Saturday, July 20, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

-

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960-களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்” பதவி சுகம் கண்டு பொறுக்கித் தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி”களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலே, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழிந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு” என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். “ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன்” என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்க விட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.

இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963-ம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு” நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.

மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25-ம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9-ம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.

இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு” எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.

ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957-ல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்” என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.

தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.

கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்” ராஜாஜியை “குல்லுகப் பட்டர்” எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

1967-ல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.

நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி”யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.

“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” எனும் தத்துவம்(!)தான்.

அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக் காட்டினால் ஐம்பதாயிரம் கூடும். முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.

கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.

அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.

வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்” எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.

கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்” விளக்கம் வேறு தந்தார்.

எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்” பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70-களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90-களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்”, “தளபதி” என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.

பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.

கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2008
___________________________________

 1. அந்தகாலத்தில் பானுமதி என்ற நடிகையுடன் படுக்க பல தில்லுமுல்லு வேலைகள் செய்து அதற்காக பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறாராம் அறிஞர். அந்த விஷயத்தைப்பற்றியும் போட்டு தெளிவு படுத்துங்கள் ஐயா, புன்னியமாகப் போகும்.

  • தம்பிதுரை, அண்ணாவ பத்தி பேசும்போதெல்லாம் அரசியல், தமிழ், அறிவுன்னுதான் எல்லோரும் பேசுறாங்க, அவரு அறிவ வச்சுகிட்டு ஒரு பிழைப்புவாதியாதான் போனேறே தவிர தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒன்னும் செய்யலங்கறததான அம்பலப்படுத்தனும், அத இந்த கட்டுரை கச்சிதமா செஞ்சிருக்கு, மத்தபடி அவரு நடிகைகிட்ட படுக்க போன கதையெல்லாம் யாரும் பெருசா எடுத்துக்கறதில்ல ஊர்றிஞ்ச பொம்பள சோக்காளி யெம்சீஆரும், உலகறிஞ்ச வப்பாட்டி செயாமாமியும் தமிழ்நாட்டு மொதலமைச்சரா மக்களோட பேராதரவோட 5 தடவ ஆயிருக்காங்க.

   • //ஊர்றிஞ்ச பொம்பள சோக்காளி யெம்சீஆரும், உலகறிஞ்ச வப்பாட்டி செயாமாமியும் தமிழ்நாட்டு மொதலமைச்சரா மக்களோட பேராதரவோட 5 தடவ ஆயிருக்காங்க//.I strongly condem the omission of Kalaignar in this list. He used to visit whores in Cycle Rickshaw along with Kannadasan.

 2. ஓட்டுப் பொறுக்க தேர்தல் பாதையில் நுழைந்துவிட்டால் எல்லாவற்றையும்(கொள்கைகளை)கழற்றிவிட்டு அம்மணமாகி விடவேண்டும் என்பதுதான் ஓட்டுப்பொறுக்கிகளின் கொள்கை, இதற்கு அண்ணா மட்டும் விதிவிலக்கா என்ன!

 3. அருமையான புண்ணாக்கு கட்டுரை. போய் புள்ளை குட்டிய பொழைக்க வையுங்கய்யா. நீங்களும் படுக்க மாட்டீங்க. அடுத்தவனையும் படுக்க வுட மாட்டீங்க. எல்லாரும் நாண்டுக்கிட்டு சாவுங்க.

  • ஆமாமா குஜராத்துல கூட்டம் கூட்மா போயி முசுலீம் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டவர்களின் ஆதரவாளர் மதி செல்வதை சத்தியமா நான் நம்பிட்டேன்

 4. சிறப்பான அலசல். கூடவே சுதந்திர தினத்தன்று பெரியார் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதையும் அதற்க்கு இந்த சந்தர்ப்பவாதி அண்ணா வின் பதில் பேச்சையும் நடவடிக்கைகளையும் எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

 5. அய்யா… பேசாம ‘வினவு.காம்; பேர ‘சீனா.காம்’ என்று மாற்றி விடலாமே…..

  • இல்ல ராமர் . காம் நு மாத்தின நல்ல இருக்குமா . ஆனா உண்மையில் இது கடப்பர . காம் காரணம் எந்த டுபகூரையும் விட்டுவைப்பதில்லை

 6. அருமையான கட்டுரை. வெறும் வார்த்தை ஜாலங்களால் ஊதி பெருக்கப்படும் பிம்பம் தான் அன்ன பற்றிய மதிப்பீடு. இதுவரைக்கும் அண்ணாவின் சித்தாந்தம் என்ன என்று யாரும் ஒரு வரி கூட பேசுவது இல்லை.

  நல்ல பேச்சாற்றல் , திறமையாக நாக்கை சுழற்றி வசீகமாக பேசுவது போன்றவை மூலம் மக்களை முட்டாள்கள் ஆகிய ஒரு பாரம்பரியம்தான் இந்த திராவிட பாரம்பரியம். நடை முறையோடு கூடிய அறிவியல் முறையிலான சமூக பார்வை , கொள்கையை அடைய நல்ல செயல்திட்டம் போன்ற எதுவும் இல்லாமல் , கவர்ச்சி, அடியாள் , பணம், ஜால்ரா என்று ஒரு கலாசாரத்தை உருவாகியவர்கள் தான் இந்த திராவிடம் எனபது.

  நல்ல பதிவுக்கு நன்றி

  Siva.

 7. ஒட்டு பொருக்குவது என்ற சொல்லாடல் மிக “தாராளமாக” பயன்படுத்துப்பட்டுள்ளது. ஏன் அப்படி பேச மாட்டீக. பல் முனை தேர்தல், பிரச்சாரம் போன்றவைகளில் சிறிது நம்பிக்கை வைக்காதவர்கள் ; பாட்டாளி வர்க‌ ‘சர்வாதிகாரத்தை’ நம்புவர்கள் இப்படிதான் பேசுவீர்கள். ஓட்டு கேட்கவே கூடாது. பிரச்சாரமே யாரும் செய்யக்கூடாது. பிறகு ஜனனாயகம் என்றால் என்னவாம் ? அய்ரோபிய, அமெரிக்க நாடுகளிலும் “ஓட்டு பொறுக்கிகள்” உள்ளனரே ? இவர்கள் எல்லோரும் தம்மை ஜனனாயகவாதிகள் என்று கூறிக்கொள்வது எப்படியாம் ? உங்க “புதிய ஜனனாயகத்தில்” தேர்தல்கள், பழைய சோவியத் ரஸ்ஸியா போல இருக்கும் தானே ? அதாவது ஒரே கட்சி தான் தேர்தலிக் நிற்க்கும். (கம்யூனிஸ்ட் கட்சி) ; பிற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படும். சரி, அந்த ஒரு கட்சியில் கூட போட்டி வேட்பாளர்கள் அனுமதி இல்லை. அனத்து
  “வாக்காளர்களும்” அந்த ஒரே வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முறை தான் “புதிய” ஜனனாயகம். :))
  இந்திய‌, அய்ரோப்பிய‌ முறைக‌ள் “ஓட்டு பொறுக்கிகள்” முறை ? எதோ இத்த‌னை முறைகேடுக‌ளிலும் இந்த‌ அளவாவ‌து இந்தியாவில் அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ம், ஓட்டுரிமை இருப்ப‌தால் தாம், ச‌ர்வாதிகார‌த்தை இன்னும்
  வ‌ர‌விடாம‌ல் த‌டுக்க‌ முடிகிற‌து. உங்க‌ளுக்கெல்லாம் இது ச‌ரிப‌டாது. ச‌வ்தி அரேபியா, மைன்மார் போன்ற்
  ஓட்டு பொறுக்கிக‌ளே இல்லாத‌ நாடுக‌ள் தாம் ச‌ரி. !! :)))

 8. இந்திய ஜனனாயகத்தை பற்றி தோழர்களின் பார்வை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அமர்தையா சென் அவர்களின் பேட்டி இது : (அவரை தாம் கொண்டாடுகிறீர்கள், இதை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?) :
  http://www.outlookindia.com/article.aspx?206089 What role does society play?

  I’ve been a supporter of Indian democracy for a very long time. I place myself on the Left but used to be shocked at the way in which the Left has often viewed Indian democracy as a ‘sham’ democracy. Democracy is a great asset both on its own and as a supplement to the market and to the government. The market is guided by the profit motive which sometimes works well but at other times needs to be supplemented by democratic demands, for example, in fulfilling needs of health care or basic education.

  The government can do these things but it needs a political incentive. Elections, opposition parties and public debate are not only important for political processes but can also contribute to the making of economic policy. Public discussions can also challenge conservative value systems.

 9. //இந்தாளுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சென்னா கோவிச்சுகுறாரு…மேலே பிதற்றியிருப்பத்ற்காக நோபல் பரிசு கொடுக்கவா முடியும்?//வழி மொழிகிறேன். 🙂

  • ஒரு லூசு சொல்றது இன்னொரு லூசு வழிமொழிகிறது. :)))))
   வாசகர்களுக்கு தெரியும் : யாருக்கு என்ன தெரியும்கறது.

   • எனக்கு ஒன்னே ஒன்னு தெரியுது.. அது உன்னை போல அரைவேக்காடுங்களுக்கு பதில் எழுதி யாரும் நேரத்தை வீணாக்கக்கூடதுங்குறதுதான்.

 10. பிழைப்பு வாதமே செய்யத் தெரியாத அல்ல உண்மை கம்யூனிஸ்ட்களிடம் மட்டுமே வேலைப்பார்க்கும் தோழர்கள் சொன்னால் அதனை மறுக்க நாம் யார்?

  பாரதியவே பிழைப்புவாதி என மருதையன் கேவலப்படுத்துகிறார். ஆனால் கொலைகாரர்களைத் தலைவர்கள் என சொல்லி சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களை யாரும் மறுத்து பேசினால் அவர்கள் முட்டாள்கள்!

  • வினவு திருமாவை அம்பலப்படிதியது போல நீங்களும் மருதையனை பற்றி ஏதும் இருந்தால் அம்பலப்படுத்துங்கள் நாங்களும் வழி மொழிகிறோம்

   • Feroz,

    நிஜமாவா ? பு.ஜா. கட்டுரை தானே திரு.மா வை ‘நல்ல வார்த்தைகளால் அம்பலப் படுத்தியது’. இல்லை என்றால் மக்களுக்கு உண்மையே தெரிந்திருக்காதே!!!

    மருதையன் தான் ம.க.இ.க வின் தலைமை என்று வினவோ அல்ல ம.க.இ.க வினரோ இது வரை தெரிவித்தது கிடையாது. அப்புறம் எங்கன போய் என்னனு விமர்சனம் செய்ய?

    முதல்ல ம.க.இ.க கொள்கையே யாருக்கும் புரியல அதுக்குள்ள அவன் போலி இவன் பிழைப்புவாதினு பட்டம் கொடுக்க கிளம்பிட்டாங்க – இதெல்லாம் கேட்டா நான் உளவாளி. ஸோ நான் கப்..சுப்.

  • ஆமா கொலை காரர்களை பற்றி பேசும் நீ ஏன் ஆடோ சங்கர்னு பேர் வச்சிருக்க

   • நண்பர் சங்கரா நான் ம க இ க வில் இணைந்தவனில்லை ஆனால் எங்கள் ஊரில் மீட்டிங் போடும்போது அவர்கள் மைக்கில் சத்தமாகவே சொல்கிறார்களே மருதையன் தான் அவர்கள் பொது செயலாளர் என்று பின் என்ன குழப்பம் உங்களுக்கு

    • அண்ணாதுரை முதலியார் என்பது தவறு. அண்ணாதுரை ஐயர் என்பதே சரி. தந்தையார் நேருவுக்கு நெருக்கமான இராஜம் ஐயர் ஆவர். அவர் கொடுத்ததுதான் எம்.ஐ.ஈ.டி குரோம்பேட்டை. திராவிடத்தலைவர்கள் பலருக்கும் இதே வரலாறுதான். அவரவர் ஊர்களில் சென்று விசாரியுங்கள்.கண்ணதாசனுக்கே இது தெருயாது.

 11. நல்ல கட்டுரை,

  பதவி என்பது தோள்துண்டு, கொள்கை என்பது இடுப்பு வேட்டி என்பதெல்லாம் போய், கொள்கை என்பது கைக்குட்டை, பதவி என்பது கால்சட்டை என்கிற அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்.

  அண்ணாவையும் பெரியாரையும் யாராவது விமர்சித்தால் பின்னாலே வந்து கும்மியடிக்க ஒரு குடுமிக் கூட்டம் காத்திருக்கிறது. பின்னூட்டங்களை சற்று மட்டுறுத்தவும்

 12. மாபெரும் பிரச்சனைகளை எல்லாம் வினவு வினவி வானுயர வளர்ந்துள்ளது. வினவை நான் வினவுகிறேன்! நல்லவர்களை நல்லவர்களென்றும், கெட்டவர்களை கெட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டக்கூடிய ஒரே ஒரு நல்லவனை மட்டுமாவது உங்களால் வெளிக்கொணர்ந்து காட்டமுடியுமா? அவர் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்.

 13. அதாவது முதலாளித்துவ காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்த இடதுசாரிகளைப்போல அறிஞர் அண்ணாவும் ஒரு சந்தர்ப்பவாதின்னு சொல்றீங்க?

  • அபி, உங்க சந்தோசத்துல மண்ணள்ளி போட்டதுக்கு மன்னிக்கனும், வினவு நீங்க நினைக்குற ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்டு கிடையாது. அந்த ஓட்டு பொறுக்கிகளை புரிஞ்சுக்க இத படிங்க https://www.vinavu.com/2009/03/23/elec0902/

   • அரை டிக்கெட் … நீ ஒரு அரை வேக்காடு … உனக்கு மனசுல மார்க்ஸ் நினைப்பு .. எதுக்கு எடுத்தாலும் நான் ஓரிஜினலு , நீ டுப்ளிகாட்
    சொல்லியே உன் வாழ் நாள் வீனா போகுது … அண்ணா வாய் பற்றி எழுதும் பொது உனக்கு தைரியம் இருந்த அறிவாலயம் வெளில் நின்று உன் புரட்சி வேலை யான போஸ்டர் ஒட்டு பாக்கலாம் … அதை விட்டு விட்டு நான் தான் ஒரஜிணளு ,, நான் தான் அறிவாளின்னு ஒரு அலப்பறை …. போ போய் உன் புரட்சி வேலை செய்து முடித்துவிட்டு இங்க வந்து பொலம்பு

 14. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை. அரசியலையும் சினிமாவையும் கலந்து கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் உணர்ச்சி என குழைத்து மேடைப்பேச்சோடு சேர்த்து பதவிக்கு வந்து அறிஞரானவரை மெய்யாகவே அறிஞரென நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு அவரை மூக்குப்பொடி அண்ணாத்துரையாக உதறிக்காட்டும் கட்டுரை.

  அதுசரி உடன்பிறப்புகளுக்கு பதிலாக வேறு சிலர் இங்கு உதார் விடுவது எதற்காக?

  செங்கொடி

  • சரிங்க குப்பன், கொஞ்சம் முழு கட்டுரையையும் படிச்சிட்டு என்ன தப்புன்னு குறிப்பா சொல்லுங்களேன், ஒரு பத்தி படிச்சிட்டு கருத்து சொல்றது அறிவுபூர்வமானதா? அப்படின்னா அண்ணாவ பத்தின உங்க கருத்தும் இப்படிப்பட்டதுதானா?

 15. /*
  ஒரே ஒரு நல்லவனை மட்டுமாவது உங்களால் வெளிக்கொணர்ந்து காட்டமுடியுமா? அவர் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்.
  */
  /*
  அப்ப யாருதான் நல்லவங்க நம்ம ஊருல?
  */
  Kamaraj (Just him, not the congress party).

 16. // dvd
  Posted on September 17, 2009 at 1:29 am

  /*
  ஒரே ஒரு நல்லவனை மட்டுமாவது உங்களால் வெளிக்கொணர்ந்து காட்டமுடியுமா? அவர் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்.
  */
  /*
  அப்ப யாருதான் நல்லவங்க நம்ம ஊருல?
  */
  Kamaraj (Just him, not the congress party).
  //
  And ப.ஜீவானந்தம்!

 17. The primary content of the feedback that opposes this article , opposes only the criticism ! Vimarsanathula enna nirai/kurainnu sollunga ! vimarsanam panradhey kurai endru sollaradhu eppadi sari?

 18. ஏதோ வயிற்று எரிச்சல் அதிகமாகி எழுதிய கட்டுரை போல் தெரிகிறது.

  முதலில் மாறி… மாறி கூட்டு வைத்து பொறுக்கி திரியும்… என்.வரதராசனையும், தாவண்ணா பாண்டியையும் திட்டி விட்டு அண்ணாவை திட்டுங்கள்…

  1983இல் தமிழ் நாட்டு கட்சிகள் எல்லாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இந்திராவிடம் சண்டையிட்ட போது… சிங்களர்களுக்கு ஆதரவாக திசை திருப்பிய பி.ராமமூர்த்தியை செருப்பால் அடித்துவிட்டு அண்ணாவை கவனியுங்கள்…

  உங்க (அ)நியாயம் நல்லா இருக்கு…

  • தமிழ் குரல் அண்ணை கவனிக்க

   இங்கே வினவுல வந்து புரியாம பின்னூட்டம் போடுறவங்களுக்கு லிங்கு குடுத்தே வயசாயிடும் போலிருக்கே! வினவு போலி கம்மூனிஸ்டு இல்லை இல்லை இல்லவே இல்லை, நீங்க சொல்லுற தாப்பாவையும் வரதுகுட்டியையும் விமர்சனம் செய்து பல கட்டுரைகள் வினவில் வந்துள்ளது தயவு செய்து படிக்கவும் https://www.vinavu.com/category/communism/pseudos/

   தவிர ஈழ விடுதலை/இன அழிப்பு போரில் தமிழக மற்றும் அரசியல் கட்சிகளின் கபட நாடகத்தையும் துரோகத்தையும் வினவு போல அலசிய தளம் வலையுலகில் இல்லை என்று என்னால் சவால் விட முடியம்.. தயவு செய்து படிக்கவும்
   https://www.vinavu.com/category/politics/eelam-politics/

   நன்றி வணக்கம்

  • அண்ணாதுரை பற்றிய கருத்தில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருப்பின் அவர் எந்த வகையில் யோக்கியர் என்பதை நீங்கள் எழுதுங்கள், அதை விட்டுவிட்டு யாரை முதலில் விமர்சிப்பது யாரை இரண்டாவது விமர்சிப்பது என்று பட்டியல் தராதீர்கள்.

 19. அடாடா …. அண்ணா இல்லையென்றால்…. இந்த லெனின் மார்க்ஸ் … சோம்பேறிக்கூட்டம் தமிழகத்தில் காலூன்றி பிழைப்பு நடத்தியிருக்கும் …… அந்த வகுத்தெரிச்சல்தான்…. டேய் செங்கொடீ …. ஏதோ பொசுங்கற நாத்தம் வருது …. என்னனு பாருங்கடா……

 20. /*
  ஒரே ஒரு நல்லவனை மட்டுமாவது உங்களால் வெளிக்கொணர்ந்து காட்டமுடியுமா? அவர் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்.
  */
  /*
  அப்ப யாருதான் நல்லவங்க நம்ம ஊருல?
  */
  Kamaraj (Just him, not the congress party).
  //
  And ப.ஜீவானந்தம்!//

  And ‘Kakkanji’

 21. அண்ணாவின் முகாமூடியை கிழிதமைக்கு நன்றி..என் போன்ற இளம் தலைமுறையினருக்கு தெரியாத பல நிகழ்வுகளை கூறியிருந்தீர்கள்..
  [b]மேலும் எம் ஜி ஆரின் முக மூடியை கிழிக்கவும்..நன்றி வினவு

 22. சீனிவாசன், விஸ்வநாதன், காயத்ரி, மைதிலி மட்டுமே நிறைந்து இருந்த தாலுகா அலுவலகம், வங்கிகள், பல்கலைகழகங்கள் போன்றவற்றில் மாடாசாமி, இசக்கி அம்மாள், முத்து பேசி, சுடலை மாடன் போன்றோரை அமரச் செய்த சாதனையை அந்த காஞ்சிபுரத்தானை தவிர வேறு யாரால் செய்ய முடியும்.

  அய்யா உங்கள் சட்டையில் பட்டன்/பித்தான் கிழிந்து போய் இருக்கிறது, வீட்டிற்கு போய் வேறு அழகிய சட்டை போட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன கார் ஓட்டுனர், நகர் திராவிட முன்னேற்ற கழக செயலரிடம், வேண்டாமப்பா சட்டமன்றத்தில் உள்ளாட்சி கோரிக்கை விவாதம் நடக்க இருக்கிறது, சாமானியர்களின் பிரச்னைகள் பற்றி விவாதம் இன்று, அதுதான் முக்கியம் என் சட்டை அழகு முக்கியம் அல்ல என்று மட்டுமே பேச தெரிந்தவன் எங்கள் சௌமியன்.

  பதவி, இமேஜ், ஈகோ, பாகுபாடு என்ற எந்த பகட்டும் இல்லாத அந்த திராவிடன் எங்கே, ஆறு அல்லது எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்காக கொடநாட்டு தலைவி, சசிகலாவிடம் கூனி குறுகி நிற்கும் நல்லகண்ணு, பாண்டியன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், மருதையன் எங்கே

  முன்னாள் காஞ்சி மாவட்ட வாசி
  ராம்ஜி_யாஹூ

  (next year 15 Sept2011) also this post & comment will have life.

 23. Im not sure whether the info is right or wrong…. when I was kid from some political leaders I got news that he was an CIA agent using Dravida nadu stuff…. palaya allunkala ketta unmai neriya therium.. medaiku tamil pilaipuku english arasiyaluku hindi.. ippadi moonru makkalai yematrum kootam than DMK Family…

  • It may be quite true that CNA was a CIA agent as was confirmed by a former employee of CIA.When this was quoted by TNSeshan,AIADMK tried to launch a murderous attack on him and ransacked Taj Coramandel hotel.The Hindi agitation was launched with funds from CIA to destabilise India as is the practice of USA.These were all mentioned by the CIA employee and quoted by Seshan.Hence there may be a truth in that

   • I was wondering what could be the reason for attack on Seshan.Was it because that Seshan described Anna as CIA agent?Was Hindi agitation launched with funds from CIA to destabilise India?I really appreciate you Sundar for your fertile imagination.Better become a script writer.You can mint money like anything.VAAZHGA VALAMUDAN.THAMIZHANUKKU THAMIZHANE YEDHIRI.

 24. முதலில் அது என்ன புதிய ஜனநாயகம்? ஜனநாயகத்தில் புதிது பழசு இருக்கா?
  புதிய ஜனநாயகம் எதிலுமே இருண்ட பக்கத்தைத்தான் பார்க்கிறது. ரோசா செடியில் இருக்கும் பூவை மணந்து பார்க்காமல் முள்ளைத்தான் தொட்டுப் பார்க்கிறது.

  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பது குறள். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு பல வேலை ஆட்கள் தேவை. அதை உடைப்பதற்கு இரண்டு முட்டாள்கள் போதும்.

  “சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார் என்கிறீர்கள். அதற்குப் பெயர்தான் இராசதந்திரம். அதன் மூலம் கழகம் தடைசெய்யப்பட்டு அதன் செயற்காடுகள் முடக்கப்படுவதை அண்ணா தவிர்த்தார். இந்தக் கட்டுரையை எழுதியவர் மாதிரி முட்டாள்த்தனமாக நடந்து அரசியலிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்.

  அடுத்து அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை. “அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.” அண்ணாவின் பொருளாதாரக் கொள்கையைத்தான் பொதுவுடமை சீனா பின்பற்றுகிறது. முன்னாள் உருசியா பின்பற்றுகிறது. உலகில் இன்று பொதுவுடமை பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் நாடுகள் இரண்டுதான் உண்டு. ஒன்று கியூபா. மற்றது வட கொரியா. இரண்டிலும் வறுமைதான் மிஞ்சி நிற்கிறது. இதனைப் படித்துவிட்டுச் சொல்லவில்லை. கியூபாவை ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

  அண்ணா “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்று சொன்னது அவர்களைப் பற்றி எழுந்த வதந்திக்கு ஆப்பு வைக்கத்தான். அதன் பொருள் அண்ண பானுமதியோடு படுத்தார் என்பதல்ல.

  காகம் திட்டி மாடு சாகாது. புதிய ஜனநாயகம் திட்டி அண்ணாவின் புகழை அழிக்க முடியாது. அண்ணா குன்றில் இட்ட விளக்கு. இன்றுகூட அண்ணாவின் பெயரைச் சொல்லித்தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். புதிய ஜனநாயகத்துக்கு எனது அறிவுரை. எப்போதுமே மலத்தைத் தேடாமல் குணத்தைத் தேடுங்கள்.

  • WITHOUT ANNADURAI..THE TAMILNADU WOULD HAVE SUFFERED A LOT ..THE TAMIL LANGUAGE WOULD HAVE SUFFERED A LOT…ANNA IS A SAVIOUR OF TAMIL…..READ ALL HIS WRITTINGS ,,THEN YOU WILL KNOW WHO ANNADURAI WAS…EPPORUL YAAR YAAR VAAI KAETPINUM APPORUL MEI PORUL KANBATHARITHU…

   • தம்பி, நீங்கள் படித்திருக்கிரீகளா அண்ணா எழுத்தை? Kitsch என்றால் என்ன என்று தேடிப்பாருங்கள், அந்த வகை. மேலும் மெய்ப்பொருள் காண்பது சிலருக்கு அரிதாக இருந்தாலும், குறள் என்னமோ மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறது.

 25. Hi Friend,

  all of your messages are related to political parties & corruption. Yes, theses two subjects are criticized one but this message will not bring an revolution or changes in the society.
  Because whatever you are doing, the same sort of things doing by regular opportunist news magazines as well.

  We have to educate the people with right social science & philosophy. What manifesto, are you having to display?

  if you really wants to do true stuff please educate the people – especially youngster………use philosophy, explain all historical materialism & dialectical materialism

  I have some doubt that whether you are really try to change the society or you people also just like other opportunist people, like opportunist – opposition political party where they have been clearly asked to do some agitation / strike so that people will not start their agitation their own.

  This doubt came in mind since you are not following or criticized the whole imperialism / imbalance with dialectical approach

 26. கலைஞர் 90 வயது: 70 ஆண்டு மக்கள் பணி, ஐந்து முறை முதல்வர், ஐம்பது ஆண்டு எம்.எல்.ஏ, தொடர்ந்து 14 ஆண்டு பாஜக, காங்கிரஸ் மத்திய அரசில் கூட்டணி மத்திய அமைச்சரவையில் பங்கு…. இப்படி கலைஞர் சாதனைகளை அடுக்கி வைக்கிறது கலைஞர் குடும்பமும், அவர்களின் ஊடகங்களும்.

  மேற்கண்ட சாதனைகளால் மக்களுக்கு என்னடா பிரியோஜனம் என்று கேட்க பிடாது.

  ஆனால் அண்ணா காலத்திலேயே திமுக கொள்கைகள் வெற்று முழக்கங்களாக மாறி விட்டனர் என்பதற்கு இந்த கட்டுரையே ஆதாரம்.

  இதில் சொன்னது போல இன்று கலைஞர், தளபதி, அம்மா, திருமா, கேப்டன், ஐயா என வெறும் மூஞ்சிகளே கொள்கைகளாக மாறி நாறி போய் விட்டது.

  குடிக்கின்ற தண்ணி முதல் காலையில் கக்கா போவது வரை அனைத்தும் இன்று காசு இருப்பவனுக்கு மட்டுமே என ஆக்கியதில் கலைஞருக்கு பெரும் பங்கு உள்ளது. அதனை மறுத்தால் அவர் உழைத்தது தமிழகத்திலா, அமெரிக்காவுக்கா என்று தான் நாம் திமுக காரன் சட்டையை பிடித்து கேட்க முடியும்.

  அதே போல் தமிழ் மொழிக்காக இன்று ஊடகங்களில் மட்டும் கூப்பாடு போடும் கலைஞர் தனது 70 ஆண்டு கால மக்கள் பணியில் தமிழில் படித்தவனுக்கு என்ன செய்தார் என்பதை விட எம்ஜிஆர் காலத்துக்கு பின் மெட்ரிக் பள்ளிகளை வளர்த்து விட்டு தனியார் முதலாளிகளின் உற்ற நண்பனாக இருந்தார் என்பதற்கு என்ன பதில் கூற முடியும்.

  ஆகையால் கலைஞரினால் மக்களுக்கு கிடைத்தது வேதனைதான் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

  சமீபத்திய வேதனை என்றால்:
  1) கலைஞர் டிவி

  சன் டிவி பிரதஸுடன் உரசல் வந்தவுடன் 6 தொலைக்காட்சி ஆரம்பித்து மானாட மயிலாட முதல் பல சீரியல்கள் என மக்கள் சிந்தனையை மழுங்கடித்து வருவதை கூற வேண்டும்.

  2) உதயநிதி ஸ்டாலின்:

  இவர் உள்ளிட்ட கலைஞர் அனைத்து பேரன்களான உதயநிதி, அருள்நிதி, தயாநிதி என கோடிகக்ணிக்கில் கொள்ளையடித்த பணத்தில் படம் எடுத்து மேற்கண்ட தொலைக்காட்சி வேலையினை சினிமாவில் செய்வது.

  இதில் நேற்று ஸ்டார் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் உதயநிதி பேசுகையில் கடந்த ஒரு வருடமாக சும்மா தான் இருந்திட்டு இப்பதான் வந்தேன் என்கிறார். சும்மா இருந்திட்டு நடிக்க வரும் போது நயந்தாரா, ஹன்சிகாவுடன் ஆடும் உதயநிதி அந்த படங்களிலும் சும்மா லும்பனாக தான் வருகிறார்.

  சும்மா இருப்பதையே படத்திலும் நடிக்கும் பேரன் மூலம் டாஸ்மாக் போதை போல சூது கவ்வும் வசனம் போல வேலை வெட்டி இல்லாமல் ஆடம்பர கார்கள், வாழ்க்கை என பேரன்களை வளர்த்து வருகிறார்.

  இதை விட கேவலம் இருக்க முடியுமா…. 4 மணிக்கு எழுந்து நடைபயணம் போகும் தலீவர் தன் வீட்டு பிள்ளையினை வளர்த்து உள்ளதை பாருங்கள்.

  ***********

  • Mr Ashok,Kalaignar only issued GO making Tamil as the language to be learned compulsorily in TN.According to the GO,Tamil was made as a compulsory language from Std 1 onwards.Every year one more Std should be brought under the purview of this GO.This academic year onwards Tamil is compulsory in Std 10.Against this GO only,the Matriculation School owners have filed a case.

 27. ஆனால் மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியதில் முக்கிய பங்கு அறிஞர் அண்ணாவுக்கு எப்போதும் உண்டு. மாற்றங்கள் இன்று ஏமாற்றமாக போய்விட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

 28. அண்ணாதுரை, எம் ஜி ஆர், கலைஞர் ஜா, ஜெ அனைவரும் சினிமா கூத்தாடிகல் இவர்கலிடம் …கம்
  எதிர்பார்ப்பது நம் தவரு.

 29. //நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும்,//

  //“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” எனும் தத்துவம்(!)தான்.//

  எப்ப்ப்ப்ப்பா… இல்லேன்னாலும் அந்த பச்ச கொழந்தைக்கு ஒண்ணுமே தான் தெரியாது. விஞ்ஞான ரீதியா எப்படி ஊழல் பண்ணனும்னு கூட அண்ணா தான் சொல்லி கொடுத்துட்டு போனாரு போல .

  • கருனானிதி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தார் அதனால் அவரை மன்னிக்க கூடாது அம்மா வெளிப்படையாகவே ஊழல் செய்தார் அதனால் அவரை மன்னிக்கலாம் மன்னிக்க வேண்டும் என்று யேசு சொல்லிவிட்டார் என்னக்கா இது உங்க பித்தலாட்ட போங்காட்டம் ஒப்பாரிய முடிங்க கண்ண துடைச்சிட்டு, அம்மா இறந்த துக்கத்தில் ஈர விழியுடன் உலகத்தை பார்க்காதீர்கள் எல்லாம் மங்களாகவே தெரியும் ,யேசு சொன்னார்நீங்கள் எனக்காக அழ வேண்டாம் உங்களுக்காக அழுங்கள் என்று ஆனா பிசாசு அம்மா உங்கள எதோ ஒரு வகையில் அவருக்காக அழச்சொல்லுகிறார் என்றால்நீங்கள் பிசாசின் பிள்ளை எனவே யேசுவை மீண்டும் சிலுவையில் அறையாதீர்கள் தயவு செய்து ….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க