ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 3

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
– உடலை வாங்க மறுத்த 100வது நாள்
– தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வந்த நிலையில், நீதிமன்றத்தின் துணையுடன் பெற்றோரின் விருப்பமின்றியே ஆகாஷின் போலீசு எரித்துள்ளது. இப்போராட்டத்தின் 100-வது நாளில் 16 குற்றவாளி போலீசுகளை கைது செய்யக்கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை:

கடந்த ஜூன் 15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆகாஷ் டெலிசனை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் குருசாமி,
கழக இணைச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

தோழர் ராமலிங்கம்,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்.

தோழர் சங்கர்,
ம. க. இ. க.

தோழர் ரெங்கன்,
ம. க. இ. க, மதுரை.

தோழர் நிலவழகன்,
தலைவர், தமிழக மக்கள் கட்சி.

தோழர் சந்துரு,
விடுதலை வீரன் அமைப்பாளர்கள்,
ஆதித்தமிழர் விடுதலைக் கட்சி.

தோழர் மெய்யப்பன்,
பொறுப்பாளர், தமிழ் தேசிய குடியரசு இயக்கம், மதுரை.

தோழர் காமாட்சி பாண்டி
தலைவர், மதுரை திராவிட விடுதலைக் கழகம்.

வழக்கறிஞர் தெய்வம்
தமிழ் தேச மார்க்சியக் கழகம்.

தோழர் சாகுல்
பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ., மதுரை.

தோழர் சுந்தர்
செயலாளர், மக்கள் விடுதலைக் கட்சி, மதுரை.

தோழர் சையது ராஜா
செயலாளர், மனிதநேய  ஜனநாயக கட்சி, மதுரை.

தோழர் ரபிக்
பொருளாளர், மனிதநேய  ஜனநாயக கட்சி, மதுரை.

தோழர் அக்பர்,
தலைவர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், மதுரை.

தோழர் தவம்,
நிறுவனர், அரக்கலகம் யூடியூப் சேனல்.

தோழர் ஜாபர்,
தலைவர், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மதுரை.

மேலும் ஜனநாயக இயக்க தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்

***

சிவகங்கை:

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மானாமதுரை ஒன்றிய இளைஞர் அணி தோழர் ஜீவன் செல்வராஜ், மக்கள் அதிகாரக் கழக தோழர்கள் சிதம்பரம், மணி, மற்றும் கழக இணைச்செயலாளர் தோழர் ரவி மற்றும் ஆகாஷின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆகாஷ் படுகொலைக் குற்றவாளிகள் 16 போலீசை கைது செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

***

தேனி:

15.6.2026 அன்று ஆகாஷ் டெலிசன் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தேனி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் 15 பேர் வரை கலந்து கொண்டனர். மக்கள் அதிகார கழக தோழர்கள் நாட்டு மாடு நலச் சங்கத் தோழர்கள் கலைவாணன் மற்றும் தோழர் ஆதி கலந்து கொண்டனர். தமிழ் தேச மார்க்சியக் கழகம் தோழர் மதியவன் இரும்பொறை மற்றும் போடியை சேர்ந்த பழங்குடி மக்கள் இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் பத்து பேர் கலந்து கொண்டனர்.

***

திண்டுக்கல்:

போலீசால் விசாரணைக்கு அழைத்துச்சென்று அடித்து படுகொலை செய்யப்பட்ட மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனுக்கு நீதி வேண்டி 100 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும் திருப்பவனம் போலீசு குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

***

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் பாரதி ராஜன்,
கிளைச் செயலாளர், ராஜபாளையம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

தோழர் முத்துசாமி,
மக்கள் அதிகாரக் கழகம்.

தோழர் தர்மராஜ்,
தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை.

தோழர் ராஜேஷ் கண்ணா,
விருதுநகர் மாவட்ட செயலாளர்,
சமூக நீதி வழக்கறிஞர் சங்கம்.

தோழர் அனல் முருகேசன்,
மாநில பொதுச் செயலாளர்,
பழங்குடியின சமூக நீதி முன்னேற்ற கழகம்.

***

இராமநாதபுரம்:

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகையில் நீதி வேண்டி  ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை செய்யப்பட்ட நூறாம் நாளில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆகாஷ் படுகொலைக் குற்றவாளிகள் 16 போலீசை கைது செய்ய வலியுறுத்தியும் லாக்கப் படுகொலைகளை தடுக்க வலியுறுத்தியும் மனு கொடுக்கப்பட்டது.

இதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகளான  பெரியார் பேரவை தலைவர் தோழர் நாகேசுவரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ரவிச்சந்திரன், CPI (ML)லிபரேசன் மாஸ்லைன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் யோகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சியின் மாநில இணைச் செய்தித் தொடர்பாளர் தோழர் தமிழ்வாணன்,  காரல் மார்க்ஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் காத்த முத்து, மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் பரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

***

தூத்துக்குடி:

மக்கள் அதிகாரக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் முத்துலட்சுமி,
வழக்கறிஞர்,
அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கம்

தோழர் அ.அசோக்குமார்,
ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

தோழர் சார்ல்ஸ்
மாவட்டச் செயலாளர்
ஓட்டப்பிடாரம் தொகுதி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் மின்னல் அம்ஜ்த் ,
தேசிய செயற்குழு உறுப்பினர்,
AICCTU.

தோழர் சந்தோஷ்
சமூக செயற்பாட்டாளர்.

தோழர் தூத்துக்குடி சம்ஸ்தீன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு இஸ்லாமியர் கூட்டமைப்பு.

தோழர் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு மக்கள் நலக் இயக்கம்.

***

நெல்லை:

மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள் :
தோழர் ராமகிருஷ்ணன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

தோழர் முத்துவீரன் மற்றும் கட்சி தோழர்கள்
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி.

தோழர் மீனா,
மாநில மகளிர் அணி செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் கபிலன்,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
மக்கள் தமிழகம் கட்சி.

தோழர் பிரியா மனோகரன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

***

தென்காசி:

மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:

தோழர் பொதிகை ஆதவன்,
தென்காசி மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.

தோழர் செல்வராஜ்,
தென்காசி நகரச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.

தோழர் தென் தமிழரசு,
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.

***

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைபில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:

தோழர் சு.கோபி போரறிவாளன்,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் கி.குமரேசன்,
மாவட்டச் செயலாளர்,
ஆதித்தமிழர் கட்சி.

தோழர் மு.ராஞ்சித் குமார், மாவட்ட இளைஞரணி,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் ஆத்தியப்பன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.

தோழர் நாஞ்சில் துரை,
நில உரிமை மீட்பு இயக்கம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் செல்வன்,
ஒன்றிய செயலாளர்,
ஆதித்திராவிடர் நலக்குழு உறுப்பினர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் P.பாபு,
மாவட்டத் துணைச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் S.ராஜன்,
மாவட்டத் துணைச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
மற்றும் பல்வேறு ஜனநாயக – முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

***

திருச்சி:

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் என்கிற இளைஞரை விசாரணை என்கிற பெயரில் அடித்து கொன்ற திருப்பவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 16 போலீசு குற்றவாளிகளை கைது செய்யாமல் ஆகாஷ் டெலிசன் உடலை வாங்க மாட்டோம் என 100வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் 100 வது நாள் போராட்டமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று (15/06/2026) மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கலந்து கொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் ஐயப்பன், தலைவர்,
தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு.

தோழர் ஜெகன், திருச்சி மாவட்ட செயலாளர்,
மக்கள் தமிழகம் கட்சி.

***

புதுக்கோட்டை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் கொட்டடி படுகொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளான 16 போலீசு குற்றவாளிகளை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரக் கழக ஒருங்கிணைப்பில் மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளரும், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தோழர் தினேஷ் குமார் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பழ. திருமுருகன் , தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் கருணாநிதி , ஜனநாயகத்திற்கான தொழிலாளர் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் மூக்கையன் , புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பிரியதர்ஷினி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் காசிநாததுரை, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜரத்தினம், மாநில குழு உறுப்பினர் தோழர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் தோழர் தேவேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சின்ன ராஜா, தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் வேம்பை சின்னதுரை, தோழர் ராஜா, தோழர் ரமேஷ் குமார், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் தேவன், மாவட்ட செயலாளர் செந்தில் ராஜா, மாவட்ட பொருளாளர் தோழர் கருப்பையா, தமிழ் தேசிய மீட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மீரா காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டு புகார் மனு அளித்தார்கள்.

மக்கள் அதிகார கழகத்தின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் பிரகாஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

***

தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க