privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபுஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள் !

புஷ்ஷுக்கு செருப்படி – தமிழகத்தில் கொண்டாட்டம் – புகைப்படங்கள் !

-

கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி  – உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.

அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!

2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏
இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.

எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை.

 1. வெல்லட்டும் வெல்லட்டும்
  ஈராக்கிய மக்களின் போரட்டம் வெல்லட்டும்

  கொஞ்சம் கலகத்திலேயும் கொண்டாட்டம் நடக்குது வந்து பார்த்து விட்டு போங்களேன்.
  இன்னயோடு வெற்றிகரமா 3- வது நாளை நெருங்கிடுச்சு “செருப்பின் புனிதம்”

  கலகம்

  http://kalagam.wordpress.com/

 2. புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்!

  தோழனே!

  எல்லோரும்
  கவலைப்படுகிறார்கள்
  புஷ்ஷை நோக்கி
  வீசிய செருப்பில்
  குறி தவறி
  போய்விட்டதே என்று…!

  தோழனே!

  இங்கே
  பாதணி என்று
  குறிப்பிடாமல்
  செருப்பு என்றே
  விளிம்புகிறேன்.
  பாதணியை விட
  செருப்பில்
  வீரியம் தெறிப்பதால்..!

  தோழனே!

  உலகம் முழுவதும்
  மக்கள் கவலைப்படுகிறார்கள்
  குறி தவறிப்போய்விட்டதே என்று..!
  இல்லை…. இல்லை…
  ஒளிப்படத்தை
  மீண்டும் பார்
  புஷ் குனிந்து
  கொள்ள
  அமெரிக்க
  தேசிய கொடியின்
  மீதல்லவா பட்டு தெறித்தது…!

  தோழனே!

  எனக்கு கூட
  ஓர் சிந்தனை
  செருப்பை
  வீசி பார்த்து
  பயிற்ச்சி
  எடுத்திருந்திருக்கலாமே என்று..!

  தோழனே!

  நீ ஆயுதத்தால்
  தாக்கி இருந்தால் கூட
  அவன் அன்றே
  இறந்திருப்பான்.
  செருப்படியால் அவனை
  வாழும் பிணமாக
  அல்லவா மாற்றிவிட்டாய்!

  தோழனே!

  பத்திரிக்கையாளர்களை
  தீவிர சோதனை
  செய்தது ஆயுதம்
  வைத்திருக்கிறீர்களா என்று
  ஆனால், அதை விட
  அதிக வலிமையுடைய
  எழுதுகோளையும், நாவையும்,
  செருப்பையும் அல்லவா
  உங்களுடன் எடுத்துச்
  சென்றிருக்கிறீர்கள்!

  தோழனே!

  எனக்கும்
  பாசீஸ மிருகங்களை
  செருப்பால் அடிக்க
  விருப்பமுண்டு.
  ஆனால்
  குறி தப்பாமல்
  இருக்க இன்றே
  பயிற்ச்சி
  எடுக்க வேண்டும்!
  குறி தவறினாலும்
  பரவாயில்லை
  பின்புறம் தேசீய கொடி
  இருக்குமல்லவா?

  தோழனே!

  உனக்கொரு செய்தி
  உன் வீரத்தை
  இணையத்தில்
  படித்த போது
  மற்றொரு
  செய்தியையும்
  கண்டேன்
  நடிகைக்கு கோயில்
  கட்டுகிறார்களாம்.
  என் சமூகத்திலும்
  இளைஞர்கள்
  உன்னைப் போல்
  என்று செருப்பைத்
  தூக்குவார்களோ
  என்ற பெருமூச்சுடன்
  வந்த சிந்தனையை
  தவீர்க்க முடியவில்லை.

  தமிழச்சி
  15/12/2008

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=684

 3. நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரு பத்திரிக்கையாளன் தன் உணர்ச்சிகளை காட்ட வடிகாலாக பேனாமுனையில் மையை எரிய வேண்டுமே அல்லாமல் எரியவேண்டியதில்லை.இதுவரை எந்த தலைவரையும் நெருங்கும் ஆற்றல் கொண்டவனாக இருந்த பத்திரிக்கையாளனுக்கு ஏற்பட்ட களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.எதனை பேர் இலங்கை ராஜபக்ஷேவை செருப்பில் அடிக்க ரெடியாக இருக்கிறீர்கள்.நான் அதை விரும்பவில்லை.ஆனால் எல்லோரும் இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்றால் அதற்குபின் பத்திரிக்கையாளனுக்கு ஒரு மரியாதையும் கிடையாது.

 4. டேய் 6666 .நீயே முசுலிம் பேர்ல அலையுர ஆள்மாராட்ட கேசு…மூஸ்லீம் பேர்ல பிளாக் வச்சுட்டு புனித பைபிள் பற்றி எழுதி இரண்டு மத்ததையும் கேவலபடுத்துற …உனக்கு மானமிருந்தாதான அந்த இராக்கிய மானஸ்தன உணர்ச்சி உரைக்கும்….போடா போ!

 5. //நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில்//

  ஹே 6666 காமெடி பண்றாம்பா….

 6. that man just did what many just wanted.
  ethics/manners…emotive honesty will always be above all.
  maybe some creatures will call me sadist..i would rather be so than a cowardly hypocrite! mmsingh may be depressed but his mind was never for or of the majority indians, and so…it is good he gets the slap of reality too.

 7. உண்மைதான் வினவு , அந்தக்காலணிகள் புனிதமானவை .
  ஒரு மார்கழி மாதத்தில் , நத்தார் நேரத்தில் சதாமை தூக்கிலிட்ட அமெரிக்காவிற்கு ,
  இன்னொரு மார்கழி மாதத்தில் , நத்தார் நெருங்கும் நேரத்தில் செருப்படி கொடுத்துவிட்டார்கள்

 8. இதே மாதிரி யாராவது அந்த புஸ்ஸோட கேர்ல் பிரன்ட் சிங்கானா மோகநாங்கியையும் அடிச்சா தேவல.

 9. romba nalla karyamayya, idha naalanju varushathukku munnamey chenchirukkanam, at least voru puratchiyavathu iraqil vanthirukkum. yeppadiyo pallu pona singam mathiri kadaisi nerathila bushukku voru idi vilunthirukku. valkkayile marakkavey mattaru. yenna erunthalum andha shoe romba punniyam chenchathayya. nalla vilaikku yelam pogum. amaa, voru sangathi ketkanumayya, blogley yellarukkum karuthu sollalam, manasa thuranthu, 6666 andhaloode karutha chonna yenayya thitukireerkal?
  avunga avunga karutha mattum sollungayya, 5 viralum vonna erukkuma? konjam purinju nadanthukkongayya.
  (idha chonnathukku ini yennaya yarellam thitta poreegalo?)

 10. புஷ்ஷுக்கு செருப்படி – “தமிழகத்தில் ” கொண்டாட்டம் – புகைப்படங்கள் !
  தமிழகத்தில்

  oh great.. totally 11 people celeberated.. 🙂

 11. அல்லா 666!
  நீங்கள் கைநோக எழுதினாலும்; எத்தனை பேர் படித்துவிடுவார்கள். இது படிக்கத் தெரியாதோர் எல்லோருக்கும்…இப்போ நன்கு புரிந்திருக்குமே!!

  கவலைப்படவேண்டாம். இனி பத்திரிகையாளர்கள் பேட்டிகாண கோவணத்துடன் அனுமதிக்கப் படுவார்கள்.

  அப்போதும் கோவணத்தையும் கழட்டி எதிர்ப்பைக் காட்டுவார்கள்…

  அவருக்குக்குக் கிடைக்கவேண்டியது இதே!!!

 12. சந்தோசமாய் இருக்கிறது.

  இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன், நண்பர்களோடு மகிழ்ச்சியை கொண்டாடினோம்.

  ஆனால், இன்று
  அன்று கிடைத்த மகிழ்ச்சியை விட
  நூறு மடங்கு கிடைத்திருக்கிறது.

  புஷ்சை அடித்த ஷீவை ஏலம் எடுக்க 47 கோடி வரை தயாராய் இருக்கிறார்களாம்.

  அந்த ஷீவை வைத்து யாத்திரை நடத்தி, சுதந்திர உணர்வை உண்டாக்கலாம்.

 13. அடுத்த முறை தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய அரசியல்வாதிகளையும், முக்கியமாக நந்திகிராமில் கொலை செய்து திரியும் போலி கம்யூனிஸ்ட்டுகளையும் கிடைக்கும் செருப்புகளால் அடிக்க வேண்டும். முடிந்தால் இந்துத்துவா பேசும் தீவிரவாதிகள், ஜீஹாத் பேசும் பயங்கரவாதிகளையும் நாம் இவ்வாறு கையாள வேண்டும்.

  புகைப் படங்கள் பார்த்து அதிர்ந்து விட்டேன் – ம.க.இ.க என்ற புரட்சிகர அமைப்பின் கடலெனத் திரண்ட இப்பெருங்கூட்டம் அமேரிக்க ஏகதியபத்தியத்திற்கே பெரும் சவாலாக வரும் என்று எதிர்பார்த்து நிற்கிறேன்.

  மாவீரர் தொடர்களுக்கு நன்றி!

 14. //புகைப் படங்கள் பார்த்து அதிர்ந்து விட்டேன் – ம.க.இ.க என்ற புரட்சிகர அமைப்பின் கடலெனத் திரண்ட இப்பெருங்கூட்டம் அமேரிக்க ஏகதியபத்தியத்திற்கே பெரும் சவாலாக வரும் என்று எதிர்பார்த்து நிற்கிறேன்.
  மாவீரர் தொடர்களுக்கு நன்றி!//

  Murali, Don’t Worry. Don’t feel lonely. Intellectuals like you will always find a place in THE crowd.

 15. என்னடா ஜோக்கர் வரலையேன்னு யாரும் கவலைப்படவேண்டாம் ,மீன்டும் கோட்சில்லா வந்துட்டார்புஷ்க்கு செருப்படி கிடைச்சத்விட அப்படி ஒரு சந்தோசம்.”இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கு வான்யா வாங்க வாங்க வந்து கும்மு கும்முன்னு கும்முங்க”

  பூணூலில் மலரும் ஈழத்துக்கு 25 வதா மறு மொழிய கொடுத்திருக்காருங்கோ

  http://kalagam.wordpress.com/2008/12/13/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/#comment-84

 16. Rudhran –

  Just read one of the comments!!!

  //இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன், நண்பர்களோடு மகிழ்ச்சியை கொண்டாடினோம்//

  I can see how emotional honesty can take humanness to such lower levels. The vicious design of talking only the consequences of a gruesome crime is repeated again here.

  I’m proud to stand with THE crowd, which respects humanness. I’m proud to stand with THE crowd to check the differences in the right way. I’m proud to be part of THE crowd which choses the right leaders as their idols. I’m proud to be part of THE crowd which is progressive and don’t indulge in self pity. I’m proud to be part of THE crowd which shows the route to a practical solution not an imaginary wonderland.

  Even Bush has said that this incident is nothing lesser than the critics who bash him in writing.

 17. 1) ஏய் இங்க பாரேன் முரளி ரொம்ப பீல்
  பண்றாரு..

  2) பின்ன அவரு ரொம்ப மனித நேயரில்லையா அதான்

  1) இந்த மனித நேயரோட யோக்கியதை தெறியுமா உனக்கு?

  2) என்னப்பா சொல்ற?

  1) வீரன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி இருக்காரில்ல.. அவரோட சைட்டுல இவரு போயி வினவு எழுதறவுங்க தலையில குண்டு வுழனும் அப்பிடி இப்படின்னு எழுதியிருக்காரு

  2) நெஜமாவா…?

  1) நான் என்ன சும்மாவா சொல்றேன்.. இதான் இவரு எழுதினது….
  //mrcritic Says:
  December 14, 2008 at 4:54 am
  தமிழச்சி மட்டுமா! நீங்க தமிழ் வேர்ட்பிரஸ் தளம் வந்து தலை வைக்கவில்லை என்று நினைக்கிறேன். வாய் ஜால வீரர்கள் கண்ட குப்பைய எழுதித்தள்ளராங்க, 5 தொடராக (அப்சல் தூக்கு தண்டனை வரை சம்மந்தப் படுத்தி!!). எதக்கேட்டாலும் பார்ப்பனீயம் பாட்டு பாடரானுங்க!

  இவனுங்க தலையெல்லாம் இந்த தீவிரவாதி குண்டுகளால் வெடிக்கும் போது தான் புத்தி வரும் என்று நினைக்கிறேன்.//
  http://veerantamil.wordpress.com/2008/12/01/blog-post_05html/#comment-83

  2) அடப்பாவமே இவரு அவ்வளவு பெரிய்ய்ய்ய மனிதநேயரா…த்த்த்த்தூ!!!!!!!!!

  பி.கு. வினவு, இந்தாளாள கண்ட கசுமாலத்துக்கெல்லாம் லிங்கு குடுக்கவேண்டியதாயிப்போச்சு…கோச்சுகாதீங்க!

 18. அறிவொளி அர டிக்கெட் –

  முகத்த முதல்ல காட்டு பின்பு யார் கோவணம் கட்டினவன் யார் டவுசர் போட்டவன் என்று பார்ப்போம். ஏண்டா 5 தொடரா ஒரே விஷயத்தை எழுதினா எல்லாத்திலையும் வந்து விவாதம் பண்ணணுமா ?

  நீ கால் டிக்கெட் கூட இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். இந்த குண்டு விஷயத்த இந்த பதிவிலையே உலக உத்தமர் சரவணன் என்பவர்க்கு பதில் கொடுத்தேன். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு அப்படி நடந்தால் உலக மக்கள் கண்டிப்பாக பெருமைப்படுவர். அது சரி, மீதி கமெண்ட் எங்க அறிவுகெட்ட கால் டிக்கேட் ?

  அடுத்த முறை மானிட இனத்துடன் மட்டும் பேச விரும்புகிறேன்.

  நன்றி!

 19. //nondhakumar-அந்த ஷீவை வைத்து யாத்திரை நடத்தி, சுதந்திர உணர்வை உண்டாக்கலாம்.//
  பகுத்தறிவையும் போராட்ட உணர்வையும் நினைத்து புல்லரிக்குதுங்க.

 20. //I’m proud to stand with THE crowd, which respects humanness. //

  do u knew thinniyam issue, Bhopal issue, Gujarath and Bagalpur massacres, …..many issues especially all issues tell us as like humanness?? pls live in the real world then u can reach the real soln.
  if enemy take weapon i will take it for my safty.. thats all… very simple logic. but u always wear some mask which is humanness on the state/upper community/hindhu terrorist powers.
  //I’m proud to stand with THE crowd to check the differences in the right way. //
  naatin perumpaanmai makkalukku kalviai maruthathan muulam thangalai arivaaligalaaga maatri konda baarpanarkal niraintha naatil eppadi makkalai sariaana vazhi kandu pidika solgireergal ena puriavillai.
  //I’m proud to be part of THE crowd which choses the right leaders as their idols.//

  so u expect such mesaiahs always. y u will not convert as a mesaiah and give ur future plan on modification of society especially on lot of castes/classes of indian backward society. i expect ur plan seriously. if ur plan is logically ok we must enter the program of real ground. is it ok for u?
  // I’m proud to be part of THE crowd which is progressive and don’t indulge in self pity. //
  //I’m proud to be part of THE crowd which shows the route to a practical solution not an imaginary wonderland.//

  ethu practical? neengal ezuthum program ku enna physical value. practical soln done by enggineers. karpanaiyum athai thodarnthu varum sinthaniyum pinvarum seyalmuraiyum inainthathuthaan Scientist in velai. ulagam vinganigalaalthan viyakiyanam siyapaduvathum maatram yrpaduthavum mudiym. enggr kalaal allla

 21. “தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு அப்படி நடந்தால் உலக மக்கள் கண்டிப்பாக பெருமைப்படுவர்”

  திரு முரளி உங்கள் கருத்தை பாராட்டுகிறேன்.

  தீவிரவாத குண்டு வெடிப்பை நிகழ்த்திய பரதேசி சண்டாளி பிரக்யா சிங்குக்கும் உங்கள் கருத்து பொருந்துமா?

  தாங்கள் மனித நேயராய் இருப்பதால் இன்னொரு கேள்வி

  மனித நேயமே இல்லமல் கோயிலில் ஆள் வைத்து சங்கர ராமனை கொலை செய்த கக்கூஸ் வாயன் சங்கராச்சரியை என்ன பண்ணலாம்.

  இதற்கு தாங்கள் மானிட நேயத்துடன் பதில் அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்.

  வாழ்க மனித நேயம்!

  மானிட நேயத்துடன்

  விடுதலை

 22. intha mathiri yana seyalgalai seyarathulana avargalaku yentha oru nanmaiyum kedaikapovathu illai. thiviravathamthan ahigamagirathu ippothu ulagathinile.so no comment.yevitham thiviravathangalai olipathu yendru yosipome.

 23. ///1) நான் என்ன சும்மாவா சொல்றேன்.. இதான் இவரு எழுதினது….
  //mrcritic Says:
  December 14, 2008 at 4:54 am
  தமிழச்சி மட்டுமா! நீங்க தமிழ் வேர்ட்பிரஸ் தளம் வந்து தலை வைக்கவில்லை என்று நினைக்கிறேன். வாய் ஜால வீரர்கள் கண்ட குப்பைய எழுதித்தள்ளராங்க, 5 தொடராக (அப்சல் தூக்கு தண்டனை வரை சம்மந்தப் படுத்தி!!). எதக்கேட்டாலும் பார்ப்பனீயம் பாட்டு பாடரானுங்க!

  இவனுங்க தலையெல்லாம் இந்த தீவிரவாதி குண்டுகளால் வெடிக்கும் போது தான் புத்தி வரும் என்று நினைக்கிறேன்.//
  http://veerantamil.wordpress.com/2008/12/01/blog-post_05html/#comment-83

  2) அடப்பாவமே இவரு அவ்வளவு பெரிய்ய்ய்ய மனிதநேயரா…த்த்த்த்தூ!!!!!!!!!

  பி.கு. வினவு, இந்தாளாள கண்ட கசுமாலத்துக்கெல்லாம் லிங்கு குடுக்கவேண்டியதாயிப்போச்சு…கோச்சுகாதீங்க! ///

  மாற்றுக் கருத்துள்ள தோழர்கள் அனைவரும் செருப்படி ஆவேசத்தில் கொண்டாடுகிறோம். தொடர வேண்டும் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள். எந்த வடிவிலாவது….

  தோழர் அர டிக்கெட்டு கொடுத்திருந்த இணைப்பை இப்போது தான் பார்க்கிறேன். வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு “பேடி” போல் உளறுபவனுக்கெல்லாம் மெளனக்கெட்டு பதில் போட்டுக் கொண்டிருக்க தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

  இதே வீரன் மற்றொரு பதிவிலும் தீவிரவாதத்தை இந்தியாவுக்கு எதிராக நான் உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் அதற்காகவே திராவிடர் பெரியார் பெயரை பயன்படுத்தும் தேசத் துரோகி என்று உளறி வைத்திருக்கிறான்.

  வீரன் என்ற பேடிக்கும் செருப்பால் இரண்டு கொடுக்கின்றேன். பேடியே சொந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டின் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பும் பிரான்சில் இதர ப்ரெஞ்ச்காரர்களுடன் இணைந்து செயல்படும் பகுத்தறிவு இயக்கத்தின் மெம்பரான எனக்கே தீவிரவாத பட்டமா? பிரான்ஸ் நாட்டு போலீசில் சொன்னால் வாயால் சிரிக்கமாட்டான்.

  மற்றவர்களை பற்றி குறை சொல்வதற்கு முன்பு யாரைப்பற்றி பேசுகிறோம்? அவர்கள் பிண்ணனி என்னவென்று தெரியாத முட்டாள் வீரனாடா நீ! பேரில் மட்டும் வீரம் இருந்தால் போதுமா? மதவெறி நாயே ….

 24. // intha mathiri yana seyalgalai seyarathulana avargalaku yentha oru nanmaiyum kedaikapovathu illai. thiviravathamthan ahigamagirathu ippothu ulagathinile.so no comment.yevitham thiviravathangalai olipathu yendru yosipome.//

  theeviravaatham entraal enna? payangaravaatham entraal enna? poraattam entraal enna? jananaayagam entraal enna? seruppal thanathu kopathai velipaduthinal theeviravaatham enpeergal. euro vuku naanayathai maatriatharkkaaga 15 aandukalaaga uiyir kaakkum marunthugalai kuuda iraq ullae kidaikka anumathikkaathathu payangara, theeviravaatham illai enpeergal. jananaayagathai bush viduthalai endra sollai ulagukku vazankiya makkalukku solli tharukiraan enpeergal. andraiya sevinthiyargal muthal indru thooki eriyappatta silicon valley adimaigal variyilum yaarukkum jananaayagathin vasanaiyai kuuda nugara vida marutha bush vagaiyaraakkalai jananaayagathin peiyaraal kaapatra ninaikireergal. udkaarnthu yosippatharku neengal podum office meeting alla ithu.

 25. புஸ்… சாரி அண்ணாத்த புஷ் க்கு கொடுக்கப்பட்டிருக்கும் செருப்படி ஒவ்வொரு சராசரி இராக்கியனுக்கும் இருக்கும் அங்கலாய்ப்புகளின் மொத்த வடிவம்… அராஜக போக்கிற்கான சரியான அவமரியாதை….

 26. உலக நாடுகளின் சட்டங்களைத்தின்று
  ஏழை மக்களின் உயிர்களைக்கொன்று
  சமூகக்காவலன் என தன்னை பீற்றிக்கொள்ளும்
  ஏகாதிபத்திய கொடுங்கோலன் “புஷ்”ஷுக்கு
  வரலாறு மறக்காத அவமான பரிசு தந்த‌
  முன்தாதர் அல்ஸ‌ய்திக்கு வீர வணக்கம்
  சுதந்திர சமுதாயம் இப்படித்தான் இருக்கும்
  இது அவமானமில்லை
  என‌க்கு கோபமே வரவில்லை, என்று சொன்ன‌
  சுயமரியாதை இல்லாத புஷ்
  உயிருக்கு சமமாக எண்ணவேண்டிய
  தன் தேசியக்கொடியை
  செருப்படிக்கு உள்ளாக்கிவிட்டு தந்திரமாய்
  குனிந்து தப்பித்துக் கொண்டபின்
  எதற்கு இந்த மானம் கெட்ட வாழ்வு.
  அமெரிக்காவின்
  அரசியல் போர் செயல் தந்திரத்திற்கு
  உலக மக்களின் சார்பாக விழுந்த செருப்படியே
  அவனாற்றிய வினைகளுக்கு விடை.
  வினைகள் தொடரும் போது
  விடைகள் மட்டும் தொடராமல் போகுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க