலீடு செய்துள்ளன.

எத்தியோப்பியாவின் கம்பேலாப் பகுதியில் சுமார் முப்பத்தாறு லட்சம் எக்ட்டேர் (90 லட்சம் ஏக்கர்) நிலம் இவ்வாறு தாரை வார்க்கப்பட உள்ளது. அந்நாட்டு அரசு அமைக்கவுள்ள தேசியப் பூங்காவுக்கு ஒதுக்கவேண்டிய நிலத்தின் பெரும்பகுதியும் இதில் அடங்கும். பிற நாடுகளின் உணவுத் தேவைக்காக இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. எத்தியோப்பியத் தலைநகரமான அடிசபாபாவிற்கு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இசுப்பானிய நாட்டு நிறுவனமொன்று வாரமொன்றுக்கு 180,000 கிலோ காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. அவை துபாய், கத்தார், பகுரெயின், சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டுக் கன்னெய நிறுவனங்கள்,
ஐந்து-விண்மீன் (நட்சத்திர) உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

“பசியால் வாடுபவர்களுக்கு அந்நிய நாட்டுச் சந்தையில் கோதுமை வாங்குவதற்கு அரசுக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை நாங்கள் ஈட்டித் தருகிறோம்” என்கிறார் அந்த இசுப்பானிய நிறுவனத்தின் மேலாளர். “தமக்காக எதையுமே வாங்கும் திறன் இல்லாதிருக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது அரசின் பொறுப்பு” என்கிறார் டச்சு (ஆலந்து) நாட்டினரான அந்த மேலாளர்.

தவறானவற்றில் முதலீடு செய்தல்

சிக்கல் என்ன என்பதை அவர் சரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளார்: போதுமான உணவு உள்ளது; ஆனால் அந்த உணவை வாங்குவதற்குப் பலரிடம் பணம் இல்லை. மலிவு விலையில் உணவு உற்பத்தி செய்வது தம் பொறுப்பு என்று முதலீட்டாளர்கள் கருதுவதில்லை. தம்மிடம் ஏற்கெனவே நிறைய உள்ள பணத்தை மேலும் பெருக்குவதுதான் அவர்களுடைய வேலை. விளைபொருள் விற்பனையில் கிடைக்கும் ஊதியமும் விளை நிலங்களின் விலை உயர்வால் கிடைக்கும் உபரியும் இருபத்தைந்து விழுக்காடு இருக்கும் என்று பிரிட்டானிய நிதி நிறுவனமொன்று எதிர்பார்க்கிறது.

சாலை, பாசன வசதிகளைவிட்டுத் தொலைவில் இருக்கும் வெறும் நிலத்தில் இவ்வளவு அதிகமான ஊதியத்தை வழக்கமாக எதிர்பார்க்கவியலாது. நீர் வளமும் போக்குவரத்து வசதிகளும் கொண்ட வளமான நிலங்களைத்தான் வழக்கமாக முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். அந்நிலங்களை ஆற்றல் தேவை மிக்க வேதி வேளாண்மைக்கு உட்படுத்திச் சூழல் மாசுபடுதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை மேலும் மோசமாக்குவார்கள்.

ஆக, சத்துப் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு முதலீட்டாளர்களும் ஊக வணிகச் சூதாடிகளும் இழைக்கும் கொடுமை விலைவாசி உயர்வு மட்டுமன்று. “மோசமானவர்கள்தாம் முதலீடு செய்கின்றனர் என்பதல்ல சிக்கல். அவர்கள் தவறான பொருள்கள் மீதும் முதலீடு செய்கின்றனர்” என்கிறார் சுவிசர்லாந்து நாட்டுத் தொழில்நுட்பக் கழக வேளாண் சூழலியலாளர் ஏஞ்செலிகா இல்பெக்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய நாடுகளவையின் சார்பில் “மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு” என்ற ஆய்வு உலகெங்கும் நடத்தப்பட்டது. ஒன்றிய நாடுகளவையும் உலக வைப்பகமும் நூற்றுக்கணக்கான அறிவியலாளர்களை இதற்காகப் பணியமர்த்தின. வேளாண்மையின் எதிர்காலம், பசி, பட்டினியைப் போக்குவதில் வேளாண்மையின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய தம் அறிவை அந்தக் குழுவினர் தொகுத்தனர். இல்பெக்கும் அந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றினார். அவர்களுடைய அறிக்கை 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்போது பரவலாகச் செய்யப்படும் வேதிவேளாண்மை எனும் ஆலை சார்ந்த வேளாண் முறையை ஆதாரங்களுடன் மிகக் கடுமையாகச் சாடிற்று அந்த அறிக்கை. சூழலில் நஞ்சு கலந்து மாசுபடுதல், திடீர் திடீரென நிகழும் பருவநிலை மாற்றங்கள், உயிரின அழிவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, நோய்களும் வறுமையும் அதிகரித்தல் ஆகியவற்றில் வேதி வேளாண்மைக்குப் பெரும்பங்கு உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.

மாற்றம் கோருதல்

பருவநிலை மாற்றங்களால் விளையும் இன்னல்களைப் போக்குவதற்கு அந்த ஆய்வாளர்கள் பின்வரும் தீர்வுகளை முன்வைத்தனர்:

  • பெருமளவில் விளைச்சல் அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இப்போதைய வேதி வேளாண் முறையைக் கைவிடுதல்
  • ஓரினப் பயிர் சாகுபடியைத் தவிர்த்தல்
  • இப்போது மிகப் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் உயிர்க் கொல்லிகளை முற்றிலும் ஒதுக்குதல்.

இத்தகைய வேதி வேளாண்மை தண்ணீரை மாசுபடுத்துகிறது. மண்ணை வறளச் செய்கிறது. ஏற்றுமதி சார்ந்த வேளாண்மை வளரும் நாடுகளின் சந்தைகளை ஒழித்துவிடுகிறது.

சூழலுக்கு உகந்த, நிலைத்த, நீடித்த முறைகளைப் பயன்படுத்திச் சிறு குறு உழவர்கள் உள்ளூர்த் தேவைக்கு விளைவிக்கும் வண்ணம் வேளாண் முறைகளை திசை திருப்பவேண்டும் என்று மேற்படி அறிஞர் குழு கூறுகிறது. அந்த உழவர்களுக்குத் தேவையான விதைகள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் அறிவு, சந்தை ஆகியவற்றைத் தருவதற்குப் போதுமான முதலீடுகள் செய்யப்படவேண்டும் என்கிறது அந்த ஆய்வு. அப்படிச் செய்தால் அந்தச் சிறு உழவர்கள் தாமும் உண்டு பிறருக்குத் தேவையான உணவையும் உற்பத்தி செய்வார்கள். உலக உணவாதாரத்தைக் காத்து, பசிப் பிணியை ஒழிப்பதற்கு இது ஒன்றே வழி என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. நிலைத்த, நீடித்த வேளாண்மையில் முதலீடு செய்வதற்கு இன்றும் அரசுகள் உதவி செய்வதில்லை. “உணவு உற்பத்தியில் ஈடுபட்டுத் தாமும் உண்டு வாழும் எழுநூறு கோடி மக்களின் தேவைகளைவிட நிறுவனங்கள், பணக்காரர்கள் ஆகியோருடைய நலத்தில் தான் அரசுகள் தொடர்ந்து கவனஞ்செலுத்துகின்றன” என்கிறார் ஆக்சுபாம் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் வேளாண் வல்லுநர் மரீட்டா விக்கெர்த்தேல்.

சூழலுக்கு உகந்த, நிலைத்த வகையில் விளைச்சல் எடுத்து அதன் பலனை அனைவருக்கும் போதுமான அளவு வழங்கும் புது உணவு யுகம் இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தீவிர ஆலைமயமான வேளாண் முறையின் பக்க விளைவுகள்தாம் வேளாண்மையைச் சிக்கலில் மாட்டியுள்ளன என்று தெரிந்தும் அரசியல்வாணர்களும் பொருளாதார முறைகளும் அந்த வேளாண் உற்பத்தி முறைக்குத்தான் இன்னமும் முதன்மை தருகின்றனர்.

சிக்கலின் ஒரு கூறு

இந்தத் தீய போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. பண்டங்களின் ஊக வணிகத்தில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்கள் வேளாண் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெருநிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன. எ.கா. செருமன் நாட்டு டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம், அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் ஆகியன மிகப் பெரும் நிதி நிறுவனங்கள். (“விளைச்சலை அதிகரிக்கும் வாய்ப்புகளை முன்வைத்தல்” என்பது அலையான்சின் விளம்பர மந்திரமாக உள்ளது.) இவை மான்சான்ட்டோ, சின்சென்ட்டா போன்ற விதை நிறுவனங்கள், பொட்டாசு கார்ப்பொரேசன், மொசெயிக் உள்ளிட்ட வேதியுர நிறுவனங்கள், ஏடீஎம், பன்சி போன்ற பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், டெசுக்கோ, சேப்வே, டைசன் புட்சு போன்ற உணவுப் பொருள் வழங்கல் நிறுவனங்கள் உள்ளிட்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளன.

“மேற்படி நிதி நிறுவனங்களில் நீங்கள் செய்யும் முதலீடு உலகளவில் உணவாதாரத்தைக் காக்க உதவுகிறது” என்று உங்களுடைய நிதி ஆலோசகர் சொல்வதை நீங்கள் நம்பினால் ஒன்றைக் குறித்து நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்:

அத்தகைய முதலீடுகள் சிக்கலை உண்டாக்குகின்றன, தீர்வுகளை அல்ல.

மூலக் கட்டுரை

மொழிபெயர்ப்பாளர் : பரிதி

ஊகவணிகம் – மிக எளிமைப்படுத்தப்பட்ட ஓர் எடுத்துக்காட்டு

சந்தையில் இன்று சோளம் கிலோ பதினெட்டு ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம். சோளம் பயிரிட்டிருக்கும் உழவர் ஒருவர் பண்ட வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்: இற்றைக்கு மூன்று மாதங்கள் கழித்து அவரிடமிருந்து ஐயாயிரம் கிலோ சோளத்தைக் கிலோ இருபது ரூபாய்க்கு அந்நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.

அந்த மூன்று மாதக் கெடு முடிகையில் சோளத்தின் விலை கிலோ இருபதைவிடக் குறைவாக இருந்தால் ஒப்பந்தம் போட்ட உழவருக்கு நல்லது. அதிகரித்திருந்தால் நிறுவனத்துக்கு நல்லது.

இந்த ஒப்பந்தத்தில் உணவுப் பண்டம், அதை விளைவிப்பவர், அதை வாங்கும் நிறுவனம் ஆகியன நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இது உலகின் பல பகுதிகளில் சில நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. அண்மைக்காலத்தில் வணிக முறைகள் இதைவிட நுணுக்கமாக மாறியுள்ளன. எப்படி?

மேற்படி ஒப்பந்தத்தையே பங்குச் சந்தையில் விற்கவும் வாங்கவும் முடியும்! உற்று நோக்குங்கள்; விற்பனை செய்யப்படுவது சோளம் அல்ல, அது குறித்து உழவரும் சோளம் வாங்கும் நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தம் அடுத்த கட்டமாகப் பங்குச் சந்தையில் வணிகப் பொருளாகிறது, அந்த ஒப்பந்தம் இவ்வாறு பல கைகள் மாறலாம். இதுதான் மிக எளிமையான அளவில் பண்டங்களில் ஊக வணிகம்.

இப்படிப்பட்ட ஊக வணிகத்தில் ஈடுபடுவோர் அதன் அடிப்படையாக உள்ள பண்டத்தை வாங்கவோ விற்கவோ வேண்டியதில்லை. அவர்களுக்கும் எந்தவொரு பண்டத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கவேண்டியதில்லை என்றாகிறது!

அ. கட்டுரையில் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் “[]” தரப்பட்டுள்ளன.

ஆ. கட்டுரையில் அழுத்தத்திற்காகச் சில வாக்கியங்கள் தடிப்பான எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.. இது மூலக் கட்டுரைகளில் இல்லை.

பிறமொழிச் சொற்கள், சொற்றொடர்கள், அமைப்புகளின் பெயர்கள்

தமிழ் அருஞ்சொற்பொருள்கள் ‘அப்பாத்துரையார் அகராதி’ எனப்படும் ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன (சென்னைப் பல்கலை வெளியீடு).

அமர்த்யா சென் – amartya sen, “poverty and famines”, 1982
அமெரிக்க டாலர் – the US dollar
அரசு கடனீட்டு ஆவணங்கள் – government bonds
அலிமா அபூபக்கர் halima abubakar
அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் allianz RCM global resources fund
அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம் the international food policy research institute (washington)
ஆக்சுபாம் oxfam
ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி the horn of africa
இசுப்பானிய spanish
இந்தோனேசியா indonesia
உணவு மற்றும் வேளாண் கழகம் the food and agricultural organization
உயிரெரிபொருள் biodiesel
ரூபாய் rupee
(ஒன்றிய நாடுகளவையின்) உலக உணவுத் திட்டம் the UN world food program
உலக வைப்பகம் the world bank (உலக வங்கி)
ஊக வணிகம் futures trading
எத்தியோப்பியா ethiopia
எரிட்ரியா eritrea
ஏஞ்செலிகா இல்பெக் angelika hilbeck
ஏடீஎம் ADM
ஏலன் நக்மேன் alan knuckman
ஐரோப்பிய ஒன்றியம் the european union
ஒலீவியர் டீ சூட்டர் olivier de schutter
ஒன்றிய நாடுகள் the united nations (ஐக்கிய நாடுகள்)
கடன் நம்பகத்தன்மை credit rating
கத்தார் qatar
காபி coffee
கிபேரா kibera
கும்பி gumbi
குறியீட்டு நிதிகள் index funds
கெய்னெர் ப்லாசுபெக் heiner flassbeck
கென்யா kenya
கைரோ cairo
கோக்கோ cocoa
கோல்ட்மென் சேக்சு goldman sachs
சிக்காகோ வர்த்தக மன்றம் the chicago board of trade
சின்சென்ட்டா syngenta
சீனா china
சுவிசர்லாந்து switzerland
சூதாடி (பந்தயம் வைப்பவர்) speculator
செருமனி germany
செருமானிய german
சேக் டியூப் jacques diouf
சேப்வே safeway
சே.பி. மார்கன் j p morgan
சோமாலியா somalia
சௌதி (அரேபியா) saudi arabia
ட்யூனிசு tunis
ட்ரிப்போலி tripoli
டச்சு (ஆலந்து) dutch (holland)
டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம் deutsche bank’s DWS global agribusiness fund
டுனீசியா tunisia
டெசுக்கோ tesco
டைசன் புட்சு tyson foods
துணைப்பிணையம் collateral
துபாய் dubai
நிக்கொலசு சார்க்கோசி nicolas sarkozy
நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு price formation in financialized commodiity markets: the role of information
நோபெல் பரிசு the nobel price
ப்ரெசீல் brazil
ப்ரெடெரிக் காப்மேன் frederick kaufman
பகுரெயின் bahrain
பங்குரிமைச் சான்றிதழ் securities
பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம் the US securities and exchange commission
பண்டங்கள் commodities
பண்டங்கள் ஊக வணிக ஆணையம் the US commodities futures rrading commission
பன்சி bunge
பிரிட்டன் britain
பிரெஞ்சு french
பெட்டீனா எங்கெல்சு bettina engels
பெர்லின் berlin
பேய்ர் இசுடெய்ர்ன்சு bear stearns
பொட்டாசு கார்ப்பொரேசன் potash corporation
மரீட்டா விக்கெர்த்தேல் marita wiggerthale
மலாவி malawi
மார்கன் இசுடேன்லி morgan stanley
மான்சான்ட்டோ monsanto
மெக்சிக்கோ mexico
மேக்சிமோ டொரேரோ maximo torero
மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு international assessment of agricultural knowledge, science and technology for development
மைக்கேல் மாசுட்டர்சு michael masters
மொசெயிக் mosaic
யூரோ euro
ரால்ப் சூதாப் ralf sudhoff
லேமென் பிரதர்சு lehman brothers
வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் the united nations conference on trade and development
வைப்பகம் bank (வங்கி)

கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?

1
Jpeg

டலூர் மாவட்டத்தில் 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனையொட்டி கேட்கக்கூடிய நிவாரணம் என்பது பொதுவாக எப்படி பார்க்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதாக ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரப்படுகிறது.

Jpegஇந்த நிவாரணத்தை பொறுத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று மக்களுக்கு உடனடியாக செல்லக்கூடிய உதவிகள், அதாவது வீடுகளை இழந்து, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்து நிற்கக் கூடிய , முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக தேவை என்பது மூன்று வேளை உணவு , பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கு பால், முதியோர்களுக்கு மருந்துகள், குளிருக்கு போர்வை போன்றவை தான் உடனடியாக தேவை. ஆனால் சில அறிஞர்கள், “இது போன்ற உதவிகளை எல்லோரும் செய்கிறார்கள், தேவை அதுவல்ல நிரந்தர தீர்வு தான் வேண்டும்” என்று பேசுகிறார்கள்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பது தான் நிரந்தரமான தீர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால், நிரந்தர தீர்வை பற்றி பேசும் போதே உடனடி தீர்வான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டே அதனை உத்தரவாதப்படுத்துவது என்பது தான் இன்றைக்கு அவசியமான வேலையாக உள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தவை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுப்புரம் தனியாக பிரிக்கப்பட்டது. கடலூரை பொறுத்த வரை ஒவ்வொரு மழையின் போதும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனென்றால் கடலூர் ஒரு வடிகால் மாவட்டம். குறிப்பாக சேலம், கரூர்,பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து பாயும் தண்ணீர் இந்த மாவட்டத்தின் வழியாக தான் சென்று கடலில் கலக்கிறது.

Jpegகாவிரியில் நீர் வரத்து அதிகமானால் அவை கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலூர் வந்து கடலில் கலந்து விடும். ஆகவே இந்த மாவட்டம் வடிகால் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும், இந்த மாவட்டத்தில் ஐந்து முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. வெள்ளாறு, பரவனாறு, மணிமுக்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவை இம்மாவட்ட்டத்தின் வழியாக ஓடுவதனால் மழைக்காலங்களில் 100 டி.எம்.சி தண்ணீர் இவ்வழியாக செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அனைத்து நீர்நிலைகளும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வந்தால் தான் மக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்வது தான் நிரந்தர தீர்வாகவும், நிரந்தர பணியாகவும் இருக்க முடியும்.

இதில் என்ன தவறு நடந்துள்ளது என்றால் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு உள்ள நீர்நிலைகள் எதுவும் தூர்வாரப்படவில்லை. அதனால் தான் 2000-க்கு பிறகு இது மூன்றாவதாக மிகப்பெரிய இழப்பாக ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

Jpegசில அறிஞர்கள் சொல்வது போல் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் இந்த சூழலில் யாராவது முன் வருவார்களா? நிரந்தர தீர்வை யார் செய்ய வேண்டும் என்றால் அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் செய்ய வேண்டிய அரசோ குற்றவாளியாக உள்ளது. நீர்நிலைகள், குளம் குட்டைகள், ஏரிகள், என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த அதிகாரிகள் தான் எனும் போது அவர்கள் இந்த வேலையை செய்வார்களா என்றால் செய்ய மாட்டார்கள். ஆக அரசு செய்ய மறுப்பதை மக்களே செய்ய வேண்டும்.

இந்தத் தருணத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டியது வேலை என்னவென்றால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்த்து ஆறுதல் சொல்வது, “நீங்கள் தனி ஆட்கள் இல்லை. உங்களை பாதுகாக்க பல்வேறு மாவட்ட மக்கள் இருக்கிறார்கள், உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை” என்று ஆறுதல் கூற வேண்டும். இந்த ஆறுதல் சொல்லக்கூடியவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு போகக்கூடியவர்களை முறைபடுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது.

Jpegஆனால் எந்த பொறுப்பும் இல்லாமல் அமைச்சர்கள், அதிகாரிகள் ‘அம்மாவின் ஆட்சியில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது’ என்று கணக்கு காட்டும் வேலையை மட்டும் செய்கின்றனர்.

எங்கிருந்தோ கொண்டு வரும் நிவாரண பொருட்களை கூட வழி மறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு கடத்தி சென்று அம்மாவின் முகம் ஒட்டி அனுப்பும் வேலை நடக்கிறது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், ‘தன்னார்வலர்கள் கொடுப்பதை மக்களே வழிமறித்து பிடுங்கிக் கொள்கிறார்கள். எனவே அலுவலகத்தில் இருந்து நிவாரணத்தை முறையாக வழங்குவோம்’ என்கிறார்கள்.

ஏற்கனவே நவம்பரில் பெய்த மழை விட்டு கிட்ட தட்ட இரண்டு வார காலம் ஆகிவிட்டது. இது டிசம்பரில் பெய்த இரண்டாவது மழை. “இது வரையிலும் அதிகாரிகள் வரவில்லை, கணக்கு எடுக்கவில்லை” என்பதே மக்களின் குமுறலாக இருக்கிறது. இனிமேல் எப்ப கணக்கு எடுத்து எப்ப நிவாரணம் கொடுப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா என்றால் இல்லை.

Jpegஇன்று மக்கள் பசியில் இருக்கிறார்கள், உணவு இல்லை, குழந்தை பாலுக்கு அழுவுகிறது, மருத்துவ ரீதியாக ஜுரம்,காய்ச்சல் தலைவலி என்று பல பிரச்சனைகள் பல இருக்கின்றன. இதற்குத் தீர்வு இல்லை. பிறகு கணக்கெடுத்து கொடுப்போம் என்பதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத்தனத்தை முதலில் நாம் தட்டி கேட்க வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும்.

நிவாரணம் கொடுக்க வருபவர்கள் மக்கள் தவிக்கிறார்களே என்று தான் கொண்டு வருகிறார்கள். அதையும் பிடுங்கி கொண்டு பின்னாடி தருவோம் என்பது இந்த மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாதனத்தை தான் காட்டுகிறது. முதலில் இந்த மாவட்ட நிர்வாகம், தான் ஆளத் தகுதியிழந்து விட்டதை ஒப்புக்கொண்டு விலக வேண்டும். மக்களே ஆங்காங்கு ஒருங்கிணைந்து கொண்டு நிவாரணப் பொருட்களை முறையாக விநியோகிக்க முடியும். அதற்கு பல்வேறு ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு அமைப்புக்கள் துணை நிற்கும்.

இந்த நிவாரணம் கோரக்கூடியவர்களை மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம்.

Jpeg1. கடலூர் மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வகையான பயிர்களும் நாசமாகியுள்ளது. எனவே நிலத்தை சரி செய்ய வேண்டும், தண்ணீரை வெளியேற்ற வேண்டும், நிலங்களில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் விவசாயம் செய்வதற்கு உகந்தவாறு அதை முறைபடுத்தி கொடுக்க வேண்டும் . அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும். அப்படிப்பட்ட நிவாரணம் ஒருவகை.

2. வீடுகளை இழந்தும், உயிர்களை, உடமைகளை இழந்தும், கால்நடைகளை இழந்தும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டித்தர வேண்டும். வீடு கட்டி தருவது என்பது உடனடியாக சாத்தியமில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் உடனடியாக கணக்கெடுத்து அவற்றுக்கு எத்தனை கோடிகள் செலவாகுமோ அதனை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

இடிந்த வீடுகளுக்கு மட்டும் தான் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று அரசு அறிவித்திருப்பதே முதலில் அயோக்கியத்தனம். கட்டிட வீடாக இருந்தாலும் அதற்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதன் தன்மையே மாறி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அதன் தாங்கும் திறன் எல்லாம் தளர்ந்திருக்கும். அதனால் கட்டிட வீடாக இருந்தாலும், வீடு இடிந்திருந்தாலும், கூரை வீடாக இருந்தாலும் அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்.

Jpegகூரை வீடுகள் அனைத்தையும் கட்டிட வீடாக கட்டித்தர வேண்டும். கூரை வீடு இருந்தால் அது அப்படியே தான் இருக்க வேண்டுமா? கூரை வீடு தான் அரசின் கொள்கையா? தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற போகிறோம் தொலை நோக்கு திட்டம் உள்ளது என்பதெல்லாம் என்ன ஏமாற்று தானா… ஆகவே கூரை வீடுகள் இருந்தால் அதனை கட்டிடமாக மாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

ஆனால், நவம்பரில் மழை பெய்தது வீடுகள் சேதமடைந்து விட்டது. தற்பொழுது சென்று பார்க்கும் அதிகாரிகள் எதுவும் ஆகவில்லை. எனவே உங்களுக்கு நிவாரணம் இல்லை என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் கூறுவதை போலவே நிவாரணம் வழங்க நினைப்பவர்களும் கூறுகிறார்கள்.

எப்பொழுது பாதிப்படைந்ததோ அப்பொழுது வரவில்லை. அதன் பிறகு ஒருவாரம் கழித்து வந்து பார்த்தால் அது வரைக்கும் தண்ணீர் வடியாமல் இருக்கனுமா? வீடு விழுந்திருந்தால் அதைத் தூக்கி நிறுத்த மாட்டார்களா? தன்னை பாதுகாக்க வேண்டும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கூரை வீட்டில் வசிப்பவார்கள் எங்கு போவார்கள். இருப்பதோ ஒரு அறைதான். அங்கேயே படுக்க வேண்டும், தூங்க வேண்டும். அதற்காக தான் மக்களே சரி செய்து கொள்கிறார்கள்.

Jpegமக்களே தங்கள் முயற்சியில் செய்து கொள்வதை கூட அதிகாரிகள் இது எல்லாம் நன்றாக உள்ளது. வீடுகள் விழவில்லை என்று நிவாரணம் வழங்க மறுப்பது எல்லாம் பச்சை அய்யோக்கியத்தனம்.

3. இந்த மாவட்டத்தை பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் கூலி விவசாயிகள் . அதுவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பொறுத்த வரை விவசாய கூலிகள். கொத்தனார், பெயிண்டர் போன்ற அடிக்கட்டுமான வேலையில் இருப்பவர்கள். மழைக்காலத்தை பொறுத்தவரை வேலையின்மை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. கட்டிட வீடாக இருந்தாலும், தண்ணீர் மட்டும் புகுந்து வடிந்தவையாக இருந்தாலும் அந்த மக்களுக்கு உட்பட அனைவருக்குமே நிவாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் நிவாரணம். வீடு இடிந்தால் நான்காயிரம், சுவர் விழுந்தால் மூவாயிரம் என்பதெல்லாம் ஏமாற்று தான். ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.

Jpegநிவாரணம் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மக்கள் செலுத்தக் கூடிய வரியில் இருந்து தான் அரசு இயங்குகிறது. நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் வரி கட்டுகிறோம். கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர், அமைச்சர்கள் , முதலமைச்சர்கள் வரை வாங்கும் சம்பளம் அனைத்தும் மக்கள் தான் கொடுக்கிறார்கள். அந்த மக்கள் வீடிழந்து வாழ்க்கையை இழந்து துயரத்தில் இருக்கும் போது மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

நிவாரணம் என்பது பிச்சை கிடையாது. அரசு மக்களுக்கு செய்தே ஆக வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் தான் நிவாரணத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ “அம்மா கொடுத்துட்டாங்க கிடைத்ததை வாங்கிகொள்ளுங்கள் , அல்லது எப்ப கொடுக்கிறார்களோ அப்ப வாங்கிகொள்ளுங்கள்” என்று அதிகாரிகள் சொல்வது கண்டிக்கத்தக்கது. ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய இந்த மக்களை ஏமாற்றும் ஒரு துரோக நடவடிக்கையே.

ஆகவே நிவாரணம் தர நினைக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேரவேண்டும் என்ற உங்களுடைய உணர்வு சரியானது. குறிப்பாக கடலூர் மாவட்டம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இது மூன்றாவது மிகப்பெரிய பாதிப்பு இதற்கு உதவ வேண்டும் என்று நினைக்க கூடிய மக்களுக்கு கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வி.வி.மு, பு.மா.இ.மு, புஜதொமு சார்பாக நாங்கள் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிவாரணம் என்பதை இதன் அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்….

கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:

தோழர் து. பாலு,
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர்,
தொலைபேசி எண்: 8110815963

தோழர் பழனிச்சாமி,
எண்: 5, காட்டாமணிக்குப்பம் வீதி,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி – 3,
தொலைபேசி 9597789801

சென்னையில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

தோழர் வெற்றில்வேல் செழியன்,
மக்கள் அதிகாரம் சென்னை வட்டார ஒருங்கிணைப்பாளர்,
தொலைபேசி எண்: 9176801656

– வினவு செய்தியாளர்.
கடலூர்.

அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?

15

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ?
இறுதி பாகம் ( வீடியோ மற்றும் கட்டுரை)

கூட்டுநடவடிக்கை பற்றி விமர்சனங்கள் சொல்பவர்கள், ‘இந்த அடக்குமுறை வந்ததனால் கட்சிகாரங்களை போய் பார்க்கிறீர்கள். மற்றபடி பிரச்சினைகளுக்கான கூட்டுநடவடிக்கைகளில் நீங்க எந்த காலத்திலும் ஈடுபட்டதில்லை’ என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொல்வது, ஒரு வகையில் கொச்சைப்படுத்துவது. முதன்மையாக, உண்மைக்கு மாறானது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசு தாக்குதல் நடந்தது. அதை எதிர்த்து கட்சிகளுடைய கண்டனம் வந்தது. தி.மு.க முதல் எல்லா கட்சிகளும் கண்டித்தார்கள். அது தேடிப் பெற்ற ஆதரவு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

kovan-kalaignar-meet-2கோவன் கைதுக்கு கண்டனம் எழுந்தது, எப்படி நடந்தது? கைதிற்கு தி.மு.க. தலைவர் முதலில் கண்டனம் தெரிவிக்கிறார். ஆங்கில ஊடகங்களில் தேசிய அளவில் மோடியின் சகிப்பின்மைக்கு எதிராக, கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், “இங்கே ஒரு பாடலுக்காக ராஜதுரோகக் குற்றமா?” என்று சொல்லி ஆங்கில ஊடகங்களில் செய்தி வருகிறது. எல்லா கட்சிகளும் கண்டிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் செய்தி வருகிறது. இந்தக் கண்டனங்கள் எதுவும் ம.க.இ.க. தேடி வரவழைத்த கண்டனங்கள் அல்ல. அப்படி சொல்வது நேர்மையான முறையில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு கண்டனம் தெரிவித்தவர்களையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த கண்டனங்கள் எல்லாம் ‘டாஸ்மாக் என்ற கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது., அதன்பால் இந்த அரசு கொண்டிருக்கிற அணுகுமுறை’ இதன் காரணமாக எழுந்ததே தவிர, அது ம.க.இ.க.விற்குக் காட்டப்பட்ட சலுகையுமல்ல.

அதோடு, கோவன் ராஜத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை சந்தித்திராத அடக்குமுறையும் அல்ல. சொல்லப்போனால், 1991-96 காலத்தில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட ராஜத்துரோக வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. 1987-90 வரையிலான காலகட்டத்தில் பல பொய்யான வெடிகுண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வெறும் சுவரெழுத்துக்காக 9 மாதம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில தோழர் காளியப்பன் உள்ளிட்ட 5 தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ராஜிவ் கொலைவழக்கு பிரச்சினையில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தடாவில் பல தோழர்கள் சிறையிலிருந்திருக்கிறார்கள். ஈழ அகதிகளை வெளியேற்றக் கூடாது என்பதற்காக அந்த காலகட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டங்களிலெல்லாம் விடுதலைக்காக நாங்கள் யாருடைய ஆதரவையும் கோரிப் பெற்றதில்லை. ஒருவேளை அவ்வாறு கோரியிருந்தால் அதில் தவறும் இல்லை. பெற்றதில்லை என்பது ஒரு உண்மை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால், இதே காலகட்டத்தில் இங்கே ஜெயலலிதா ஆட்சி, அங்கே பாபர் மசூதி இடிப்பு – பார்ப்பன பாசிசத்தின் எழுச்சி என்ற காலகட்டத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் தொடங்கி, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் போராட்டங்களிலெல்லாம் தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கூட்டு நடவடிக்கையாக எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஈடுபடுத்தியிருக்கிறோம். இது ஒரு உண்மை. இதே கருவறை நுழைவுப் போராட்டத்தை ஆதரித்து முரசொலி பல தலையங்கங்களை எழுதியிருக்கிறது. விடுதலை எழுதியிருக்கிறது. வேறு சில பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் கோரிப்பெற்றவையல்ல. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் எழுதியவை. ஆகவே,இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு எந்த காலத்திலும் இவர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்று சொல்வது, மக்கள் கலை இலக்கியக் கழகத்துக்கு எதிரான ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடு. தமிழ் மக்கள் இசைவிழாவை விட கூட்டுநடவடிக்கைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தேவையில்லை. அது பல ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னாலே தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம். அதிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் கழகம், குறிப்பிட்ட காலத்திற்கு மார்க்சிஸ்டு கட்சி உள்ளிட்டு பலர் அதிலே பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது ஆகஸ்டு-31 அன்று எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இப்போது நாங்கள் பார்த்து சென்றுவிட்டு வந்த கட்சித் தலைவர்கள், மக்கள் நலக்கூட்டியக்கம், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் அங்கே கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கோவன் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

எங்கள் மீது அடக்குமுறை வந்ததினாலதான் போகிறோம் என்று சொல்வது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், யாரோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகலாம், போகக்கூடாது என்பதில் விமர்சனம் செய்பவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியல் கட்சிகள் யாரோடும் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. மாறாக, அந்நிய நிதியுதவி பெறுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்பே இல்லாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தனிநபர்கள் வைத்திருக்கின்ற பெயர்ப்பலகை அமைப்புகள் இவர்களோடு கூட்டு நடவடிக்கைக்குப் போவதில்லை. அப்படி ஒரு மக்கள் அடித்தளமோ, அல்லது நேர்மையான செயல்பாடோ இல்லாதவர்களுடன் ஒரு 50 பேர், 60 பேரை சேர்த்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை என்று ஈடுபடுவது கோரிக்கையையும் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதாகும். என்பதன் காரணமாக அதனை நாங்கள் செய்வதில்லை.

வேண்டுமானால், அவர்களோடெல்லாம் சேர்ந்து செய்ய வேண்டும் என்று கருத்துக் கொண்டவர்கள் அது சரியென்று வாதாடட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்வோம்.

சிலர், ‘சிறிய அமைப்பு, அடக்குமுறை வந்திருக்கிறது. போய் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது’ என்ற கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், இது அப்படி கேட்கப்பட்ட ஆதரவு அல்ல. இது செயலுக்கான ஒரு அறைகூவல். அதற்காக அழைத்திருக்கிறோம். அடக்குமுறைக்கு அஞ்சி ஆதரவு தேடுகிறார்கள் என்று சொல்வது, ம.க.இ.க. வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டுமென்று போராடுபவர்கள் மீது ஜெ. அரசு இப்படிப்பட்ட ஒரு அடக்குமுறையை செலுத்துகிறதே, அந்த உண்மையின் பால் கடுகளவும் அக்கறை இல்லாத அவர்களுடைய மனோபாவத்தைத்தான் காட்டுகிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் புறக்கணிப்பு முழக்கத்தை வைத்திருக்கின்ற மக்கள் அதிகாரம், அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக தேர்தல் கட்சிகளிடம் போய் ஆதரவு கேட்பது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை அமைப்புகளும் இருக்கின்றன. டாஸ்மாக்கை மூடுவது என்ற ஒரு கோரிக்கையின் மீதான கூட்டு நடவடிக்கைக்காகத்தான் தேர்தல் அரசியல் கட்சிகளை அணுகியிருக்கிறோம்.

மற்றபடி அவர்கள் வந்தால் டாஸ்மாக்கை மூடுவார்கள், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யார் ஒருவருக்காகவும் ஓட்டு கேட்கப்போவதில்லை. நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத்தான் பேசப் போகிறோம், பேசுவோம். இது யாரிடம் ஆதரவு கேட்கிறோமோ அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். ஆர்ப்பாட்டத்தில் இதுவரை கலந்து கொண்ட அந்தக் கட்சிகள் அனைவருக்கும் தெரியும்.

இது போலி ஜனநாயகம் என்பது மட்டுமல்ல, சொல்லிக்கொள்கிற ஜனநாயகம், ஜனநாயகம் என்கிற அமைப்பில் உள்ள நிறுவனங்கள், அவர்களே சொல்கிற சட்டங்கள், மரபுகள், விதிமுறைகள், நெறிகள் இவை எதையும் கடைப்பிடிக்காமல் தோற்று விட்டன, திவாலாகி விட்டன, காலாவதியாகி விட்டன என்பதைத்தான் மக்கள் அதிகாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள்தான் எல்லா குற்றங்களிலும் முன்வரிசையில் இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலையோ, ஸ்ரீரங்கம் தேர்தலையோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாக் கட்சிகளையும் தேர்தல் புறக்கணிப்பை நோக்கித் தள்ளியது யார், ம.க.இ.க-வா தள்ளியது? புரட்சித் தலைவிதான் தள்ளினார். அப்படி ஒரு “புரட்சி” நடந்து கொண்டிருக்கிறது.

“ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது. இங்கே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும், அது உடனடி கோரிக்கையாக இருக்கிறது” என்பதுதான் மக்கள் அதிகாரம் அமைப்பினுடைய நோக்கம்.

டாஸ்மாக்கை மூடுவது கூட கீழிருந்து மக்கள் அதிகாரத்தின் துணை கொண்டு, வலிமை கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம் கூறுவது. அதற்குத் துணையாகத்தான் இந்தத் தேர்தல் கட்சிகள் இங்கே அழைக்கப்படுகிறார்களே அன்றி, அதற்கு மாற்றாக அல்ல. மக்கள் அதிகாரத்துக்கு அவர்களை உட்படுத்துவது என்பதுதான் இந்த கூட்டு நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சி.

இப்போது கேள்வி கேட்பவர்கள் மீது ஒரு கேள்வி. இதை எதிர் விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது இந்த டாஸ்மாக் விசயத்தையே எடுத்துக் கொள்வோமே. இப்படித் தீர்ப்புகள் வழங்குபவர்கள் அதற்கு மேல் செயல்பூர்வமாக செய்தது என்ன?

யாரை நம்பத்தகாதவர்கள், நம்பத்தகாத கட்சிகள் என்று தீர்ப்பு வழங்குகிறார்களோ? அந்தக் கட்சியைச் சேர்ந்த கீழ்மட்டத் தொண்டர்கள் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அ.தி.மு.க. தொண்டன் உள்ளிட்டு. ஆற்றுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். எங்களோடு சிறைக்கு வந்திருக்கிறார்கள், அந்தத் தொண்டனை நம்புவதா, அல்லது எதையும் செய்யாமல் எதற்கும் வராமல், எல்லோர் மீதும் தீர்ப்பளிப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதா? யார் தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சமூக மாற்றத்தை சாதிப்பார்கள். தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். எந்த சமூக மாற்றமும் வேண்டாம். கூடாது, இருப்பதே நன்றாக இருக்கிறது. இந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று கருதுகின்ற பிரிவினர்தான் “எல்லோரும் திருடன் சார் யாரும் நம்பாதீங்க” என்று பேசுபவர்கள். இந்த கூட்டு நடவடிக்கைக்கு போனோம் என்பதனால் அல்ல, பொதுவிலேயே அரசியல் விமர்சனங்களை ம.க.இ.க. எழுதும் போது, பல பேர் சொல்வதுண்டு, “ ஆமா, இப்போ இப்படி பேசுவீங்க. நாளைக்கு அதிகாரத்துக்கு நீங்க வந்தபிறகு இல்ல தெரியும்” என்பார்கள்.

சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள். பீச் தாம்பரம் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது பேச்சு கொடுத்துப் பாருங்கள். “இவ்ளோ வெள்ளம் வந்திருக்குதே, அம்மா கவனிக்கலையே, கொடநாட்டுல போயி உட்கார்ந்துகிட்டாங்க” அப்படினு பேச்சை ஆரம்பிங்க. “என்ன சார் செய்ய முடியும்? மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூணு நாள்ல பெஞ்சிருச்சே” என்று ஜெயலலிதாவின் வசனத்தைப் பேசுவார்கள். அதை மறுத்து உரிய ஆதாரங்களை அடுக்கத் தொடங்கினால், ஒரு ஸ்டெப் தாண்டுவார்கள். “ஆமாமா ஒண்ணும் சரியில்லை சார். தி.மு.க.காரன் காலத்திலேயே இது ஆரம்பமாயிடுச்சி” என்று தி.மு.க ஆட்சிகால முறைகேடுகள் சிலவற்றை சொல்வார்கள். “நீங்கள் சொல்வது போல் அல்ல” என்று வாதாடினால், “எவன் சார் யோக்கியன்? இந்த காலத்தில யாரை நம்ப முடியுது? எல்லாம் திருட்டுப்பயலுக” என்று சொல்லி தங்களது உரையை முடித்துக் கொள்வார்கள்.

இப்படி எல்லோரும் திருடர்கள் என்று தீர்ப்பளிப்பவர்கள் மிகப்பெரிய ஒழுக்கவாதிகளைப் போல தோற்றமளித்தாலும், அந்தத் தீர்ப்பே மிகவும் ஒழுக்கக் கேடானத் தீர்ப்பு. எல்லோரும் சமம். எல்லோரும் திருடன் என்று கூறுவதும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் அது ஒரு மிகப் பெரிய தந்திரம் – நரித்தனம்.

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு இல்லையா? இல்லையென்றுதான் பலரும் பேசுகிறார்கள். இப்போ தாத்ரி கொலை நடந்திருக்கிறது. கல்புர்கி கொலை நடந்திருக்கிறது. பன்சாரே கொலை நடந்திருக்கிறது. அடுக்கடுக்காக, அறிவுத்துறையினர் மீது தாக்குதல் நடக்கிறது. இதை பற்றிய அ.தி.மு.க.வின் கருத்தென்ன என்று யாராவது கேட்டதுண்டா? எந்த ஊடகமாவது ஏன் கருத்து சொல்லவில்லை என்று அவர்களை மடக்கியதுண்டா? அப்படி கருத்து சொல்லாமலிருப்பதே பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாடென்று என்று யாருக்கும் புரிவதில்லையா? நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றதற்கு அம்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தத்தை யாரும் கேள்விக்குள்ளாக்காமலேயே

தி.மு.க.வும்., அ.தி.மு.க.வும் சமம் என்று பேசுகிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கருவறை நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கை இருக்கிறது. தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம் தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா? போயஸ் தோட்டம் போகட்டுமா?

போயஸ் தோட்டம் என்ன செய்தது? தில்லைக்கோயிலை தீட்சிதர் வசம் திரும்ப பிடுங்கி ஒப்படைத்தது. தி.மு.க. எவ்வளவு ஊசலாடும் கட்சியாக இருந்தாலும் தமிழ்பாடும் போராட்டம் நடத்தி ஒரு எல்லைக்கு வந்தபிறகு, தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறது. அந்தக்கோயிலை மேற்கொள்கிற நடவடிக்கையை அது மேற்கொள்கிறது. ஜெயலலிதா அரசு அதைப் பிடுங்கி தீட்சிதர்கள் வசம் வழங்கியது. இதில் வேறுபாடே இல்லையா? பார்ப்பன பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிராக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் – பேசுகின்ற கட்சிக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லையென்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? யார் கலப்பு மணத்தை எதிர்க்கிறார்களோ, யார் தமிழை எதிர்க்கிறார்களோ, யார் சாதிப் பாகுபாட்டை பராமரிக்க விரும்புகிறார்களோ அவர்கள்தான் வேறுபாடு இல்லையென்று சொல்ல முடியும். அவர்கள் நிச்சயமாக முகமூடியணிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள். முகமூடி அணிந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள்.

பா.ம.க. கட்சி இருக்கிறது. எல்லாக் கட்சியும் பெரும்பான்மை சாதி யாரோ அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள். இது தெரிந்த விசயம்தான். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ, ஒரு கொங்கு கட்சியோ, என்ன செய்கிறார்கள்? சாதிவெறியை அடித்தளமாகக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டி அதன் அடிப்படையிலே அந்தக் கட்சியைக் கட்டுகிறார்கள். இதுவும் சாதியை தேர்தல் அரசியலுக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகின்ற தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளும் சமமாகிவிடுமா?

தவ்ஹீத் ஜமாஅத் எங்களை விட தீவிரமாக மதுவிலக்கு பற்றிப் பேசும். அதன்காரணமாக அந்த மதவெறிக் கட்சியோட சேர்ந்துகொள்ள முடியுமா? மதவெறி என்பது மதுவெறியை விடக் கொடியது இல்லையா? பா.ஜ.க. மதுவிலக்குனு பேசுகிறது. அது எத்தகைய கொடூரமான பாசிசக்கட்சி. பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒண்ணுதான் என்று பேச முடியுமா? இந்த வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் எல்லோர் மீதும் சேற்றை வாரி இரைப்பதும் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு. அல்லது பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகும்.

இந்த சாராய சாம்ராஜ்யத்தை அ.தி.மு.க. கட்டிக் காப்பாற்றுகிறது. தமிழ்ச்சமூகத்தை நாசமாக்கி சீரழிக்கின்ற ஒரு சதிவேலை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவதற்காக நிற்பவர்கள் அரசியல் கட்சியாக இருக்கட்டும். அரசியல் கட்சி சாராத சமூக இயக்கங்களாக இருக்கட்டும். அவர்கள் எத்தனை பலவீனமானவர்களாக இருந்தாலும், எத்தனை உறுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் போக வேண்டும். டாஸ்மாக்கை மூடுவது என்ற இந்த இலக்கை எப்பாடுபட்டேனும் அடைய வேண்டுமென்பதற்காகத்தான் இவர்களையெல்லாம் அணுகியிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் அரசியல் கட்சிகளை தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் அணுகலாமா என்ற கேள்வியை எழுப்புகின்றவர்கள் டாஸ்மாக் என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, அதை மூடுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா, இதைவிடச் சிறந்த இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் கருத்தை உங்கள் தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.

நன்றி.

– முற்றும்.

இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?

0

sanitary-workers-flood-relief-assistance (4)சென்னை நகரத்ததில் ஓடும் அடையாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளின் ஒவ்வொரு தெருக்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பை என்பதைவிட சாக்கடை கழிவுகள் என்று கூறுவது தான் பொருத்தம். பாத்திரங்கள், கட்டில், நாற்காலி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தும் சிதிலமடைந்து சாக்கடை கலந்திருக்கிறது. நீர் வடியத் துவங்கிய சில நாட்களுக்கு பின்னர் மக்கள் அவற்றை வீதிகளில் விசிறியெறிந்துவிட்டார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் சாக்கடை கழிவுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் இவற்றை உடனடியாக  அகற்றாவிட்டால் மழை வெள்ளத்தை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொள்ளை நோய்கள் ஏற்படும். இன்றைய அத்தியாவசிய பணி இதுதான். தூய்மை இந்தியா (சுவச் பாரத்) என்று ஆரவாரம் கிளப்பி சீன் போட்ட குலக்கொழுந்துகள் எவரையும் சாலையில் காணவில்லை. வழக்கம் போல உழைக்கும் மக்கள் தான் அதை அகற்றி வருகிறார்கள்.

ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு சென்றோம்.

அருகிலிருக்கும் சூரப்பள்ளம் பகுதி தெருக்களில் இருந்து எடுத்துவரப்படும் கழிவுகள் கே.கே நகர் நெசப்பாக்கம் சாலை சந்திப்பில் குவிக்கப்படுகின்றன. ஒரு சிறு தெருவிலிருது மட்டும் 3 ஜே.சி.பி எந்திரங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கழிவுகளை வாரிக் குவித்தும் குப்பைகள் குறையவில்லை. கழிவுகளின் அளவு  அப்பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளுக்கே அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல தெருக்கள், பகுதிகளில் மலையென குவிந்திருக்கும் குப்பைகள் எடுத்தவாறு தொழிலாளிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கவில்லை, குளிக்கவில்லை, மாற்று துணியில்லை, வீட்டுக்கும் போகவில்லை. முதல் இரண்டு நாட்கள் வெள்ளத்தோடு போராட்டம். கடந்த மூன்று நாட்கள் குப்பையோடு குப்பையாக போராட்டம். இவர்கள் வீடும் வெள்ளத்தில் மூழ்கியவைதான். குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டிருக்கின்றன. குடும்பம் பற்றிய கவலையும் அவர்களை வாட்டத்தான் செய்கிறது. குப்பையோடு வேலை செய்வதால் காலில் சேற்றுப்புண், தொண்டையில் புண் என அவர்களால் பேசக்கூட முடியவில்லை. சென்னையின் சுகாராதாரத்தை நிலைநாட்டுவதற்காக அளவேதுமில்லாம் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

sanitary-workers-flood-relief-assistance (6)ஒரே நாளில் பல டன் கழிவுகளை கையாளுகிறார்கள். கையில் பாதுகாப்புறை இல்லை, மூக்கில் பாதுகாப்பு கவசம் இல்லை, குறைந்தபட்சம் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் வேலை செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இது குறித்து அக்கறைபடவில்லையா என்று கேட்டால் சிரித்துக்கொண்டே “அவர்கள் காரில் வருவார்கள், போவார்கள் இதற்கா அக்கறைப்பட போகிறார்கள்” என்கிறார்கள். “இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே அவர்கள் குழந்தைகளா” என்று கேட்டபடியே வேலையில் மூழ்குகிறார்கள்.

இந்த தொழிலாளிகளில் சென்னையை சேர்ந்தவர்களும் வெளியூரில் இருந்து வந்தவர்களும் அடக்கம். இனி அவர்கள் பேசுவதைக் கேட்போம்.

“நாங்களாவது குறைந்த பட்சம் குப்பை அள்ளுவதற்கான பொருட்கள், வண்டிகள் வைத்திருக்கிறோம் ஆனால் ஏரியா ஜனங்க இது எதுவுமில்லாமல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் மாற்றுத் துணி கூட இல்லாமல் வெற்றுடம்போடு கையில் கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள். இதை பார்க்கும் போது எங்களது கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.”

எங்களை கார்ப்பரேசன் ஊழியர்களாக பலர் நினைக்கிறார்கள் அது உண்மையில்லை. நாங்கள் (Chennai municipal Solid Waste Private limited என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்) ஒப்பந்த கூலிகள். எங்களைப் போல சென்னை முழுவதும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கார்ப்பரேசன் ஊழியர்கள் நியமனம் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டld. காண்டிராக்ட் ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறோம்.

குப்பை வாரும் எங்களுக்கு மாதம் 5,500 தான் சம்பளம். சூப்பர்வைசருக்கு 8000. மழை வெள்ளத்தால் எங்கள் வீடுகளும் தண்ணியில் போய்விட்டது. மனைவி குழந்தைகள் நிவாரண முகாமில் தான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் நாங்களும் வேறு வேறு இல்லை.

sanitary-workers-flood-relief-assistance (11)இந்த வேலையால் வரும் தோல் நோய்கள் எங்கள் குழந்தைகளுக்கும் பரவுகிறது. என்ன செய்வது ஏதாவது மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். இதை நிறுவனமோ அதிகாரிகளோ கண்டுகொள்வது கிடையாது. வேலையை முடித்துவிட்டுத்தான் பொது ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், அதற்கு நேரம் எங்கிருக்கிறது?

குப்பை வண்டிகள் போக முடியாத குறுகலான சந்துகளில் போகிறோம். அங்கிருந்து லோடு எடுத்துவர 2 மணிநேரம் ஆகிறது. குப்பை அள்ளும் போதும், கொட்டும் போது அடிக்கும் நெடியை  எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தாங்க முடியவில்லை.  வரலாறு காணாத பிரச்சனை என்கிறார்கள் ஆனால் குப்பை லாரிகளை ஒழுங்குபடுத்த ஒரு போலீஸ் கூட இல்லை. நாங்களே வண்டி ஓட்டி நாங்களே டிராபிக் கிளியர் பண்ணிக்கிறோம். அமைச்சர்கள் வண்டி எல்லாம் அப்படியா போகிறது.  தாங்களாகவா டிராபிக் கிளியர் பண்ணுகிறார்கள்?

சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை. அதிகாரிகள் தினமும் குளித்து மணக்க மணக்க வருகிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஊரிலும் மழை என்கிறார்கள். குடும்பத்திடம் பேசினீர்களா என்று கூட யாரும் கவலைப்படவில்லை.

இங்கு வேலை செய்வதை வருத்தாமாக சொல்லவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை பற்றி தான் கூறுகிறோம்.

ஒரு லாரி முழுவதும் குப்பைகளை நிறைத்து வெளியே வருதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதிகாரிகள் இதை கவனித்து ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தினால் அரை மணி நேரமாக குறைக்கலாம். அதற்கான முயற்சியை யாரும் எடுக்கவில்லை. மலை போல வேலைகளை இருக்கும் போது அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். அவர்களின் பெயரை கூறினால் எங்களுக்கு தான் பிரச்சனை.”sanitary-workers-flood-relief-assistance (25)

கழிவுநீர் வண்டி ஓட்டுபவர்கள்: முருகன், குமார், வேலன்:

“3 கி.மீ சுற்றுவட்டாரத்திலிருந்து கழிவுநீரை எடுத்துவருகிறோம்.  ஒரு  லோடுக்கு 700 ரூபாய் கார்ப்பரேசன் தருகிறது. இதில் பெட்ரோல் , வண்டி வாடகை, டிரைவர் கூலி எல்லாம் அடங்கும். கணக்கு காண்பிப்பதற்காக தான் இதை எடுக்க சொல்கிறார்கள். பெரும்பாலான தண்ணீர் அங்கேயே தான் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து வருவது நடக்கது.”

உழைப்புக்கும் ஓய்வில்ல. உழைக்கும் மக்களுக்கும் ஓய்வில்லை. குப்பை எடுக்கும் தொழிலாளிகள் பொதுவில் நாற்றத்தை சகித்துக் கொள்வதற்கு மது அருந்துவது உண்டு. ஆனால் கிடைக்கும் மிகக்குறைவான சம்பளத்தில் அதற்கும் வழியில்லை. அதனால் பான்பராக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து, பத்து ரூபாய் செலவில் ஓரிரு மணி நேரங்கள் பாக்கோடு சகித்துக் கொள்கிறார்கள்.

இயல்பு வாழ்க்கையே இவர்களுக்கு எந்திரம் போலத்தான் என்பதால் இத்தகைய நிவாரண பணிகளில் இவர்களை சிறப்பாக யாரும் கவனிக்க தேவையே இல்லை. துப்புரவு பணி தொழிலாளிகளின் கழிவு அகற்றும் பணிக்காக தமிழக அரசு ரூ.2000 சிறப்பு ஊதியம் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த ஊதியம் மிகக் குறைவு என்பதோடு அது எதுவும் இவர்களின் சூழலை மாற்றிவிடாது. இது போக அன்றாடம் ரூ.300 கூலிக்கு புதிய தொழிலாளிகளை தினக்கூலியாக தமிழக அரசு எடுத்து வருகிறது.

சாக்கடை அள்ளும் ஒரு தொழிலாளிக்கு அவர் இழக்கப் போகும் உடல் நலத்தையும் கணக்கிட்டு குறைந்த பட்சம்    ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். காரிலும், விமானத்திலும் கால் தரையில் பாவாமல் வெள்ளத்தை பார்க்கும் ராணிகளின் ஆட்சியில் தரையில் தத்தளிக்கும் மக்களை வெள்ளம்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை.

படங்களை பெரியதாக பார்க்க அழுத்தவும்:

–    வினவு செய்தியாளர்கள்

புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

4

அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

apscடிசம்பர் 2015-ல் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2015 (NEP)-ன் வரைவு மீது கருத்து கூறுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992-ல் புதிய தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாக திருத்தியமைக்கப்பட்டது. அது போல, டிசம்பர் 2015-ல் நடைபெறவுள்ள WTO அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தகக் கழகத்தின் – சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (WTO-GATS) அமல்படுத்துவதற்கான தயாரிப்பே புதிய கல்விக் கொள்கை 2015.

WTO-GATS-ன் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நாட்டை மறுகாலனியாக்கும் அதே நேரம், இந்துத்துவ சக்திகள் அந்தக் குடையின் கீழ் சாதிய கட்டமைப்பையும், பார்ப்பனீய ஆதிக்கத்தையும் மறுஉருவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின் வரைவுக் குழுவின் 4 உறுப்பினர்களில் கல்வித்துறையைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கோட்பாட்டுவாதியான தீனாநாத் பத்ரா! இதுவே இந்த அரசின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலகமயம் கொள்கைகளின் விளைவாக விவசாயம் பெருமளவு அழிக்கப்பட்டது; லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஐ.டி ஊழியர்களின் வேலை பறிக்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கிட்டத்தட்ட இல்லாமல் அழித்தொழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. உற்பத்தித் துறைகளான விவசாயம், தொழில் இரண்டையும் சீர்குலைத்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் கொடும் பார்வை சேவைத் துறையை நோக்கி திரும்பியிருக்கிறது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, தண்ணீர், நிலம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவை தேசங்கடந்த தொழிற் கழகங்களின் கட்டற்ற கொள்ளைக்கு வழிவகுக்கும் வகையில் விற்பனை சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்திய அரசு WTO-GATS-ல் கையெழுத்திட்ட பிறகு, கொள்கைகள், சட்டங்கள், நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் கல்வித்துறை நிறுவனங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே புதிய கல்விக் கொள்கை 2015. தனியார் மய, தாராளமய, உலகமய பொருளாதாரக் கொள்கைகள் 1990-களில் ஆட்சியில் இருந்த காங்கிரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டன. இப்போதைய மோடி அரசு அதை மேலும் தீவிரமாக அமல்படுத்தி இந்தியாவை மறுகாலனியாக்கும் நடவடிக்கையை வேகமாக செய்து முடிக்க உறுதியாக உள்ளது. “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச அரசாட்சி” என்ற மோடியின் முழக்கம், WTO-GATS-ன் நோக்கத்தை எதிரொலிக்கிறது.

‘தற்போதைய கல்விக் கட்டமைப்பு, முதலாளித்துவ உழைப்புச் சந்தைக்கு தேவையான திறன் கொண்ட மனித வளத்தை தயாரித்து வழங்க திறனற்று, தோல்வியடைந்து விட்டது’ என்றும் ‘கட்டமைப்புரீதியான சிந்தனை குறைபாடுகள் இருப்பதாகவும்’ புதிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. நாட்டின் கல்வித் துறை நிறுவனங்களை படிப்படியாக அழிப்பதற்கான முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையே புதிய கல்விக் கொள்கை. பயிற்றுவித்தல், பாடத் திட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி ஒருபடித்தாக்குவதன் மூலம் கல்வித்துறை தொடர்பாக சட்டமியற்றி நிர்வாகம் செய்யும் மாநிலங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவது; பல்கலைக் கழக சிண்டிகேட்டுகள், செனட்டுகளின் அதிகாரத்தை ரத்து செய்வது; கல்லூரிகளை பல்கலைக்கழகங்களிலிருந்து பிரித்து அவற்றை திறன் சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது; நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; திறமையானவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும், தேவைப்படுபவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும் மட்டுமே கட்டணமற்ற கல்வி; வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தாராளமயமாக்கப்படுதல், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அவற்றுக்கு அனுமதி; தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN அல்லது “இந்தியாவில் கற்பித்தல்” மூலம் இறக்குமதி செய்தல்; இணைய சேமிப்பு கிடங்குகளான MOOC [பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்] போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதல்; நம் நாட்டு ஆசிரியர்களின் வேலை உரிமையை பறித்து அவர்களை “அருகிப் போன இனங்களாக” வெளியில் தள்ளுதல்; கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India” மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல்; இவற்றின் மூலம் மாணவர்கள் கல்வித் துறையின் பயனாளிகளாக இருப்பது மாற்றப்பட்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பயனாளிகளாக மாற்றப்படுவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

‘கட்டுப்பாடில்லாமல் கிடைப்பது’, ‘பொதுவில் கிடைப்பது’, ‘யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், விரும்பும் போதெல்லாம் அறிவை பெற்றுக் கொள்ளலாம்’ என்ற புரிதலின் அடிப்படையில் மாணவர்கள் MOOC-ஐ நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கல்வித்துறை கட்டமைப்பும் ஒழித்துக் கட்டப்பட்டு Coursera போன்ற கார்ப்பரேட்டு MOOC-கள் கொள்ளை அடிப்பதற்கான “சீர்குலைக்கும் கண்டுபிடிப்பே” MOOC. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வியை 8-ம் வகுப்பிலிருந்தே திறன் சார்ந்ததாக மாற்றி பெரும்பான்மை உழைக்கும் வர்க்கக் குழந்தைகளை முறைசாரா தொழிலாளிகளாக மாற்றுவதும் அடங்கும். “மேக் இன் இந்தியா” திட்டம் இத்தகைய முறைசாரா தொழிலாளர்கள் சுரண்டப்படுவதன் மீதுதான் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இறுதியாக, கல்வியை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு உட்படுத்துவது, நம் நாட்டு தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் ஏற்ப கல்வியை முறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மத்திய மாநில அரசுகள் இழப்பதற்கு இட்டுச் செல்லும்.

புதிய கல்விக் கொள்கை GATS-க்கு சேவை செய்வதோடு, மாநிலங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாகவும் உள்ளது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது அல்லது நீர்த்துப் போகச் செய்வதோடு, இளம் குழந்தை பருவத்திலிருந்தே கல்வியை பணி சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் பாரம்பரிய சாதி அடிப்படையிலான வேலை என்ற முறை கூட கொண்டு வரப்படலாம். மாணவிகளின் பாதுகாப்புக்காக CCTV கண்காணிப்பை பரிந்துரைப்பது, டி.டி.எச் மூலம் வீட்டிலேயே கல்வி அளிப்பது இவற்றின் மூலம் பெண்களை மறுபடியும் ஆணாதிக்க சமூக ஆதிக்கத்தில் தள்ளுவது; இந்தியவியல் (இண்டாலஜி) ஆய்வுகள், கலாச்சார சகிப்புத்தன்மை என்ற பெயரில் செத்துப் போன மொழிகளுக்கான துறைகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பனிய கலாச்சாரத்தை வளர்ப்பது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை திணிப்பது போன்றவையும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அமல்படுத்தப்படவுள்ளன.

GATS நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிப்பதோடு மட்டுமின்றி நீதித்துறை அதிகாரத்தை கார்ப்பரேட்டுகள் மட்டுமே வழக்குத் தொடரக் கூடிய வர்த்தக டிரிப்யூன்களிடம் மாற்றுகிறது. இந்த டிரிப்யூன்களில் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. கார்ப்பரேட்டுகளின் உரிமைகள் புனிதமாக்கப்படுகின்றன; குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அடிமைமுறை மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்த வகையில், புதிய கல்விக் கொள்கை நமது நாட்டின் மீது வேயப்படும் சிலந்தி வலை.

அது GATS-ன் மொழியில் மனிதர்களை “மனித மூலதனம்” என்றும், அறிவை “அறிவு பொருளாதாரம்” என்றும் குறிப்பிடுகிறது. தேசங்கடந்த மூலதனத்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படும் உலக வர்த்தகக் கழகம், சர்வதேச சமூக-பொருளாதார-அரசியல் மற்றும் கலாச்சார கட்டமைப்புக்கான உலக அளவிலான காவலர், புரவலர் மற்றும் விதிவகுக்கும் அமைப்பாக சட்டப்படியே செயல்படும். நம் நாட்டில் ஏற்கனவே ஆட்சி புரியும் பார்ப்பனிய ஆதிக்கம் அதன் அமலாக்கத்தை மேற்பார்வை இடும்.

இது நமது நாட்டின் இறையாண்மைக்கு அடிக்கப்படும் சாவுமணி. விவசாயத்தையும், தொழில்துறையையும் நிர்மூலமாக்கி விட்டு, இப்போது கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளை WTO-GATS-க்கிணங்க மாற்றியமைப்பது மூலம் இந்திய அரசு ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்காவுக்கு சேவை செய்து இந்தியாவின் மறுகாலனியாக்கம் வேகமாக இறுகுவதை உறுதி செய்கிறது.

NET­-அல்லாத உதவித் தொகை ரத்து, நடத்தை விதிகள் தொடர்பான லிங்டோ கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துதல், வளாகத்தில் குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை, ஐ.ஐ.டி, என்.ஐ.டி கட்டண அதிகரிப்பு, ஆசிரியர் பதவிகளை UGC-FRP, DST-INSPIRE மூலம் மத்தியத்துவப்படுத்துவது, சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வுக் கழகங்களையும், ஐ.ஐ.டிகளையும் சுயநிதி அமைப்புகளாக மாற்றுவது, ஆராய்ச்சிக்கு நிதி வெட்டு, FTII, ICHR, NCERT போன்றவற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் கையாட்களை நியமிப்பது போன்றவை பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே ஆகும்.

bhagat-singhகட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், ஏகாதிபத்தியங்களுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும் சேவை செய்யும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதை ரத்து செய்ய நாம் உறுதி கொள்வோம். மக்களுக்கான, நம் நாட்டுக்கு ஏற்ற, தேச பக்த கல்விக் கொள்கையை கட்டமைக்க போராடுவோம்.

WTO-GATS-ஐ துரத்தியடிப்போம்! மறுகாலனியாக்கத்தை தோற்கடிப்போம்!

மறுகாலனியாக்கம் : உலக வர்த்தகக் கழகம் – காட்ஸ் உத்தரவின் பேரிலான புதிய கல்விக் கொள்கையின் மூலம் வேகமாக இறுகும் சுருக்கு

டில்லி பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பேராசிரியர், அகில இந்திய கல்வி பெறும் உரிமைக்கான மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் முனைவர் அனில் சடகோபால் உரை

நாள் : 30-11-2015 @ 5:15 pm
இடம் : மத்திய பேருரை அரங்கு (CLT), சென்னை ஐ.ஐ.டி

தகவல்
அம்பேத்கார் – பெரியார் படிப்பு வட்டம்,
ஐ.ஐ.டி, சென்னை

(மழைக் கால பாதிப்புகளால் இந்தக் கட்டுரை மற்றும் அழைப்பிதழை உரிய நேரத்தில் வெளியிடவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம். கூட்டம் குறித்த செய்தி கூடிய விரைவில் வெளியிடுகிறோம்)

New Education Policy 2015 (NEP), which will be unleashed in Dec. 2015, is being drafted by the Government of India (GoI) on which opinions have been sought. In 1986, National Policy on Education was framed and amended in the wake of implementing neo–liberal policies in 1992. Now, NEP 2015 is a move of GoI towards the implementation of WTO-GATS [World Trade Organisation – General Agreement on Trade in Services] dictates before its ministerial meeting in Dec 2015.. While recolonializing our nation by implementing the WTO-GATS dictate, under that umbrella, Hindutva forces are planning to reestablish caste system and revive the brahminic hegemony. The composition of the 4 member NEP drafting committee itself is revealing in terms of what the government’s agenda: three members are bureaucrats and only one is an academician – who is none other than RSS and hindutva ideologue Dinanath Batra!

The implementation of LPG [Liberalization, Privatization, Globalization] policy and GATT [General Agreement on Tariffs and Trade], for the last twenty five years, has had grave consequences of massive destruction of agriculture, lakhs of farmer suicides, firing of millions of workers, government employees and IT employees, almost elimination of small and medium scale industries, plundering and destruction of natural resources. After destroying productive sectors like agriculture and industry, now the imperialists’ evil eye has turned to the service sector. Essentials of human existence like food, water, land, education, health, sanitation, transportation and climate are now turned into fully tradable commodities under WTO-GATS for the unrestricted loot by MNCs and TNCs. By signing on WTO-GATS, it will be mandatory for GoI to restructure the system through legislative and judiciary measures by drafting policies and passing Bills and Acts accordingly. The New Education Policy 2015 is one measure in this game. Though, the LPG is introduced by the Congress around 90s, and had strived for it’s implementation, the Modi Govt is willing to complete the recolonization phase of INDIA as fast as possible. To the core, Modi’s “Minimum government Maximum governance” imitate the interest of WTO-GATS!

NEP themes mention that the existing educational establishment is incapable of and has failed in supplying skilled human capital to the labour market and complain about its inadequacy in systematic thinking. NEP is a move towards demolishing the academic establishment of the nation phase by phase. Phases will start with grabbing the power of the states to legislate and administer education through the unification and centralization of pedagogy and curriculum; dissolving the power of syndicates/senates and disaffiliating colleges from Universities, turning them into skill instruction based community colleges; stopping fund allocation and dissolving the UGC; free education only for 1 % for the so called meritorious and 1 % needy; liberalization and deregulation of foreign educational institutions, allowing them to grant degrees in India; importing subject experts from the industry and foreign academia through GIAN or ‘Teach in India’ for content generation for online repositories like MOOCs [Massive Open Online Courses] and trashing the job security of local teachers and gradually pushing them out as ‘an endangered species’; digitization of education and networking of institutes through ‘Digital India’, where students are no longer stake holders in education, but foreign universities, multi-national companies, corporates and private industries are (Though, students rush to MOOCs with an idea that it is ‘open’ and a public property which anyone can access ‘at anytime’, ‘from anywhere’, and ‘acquire knowledge as if they wish’ – similar to ‘water’, a decade later, the whole education establishment will be scrapped down, as MOOCs is a ‘disruptive innovation’ for the corporate like Coursera to loot); vocationalisation of school education from 8th std in the name of skill development, pushing majority of the children of toiling masses into informal labour. We need to ask the question whether ‘Make in India’ will ride on the back of exploitation of such unorganized informal labour. Finally it must be said that subjecting education to international trade rules would lead to the loss of authority of the national and the state governments to regulate education according to the nation’s needs and priorities.

Along with serving GATS, the NEP also seems to be a move towards grabbing state governments’ power; abolition or dilution of reservation; and perhaps even a reintroduction of traditional caste based occupation through vocationalisation of education from early childhood; suggesting to institutions to ensure safety of girl students through CCTV surveillance or to provide education through DTH at home, thus throwing girls back to the dark rooms of patriarchy; establishing Indology studies and departments for dead languages to promote brahmanical culture in the name of ‘cultural tolerance’ and imposing Sanskrit throughout India.

GATS removes the legislative authority of parliament and means a surrender of judicial power to trade tribunals, in which only corporations are permitted to sue. Workers, students, environmental and advocacy groups and labour unions are blocked from seeking redress in the proposed tribunals. The rights of corporations become sacrosanct. The rights of citizens are abolished. Re-establishing ‘slavery’ all over again. In this context, the New Education Policy is nothing but the spider’s web knitted over our nation as it terms human beings as ‘human capital’ and knowledge as ‘knowledge economy’ as mentioned in GATS. Perhaps WTO, controlled and directed by the trans-national capital and the Super Power – US, can legitimately be the policeman, guardian and rule maker of the international socio-economic-political and cultural system, which is locally supervised by existing brahminic hegemony.

It is the death knell for the sovereignty of our country. By demolishing agriculture, labour and services like education, health and restructuring it in accordance with WTO-GATS, does the government of India want to serve the lone super power, the US, and aid in a more rapid closing of the recolonisation circle in India? Scrapping of non-NET fellowship, implementation Lyngdoh committee recommendations and code of conduct, UGC’s circular on safety and security in campus and especially girl students, increase of fee in IITs and NITs, contractualization of teaching positions through UGC-FRP and DST-INSPIRE, self-financing of CSIR Labs and IITs, fund cut for R&D, appointment of RSS lackeys in FTII, ICHR, NCERT etc. are tip of the iceberg.

In the condition of systemic crisis, our resolve must be to trash the NEP which serves the interests of imperialists and Hindutva forces and let us strive to construct a new policy on education which is people oriented, indigenous and patriotic.

Kick out WTO-GATS! Defeat recolonization!

Recolonization of India: Circle is closing Faster through New-Education Policy dictated by WTO-GATS! – Talk by Dr. ANIL SADGOPAL
Ret Professor, Delhi university, Member of the AIFRTE Presidium

Date : 30-11-2015 @ 5:15 pm, Venue: CLT

Ambedkar-Periyar Study Circle
(An independent student body recognized by IITM)

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

5
aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி

கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.

கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். இதை இசுலாமிய மதவெறியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், தூய இசுலாமிய விழுமியங்களின் படி வாழாத ஆமிர் ஒரு பெயர் தாங்கி முசுலீம் என்பது அவர்களது தீர்ப்பு.

aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

இப்படியிருக்க, ஆமீர் கான் ஒன்றும் இந்து பார்ப்பனிய தேசியத்தின் மனசாட்சியை அச்சுறுத்தும் ஆளுமை அல்ல. சொல்லப் போனால் இந்து பார்ப்பனிய தேசியத்தின் பாதந்தாங்கும் கருத்துக்கள் அவரிடம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.’ரங் தே பசந்தியில்’ இருந்து ‘சத்ய மேவ ஜெயதே’ வரையிலான அவரது கடந்த கால திரைக்கதைத் தெரிவுகளில் இருந்தே இதை புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் இந்தியாவில் பிறப்பால் வாழும் பணக்கார – பாலிவுட் – தாராளவாத முஸ்லீம்கள் கூட இந்துமதவெறியின் பொதுப்புத்தி கட்டமைத்திருக்கும் வெறுப்புணர்வின் அடிப்படையில் பார்க்கப்படுகிறார்கள். இதனால் வெளியேற்றம் – அச்சம் குறித்து ஆமீர்கான் பேசியிருப்பது யதார்த்தமான உண்மை.

இந்தப் பின்னணியில் இருந்து அவர் சொன்னதாக (உண்மையில் அவர் சொல்லவில்லை ) சொல்லப்படும் இந்த வெளியேற்றக் கருத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களை கவனிக்கலாம்.

முதலில், ஆமிர் கானின் ”கருத்தை” முன்வைத்து அகில இந்திய ஆங்கில ஊடங்களில் ‘விவாதங்கள்’ நடக்கின்றன; இரண்டாவதாக, பாரதிய ஜனதா ஆமிர் கானின் கருத்திற்குப் பின்னுள்ள காங்கிரஸ் சதியைக் ‘கண்டுபிடிக்கிறது’; மூன்றாவதாக, சமூக இணையதளங்களில் கூலிக்கு மாரடிக்கும் மோடி பக்தர்கள் களமிரங்கி ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லி கூவுகின்றனர்; நான்காவதாக, இந்துத்துவ கும்பலின் ‘அதிதீவிர’ பிரிவினர் ஆமிர்கானின் கொடும்பாவிகளைக் கொளுத்தி செய்தியில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். ஐந்தாவதாக திரைத்துறை மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த நக்கிப்பிழைக்கும் சில ஜந்துகள் இந்தியா போன்ற ஒரு நாடு என்பதால் தானே ஆமிர் கான் பி.கே போன்ற படத்தில் நடிக்க முடிந்தது என்று இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு சான்றளிக்கின்றனர் – இறுதியில் ஆமிர் கானின் சுய விளக்கம்!
நானும் ரவுடி தாண்டா என்கிற வடிவேலுவின் அறிய தத்துவ தோசையை அப்படியே திருப்பிப் போட்டு “நாங்களும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தாண்டா” என்பதை நிரூபிக்க இந்துத்துவ கும்பல் கையாண்ட சகிப்புத்தன்மை மிக்க கொடும்பாவி கொளுத்துதல், பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுதல், முசுலீம் நடிகர்களை பாம்புகள் என்று இழிவு படுத்துவது இன்னபிற நடவடிக்கைகளை உலகமே எரிச்சலோடு பார்க்கிறது. அரசர் அம்மணக்கட்டையாக நிற்பதை யாராவது சொல்லித் தொலைத்திருக்கலாம்.

protest-against-aamir-khan_2
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

மேற்படி விவாதங்களின் ஊடே, ஆமிர் கான் ஒரு முசுலீமே அல்ல, அவரது கருத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சில சமூக வலைத்தள வஹாபி வெறியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடங்களுக்கெல்லாம் தவறாமல் ஆஜராகும் காக்கி டவுசர்கள் மேற்படி கருத்தையும், கருத்து தெரிவித்தவர்களையும் ஆதரிக்கின்றனர். பக்தியிலேயே ஆக கழிசடையான மோடி பக்தி எந்தளவுக்கு மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆமிர் கானை வஹாபிகள் கண்டிப்பதன் அடிப்படை என்னவென்பதைக் கூட இவர்கள் கவனிக்கவில்லை. இறுதியில் இசுலாமிய மதவெறியர்களும் இந்துமதவெறியர்களும் ஓரணியில் திரள்கின்றனர். இசுலாமிய மக்களோடு இந்த இரண்டு வெறியர்களின் அச்சுறுத்தலில் காலம் தள்ளுகிறார்கள்.

அடுத்து ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்? பாகிஸ்தானில் கருத்து சுதந்திரத்திற்கு கடுமையான தடை இருப்பதால் அங்கே போனால் இந்தியாவின் அருமையை உணர்ந்து கொள்வார்கள் என்பது இவர்களின் தர்க்கம். அதாவது, ஒப்பிடுவதற்குக் கூட தன்னிலும் மோசமானவனைக் காட்டுவது. “அந்தக் குடிகாரப்பய டெய்லி மூணு ஃபுல்லு அடிப்பான்; நானெல்லாம் ஒன்றரை ஃபுல்லு தானாக்கும்; அதானால் நான் எப்போதும் ஸ்டெடி தான்” என்ற இந்தக் கோட்பாட்டின் காப்புரிமைக்குச் சொந்தக்காரர்கள் டாஸ்மாக் வாசலில் மலந்து கிடக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

இன்னொரு பக்கம் ஆமிர்கானை முன்வைத்து “சகிப்புத்தன்மை” குறித்து கேள்வி எழுப்புவதே இந்தியாவுக்கு எதிரானது –
பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்கிற கோணத்தில் இந்துத்துவ கும்பல் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மற்றும் மோடி அரசின் மேல் விமரிசனங்கள் வைப்பதையே இந்தியாவுக்கு எதிரானது என்கிறார்கள். இந்த தர்க்கத்தின் படி, இசுலாமியர்கள் கொல்லப்பட்டாலோ, தலித்துகள் ஒடுக்கப்பட்டாலோ, பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டாலோ, போலிச் சாமியார்கள் நீலப்படங்களில் தோன்றி அருளினாலோ, இன்னும் விலைவாசி உயர்வு, பொதுத்துறையை தாரை வார்ப்பது, லஞ்சம் ஊழல் என்று நாட்டில் காவி பயங்கரவாதிகள் பங்கேற்கும் எந்தக் காரியத்தையும் எவரும் விமரிசிக்க கூடாது – விமர்சித்தால் அது இந்தியாவுக்கு எதிரான சதியாகி விடும்.

ஆமிர் கானின் மனைவி சொல்லி அதிர்ச்சியடைந்ததாக ஆமிர் கான் தெரிவித்திருப்பது தேசதுரோகம் என்று சொல்லி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தேச துரோக வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு வழக்கறிஞர். அதிர்ச்சியடைந்த ஆமிர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

protest-against-aamir-khan_1
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

ஊடகங்களை எப்படிக் கையாள்வது, கருத்துருவாக்கம் செய்வது எப்படி என்பதில் எல்லாம் தேர்ந்தவர்களான இந்துத்துவ கும்பல் அடுத்த சுற்றுக்குத் தயாராகி இருக்கும். இந்த சுற்றில் தேசபக்திக்கும் தேச துரோகத்திற்கும் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துள்ளதால் அடுத்த சுற்றில் தம்மை விமர்சிக்கும் ஜனநாயக குரல்களை தேசதுரோகிகள் என்கிற எல்லைக்குள் தள்ள தயாராக இருக்கிறார்கள். பாசிஸ்டுகளின் பார்வையில் கேள்வி கேட்பதே தேசதுரோகம் என்றால் – நாம் தேசத்தைக் காக்க தேசத்துரோகிகள் ஆவதைத் தவிற வேறு வழியில்லை.

இறுதியாக இந்தப் பிரச்சினை “சகிப்புத் தன்மை”யின் பேரில் நடந்தாலும் உண்மையில் இந்துமதவெறியர்களே சகிப்புத் தன்மை அற்று இருப்பதால் அவர்களது கருத்துக்கள் சேம் சைடு கோலாகவே இருக்கிறது. வீட்டில் இறைச்சி வைத்திருந்ததற்காக ஒரு முசுலீம் கொல்லப்படும் நாட்டில் முசுலீம் மக்கள் அச்சத்துடன் வாழாமல் ஆனந்தமாகவா வாழ முடியும்?

ஆமீர் கானின் மனைவி கிரண் பிறப்பால் இந்துவென்றாலும் அவர்களது வாரிசுகள் முசுலீம் மத அடையாளத்துடன் பார்க்கப்படும்
என்பதாலேயே அவரது வெளியேற்றம் குறித்த அச்சம் வெளிப்படுகிறது. சிங்கள இனவெறியின் பிடியில் பீதியுற்று புலம் பெயரும் ஈழத்தமிழர்களைப் போல இந்திய முசுலீம்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடி மக்கள் அனைவரும் பார்ப்பன இந்துமதவெறியின் கொடுங்கரங்களில் இருந்து வெளியேறும் விருப்பத்தைக் கொண்டிருந்தால் அதில் என்ன தவறு?

இப்படி ஒருநாட்டின் குடிமக்கள் வெளியேறுவதோ, வெளியேறும் விருப்பத்தை கொண்டிருப்பதோ அந்த நாட்டில் வெளிறுபவர்களை வெறியோடு வதைக்கும் மதவெறியர்களின் குற்றம் மட்டுமே. அந்த வெறியர்களை வாயளவில் கூட தண்டிக்காமல் அவர்களோடு சுமூகமாக வாழும் இதர குடிமக்கள்தான் இந்த வெளியேற்றம் குறித்து வெட்கப்படவேண்டும், குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்.

மாறாக குற்றவாளிகளே நீதிபதிகளாவும், தேசபக்தர்களாகவும் உலா வந்தால் எதைக் கொண்ட அடிப்பது?

– தமிழரசன்

நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு

0

கடலூர்

டலூர் மாவட்டம் நெய்வேலி என்றாலே நினைவுக்கு வருவது மின்சாரம் தான். NLC என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாகும்.. இது மினி ரத்னா என்று அழைக்கப்படுகிறது. வருடத்திற்கு 24 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது; இதன் மின்சார உற்பத்தி நிறுவு திறன் 2490 மெகா வாட். இதில் 1167 மெகா வாட் தமிழகத்திலும் எஞ்சியவை அண்டை மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

cuddalore-flood-relief-1இந்த பிரமாண்டத்திற்கு பின் பல ஆயிரம் தொழிலாளர்கள், மக்களின் வியர்வையும், கண்ணீரும் தான் உள்ளது. உதாரணமாக நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறிப்பாக 1955, 1990, 2015 ஆகிய ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக கிராம மக்களை வெளியேற்றி நிலக்கரி வெட்டி எடுக்கின்றனர். அதன் அடிப்படையில் 3 வது கட்டமாக கங்கைக்கொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி நெய்வேலி ஆர்ச.சி கேட் அருகில் மாற்று இடம் கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

cuddalore-flood-relief-5அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்பொழுது வசித்து வரும் பகுதி தான் A பிளாக் மாற்று குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் கங்கைகொண்டான், சிரக்குப்பம், வானதாயபுரம், கல்லுக்குழி, மாதவராயபுரம், அத்திப்பட்டு, அம்பேத்கர் நகர், கத்தாழை, கரிவட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஒன்பது கிராம மக்கள் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் பள்ளிக்கூடம் இல்லை, சாலை வசதிகள் கிடையாது, பல்வேறு குடிசை வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை, ஏதேனும் அவசரத்தேவை என்றால் கூட ஐந்து கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். தற்பொழுது தனித்து விடப்பட்ட தீவு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசித்து வருகின்றனர்.

cuddalore-flood-relief-2இங்கு வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை. இப்பகுதியில் சிலோன் குவாட்டர்ஸ் என்ற இடத்தில் மட்டும் ஒரு சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. “அங்கு சென்றால் எங்களுக்கு மருத்துவம் பார்ப்பது இல்லை. உங்கள் ஊருக்கு என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள். இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருந்த மக்களை கடந்த மாதம் பெய்த கனமழையால் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே என்.எல்.சி நீரை வெளியேற்றியதன் மூலம் அந்தத் தண்ணீர் முத்தாண்டி குப்பம் வழியாக சென்று பல கிராமங்களை அழித்து வருகின்றது.

cuddalore-flood-relief-4மாற்று குடியிருப்பில் வசிக்கும் தினக்கூலி, சுரங்க வேலை என்று செய்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தற்போது வேலைக்கு போவதற்கு கூட வழி இல்லாமல் உள்ளனர்.

இதுவரை அரசின் நிவாரணமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட அதிகாரிகள் செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், அரசின் அலட்சியத்தையும், NLC-யின் துரோகத்தையும் கண்டித்து “A பிளாக்” மாற்று குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி சுவரொட்டி ஒட்டிய பின்னர் தான் அரசு உறுப்புகளும், என்.எல்.சி நிர்வாகமும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் கவனத்தை திரும்பியது. இவை அனைத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பு தோழர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பிறகு நடைபெற்றவை.

cuddalore-flood-relief-6கடந்த இரண்டு நாட்களாக NLC நிர்வாகம் உணவு வழங்கி வருகிறது. அதுவும் ஒரு வீட்டிற்கு ஒரு கப் தான். அதையே அனைவரும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு வாய்க்கால் வெட்டி விடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும் உணவு உள்ளீட்ட பொருட்களை வழங்கின.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புதுச்சேரி சார்பாக, அரிசி, துவரம் பருப்பு, புளி, சேமியா, மிளகாய், என்ணெய் உள்ளிட்ட 12 வகையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசு நினைத்தால் மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் செய்ய முடியும். ஆனால், செய்யவில்லை. செய்யவும் மறுக்கிறது. செய்பவர்களையும் தடுத்து நிறுத்துவதோடு மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. எனவே இந்த அரசிடம் நிவாரணம் எதிர்பார்க்க முடியாது. இது செயலிழந்து விட்டது. இனி இந்த அரசு என்பது மக்களுக்கானது அல்ல. இதனை வீழ்த்தி விட்டு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது……

தகவல்:

வினவு செய்தியாளர்,
கடலூர் மாவட்டம்.

சென்னை PRPC

flood-relief-chennai-prpc-5சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்களில் பெய்த  தொடர் மழையால் மக்கள் தங்கள் வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்து தவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுக, சிறுக சேமித்த குறைந்த பட்ச செல்வங்கள் உட்பட அனைத்தையும் தொலைத்துவிட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாக பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகம் எப்பொழுதும் போல தன் குணம் மாறாமல் அலட்சியமாக செயல்படுகிறது. மக்களின் இழப்புகளை, இறப்புகளை குறைத்து காண்பிப்பதில் தனது மொத்த கவனத்தையும் செலுத்துகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் பகுதி இளைஞர்களும், மக்களும் தான் எல்லா வகைகளிலும் உதவுகிறார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் தம்மால் இயன்றதை விடவும் அதிகம் சேகரித்து துன்பபடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தவிக்கும் மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியது.  கெல்லீஸ் பகுதியில் உள்ள லாக்மா நகரில் தரைத் தளத்தில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் இடுப்புக்கு மேலே வெள்ள நீரும் சாக்கடை நீரும் கலந்து உள்ளே புகுந்ததால், தங்கள் வீடுகளை விட்டு, அருகில் உள்ள ஒரு சர்ச்சில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்து பேசியதில், உணவும் நீரும் பலரும் விநியோகிக்கிறார்கள்.  போர்வை, பாய் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தார்கள்.

தருகிற போர்வை பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோஆப் டெக்ஸ்-ல் கொள்முதல் செய்தோம்.  நிவாரண பொருட்கள் தருபவர்கள் பகுதியில் முன்னாடி இருக்கும் சில வீடுகளுக்கு கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். பலருக்கு கிடைப்பதில்லை என நம்மிடம் தெரிவித்ததின் அடிப்படையில்,  நமது அமைப்பு தோழர்கள் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து டோக்கனை விநியோகித்தார்கள். அப்படி விநியோகிக்கும் பொழுது தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். கையில் உள்ள போர்வைகள் போதாது என்பதை உணர்ந்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக அக்கறை கொண்ட நபர்கள் சிலரும் உதவ நிறைய போர்வைகள் வாங்கினோம்.

நேற்று அடாத மழையிலும் டோக்கன் தரப்பட்டவர்களுக்கும், மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கும் போர்வைகளை முறையாக விநியோகித்தோம்.

ஒரு அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஒரு காவலாளி தனக்கும் ஒரு போர்வை வேண்டும் என கோரினார்.  ”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். தருகிறோம்.  நாங்கள் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள்” என்றோம். “நீங்கள் செய்வது தான் சரி! நான் கேட்டது தான் தவறு” என்றார் ஒரு தொழிலாளிக்கே உள்ள நேர்மையுடன்!

நன்கொடை தந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இன்னும் சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டிருக்கின்றனர். நாம் இன்னொரு பகுதிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
தொடர்பு கொள்ள : 9094666320

தஞ்சை நிவாரண முகாம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

7

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இணையம் மற்றும் ஊடகங்களில் இவை குறித்த செய்திகள் ஏராளம் வந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் ஆறுதலும் கிடைப்பது சாத்தியமல்ல. அதை அரசு நினைத்தால் மட்டுமே ஒருங்கிணைத்து முழு ஆற்றலுடன் செய்ய முடியும். ஆனால் அரசு எந்திரமோ அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதற்கே ஆள் இல்லாமல் திணறுகிறது. மக்கள் தன்னார்வத்துடன் கொண்டு வரும் பொருட்களை அ.தி.மு.க ரவுடிக் கூட்டம் பறித்துக் கொள்கிறது. மறுப்பவரை சில இடங்களில் தாக்கியும் வருகிறது.

ஜெயலலிதா அரசை நேரடியாக கண்டிக்கத் துப்பற்ற ஊடகங்களோ இதை வெறும் மனிதாபிமான நடவடிக்கையாக மட்டும் சுருக்கி பரபரப்பை தக்க வைக்க முயல்கின்றன. இறுதியில் மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலம் தள்ளுகிறார்கள். வேறு சில ஓட்டுக் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெயர்பலகை அமைப்புகளோ தமது பெயர் வருவதை உறுதி செய்து கொண்டு பொருட்களை அளிக்கின்றன.

உண்மையான சேவை நோக்கத்துடன் வரும் இளைஞர்களோ அ.தி.மு.க மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்து பா.ம.க கட்சிகளின் அடாவடித்தனத்தால் வேதனையுடன் ஊர் திரும்புகின்றனர். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நிவாரண நடவடிக்கைகளின் அவலத்தை புரிந்து கொள்ளலாம். மேலும் மக்களுக்குத் தேவை என்ன, எவற்றை அளிக்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், சுகாதார வழிகாட்டல்கள் என்று எவையும் எங்கேயும் இல்லை.

பெருமளவு நிவாரணப் பொருட்கள் கூட முக்கிய சாலைகளின் சந்தை போல அவ்வப்போது அங்கேயே முடிந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அளிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில அமைப்பினர், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாகவே மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளில் நீரை  வெளியேற்றுவது, சுத்தம் செய்வது, வீடுகளை பழுது பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மட்டும் பொருட்கள், உணவு வகைகளை அளித்தும் வருகின்றனர். சென்னையிலும் இந்த பணிகள் பெரும் சிரமத்தில் நடந்து வருகின்றது.

நிவாரணப் பொருட்கள் அளிக்க விரும்புவோர், பணிகளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உதவிகளை எமது தோழர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய இயலும்.

கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு லாரி பார்சல் மற்றும் டிராவல்ஸ் மூலம் அளிப்பது முக்கியம். நேரடியாக வரும் பொருட்களை அ.தி.மு.க மற்றும் பா.ம.கவினர் பறிமுதல் செய்வார்கள். போலிசும் அதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை. லாரி பார்சல் மூலம் வரும் பொருட்களை எமது தோழர்கள் குறிப்பான இடங்களுக்கு சென்று சேர்ப்பார்கள். எமது தோழர்களிடம் மேற்கண்ட கட்சியினர் வாலாட்டுவது இல்லை. சென்னைக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விட்டு வரலாம்.

கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:

தோழர் து. பாலு,
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர்,
தொலைபேசி எண்: 8110815963

தோழர் பழனிச்சாமி,
எண்: 5, காட்டாமணிக்குப்பம் வீதி,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி – 3,
தொலைபேசி 9597789801

சென்னையில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

தோழர் வெற்றில்வேல் செழியன்,
மக்கள் அதிகாரம் சென்னை வட்டார ஒருங்கிணைப்பாளர்,
தொலைபேசி எண்: 9176801656

கீழே கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.

 

 

 

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

10

“நன்றி தெரிவிப்பது ஒரு பிரச்சனையா” என்று கேட்டால் சில நேரங்களில் அதுவும் கூட ஒரு பிரச்சனை ஆகத்தான் செய்கிறது. டாஸ்மாக் எதிர்ப்பு பாடலுக்காக கைது செய்யப்பட்ட தோழர் கோவன் பிணையில் விடுதலையாகி வெளிவந்த பிறகு அவரும் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்களும் தங்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.

kovan-kalaignar-meet-1நன்றி கூறியது மட்டுமல்ல “டாஸ்மாக்கை மூடு” என்றமுழக்கத்தில் கருத்தொற்றுமை கொண்ட இந்த எல்லா கட்சித் தலைவர்களையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கோரிக்கைக்காக ஒரு அணியில் திரளுமாறு ஒரு அறைகூவல் விடுத்தார்கள். இந்த வேண்டுகோள் ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன்னமே எழுத்துவடிவில் வினவு தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நடவடிக்கை.

இருந்த போதிலும் என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்றெல்லாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் யாரையுமே சந்திக்காமல் தி.மு.க தலைவரை மட்டும்தான் சந்தித்தார்கள் என்பது போலவும், அல்லது தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கும் போது “வளைந்தார்”, “குனிந்தார்”, “மண்டியிட்டார்” என்றும் வக்கிரமாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அவதூறு செய்யும் ஒரு விதமான உள்ளக் கிளர்ச்சியோடும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட முதியவரிடம் பேசும் போது அவருக்கு என்ன கேட்கிறது, கேட்கவில்லை என்பதெல்லாம் கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும். இது சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய விசயம். இவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பதை எல்லாம் நான் தள்ளி விடுகிறேன். அவை பதில் சொல்ல தகுதியற்றவை என்பது எனது கருத்து.

பிரச்சனை என்னவென்றால், தேர்தல் புறக்கணிப்பு அரசியலை இத்தனை காலமாக மேற்கொண்டு வருகின்ற நீங்கள், ஓட்டுக்கட்சிகள் என்று உங்களால் அழைக்கப்படும் கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களை அழைப்பதும் எப்படி சரி, அது கொள்கை பிறழ்ந்த செயல் ஆகாதா என்பதுதான் இவ்வாறு விமர்சனம் வைப்பவர்களின் மையமான கேள்வி.

டாஸ்மாக் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். “மூடு டாஸ்மாக்கை” என்ற இந்த முழக்கத்துக்கு பாட்டு எழுதி கோவன் கைது செய்யப்பட்டார். மக்கள் அதிகாரம், ம.க.இ.க என்ற இந்த அமைப்புகள் இந்த கோரிக்கையை எழுப்புவதற்கு முன்பே பலரும் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள். அதற்காக போராடியிருக்கிறார்கள். நடைபயணம் சென்றிருக்கிறார்கள், பிரச்சாரம் செய்திருக்கிறார்கள், மனு கொடுத்திருக்கிறார்கள். பல்வேறு வடிவங்களில் இதற்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடைசியாக, சசிபெருமாள் இதற்காக போராடி மரணமடைந்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் எல்லாம் “டாஸ்மாக்கை மூட வேண்டும்” என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள்; அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரிந்தார்கள். ஓரணியில் திரள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. சசிபெருமாளின் மரணத்திற்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்ற பா.ம.கவும் பங்கேற்கவில்லை, தி.மு.கவும் பங்கேற்கவில்லை. அதற்கு பல காரணங்களைச் சொன்னார்கள். சசிபெருமாளின் மரணத்திற்குப் பிறகு, இந்தக் கோரிக்கை எழுச்சி பெற்று ஒரு மக்கள் கோரிக்கையாக வந்து கொண்டிருந்த தருணத்தில், ‘ஆகஸ்ட் 15-ம் தேதி முதலமைச்சர் மூடுவதாக அறிவிப்பு செய்வார்’ என்றெல்லாம் ஊகம் வெளியிடும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், அ.தி.மு.க அரசு திட்டமிட்டே அந்தப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தை கிளப்பியது.

அதன் பின்னால் டாஸ்மாக் பிரச்சனை நீர்த்து போக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அது ஓய்ந்து விட்டது. பிறகு இப்போது கோவன் கைது விவகாரம். கோவன் கைதை எல்லோரும் கண்டித்த போதும், அவரது விடுதலையை எல்லோரும் கோரிய போதிலும் மதுவிலக்கு கோரிக்கையில் இவர்கள் ஒன்றுபடவில்லை என்பது யதார்த்தம். கோவன் விடுதலையாகி வந்து என்ன செய்ய வேண்டும்? இன்னொரு பாட்டு எழுதி, இன்னொரு முறை பாடி, இன்னொரு முறை கைதானால், அவர்கள் இன்னொரு முறை கண்டிக்க வேண்டுமா? அல்லது இந்த பாடலுக்காக அவருக்கு விருது கொடுக்கப் போகிறார்களா? அதற்குத்தான் அவர் பாடினாரா?

கோவனும், மக்கள் அதிகாரம் தோழர்களும் விடுதலைக்கு நன்றி தெரிவிக்கப் போனார்கள் என்று பார்ப்பது தவறு. அதுவல்ல விசயம் “என்னுடைய கைதை கண்டிப்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், உங்கள் தேர்தல் அரசியலுக்கு வெளியில் ஏன் ஓரணியில் நின்று போராடக் கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடு இருக்கிறது. நாங்கள் தேர்தல் அரசியலை புறக்கணிப்பவர்கள். நீங்கள் தேர்தல் அரசியலுக்கு உள்ளே இருப்பவர்கள். ஆனால், இந்த விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு நேர்மையானது எனில், அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் ஒரு அணியில் திரளக் கூடாது” என்று கேட்கத்தான் கோவனும் மக்கள் அதிகாரம் தோழர்களும் அங்கு போனார்கள்.

அவ்வாறு கோரிக்கை வைத்தது தவறா, அது அரசியல் வழியிலிருந்து தவறியதா என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதிவெறி, மதவெறி, கனிமவளக்கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க்கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவையனைத்தையும் விட,தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்கின்ற, எந்தப் பிரச்சினைக்கும் போராட இயலாத பதர்களாக தமிழ் மக்களை இளைஞர்களை மாற்றுகின்ற பிரச்சினை டாஸ்மாக் பிரச்சினை.

இயற்கை வளங்கள் கொள்ளை போவது உடனடிப் பிரச்சினையாக இருந்தாலும், மனித வளம் இவ்வாறு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவில்லையென்றால், தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ ம.க.இ.க.வோ யாரும் எந்த அரசியலுக்காகவும் மக்களைத் திரட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும். ஒரு பேரழிவை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை.

வினவு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அம்மாவின் மரண தேசம் என்ற ஆவணப்படத்தில் மேலப்பாளையூர் கிராமம் பற்றி ஒரு காட்சி வருகிறது. வயல்வெளியின் நடுவுல ஒரு டாஸ்மாக் கடை. அது சுற்றியுள்ள 7,8 கிராமங்களுக்குப் பொதுவானது. அந்த டாஸ்மாக் கடையினுடைய ஒருநாள் வியாபாரம் ஒரு லட்சம் ரூபாய். இந்த ஏழெட்டு கிராமங்களிலுள்ள மளிகைக் கடையினுடைய வியாபாரத்தை கூட்டினால் அதில் கால் பங்கு கூட வராது.

ஏழெட்டு கிராமங்களின் வருவாயை இது தின்கிறது. இது அந்த குடும்பங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? அந்த கிராமப்புற பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இதெல்லாம் மிகச்சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய விசயங்கள். அன்றாடம் நாளேட்டைத் திருப்பினால் சிறுவர்கள் குடிக்கிறார்கள்., பள்ளி மாணவிகள் திருச்செங்கோட்டில் குடிக்கிறார்கள் என்று செய்தி வராத நாளில்லை. டாஸ்மாக் தொடர்பான குற்றங்கள் குறித்து செய்தி வராத நாளில்லை. இந்த ஆய்வு தமிழ் இந்து நாளேட்டில் வந்திருக்கிறது. ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது. வசந்திதேவியின் ஆய்வு இருக்கிறது. ஆயிரம் ஆய்வறிக்கைகள் இருக்கின்றன.

நிதிஷ் குமார் மூடுவதாக அறிவித்திருக்கிறார். அங்கே ஆண்டு வருமானம் 4,000 கோடி என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28,000 கோடி. இதனுடைய பரிமாணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதை ஒழிக்கவில்லையென்றால், இந்த சமூகம் எதற்கும் பயனற்றதாக ஆகும். இதனை சீனாவில் நடந்த அபினி யுத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் சீனம் இருந்த போது, அந்த காலனியாதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்திற்கே மக்கள் வரக்கூடாது என்பதற்காக, இங்கே கஞ்சாவைப் பயிரிட்டு இந்தியாவின் தொழில்தந்தை என்று அறியப்படும் டாடா குடும்பத்தின் மூலம் அதை சீனத்துக்கு ஏற்றுமதி செய்தார்கள். சீன மக்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கினார்கள். அந்த கஞ்சா போதையிலிருந்து சீன சமுகத்தை விடுவித்த பிறகுதான், அபினி யுத்தம் நடத்தி கஞ்சா விற்பனையை நிறுத்திய பிறகுதான் காலனியாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டுமென்ற உணர்வுக்கே சீன மக்கட் சமூகத்தை அங்கே கொண்டு வர முடிந்தது. அதற்கு பிறகுதான் சீனப்புரட்சி நடக்கிறது..

ஆகையால், டாஸ்மாக் என்பது அத்தகையதொரு பிரச்சினை. இது சுனாமியைப் போன்றதொரு பேரழிவு. வழக்கமாக சொல்வார்கள். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நாம் தமிழ்நாட்டின் பொதுக்கோரிக்கை என்ற அடிப்படையிலே காவிரிப் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டும். முல்லைப் பெரியாறுக்காக ஒன்று திரளவேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டுமென்றெல்லாம் சொல்வார்கள். அவற்றையெல்லாம் விட மிக முக்கியமான பிரச்சினை இது. அப்படி ஒன்றுதிரள வேண்டுமென்று கோருவதற்குத்தான் போனோம். இது பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் பிரச்சினை அல்ல. “மூடு டாஸ்மாக்கை” என்பது இலக்கு வைத்து முடிக்கக்கூடிய கோரிக்கை.

அப்படி முடிப்பதற்கு இப்படியொரு அணிசேர்க்கை தேவை. பாடலிலே நீங்கள் கேட்டிருக்கலாம். “கடையை மூட எதுக்கு ஓட்டு? போடு ஒரு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு” என்று பாட்டு வரி வருகிறது. “என்னை முதல்வராக்கு நாங்கள் கடையை மூடுகிறோம் என்று கூறுகிறார்கள். நம் தெருவில் இருக்கிற கடையை மூடுவதற்கு யாரையும் முதல்வராக்கத் தேவையில்லை. நாம் நினைத்தால் மூடலாம். மக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கலெக்டரோ, அதிகாரிகளோ, போலீசோ யார் ? நாம் கடை வேண்டாம் என்றால், நாம் முடிவு செய்ய வேண்டும்” என்றுதான் நாங்கள் மக்களைத் திரட்டுகிறோம். அப்படி நடத்தப்பட்ட போராட்டங்களில் 5,6 இடங்களில் கடைகள் தகர்க்கப்பட்டன. கைது செய்யப்பட்டார்கள். கடை மூடப்பட்டது. அதற்காக கொடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

இது, ம.க.இ.க. மட்டுமோ, மக்கள் அதிகாரம் மட்டுமோ நடத்திய போராட்டம் அல்ல. அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில், டைஃபி., ஜனநாயக மாதர்சங்கம், எஸ்.எப்.ஐ., இன்னும் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் கட்சி சாராத அமைப்புகள் பலர் இதற்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், எங்களை மட்டும் தனிமைப்படுத்தி கூடுதலாகத் தாக்குதல் தொடுத்தது அரசு.

யார் இதற்காக போர்க்குணமாக, விடாப்பிடியாக போராடுவர்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ, யார் இந்த அரசு அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ அவர்களை ஒடுக்கினால், மற்றவர்களை அச்சுறுத்தி தலையெடுக்க விடாமல் செய்துவிடலாம் என்பதற்காக விசேசமாக அடக்குமுறையைத் தொடுத்தார்கள். அதை எதிர்கொண்டோம்.

ஒருவேளை, டாஸ்மாக் எதிர்ப்புக் கோரிக்கையிலே கருத்து ஒற்றுமை கொண்ட மற்றக் கட்சிகளை அணுகாமல் நாங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை எடுத்து செய்வது என்ற நிலை எடுத்தால் என்ன நடக்கும்? 2 காரியங்கள் நடக்கும். ஒன்று இதுபோல நசுக்கப்படுவது, தனிமைப்படுத்தப் படுவது. முன்னரே கூறியதைப்போல அது எங்களுக்கு மட்டும் ஏற்படப்போகும் பாதிப்பு அல்ல. இதைப்பார்த்து நாளைக்கு இதற்கு எதிராகப் போராடக்கூடாது என்ற அச்சம் இந்த சமூகத்தில் விதைக்கப்படும். அதுதான் அந்த தனிமைப்படுத்தப் படுவதனுடைய விளைவு.

அதனால்தான் கீழிருந்து மக்களைத் திரட்டிப் போராடுகின்ற அதே நேரத்தில் இந்தக் கோரிக்கையில் கருத்தொற்றுமை கொண்ட கட்சிகள் இயக்கங்களுடனும் மேலிருந்து ஒரு அணிசேர்க்கை அமைத்து இந்த கோரிக்கைக்குப் போராட வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக் கோரிக்கையை சாத்தியமாக்க முடியும். உடனடி சாத்தியமாக்க முடியும். என்பதனால்தான் இவர்களையெல்லாம் அணுகுகிறோம்.

ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க. அது மட்டும்தான் மூட முடியாதென்று நிற்கிறது. யார் செத்தாலும் சரி, சசிபெருமாள் இறந்ததற்குக் கூட இந்த அரசு இரக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அந்தக் குடும்பத்தினரை கைது செய்தது. இரங்கல் கூட்டம் நடத்தவிடாமல் தடுத்தது. அவ்வளவு திமிர்பிடித்து இந்த அரசு நடந்துகொள்ள முடிவதற்குக் காரணம். இதனை எதிர்ப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து கிடப்பது. உடனடிக் கோரிக்கையின் கீழ் அவர்களை ஒன்றிணைப்பது என்பதுதான் நாங்கள் எடுத்த முயற்சி.

இந்த முயற்சி தவறு என்று வைத்துக்கொள்வோம். இப்படி செய்திருக்கக் கூடாது என்றால், கடையை எப்படி மூடுவது என்று சொல்ல வேண்டும். இதைத் தவறு என்று சொல்பவர்கள், கடையை உடனே மூட வேண்டும் என்பதில், அவங்களுக்கு உடன்பாடா என்பதையும் சொல்ல வேண்டும். பிறகு கடையை மூடுவதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

நம்புகிறீர்களா? இது இந்த விமர்சனங்களுக்குள்ளே பொதிந்திருக்கிற மிக முக்கியமான ஒரு கேள்வி. தி.மு.க தொடங்கி மற்ற எல்லா கட்சிகளிலும் இந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சாராயம் சப்ளை செய்யும் நிறுவனங்கள். அல்லது கள்ளச்சாராயம் இருந்த காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் அவர்களுடைய புரவலர்களாக எல்லாக் கட்சிகளிலும் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் மதுவிலக்கை ஆதரிப்பதாக சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள். மக்கள் நம்பி ஏமாந்தால் பரவாயில்லை, நீங்கள் கூடவா நம்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த “நம்பிக்கை” என்ற விசயத்தை பொறுத்தவரைக்கும், நம்பவே முடியாத விவகாரங்கள் சில உண்டு. மதச்சார்பின்மையை அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கூறினால் அதை நம்புவதா? அல்லது தனியார்மயம் வேண்டாம், தப்பு என்று மன்மோகன் சிங் சொன்னால் அதை நம்ப முடியாது. அப்படி நம்ப முடியாதவை உண்டு. ஆனால், இந்தக் கோரிக்கையைப் பொருத்தவரை அப்படி அல்ல. இந்தக் கோரிக்கையின் வரம்பு குறுகியது.

நம்பிக்கை பற்றிய விஷயத்தை பற்றிப் பேசும் போது சமீபத்திய எடுத்துக்காட்டு ஒன்று சொல்ல வேண்டும். பீகார் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், தொடர்ந்து நீடிக்க முடியாது” என்று பேசினார். இது ஒரு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவின் தோல்விக்கு காரணமாக அமையும் என்ற அளவுக்கு அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடி இந்த ஓட்டையை மோடி அடைக்க வேண்டியதாயிற்று. அவர் அந்த இடத்தில் என்ன பேசியிருக்க வேண்டும்?

“யார் சொன்னாலும் நம்பதீர்கள், நான் சொல்கிறேன், என்னை நம்புங்கள், இட ஒதுக்கீடு நீடிக்கும்”னு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொன்னால் தன்னை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று மோடிக்கு தெரிகிறது. தான் வாக்குறுதி அளித்தாலும் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மோடி எப்படிப் பேசுகிறார்? “யார் நினைத்தாலும் இட ஒதுக்கீட்டை நீக்க முடியாது” என்கிறார். அதாவது, பெரும்பான்மை மக்களின் விருப்பம் – இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் போக முடியாது என்ற புறவயமான யதார்த்தத்தைச் சொல்லி “என்னை நம்பவில்லை என்றாலும் இந்த புறவயமான உண்மையை நம்புங்கள்” என்பதுதான் மோடி சொன்னது.

அதை இங்கே பொருத்திப் பாருங்கள். இன்றைக்கு மதுவிலக்கு கோருகின்ற கட்சிகள் எல்லாம் முதலில் இருந்தே இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்களா? மதுவிலக்குக்காக பலபேர் போராட்டம் நடத்தி, அல்லது இந்த டாஸ்மாக்கின் சீரழிவு கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து, மக்களின் வெறுப்பும் கோபமும் அதிகரித்த பிறகுதான் மதுவிலக்கு என்பதை ஒரு கோரிக்கையாக எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் வந்தால் மூடுவோம்” என்கிறார்கள்.

“துவக்கம் முதலே மதுவிலக்கை எங்களுடைய கொள்கையாக வைத்திருந்தோம்” என்று சொல்லக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்றைக்கும் கூட்டணிக்கான நிபந்தனையாக அந்தக் கொள்கையை வைத்ததில்லை. ஏன் வைத்ததில்லை? ஏனென்றால், அதை நிபந்தனையாக வைக்கும் அளவுக்கு டாஸ்மாக்கிற்கு எதிரான பொதுக்கருத்து வலிமை பெறவில்லை. மக்கள் போராட்டம் வலிமை பெறவில்லை.

இன்றைக்கு இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே “நீங்கதானே கடையை திறந்து விட்டீர்கள்” என்று குற்றச்சாட்டுக்கு தி.மு.க தலைவர் பதில் சொல்கிறார். “ஆமாம், ஒரு கட்டத்தில் திறந்தோம், இப்போ அது கட்டுக்கடங்காத பேரழிவாக மாறிவிட்டது. சமூகத்துக்கே பெரிய ஆபத்தாகி விட்டது. அதனால் நாங்கள் மூடுவது என்று முடிவு பண்ணியிருக்கிறோம்.” என்கிறார். “உங்க கட்சிக்காரர்களே வைத்திருக்கிறார்கள். பினாமி பேரில் வைத்திருக்கிறார்கள்” என்று குற்றச்சாட்டு வருகிறது. தான் சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்று அவர்களையே கொண்டு வந்து சொல்ல வைக்கிறார்.

“இவர்கள் சொல்லிவிட்டால் நீங்கள் நம்பி விடுவதா?” என்று கேட்கலாம். இவர்களை இவ்வாறு சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியது எது? இதில் அவர்களுடைய நேர்மை உணர்ச்சி எத்தனை சதவீதம், நிர்ப்பந்தம் எத்தனை சதவீதம் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. நமக்குத் தேவை ரிசல்ட் – பயன்.

ஏன் இப்படி ஒரு உத்தரவாதத்தை அவர்கள் தர வேண்டும்? மக்களுடைய பொதுக்கருத்து மற்றும் போராட்டத்தின் வலிமைதான் இதற்குக் காரணம். “அவருக்கு ஓட்டு போட்டு, அவர்கள் கொண்டு வருவார்கள் என்பதற்காக காத்திருக்க வேண்டாம். நாம் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு பூட்ட வேண்டும். அதற்கு போராட வா” என்பதுதான் மக்கள் அதிகாரம் அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம். அதில்தான் தங்கி நிற்கிறோம்.

இப்போது கட்சிகள் “ஆமாம், நாங்களும் மதுவிலக்குக் கொள்கையைத்தான் வலியுறுத்துகிறோம். இதை ஆதரிக்கிறோம்” என்று இந்தக் கட்சிகள் சொல்லும்போது, கோவன் கைதுக்கு அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடும்போது, “இதுதான் உங்கள் கோரிக்கை என்றால், பிரச்சாரம், கூட்டங்களில் வந்து பேச வாருங்கள். மக்களுக்கு அந்த உத்தரவாதம் கொடுங்கள். இதற்காக போராட்டம் நடத்துகிறோம், கலந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் அணிகளை, தொண்டர்களை ஈடுபடுத்துங்கள்.” இப்படி செய்வதன் மூலம் அவர்களை மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாக்குகிறோம். இப்படி செய்வதன் மூலம் இந்த கோரிக்கை நிறைவேறுவதை கீழிருந்து உத்தரவாதப்படுத்துகிறோம்.

ஒருவேளை வாக்கு தவறினால்? நீங்கள் நாங்கள் கேட்போம் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே கேட்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் இதில் உத்தரவாதம். கட்சிக்காரர்களை விட்டு விடுவோம். இங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை என்ற கோணத்திலிருந்து இந்த பிரச்சனையை பார்ப்பவர்கள் சட்டத்தில் இருக்கிறது, நாம் கவலை இல்லாமல் இருக்கலாம்” என்று சொல்ல முடியுமா? சாத்தியமில்லை.

தீண்டாமை ஒழிப்பு சட்டம் இருக்கிறது. அது கடுமையாக்கப்பட்ட பிறகு கூட எந்த இடத்திலும் அமல்படுத்தப் படுவதில்லை. எப்போது அமல்படுத்தப்படுகிறது? கடுமையாக போராட்டங்கள் நடந்தால் மட்டும்தான் வேண்டாவெறுப்பாக குறைந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் போடும் உரிமை இப்படிப்பட்ட அடிப்படை சிவில் உரிமைகளுக்கு தடை விதிப்பதற்குத்தான் போலீஸ் என்ற நிறுவனமே இருக்கிறது. உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்காக என்று சொல்லப்படும் அந்த நிறுவனம் அவற்றை தடுப்பதற்கு வேலை செய்கிறது. அதற்கெதிராக போராடுவதன் மூலம் மட்டும்தான் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடிகிறது.

“சட்டத்தில் சொல்லியிருக்கிறதே, அதை நம்புவோம்” என்பதால் அது நடப்பதில்லை. நீதிமன்றத்தை நம்பினால் காரியம் நடக்குமா? நடக்காது என்பதற்கு சசிபெருமாள் சமீபத்திய உதாரணம். எத்தனை டாஸ்மாக் எதிர்ப்பு தீர்ப்புகள், எதுவும் அமல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தை நம்புவது எப்படி? நீதிமன்றமும் கூட மக்கள் போராட்டம் எங்கு தீவிரமாக நடக்கிறதோ, அங்கு மட்டும்தான் அவர்கள் இறங்கி வர வேண்டியிருக்கிறது. தீர்ப்பளிக்க வேண்டியிருக்கிறது. உத்திரவாதம் என்பது எங்கே மக்கள் கோரிக்கை நிறைவேறாமல் விட மாட்டார்களோ அங்கு மட்டும்தான் இருக்கிறது.

ஆற்றுமணல் போராட்டமோ, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டமோ முடிந்தவுடன் போலீசை கொண்டு வந்து குவிக்கிறார்கள். போராட்டம் சிறிது தணிந்து விடுகிறது. அடுத்தது திரும்ப திறப்பதற்கு முயற்சி செய்கிறான். இல்ல, நாலு கடை தள்ளி புதுசா ஒரு கடை திறக்க முயற்சி பண்ணுகிறான். அதை எதிர்த்து போராடுவதற்கு எங்கே மக்கள் அணியமாக இருக்கிறார்களோ, எங்கே தயார் நிலையில் இருக்கிறார்களோ அங்கேதான் ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த முடியும், அங்கேதான் டாஸ்மாக் கடையை மூட முடிகிறது.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வந்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு என்ன உத்தரவாதம்? போலீஸ் இருக்கும் வரையில் கள்ளச் சாராயம் இருக்கும். கள்ளச்சாராயம் விற்காது என்பதை உத்தரவாதப்படுத்துவது யார்? மக்கள்தான் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டம் இல்லாமல் முடியாது. அது சாத்தியப்படாது.

அதனால்தான் “ மீட்பர்கள் யாரும் இல்லை” என்று சொல்கிறோம். நீங்கள் ம.க.இ.க-வின் மீதும், மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால், மீட்பர்களாக யாரையும் கருதிக் கொள்ளாதீர்கள். அப்படி கருதக் கூடாது. மக்கள் தங்கள் சொந்த கரங்களால் விடுதலை பெற வேண்டும், தங்கள் சொந்த கரங்களில் அதிகாரத்தை ஏந்த வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம்.

ஆகவே, இவர்களை எல்லாம் சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

– தொடரும்..

சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

3

இயற்கையின் விதிகளை புரிந்து கொள்ளுதல் அறிவியலின் சாரம். இந்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் மீதான மனித சமூகத்தின் ஆளுமை அதிகரிக்கிறது. நேர்மறையில் இது இயற்கைக்கும் அதன் நீட்சியான மனித சமூகத்திற்கும் வளர்ச்சி குறித்த வழிகளை திறக்கிறது. அந்த வளர்ச்சியே இன்றைய நவீன வாழ்க்கைக்கு அச்சாரம். இன்னொருபுறம் அந்த வளர்ச்சி ஒரு சேர மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் சமமாக பயன்படுவதில்லை. வர்க்கங்களாகவும், ஏழை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளாகவும் பிரிந்து விட்ட உலகில் இயற்கைக்கும் மனித சமூகத்திற்குமான முரண்பாடு வெறும் வளர்ச்சியையும் மட்டும் கொண்டு வருவதில்லை, அழிவையும் சேர்த்து கொண்டு வருகிறது.

சென்னை மழை வெள்ளத்திற்கு இந்தக் காரணங்கள் அனைத்தும் அடிப்படையாக இருக்கின்றன. தமிழக அரசின் அலட்சியம் தோற்றுவித்திருக்கும் பயம் மக்களிடையே இருப்பதால் கால நிலை மற்றும் மழை, வானிலை குறித்த பல்வேறு புரளிகளையும், வதந்திகளையும், அறிவியல் பூர்வமற்ற கணிப்புகளையும் நம்புகிறார்கள். வதந்திகளாகவும் பேசுகிறார்கள்.

அது குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வானிலை குறித்து நாம் சிறிது அறிய வேண்டும். சென்னை மழைக்கு காரணமாக பேசப்படும் எல் நினோ அதில் ஒன்று.

எல் நினோ என்றால் என்ன?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பகுதியில் வழக்கத்திற்கு மாறான கடற்பரப்பின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் சூடேறிய நீரோட்டம் எல் நினோ (El Nino) எனப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலின் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக உயர்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு, கடலின் நீரோட்டம், கடற்பரப்பின் காற்றுவீச்சு இவற்றைக் உள்ளடக்கிய வாக்கர் சர்குலேஷன் (Walker circulation) எனப்படும் பிரமாண்டமான சுழல்வட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சூரிய வெப்பத்தால் நீர் சூடேறி அலைகள் மற்றும் வளிமண்டல காற்றின் காரணமாக கடலின் ஆழத்திற்கு வெப்பம் பரவாமல் ElNino-outlines
மேற்பரப்பில் மட்டும் பரவுகிறது. இதனால், ஆழ்கடல் பகுதியில் நீரின் வெப்பநிலை மேற்பரப்பிலும், ஆழத்திலும் சமமாக இருப்பதில்லை என்பதோடு கடலில் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.

ஓரிடத்தில் உள்ள காற்று வெப்பத்தினால்  விரிவடைந்து எடைகுறைந்து மேலெழுகின்றது. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மற்றொரு இடத்திலிருந்து காற்று நகர்ந்து வருவதையே காற்று வீசுவதாக உணர்கிறோம், அறிகிறோம். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பமண்டலங்களில் இருந்து நிலநடுக் கோட்டை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் வியாபாரக் காற்றுக்கள் (Trade Winds) என்படுகின்றன.

இயல்பாக, மேற்கு வெப்பமண்டல பசிபிக் பகுதியானது அதாவது ஆஸ்திரேலியா – இந்தோனேசிய பகுதி, சூடான ஈரமானதெரு குறைந்த காற்றழுத்த அமைப்பாகும். வறண்ட குளிரான கிழக்கு வெப்பமண்டல பசிபிக் மண்டலம் அதாவது, தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் கடற்பகுதி, உயர் அழுத்தப் பகுதியாகும். இது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே ஒரு அழுத்த சரிவை (pressure gradient) ஏற்படுத்தி கடலின் மேற்பரப்பின் காற்றை கிழக்கிலிருந்து மேற்காக வீசச்செய்கிறது.

Walker_ElNinoமேற்கு வெப்பமண்டல பசிபிக் கடலின் சூடான நீரானது அதன் மீதான காற்றை சூடாக்குவதுடன் அதற்கு நீராவியின் மூலம் ஈரப்பதத்தை அளிக்கிறது. இக்காற்று மேலெழும்பி செல்லும் போது மேகமாக மாறுகிறது. இந்த மேகங்கள் மழையாகப் பொழிந்த பின் வறண்ட காற்று வளிமண்டல மேலடுக்கில் உயரழுத்தமாக மாறி கிழக்கே சென்று, பின் குளிர்ந்து மேற்கு நோக்கி பயணித்து சுழற்சி வட்டத்தை பூர்த்தி செய்கிறது. இச்சுழற்சியே வாக்கர் சர்குலேஷன் எனப்படுகிறது. இது உலகம் முழுமைக்கும் குறிப்பாக ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளில் மழை பொழிவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இவ்வழக்கமான நிகழ்வு தலைகீழாக மாற்றுவதே எல் நினோ – தென் திசை அலைவு (El Nino-Southern Oscillation) எனப்படுகிறது. எல் நினோவின் போது வழமைக்கு மாறாக கிழக்கு பசிபிக் வெப்பமண்டலம் சூடான அமைப்பாக மாறும். இதனால் உலகம் முழுவதும் பருவநிலையில் வழக்கத்திற்கு மாறான பெருமழை, கடும் வறட்சி போன்ற விளைவுகளை ஏற்படுகிறது. சராசரியாக இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை எல் நினோ நிகழ்வுகள் நடந்தாலும், 1982-83-ம் ஆண்டும், 1997-98-ம் ஆண்டும் நிகழ்ந்தவையே இது வரை உட்சபட்ச எல்நினோ நிகழ்வுகளாக பதிவாகியிருந்தன.

எல் நினோவைப் போலவே இந்தியப் பெருங்கடல் வெப்பமண்டலத்தில் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையில் வெப்பநிலை மாற்றமடைவது இந்தியப் பெருங்கடல் வெப்ப இருமுனை (Indian Ocean Dipole) எனப்படுகிறது.indian_ocean-dipole

எல் நினோ, இந்தியப் பெருங்கடல் வெப்ப இருநிலை, வினோதமான வானிலை, காற்று மேலடுக்கு விலக்கம் ஆகிய பல்வேறு நிகழ்வுகளின் அரிய ஒன்றினைவே கடந்த டிசம்பர் 1 மற்றும் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த அதி கனமழைக்கு காரணமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

நடப்பு 2015-ம் ஆண்டின் எல் நினோவால் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதி (தென் அமெரிக்காவின் மேற்கு கடல்) இதுவரை கடந்த எல் நினோக்களைக் காட்டிலும் மிக அதிக வெப்பமடைந்துள்ளது. மேலும், இவ்வாண்டு இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவது வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்ட ஆண்டாகவும் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான எல் நினோ நிகழ்வின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் கிழக்கில் வெப்பமாகவும், மேற்கில் குளிர்ந்த நிலையும் கொண்ட நேர்மறை வெப்ப இருமுனை (Positive Dipole) உருவானதும் கூட தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வழுவான வானிலை அழுத்த அமைப்புகளை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலடுக்கில் ஈரப்பத வெளியேற்றம் மிக வலுவாக இருக்கும் நிலைக்கு மேலடுக்கு விலக்கம் (Upper Level Divergence) என்று பெயர். மிக மிக அரிய ஒன்றிணைவாக கீழடுக்கில் காற்று ஈரப்பதம் மிக அதிகமாகப் பெற்ற அதே நேரம் மேலடுக்கு விலக்கமும் நிகழ்ந்ததும், ஒரே நாளில் 490மி.மீ வரலாறு காணாத மழை பெய்ய காரணமாக இருந்ததாக புனே வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் முகபாத்யாய தெரிவித்துள்ளார்.

எல் நினோ உருவாவதற்கான காரணங்களை சந்தேகத்திற்கிடமின்றி அறிவியியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. இன்னும் ஆய்வு செய்கிறது. ஆயினும், எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் – பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

நியூ சயிண்டிஸ்ட் (New Scientist) பத்திரிக்கையின் புள்ளி விவரங்களின் படி 1906-ம் ஆண்டிலிருந்து 2005-ம் வரையிலான காலத்தின் புவிவெப்பமடைதலுக்கு 22%-க்கும் மேல் அமெரிக்கா பங்களித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் மட்டுமே 30%-க்கும் மேற்பட்ட கரியமில வாயுவை வெளியேற்றி புவிவெப்படைதலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

புவி வெப்பமாதல், பெருங்கடல் வெப்பமாதல் பேன்றவையே இதைப் போன்ற பெருமழைக்கு எரிசக்தியாக இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் எரிக் ஹால்தஸ் (Eric Holthaus) தெரிவித்துள்ளார்.

இந்த கனமழைக்கு இத்தகைய காரணிகள் இணைந்து பங்களித்திருந்தாலும், ஏரிகளையும் அவற்றின் வடிகால்களையும் பராமரிக்காததுடன் அவற்றின் ஆக்கிரமிப்பிற்கு துணை நின்ற அரசு தான் இந்தப் பேரழிவிற்கு மிக மிக்கிய காரணம். ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்ட பிறகு, மேற்கத்திய நாடுகளின் நலனுக்கேற்ற வகையில் நமது பொருளாதாரம் சுரண்டப்படுகிறது, மாற்றப்படுகிறது. அப்படித்தால் சென்னை போன்ற ஊதிப்பெருக்கி உப்பவைக்கப்பட்ட செயற்கையான நகரங்கள் எந்த திட்டமிடலும், வசதிகளுமின்றி விரிகின்றன. சென்னை நகரம் நமது தமிழக மக்கள், தமிழக பொருளாதாரத்தின் நலனுக்காக உருவாகி வளரவில்லை என்பதே முக்கியம்.

இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திற்குமான காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஓட்டுக் கட்சிகள் முதல் அதிகார வர்க்கம் வரை கழிவை வாங்கிக் கொண்டு அழிவுக்கு துணை போகின்றனர்.

சென்னை மியாட் மருத்துவமனையில் நோயாளிகளின் படுகொலைக்கு அடையாற்றை மறித்துக் கட்டிடம் கட்டிய நிர்வாகமும், அதற்கு அனுமதியளித்த அரசுமே காரணமே அன்றி எல் நினோ அல்ல. இதே போல், பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள குளோபல் மருத்துவமனை, ஏரிகளை ஆக்கிரமித்துள்ள சத்தியபாமா, எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், கூவம் நதியை மறித்துக் கட்டப்படுள்ள ஷாப்பர்ஸ் ஸ்டாப் வணிக வளாகம்… என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ஆகவே வானிலை பற்றிய அறிவு மட்டுமே மழை வெள்ள அழிவை தடுத்து விடாது. அரசியல் குறித்த அறிவும் தேவை.

– மார்ட்டின்

மேலும் படிக்க:

 

மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்

2

டலூர் மாவட்டத்தில் கடந்த 2015 நவம்பர் 9,10 ம் தேதி அன்று மிக அதிகமாக பெய்த கனமழையையொட்டி கடலூர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. இதற்கு மூன்று முக்கிய காரணங்களை ஏற்கனவே 24.112015 அன்று வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

அதில் முக்கிய காரணம் பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்க்காகவே பெண்ணை ஆற்றின் போக்கையே திசை திருப்பி நீரை கெடிலம் ஆற்றுக்கு திருப்பி விட்டது ஒரு முக்கியமான காரணம். பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது என்று ஏற்கனவே அந்த கட்டுரையில் எழுதியுள்ளோம். விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் இடையே ஆற்றில் மணல் குவாரி அமைத்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர் மணல் கொள்ளையர்கள்.

அங்கு செயல்பட்ட அரசு மணல் குவாரி இடம் பெயர்ந்து கோலியனூருக்கும் பண்ருட்டிக்கும் இடையில் கண்டரக்கோட்டை என்ற இடத்தில் மணல் குவாரி அமைத்துள்ளனர். அடுத்த குவாரி மேல்குமாரமங்கலத்தில் அமைத்து கொண்டு இருக்கின்றனர்.

அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்கப்படுகின்றன என்ற உண்மை ஒருபுறமிருக்க மணல் கொள்ளைக்கு சாதகமாக பெண்ணையாற்றில் தண்ணீர் வர விடாமல் தடுத்து நிறுத்தும் குற்றத்தையும் செய்துள்ளார்கள்.

தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலம் நந்தி துர்கா என்ற இடத்தில் தொடங்கி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக விழுப்புரம் வந்து கடலூர் சென்று கடலில் கலக்கிறது. இதன் நீளம் 391 கிலோ மீட்டர் தூரம். இந்த பெண்ணையாறு தான் ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. கிருஷ்ணகிரியில் 38,000 ஏக்கர், தர்மபுரியில் 6250 ஏக்கர், திருவண்ணாமலையில் 17,980 ஏக்கர், விழுப்புரத்தில் 25,000 ஏக்கரும் கடலூரிலும் கணிசமான அளவில் பாசனத்திற்கான பெண்ணையாற்று நீர் பயன்படுகிறது. எனவே தான் இந்த ஐந்து மாவட்டங்களும் ஆற்று பாசன பகுதி என்று அழைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையில் தான் இந்த ஆற்றில் தண்ணீர் வருகிறது.. அதற்கு காரணம் சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும்.இந்த தென்பெண்ணையாறு சாத்தனூர் அணைக்கு மேலேயே அதாவது கிருஷ்ணகிரியிலேயே வடபெண்ணையாறு, தென்பெண்ணையாறு என்று இரண்டாக பிரிந்து விடுகிறது. எனவே சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் இவையெல்லாம் பெண்ணையாறு நீரை தான் ஆதாரமாக கொண்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்துக்கு தேவையான நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் பெண்ணையாறுதான். இந்த தென்பெண்ணையாற்றின் மூலம் ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். இதில் வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றின் போக்கையே திசை திருப்பி மணல் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

cuddalore-floods-1இதே நந்தி மலையில் இருந்து உருவாகக்கூடிய பாலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் தண்ணீர் போகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஏன் இந்த பத்தாண்டுகளில் பாலாற்றில் தண்ணீர் போகவில்லை என்றால், கர்நாடகாவில் இருந்து போகக்கூடிய ஆறுகளில் தண்ணீர் போகவில்லை என்பது ஒருபுறமிருக்க , குறிப்பாக பாலாற்றில் இருக்க கூடிய மணலை, மணல் கொள்ளையர்கள் ஏறக்குறைய சுத்தமாக கொள்ளையடித்து விட்டார்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கம் போன்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்பொழுது பாலாற்றில் மணலே இல்லை. இதே போன்ற நிலையை தான் பெண்ணையாற்றிலும் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விழுப்புரம், கடலூரில் இருக்க கூடிய ஆற்று பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே கூறியது போல ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்க பட்டிருக்கிறது.இந்த மணல் கொள்ளைக்கு அக்கம் பக்கமாக சில தவறுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆலைகள், கர்நாடகாவில் உள்ள ஆலைகள், இந்த ஆலைகளின் கழிவுகள் எல்லாம் இந்த பெண்ணையாற்றில் தான் விடப்படுகிறது. இந்த ஆலைக்கழிவுகள் நீரோடு கலந்து வரும் பொழுது இந்த ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள், அதில் பயிரிடக்கூடிய நெற்பயிர்கள், காய்கறிகள், பல விதமான விவசாய பொருட்கள் என்று அந்த பொருட்களில் எல்லாம் ஆலைககழிவுகளின் தாக்கம் உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்பொழுது கண்டரக்கோட்டை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளும்பொழுது பின்பற்ற வேண்டிய பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளது. அந்த சட்டங்களில் உள்ள எந்த பிரிவையும் இந்த மணல் கொள்ளையர்கள் கடைபிடிக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

1. முதல் விதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றவில்லை என்பது அவ்வழியாக போகும் பயணிகள், கிராம மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். 24 மணி நேரமும் தீவிரமாக மணல் அள்ளிக்கொண்டு இருக்கின்றார்கள். எவ்வளவு மணல் தான் ஒரு நாளைக்கு அள்ள வேண்டும் என்று அரசு துறையில் உள்ளவர்களிடம் கேட்டால் RTI யில் போட்டு கேளுங்கள் அல்லது வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்று சொல்வது போல் கூறுகின்றனர். நேரடியாக கொள்ளை நடப்பது கண்முன் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு பதிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவே ஒரு சட்டவிரோத செயல்.

2. ஆற்றில் மணல் அள்ளும் பொழுது இரண்டு இயந்திரம் தான் பயன்படுத்த வேண்டும், மனித உழைப்பை பயன்படுத்தி தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஒரு குவாரியில் பதினோரு அதிநவீன JCB இயந்திரங்கள் , அதுவும் cuddalore-floods-25acre-sand-quarry, மற்றொரு குவாரியில் ஆறு இயந்திரங்கள் உள்ளது. இது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது. பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள யார்டில் இந்த எந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது மழை பெய்து சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதால் மணல் அள்ள முடியவில்லை. அதனால் தான் JCB இயந்திரங்கள் அனைத்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றன. கண் முன்னாடி இவ்வளவு சாட்சியங்கள் உள்ளது. கிட்டத்தட்ட 20 JCB இயந்திரங்கள் உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை கேட்டால் எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள். இந்த மணல் கொள்ளை திட்டமிட்டு பகிரங்கமாக நடத்தப்படுகிறது. இந்த அரசு அதிகாரிகளும் அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுப்பணித்துறை , நீர்பாசனத்துறை, கனிமவளத்துறை , கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி கலக்டர் வரை அனைவரும் இதற்கு துணையாக இருக்கின்றனர் என்பதை தான் நிருபிக்கிறது.

3. மணல் அள்ளினால் நிலத்தடி நீர் பாதிக்கபடுமா? அனுமதிக்கலாம? வேண்டாமா? என்று சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த விதியே கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு அரசாங்கம் அதன் இன்னொரு உறுப்பிடம் அனுமதி வாங்குவது என்பது பித்தலாட்டம். இது மக்களை ஏமாற்றுவதற்க்கான கண்துடைப்பு நடவடிக்கை. அதாவது அரசாங்கம் எதையும் முறையாக தான் செய்யும் என்று வெள்ளைக்காரன் சொல்வது போல் “ ஒரு நாயை சுடுவதாக இருந்தால் கூட விசாரணை நடத்தி தான் சுடுவோம் என்பது போல் உள்ளது.

4. சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டால் கூட மூன்று அடி உயரம், மூன்று அடி அகலம் தான் அள்ள வேண்டும் என்று விதியில் உள்ளது. மூன்று அடி ஏன் சொல்கிறார்கள் என்றால், அள்ளப்படுள்ள மணல்கள் மழைக்காலத்தில் திரும்ப வந்து சேர்ந்து விடும். எப்போதுமே ஆற்றில் மணல் இருக்கும் என்பதற்காக தான். அந்த மணல் தான் நீரை பஞ்சு போல் தேக்கி வைக்கும் வறட்சியான காலங்களில் பயன்படும் என்பதால் தான் மூன்று அடி அதுவும் கையால் தான் அள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் வாரியத்திடம் அனுமதி வாங்கி வந்துவிட்டு விதிகளை மீறி மணல் உள்ளவரை வெறியோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிவிடுகிறார்கள்.

உதாரணமாக விழுப்புரம் பக்கத்தில் நடந்த மணல் கொள்ளையின் பொழுது மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் சென்று ஆய்வு செய்தனர். அதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அந்த மணல் கொள்ளையர்கள் வீடு கட்டி தருவது, கோவில் கட்டி தருவது, வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் பணம் அதிகமாக கொடுப்பது, போன்ற செயல்களால் மக்களையே ஊழல் படுத்தி வைத்துள்ளார்கள் என்று தெரிய வந்தது. இன்று மக்களிடம் பணம் இல்லாததால் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். நாளை எதிர்காலம் என்ன, நிலத்தடி நீர் இருக்குமா? என்பது பற்றி மக்கள் யோசிப்பது இல்லை. ஆனால் வெள்ளாற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் பற்றி பெண்ணையாற்றில் விளக்கி கூறும் பொழுது , ஆற்றை சுற்றியுள்ள 25 கிராம மக்களிடம் எதிர்ப்பு எதுவுமில்லை. இது போல் மக்கள் மவுனமாக இருப்பது, புரிந்து கொள்ளாமல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு மூன்று அடிக்கு மூன்று அடி மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அதனை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வெறி கொண்ட அளவிற்கு அள்ளுகிறார்கள்.

இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் பெண்ணையாற்றில் 200 அடி மணல் உள்ளது என்று “ஜியாலஜிக்கள் சர்வே” கூறுகின்றது. அதன் படி தற்பொழுது நூறு அடி மணல் அள்ளியிருப்பார்கள். இதனை அனுமதி வாங்கிக்கொண்டு செய்கிறார்கள் என்பது கேலிக்கூத்து. அனுமதி வாங்கினாலும் வாங்கவில்லை என்றாலும் இந்த கொள்ளை நடக்கும். காரணம், ஒரு மீட்டர் அள்ளினால் குவாரி வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது ஆற்றோர கிராம மக்கள் பயன்பாட்டுக்கு தான் பொருந்தும். எனவே தான் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர். ஆக மொத்தம் சட்டத்தை மீறினால் தான் மணல் கொள்ளை நடத்த முடியும். மணலை வியாபாரம் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

5. ஆற்றின் இரு கரையோரம் தான் மணல் அல்ல வேண்டும். நடுவில் அல்ல கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஆற்றின் கரையோரம் தான் சாலை அமைத்து உள்ளார்கள். cuddalore-floods-roadin-riverஆற்றின் அருகே கும்பகோணம் – சென்னை மெயின் ரோடு உள்ளது. அது மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் ஆற்றினுள் ஆயிரக்கணக்கான லாரி செல்வதற்கு சாலை தரமாக உள்ளது. ஆற்றினுள் சாலை போட வேண்டிய அவசியம் என்ன? காரணம், நடுவில் மணல் அள்ளுவதனால் தான் கரையோரம் சாலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதற்க்கான சட்டங்கள் எல்லாம் அரசு சரியாக இருக்கிறது என்று மக்களை ஏமாற்றுவதற்கு தான் பேப்பரில் இருக்கிறதேயொழிய நடைமுறையில் அந்த விதிகள் அனைத்தும் மீறப்படுகிறது.

6. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு, நிலத்தடி நீர், சாலை போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கண்டரக்கோட்டையில் மணல் குவாரி அமைப்பதற்கு முன்னரே அதன் பாதிப்புகளை விளக்கி வி.வி.மு, பு.மா.இ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனை பார்த்த சில சாதிய அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் தற்பொழுது நீர் பற்றாக்குறை வந்துள்ளது. 250 அடி ஆழத்திற்கு கீழே நீர் சென்றுள்ளது என்று அப்பகுதி மக்களே கூறுகின்றனர். . குறிப்பாக புதிதாக பைப் போட்டு அதன் ஆழத்தை அதிகபடுத்தினால் தான் தண்ணீர் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.ஆக நிலத்தடி நீர் என்பது மணல் அள்ளப்பட்ட இந்த பதினோரு மாதத்தில் கீழே சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சாலை வசதி என்று கூறுகிறார்கள், கண்டரக்கோட்டையில் ஆரம்பித்து சின்னக்கல்லிப்பட்டு வரை கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக நெடுஞ்சாலை நாசமாக உள்ளது என்பது அதிகாரிகளுக்கும் தெரியும். இந்த கட்டுரையை படிப்பவர்கள் சென்று பாருங்கள், மனிதர்கள் செல்வதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இது ஒரு கிராமத்திற்கு செல்லும் சாலை அல்ல. ஆயிரக்கணக்கான லாரிகள்,ஆயிரக்கணக்கான பேருந்துகள் , இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை. சாலைகள் பாதிப்படையக்கூடாது என்ற விதியை இந்த மணல் கொள்ளையர்கள் துளியளவும் மதிக்கவில்லை.

இந்த அளவிற்கு சட்டங்களை தனக்கு சாதகமாக்கி, அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, மழைக்காலத்தில் மணலை கொள்ளையடிப்பதற்கென்றே திட்டமிட்டே ஆற்றின் நீர் போக்கை திசை திருப்பி விட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக மழை பெய்து முடிந்த 18 ம் தேதி வரை இந்த பெண்ணையாற்றில் தண்ணியே போகவில்லை. அன்று மாலை தான் ஆற்றில் தண்ணீர் வந்தது. மழை ஆரம்பிப்பதற்கு முன்பு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினார்கள், சித்தலிங்க மடத்தில் இருந்து கெடிலம் ஆற்றுக்கு நீர் போகும் படி மலட்டாற்றில் தண்ணீரை திறந்து விட்டார்கள். அது நிரம்பியதும் பம்பையாற்றின் வழியாக நீரை திறந்து விட்டார்கள். கடைசியாக சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 117 அடியை எட்டியதும் அதனை தேக்குவதற்கு வேறு வழி இல்லாமல் தான் பெண்ணையாற்றில் திறந்து விட்டிருக்கிறார்கள். அந்த தண்ணீர் தான் தற்பொழுது ஓடக்கூடிய நீர்.

ஆக கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு முழுக்காரணமும் பெண்ணையாற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. குறிப்பாக இந்த குவாரிகள் அனைத்தும் அரசு நடத்துவதாக சொல்கிறார்கள். இல்லை. அமைச்சர் M.C.சம்பத் தான் நடத்துகிறார் என்று அப்பகுதி கிராம மக்கள், வியாபாரிகள் கூறுகின்றனர். அதிமுக, திமுக என்று அனைத்து கட்சிகளும் கொள்ளையடிக்கின்றனர். திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை எதிர்த்த சம்பந்தம் என்பவர் தான் தற்பொழுது குவாரிக்கு பொறுப்பாக இருக்கிறார் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர் வரை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதோடு இந்த அரசுக்கட்டமைப்பு முற்றிலும் தோற்றுப்போய் விட்டது என்பது தான் நிரூபணமாகிறது.

-புதிய ஜனநாயகம், செய்தியாளர்.

லைட்விண்டு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை !

0

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 27-11-2015 மாலை 5 மணிக்குக் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் மோகன்பாபு, கிளையின் உறுப்பினர் தோழர் முனுசாமி இருவரும் கண்டன உரையாற்றினர்.

ndlf-tvlr-meeting-1தோழர் சதீஷ் தனது தலைமையுரையில், “சாராயம் விற்கக்கூடாது என்றால் தேசத்துரோக வழக்கு போடுகின்றனர். சாராயத்தால் உழைக்கும் மக்களுக்கு ஏதேனும் நன்மை உள்ளதா? அரசே சாராயம் விற்பது சரியா? உரிமைக்காக போராடினால் அரசு எப்படி ஒடுக்குகிறதோ அதுபோன்றே போராடும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். லைட்விண்டு முதலாளிக்கு எதிராக நாம் கண்டனக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இதே நாளில் தான் மாருதி சுசுகி தொழிலாளர்களும் உரிமைப்பறிப்புக்கு எதிராகப் இந்தியா முழுவதும் தொழிலாளர்களை அணிதிரட்டி மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆலையில் உரிமைக்காக சங்கம் துவக்கியதற்காக 147 தொழிலாளிகள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் உரிமை என்று பேசினால் கூட அது முதலாளிகளுக்கு எதிரானது என்பது தான் நமது நாட்டில் எழுதப்படாத விதியாக உள்ளது.

ndlf-tvlr-meeting-2அதே போல இங்கும் லைட்விண்டு ஸ்ரீராம் ஆலையில், முதலாளியைக் காட்டிலும் அவர்களின் எடுபிடிகள் தான் தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதில், புரட்சிகர சங்கத்தை ஒழித்துக்கட்டுவதில் தீவிரமாக செயல்படுகின்றனர். குறிப்பாக, அனைத்து திட்டங்களையும் போட்டுக் கொடுத்து தொழிலாளர்களுக்கு விரோதமாய் நடந்து கொள்வதில் மூளையாகச் செயல்படும் HR அதிகாரி நாகேஸ்வரன் மற்றும் கார்ப்பரேட் HR ரமேஷ், 5 தொழிலாளிகளை சஸ்பெண்டு செய்யச் சொல்லி நிர்வாகத்தை தூண்டிய கலையரசன், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, தற்போது தொழிலாளிகளுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொல்லிக்கொண்டிருக்கும் செக்யூரிட்டி ஆபிசர் ஆறுமுகம், வடமாநில தொழிலாளிகளை மிரட்டி பணியவைக்க துடிக்கும் அனந்தராமகிருஷ்னன் ஆகியோர். லைட்விண்டில் பணிபுரியும் போது ஆட்களை வேலையில் அமர்த்துவதற்கு புரோக்கர் கமிஷன் வாங்கியதால் துரத்தப்பட்ட புரோக்கர் கோபாலகிருஷ்ணனும் HR நாகேஸ்வரனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தொழிலாளர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் வேலையை விளைவித்து வருகிறார்.

ndlf-tvlr-meeting-3இந்த அடியாள் படையும், இவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள INTUC சங்கமும் தான் நமது சங்கத்துக்கு எதிரான வேலையைச் செய்து வருகின்றனர். இந்த துரோகிகளை ஒழித்துகட்டி தொழிலாளர்களின் உரிமையைப் பெற வேண்டுமெனில் தொழிலாளி வர்க்கமாக நாம் அனைவரும் ஒன்று சேர்வது தான் தீர்வு” என்ற தொழிலாளிகளை அறைகூவி அழைத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

கண்டன முழக்கத்துக்கு பின் புரட்சிகரப் பாடல் பாடப்பட்டது.

தொடர்ந்து கண்டன உரையாற்றிய லைட்விண்டு ஸ்ரீராம் கிளை உறுப்பினர் தோழர் முனுசாமி, “நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் தொழிலாளிகள் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டும் தொழிலாளர்கள் உறுதியோடு நின்று ஜெயித்த போராட்டங்கள் பல உள்ளன. நமது உரிமையைப் பறிக்கும் நமது நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி நாமும் வெல்ல வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

ndlf-tvlr-meeting-4லைட்விண்டு கிளைத்தலைவர் தோழர் மோகன்பாபு, தாங்கள் பணியில் சேர்ந்தது முதல் சங்கம் துவக்கும் வரை சந்தித்த அடக்குமுறைகளையும், சங்கம் துவக்கிய பின் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், அதைச் சங்கமாக நாம் எதிர்கொண்டு வருவதையும் எடுத்துரைத்தார். அடிபட்டுக் கிடக்கும் தொழிலாளியைக் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டிய நிர்வாகத்தை சாடினார். இறுதியாக, போராடிப் பெற்ற உரிமைகளை இழக்காமல் இருக்கவும், பாதுகாத்துக்கொள்ளவும் தொழிலாளிகள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என உரையை முடிவு செய்தார்.

ndlf-tvlr-meeting-5கண்டன உரையாற்றிய மாவட்டத் துணைத் தலைவர் தோழர் நாகராஜன், “இன்று அரசு யாரெல்லாம் மக்களின் உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை பயங்கரவாதிகள் தேசதுரோகிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குமுறையை ஏவுகிறது. ஆனால் உண்மையிலேயே அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி, வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. முதலாளிகளின் இந்த பயங்கரவாதச் செயல்களை நாம் தட்டிக்கேட்கக் கூட உரிமை மறுக்கப்படுகிறது.

ndlf-tvlr-meeting-6இந்த சட்டவிரோத நடவடிக்கையின் தொடர்ச்சியைத் தான் கும்மிடிப்பூண்டி லைட்விண்டு ஸ்ரீராம் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது ஏவிக் கொண்டிருக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளும் தொழிலாளர் விரோதப் போக்கும் இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் நடக்கிறது. இது குறித்து ஓட்டுக்கட்சிகள் சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொண்டு முடங்கிக் கொள்கிறார்கள். இந்த கட்டமைப்புக்குள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தொழிலாளர் வர்க்கத்தை நம்ப வைத்து துரோகம் இழைக்கிறார்கள். இந்த அரசமைப்புக்குள் நமது பிரச்சனையைத் தீர்க்க முடியாது. ஏனெனில் இது ஆளும் தகுதியை இழந்து விட்ட தோற்றுப்போன அரசமைப்பு. இந்த அரசமைப்பின் தோல்வி அதன் நடவடிக்கையில் தினந்தோறும் வெளிப்படுகிறது.

ndlf-tvlr-meeting-7டாஸ்மாக் பிரச்சனையாகட்டும், மழை வெள்ளத்தால் மக்கள் சாவதாகட்டும், ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிராணைட் கொள்ளையாகட்டும், சிவகங்கைச் சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாகட்டும், ஊழல் நீதிபதிகளுக்கெதிரான போராட்டமாகட்டும், இவையனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது என்னவென்றால், இந்த அரசமைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்க வக்கற்றதாகவும், ஆளும் தகுதியை இழந்து விட்டது என்பதுமாகும். உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த தகுதியிழந்துவிட்ட அரசைத் தூக்கியெறிந்து, மக்களுக்கு அதிகாரம் உள்ள அரசமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இதற்கு புரட்சி ஒன்றுதான் தீர்வு” என கண்டன உரையாற்றினார்.

கூட்டம் துவங்கும் முன்னரே, ஏதோ சினிமா ஒளிப்பதிவு செய்வதைப் போலவே “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்” சகிதமாக, கேமராக்களை தயார் செய்து கொண்டும், ஒத்திகை பார்த்துக் கொண்டும் நின்றிருந்தனர், உளவுப் பிரிவினர். நாம் கண்டனக் கூட்டம் திட்டமிட்ட தேதியிலேயே அன்புமணி ராமதாஸும் மக்களுக்கு “மாற்றத்தையும், முன்னேற்றத்தையும்” எப்படித் தர போகிறார் என விளக்க பொதுக்கூட்டம் நடத்தியதால் கியூ பிரிவு போலிசுக்கு கடும் கிராக்கி. அதனால் நாம் நடத்திய கண்டனக் கூட்டத்துக்கு இரண்டு புதிய போலிசு இரண்டு கேமராக்களில் பதிவு செய்தனர். ஒன்று உளவுத் துறைக்கும் மற்றொன்று நிர்வாகத்துக்கும் பதிவு செய்யப்பட்டதா? அல்லது புதிதாக பதிவு செய்வதால் தவறு நேர்ந்துவிடும். அதனால் இரண்டு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. எப்படியோ ஏதோவொன்றை பார்த்தாவது, தாங்கள் மக்களுக்கெதிராக செயல்படுகிறோம் என போலிசு உணர்ந்தால் சரி..!

மாவட்ட இணைச் செயலாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 944 538 9536

மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!

1

ட மேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியது. இக்காட்டாறு புதுக்கோட்டை ஓடையில் பாய்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் கலந்து உப்பாற்று ஓடை வழியாக வங்கக் கடலுக்கு செல்லும். ஆனால் இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் உடைப்பெடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்தபடி, தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையை துண்டித்துக்கொண்டு குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது.

கோரம் பள்ளம் கண்மாயின் கரைகளை பலப்படுத்த தவறியதால் அதில் உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் உப்பாற்று ஓடையும் ஆக்கிரமிக்கப் பட்டதால் அதிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையை துண்டித்துக்கொண்டு முத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை கபளீகரம் செய்தது.

ஆங்கிலேயரான பக்கிள் துரையால் 100 அடி அகலத்தில் உருவாக்கப் பட்டிருந்த பக்கிள் ஓடை வெறும் 20 அடி அகலம் கொண்ட கால்வாயாக மாற்றும் பணி கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு அ.திமு.க. ஆட்சியில் முழுமையாக முடிக்கப்பட்டது. குறுகிய இக்கால்வாயில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் சுற்றிலும் பாய்ந்தது. மற்றொரு பகுதியான சிப்காட் வளாகத்தின் வழியாகவும் வெள்ள நீர் ஊருக்குள் பாய்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அக்கரைக்கண்மாய் இருந்த இடம்தான் இன்று முத்தம்மாள் காலனி மற்றும் மச்சாது நகராக உள்ளது. தி.மு.க. வின் ரியல் எஸ்டேட் மாபியாக்களால் வளைக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்பட்ட இக்குளம்தான் இன்று தன்னை வெளிக்காட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் கழுத்தளவு வந்த வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்க்கு டெம்போ, மிதவைப்படகு, பைபர் படகு, டிராக்டர் என்று தனி நபர்கள், கட்சியினர், நிறுவனங்களின் உதவி கிடைத்தது. நம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் வாகனத்தை ஓட்டியும், உடனிருந்து வழிகாட்டியும் மீட்பு வேலையில் பங்கெடுத்தனர். அரசு நிர்வாகமோ செயலற்று ஸ்தம்பித்துக் கிடந்தது.

இந்கிருந்து வெள்ளத்தை வடிக்க இருந்த வடிகால்கள் தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் சிறுபாலங்களாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்காலுக்கான அறிகுறியே இல்லாமல் காம்ப்ளக்ஸ்களாக நிற்கிறது. இத்தகைய தூர்ந்து போன வடிகாலுக்கான ஆதாரங்களை தூத்துக்குடியின் உட்புற சாலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்த வடிகால்களை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதற்கு பதில் சாலைகளை வெட்டி குழாய் அமைத்தும், மோட்டார்களை வைத்து பம்ப் செய்தும், அடுத்தடுத்துள்ள தெருக்களை வரிசையாக மூழ்கடித்து வருகிறது. இதனால் கீழ்ப்புறமுள்ள மக்கள் எதிர்த்து போராட, மாநராட்சியோ ஒருதெருவுக்கும் மற்றொரு தெருவுக்கும் மோதலை ஏற்படுத்தும் விதமாக ஜே.சி.பி.-ஐ மக்களிடம் தந்துவிட்டு ஒதுங்கி நிற்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தன்னெழுச்சியாக நகரின் பல பகுதிகளிலும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடக்கிறது. உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர் அந்தோனி கிரேஸ், மாவட்ட ஆட்சியாளர் ரவிக்குமார், அமைச்சர் சண்முகநாதன் உள்ளிட்டவர்கள் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புறநகரான முத்தையாபுரம் பகுதியில் வீடுகள் கடும் சேதமடைந்தது. குறிப்பாக கக்கன் நகரில் மட்டும் 47 வீடுகள் முழுமையாக இடிந்தது. வீடுகளை இழந்தவர்களும், வெள்ளம் வடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறியவர்களும் அருகிலுள்ள சர்ச், பள்ளி, திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

tuticorin-flood-13பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, போராட்டத்தில் உள்ள மக்களுக்கு துணையாக நின்று, மீட்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர். போராட்டத்தை எந்த திசையில் நடத்தவேண்டும் என்று குறிப்பாக வெள்ளம் நின்று பலநாள் கடந்தும் வெள்ளக்காடான நகரை மீட்காமல் தோற்றுவிட்ட அரசுக்கு எதிராக அணிதிரட்டி வருகின்றனர்.

தகவல்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !

3

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் விடுதலையானதையொட்டி, அவர் விடுதலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், கட்சிகள், ஊடகத்தார்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக 23-11-2015 அன்று மாலை திருச்சியில் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

அன்று காலையிலேயே தனக்கு ஆதரவாக கருப்புக் கொடி ஏந்தி போரட்டம் நடத்திய தில்லைநகர் காந்திபுரம் பகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். மக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு மாலை 6 மணிக்கு திருச்சி புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்பைச் சார்ந்த தோழர்களும் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு ( ML) மக்கள் விடுதலை அமைப்பு, SDPI கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், ஆதித் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தோழர் தமிழாதன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் தமிழாதன்

இக்கூட்டத்தினை ம.க.இ.க.வின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையேற்றி துவக்கி வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழாதன் பேசுகையில்:

“ம.க.இ.க தோழர்களை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் அவர்களுடன் நான் குடும்ப உறுப்பினர் போல பழகியுள்ளேன். தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை நேரில் பார்த்துள்ளேன். அவர்களது அமைப்பின் போராட்டங்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்” என தோழர் கோவனுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

வாழையூர் குணா
புதிய தமிழகம் வாழையூர் குணா

புதிய தமிழகம் வாழையூர் குணா பேசும் போது:

“தோழர் கோவன் சமூக சீரழிவை எப்போதும் கோபத்தோடு பார்ப்பவர், பாடுபவர். இவரை தேசதுரோக வழக்கில் நள்ளிரவில் திருடனை கைது செய்வதை போல நடத்து கொண்டது பாசிச ஜெயா அரசு. 2 இலட்சத்திற்கும் மேல் பெண்களின் தாலி அறுப்பு, 3 கிலோ மீட்டருக்கு ஒரு டாஸ்மாக் கடை இதை பார்த்தால் கோவனுக்கு மட்டுமா கோபம் வரும், உலக மக்கள் அனைவரும் கோபம் வந்தது. மூடு டாஸ்மாக்கை மூடு இந்தப் பாடலில் என்ன தவறு உள்ளது. தீபாவளிக்கு 372 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று கட்டளை. 472 கொள்ளை அடித்து விட்டார். மது விலக்கிற்காக யார் வேண்டுமானாலும் போராடி இருக்கலாம். ஆனால் உண்மையாக போராடியது மக்கள் அதிகாரம் அமைப்பு தான். 30 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருப்பவரை எந்த வழக்கினாலும் வாயை மூடிவிட முடியாது” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

“கோவன் பாடியதில் என்ன தவறு. காந்தி, பெரியார், கள்ளுண்ணாமை எழுதிய திருவள்ளுவர் இவர்களும் தேச துரோகிகள் தான். காலை 7 மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடையை அரசு திறந்துவிடுகிறது. 2000-ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா இந்திரா காந்தியை ‘பதிபக்தி இல்லாதவள்’ என்று பேசினார். இது தரக்குறைவு இல்லையா? கோவன் பாடியதில் எந்த தரக்குறைவும் இல்லை. மக்கள் அதிகாரம் போராட்டம் அனைத்திலும் உடன் இருப்பேன் முழுமையாக போராடுவேன்” என்றார்.

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்
புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்:

“இன்று 6863 கடைகள் உள்ளன, 2004-ல் 4,800 கோடி வருவாய், 2016-ல் 24,760 கோடி வருவாய். இனி சமூகச் சீரழிவு அதிகமாகும். இது அரசின் கொள்கை என்கிறது நீதிமன்றம். கொள்கை என்றால் என்ன என்பதற்கு பதில் இல்லை. தமிழ் இனத்தையே அழிப்பதுதான் அரசின் கொள்கை. இனி தமிழன் அழிக்கப்படுவான், தமிழினத்தின் அடையாளத்தை இனி நாம் தேட வேண்டும். அ.தி.மு.கவை தேர்தலில் மாற்று அமைப்புகள் புரட்டி போட்டு மாற்றி அமைக்க வேண்டும்” என்றார்.

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:
தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

” இப்பொழுதும் எங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. கொடைக்கானலில் பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக பாட்டு பாடியதற்கு எங்கள் நால்வர் மீது இந்திய தேசத்திற்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கு. மேலும் புதிய தலைமுறை விவாதத்தில் அ.தி.மு.க சி.ஆர்.சரஸ்வதியிடம் விவாதம் செய்ததற்கு பெண் போலீசு ஒருவர் தோழர் ஓவியாவிடம் உங்களை நேரில் வந்து பார்த்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இன்னும் பல வழக்குகள் நம் மீது விழும். இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கோவன் மட்டும் அமைப்பு கிடையாது. அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்த ம.க.இ.க வின் அரசியல் தான் காரணம். நாம் அனைவரும் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ” என்றார்.

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்
தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்:

“கோவனை கைது செய்யவில்லை என்றால் தமிழ்நாடு அளவில் தான் தெரியும். ஆனால் இன்று உலக அளவில் ஹிட் ஆகி விட்டது. இந்தப் பாடல் 1 லட்சம் பேரின் ரிங்டோனாக உள்ளது. கோவன் மீது ஜெயாவிற்கு கோபம். ஜெயாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால், எல்லாக் கட்சிகளையும் இன்று ஒன்று சேர்ந்து போராட தூண்டி உள்ளது. சசிகலா உள்ளே போனால் 16 சாராய ஆலையும் உள்ளே போகும். எனவே மூடாது அரசு. இனி நாம் அனைவமும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்றார்.

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி
கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி:

“நாம் கோவன் கைதை பற்றி விவரமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசே இதை செய்து விட்டது. இந்த அரசிற்கு எதிராக நாம் மாவோ வழியில் நின்று போராட வேண்டும். மக்கள் அதிகாரத்துடன் எல்லா போராட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன்.”

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை (CPML):

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை
கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை

“ம.க.இ.க வை சேர்ந்த தோழர்கள் மீது ஏற்கனவே NSA போட்டு இருக்கிறார்கள். பார்ப்பன பனியா கும்பலின் ஆளாக தான் ஜெ. அரசு செயல்படுகிறது. அனைத்தும் தனியார்மயம். 1996 BHEL வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு கோவன் வெளியில் வந்தார். நாம் நீதிமன்றத்தை நம்புகிறோம் என்றால் நமக்கு நாமே தூக்கு கயிறு மாட்டிக்கொள்வது போல்தான். ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையாகவும் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவது BJP அரசு தான். இப்பொழுது நாம் ஐக்கிய முன்னணி ஆக வேண்டும். நாம் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேச பக்தனாக உருவெடுத்த ம.க.இ.க, மக்கள் அதிகாரம் போலவே நாம் அனைவரும் போராட வேண்டும். ”

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்
சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்:

“மது விலக்கிற்கு கோவன் அவர்கள் பாடல் பாடி கைது ஆனதற்கு முதல் கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட கட்சிதான். எல்லாரும் போராடினார்கள். மக்கள் அதிகாரம் தீவிரமாக போராடியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எல்லா வகையிலும் போராடினோம். ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது. எனவே மதுவை ஒழிக்க மக்களுடன் நாமும் இணைந்து போராட வேண்டும்” என்றார்.

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்:

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்
இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்

“சிறைக்கு வாய் இருந்தால் அது கம்யூனிஸ்டுகளின் கதை தான் சொல்லும். நாம் சிறைக்கு செல்லலாம். கோவன் செல்லலாம். ஆனால் இனி நம் போராட்டத்தின் மூலம் ஜெயா சென்றால் இனி வெளியே வரவே முடியாது. தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். எழுத்தாளர்களுக்கு சிறை. பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.

மதுவிலக்கு துறை விஸ்வநாதன், “மதுவை பற்றி அம்மாவுக்கு தெரியாததா உங்களுக்கு தெரியும்” என்று கூறி உள்ளார். இதை விடவா ஆதாரம் வேண்டும்.

200 வருடங்களுக்கு பிறகு அ.தி.மு.க அமைச்சர்களின் முதுகெலும்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் மனித இனம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியே அடைய வில்லை என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அமைச்சர்கள் அடிமையாக உள்ளனர்.

கோவன் பாடினால் புரட்சியாளனாக தெரிகிறது. அநீதியை கண்டு வெகுண்டு எழுந்தால் நீயும் தோழனே என்றார் சேகுவேரா. அந்த அடிப்படையில் நாம் போராடுவோம்.

கோவன் இனி தனி நபர் கிடையாது. மேலும் இவர் தமிழ்நாட்டின் கத்தார்” என்றார்.

தோழர் சத்யா, ம.க.இ.க
தோழர் சத்யா, ம.க.இ.க

தோழர் சத்யா, ம.க.இ.க:

“கைது செய்யப்பட்ட விதத்தை பார்த்தால் மிகவும் கொடுமை. மாஃபியா கும்பல் கூட இப்படி கைது செய்யப்படவில்லை. அவனுக்கு பாதுகாப்பு. ஆனால் தோழர் கோவனை நள்ளிரவில் 10 பேர் கொண்டு தகவல் ஏதும் கொடுக்காமல் கைது செய்தது ஜெயாவின் பாசிசத்தை வெளிப்படுத்துகிறது.

அழிவிடைதாங்கியில் பு.மா.இ.மு டாஸ்மாக் உடைப்பு தான் முதல் போராட்டம். இனியும் போராட்டம் தொடரும். இனி அனைவரும் சேர்ந்து மக்களை திரட்டி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:
தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

“நான் சிறையிலிருந்த போது எனக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், மாற்று கட்சி நண்பர்கள் ஊடகத்தார்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயாவின் பாசிசஅடக்குமுறையை கண்டு எங்கள் அமைப்பு அஞ்சாது. மதுக் கடைகளை மூடும் வரை எங்களின் போராட்டம் ஓயாது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

பிறகு, “மூடு டாஸ்மாக்கை மூடு“, “ஊருக் கூரு சாராயம்“, “பாடு அஞ்சாதே பாடு” ஆகிய பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்
ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்

இறுதியாக ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களுக்கும், பகுதி மக்களுக்கும், மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

 

 

இக்கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !

0

ன்பார்ந்த பொதுமக்களே!

மணல்கொள்ளை லாரிகளால் குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம், எந்த பயனுமில்லை.

பவழங்குடி-தேவங்குடி ரோடை போடு
நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு எதிரானவர்களாக மாறியுள்ளார்கள் என்பதற்கு வெள்ளப் பேரழிவும், வழங்கப்படும் நிவாரணமும் சாட்சி.

நிவாரணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே நீர்நிலைகளை தூர்வாராமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடலூர் மாவட்டத்தை மரணக் காடாக மாற்றுகின்றனர்.

கார்மாங்குடி மணல் குவாரி மூடும் போராட்டத்தின் போதே, விருத்தாசலம் ஆர்.டி.ஓ இரண்டு மாதத்தில் ரோடு போட்டுத் தரப்படும் என வாக்குறுதி கொடுத்தார், நடக்கவில்லை.

அதன் பிறகு நாம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த தீர்வும் இல்லை. தேவங்குடி பவழங்குடி ரோட்டில் பயணிப்பதால் வாகனம் பழுதடைவது மட்டும் இல்லை. பயணம் செய்பவர்களுக்கும் உடல்ரீதியாக, மனரீதியாக தினம் தோறும் பெருத்த சேதம் ஏற்படுகிறது.

இனியும் பொறுக்க முடியாது. நம்மை ஆளத் தகுதியற்றவர்களாக மாறிவிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயனில்லை. குடும்பத்தோடு குடியேறுவோம் வாரீர்.

பவழங்குடி, கீரமங்கலம், காவனூர், கொடுமனூர், மருங்கூர், வல்லியம், சக்கரமங்கலம், மேலப்பாலையூர், கீரனூர், கார்மாங்குடி, தொழூர்-கீழப்பாலையூர்-தேவங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேரம் கிராம பொதுமக்கள்.

virudhai-pp-notice

நாய் போகாத ரோட்டில் நாம் போக முடியுமா?

பாழாய் போன பல்லாங்குழியான எங்கள் ஊர் சாலையை போடு

பாழடைந்த பயணிக்கத் தகுதியற்ற கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி-பவழங்குடி சாலையை சீரமைக்கக் கோரி

விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில்
குடியேறும் போராட்டம்

30-11-2015 திங்கள், காலை 11 மணி

கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி, மேலப்பாலையூர் to தே.பவழங்குடி கிராம பொதுமக்கள்
94863 07045, 87606 70553, 99762 20591

மக்கள் அதிகாரம் –
விருத்தாசலம் 97912 86994