Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 64

நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார்

சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?

டந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் சென்னையின் பெருவாரியான இடங்களில் மழைவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து அகதிகளாக்கப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல், உணவு, குடிநீர் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேலாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். தொலைத்தொடர்பு சேவை, மின்சாரம் இல்லாத காரணத்தால் யாரையும் தொடர்புகொள்ளவும் முடியாமல் செய்வதறியாது நிற்கதியாகினர் சென்னையின் உழைக்கும் மக்கள்.

ஆனால், புயல் கடந்த மறுநாளே தி.மு.க. அரசும் அதன் ஜால்ரா ஊடகங்களும் 95 சதவிகித மீட்புப்பணிகள் முடிந்துவிட்டன என்றும் அண்ணாசாலை, மவுன்ட்ரோடு, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களை மட்டும் ஒளிப்பரப்பி வெள்ளம் வடிந்துவிட்டது என்றும் பொய்யான பிம்பத்தை கட்டமைக்க ஆரம்பித்தன. இதனால், பெருவெள்ளத்தில் மூழ்கிய உழைக்கும் மக்களின் அவலநிலையும் பாதிப்புகளும் வெளிஉலகிற்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு அவர்களை கூடுதல் துயரத்தில் ஆழ்த்தியது.

துயரத்தில் தள்ளப்பட்ட உழைக்கும் மக்கள்:

மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது தென்சென்னை, வடசென்னை பகுதிகள்தான். புயல் கரையைக் கடந்து, மழை நின்று மூன்று நாட்களுக்கு மேலாகியும் சென்னையின் பல பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடங்கப்படவில்லை. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெருங்குடி, கொடுங்கையூர், சைதாப்பேட்டை, சூளைமேடு, பட்டாளம், புளியந்தோப்பு, பழைய வண்ணாரப்பேட்டை, திரு.வி.க.நகர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தி.மு.க. அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

முதல்நாளிலிருந்து களத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் சொன்ன அனுபவமே, இப்பகுதிகளில் சீரூடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரைக்கூட பார்க்கமுடியவில்லை என்பதுதான். புயல் கடந்த மறுநாளே  சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை உருவாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னார்வலர்களும் வரவில்லை, களத்திலிருந்த தோழர்களாலும் மீட்புப்பணிக்கான நிதியை திரட்ட முடியவில்லை. இதனால் மக்கள் உதவிகள் ஏதும் பெறமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


படிக்க: சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?


வெள்ளநீர் சூழ்ந்ததால், மூன்று, நான்கு நாட்களுக்கு வெளியே வரமுடியாமல் உணவு, குடிநீர், மின்சாரம் ஏதுமின்றி குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மார்பளவு நீரில் தவித்தனர். வீடுகளைவிட்டு வெளியேற முடியாத முதியவர்களும், ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களும் வெள்ளநீரிலேயே மலம் கழிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

“கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தோம். எங்களை மீட்க அரசுத்தரப்பில் யாரும் வரவில்லை எங்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர்களே மார்பளவு நீரில் இறங்கிச்சென்று எங்களுக்கு குடிநீர் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில், குடிநீர் இல்லாமல் வெள்ளநீரையே காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தோம்” என தங்களின் அவலநிலையை விவரிக்கிறார் வேளச்சேரியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்.

சில கி.மீ. தூரம்வரை வெள்ளநீரில் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவர வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதிலும், பால் தட்டுப்பாடு காரணமாக அரை லிட்டர் பால் ரூ.60-70-க்கும், ஒரு கேன் குடிநீர் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

“மழை நின்னு மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டது; குடிநீர் இல்லை, கரண்ட் இல்லை; பால்கூட வெள்ளநீரில் சென்றுதான் வாங்கிவர வேண்டும். கால்வாய் நீரெல்லாம் கலந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த கவுன்சிலரோ, எம்.எல்.ஏ-வோ யாருமே வந்து எங்களை எட்டிப் பார்க்கல. நாங்கெல்லாம் ஓட்டுப் போடலயா, இல்ல நாங்களாம் மக்கள் இல்லையா” என்று கேள்வியெழுப்புகின்றனர் ‘சிங்காரச் சென்னைக்காக’ சென்னையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மஞ்சேரி மக்கள்.

“எல்லா மழைக் காலத்திலும் வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்குது. ஆனா, கடைசியாத்தான் இந்த பகுதிக்கு அதிகாரிகள் வராங்க” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த மீனா. அவர் சொன்னதுபோலவே இம்முறையும், வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய நீரையும், வடசென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்திருந்த நீரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கடைசியாகத்தான் மேற்கொண்டது அரசு.

புளியந்தோப்பு பகுதியில் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால் கர்ப்பிணி பெண் ஒருவர் சிசுவை பறிக்கொடுத்த துயரச் சம்பவமும் அரங்கேறியது. உயிர்பிழைக்க வீடுகளிலிருந்து தாங்களாகவே ஆபத்தான முறையில் வெளியேற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அப்படி வெளியேறியவர்களில் சிலர் நீரில் மூழ்கி உயிரிழக்கவும் நேரிட்டது. பலர் ரூ.3,000 வரை கொடுத்து தனியார் படகுகள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெளியேறினர். பணம் இல்லாதவர்கள் கடைசிவரை வெளியேற முடியாமல் தவித்தனர்.

வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த 60 அடி பள்ளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் தி.மு.க. அரசு மிகவும் அலட்சியமாக நடந்துக்கொண்டது. மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகே இருவரை சடலமாக மீட்டது.  முதலில் எட்டு பேர் பள்ளத்தில் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் ஐந்து பேர் என்கிறது அரசு. இன்றுவரை பள்ளத்தில் விழுந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. அமீர்கான், விஷ்ணு விஷால், நமீதா ஆகியோர் மீட்கப்பட்டதை லூப்-இல் (LOOP) போட்டுக் காட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இத்தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதைப் பற்றி வாயையே திறக்கவில்லை.

சில பகுதிகளில், வெள்ளநீரில் பிணங்கள் கேட்பாரற்று மிதந்த அவலமும் அரங்கேறியது. ஆனால், அந்த உடல்களை மீட்கக்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்த மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்தனர். சென்னை முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராடிய பெரும்பாலான மக்களின் கோரிக்கை தங்களை எந்த கவுன்சிலரோ, அமைச்சரோ வந்து பார்க்கவில்லை என்பதுதான். அமைச்சர் சேகர்பாபு வடசென்னை மக்களை பார்வையிட சென்றபோது “இப்போதான் நாங்க உங்க கண்ணுக்கு தெரிந்தோமா?” என கேள்வியெழுப்பி முற்றுகையிட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா என தி.மு.க-வினர் ஒவ்வொருவரையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வியெழுப்பினர்.

சென்னை மக்களின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசு இந்த வெள்ளப்பாதிப்பை கையாண்ட விதம்தான். ஆரம்பத்திலிருந்தே இந்த பேரிடரை மூடிமறைக்கும் வேலையில்தான் தி.மு.க. அரசு முனைப்புக்காட்டி வந்தது. மீட்புப்பணிகளில் அலட்சியம் காட்டியதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் வெள்ளப்பாதிப்பு மேலும் மோசமடைந்தது.

“எப்பவுமே பெரிய மழை வருதுன்னா போலீஸ்காரங்க இந்த ஏரியாக்குள்ள ஒவ்வொரு சந்துக்குள்ளேயும் வந்து எச்சரிக்கை பண்ணிட்டுப் போவாங்க. இந்தத் தடவ அப்படி ஒண்ணுமே பண்ணல. மழை வந்து தண்ணி மேலே எழும்ப ஆரம்பிக்கும்போதுதான் நாங்களே சுதாரிச்சிக்கிட்டு கையில அள்ள முடிஞ்சத அள்ளிக்கிட்டு ஓடினோம்” என்பதே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் கருத்தாக இருந்தது.

2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களும் பிற மாவட்ட மக்களும் உதவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும்தான். ஆனால், தி.மு.க. அரசும் அதன் இணைய குண்டர் படையும் இம்முறை அதற்கான வாய்ப்பை முற்றிலும் அடைத்துவிட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தன்னார்வலர்கள் உதவிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தப் பிறகுதான் இது கவனத்திற்குரிய விஷயமானது. அதுவரை “இது ஒரு பேரிடர், அதை தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள்” என்று தி.மு.க-விடம் போராடும் நிலைமைதான் இருந்தது.

2015 vs 2023 ஒப்பீடும் தி.மு.க. இணையக் குண்டர் படையின் அட்டூழியமும்

புயல்கடந்த மறுநாளே “சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை கட்டமைக்க தொடங்கியது தி.மு.க-வின் ஐ.டி.விங். ஒரு இணையக் குண்டர்படையைப் போல செயல்பட்டு தி.மு.க-விற்கு எதிராக பேசியவர்களையெல்லாம், அதாவது வெள்ளப்பாதிப்பை பற்றிப் பேசிய சாமானிய மக்கள், பத்திரிகையாளர்களையெல்லாம் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. சமூக ஊடகங்களில் பால் இல்லை, உணவு இல்லை என்று பதிவு போட்டவர்களுக்கு, “உணவு இல்லாமல் இத்தனை நாள் வாழலாம். பால் எல்லாம் அத்தியாவசியம் இல்லை” என்றெல்லாம் அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வந்தது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைநிலையை அம்பலப்படுத்திய நியூஸ்மினிட் ஊடகவியலாளர் சபீர் அகமதுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, டிவிட்டர் ஸ்பேஸில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

குறிப்பாக, சென்னை வெள்ளத்தில் மக்களின் பாதிப்பு அதிகம் பேசப்பட்டதைவிட “2015Vs2023” என்ற ஒப்பீடுதான் அதிகம் விவாதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க-வை பாசிசத்திற்கு எதிரான அரணாக முன்னிறுத்தும் ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’. ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதை விட்டுவிட்டு தி.மு.க. அரசிற்கு ‘நற்சான்றிதழ்’ கொடுப்பதிலேயே முனைப்பாக இருந்த இவர்கள், “எல்லோரும் குறை சொன்னால் யார்தான் அரசின் நடவடிக்கைகளை பாராட்டுவது” என அதற்கு நியாயவாதம் கற்பித்தனர்.

வெள்ளத்தின்போது “4000 கோடி எங்கே போனது?”, “2015 மேல்” என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் தி.மு.க-விற்கு எதிராக விவாதத்தை கட்டமைக்கத் தொடங்கியது. அதுவரை மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் வாய் மூடிக்கொண்டிருந்த ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’ சங்கிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு சென்று 2015Vs2023 என்ற அடிப்படையில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். “2015-இல் ஏற்பட்டது செயற்கை பேரிடர், தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கை பேரிடர்; அப்போது 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். தற்போது உயிரிழப்புகள் அதைவிட குறைவு; அப்போது மழை அளவு குறைவு, தற்போது வரலாறு காணாத மழை” என கண்மூடித்தனமாக தி.மு.க-விற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என்ன கேள்வி கேட்டாலும், “அ.தி.மு.க-வை விட சிறப்பாக செய்துள்ளோம்” என்ற பதிலையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டிருந்தனர். கடைசிவரை மக்களின் பாதிப்பை பற்றி வாய்திறக்கவில்லை. மற்ற பத்திரிகையாளர்கள், களத்திலிருந்தவர்கள் மக்களுக்காக தி.மு.க. அரசை விமர்சித்தாலும்  அவர்களையும் சங்கி, பா.ஜ.க. ஆதரவாளர்கள் என தாக்கினர். இது மோடியையோ பா.ஜ.க-வையோ விமர்சித்தால் “ஆண்டி இந்தியன்” என்று சங்கிகள் முத்திரை குத்துவதற்கு ஒத்ததாகவே இருந்தது.

மொத்தத்தில், தி.மு.க. அரசு சிப்காட் தொழிற்பேட்டை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு உழைக்கும் மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்தபோதும் வேங்கைவயல் போன்ற சாதியத் தாக்குதல்களை மூடிமறைத்தபோதும் எவ்வாறு “தி.மு.க-வை விமர்சித்தால் பாசிசம் வந்துவிடும்” என தி.மு.க-வின் அயோக்கியத்தனங்களை மூடி மறைத்தனரோ அவ்வாறே இந்த புயல் வெள்ளத்தின்போதும், ‘அரணாக’ இருந்து தி.மு.க-வை காத்தனர். ஆனால், வழக்கம்போல இது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குதான் சாதகமாகியது.

தி.மு.க. அரசு குற்றவாளியே

“வரலாறு காணாத மழை, புயல் காரணமாக கடல் ஆற்றுநீரை உள்வாங்கவில்லை, 20 செ.மீ. மழைக்குத்தான் மழைநீர் வடிகால் செயல்படும் 40 செ.மீ. மழைக்கு எதுவும் செய்யமுடியாது” என ஒட்டுமொத்தமாக இயற்கையின் மீது பழிபோட்டுவிட்டு தி.மு.க-வை இதிலிருந்து தப்பிக்கவைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், “இது எல்-நினோ ஆண்டு என்பது உலகத்துக்கே தெரியும், சூப்பர் எல்-நினோவாக மாறலாம் எனப் பல்வேறு வானிலை அமைப்புகளும் சொல்லி வருகின்றன. ஆக, இந்த ஆண்டு பெருமழையும் புயலும் இதர பேரிடரும் வரும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். இப்போது வந்து, எதிர்பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம். பிறகெதற்குப் பேரிடர் மேலாண்மைக்கென்று ஒரு துறையை வைத்திருக்கிறார்கள்?’’ என “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விக்கு தி.மு.க-அரசு பதிலளித்துதான் ஆக வேண்டும்.

அதேபோல, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முதலமைச்சர் முதல் மேயர் வரை மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது என மாறி மாறி அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். “மழை பெய்தால் ஒரு நாள் கூட தண்ணீர் தேங்காது”, “புயலுக்கு அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய தேவையே இருக்காது” என்றவாறெல்லாம்தான் தி.மு.க. அமைச்சர்கள் பேசி வந்தனர்.. ஆனால், உண்மைநிலை என்ன ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், ஏற்கெனவே இருந்த 2,071 கி.மீ. தொலைவு மழைநீர் வடிகால் கட்டமைப்புடன் 1,033 கி.மீ. புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. ஆனால், பல வடிகால்களுக்குக் கால்வாய்களுடன் இணைப்பு ஏற்படுத்தவில்லை.

இதுகுறித்து பேசிய “அறப்போர் இயக்கத்தை” சேர்ந்த ஜெயராமன், “தொடக்கத்தில், 35 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்றார்கள். திடீரென, 90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்கிறார்கள். எப்படி ஒரு குறுகிய காலத்தில் 45 சதவிகிதப் பணிகளை முடித்தார்கள் என்பதே தெரியவில்லை. பல சாலைகளிலுள்ள வடிகால் கால்வாய்களுக்கு இணைப்புகளே இன்னும் ஏற்படுத்தவில்லை. வடிகால் பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி இதுவரை வெளியிடவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, புதிதாகப் போடப்பட்ட 40 சதவிகித வடிகால்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லை” என்கிறார்.

2021-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதைப் போன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, “சென்னை மழைவெள்ளத்திற்கு அ.தி.மு.க-வின் கடந்த பத்தாண்டுகால ஊழலே காரணம். இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என உறுதிமொழி அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக, 2022-இல் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை அந்த அறிக்கையை தி.மு.க. வெளியிடவில்லை. ஊழலில் ஈடுப்பட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஊழல்செய்ய திட்டம்போட்டுக்கொடுத்த அதிகாரிகளை தப்பிக்கவைக்கவேண்டி, அந்த ஊழல்முறைகேடுகளை அப்படியே ஊற்றி மூடிவிட்டு, அவர்களை வைத்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க.


படிக்க: மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?


அதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் “சென்னைப் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை” அமைத்தது தி.மு.க. அரசு. அக்குழு கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கை, சென்னையின் ஆறுகள், மழைநீர் வடிகால்களின் வெள்ளத்தை தாங்கும்திறன் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு “வெள்ள அபாய வரைபடம்” ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. இன்று பட்டா நிலங்களாக மாறிப்போன வடிகால் பகுதிகளை அடையாளம் கண்டு மீட்க வேண்டும் என்றும் அரசுத் திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும்போது நீர்நிலைகள், வெள்ளச் சமவெளிகள் மற்றும் வடிகால் பாதைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை பரிந்துரைத்தது. இப்படியான பல பரிந்துரைகளைக் கொண்ட அந்த அறிக்கையை இதுவரை தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

ஆனால், திருப்புகழ் கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறும் ஸ்டாலின், எப்படி அறிக்கையின் பரிந்துரையை மீறி 2,446 ஏக்கர் நீர்நிலைப் பகுதிகளை அழிக்கும் பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு அனுமதியளித்தார் என்பதையும் சேர்த்து கூற வேண்டும். மேலும், ‘தொழில் வளர்ச்சிக்காக’ எந்தத் தடையுமின்றி கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழிக்கவும் நிலங்களை அபகரிக்கவும் அனுமதியளிக்கும் “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023”-ஐ தி.மு.க. அரசு எதற்கு கொண்டுவந்தது என்பதையும் விளக்க வேண்டும்.

அதுபோல், சென்னையின் இயற்கை வடிகால்களான நீர்நிலைகளும் கழிமுகத்துவாரங்களும் சதுப்புநிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுதான் எப்போதும் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்திவரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால், இருக்கின்ற நீர்நிலைகளும் சதுப்புநிலங்களும் கார்ப்பரேட் நல நாசகர திட்டங்களுக்காக தொடர்ந்து பலிக்கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகான எட்டு ஆண்டுகளில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இத்தகைய ஆக்கிரமிப்பின் வளர்ச்சிவீதம் 300 சதவிகிதமாக இருக்கிறது என்கிறது நியூஸ் 18 செய்தி. இதற்கு தி.மு.க. அரசும் விதிவிலக்கல்ல.

மொத்தத்தில், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, கார்ப்பரேட் நலத்திட்டங்களுக்காக நீர்நிலைகளைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது, முறையான வடிகால் வசதிகள் செய்யாதது, கழிமுகப் பகுதிகளைத் தூர்வாராதது உள்ளிட்ட தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

மறுகாலனியாக்கத் திட்டங்களால் அழிக்கப்படும் சென்னை

எண்ணூர் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சென்னையின் இயற்கை நீர் உறிஞ்சிகளாக உள்ளன. இதில் உப்பு சதுப்புநிலமான எண்ணூர் சிற்றோடையானது கனமழை மற்றும் புயல் அலைகளை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். தொழிற்துறைக் கட்டுமானங்களும் எண்ணூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளும் இந்த சிற்றோடையை நாசமாக்கி வருவதால், இச்சதுப்புநிலத்தின் ஆற்றுநீரை சுமந்து செல்லும் திறனும் வடிகால் திறனும் குறைந்துள்ளது. எனவேதான் மழைக்காலங்களில் வடசென்னை பகுதிகளில் வெள்ளநீர் உடனே வடியாமல், தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இச்சூழலில், எதிர்வரும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகளால் இந்த எண்ணூர் சதுப்புநிலம் மேலும் பாதிக்கப்படும் பேரபாயம் இருக்கிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன். கடலில் பல கி.மீ. தொலைவுக்கு மணலைக் கொட்டி நடைபெறவிருக்கும் விரிவாக்கப் பணிகளால் சென்னையின் இயற்கை அரண்களில் ஒன்றான எண்ணூர் சிற்றோடை முற்றிலும் அழிக்கப்படும். அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபிறகு துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த முயற்சித்து எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாகப் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னையில் உள்ள மற்றொரு இயற்கை அரணான பள்ளிக்கரணை சதுப்புநிலம், பல்வேறு ஆக்கிரமிப்புகளால் 13,500 ஏக்கரிலிருந்து  1,500 ஏக்கராக சுருங்கியிருக்கிறது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகும் இந்தச் சதுப்புநிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

மேலும், “கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளநீர் எங்கெல்லாம் தேங்கியதோ, அதே பகுதிகளில்தான் தற்போதும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

ஆனால், சென்னையில்‘ஆக்கிரமிப்பு’ என்று அப்பாவி உழைக்கும் மக்களின் குடிசைகளைப் பிய்த்து எடுக்கின்ற அரசின் புல்டோசர்கள், பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக துரும்பைக்கூட அசைப்பதில்லை. ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு மறுகாலனியாக்கத் திட்டங்களின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் மையப்பகுதிகளில் கார்ப்பரேட் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் சென்னையின் பூர்வகுடி மக்களும் திட்டமிட்டே குடியமர்த்தப்படுகின்றனர். இது முந்தைய ஆட்சிகளில் நடந்ததைக் காட்டிலும் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறை வெள்ளப் பாதிப்பின்போது சென்னை இரண்டாக பிரிந்து காட்சியளித்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

எனவே, சென்னை இதுபோன்ற வெள்ளத்தால் இனியும் பாதிப்படையாமல் தடுக்க வேண்டுமானால், உடனடியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, தனியார்-அரசு நிறுவனங்கள் என்ற பேதமின்றி ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும்; நீர்நிலைகளை அழிக்கும் பரந்தூர், அதானி துறைமுக விரிவாக்கம் போன்ற கார்ப்பரேட் நல நாசகரத் திட்டங்களை நிறுத்த வேண்டும்; சென்னை விரிவாக்கத் திட்டம் இனிமேலும் தொடரக்கூடாது; கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழித்து நிலங்களை அபகரிக்க வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!

டெல்லி புராரி மருத்துவமனையில் (Burari Hospital) அரவிந்த் கெஜ்ரிவால் அரசை எதிர்த்து துப்புரவுத் தொழிலாளர்கள் பத்து நாட்களாக போராட்டம் நடத்தினர். ஜனவரி 23 அன்று கெஜ்ரிவாலின் உருவப்படத்தை வைத்து சவ ஊர்வலம் நடத்தியும், தங்கள் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

”டெல்லி அரசு மருத்துவமனையில் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு துப்புரவுப் பணிகளைக் கையாளும் ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை. உரிய தேதியில் சம்பளத்தை பெறுவதற்கே போராட வேண்டிய நிலைதான் உள்ளது. மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள மேற்பார்வையாளர்களின் தயவில் தான் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற நிலை உள்ளது” என்று சஃபாய் கம்கர் யூனியன் (Safai Kamgar Union – SKU) தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் கெளதம் கூறினார்.

மேலும் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஹரிஷ் கெளதம் கூறியதாவது:
”மருத்துவமனையில் உள்ள அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது. அதாவது சில சமயங்களில்  ₹8,000, சில சமயங்களில் ₹11,000 என்ற அளவில் தான் கொடுத்துள்ளது. சம்பளத்தை உரிய தேதியிலும் கொடுப்பதில்லை. ஊதியம் வழங்குதல் சட்டம், 1936 இன் படி, முந்தைய மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 7 அல்லது 10 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்த நிறுவனம் துப்புரவுத் தொழிலாளர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை, ஜனவரி 19, 2024 அன்று தான் கொடுத்தது. அதுவும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிறகு தான்.

தொழிலாளர்களின் புகார்களுக்கு  ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் தீர்வு காணாமல், புகார் அளித்தவர்களை பணி நீக்கம் செய்துவிடுகிறது. ஒப்பந்த நிறுவனங்களின் சுரண்டல் நடைமுறைகளையும், பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கடந்த ஆண்டு, ஒப்பந்த நிறுவனத்தின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பெண் துப்புரவுத் தொழிலாளர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இரண்டு எஃப்ஐஆர்கள் டெல்லி போலீசால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டெல்லி போலீசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தை (குறிப்பாக வால்மீகி சமூகத்தை) சேர்ந்தவர்கள். பெரும்பாலும் இந்தத் தொழிலாளர்கள் தங்களை பணிக்கமர்த்துபவர்களால் சாதிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்த ஒப்பந்த நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ₹30,000 முதல் ₹40,000 வரை லஞ்சம் வாங்குவதும் நடக்கிறது. நீங்கள் தொகையைச் செலுத்தவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்காது என்று வேலை தேடி வருபவர்களிடம் கூறி லஞ்சம் வாங்குகின்றனர்.”


படிக்க: 350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!


மருத்துவமனை வளாகத்திலும், முதலமைச்சரின் இல்லத்திலும் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது போலீசு நடவடிக்கை ஏவப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்த சில தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி நடத்தி கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்துள்ளது.

டெல்லி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் ஒப்பந்த நிறுவனங்கள் எதேச்சதிகாரமான முறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதையும் பணிநீக்கம் செய்வதையும் ஒப்புக்கொண்டார். அரசு நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமானாலும் புதிய ஒப்பந்த நிறுவனங்களை பணியமர்த்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினரைக் கட்டாயம் தக்கவைக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த உத்தரவு எங்குமே பின்பற்றப்படுவதில்லை.

குளோபல் வென்ச்சர்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 25 அன்று தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆனால் இப்பிரச்சனை குறித்து சுகாதார அமைச்சர் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

இந்த அவலநிலை என்பது டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் சந்திப்பது மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையும் இது தான்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை!

டைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலின் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளுக்கும் அதிர்ச்சிதரத்தக்கவையாக அமைந்துள்ளன. ஐந்தில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வென்றிருப்பது அவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஒருவித அவநம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது.

தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்திருக்கிறது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் வென்றிருக்கிறது. ஆறுதல் பரிசாக தெலுங்கானாவை வென்றாலும், கர்நாடகத்தின் வெற்றி கொடுத்த உத்வேகத்தை, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பறித்துச் சென்றுள்ளன.

கர்நாடகத் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; “இந்தியா கூட்டணி” உருவாக்கத்திற்கு பிறகு, ஆறு மாநிலங்களின் ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தோற்றத்தை உருவாக்கின. ஏழில் நான்கு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியும், மேற்குவங்கத்தின் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரசின் வெற்றியும் குறிப்பிடத்தகுந்தன. இந்த இரண்டு தொகுதிகளும் பா.ஜ.க-வின் கோட்டையாகும். எனவே, இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது, பலராலும் பா.ஜ.க-வின் வீழ்ச்சியின் தொடக்கமாக கருதப்பட்டது. நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலின் முடிவுகளும் அதன் நீட்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி மூன்று மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருக்கிறது.

இதனையொட்டி பொதுவெளியில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தோல்வி முகத்தால் இத்தேர்தலின் போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த பாசிசக் கும்பலால் ‘மோடி அலை இன்னும் ஓயவில்லை’ என்ற பிரச்சாரம் ஊதிப்பெருக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளும் இந்த வார்த்தைகளை அப்படியே வெளிப்படுத்தவில்லை எனினும் ‘மோடி அலை இன்னும் ஓயவில்லையோ?’ என்ற அச்சம் அவர்களையும் தொற்றிக்கொண்டது.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!


ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து, வினவு ஊடகத்தின் நேரலையில் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், “பா.ஜ.க. வெற்றிபெற்றுவிட்டது என்று நீங்கள் கண்ணீர்விட்டு புலம்புவதில் நியாயம் இல்லை. ஏனென்றால், பிரச்சினை என்பது நாடு தழுவியதாக இருக்கிறது. உங்களது பிரச்சினை என்பது இந்த தேர்தல் தழுவியதாக இருக்கிறது”, “இந்த தேர்தல் முடிவுகள் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்களின் முடிவுகள் அல்ல. அவர்கள் மோடியை (எப்போதோ) நிராகரித்துவிட்டார்கள். இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி-அதானி பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள். இந்த தேர்தல் மூலமாக அவர்களை வீழ்த்த முடியாது என்பதை மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு வகையில் மக்கள் நிரூபிக்கிறார்கள்” என்றனர்.

இந்துத்துவப் பாசிசத்தை நாடு தழுவியதொரு பிரச்சினையாக பார்க்காமல் ஒட்டுமொத்த அபாயத்தையும் தேர்தல் தழுவியதாக பார்க்கும் பார்வை விதைக்கப்பட்டுள்ளதன் விளைவாக, பலரால் இதன் பொருளை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்.

ஆனால், அண்மையில் சில துடிப்புமிக்க இளைஞர்கள் இந்துராஷ்டிரத்தின் சின்னமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்து, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று முழங்கிய சம்பவமானது, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மோடியை நிராகத்துவிட்டார்கள், பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது:

கடந்த டிசம்பர் 13-அம் தேதியன்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் புகைக் குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்” என்று முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு இளைஞர்கள் புகைக்குண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அவர்களை கைதுசெய்தபோது, நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமெழுப்பிய நீலம் ஆசாத் என்ற பெண், “என் பெயர் நீலம். இந்த இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை, காவல்துறை லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என பாசிஸ்டுகளின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தி முழக்கமிட்டார்.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள ஒரு நாட்டில், தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டு, குரல்வளை நசுக்கப்பட்டு, வேலையின்றி நிர்கதியாக்கப்பட்ட இளைஞர்கள், தங்களது உயிரைப் பணயம் வைத்து நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்திய நிகழ்வானது இந்தியா முழுக்க பெரும் விவாதப் பொருளானது. பத்து நாட்களுக்கு முன்பாகவே, பாசிச பா.ஜ.க. கும்பல் மூன்று மாநிலங்களில் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்திருந்த நிலையில், மாவீரன் பகத்சிங்கை தமது முன்மாதியாக அறிவித்துக்கொண்ட அந்த இளைஞர்கள், பாசிஸ்டுகளின் தர்பாரை கணநேரத்தில் போராட்ட அரங்காக மாற்றி, நாட்டு மக்களின் சார்பாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மிளிரச் செய்தது.

மேலும், ஐந்து மாநிலத் தேர்தலில் பாசிச பா.ஜ.க. தென்மாநிலமான தெலுங்கானாவில் மட்டும் தோல்வியடைந்து பசுவளைய மாநிலங்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையொட்டி, தென்மாநிலங்களில் மட்டும்தான் பாசிச எதிர்ப்பு உள்ளதா என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட விவாதங்களை இச்சம்பவம் நொறுங்க செய்தது. பாசிஸ்டுகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் கிளம்பிவந்தது, “பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது” என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

தற்போதும், வடஇந்தியாவில் மோடி-அமித்ஷா பாசிசக் கும்பலால் நிறைவேற்றப்பட்ட பாசிசச் சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தில் லாரி ஓட்டும் தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ள கூறுகளை எதிர்த்து ‘இந்துத்துவாவின் இதயம்’ என்று சொல்லப்படுகின்ற மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடப்பது, பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது என்பதற்கு மற்றொரு அண்மைக்கால சான்றாகும்.

எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அபாயம்

ஆனால், இதனை பாசிஸ்டுகளை கதிகலங்கச் செய்த ஒரு கலக நடவடிக்கையாக அதை பார்க்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூச்சலிட்டனர். இது மக்கள் போராட்டத்தின் ஒரு வடிவம், பாசிச பா.ஜ.க. கும்பலின் கோர ஆட்சியே இளைஞர்களை இதை நோக்கி தள்ளியுள்ளது என்று பார்க்காமல் இதுவும் பாசிஸ்டுகளின் சதியாக இருக்கலாம் என்று மக்களுக்கு ‘பீதியூட்டினர்’. “நுழைவுச்சீட்டை வாங்கிக்கொடுத்தது பா.ஜ.க. எம்.பி”, “2001 தாக்குதல் நினைவு நாள்” என்று சில விவரங்களை தங்களது வாதத்திற்கு வலுசேர்ப்பதற்கு ஏற்ப போர்த்திக் கொண்டார்கள். ஆனால், மக்கள் பக்கம் நில்லாமல், ‘நாடாளுமன்ற மாண்பின் மீதான தாக்குதல்’ என்று மிக இழிவான நிலையில் நின்றுகொண்டு பிரச்சாரம் செய்தார்கள்.

முந்தைய நாள் வரை நாடாளுமன்றத்தில், “இது ஒரு சர்வாதிகார ஆட்சி” என்பதை தான் எதிர்க்கட்சியினர் ஒப்பாரியாக வைத்துகொண்டிருந்தனர்.  ஆனால் புகைக்குண்டு வீசிய இளைஞர்கள் அதனை எச்சரிக்கையாக சொல்லும்போது போலி ஜனநாயகப் புதைசேற்றில் மூழ்கி போன எதிர்க்கட்சிகளால் அதனை ஏற்றுகொள்ள முடியவில்லை. பகத்சிங்குகளை பாசிஸ்டுகள் கண்டு அஞ்சுவதை போலவே எதிர்க்கட்சியினரும் அஞ்சினர்.

ஆனால், பாசிசப் பேயாட்சியின் கீழ் ‘நாடாளுமன்ற மாண்புக்காக’ குரலெழுப்பியவர்களுக்கு, அந்த மாண்பு எப்பேர்ப்பட்டது என்பதை பாசிஸ்டுகள் உணர்த்திவிட்டார்கள். பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் தேவை என்று கேட்டவர்களை, ‘நாடாளுமன்றத்தின் மாண்பை’ கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வெளியே தள்ளியது பாசிசக் கும்பல். அடுத்தடுத்து வாயை திறந்த எதிர்க்கட்சி எம்.பி-க்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து, 10, 20, 40 என்ற கணக்கில் கொத்து கொத்தாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியே தூக்கி வீசியது பாசிசக் கும்பல்.


படிக்க: நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!


நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இக்கூட்டத்தொடரில், மக்களவையிலிருந்து 100 எம்.பி-க்களும் மாநிலங்களவையிலிருந்து 46 எம்.பி-க்கள் என மொத்தம் 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்திய மக்கள் தொகையில் கால் சதவிகிதமான 34 சதவிகித மக்களின் பிரதிநிதிகள் இந்துராஷ்டிர நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வீசப்பட்டனர்.

இதுநாள்வரை, அம்பானி-அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக்கை அணைப்பது, எதிர்க்கட்சியினர் பேசுவதை நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது, பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தினால் எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்றத்திலிருந்து தூக்கியெறிவது என்பதை இயல்பு நிலையாக மாற்றி வந்த பாசிஸ்டுகள், எதிர்க்கட்சிகளை கொத்து கொத்தாக வெளியே தூக்கி வீசியெறிந்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தி முடிப்பதையும் இயல்பு நிலையாக மாற்றினர்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதாகைகளை வைத்து முழக்கம் எழுப்பி ‘போராடிக்’ கொண்டிருந்தபோது அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த பத்து மசோதாக்களையும் முந்தைய கூட்டத்தொடர்களில் நிலுவையில் இருந்த ஏழு மசோதாக்களையும் எந்தவித ‘தொந்தரவுமின்றி’ நிறைவேற்றியது பாசிசக் கும்பல். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் தொலைத்தொடர்பு மசோதா 2023, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023, இந்துராஷ்டிர சட்டங்களை அமல்படுத்த இந்திய தண்டனை சட்டங்கள் ஆகிய பாசிசச் சட்டங்களும் அதில் அடக்கம்.

ஆனால், இதில் கொடுமை என்னவென்றல், இவ்வளவு நடந்த பிறகும் எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. நாடாளுமன்றம் கேலிக்கூத்தாக்கப்பட்டிருப்பதை 146 எம்.பி.க்களும் தமது தொகுதி மக்களிடம் சென்று அம்பலப்படுத்தவில்லை. “நீங்கள் எங்களை உறுப்பினர்களாக தேர்வு செய்தீர்கள், ஆனால் மோடியின் அவை எங்களை நீக்கியதன் மூலம் மக்களாகிய உங்களது அதிகாரத்தை பறித்துள்ளது; இதற்கு நாம் சேர்ந்துதான் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று மக்களிடம் அறைகூவல் விடுக்கவில்லை. போலி ஜனநாயக நாடாளுமன்றப் புதை சேற்றுக்குள் மூழ்கிபோன எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் முடியும்வரை நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் போட்டுவிட்டு கூட்டத்தொடர் முடிந்ததும் கிளம்பி சென்றுவிட்டனர்.

இது போராட்ட வழிமுறை:

இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.

நாடாளுமன்றமோ மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான அரங்கமாக இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமாகவே அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படுகின்றன., பெரும்பாலான மசோதாக்கள் பண மசோதாக்கள் என்ற வகையினத்தில் கொண்டுவரப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஒப்புதலின்றியே நிறைவேற்றப்படுகின்றன. மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி பரிசீலிக்கும் நடைமுறை ஏறத்தாழ பா.ஜ.க-வின் ஆட்சியில் காலாவதியாகிவிட்டது. கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி, அதானியின் மெகா ஊழல், மணிப்பூர் கலவரங்கள் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு கூட முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் இடைநீக்கங்கள், போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தி உறுப்பினர் தகுதியையே நீக்கும் சதிச்செயல்கள் என பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இருந்தாலும், அது இல்லாததுபோல்தான் என்றாகிவிட்டது.

ஆதாரை பண மசோதாவாக நிறைவேற்றியது, பணமதிப்பிழப்பு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், நீதித்துறை பாசிஸ்டுகளின் கைப்பாவையாக செயல்படுவதற்கான எடுத்துக்காட்டுகளை குவித்துக் கொண்டிருக்கின்றன. இதனோடு, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை போன்ற சொல்லிக்கொள்ளப்படும் சுயேட்சையான நிறுவனங்களும் பாசிஸ்டுகளின் அடியாட்படைகள் என்பது ஊரறிந்த ஒன்றாக மாறிவிட்டது. ‘ஒரு நிறுவனம் பலவீனப்பட்டால், பிற நிறுவனங்கள் அதனை முறைப்படுத்தும்’ என்று சொல்லிக்கொள்ளப்படும் இந்தியாவின் அரசுக்கட்டமைப்பு பாசிஸ்டுகளின் ஆட்சியில் முற்றிலுமாக அழிந்துவிட்டது.

இத்தகைய சூழலில்தான் மக்கள் தேர்தலையோ அரசு நிறுவனங்களையோ நம்பாமல் வீதிப் போராட்டங்களுக்கு திரள்கிறார்கள். அந்தவகையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் பல போராட்டங்கள் பாசிசக் கும்பலை பணிய வைக்கவும் செய்துள்ளன.

சான்றாக, தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வுபெறும்வரை தங்களது வருங்கால வைப்புநிதியிலிருந்து, சேமிப்புகளை எடுப்பதை கட்டுப்படுத்தும்வகையில் 2016-ஆம் ஆண்டு மோடி அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பெங்களூரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் முதல் நாடெங்கும் பல தொழிலாளர்கள் உடனடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பின்வாங்கப்பட்டது; அதேபோல, 2017-ஆம் ஆண்டு வங்கிகள் திவாலானால், அதனை மக்களின் சேமிப்புகளைக் கொண்டு ஈடுசெய்யும் சதித்திட்டமான நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா (எஃப்.ஆர்.டி.ஐ) வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கப்பட்டது; பா.ஜ.க-வின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இப்போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி 2020-ஆம் ஆண்டின் முதற்பகுதி வரை நீடித்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டமும், அதைத்தொடர்ந்து ஓராண்டுகாலம் வரை நீடித்த விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டமும் பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளுவதில் முக்கிய பங்காற்றின.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதையும் பார்க்க வேண்டும்.

மக்கள் பக்கம் நிற்காதவரை தேர்தல் வெற்றி கூட கிடையாது

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசிய சம்பவத்துடன் சேர்த்து, இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை சொல்லும்போது, இந்தியாவின் உழைக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் களப்போராட்டங்கள் மூலம் பாசிஸ்டுகளை நிராகரிப்பது நிரூபிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது, தேர்தலில் மட்டும் பெரிய அளவில் பின்னடைவுகளை சந்திக்காமல் பா.ஜ.க. வெற்றி அடைந்துகொண்டிருப்பது எப்படி என்ற கேள்வி எழலாம்.

இந்தியாவின் தேர்தல்முறை என்பது இயல்பிலேயே எதேச்சதிகாரமானது. அது சர்வாதிகாரக் கும்பலுக்கே வெற்றியை தரும் தன்மை கொண்டதால், முன்பிருந்த எல்லா தேர்தல் கட்சிகளைக் காட்டிலும் பாசிசக் கும்பலான பா.ஜ.க-விற்கே இத்தேர்தல்முறை மிகவும் சாதகமாக உள்ளது. இது பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தேர்தல் நிதி பத்திரச் சட்டம், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற தேர்தலை பாசிசமயமாக்கும் சட்டங்கள் சட்டப்பூர்வமாக அமலாவது அதற்கான எடுத்துக்காட்டு.

ஆனால், இதனைவிட முக்கிய ஒரு விடயம் ஒன்று உள்ளது. இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வரும் சூழலில், நாட்டில் பாசிச அபாயம் அரங்கேறிவரும் சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்கின்ற இந்தியாவின் எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணி கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை எத்தகையதாக உள்ளது?

பாசிச எதிர்ப்பு முகாமாக முன்னிறுத்தப்படும் இந்தியா கூட்டணிக்கும் பாசிஸ்டுகளுக்கும் பெரியளவில் எந்த வித்தியாசமும் காண முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சிகள் உள்ளன. பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் இந்துத்துவத்தையும் கவர்ச்சிவாதத்தையும் பின்பற்றி பாசிச பா.ஜ.க. கும்பலின் போலியாகவே எதிர்க்கட்சிகள் தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றன.

பாசிஸ்டுகள் அடக்குமுறைகளை ஏவி மக்கள் போராட்டங்களை ஒடுக்குகின்றனர் என்றால் எதிர்க்கட்சிகள் அப்போராட்டங்களை நிராகரிப்பது, அலட்சியப்படுத்துவது, கொச்சைப்படுத்துவது என்று அதையே வேறு வடிவில் வேறு அளவுகோலில் செய்து கொண்டிருக்கின்றனர்.

சொந்தமுறையில் ஒரு போராட்டத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ கடையடைப்பையோ அறிவித்து நடத்த முடியாவிட்டாலும் மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுக்கும் போராட்டங்களை ஆதரவு தெரிவித்து அதனை வளர்த்தெடுக்கும் வேலையை செய்யக்கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. மேலே வரிசைப்படுத்திய மக்கள் போராட்டங்களிலும் அதுதான் அனுபவம். இதனால் மக்களால் எதிர்க்கட்சிகளை நம்பிக்கை கொண்ட ஒரு முகாமாக பார்க்க முடிவதில்லை.மக்களை நசுக்கிவரும் பாசிசச் சட்டத்திட்டங்களை அடித்துநொறுக்கும் வகையிலான மக்கள் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மக்கள் பக்கம் நிற்காத வரை அவர்களால் தேர்தலில் கூட பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியாது.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் | 550வது நாள் போராட்டம்! | காணொளி

ரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் 550 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 550-வது நாளான ஜனவரி 26 அன்று மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு மாநில பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு | AISEC | நேரலை காணொளிகள்

னவரி 27 அன்று அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC) தலைமையில் தமிழ்நாடு மாநில பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாடு வினவின் பக்கம் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. அந்த காணொளிகளை வினவு வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

இணைப்பு 4

இணைப்பு 5

இணைப்பு 6

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

ந்தியாவில் தேர்தலில் வென்று சட்டப்பூர்வ வழிமுறையிலேயே நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை முழுவதுமாக சிதைத்து, இந்திய சமுதாயத்தை இந்துராஷ்டிரத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் வழிமுறையை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றிபெறுவதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் பா.ஜ.க., சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டுவதன் மூலமாக தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை செல்லாக்காசாக்கி வருகிறது. தேர்தல் நடக்கும்; எதிர்க்கட்சிகள் போட்டிப் போட முடியும்; மக்கள் வாக்களிப்பர்; ஆனால், பா.ஜ.க. கும்பல்தான் தேர்தலில் வெல்லும் என்ற புதிய நிலையை சட்டப்பூர்வமாகவே உருவாக்கி வருகிறது.

இதற்காக பல்வேறு சட்டப்பூர்வ பாசிச வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய தேர்தல் நிதிப்பத்திரம், வாக்குவங்கியை இந்துத்துவமயமாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களின் தொகுதிகள் மறுவரையறை, மக்களை கண்காணிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டங்கள் திருத்தம் 2021, குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் அமல்படுத்தப்பட்ட கட்டாய வாக்குப்பதிவு போன்றவை அதற்கான நடக்கவடிக்கைகள்தான். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக, பாசிஸ்டுகள் தங்கள் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் திட்டங்களான ஒரே நாடு ஒரே தேர்தல்”, “தொகுதிகள் மறுவரையறை” போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நாட்டின் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடுவது, வழிநடத்துவது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் அரசியல் சாசன அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் கடைசி துளி அதிகாரத்தையும் முழுவதுமாக தன்வயப் படுத்திக்கொள்ளும் வகையில் “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனை மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023”-ஐ நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க கும்பல். எதிர்க்கட்சிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாசிச வழிமுறையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு தற்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான வழிமுறை ஏதும் வகுக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-இன் படி, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் அதுவரை, அப்பணி குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 73 ஆண்டுகளாகியும் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரசும் பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான வழிமுறையை உருவாக்கும் சட்டத்தை இயற்றவில்லை. அது அக்கட்சிகளுக்கு தேவைப்படவுமில்லை. ஏனெனில், பெரும்பாலும் ஆளும் அரசுகள் கைக்காட்டும் நபர்களே குடியரசுத்தலைவரால் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போலி ஜனநாயக நடமுறையை கட்சி வேறுபாடின்றி காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் நிலவுகின்ற போலி ஜனநாயக நடமுறைகள், வழிமுறைகளை கூட மதிக்காமல் அதனை ஒழித்துக்கட்டிவிட்டு பாசிசக் கட்டமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொள்ளத் தொடங்கியது.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!


2022-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, தற்போது தேர்தல் ஆணையராக உள்ள அருண் கோயலின் பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதே நாளில் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அதற்கு முந்தைய நாள்தான் (நவம்பர் 18, 2022) அருண் கோயல், தான் முன்னர் வகித்துவந்த பதவியிலிருந்து விருப்ப ஓய்வை அறிவித்திருந்தார். மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, “பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு (Selection Committee) தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்” என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில்தான், தற்போது இம்மசோதாவை சட்டமாக்கியுள்ளது பாசிசக் கும்பல், இச்சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கழிவறை காகிதமாக மாற்றியுள்ளது பாசிசக் கும்பல்.

பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியான, தேர்தல் ஆணையம்

பாசிஸ்டுகளால் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டத்தின் அடிப்படையில், பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்படுகின்ற மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரே இனி தேர்தல் ஆணையர்களுக்கான தேர்வு குழுவாக செயல்படுவர். அதாவது, ஆளும் அரசை சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இக்குழுதான் இனி தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும்.

முதலில், மத்திய சட்டத்துறை அமைச்சர் தலைமை தாங்கும் தேடுதல் குழு (Search Committee) ஐந்து நபர்களின் பெயர்களை மேலே குறிப்பிட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை தேர்வு குழு தேர்ந்தெடுக்கும். இதில் கேலிக்கூத்து என்னவெனில், தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படுகின்ற ஐந்து நபர்கள் அல்லாமல் வேறு ஒருவரைக் கூட தேர்வு குழுவால் தேர்வு செய்ய முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான தேர்வு குழு இல்லாவிட்டாலும் இக்குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படையிலேயே சிறுபான்மையாக உள்ள எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதித்துவமும் இக்குழுவிற்குத் தேவையில்லை என்றாகிவிட்டது.

மொத்தத்தில், பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும். குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகள் கூட இனி தேர்தல் ஆணையத்திற்குள் தவறுதலாக கூட நுழைய முடியாமல் முழுக்க முழுக்க சங்கிகளுக்கான மடமாக மாற்றப்படும் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில், இந்திய தேர்தல்களின் ‘வாட்ச் டாக் (Watchdog)’ என்று அழைக்கப்படுகின்ற தேர்தல் ஆணையம் தற்போது பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாசிஸ்டுகள் தேர்தல் ஆணையத்தை தாங்கள் விரும்பிய வகையில்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சட்டம் நிறவேற்றப்பட்டிருப்பது எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் அடியாள் படையாக மாற்றவே வழிவகுக்கும். ஏனெனில், இந்தியாவின் இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 2024 உடன் முடிவடைகிறது. தற்போது அவசர அவசரமாக இச்சட்டம் நிறைவேற்றியுள்ளதன் மூலம் அடுத்த தேர்தல் ஆணையர் பதவிக்கு அப்பட்டமான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டை தேர்தல் ஆணையராக நியமிக்க முடியும்.

மேலும் புதிய சட்டத்தில், “தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் இருந்தாலும், தற்போதைய அல்லது முன்னாள் தேர்தல் ஆணையர்களின் எந்தவொரு செயலுக்கும், காரியத்துக்கும், வார்த்தைக்கும் எந்த நீதிமன்றமும் சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளைத் தொடரக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அப்பட்டமான தேர்தல் முறைகேடு வேலைகளில் ஈடுபடவுள்ளதை வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர், பாசிஸ்டுகள்.

இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா?

பாசிஸ்டுகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான வழக்குரைஞர்களும் செயல்பாட்டாளர்களும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இச்சட்டம் ஜனநாயகத்தை மீறுகிறது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

இவரை போலவே பலரும், இச்சட்டம் நிர்வாகத்தின் (Executive) அதிகாரங்களை சட்டமியற்றும் அமைப்பில்  (Legislature)குவிக்கிறதென்றும், அரசியல் அமைப்பு சட்டத்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் (Separation of Powers) மற்றும் சோதனைகள் மற்றும் சமநிலைக்கு (Checks and Balances) எதிராக உள்ளதென்றும் கூறுகின்றனர். எனவே, மோடி அரசு நீதித்துறையின் அதிகாரத்தில் தலையிடும் நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டுவந்த போது உச்சநீதிமன்றம் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதைப்போல் இந்த சட்டத்தையும் தடுத்துநிறுத்த வேண்டும் என்றும் பலரும் பேசி வருகின்றனர்.

ஆனால் உண்மையில், இச்சட்டம் இயற்றப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா என்றால், அப்படியில்லை.


படிக்க: விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!


அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-இல், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வு குழு அமைத்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பிலும், “இது (தேர்தல் ஆணையர்களை நியமிப்பது) தொடர்பான சட்டம்  நாடாளுமன்றத்தால் இயற்றப்படும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், பாசிஸ்டுகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.

மேலும், பா.ஜ.க-வால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் பாசிசத்தன்மை கொண்டது என்பதனாலேயே இதற்கு முன்னர் இருந்த முறை மிகவும் ஜனநாயகமானது என்றோ முன்னர் தேர்தல் ஆணையம் சுயேட்சையான அமைப்பாக இருந்தது என்றோ புரிந்துகொள்ளக் கூடாது. இதற்கு முன்னர் இருந்த முறையையும் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுமே அவர்களுக்குத் தகுந்தாற்போல் வளைத்து பயன்படுத்தி வந்தனர்.

சான்றாக, தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி ஒரு தலைமை தேர்தல் ஆணையரும் இரண்டு பிற தேர்தல் ஆணையர்களும் உள்ளனர். ஆனால், ஆரம்பத்தில் ஒரே ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பார்.

1989-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் நேரம் தீர்மானிப்பது, தேர்தலை நடத்துவது போன்றவற்றில் அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி காங்கிரஸ் அரசுக்கு வளைந்துகொடுக்கவில்லை என்பதனால் கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தது. இதன் மூலம் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படும் வகையில் அவரின் அதிகாரத்தை பறித்தது. இதனை, அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 324(2)-ஐ பயன்படுத்தியே ராஜீவ் காந்தி செய்தார்.

அடுத்துவந்த வி.பி.சிங் ஆட்சியில், தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு நபர் அமைப்பாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்குபிறகான நரசிம்மராவ் ஆட்சியில், பெரி சாஸ்திரி போல தேர்தலில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட  டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது அவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அக்டோபர் 1, 1993-இல் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடிரென இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்து தேர்தல் ஆணையம் மீண்டும் மூன்று நபர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கின்ற அரசியலமைப்பின் 324-வது பிரிவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோற்றுப்போனார், டி.என்.சேஷன்.

எனவே, இதற்கு முன்னர் இருந்த வழிமுறையும் ஜனநாயகப்பூர்வமானது அல்ல, அது பாசிஸ்டுகளுக்கு தங்களது கைக்கூலிகளை நியமிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது என்பதும், நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பும் அரசியல் அமைப்பு சட்டமும்தான் பாசிசம் வளர்ந்து வருவதற்கான விளைநிலமாக உள்ளது என்பதும் தெளிவாகிறது. எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து பேசினால், அதை நிறைவேற்றுதற்கான வாய்ப்பை வழங்கிய அரசியல் சாசனம் குறித்தும் பேசியாக வேண்டும். ஒருவேளை அப்படி பேசினார்களேயானல், அனைவருக்குமான ஜனநாயகம் என்ற பெயரில் பாசிஸ்டுகளுக்கும் ஜனநாயகம் வழங்கும் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் உண்மைத்தன்மை அம்பலமாகி, அது எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக  சென்று முடிந்துவிடும்.

எனவே, மோடி அரசின் பாசிச சட்டத்திட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மோடி அரசு கொண்டுவரும் தேர்தல் ஆணையர்கள்  சட்டத்தைத் திரும்பபெற வேண்டும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும், நிர்வாகத்துறை தனது அதிகாரத்தை மீட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட்டுவிட்டு, பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம் வழங்கும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் இறங்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோயிலை விமர்சித்தவர்கள் கைது: மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறை!

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் குறித்து விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் ஜனவரி 22 அன்று திறக்கப்பட்ட ராமர் கோயில் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டியுள்ளது ஜம்மு-காஷ்மீர் போலீசு. ஜம்மு மாவட்டத்தை சேர்ந்த கன்னா – சார்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜாஃபர் உசேன் ஆகிய இருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் கோவில் குறித்த விமர்சன கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக இதுவரை 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஜம்மு-காஷ்மீர் போலீசு. ஜம்மு பிரிவில் உள்ள ரியாசி, ரம்பன், ரஜோரி மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 22 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும், அனைத்து பதிவுகள் மற்றும் கருத்துகளும் கண்காணிக்கப்படும் என்றும் ராமர் கோவில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசு எச்சரிக்கை விடுத்திருந்தது.


படிக்க: ராமன் கோவிலை எதிர்த்து சென்னையில் போராட்டம் | ஊடகங்களில் வெளியான வீடியோக்கள்


1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று காவி பயங்கரவாதிகளால் பாபர் மசூதி இடிப்பப்பட்டது. ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பொய்ப்பிரச்சாரமானது கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதனை வைத்து நாடுமுழுவதும் மதக்கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது சங் பரிவாரக்கும்பல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம், பாபர் மசூதி இடிக்கப்பட்டதென்பது சட்டவிரோதனானது என்று கூறிய உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்ற இந்த அநீதி தீர்ப்பை எதிர்த்து குரல் எழுப்பியவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது போலீசும், காவிக்கும்பலும்…

தற்போது மோடி அரசின் தலைமையில் பல்லாயிரம் கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் திறப்பை நடத்திய பாசிச மோடி அரசு, பாபர் மசூதியின் இடிபாடுகளின் மேல்தான் – இஸ்லாமிய மக்களின் பிணங்களில் மீதுதான் – ராமர் கோவிலை கட்டி வருகிறது.

இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடும்போம். வரலாற்றின் அநீதிகளையும், உண்மையான வரலாற்றையும் ஒருபோதும் காவிப்புழுதியால் மறைத்துவிடமுடியாது!


இலக்கியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி

2014 ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடனே, ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று இந்திய நிதி ஆணையத்துடன் அரசியல் அமைப்பிற்கு விரோதமாக பேச்சுவார்த்தைகளை மோடி நடத்தினார் என்று NITI ஆயோக்கின் தலைவர் (CEO) பி.வி.ஆர். சுப்ரமணியம் (B.V.R. Subrahmanyam) கூறினார். இதனை இந்தியாவின் எந்த ஊடகங்களும் பெரிதாக செய்தியாக்கவில்லை. மேலும் அரசியல் கட்சிகளும், ஐனநாயக சக்திகளும் கூட இதனை “அரசியல் அமைப்பு மீறல்” என்ற கட்டத்திற்குள் மட்டுமே கண்டித்தனர். ஆனால் இந்த நிகழ்வு வர்க்க பின்னணி கொண்டது என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு இயல்பாகவே மக்கள் விரோதமாக வெளிப்படைத் தன்மையற்றதாக இருக்கிறது என்பதையும் இந்த நிகழ்வை பகுத்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) என்ற அரசு சாரா சிந்தனைக் குழாமால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட   கருத்தரங்கில்  பேசும் போது சுப்ரமணியம் மேற்கண்ட தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

2014-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த சுப்பிரமணியம், மோடிக்கும் நிதி ஆணையத்தின் தலைவர் ஒய்.வி. ரெட்டிக்கும் இடையே நடந்த “அரசியல் அமைப்பு விரோதமான” நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மாற்றுவது பற்றிய பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக இருந்தார்.

இருப்பினும், ஒய்.வி.ரெட்டி மோடியின் இந்த புறவாசல் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதனால், மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய பங்கை வெட்டிச் சுருங்குவதில் மோடி வேறொரு வழியை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொது நிதி வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான நிதி ஆணையம் (Finance Commission), “செஸ்” அல்லது “கூடுதல் கட்டணம் எனப்படும் Surcharges” என்ற இரண்டு வரிப் பிரிவுகளை  தவிர்த்து, மத்திய அரசு வசூலிக்கும் அதன் வரிகளில் இருந்து மாநிலங்களுடன் எவ்வளவு சதவீதப் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.


படிக்க: இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!


இந்த நிதி ஆணையம், 2014 டிசம்பரில் சமர்ப்பித்த அறிக்கையில், அதுவரை மத்திய வரிகளில் மாநிலங்கள் பெற்று வந்த பங்கான 32 சதவீதத்தை, 42 சதவீதமாக உயர்த்தி வழங்க பரிந்துரைத்தது. ஆனால், பிரதமராக இருக்கும் மோடியும், அவரது நிதி அமைச்சகமும், மாநிலங்களின் வரிப் பங்கை 33 சதவீதம் என்ற நிலைக்கு குறைக்க விரும்பினர். அதனால் தான் அன்றைய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்த ஒய்.வி.ரெட்டியிடம் புறவாசல் பேரம் பேசினார் மோடி. ஆனால் பேரம் படியவில்லை.

ஆனால், மாநிலங்களின் வருவாயைக் குறைக்கும் தனது அரசாங்கத்தின் சதித்தனத்தை மறைத்த மோடி, பிப்ரவரி 27, 2015 அன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில்: “தேசத்தை வலுப்படுத்த, நாம் மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும்… நிதி ஆணைய உறுப்பினர்களிடையே ஒரு சர்ச்சை உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். நாங்கள் செய்யவில்லை. ஆனால், மாநிலங்கள் வளப்படுத்தப்பட வேண்டும், பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். நாங்கள் மாநிலங்களுக்கு 42 சதவீத நிதிப் பகிர்வை வழங்கினோம். சில மாநிலங்களில் இந்த பணத்தை வைத்திருக்கும் அளவுக்கு பெரிய கருவூலங்கள் கூட இருக்காது” என்று கூறினார். இப்படி பச்சையாக பொய் பேசுவது பாசிஸ்டுகளுக்கே உரித்தான பண்புதான். ஆனால் பாசிசம் செழித்து வளர இடம் தரும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பில் ஒரு வழி அடைக்கப்பட்டால், மற்றொரு வழி நிச்சயம் தோன்றும்.

அந்தவகையில், 2015-ஆம் ஆண்டிற்கான பட்ஜெடில் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை கணிசமாக குறைத்து மாநில அரசுகளுக்கான பங்கை வெட்டியது மோடி அரசு.

2015-ஆம் ஆண்டின் பட்ஜெட் இரண்டு நாட்களில் எழுதப்பட்டது என்பதை சுப்பிரமணியம் கூறுகிறார். நிதி ஆணையத்திடம் புறவாசல் பேரம் படியாததால், குறைந்த காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை தனக்கு சாதகமாக எழுதியது மோடி கும்பல்.


படிக்க: அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை


குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சூடான சமைத்த உணவை வழங்குவது போன்ற நலத் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை மோடி அரசு பாதியாக குறைத்ததாக கூறினார் சுப்பிரமணியம். 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீட்டில் முந்தைய ஆண்டை விட 18.4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை முந்தைய ஆண்டை விட பாதியாக குறைத்திருந்தது மோடி கும்பல்.

புறவாசல் பேரத்தின் மூலம் மாநிலத்தின் வரிப் பங்கைக் குறைக்க முடியாது என்று மோடி கும்பல் கண்டறிந்ததும், செஸ் மற்றும் கூடுதல் வரி (surcharge) எனப்படும் வரிகளின் தொகுப்பை சீராக அதிகரித்தது. இந்த வரிகளில் மாநிலங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

2017-18 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையில், மத்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்ட மொத்த “செஸ்” மற்றும் “கூடுதல் வரி” (surcharge) இருமடங்காக அதிகரித்தது. அந்த காலகட்டத்தில், மொத்த வரி வருவாயில் “செஸ்” மற்றும் “கூடுதல் வரி” ஆகியவற்றின் பங்கு 13.9 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாக உயர்ந்தது.

மேலும், மோடி அரசாங்கம் மாநிலத்தின் வரி வளங்களை அழித்து, மாநில நிதி சுயாட்சியை அழிக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) ஜூலை 2017-இல் அறிமுகப்படுத்தியது. ஏராளமான உள்ளூர் வரிகளை தேசிய வரிகளாக மாற்றி, ஒரே சந்தையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது தான் GST வரிமுறை. இது கார்ப்பரேட்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். இதனால் சிறு, குறு வியாபாரங்கள், தொழில்கள் நசிந்து போனதை மக்கள் அனைவரும் அறிவர்.

GSTக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ​​GSTக்கு பிந்தைய காலகட்டத்தில் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. GST வரி பாக்கியை கூட மாநிலங்களுக்கு சரியாக கொடுக்காமல் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது பாசிச மோடி அரசு.

சுப்பிரமணியத்தின் உரையின் சாரமாக இருந்த இந்த ஒட்டுமொத்த விவரிப்புகளும் நமக்கு ஒன்றை மட்டும் தெளிவாக புலப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளப்படும் இந்த கட்டமைப்பு மக்கள் விரோத போக்குகளை, அதிகார அத்துமீறல்களை அதன் உள்ளார்ந்த இயல்புகளாக கொண்டுள்ளது. அதனால் தான் அது பாசிசம் செழித்து வளர்வதற்கேற்ற விளைநிலமாக உள்ளது. மாநிலங்களின் வரி பங்கை இத்தனை மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான வழிகளின் மூலமாக குறைத்து மாநிலங்களை நிதியின்றி வதைப்பதானது பாஜகவின் வர்க்கப்பாசத்தையே வெளிப்படுத்துகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களுக்கு சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும் கொடுத்து அவர்களை கொழுக்கவைக்க தான் மோடி அரசு மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கிறது. மக்களின் வரிப்பணம் சமூக நலத்திட்டங்களின் மூலம் மக்களை சென்றடையாமல் கார்ப்பரேட் சலுகைகளுக்காக திருப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இப்படி நாட்டின் உயிர்நாடியான விஷயமான மாநில வரிப் பகிர்வில் நடக்கும் மக்கள் விரோத திரைமறைவு செயல்பாடுகளைக்கூட அதிகார வர்க்கத்தின் ஒரு ஆள் சொல்லிதான், அதுவும் 10 ஆண்டுகள் கழித்து தான் தெரியவேண்டிய நிலையில் இந்திய ஜனநாயகம் இருக்கிறது. மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளில் கூட இந்த அரசமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதில்லை. ஏனெனில் அது அதன் இயல்பிலேயே இல்லை.

அதனால், ஒவ்வொரு பாசிச நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதும், அதற்கு விளைநிலமாக இருக்கும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பை அம்பலப்படுத்த வேண்டும். இதனை மாற்றியமைக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பதை உரைக்கவேண்டும்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube