ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
– உடலை வாங்க மறுத்த 100வது நாள்
– தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, உடலை வாங்க மறுத்த 100வது நாளில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம் ஜூன் 15, திங்கட்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:

மக்கள் அதிகார கழகம் சென்னை மாவட்டம் சார்பாக, ஜூன் 15 அன்று சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் ராஜ்குமார்,
வடசென்னை மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

தோழர் ஆவடி நாகராசன்,
ஆவடி மாவட்டச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர் அஸ்கர் அலி,
மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI).

தோழர் அ.முகமது காசிம்,
மாநில ஊடகப்பிரிவு செயலாளர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

தோழர் ராஜேந்திரன்,
வழக்கறிஞர், சென்னை.

ம. முகமது கவுஸ்,
தமிழ்நாடு வெல்ஃபேர் கட்சி.

***

திருவள்ளூர்:

ஜூன் 17 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் அதிகாரக் கழகத் தோழர் ஆகாஷ் தலைமையில், எஸ்.டி.பி.ஐ. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், தோழர் வி.எம்.துல்கர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் அறிவு இணைந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.வெங்கட்ராமனிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

***

காஞ்சிபுரம்:

மக்கள் அதிகாரக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஜூன் 15 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

***

ராணிப்பேட்டை:

மக்கள் அதிகார கழகம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மானாமதுரை ஆகாசின் லாக்கப் படுகொலையை கண்டித்து அவருடைய பெற்றோர்கள் நூறாவது நாளாக போராடிக் கொண்டு வருகிறார்கள்.

ஆகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு 100 நாட்களாக போராடி வருகின்ற அவருடைய பெற்றோர்கள் கிராம மக்களின் போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரக் கழகம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடம் கொட்டடி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

***

வேலூர்:

வேலூரில் மாவட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

***

விழுப்புரம்:

மானாமதுரை பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் லாக்கப் படுகொலை செய்த போலீசு குற்றவாளிகளை கொலை வழக்கு பதிவு வேண்டும் உடனே கைது செய்ய வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷின் பெற்றோர் உறவினர்கள் ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

அந்தப் போராட்டம் நூறாவது நாளை அடைந்துள்ளது ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாட்டில் கொட்டடி கொலைகள் நடைபெறுவதை தடுக்கவும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம்  15/6/26 அன்று மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் தோழர் சாந்தகுமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாணவரணி செயலாளர் தோழர் பிரசாத், தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுச்சேரி இளைஞரணி செயலாளர் தோழர் விஜயன், மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரமேஷ் ஆகியோர் பங்கெடுத்து கொண்டு தங்களுடைய கண்டனங்களையும் ஆதரவினை தெரிவித்தனர்.

***

கடலூர்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் சா.முஜிபுர் ரஹ்மான்,
வழக்கறிஞர்,
மாவட்ட செயற்குழு,
SDPI.

தோழர் A.உத்ரவேல்
வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் வே.விடுதலை,
மாநகர செயலாளர்,
ம.தி.மு.க.

தோழர் தீனதயாளன்,
வழக்கறிஞர்,
LIC லிக்காய் முகவர் சங்கம்.

தோழர் அருள்,
மக்கள் அதிகாரக் கழக சட்ட ஆலோசகர்.

தோழர்.ராமலிங்கம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

தோழர் சக்திவேல்,
மாவட்ட துணை செயலர்,
மக்கள் அதிகாரக் கழகம்

தோழர் பெருமாள், தோழர் சத்தியமூர்த்தி, தோழர் ராமு, தோழர் ஜீவா, தோழர் விஸ்வநாதன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

***

கள்ளக்குறிச்சி:

மக்கள் அதிகாரக் கழகத்தின் மனு கொடுக்கும் இயக்கமான மானாமதுரை பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை செய்த காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் அதிகாரக் கழகம் தோழர் வினாயகம் தலைமையில் மனு கொடுத்தோம்.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:

தோழர் வினாயகம்
செயலாளர் மக்கள் அதிகாரக் கழகம்,

தோழர் மணிபாலன்
இணைச்செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்,

அறிவுக்கரசு மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி,

இளையராஜா மாவட்ட துனை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி,

மகேந்திரன்
திருநாவலூர் தெற்கு ஒன்றிய செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

***

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழக நகரச் செயலாளர் தோழர் வீ.சேகர், கழகத்தின் விருதை நகரச் செயலாளர் தோழர் அசோக் மற்றும் தோழமை அமைப்பான தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மனியன் ஆகியோர் மனு அளித்தனர்.

***

தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க