Monday, September 25, 2023
முகப்புசெய்திஇந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !

-

இந்துக் கலாச்சாரம் – பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்!

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி  இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

ramasenaஇந்திய கலாச்சாரத்தையும், ‘இந்து’ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். “இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும்  பெண்களை யார்  காப்பாற்றுவது?

கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் எனக் காட்டுக் கூச்சல் போடும் சங்கப் பரிவாரங்களின் ‘நல்லொழுக்க’ நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் கூவம் கூடக் காத தூரம் ஓடிவிடும்.

இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி, பா.ஜ.க.வின்  பொதுச் செயலாளர். காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக்கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க.வின் எம்.பி. கிலோகணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டு@பான பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் “இந்தியாடுடே” ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை. காமக்களியாட்டம் நடத்தும் கொலைகார ஜெயேந்திரன்தான் இவர்களின் லோககுரு.  இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த ‘நல்லொழுக்க’ சீலர்கள்தான் பெண்களுக்கு ‘ஒழுக்கம்’ பற்றி வகுப்பெடுக்கிறார்கள். சாராய விடுதிக்குப் போய் இந்துப் பெண்களின் மானம் காக்க முயன்றவர்கள், அனுராதா ரமணன் முதல் ஸ்ரீரங்கம் உஷா வரை காமகோடி சங்கராச்சாரியின் மன்மதபாணத்துக்கு இரையானபோது, அவற்றைக் ‘கிருஷ்ணலீலை’ எனக் கருதிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களா என்ன?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘தேசிய நாயகன்’ ஸ்ரீராமனைக் கைவிட்டு, ‘ஆக்ஷன் நாயகி’ விஜயசாந்தியையும், ‘கனவுக் கன்னி’ சௌந்தர்யாவையும், முன்னாள் ‘கவர்ச்சிப்புயல்’ ஹேமாமாலினியையும் நம்பிப் பிரச்சாரம் செய்து ‘இந்து’க் கலாச்சாரப் பெருமையைப் பா.ஜ.க. நிலைநாட்டியது. பெண்கள் குடிப்பதற்கு எதிராக இப்போது கொம்பு சுழற்றுபவர்கள்,  சென்ற ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலில், எல்லோருக்கும் பட்டை சாராயம் வழங்கியதை எந்தக் கலாச்சாரத்தில் சேர்ப்பது? இவர்கள் கொடுத்த கள்ளச்சாராயத்தைக் குடித்துச் செத்துப்போன 400பேர்களில் பெண்களும் இருந்தார்களே!

இவர்களுக்குக் குடிப்பதுதான் பிரச்சினை என்றால் கருநாடகத்தில் இருக்கும் எல்லா சாராயக் கடைகளையும் மூடக்கோரி போராடலாம். ஆனால், சாராய முதலாளி மல்லையாவிடம் அடுத்த தேர்தலுக்குக் கைநீட்ட முடியாதே! நட்சத்திர விடுதி “பார்”களில், எப்படிச் சாராயம் ஊற்றித் தருவது எனப் பெண்களுக்குப் பட்டயப் படிப்பாகச் சொல்லித் தருவதையாவது எதிர்க்கலாம் என்றால், அந்த நட்சத்திர விடுதிகளில் பாதி இவர்களது கட்சிக்காரர்களுடையதாயிற்றே! சரி, பெண்களைக் குடிக்கத் தூண்டிய கேளிக்கை விடுதியையாவது தாக்கினார்களா என்றால், அதுவும் இல்லை. மாறாக, அங்கே இருந்த பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருக்கின்றனர்.

mangalore_pub_attack1கேளிக்கைவிடுதியில் வீரம் காட்டிவிட்டு அடுத்ததாகக் காதலர் தினத்தன்று, வெளியே சுற்றும் காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர், இப்பார்ப்பன பாசிஸ்டுகள். சங்கிலியோடு தெருநாய்களைப் பிடிக்க வருபவர்களைப்போல, சில இடங்களில் கையில் மஞ்சள் கயிற்றுடன் இவர்கள் திரிந்தனர். ஆனால், இந்த வேலையை இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் உமாபாரதி பா.ஜ.க.வை விட்டு போயிருக்கவே மாட்டார். அவர் விரட்டி விரட்டிக் காதலித்த கோவிந்தாச்சார்யாவையே உமாபாரதிக்கு கட்டி வைத்திருந்திருந்தால், கட்சிப் பிளவையாவது தடுத்திருந்திருக்கலாம்.

எல்லா மனித உணர்வுகளையும் விற்பனைச் சரக்காக்கி வணிகமயமாக்கும் முதலாளித்துவம்தான், காதலர்களின் உணர்வுகளை சந்தைப்படுத்திக் காதலர் தினத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறது. வணிக நோக்கம் கொண்ட காதலர் தினத்தைப் பரப்பும் வணிக நிறுவனங்கள்ஊடகங்களைத் தட்டிக் கேட்காமல், இந்த நுகர்வு கலாச்சாரத்தின் பலிகடாக்களான பெண்களைக் கோழைத்தனமாகத் தாக்குகிறது, ராம்சேனா.

மேற்கத்திய கழிசடை கலாச்சாரத்தைப் பயங்கரமாக எதிர்ப்பது போல பம்மாத்துக் காட்டும் இவர்கள், அதனை உருவாக்கும் தாராளமயப் பொருளாதாரத்தை, தலையில் வைத்து தாங்குகிறார்கள். அந்நிய மூலதனம் வேண்டும்; அடிமைச் சேவகம் வேண்டும்; ஆனால் அது பரப்பும் கலாச்சாரம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? பேய்க்கு வாக்கப்பட்டுவிட்டுப் பிணம் மட்டும் திண்ண மாட்டேனென்றால் எப்படி?

கேளிக்கை விடுதி மீது இக்கும்பலின் தாக்குதல் மற்றும் காதலர் தினத்துக்கு மிரட்டல் விடப்பட்டது போன்றவை இந்தியா முழுதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது.  உடனடியாக “ராம் சேனாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பா.ஜ.க. பசப்பியது.  எதைச் செய்தாவது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த, பல்வேறு பினாமி அமைப்புகளின் பெயரில் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கமான தந்திரமாகும். மற்ற மாநிலங்களில் இந்து முன்னணி, விவேகானந்த கேந்திரா மற்றும் அபினவ் பாரத் போன்ற பினாமி அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுவதைப் போல, கர்நாடகத்திற்காக இவர்கள் உருவாக்கி இருப்பதுதான் ராம்சேனா. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் முழு நேர ஊழியரான முத்தலிக் மீதிருந்த 50க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகளை, முதல்வராகப் பதவியேற்றவுடன் எடியூரப்பா திரும்பபெற்றதில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.

உலகமய பண்பாட்டின் விளைவாக இந்தியாவெங்கும் “பப்”கள் கொடி கட்டி பறக்கும் போது, கர்நாடகத்திலிருக்கும் “பப்”பில் மட்டும் காவிக் கும்பல் புகுந்து தாக்க வேண்டிய அவசியமென்ன? இம்மாநிலத்தில்தான் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவும், உலகமய கலாச்சார சீர்கேடுகள் உச்சத்தில் இருக்கும் மங்களூர் போன்ற நகரங்களும் உள்ளன. இந்த கலாச்சார மாற்றங்களை நடுத்தர வர்க்கத்தால் சீரணித்துக் கொள்ள முடிவதில்லை. இந்த வர்க்கத்தின் கலாச்சார தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே இந்துத்துவ பயங்கரவாதிகளின் நோக்கம்.

riots3பார்ப்பன பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதையே தேசிய பெருமிதமாக முன்னிறுத்தி குஜாராத்தில் வெற்றி பெற்றார்கள். ஒரிசாவில் கிறித்துவ தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் காலூன்றினார்கள். ஏற்கெனவே கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒகேனக்கல் பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்கள். தற்போது இனவெறியோடு “பப்” கலாச்சார எதிர்ப்பு கலந்த புதிய சோதனையை அங்கே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதேபோல தமிழகத்தில், தன்னெழுச்சியாகத் தோன்றியுள்ள ஈழ ஆதரவு உணர்ச்சியைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் புதிய சோதனையை இந்துத்துவ நரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

ராம்சேனாவின் பாசிச நடவடிக்கையை எதிர்க்க கிளம்பிய மேட்டுக்குடி கும்பலொன்று இன்னொரு ஆபாசக் கூத்தை அரங்கேற்றியது. காதலர் தினத்தன்று பெண்கள் அணியும் உள்ளாடையை முத்தலிக்குக்கு அனுப்பும் போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். உழைக்கும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் மத்தியில், குடிப்பதற்கும் கூத்தாடுவதற்குமான உரிமையையே பெண் விடுதலையின் உச்சம் என்று இவர்கள் பேசுவது மிகவும் ஆபத்தானது. ராம்சேனாவின் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதாக கிளம்பியுள்ள இவர்கள், அதற்குப் பதில் ஏகாதிபத்தியத்தின் மேட்டுக்குடிப் பெண்ணடிமைத்தனத்தைப் புகட்டுகிறார்கள்.

pramod-mutalik-pink-underwearஇன்று இந்து பயங்கரவாதிகள் மதுவிடுதிகளிலும் காதலர் தினத்திலும் நடத்தியிருக்கும் வன்முறையானது, தங்களது கூத்தடிக்கும் உரிமையைப் பறிக்கிறதென்று எதிர்போராட்டம் நடத்தும் இந்த மேட்டுக்குடி தாராளமயதாசர்கள்,  இதே கர்நாடகாவில் முஸ்லீம், கிறித்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தி அம்மக்களின் கருத்துரிமையை மட்டுமல்ல, வாழும் உரிமையைக் கூட இந்து பயங்கரவாதிகள்  பறித்த போது ஒன்றுமே நடக்காதது போல மவுனமாக இருந்தனர். இன்றைக்கு தமது நுகர்வு வெறிக்கு குறுக்கே இந்துத்துவ பயங்கரவாதிகள் வருவதால் மட்டுமே   தங்கள் சுதந்திரம் பறி போய் விட்டதாக ஒப்பாரி வைக்கின்றனர். இதையே ஏதோ கருத்துரிமைக்கான போராட்டம் போலவும், பெண் உரிமைக்கான புரட்சி போலவும் பிரமிப்பூட்டுகின்றனர். கர்நாடகத்தில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்; 471742078_836fffd06aஓவியர்கள் மீதான தாக்குதல் முதலான இந்துவெறி பயங்கரவாத வெறியாட்டத்தை, கணநேரச் செய்தியாக வெளியிட்டுவிட்டு ஓய்ந்து போன ஊடகங்கள், இந்த அப்பட்டமான சுயநலம் கலந்த அற்பத்தனத்தையே முற்போக்கு “ஜாக்கி” கொண்டு தூக்கி நிறுத்துகின்றன.

இந்து பயங்கரவாதக் கும்பல், தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் ஆதரித்துக் கொண்டே அவை உருவாக்கும் கலாச்சாரச் சீர்கேட்டை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளுகிறது. மாறாக,  தாராளவாதக் கும்பலோ அந்த சீர்கேட்டையே பெண்ணுரிமையாக முன்னிறுத்துகிறது. முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள்; ஓவியர்கள் மீதான தாக்குதல்கள், கலாச்சார சீர்க்கேட்டை எதிர்த்து தாக்குதல், கன்னட இனவெறி – என இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய பார்ப்பன பயங்கரவாதத்தின் வேறுபட்ட வடிவங்கள் என்பதை உணர்ந்து புரட்சிகரஜனநாயக சக்திகள் அணிதிரண்டு முறியடிக்க வேண்டிய தருணமிது. ஆனால், தாராளமய தாசர்களோ நாட்டைக் கவ்வியுள்ள இப்பேரபாயத்தை உணர மறுத்து, கோமாளித்தனமான எதிர்ப்பு போராட்டங்களால் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய ஜனநாயகம் – மார்ச்’ 09

 

 1. // குடிப்பதற்கும் கூத்தாடுவதற்குமான உரிமையையே பெண் விடுதலையின் உச்சம் //
  பெண்களுக்கு குடிப்பதற்கு உரிமை இல்லை, கூத்தாடக் கூடாது என்று சொல்கிறீர்களா? ஏன்? இந்த உரிமை ஆண்களுக்கு உண்டா இல்லையா?

  பெண்கள் குடிப்பது கலாசார சீரழிவு என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. குடிப்பதும் குடிக்காததும் அவரவர் சொந்த விஷயம். அப்படியே நீங்கள் மது விலக்கை அமல் படுத்த விரும்பினாலும் அதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்?

  // காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர், இப்பார்ப்பன பாசிஸ்டுகள். //
  ஃபாஸிஸ்தில் பார்ப்பனன் என்ன சூத்திரன் என்ன? அங்கேயுமா ஜாதி? இப்படி பேட்டி கொடுத்தவர் என்ன ஜாதி என்றெல்லாம் வெட்டி ஆராய்ச்சி தேவையா? பேட்டி கொடுத்தவர் தலித்தாக இருந்தால் பரவாயில்லையா? அப்போது கண்டிக்க மாட்டீர்களா?

  // முன்னாள் ‘கவர்ச்சிப்புயல்’ ஹேமாமாலினியையும் //
  ஹேமமாலினியை கவர்ச்சிப் புயல் என்பது அநியாய தவறு. 🙂

 2. தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை.

 3. //அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.

  இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “”பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “”ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.//

  மேலேயுள்ள கட்டுரையின் முக்கியமான முதல் பத்தி வினவுவில் தவறிவிடப்பட்டுள்ளது….

  • Could you plese provide me the link / reference book where Valmiki speaks on this topic? It would be better if you paste the sentance. I have lit bit of knowledge in sanskrit.

 4. அப்போ தலிபான்களை என்ன சொல்வீங்க?
  எதுவும் தடம் மாறும் போது, ஒரு சமூக போலிஸ் தேவைதான்.
  யாருமே லிமிட்டை தாண்டாதீங்க………..

 5. வேலுமணி, தாலிபானை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை தொடர்புடைய பதிவுகளில் இருக்கும் ஷகீலா கட்டுரையில் பாருங்கள். இந்த லிமிட்டை பற்றிய உங்கள் விளக்கம் என்வோ? சமூக போலீசு என்றால் என்ன? அதை தீர்மானிப்பது யார்? போன்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் படிக்கின்றவர்கள் பயனடைவார்கள்!

 6. தாமதமாக வந்தாலும், நல்ல கட்டுரை.

  தாராளமய கொள்கைகளை முதலில் காங்கிரசின் நரசிம்மராவ் ஆட்சியில் வந்தாலும், அடுத்து செவ்வனே நடைமுறைப்படுத்தியவர்கள் பா.ஜ.க. கூட்டணி அரசு தான்.

  பேசுவது சுதேசி. செய்வது விதேசி கொள்கை.

  உமாபாரதியின் பின்னணியில் இப்படி ஒரு காதல் கதையா?

 7. //இந்த அரசும், சமூகமும் பார்ப்பனன் என்று அழைக்கும்போது //

  இந்த அரசு என்னைக் கூடத்தான் இந்து என்று சொல்லுகிறது. ஆனால் எனது நடவடிக்கைகள் என்னை சுற்றியுள்ளவர்கள் என்னை கம்யுனிஸ்டு என்று அழைக்குபடி செய்யவில்லையா?

  ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு அதனாலேயே அந்த சாதிப் பெயர் சொல்லி பேசாதே என்று சொல்லும் முன்பு அந்த பார்ப்பன சாதியின் வரலாற்றுக்கு பதில் கூறும் கடமையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர் ஆர் வி அவர்களே… பார்ப்பன அடையாளம் மட்டும் வேண்டுமாம் ஆனால் அதன் வரலாறையும், இன்றைய அதன் ஆதிக்கத்தையும் மறந்து விட வேண்டுமாம்.. போயா நீயும், உன்னோட கருத்து சுதந்திரமும்.

 8. /அப்படி இருந்தால் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், வெள்ளாளர், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், //

  இங்க வந்து ஏதாவது கவுண்டன், தேவன், வன்னியன் வந்து என் சாதி பேர சொல்லி விம்ர்சிக்காதே, என் மதம் பேரச் சொல்லி விமர்சிக்காதே என்று சொன்னால் அவரிடம் இதைத்தான் கோருவோம்.

 9. //மீண்டும் தவறு! எனக்கு பார்ப்பன அடையாளம் வேண்டியதில்லை என்றால் என் மீது உள்ள அடையாளம் விலகி விடுமா என்ன? பார்ப்பன வரலாற்றை மட்டுமல்ல, எந்த வரலாற்றையும் மறக்க வேண்டாம். என் முப்பாட்டன் மட்டும் அல்ல, உங்கள் முப்பாட்டனும் தவறு செய்திருப்பார். அவரும் ஒரு ஜாதி மீது அடக்குமுறை நடத்தி இருப்பார். நீங்கள் இருப்பதிலேயே கீழான ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர் உங்கள் வீட்டு பெண்களை அடக்கி இருப்பார். அதுவும் வரலாறுதான்.//

  என்ன சொல்ல வற்ரீங்க… அதனால ‘பார்ப்பனன்’ என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா இல்ல உபயொகிக்கலாம்னு சொல்ல வர்றீங்களா?

  இல்ல ஆர் வி ஒத்துக்கிட்டாருபா அதனால் இனிமே பார்ப்பனியம் எனப்படும் இந்து மக்கள் விரோத மதத்தின் புனிதத்தை நாம் விமர்சிக்கக் கூடாது, அதுவும் பார்ப்பன என்ற வார்த்தையை வைத்து விமர்சித்தால் ஆர் வி போல பார்ப்பான் என்ற சொல்லாத ஆனால் பார்ப்பான் என்று சொன்னால் மனது கஸ்டப்படுபவர்களுக்கு, மனது கஸ்டப்படும் என்பதால் நாங்கள் அப்படி சொல்லுவதை விட்டு விடுவோம் என்று எங்களை உறுதி எடுக்க சொல்கிறீர்களா (கொஞ்சம் குழப்பமாத்தான் எழுதிருக்கனோ)

 10. //க்கு பார்ப்பன அடையாளம் வேண்டியதில்லை என்றால் என் மீது உள்ள அடையாளம் விலகி விடுமா என்ன? //

  என் மீது இந்து அடையாளம் வேண்டியதில்ல என்றேன் அதற்கு நேர்மையாக நடந்து கொண்டேன் அது விலகியுள்ளது.

  உங்களுக்கு பார்ப்பன மரபின் அடையாளங்கள் கொடுக்கும் அனுகூலங்கள் வேண்டும் ஆனால் அது வரலாறூ முழுவதும் செய்த அயோக்கியத்தனங்கள் உருவாக்கிய வினைகள் மட்டும் வேண்டாம்.

  ரொம்ப கஸ்டமா இருந்தா நீங்க போட்டுருக்குற பூனூல கழட்டி வீசிறிங்க ஆர் வி(பூனூல் என்பது உங்கள் மீது இருப்பதாக நீங்கள் நம்பும் பார்ப்பன அடையாளத்தின் உருவகம்)

 11. நீங்க சொல்லலேனே யாருக்கு தெரியப் போகுது நீங்க பார்ப்பானு…. நான் என்ன சாதினு இங்க யாருக்காச்சும் தெரியுமாப்பா? தெரிஞ்சா சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்

 12. //பொழுது விடிந்து பொழுது போனால் ஹிந்து திருடர்கள், ஹிந்து அயோக்கியர்கள் என்று பேசுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். //

  மிகவும் சந்தோசமாக உணர்வேன் அத்துடன் சேர்ந்து முஸ்லீம் அயோக்கியத்தனத்தையும் சேர்த்து விமர்சிக்கக் கோரி ஜனநாயக் சக்திகளுடன் போராடுவேன்..

  நான் இந்து என்று சொல்லும் மானங்கெட்ட வேலையை மட்டும் செய்யவே மாட்டேன்.

 13. //// ுதலில் பார்ப்பன ஜாதியின் வரலாறு என்ன என்று புரிந்து கொள்வோம். இதுதானா என்று பாருங்கள். //
  Oops! Missed giving the URL – http://koottanchoru.wordpress.com/2009/01/08/எதிர்ப்பாளர்களின்-பார்வ///

  இதுவரை ஆர் வி எழுதியதை வைத்து பார்க்கும் போது அவர் மிகவும் விரும்பி ஆர்வமுடன் படித்து உண்மைகளை மட்டுமே எடுத்துக் கொள்வார் என்று புரிகிறது(உள் குத்தெல்லாம் எதுவுமில்லை), எனவே மேற்சொன்னது போன்ற குப்பை பதிவுகளில் இந்தியாவின் 5000 வருட வரலாற்றுக்கு விடை தேடும் அல்பத்தனத்தை அவர் கைவிட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

 14. மது அருந்துவது தனிமனித பிரச்சினை அல்ல. அது தனிமனித சுதந்திரம் என்று பேசுவது அபத்தம். இதனை தனியாக விளக்க வேண்டுமா… ஆனால விவாதம் திசைதிரும்பத்தான் அது உதவும்.

  பார்ப்பன சாதியில் பிறந்தால் தனது சாதிய விழுமியங்களுக்கு எதிராக தானே பிற்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பெண்\ஆணை திருமணம் செய்ய வேண்டும். பூணூல் அணிவதை தவிர்க்க வேண்டும். இவற்றை தனது உடன்பிறப்பு ம்ற்றும் உறவினர்களிடமும் வலியுறுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து பல் விசயங்களில் சமூக மனிதனாக மாற்றிக் கொண்ட பிறகுதான் ஒருவர் தன்னை பார்ப்பனர் இல்லை என சொல்ல முடியும். குறிப்பாக தனது சாதியின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராக (கவனிக்கவும்…கட்சி அல்லது நக்சல்பாரி அமைப்பில் குறைந்தபட்சம் இரண்டாண்டு அனுபவம் என சொல்லவில்லை) அவர்கள் மாறும்வரை போராடிக் கொண்டே இருந்தால்தான் அவர் தன்னை பார்ப்பன நீக்கம் செய்து கொண்டவர் ஆக முடியும் எனக் கருதுகிறேன். எது எல்லாம் பிற்போக்கு என்று தனியாக நோட்ஸ் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

  வரலாற்றுக்கு பதில் சொல்லும் கடமை அனைவருக்கும் இருந்தாலும் முதலில் எவன் தூண்டியவனோ அவனுக்குதான் முதலில் பதில் சொல்ல வேண்டியது பொறுப்பு.

 15. //Puracchi,

  You are generally in broad agreement with views expressed here – In fact, from the fact that you corrected this post, I guess you are part of the Vinavu team.

  Try posting opposing views under a different name in the blogs of Vinavu, Kalagam, Rudhran, Arivazhakan, Mathimaran etc. You would get enough guesses about the caste you belong to. If you post concurring views, then nobody would bother about your caste.//

  எனது ஜாதியை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாத வரை யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. அதிகபட்சம் ஒருவனது கருத்து பார்ப்பனிய கருத்து என்ற அள்வில் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். நீங்கள் குறிப்பிட்ட் தளங்களீல் இதைத்தான் செய்திருப்பார்கள். ஒருவரது கருத்தை பார்ப்பனிய கருத்தாக இருந்தால் கண்டனம் செய்திருப்பார்கள்.

  உடனே பார்ப்பான் என்றாலே கண்டிக்கிறார்கள் என்று அவதூறு பேசுவது மாஹா முட்டாள்தனம் நிரம்பிய ஒரு செய்கை.

 16. //from the fact that you corrected this post,//

  ஹலோ அதி புத்திசாலி ஆர் வி, அந்த கட்டுரை புதிய ஜனநாயகத்தில் வ்ந்த கட்டுரை, அதனை தமிழ் சர்க்கிள் வெளியிட்டுள்ளது. புதிய ஜனநாயகம் மாதம் முதல் வாரத்தில் என் கைகளுக்கு வந்துவிடும்.

 17. //t Gownders, Mudhaliyar, Vanniyars, Vellalars etc//

  தேவர் சாதி வெறியை கண்டித்து பதிவு வினவில் போடப்பட்டு அது புத்தகமாகவே வந்துவிட்டது. இங்கே என்னடாவென்றால் ஒருத்தர் பூனை கண்ணை மூடிக் கொண்டது போல பேசுகிறார். மேலும் பார்ப்பனியம் என்று சொல்லும் போது அது பார்ப்பான சாதியின் மேன்மையை முதல் நிபந்தனையாக கொண்ட சாதிய தத்துவத்தையே. எனவே வெகு இயல்பாக்வே கருத்த தளத்தில் பார்ப்பனியமும், அதன் நேரடி சித்தாந்த தலைமயான் பார்ப்பனருமே முன்னிறுத்தப்படுவார்கள். பிறர் செகண்டரிதான்.

  ஆனால் சாதியத்திற்க்கெதிரான நேரடி நடவடிக்கைகளிலோ அதனை விரிவாக நேரடியாக செயல்படுத்தும் ஆதிக்க சாதியினர் முதல் தாக்குதல் இலக்கு ஆவார்கள்.

 18. //Do note that it would be equally easy to dismiss your views as garbage.//

  Who bothers.. Do it…. I never bother somebody dimiss my views as garbage…. 🙂

  //So try it, and then talk. Don’t just mouth off.//

  Why you get offended when somebody scold Brahmin if you are not a Brahmin…. நீங்க பிராமினா? சொல்லுங்கோ ஆர் வி. இல்லையென்றால் வேற உருப்படியான விசயங்களை பேசலாமே? பிராமினாக இருப்பவன் கவலைப்படட்டும், கவலைப்பட்டால் நல்லதுதானே? பார்ப்பானாக இருப்பதின் பண்பாட்டு பெருமைகள் வேண்டுமாம், ஆனால் அதன் வரலாற்று சிறுமைகளின் எதிர்வினை மட்டும் வேண்டாமாக்கும்.

 19. என்னடா சாதி சொறிநாய்களே ?

  என்னடா மதம் வெறிநாய்களா?

  என்னடா நாகரீகம் நக்குநாய்களே?

  மனிதன் மனிதனாக இரு முதலில்.

  எயிட்சில முதலிடம் இந்தியா.

  கசத்தில முதலிடம் இந்தியா.

  14முதல் 22 வயது வரை பெண்கள் பிரச்சனை

  இதை எல்லாவற்றையும் முதலில்

  முடிப்பதற்கான வேலையில்தான்

  இன்றைய இளையவர் இறங்கவேண்டும்.

  இதைவிட்டு பப் வேண்டுமாம்.

  கலாசார சீரழிவு வர காரணமானவர்களே

  அரசியல்வாதிகள்தான்.

  உதாரணம்:- முரசொலிமாறன் குடும்பம்.

 20. //I don’t beleive that brahmins enjoy a special status – perhaps they did 50 years back, but not any more, definitely not in TN. Is it that only they can do pooja in temples?//

  then what for swamy came to high court? what for dikshidhars are shouting?

  My Dear Friend, Brahminism is no more confined to only poonool & kudumi. It is about the cultural supremacy & Hegemony.

  சில உதாரணங்களைப் பாருங்கள் – விகடன் கல்கி குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகளில் சாதாரணமாய் காணக்கிடைக்கும் கருத்துக்கள் தன இவை,

  பரதநாட்டியம் Vs மற்ற நாட்டிய வகைகள்!

  கர்நாடக சங்கீதம் Vs தமிழ் இசை

  பார்ப்பனியம் என்பது பிறப்பால் மட்டும் பார்ப்பானாய் இருக்கும் கும்பலால் பாதுகாக்கப்படுவதில்லை – அது இப்போது கறுப்புப் பார்ப்பான்களால் களத்திலும், பிறப்புப் பார்ப்பான்களால் கருத்திலும் பாதுகாக்கப்படுகிறது.

  நாடார்களும் வன்னியர்களும் எப்படி ஷத்ரியர்கள் ஆனார்கள் என்று படித்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியவரலாம் – “castes & tribes of south india” என்று கூகிளில் தேடுங்கள் Edgur Thurstun என்பவர் எழுதிய ஏழு வால்யும் புத்தகம் கிடைக்கும் – ஒரு கட்டத்தில் பொருளாதரத் தளத்தில் உயர்ந்த நாடார்கள் தமக்கு சமூக அந்தஸ்து கிடைக்க பூனூல் கூட அணியும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களை ஷத்ரியர்கள் என்று நிலை நாட்ட புராணங்கள் புணைந்தது ( 1850 களில் ) யாரென்று நினைக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் தான்!

  பொருளாதார முன்னேற்றம் மட்டும் சமூக முன்னேற்றத்தைக் கொடுக்கவில்லை அவர்களுக்கு – அவர்கள் தம்மை பார்ப்பனிய அடுக்கின் ஊடே உயர்ந்தவர்களாய்க் காட்ட படு கேவலமான முறையில் பாவனை செய்யும் நிலை ஏன்?

  அதே நாடார்கள் -அதாவது பள்ளர் பறையர் சக்கிளியர் நிலையில் இருந்தவர்கள் – இன்று தமக்குக் கீழே இருக்கும் சமூகத்தைப் போட்டு மிதிக்கிறார்கள். அவர்களுக்கு தண்ணி தெளித்து ஞானஸ்நானம் செய்து ஷத்ரியர்களாக உயர்த்தியது பார்ப்பனியம் – அவர்களை தமக்குக் கீழே இருப்பவர்களை ஒடுக்க வைத்திருப்பதும் பார்ப்பனியம்!

  அத்தனை தொண்டர் பலம் கொண்ட சூத்திர கருணாநிதி – எந்த தொண்டர் பலமோ மக்கள் ஆதரவோ இல்லாத சு.சுவாமிக்கு ஒன்னுன்னா ஏன் துடிச்சிப் போறார்?

  பிரபு ராஜதுரை எழுதும் பதிவுகளைப் படிங்க – சாதாரணமா ஒருத்தன் பொதுநலவழக்குப் போடுவதற்கு ஆயிரம் கேள்வி கேட்கும் நீதி மன்றம், அதையே அவதூராகச் செய்வதையே ஒரு அரசியல் நடவடிக்கையாகக் கொண்டிருக்கும் சு.சுவாமியை ஏன் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை?

  பிரேமானந்தாவும், ராஜகோபாலும் மாட்டிக் கொண்ட போது தலைப்புச் செய்திகளை மலையாளப்பட போஸ்டர் போல வெளியிட்ட மகிழ்ந்த தினமலர் வகையறாக்கள் ஜெயேந்திரன் மாட்டிக் கொண்ட போது நடந்து கொண்ட போது துடித்துப் போனதன் மர்மம் என்ன?

  பார்ப்பனியம் என்பது இப்போது ஒரு வாழ்க்கை முறை! அதை களத்தில் ஆதிக்க சாதியினரும், கருத்து நிலையில் (பெரும்பான்மையாக) பார்ப்பனர்களும் காத்து நிற்கிறார்கள்..

  //What is this “varalaRRu sirumai”? Is it the infamous Manu Smrithi? Frankly, I think there may be one brahmin in a million who has actually read it.//
  //While analysis of Manu Smrithi is important, I don’t beleive that people who practice casteism today use that as their bible. I haven’t heard in my entire life one person -saying that he/she is performing this action as it has been prescribed by Manu Smrithi. Have you?//

  மனுவைப் படிக்கவில்லை என்பதெல்லாம் மேட்டரே இல்லை. அது பின்பற்றப்படுகிறது அது தான் மேட்டர். பார்ப்பனர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை அவர்கள் இப்போது பின்பற்றுவதில்லை என்றீர்கள் – இது கடல் கடந்து போகக்கூடாது என்ற விதியை மீறியதால் அமெரிக்காவில் இருக்கும் பார்ப்பானெல்லாம் பார்ப்பானில்லையென்றாகிவிட்டதா என்ன? ஸ்த்ரீ லோலனாய் அலைந்தவன் ஜெகத்துகுரு இல்லையென்றாகிவிட்டதா என்ன?

  பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து கொள்வது தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே – அந்த விட்டுக் கொடுப்புகளை வைத்து மட்டும் அவர்கள் மாறிவிட்டதாகக் கொள்ள முடியாது!

  குடுமியைச் சிரைத்துக் கொள்வதும் – பூனூலை அறுத்துக் கொள்வதும் – மாடு தின்பதாக சொல்லிக் கொள்வதும் – ஏன் நாத்திகனாகவே மாறிவிட்டதாகச் சொல்லிக் கொண்டாலும் பார்ப்பனியம் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்! இவை வெறும் அடையாளங்களே!

  இந்த அடையாளங்கள் எல்லாம் காலத்திற்கு கட்டுப்பட்டது – காலம் மாற அடையாளங்களும் மாறலாம் – ஆனால் தொடர்ந்து நிலைத்துக் கொண்டிருப்பது பிறப்பின் அடிப்படையில் அமையும் ஏணிப்படி சமூகமும் அதன் உச்சானியில் அமர்ந்து கொண்டிருக்கும் பார்ப்பானும் தான் ( அந்தப் பார்ப்பான் கறி தின்பவனாகவோ, குடுமி அறுத்தவனாகவோ், நாத்திகனாகவோ கூட இருப்பான் )

 21. W.Bank of Singapour Offecer in Indian பார்ப்பான்

  ஒருவன் அண்டகிறண்டில கறி தின்பான்,

  குடிப்பான். ஆனால் வெளியில பூனூளும்,

  பட்டையுமாக இருப்பான்.

  பாம்BAI அடிக்காதே,

  பார்ப்பானை அடித்துக்கொல் என்றவர்!

  பெரியார்.

 22. நம்மை பொருத்தவரை ஒன்றை தெளிவாஇக் கொள்ள வேண்டும். அதாவது எவெரையும் அவரது பிறப்பை வைத்து அடையாளம் காணும் அனைவரும் பார்ப்பான் மற்றும் பார்ப்பனிய அடிமைகள். அதாவது ஒரு கவுண்டன், வன்னியன், தேவன் கூட மற்றொருவரை அவரது பிறப்பின் அடிப்படையில் அடையாளம் காண்பான் ஆயின் அவன் பார்ப்பான் அல்லது பார்ப்பனிய அடிமையே !

  1. மக இக மற்றும் வினவு பெண்கள் மது அருந்துவதை மட்டுமல்ல ! ஆண்கள் மது அருந்துவதையும் கூட கண்டிக்க கூடிய அமைப்பு தான்.
  2. இந்த மேட்டுகுடி பெண்கள் இப்படிப்பட்ட காட்டுமிரான்டி பார்ப்பன பாசிச கூட்டத்தை எதிர்க்க அனைத்து பெண்களையும் அணிதிரட்டாமல் ஏதொ ஒரு வகையில் மட்டும் போரடுவதால் இவர்களை அழிக்க முடியாது. இந்த பெண்கள் தங்களுக்காக மட்டும் போரடும் குணமுள்ளவர்கள். அதை விடுத்து ஒட்டு மொத்த பெண்குல அடிமைத்தனதிற்கு எதிராக போராடனும். அதை தான் இந்த கட்டுரையில் சொல்ல வர்றங்க.

  3. எனக்கு தெரிந்து சென்னையின் எந்த அபர்ட்மென்டிலும் ” பிராமின்சு ஒன்லி ” போர்டு பார்த்திருக்கேனே ஒழிய “வன்னியர் மட்டும் “, “கவுண்டர் மட்டும்”, “தேவன் மட்டும்” பார்த்ததில்லை. அதற்காக அவர்களில் யாரும் சாதி பார்ர்ப்பதில்லை என்று கருத முடியாது. ஆனால் தன் சாதி திமிரை வெளிப்படையாக காட்டும் திமிர் பார்ப்பான்களுக்கு உரியது.
  4. சாதி அறிவியல் உலகில் ஒழிந்து போயீரும்னா எந்த மேட்ரிமோனி வெப்சிட்டிலும் இன்னும் சாதி ரீதியாக பேன் தேடுவது உள்ளது.
  5. இன்னும் கூட இந்து பேப்பர் கூட பெரியாரை “ராமசாமி நாய்க்கர்” என்றெ குறிப்பிடுகிறது.

  இதெல்லாம் இன்னும் சாதி ஒழிப்பின் தேவையை அதற்கான வேலையின் தேவையை உணர்த்துகிறது.

 23. RV
  “வால்காவிலிருந்து கங்கைவரை” என்று ஒரு புத்தகம் இருக்கிறது, (அதை எழுதியவரும் பிறப்பால் பார்பனர் தான்! ஆனால் வாழ்வில்…..) படித்திருக்கிறீர்களா? 🙂

 24. கட்டற்ற சுதந்திரத்தில் பெண் இன்று எவ்வளவு கேவலமாக மாற்றப்பட்டு உள்ளாள் என்பதை, நடைமுறையில் சுதந்திரமாகத் தங்குதடையின்றி காணமுடியும். இங்கு பெண், பெண் உறுப்பு என அனைத்தும் ஏன் அவள் போட்ட, போடுகின்ற, போடும் உடுப்பு கூட (அணிந்த, அணிகின்ற, அணியப் போகின்ற ஆடை கூட) ஆபாசமாக மாற்றப்பட்டு வியாபாரமாக நடந்தேறி வருகிறது. ஆண்-பெண் உறவு கூட சந்தைப் பொருளாக, பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. காதல், அன்பு என எல்லாம் சந்தைப் பொருளாகி உள்ளது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இந்த வியாபாரம் தான் எஞ்சிப்போய் உள்ளது.

  கட்டற்ற சுதந்திரம் என்பது கற்பனையானது. மாறாக, கட்டற்ற சூறையாடும் சுதந்திரம் பண்பாட்டில் புகுத்தப்பட்டுள்ளது. எங்கும் நுகர்வின் எல்லையில் மனிதர்கள் அணுகுகின்றனர். இது போலியான, கவர்ச்சியான பண்பாட்டைக் கையாளுகின்றது. விற்பனையாளனுக்கும், வாங்குபவனுக்கிடையில் நிலவும் போலித்தனமான உறவுகள் ஆண் – பெண் உறவில் கவர்ச்சி காட்டுகின்றது. எல்லாம் பொருட்களின் உறவாகின்றன. மனித மானிடம் என்பது சந்தைப் பண்பாட்டில் தொலைந்து போனதையே கட்டற்ற சுதந்திரமாக, அன்பாக, காதலாகக் காட்டப்படுகின்றது. ஒரு விபச்சாரி என்ன நிலையில் இயங்குகின்றாரோ அதைத் தாண்டி உறவுகள் மலர்ந்து விடவில்லை. அந்தளவுக்குச் சீரழிந்துள்ளது.

 25. “கட்டற்ற சுதந்திரம்” என்பது “கட்டற்ற விபச்சாரத்தையும்” “கட்டற்ற குடும்பச் சிதைவையும்” “கட்டற்ற குடும்ப உறவையும்” தொடங்க அடிப்படையாக உள்ளது. இது சமுதாயச் சீரழிவை நுகர்வுத் தளத்தில் வேகப்படுத்தி பெண்ணை நுகர்வுப் பண்டமாகச் சிதைத்து கேவலப்படுத்தி விடுகின்றது. இது பெண்ணினதும், ஆணினதும் வாழ்வுப் பரப்பை அழித்து ஜடங்களாக ஆக்குகின்றது. பாலியலைக் கடையில் வாங்கும் பொருளாகப் பணத்துக்கும், அன்பளிப்புக்கும், போதையிலும் கிடைக்கும் ஒரு சரக்காக்கிவிடும்.

 26. ஆண் – பெண் இணைவு என்பது மனிதப் போராட்டத்தின் ஊடேயான, மனித இருப்பின் மீதான, சமூக வாழ்வு மீதான, இயற்கை மீதான….. ஒழுங்குக்கு உட்பட்டதாக, கட்டுப்பாடு அற்ற இயல்பான இணைப்பாக இருக்க வேண்டும. இது ஆண் – பெண் என்ற இருவரும் பரஸ்பரம் காதலிக்கவும், பிரியவும் உள்ள சுயநிர்ணய எல்லைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். இன்றைய குடும்ப அமைப்புக்குப் பதில் புரட்சிகரக் குடும்ப அமைப்பு என்பது கூட்டுக் குடும்ப அமைப்பாகப் புரட்சிகரச் சமூக அமைப்பால் பிரதியிடப்படவேண்டும்.

 27. “இலக்கணத்தில் இரண்டு எதிர் மறைகள் உடன்பட்டு ஒரு பொருளாவது போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன”42 என்றார் ஏங்கெல்ஸ். பாலியலில் ஊக்கம் பெறும் விபச்சாரப் பண்பாடு, சூறையாடும் பொருளாதாரத்தில் ஊக்கம் பெறும் நுகர்வு வேட்கை என்ற எதிர்மறைகள் எப்படி பெண்ணியமாகவும் ஜனநாயகமாகவும் மனிதச் சுதந்திர நன்னெறி ஒழுக்கமாக மாறியதோ அதே போல் பலதுறைகளுக்குள் இது நடக்கின்றது. இது இன்று கட்டற்ற சுதந்திரமான குடும்பச் சிதைவுக்குள் ஆழமாக, விகாரமாக மாறியுள்ளது. சுதந்திரமான கட்டற்ற காதல் இருக்கவே முடியாது. சமூகப் பொருளாதார நுகர்வு விபச்சார எல்லைக்குள் தான் ஒவ்வொரு காதலும் – சுதந்திரமும் இருக்கும், இருக்க முடியும். இதற்கு வெளியில் இருப்பது இல்லை. மனித வாழ்க்கைப் போராட்டம் தான் மனித இருப்பின் இணைப்பின் மையங்களாகும். மனிதப் போராட்டத்திற்கு வெளியில் சுதந்திரமான இயக்கம் என்பது பூர்சுவா (முதலாளித்துவ) இயங்கியல் மறுப்பு கண்ணோட்டத்தைக் கோருவதேயாகும்.

 28. டிஸ்கோவில் என்ன நடக்கிறது? ஒளி மங்கிய இருளில், மெய்மறந்த போதையில், மெய்மறந்த இசையில், சுயநிலை இழந்த சுதந்திர ஜனநாயகத்தில் சுதந்திரக் காதல், சுதந்திரப் பண்பாடு, சுதந்திரக் கலாச்சாரம் என அனைத்தும் ~கட்டற்ற சுதந்திரத்தில்| உற்பத்தியாகி சுதந்திர விபச்சாரமாகச் சிதைகின்றது. அதாவது, பாலியல் வக்கிரத்துக்குள் சிக்கிக் கொண்டோர்களுடைய, சிதைந்த குடும்பத்தின் பிரதிநிதிகளுடைய பாலியல் உணர்ச்சியைத் தீர்க்கும் மையமாக டிஸ்கோ உள்ளது. இது, நவீன டிஸ்கோ விபச்சார விடுதிகளில் மெய்மறந்த போதையில், மெய்மறந்த இசையில் அரங்கேறுகின்றது.

 29. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணின் சுயச்சிந்தனையை விலங்கிடுவதால் பெண்ணின் தெரிவுகள் முதல் அனைத்தும் வளர்ப்பு மிருகத்தின் நிலைக்குத் தாழ்ந்துள்ளது. வளர்ப்புப் பண்ணைகளில் மிருகத்தின் பாலியல் பூர்த்தியை எப்படி வளர்ப்பவன் தீர்மானிக்கின்றானோ, அதேபோல் பெண்ணின் பாலியலை ஆணாதிக்கச் சிந்தனை கட்டுப்படுத்தித் தீர்மானிக்கின்றது.
  பிறந்தது முதல் அது பெண்ணா? ஆணா? என்ற தெரிவிலேயே இவை தீர்மானமாகிவிடுகின்றது. பண்ணையின் தேவையை ஒட்டிச் சினைப்படுத்தும் மனிதன், பெண்ணையும் தனது தேர்வுக்குட்படுத்தி பிள்ளையைப் பெற ஆணாதிக்கம் வழிகாட்டுகின்றது. அடக்கமான, ஒடுக்கமான, நாணம் கொண்ட (நானாம் (மூக்குச்சரடு) பூட்டிய மாடுபோல) நிலப்பிரபுத்துவப் பெண் கணவனுக்குத் தலைகுனிந்து சேவகம் செய்யவும், அதேநேரம் ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யவும், ஒருதலைப்பட்சமான, ஒரு பக்கமான காதலை, அன்பைச் சொரியவும், ஒருதாரமணத்தைப் பேணவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள். அதே நேரம் ஆணின் உழைப்பைச் சார்ந்து வாழவும் கோரப்பட்டாள்;. சொந்த உழைப்பை நல்குவது அடங்காப்பிடாரித்தனமாகவும், அதில் வாழ நினைப்பது குடும்பப் பெண்ணின் பண்பு அல்ல என்றும் பலவகையான விளக்கத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ளாள்.

 30. அண்ணன்களே, தம்பிகளே, இந்து அடிப்படை வாதத்தை கைகோத்துக்கிட்டு திட்ட வேண்டிய எடத்துல பார்ப்பான் சூத்திரன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே!

  என் வாழ்க்கையில இதுவரையில பிராமணன் இல்லாதவன் பிராமணனையோ, பிராமணன் பிராமணன் இல்லாதவனையோ சாதியக் காரணம் காட்டி அடிச்சுப் பார்த்ததே இல்ல.

  அப்படிப் பாக்கவேண்டிய கெட்ட நேரம் வந்தா குறுக்க விழுந்து தடுக்க முயற்சி செய்வேன். ஏன்னா அடிப்படையில இப்ப இருக்கற சமூகத்துல இந்த ரெண்டு பிரிவுக்கும் எந்தப் பகையும் இல்ல. தர்க்க ரீதியான கருத்து வேறுபாடு இருக்கு – இட ஒதுக்கீட்டுல, வழிபாட்டுல. ஆனா ஒருத்தன ஒருத்தன் தாக்கிக்குற அளவுக்கு எந்த வன்மமும் இல்ல.

  Common sense இருக்குற பிராமணன், பிராமணன் அல்லாதவன் (எல்லா மதத்து ஆளும்தான்) ரெண்டு பேருமே முதலிக் மாதிரி தனி மனித சுதந்திர விரோதிகள ஒழிக்கறதோட இல்லாம, யார் என்ன செய்யணும்னு கருத்து சொல்லறவங்களயும் (உம்: பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் etc) தட்டி வைக்கறதுக்கு ஒண்ணு சேரணும்.

 31. இந்து பேப்பரை ஏன் வரங்குகின்றீர்கள்.

  பார்ப்பானுக்குமட்டும் உரியதாக இருக்கட்டும்.

 32. சபா… என்ன இது.. பாப்பானுக்கு உரியது சூத்திரனுக்கு உரியதுன்னு பேசிட்டு இருக்கீங்க? தவறத் தட்டிக் கேக்கற உரிமை எல்லாருக்கும் சமமா இருக்கற வரைக்கும் நீங்களே சமூகத்துல கோடு போட்டுப் பிரிக்காதீங்க! இந்து பிராமணர்களுக்கு ஆதரவா எழுதினா எதிர்ப்புத் தெரிவியுங்க. தவறுன்னு நிரூபிங்க. ஆனா மாத்துக் கருத்து சொல்லற காரணத்துக்காகவே தவறாமப் படியுங்க. இல்லைன்னா அவங்க என்ன (பொய்) சொல்றாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்குவீங்க?

 33. முதலாவதாகப் பெண்ணுரிமையின் பெயரில் ஆணாதிக்கவாதிகள் தமது பலதாரப் பாலியல் வேட்கைக்குப் பெண்களைப் பயன்படுத்த, பெண்களின் சுயநிர்ணயக் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் விடுதலைக்கு எதிராகத் தமது ஆணாதிக்கத் தகவமைப்பைப் பாதுகாக்க, பெண்ணுரிமையின் பெயரால் பெண்களைத் தமது விபச்சார வேட்கைக்குள் நகர்த்த வரைமுறையற்ற புணர்ச்சி கோட்பாட்டை வைக்கின்றனர். இவர்கள் இதனடிப்படையில் பெண்ணுக்கு கற்பு இல்லை என்கின்றனர். கற்பு பற்றிய திரிபுக்கூடானக் கொடூரமான ஆணாதிக்க நடத்தையைச் சாதகமாக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கம், இதனூடாக விபச்சாரத்தை முன்மொழிகின்றனர். இது ஏகாதிபத்தியப் பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.

  இரண்டாவது தரப்பு ஒருதாரமணத்தில் பெண் மட்டும் காதலிக்கவும், ஆண் பலதார மணத்தில் நீடிக்கவும் உள்ள சலுகைகளைத் (வரைமுறையற்ற புணர்ச்சியைத்) தக்கவைக்க, பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தி பல கணவன் வாழ்வைக் கோருவதாகச் சேறடிக்கின்றனர். இவர்களும் கற்பு உண்டு என்கின்றனர். இதன் மூலம் திரிவுபடுத்திய கற்புக் கோட்பாட்டை விபச்சாரத்துக்கு எதிராக முன்நிறுத்தி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒருதாரமணத்தில் பெண்ணைச் சிறை வைக்கின்றனர். இது நிலப்பிரபுத்துவப் பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.
  பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையான பரஸ்பரம் காதலிக்கவும் சேர்ந்து வாழும் உரிமையைத் திரிபுபட கொச்சைப்படுத்தி, ஒரு தரப்பு பலகணவன் வாழ்வைக் கோருவதாகக் காட்டி எதிர்க்க, மறு தரப்பு பல கணவன் மணத்தைக் கோருவதோடு இருவரும் அச்சொட்டாக ஒரே புள்ளியில் ஒரே நோக்கத்;துக்காக இணைகின்றனர். இரண்டையும் பெண் எதிர்க்கின்றாள் என்பதை மூடிமறைப்பதன் மூலம், ஆணாதிக்க நலன்களை மூடி கலர் (வண்ணம்) அடிக்கின்றனர்.

  பல கணவன் முறையைக் கோருபவரின் கோட்பாடு ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக இருக்க, கோருவதாகக் காட்டும் (கோருவதாகக் கூறி எதிர்க்கும்) கோட்பாடு நிலப்பிரபுத்துவப் பொருளாதாரப் பண்பாட்டுக்கு இசைவாக உள்ளது. அதனால் தான் இரு பொருளாதார அமைப்பும் ஒன்றில் இருந்து ஒன்று விலகாதவாறு உலகளவில் (ஏகாதிபத்தியத்திய நாடுகளில் தேசிய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்டது.) ஆளும் வர்க்கமாக இன்று உள்ளனர். இது பெண் பற்றிய மதிப்பீட்டிலும் ஒன்றாக உள்ளது.

  இன்று பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில், பொருளாதார ரீதியில் எடுத்தால் ஏகாதிபத்தியப் பொருளாதார அலகு பெண்ணை வெறும் கவர்ச்சிப் பண்டமாக, தன் கூலிப் பட்டாளமாக அடையாளப்படுத்திய சமூக அமைப்பை உலகின் முன் படைத்துள்ளதுடன் அதை உலகம் தழுவிய அளவில் நகர்த்துகின்றது. இன்று ஏகாதிபத்தியப் பொருட்களின் சந்தை ஆணாதிக்க வக்கிரக் கண்முன் (இங்கு ஆண் – பெண் வேறுபாடின்றி) பெண் நிர்வாணக் கோலத்தில் அவளின் பெண் உறுப்புகள் மீது மட்டுமே குவிந்து சாத்தியமாக்கியுள்ளது.

 34. பார்ப்பனிய இந்து மதம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு சார்ந்து, கடவுளை அடைய உருவாக்கிய தானங்களில் பெண்ணும் உள்ளடங்கியிருந்தாள். பத்து வகையான தானங்களை சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் கொடுப்பதன் மூலம் மோட்சத்தை, புண்ணியத்தை, பண்பாட்டைப் பேணமுடியும் என்று கூர்மப்புராணம் கூறுகின்றது. ”1.தங்கம், 2.குதிரை, 3.திலா, 4.நாகம், 5.அடிமைப் பெண், 6.இரதம், 7.நிலம், 8.வீடு, 9.மகள், 10.பசு”27 என்று கோருவதில், மகளும், அடிமைப் பெண்ணும் ஆணாதிக்கத் தேவையை அடிப்படையாகக் கொண்டே இந்துப் பார்ப்பனியம் தானமாக்கியது. இது நடைமுறையில் அமுலில் இருந்ததற்கு நாயன்மார் வரலாறுகளும், இந்துப் புராணங்களும் நிறையவே ஆதாரங்களைத் தருகின்றது. இன்றைய சடங்குகள் அதன் தொடர்ச்சியாக இருப்பது வேடிக்கையான நிகழ்ச்சிகள் அல்ல. திருமணத்தில் ”கன்னிகாதானம்” கூட பார்ப்பனர்களின் உரிமை வழியாகத் தொடரும் ஒரு சடங்குதான்.

  பெண்ணை அடிமையாகவே இந்து மதம் கருதுகின்றது. ”உயர் சாதிப் பெண் கணவனிடம் நன்றியுள்ளவளாக இல்லாதிருந்தால் அவள் நாய்களால் விழுங்கப்பட வேண்டியவள் (நாய்க்கு உணவாக்கப்படுபவள்). அவளைச் சோரம் இழைத்தவன் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்திக் கொல்லவேண்டும்”27 என்று மனுநீதி 374, 375 குறிப்பிடுகின்றது. அதேநேரம் கீழ்ச்சாதிப் பெண்ணைக் குறித்து மனுநீதி (11-178 இல்) ”ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் போன்றதே” அத்துடன் அக்குழந்தை தந்தையின் சாதிக்கு ஏழு தலைமுறைக்குப் பின் உயர்த்தப்பட முடியும் என்ற மோசடியுடன் கூடிய சதி நிர்வாணமாகின்றது. இங்குச் சூத்திரப் பெண்களின் அடிமைத்தனம், வைப்பாட்டித்தனம், இணங்கிப் போகும் அடிமைத்தனத்தை இந்துமதம் ஆணாதிக்கம் சார்ந்து சமூகப் பண்பாக்கியது. இந்து மதம் பெண்கள் மேல் குறிப்பிட்ட சில வன்முறைகளைக்கையாண்டது.

 35. அதேநேரம் வீட்டு வேலைக்காரியாகிய மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள் இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம் கோரியது. இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன். இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க, அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க விட்டு விருந்து வைத்தாராம்.

  எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக் கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர். குழந்தை மருந்தின்றி உயிருக்குப் போராடும் போதோ, மருந்து வாங்கக் காசு இல்லாதபோதோ, வறுமையில் உணவுக்குக் கையேந்தும்போதோ, வேலை தேடிப் பெண் அலையும்போதோ, உயர் அதிகாரி பெண்ணின் உரிமையை மறுக்கும்போதோ …. படுக்கையில் பெண்ணின் உடலைப் பகிரங்கமாகவே கோருகின்றது, உலகமயமாதல் பண்பாடு. அன்று நிலப்பிரபுத்துவப் பக்திப் பண்பாடு, பக்தியால் பெண்ணைக் கூட்டிக் கொடுக்க கோரியது. அந்தளவுக்குப் பார்ப்பனியம் தனது சொந்தச் சதித்திட்டங்கள் மூலம் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருந்தபடி, பெண்ணை அனுபவித்ததை இறைப்பக்தியின் பின் நிகழ்த்தியது. பெண் தனது சொந்தக் கருத்தை விட ஆணின் பண்டமாக, அவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு ஜந்துவாக, வாழ்ந்ததைக் காட்டுகின்றது, காட்டுகின்றன. இது இன்று பணத்துக்கு முன்னால், பெண் தொடர்ந்தும், ஆணின் பண்டமாகத் தொடர்வது பெண்ணின் வரலாறாக உள்ளது.

 36. பாம்BAIN கெட்டவிசத்தைவிட பார்ப்பாணின்

  (மனம் ) வன்மமும் வக்கிமுரம் கொண்டது.

  உம்:– சுனாசாmi , SO சாmi

  இந்து அடிப்படை வாதம் எங்கிருந்து வந்தது.

  (பிராமணன்)பார்ப்பானிடம் இருந்துதான்.

  பார்ப்பானாக இருப்பவன் கவலைப்படட்டும்,

 37. எது பெண்ணுரிமை, எது பார்ப்பனியம் என்ற தலைப்பில் நடந்துள்ள நெடிய விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்விவாதத்தில் உடனுக்குடன் பங்கேற்க இயலவில்லை என்றாலும் இங்கே ஒரு சிலவற்றை சுருக்கமாக கூறுகிறோம்.

  இந்தியாவில் உள்ள பெண்களுக்குள்ள முக்கியப் பிரச்சினை பார்ப்பனிய இந்துமதம் விதித்திருக்கும் அடிமைத் தளைதான். மேலும் மத, சாதி, இன தூய்மையின் அடையாளமாக பெண்ணைத்தான் இந்து மதம் வைத்திருக்கிறது.

  ஒரு மேல்சாதி ஆண் கீழ்சாதி பெண்களை பெண்டாளுவதை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு மேல்சாதி பெண் கீழ்சாதி ஆணைக் காதலிப்பதை ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியா முழுவதும் இந்த கலப்பினக் காதலுக்காக ஆண்டுதோறும் பல காதல் ஜோடிகள் கட்டிவைத்து எரிக்கப்படுகின்றனர். அதிலும் ஒரு இந்துப் பெண் ஒரு முசுலீம் இளைஞனை காதலித்தால் வட இந்திய இந்துமத மேல்சாதி வெறியர்கள் அடையும் ஆத்திரத்துக்கும், வெறுப்புக்கும் அளவே இல்லை. இப்படி மதம்மாறி மணம் செய்வதை தடுப்பதற்கே வட இந்தியாவில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கம் ஒன்றை வைத்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆக ஒரு பெண் காதலித்தால் குற்றம், காதலே குற்றம், என்ற இந்து பாசிச தூய்மைவாதப் பார்வைதான் அவள் மது அருந்தினாலும் குற்றம் என்று தண்டிக்கிறது

  இப்படி வாழும் உரிமையும், தனது விருப்பத்திற்குரியவனையும் தெரிவு செய்யும் உரிமையும் இந்தியப் பெண்களுக்கில்லாத போது மதுவறைக்குப்போகும் உரிமைதான் பெண்ணுரிமையின் அடையாளம் என்றால் வாழும் உரிமைக்காக கொல்லப்ப்ட்ட பெண்களின் அவலங்களுக்கு என்ன பதில்?

  போலீசு உதவியுடன் ஒரு பெண் மதுவறைக்குப் போகும் உரிமையை பெற்று விடலாம். அனால் மதம், சாதி மாறி மணம் செய்யும் உரிமையை ஒரு பெண் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில் இங்கே முழு சமூகமும் அவளுக்கு எதிராக நிற்கிறது.

  ஒரு பெண்ணின் நடை உடை பாவனைகள் அவளது சொந்த விசயங்கள்தான். ஆனால் அவளதுஅந்த சொந்த விருப்பத்தை அவளது மூளைக்குள் திணிப்பது நுகர்வுக் கலாச்சாரம்தான். மேலாக ஒரு பெண்ணை ஆண் நுகரும் சதைப்பிண்டமாக, போகப் பொருளாக மாற்றியிருப்பதுதான் உலகமயம் பெற்றெடுத்த நுகர்வுக் கலாச்சாரத்தின் சாதனை. ஒருபெண்ணை மனித இனத்தின் அங்கமாக பார்ப்பதற்குப் பதில் அவளை வெறியுடன் குதறும் வக்கிரத்தைத்தான் இந்த கலாச்சாரம் ஒரு ஆணுக்குக் கற்றுத்தருகிறது.

  பார்ப்பனிய இந்து மதம் அவளை தூய்மையின் சின்னம் என்ற பெயரில் ஆயுள் கைதியாக நடத்தும்போது, உலகமயம் அவளை தெருவோரத்தில் அழைக்கும் விபச்சாரியாக மாற்றி வருகிறது. இந்த இரண்டையும் தண்டிக்கும் போராட்டத்தில்தான் இந்தியப்பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது.

  மதுவறைக்குப் போன பெண்களுக்கு அறைவிட்ட இந்துமதவெறியர்கள் மதம் மாறி திருமணம் செய்தால் கொலையே செய்கிறார்கள். இவ்விரண்டின் உரிமைக்காகவும் பெண்கள் போராட வேண்டுமெ என சம்மாக பார்ப்பதில் பலனில்லை. மதுவறைக்கான உரிமையை விட கலப்பு மணம் செய்யும் உரிமையும், சாதி, மதத்தால் பாலியல் வன்முறை செய்யப்படுவதை எதிர்த்துப்போராடுவதற்கும்தான் மிகுந்த வலிமை வேண்டும்.

  இதை விடுத்து லிப்ஸ்டிக் போடுவதும், குட்டைப் பாவாடை அணிவதும், மது அருந்துவதும்தான் பெண்ணுரிமை என்று வாதாடுபவர்கள் இந்தியப் பெண்களுக்காக நன்மை ஏதும் செய்யப்போவதில்லை.

  வினவு

 38. இந்த தளத்தில் பார்ப்பனிய விளக்கங்கள் என்றுமே உண்மையாக பகுத்தறிய விரும்புவர்களுக்கு உதாவது என்பதே உண்மை. வினவின் ஒரு முகப்பார்வை , இந்த விஷயத்தில் , பல முறை விமர்சனத்துக்கு உட்பட்டாலும் அவர்களது நிலையைப் பிடித்துத் தொங்குவது என்னால் (தனி மனிதனால்) ஏற்கவே முடியாது. உடனே நான் ராம சேனா கூட்டாளி என்று முடிவு கட்டும் கூட்டம் சற்று பொருமை காக்கவும்.

  ஒரு பக்கம் ராம சேனா பெண்கள் மீது தாக்குதல் என்றால் வேறு பக்கம் ஊனமுற்றவரை கட்டி வைத்து அடித்து செருப்பு மாலைப் போட்டு அழகு பார்க்கும் இந்த சமுதாயத்தைப் பற்றி ‘புதிய’ ஜனநாயகமோ அல்ல ‘புதிய’ கலாச்சாராமோ கண்டு கொள்ளாததைத் தான் பார்ப்பனீய அரசியலின் மூலம் என்கிறேன்.

  இராம சேனா செய்தது தவறு என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து கொள்கிறேன்.

  ***

  Mar 16, 2009

  New Delhi: In Khelari in Ranchi district of Jharkhand, members of a community were caught beating a handicapped boy and then tying him to an electric pole.

  The group, which calls itself, Samaj Sudhar Samity, claims that the boy was caught consuming opium.

  To punish him, they tonsured his head and garlanded him with shoes.

  In Khelari in Ranchi district of Jharkhand, a group of Muslims formed a group called the Samaj Sudhar Samity has warned people against liquor consumption, gambling and teasing or face severe punishment otherwise.

  The members of the outfit are out on the prowl. Catching hold of any body anywhere, they deliver instant justice, without any trial any prosecution. No witness, no hearing as if they were law unto themselves.

  “Whosoever would indulge themselves in liquor consumptions, gambling and drugs, we would have to stop all of them. Therefore our community has decided to take action against them. We have already punished two to three persons at night who were found drinking and now this person was found taking drugs. We warned him earlier

  also but he paid no attention to it and again was found doing the same so he had to be punished,” said leader of the group Mohammad Nazeer was quoted by news agencies as saying.

  The incident has evoked sharp responses from the society. Local Bhartiya Janata Party (BJP) leader Jalim Singh condemned the moral policing by the outfit in the area.

  “This way of punishing someone by shaving his hair and ruthlessly tying him with the electric pole is not a fair thing to do. Nobody has acquired the right to punish someone like this on his own. Local police should see what is happening in their area. I agree that liquor consumption is not a right thing but it cannot be considered wrong enough for such a brutal punishment. I highly condemn this act,” Jalim Singh was quoted by news agencies as saying.

  Khelari is a coalfield area where poor tribals mine in inhuman conditions. They are accustomed to having liquor at all the cultural functions. So the outfit objecting to the liquor consumption as social evil doesn’t pass muster, raising many liberal eyebrows.

  http://ibnlive.in.com/news/moral-police-in-ranchi-thrash-handicapped-boy/87805-3.html?from=search

 39. ஆர் வீ க்கு புரிகிறதோ இல்லையோ தோழர் ரயாகரனும்,தோழர் வினவும் பார்ப்பனீயம் மற்றும் பெண்ணியத்தை விளக்கியிருந்தார்கள்.

  தோழர் ரயாகரனின்

  ஆணாதிக்கமும் பெண்ணியமும்,-மிகச்சிறப்பான புத்தகம் பெண்ணியத்தினை தோலை உரித்து காட்டுகிறது,

  ————————————————————————–

  ஆர்வீ,பி.முரளி…………பங்காளிங்க எல்லாம் வராங்க போல இருக்குதே, கச்சேரி நல்லா கலை கட்டிடுச்சு

 40. குடிப்பது யார் குடித்தாலும் உடல்நலக் கேடு என்பதைத் தாண்டி. இந்தியாவில் ப்ரவி வரும் பப் கலாசாரம் என்பது முதலாளித்துவ ஒழுக்கமாக நான் பார்க்கிறேன். பணக்கார நாய்கள் உண்டு கொழுத்து விட்டு பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி பப் கலாசாரத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் உடல் நோக உழைத்து விட்டு கிடைத்த பணத்தில் பெருமளவு பணத்தை டாஸ்மார்க்கில் இழக்கிறான் இல்லையா? அவந்தான் இந்த கலாசார பாசிஸ்டுகளுக்கு எதிரி. உழைக்கும் மக்களை சிந்திக்க விடாமல் அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கவே மது ஒரு கருவியாக பயனப்டுத்தப்பட்டு வருகிறது. காதலில்கூட உழைக்கும் மக்களுக்கும் காதல் உண்டு. அது உங்களின் ப்ண்டானைக் காதலை விட புனிதமானது. ஏனென்றால் ஏழ்மையும் பசியும் காதலை முதலாளித்துவ ஒழுக்கத்திற்உ எதிரான எதிர்கலாசாரமாக நிறுத்துகிறது. நீங்கள் அச்சப்படும் அளவுக்கு.உங்கள