“பரம் வைபன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தினசரி காலையில் பாடும் பஜனையில் வரும் ஒரு வரி. இதற்கு, ‘பரம வைபவமான நிலையில் உன்னை வைத்திருப்பேன் என் ஸ்வராஷ்ட்ரமே’ என்று பாரதத் தாயைப் பார்த்து பாடுவதாகப் பொருள் சொல்லிக் கொள்கிறார்கள். பாரதத் தாய் பரம வைபவமான நிலைக்குப் போனாளோ என்னவோ – காக்கி டவுசர் கும்பல் பரம வைபவத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக தினசரி செய்தித் தாள்களின் பக்கங்கள் கோலாகலமாக அறிவிக்கின்றன.
ஒழுக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ் – ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒழுக்கம் என்பது தான் அவர்களின் பாரம்பரிய மார்க்கெட்டிங் தந்திரம். இந்த தந்திர மந்திரத்தை தமிழகத்தில் துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் தவறாமல் ஓதுவது நாம் அறிந்த செய்திதான். ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் போய் ‘இந்த முக்கு முக்குறீங்களே… அப்டி இன்னா தான் சாதிக்கப் போறீங்கபா’ என்று கேட்டுப் பாருங்கள், “நாங்கள் ஒழுக்கமான கட்டுப்பாடான மனிதர்களை உண்டாக்குகிறோம்; அவர்கள் பல்வேறு துறைகளுக்கும் சென்று தமது நேர்மையான ஒழுக்கமான நடவடிக்கைகளால் தேசத்துக்கு சேவையாற்றுவார்கள்” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.
இப்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒழுக்கப் பல்கலைக்கழகத்தில் கடுமையாக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பயின்று பட்டம் பெற்று அரசியல் துறைக்கு அனுப்பப் பட்டவர்களைக் கொண்ட கட்சி தான் பாரதிய ஜனதா. சங்கப் பரிவாரத்தின் அரசியல் முகம். இந்தியாவில் மேற்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக பெரிய மாநிலங்களான குஜராத்திலும் கருநாடகத்திலும் அவர்களின் நல்லொழுக்க ராமனாட்சி நடந்து வருவதாக அவர்கள் மட்டுமல்ல – தினமலரும் கூட சொல்கிறது. தினமலருக்கு பார்த்தசாரதிகள் எழுதும் கடிதங்களில் ‘என்னயிருந்தாலும் குஜராத் மாதிரி வருமா.. மோடி போல வருமா… தல போல வருமா’ என்கிற புலம்பல்களைத் தவறாமல் பார்க்க முடியும்.
இவ்வாறாக ‘நல்லொழுக்க ராமராஜ்ஜியம்’ நடந்து வருவதாக சொல்லப்பட்ட இவ்விரு மாநிலங்களிலும் உண்மையில் நடப்பது ‘ஜொள்ளொழுகும் காமராஜ்ஜியம்’ தான் என்கிற உண்மை சமீபத்திய செய்திகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடகத்தைச் சேர்ந்த மூன்று பாரதிய ஜனதா அமைச்சர்கள் பிட்டுப் படம் பார்த்து கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கு நாடே காறித்துப்பி அந்த எச்சிலின் ஈரம் கூட காயும் முன் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இதே காரியத்தைச் செய்துள்ள விவகாரம் வெடித்துள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம் ‘சூடாக’ நடந்து கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சவுத்ரி மற்றும் பார்வாத் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் கையில் உள்ள ஐ.பேடில் எதையோ பார்த்து தமக்குள் ‘சூடாக’ விவாதிப்பதை அவதானித்த பத்திரிகையாளர் ஜனக் தாவே, மக்கள் நலன் பற்றித் தான் ஏதோ பார்த்துக் கொண்டிருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துள்ளார். முதலில் விவேகானந்தரின் படங்களைப் பார்த்து மகிழ்ந்த காவி வேட்டி ராம பக்தர்கள், அதைத் தொடர்ந்து நிர்வாணப் படங்களைக் கண்டுகளித்து காவிக்குள் பதுங்குவது ராமபக்தியல்ல – காமபக்தி தான் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர். பட்ஜெட் சூட்டுக்கு இதமான குளிராக அந்த குஜால் மேட்டர் இருந்தவிதம் இந்தியாவுக்கே தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த ஜனக் தாவே, விஷயத்தை சபாநாயகர் கன்பத் வாஸ்வாவின் காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். விஷயத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்த சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சபா நாயகரின் ‘கொதிப்பை’ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன் – “இது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்வதற்கில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இப்படி ஊடகங்களால் குறிவைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாவதை சகித்துக் கொள்ளவே முடியாது. இது பற்றி உண்மையறிய ‘ப்ளா ப்ளா ப்ளா’ சட்டப்பிரிவுகளின் படி விசாரணை செய்வோம்”
இனி இந்த விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தனியே வேறு எழுத வேண்டுமா என்ன? இப்படி கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொள்ளும் கன்பத் வாஸ்வாவின் அறிவுக்கூர்மை கருநாடக சபாநாயகருக்கு இல்லாமல் போனதை நினைத்து ‘நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்’ என்று தலைமேல் கைவைத்து அமர்ந்துள்ளார் அம்மாநில பாரதிய ஜனதா முதல்வர் சதானந்த கவுடா. கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொள்ளும் விஷயத்தில் கருநாடக பாரதிய ஜனதா வேண்டுமானால் தத்திகளாக இருக்கலாம், ஆனால் அம்மாநில நீதித் துறையோ இந்த விசயத்தில் கப்பென்று பற்றிக் கொள்ளும் பெட்ரோலில் ஊறிய கற்பூரமாய் இருக்கிறது.
கருநாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே அம்மாநிலத்தில் நடந்த சுரங்க ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணை அறிக்கை ஒன்றை முன்பு தாக்கல் செய்திருந்தது. அதில், ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் லஞ்சம் கொடுத்தது என்கிற விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ம் அத்தியாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மேல் முதல் தகவலறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடந்த கோமாளிக் கூத்துகளைத் தொடர்ந்து எடியூரப்பா தனது விசுவாசியான சதானந்த கவுடாவை ஒப்புக்குச் சப்பானியாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு பதவியிலிருந்து இறங்கினார். சிறைக்குப் போனார் – ஜாமீனிலும் வந்தார்.
தற்போது இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஆலமரத்தடி பஞ்சாயத்துக் கூட்டத்தார், லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் இருக்கிறது – ஆனால், அதை வாங்கிக் கொண்டு தான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு எங்கே ஆதாரம் – அதனால் ‘செல்லாது செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், காசு வாங்கித் தான் சலுகை காட்டப்பட்டது என்றால் அதைப் பற்றி எடியூரப்பாவின் கருத்தைக் கேட்கவில்லையே – அப்படிக் கேட்பது தானே இயற்கையான நீதிமுறை என்று அங்கலாய்த்துள்ளது. இதே பஞ்சாயத்து தீர்ப்பை அப்படியே விரிவாக்கிப் பாருங்கள் – கலைஞர் டீவிக்கு காசு வந்தது என்னவோ சரிதான் – ஆனால், அது சலுகை காட்டப் பட்டதற்காகத் தான் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் அப்படியே இருந்தாலும் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப் படாதா என்று ஆ.ராசா மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது கேட்கிறதா?.
வலது கை தான் தின்றது – இடது கை தான் கழுவியது ஆனாலும் ரெண்டும் வேற வேற கையாச்சே? என்று கூட இந்தத் தீர்ப்பை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்தத் ‘தீர்ப்பை’ விளங்கிக் கொள்ள பல்வேறு வகைகளிலும் முயன்று பார்த்தோம்.. நாராசமான உதாரணங்களே நினைவுக்கு வருவதால், நீதிமன்ற ‘மாண்பையும்’ ‘புனிதத்தையும்’ கணக்கில் கொண்டு இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். இத்தீர்ப்பில் உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரச பதவியில் இருக்கும் ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமில்லை என்று சொல்லியிருக்கிறது.
புகழெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் – வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த முசுலீம்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்? முசுலீம்கள் என்பதலேயே சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? க்ரோசின் மாத்திரை வைத்திருப்பதாலேயே நக்சலைட் என்று சந்தேகப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்தியாவின் மொத்த ஆலமரத்தடி பஞ்சாயத்து கும்பல்களுக்கும் எடியூரப்பாக்களின் புகழின் மேல் இருக்கும் விசுவாசமும் கவலையும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மேலும் உயிரின் மீதும் என்றாவது தோன்றியிருக்குமா?
இது ஒருபக்கமிருக்க, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் ‘பாத்தீங்களா நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னோம்ல’ என்று பாரதிய ஜனதாவின் மேலிடம் சட்டையின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் போதே கீழே வேட்டியை உருவி விட்டார் எடியூரப்பா. தனக்கு விசுவாசமான 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் ஓட்டிக் கொண்டு போய் பெங்களூரு நகரத்துக்கு வெளியே இருக்கும் ஐந்து நட்சத்திர ஆட்டுப் பட்டி ஒன்றில் அடைத்த எடியூரப்பா, ‘சரி சரி கிளம்பு காத்து வரட்டும்’ என்று சதானந்த கவுடாவுக்கு கெடு விதித்து விட்டார். ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குப் பேர் போன காவி கும்பலின் கட்டுப்பாடு ‘பிட்’டுப்பாடாகிக் கிழிந்து கந்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் எடியூரப்பா அவிழ்த்தெறிந்து விடுவாறோ என்று அஞ்சிய பாரதிய ஜனதா டவுசர் பாண்டிகளின் மேலிடம் களத்தில் இறங்குகிறது.
தொடர்ந்து நடந்து வரும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் இன்று வரை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே தில்லியை நோக்கி ஒரு படையெடுப்பையும் நடத்தி முடித்துள்ளார் எடியூரப்பா. பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்காரியில் இருந்து அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஸ்வயம் சேவகத் தலைவர்களுக்கு இரண்டு பக்கமும் இடி – ஒன்று, எடியூரப்பாவைப் பகைத்துக் கொள்வது உடனடியாக ஆட்சிக்கு ஆப்பு வைத்து விடும் என்பதோடு நீண்ட கால நோக்கில் அவருக்கு விசுவாசமான சாதி ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம், அவரை முதல்வராக்கினால் அகில இந்திய ரீதியில் ஊழல் ‘ஒழிப்பை’ முன்வைத்து தாம் போட்டு வரும் சீனின் திரை கிழிந்து விடும். இனி என்ன கிழிவதற்கு? ஏற்கனவே நார் நாராய் தொங்குவது வேறு விசயம்.
கழுதை முன்னே போனா கடிக்கும் பின்னே போனா உதைக்கும் என்கிற இந்த இக்கட்டான நிலையில் கடிவாங்கலாமா உதை வாங்கலாமா என்பது பற்றி முடிவெடுப்பதற்காகக் கூடிய பாரதிய ஜனதா உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடந்து எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது – அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும் போது நிதின் கட்காரின் மூஞ்சில் ஒரு சங்கடமான புன்னகையொன்று தோன்றியதை செய்திச் சேனல்களில் காண முடிந்தது. அடேங்கப்பா.. ஆர்.எஸ்.எஸ் காரவுக என்னமா டிரெய்னிங் குடுக்கறாங்கபா!
___________________________________________
– தமிழரசன்
____________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
- கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!
- எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
- கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!
- ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…
- பா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது!
- பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்
- கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
இந்தக்கட்டுரையின் மையக்கரு கருத்து அனைத்தும் சரியே…ஆர்.எஸ்.எஸ்ல் இருக்கும் வரை உள்ள தேசப்பற்று, மதப்பற்று, கட்சிக்குள் வந்தவுடன் பணப்பற்றாகவும், பதவிப்பற்றாகவும் மாறுகிறது…..இந்த மாற்றம் ஒரு நியதியாக மாறிக்கொண்டிருப்பதுதான் வேதனை…இன்றும் அதிகாலை ஒரு சிறு விளையாட்டு மைதானத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசனலனையே குறியாகக்கொண்டு, பயிற்சி மேற்கொள்ளும் உண்மையான தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸ்ல் உண்டு…னான் எப்பொழுது நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் அம்மைதானத்தின் வழி செல்வதுண்டு…. அந்த 60 வயசு பெரிசுகள் ஒரு 12 பேர், 5 லிருந்து 10 வயது வரை ஒரு 15 பேர், காராத்தே உள்ளிட்ட பயிற்ச்சி மேற்கொள்வதைக் காணலாம்..
குண்டு வைச்சுதல பேர்வாதி கடமை கண்ணியம், பிட்டுப்பாடுடன் இருக்கும் ஆர் எஸ் எஸ்தான். பையா எந்த ஊருல இருக்குறாப்ல. ஆர் எஸ் எஸ் வைச்ச குண்டுக்கு ஒரு 500 இந்துவாவது அரெஸ்டு ஆயிருக்கனுமே ஏன் ஆகல? மேலும், ஆர் எஸ் எஸ் உறுப்பினப் பொறுக்கிகளும் கல்யாணம் செஞ்சுக்கலாம் என்கிற மாற்றத்தை கொண்டு வரக் காரணமாக இருந்த ஓரினச் சேர்க்கைக் கலாச்சாரம் பற்றி ஆர் எஸ் எஸ் தலைவர்களின் கடிதங்களே வாக்குமூலம் கொடுக்கின்றன. இந்த இழவத்தான் தேசப்பற்று, மதப்பற்றுன்னு கதவிட்டுட்டு திரியறாரு பையா. சின்னப் பையன் அப்படித்தான் ரீல் விடும்
அதெல்லாம், பேசப்பசாதுன்னா ப்டாது, அப்புரம் கான்சி காம கோடி பத்தி பேசுவீங்க. அதெல்லம் இந்து கல்சர்,நோக்கு ப்ர்யாதுடா அசுர அம்பீஈஈஈஈஈ
யோக்கியன் சொல்ராரு கேளுங்க….
வெள்ளைக்கரான எதிர்த்து இந்த வெண்ணை வெட்டிகள்நடத்துன போராட்ட்ட்டத்தையும் அப்படியே சிலாகிஷு எழுதுங்க பீயா
உங்கள் வேதனை எனக்கும் உண்டு பையா அவர்களே! ஆர்.எஸ்.எஸ் – பட்டறையிலிருந்து வெளி வந்த ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எப்படி குறை கூறலாம்?. ஆனால் நாங்கள், முஸ்லீம்களில் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக முழு முஸ்லீம் சமுதாயத்தையே தீவிரவாதிகள் என்று சொல்வோம். முஸ்லீம்கள் கோபப்பட்டு பின்னூட்டம் இடக்கூடாது. சரிதானே பையா அவர்களே?!
//எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசனலனையே குறியாகக்கொண்டு// ரொம்ப ஆழமா போய் எந்த சந்தேகமும் கேக்கல பையா… எனக்கு இந்த ஒண்ணை மட்டும் சொல்லுங்க? ‘தேச நலன்’ன்னு சொல்றீங்களே.. எந்த தேசத்தோட நலன்? இந்தியாவா? பிரிடிஷ்காரன கட்டியமைத்த நாடு மட்டும் வேணும்… ஆனா பிரிடிஷ்காரன் வேண்டாம்… அப்படி தானே? பிரிடிஷ்காரன் தனது நிர்வாகத்திற்காக சிதறிகிடந்த நாடுகளை இணைத்து இந்தியான்னு ஆண்டான்… ஆனா அவன் போன பிறகும்(?!) அவன் தற்காலிகமா கட்டியமைச்ச ஒரு நாட்டை ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய நாடு என்று சொல்வது கொஞ்சம் காமெடியா தெரியுதே?
சரி இந்தக்கட்டுரையோட மையக்கருத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அது என்ன சம்பந்தம் இல்லமா இடையில ஒரு பிட்டு..
/////புகழெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் – வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த முசுலீம்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்?//
உலகில் மனிதர்களாகப்பிறந்தோம் என்ற ஒரே கரணத்திற்க்காக இந்தியாவில் மட்டும் முஸ்லீம் தீவிரவாதத்திற்க்கு இறையானோர் எத்தனை பேர், ஏன் ஒவ்வொரு வருசமும் தான் குண்டு வெடிக்குது, பல அப்பாவி உயிர்கள் பலி யாகின்றன..பலலட்சம் பாதிக்கப்படும் இந்த தீவிரவாத்தில் சில ஆயிரம் பேர் பாதிக்கப்படுதலும்நடக்கத்தான் செய்கிறது..
/
ஓநாய் அழுகுது, இந்த சாவுக்கு வேர் உங்க காக்கி டவுசர்ர்ர்தான்,
அப்ப க்ருப்பு என்ற ஓநாய் சிரிக்கிதா???
ஆமா பின்னே “இந்தக்கட்டுரையின் மையக்கரு கருத்து அனைத்தும் சரியே”னு பின்னூட்டம் போடும் அளவுக்கு டவுசர்கள் நெலம ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப கேவலமா போடுச்சே, அதான் சிப்பு வந்துச்சி சிப்பு.
கர்ப்பா..னல்லா சிரி இப்படி தனியா சிரிச்சு சிரிச்சுத்தான நீ இந்த லெவலுக்கு வந்துருக்கிறாய்…..அடுத்து நேரா ஏர்வாடி தான்…..பூர்வீகம் ஏர்வாடீன்னா ஈஸி..
நான் ஏர்வாடி போக ரெடி, ப்பீயா கைபர் கணவாய் வழியா பழைய இடத்துக்கே போகணும், எத்தனா தேதி போறே?
னீ ஏர்வாடிக்கேசுன்னு திரும்பவும் நிரூபித்து விட்டாய்…கைபர் கணவாய் வழியா வந்து இந்தியாவ இம்ச பண்ணுறது நீ தான் கற்பு..னாங்களெல்லாம் ஒம்மண்ணின் மைந்தர்கள்..
//னாங்களெல்லாம் ஒம்மண்ணின் மைந்தர்கள்.//
அன்பு,செந்தமிழன்,மற்றும் அடியேன் உட்பட பலரும் இங்கே கிராஸ்பெல்ட்டின் வரலாற்றை ஆதரங்களோடு அடுக்கினாலும், இன்னும் எப்படித் தான் அதெ பச்சை பொய்யை சொல்லிகொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை. பாய் கைபர் வழியா வந்தாரு என்ற வரலாறு தெரிந்த பையா, தான் எங்கே இருந்து வந்த்தோம்னும் ரொம்ப சுலபமா மறந்த்துடாரு போல…!!! பையாவுக்கு ஒரு கேள்வி. “இங்கே இருக்கும் முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான் என்பதை ஒப்புகொள்ள வேண்டும்” என்று சு.சாமி போன மாசத்துக்கு முன்னாடி சொன்னாபுலயே, அப்போ மண்ணின் மைந்தர்கள் யாருன்னு கொழப்பம் வருதே? முதலில் உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க… அப்புறம் சபைக்கும் வந்து சப்பை கட்டு கட்டலாம்…!!!
ப்ப்ப்பீயாவுக்கு வீடு வரைக்கும கிழியும்னுநெனைக்கிரேன்
சு சாமி என்ன பெரிய அப்பாடக்கரா, அல்ல அவர் அனைத்து இன்டுக்களுக்கும் அட்வகேட்டா?
கிராஸ் பெல்டுகள் மட்டும் இந்துக்கள் அல்ல பொண்ணு…
//கிராஸ் பெல்டுகள் மட்டும் இந்துக்கள் அல்ல பொண்ணு…//
இந்த மேட்டர் கிராஸ்பெல்ட்டுகளுக்கு தெரியுமா?
“னீ ஏர்வாடிக்கேசுன்னு திரும்பவும் நிரூபித்து விட்டாய்…கைபர் கணவாய் வழியா வந்து இந்தியாவ இம்ச பண்ணுறது நீ தான் கற்பு..னாங்களெல்லாம் ஒம்மண்ணின் மைந்தர்கள்
உங்க தமிழைப் பார்த்தாலே தெரியுது, —– மண்ணின் மைந்தர்ர்ர்ர்னு, அது சரி ஏர்வாடி என்ன பாகிஸ்தான்லயா இருக்கு திரு ப்ப்ப்ப்பீயா அவர்களே….
இல்ல கருப்பா..உன்ன மாதிரி சில பக்கிஸ்த்தான் கோஸ்டியெல்லாம் ஏர்வாடியில் இருக்கிறது…
அவனுகளுக்கு தெரியுதோ இல்லையோ முதல்லநீ தெரிந்துகொள்…பிளேடு போட்டுக்கொல்லாதே..
“அவனுகளுக்கு தெரியுதோ இல்லையோ முதல்லநீ தெரிந்துகொள்…பிளேடு போட்டுக்கொல்லாதே..”
மைய விவாத்திலிருந்து விலகி தந்திரமாக விவாதிக்கும் ப்பியா வெக்கமாக இல்லை .
தேவதாசி கலாசாரத்தை ஒழிக்க கூடாது என்று கொடி பிடித்த காமராசர்கள் அமைத்தல்லவா சுவயம் சேவக். அப்படி பட்ட உன்னதமான சுவயம் சேவக் உறுவாக்கின ஒழுங்கு சிலர்கள் பின்ன எப்படி இருப்பார்கள். ஒட்டு போட்ட மக்கள் திறுவோடு எந்தி நிக்க இவனுங்க சட்டசபையில பிட்டுபடம் ஒட்ரானுங்க. சபையில சட்டத்துக்கு மதிப்பும் இல்லை இவனுங்க வாய்”கிலி”ய பேசுறது மட்டும் “இந்திய கலாச்சாரம்”, ஜனநாயகம்.தேசபக்திய வளக்குறானுங்கலோ இல்லையோ தேக பக்திய நல்லாவே வளக்குறானுங்க.
இந்த அரசியல் வியாதிகள் தான் இந்தியாவை வல்லரசாக மாற்ற போரானுங்க. பாரத் மாதாக்கி ஜெய்….
தேவதாசி கலாசாரம் சமூகத்திற்கு பாதுகாப்புனு சொன்ன சத்தியமூர்த்தி அயிருக்கு கிடைத்த பதில் பையாவுக்கும் கூற வேண்டும்.
//கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடகத்தைச் சேர்ந்த மூன்று பாரதிய ஜனதா அமைச்சர்கள் பிட்டுப் படம் பார்த்து கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கு நாடே காறித்துப்பி அந்த எச்சிலின் ஈரம் கூட காயும் முன் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இதே காரியத்தைச் செய்துள்ள விவகாரம் வெடித்துள்ளது.//
நான் என் சிறு வயதில் “ஷாக்கா” செல்வேன், பள்ளியின் உணவு இடை வேளையில் காரியாலயத்திற்கு சென்று அங்குள்ள கதை புத்தகங்களை வாசிப்பேன். ஆர்வமாக இருக்கும் அப்போது.காரணம் குடும்பத்தில் உள்ளவர்கள் R S S உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். சுவயம் சேவக்குகள் வீட்டிற்கு கூட வருவார்கள். சிலர் சிறுவனாகிய என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள். அந்த வயதில் சரியாக விளங்கவில்லை, பெற்றோரிடம் சொல்லவும் பயம். R S S காலிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது பின்பே புரிந்தது.
Sagodhara neelakandan,unmaiyai than solgirirgala ???
உண்மை நண்பரே. தவறான முறையில் நடந்து கொண்டவர் ,கும்பகோணத்தில் உள்ள காரியாலயத்தின் பொறுப்பில் இருந்தவர்.
ஐயோ இத படிச்சு நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்!அப்புறம் என்ன செய்யணும்?
ஓரின சேர்க்கை தவறு என விணவு சொல்ல தயாரா?
ஓரின சேர்க்கைக்கும் pedophile க்கும் வேறுபாட்டை டிக்ஷனரி எடுத்து பாத்துட்டு பேசு தம்பி!
வடிவேலு பாணியில் சொல்வதென்றால் – ஓ அவனா நீ?
அய்யா திருகு குரலே! உங்கள் ஆர் எஸ் எஸ் டிக்சனரியில் நீங்கள் என்ன வியாக்கியானம் சொல்வீர்கள். விவரமாகத்தான் சொல்லுங்களேன்.
“Sexual attraction felt towards children”.
ஆறு வயது ஆயிஷாவை கல்யாணம் பண்ணிகிட்ட முகமது நபி pedophile இல்லையா ?
அப்படி போடு அருவாள
நான் கேட்டது விணவு அவர்களை!ஓரின சேர்க்கை தவறு என்று அவர்கல் சொல்ல தயாரா?
அப்புறம் நீ கெட்ட விளக்கதுக்குதான் pedohpile என்ற வாரத்தையை சொன்னேனே?உங்களுக்கு வெளக்கம் சொல்லியே நான் ஒன்ஜிடுவேன் போல!
நல்லா சமாளிக்கிரீங்க பாஸ், பேசாமா கன்னட குரல் போட்டு எடியூரப்பாட்ட போய் சேருங்க, உங்கள மாதிரி ஒருத்தர் அவசரமா அவருக்கு தேவையாம்….
கற்பு சார் நீங்க கூட உங்க பேர வாய்ஸ் ஆப் பக்கிஸ்த்தானுன்னு வ்ச்சுக்கலாம்…
எப்படியோ சங்கராச்சாரி, தேவநாதன்களுக்கு விளக்கு புடிச்சதை ஒத்துக்கிட்டா சரி,
“சிலர் சிறுவனாகிய என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள்” இதுக்கு யொக்கியமா பதில் சொல்லு. அப்புறம் pedophile க்கும் வேறுபாட்டை கேள், உங்க “இந்த்த்து” பால்ய விவாகம்னு சொல்ராலேநோக்கு தெரியுமோ, 60,000 பொண்டாட்டி புகழ் தசரதனுக்கு புள்ள வரம் கொடுத்ததே அய்யிருங்கதான், போ போயீ வால்மீகி ராமாயணம் படிஷிடு வா…..
நான் அந்த விஷயதுக்குள் போகலை அறிவு சுடரே!மொதல்ல மரியாதையா பேசு பச்ச டவுசர் வெளிய தெரியுது!நான் ஆர் எஸ் எஸ் ன்னு சொன்னனா அறிவு சுடரே?
ராமாயணம் படிக்க எனக்கு டைம் இல்ல!உங்களை போல வேஸ்டா வாதம் விவாதம் [பண்ணுற வீரமணி வகையறா ஆசாமிகள் படிக்கவே அது எழுதப்பட்டது!அதனால நீ போய் படி செகப்பு கோடி பிடிக்காத நேரத்தில் இதை படி எனக்கு வேளை இருக்கு செகப்பா!
தலிவரே, ராமாயணம் படிக்கவே நேரமில்லேனா இன்னா புடுங்கரேனு உங்க டவிசர் அடிக்க வர போராங்கோ, வெரி கேர் ப்புல்..
போச்சு, உங்கள முஸ்லிம் தீவிரவாதினு பையா கண்டுபுடிச்சிருவாரு, பீயா ம் ஸ்டார்ட்
என்ன கருப்பா அப்பீட்டா…மேல கிழி கிழீன்னு கிழிக்கிறாங்கள்ள…பதில் சொல்லுறது..
அவுரு எஸ்கேப்பு!ராமாயணம் படிக்க போயிருக்காரு!ஆறு மாசம் கழிச்சு வரலாம்!
பெடொக்பிலெ தெரியுமாம் ஆனா ராமாயணம் தெரியாதாம், காமெடியா இல்ல களவானித்தனமா.
பாஸூ நாங்க ராமாயணம் பற்றி படிச்சதால்தான் நீங்க இப்படி நாறுரங்க,
இவருக்கு சபோர்ட் வேர….
மான் கராத்தாலே ப்பீயா டாக்டரு பட்டமே வாங்கிட்டாரு, என்ன கலாய்கிறாராம், அய்யோ,அய்யோ
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அப்பீட்ட்டாயிட்டு, இப்ப இஙக வந்து சம்பந்தமில்லாமல் பேசும் கற்பு…..னீ ஏர்வாடிக்குப் போயே ஆக வேண்டும்
அதான் உங்க டவுசரை அடுத்டுத்த கமெண்டுல கழட்டிடாங்களே…. அப்புறம் ஏன் இந்த ஊளை உதாரு…
எப்படித்தான் இப்படி மெயின்டென் பன்றீங்களோ, நல்லா படி யார் அப்பீட்டு யாஇ ரிப்பீட்டுனு தெரியும்.. வர்ட்டா ப்பீஇயா
It is disheartening to see Vinavu publishing these type of sordid articles(like Nakeeran). There are lot of other issues which should be taken up (I’m expecting each and every article of Sainath to be translated).
Vinavu has decreased the number of informative/educative articles and increased the count of sensational articles. Also the readership for public interest/ economy/agriculture related articles is very much lesser than that of religious/anti-brahmanical articles (proof: comments count for such articles). I’m not defying the publising of the later, but more importance should be given to be former. This is similar to the strategy of the Corporate media i.e “SELLING WHAT PEOPLE WOULD BUY” rather than telecasting what is important. For them Anna hazare and priyanka chopra are important than binayak sen/Irom sharmila.
I don’t want Vinavu to be a ‘Prisoner of profit’ and to follow the same strategy and to publish sensational articles just because to increase the visit/comment counts.
If this continues, the day Vinavu will publish a centerfold is not so far.
P.S: The tone sounds like an uncle writing to ‘Letters to the editor of Hindu’. I tried changing it,, but couldn’t help myself.. Pls bear with it.
சமீபத்தில் சில அம்பிகளுடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருக்க வேண்டி இருந்தது… அப்போது ஒரு அம்பி பெருமையாகவே சொன்னார்… ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முஸ்லிம்களை கொலை செய்தாலோ… அடித்தாலோ போலிஸ் கண்டு கொள்ளாது… அப்படிதானே கோவையிலும்… குஜராத்திலும் நடத்தினார்கள் என மகிழ்ந்து கொண்டார்… இவர்களிடம் கேளுங்கள்… ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஊழல் இருக்காது… சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்… பல மொழிகளில் விளம்பரம் வேறு செய்வார்கள்…
சரி உடுங்க முஸ்லிம் குண்டு வச்சா கூடத்தான் தண்டனை தராமல் மூணு வேளை சூடா பிரியாணி போட்டு தினம் ரெண்டு கோடி செலவழிக்குது அரசு!ரெண்டு பேருக்கும் என்ன வித்யாசம்?
மாற்று மத மக்களை கருவறுத்த நம் (நர) மோடிக்கு திரும்பவும் கையில் அரசாங்கத்தையே கொடுத்திருக்கிறோமே . நாம் எவ்வளவு பெரிய பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சரிதானே திருகு குரல்?
அறிவுள்ள மனிதன் அவர்களே, இது ஜனனாயக நாடு, மக்கள் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தால், யாராலையும் ஒன்னும் செய்ய இயலாது, ஆனால் வினவில் வாரம் 7 கட்டுரை மோடியைத்திட்டி வரும் அதில் வந்து சந்தோசமாக அவரை வசை பாடலாம்..
ஜனநாயக நாட்டில் மோடி போன்ற தீவிரவாதிகளை, சர்வாதிகார மனப்பான்மையுடைய நரிகளை விட்டுவைத்திருக்கிறோமே ஒன்றும் செய்யமுடியாமல். அதுவும் நமது தவறுதான் பையா அவர்களே. நாங்கள் வசை பாடினால்,நீங்கள் வந்து தாளம் போட தயாராய் இருப்பீர்கள். மோடியை, அவர் செய்வது போல, போலி என்கவுன்டரில் போட்டுத் தள்ள வேண்டும்.
ஏன் எமோஸன் ஆகுறீங்க பாஸ், பாக்கத்தான போரோம், இன்னும் ரொம்ப நாள்…இப்போதைய இந்தியாவின் உடனடி தேவை, தீவிரவாததிற்கெதிரான ஒர் இரும்புக்கரம்…
ஆமா, டவுசர்தான் லாமினிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்,மூண தொட்டது யாரு, கொய்யாலே பையாடா,
எடியூரப்பாவ பாத்தாலே உங்க ஜனநாயகம் வீடு வரைக்கும் கிழியுது ப்பீயா…
மூவாயிரம் சீக்கியனை கொன்ற காங்கிரசு கையிலேயே நாம் அரசாங்கத்தை கொடுக்கலியா?சொரிவுள்ள மனிதா?
சீக்கியர்களை கொன்றவர்களை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. நீங்கள் ஏன் இன்னமும் மோடியை ஆதரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?
“சீக்கியர்களை கொன்றவர்களை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. நீங்கள் ஏன் இன்னமும் மோடியை ஆதரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?”
சோ, ச்சுனா சாமி, பையா(ப்பீயா) : அது வந்து……நீ பாகிஸ்தான் தீவிரவாதீ
🙂 🙂
உணர்ச்சி இருப்பவனுக்கு அரிப்பு வ்ந்தால் சொரிந்து தானே ஆக வேண்டும் திருகு குரலே. இப்போ என்ன_________ அடிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவனிடம் ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?. பின்பு நாமெல்லாம் இரும்பினால் கோவணம் கட்டி பூட்டு போட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.
இவுருதான் லெக் பீசா எடுத்து குடுத்தாரு,
நன்றாக எழுதுகிறீர்கள். நம்ம இந்தியாவை எவனாலேயும் காப்பாத்த முடியாது. மதம், ஜாதி என்ற –Man-made materials–ஐ வைத்துக் கொண்டு ஊரை ஏமாத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதில் படித்தவன் படிக்காதவன் என்ற வேறுபாடு கிடையாது. இந்த இரண்டையும் மதம், ஜாதி) வைத்துக் கொண்டு எவன வேனுமாலும் இந்தியாவ்ல் ஏமாத்தலாம்.
இவர்கள் பாரதமாதா என்று உருவகப்படுத்தியிருக்கும் கற்பனை உருவத்திற்கு உயிரும் உடலும் இருக்குமேயானால் அதையும் துகிலுரிந்து தங்கள் தேசபக்தியை காண்பிக்க இவர்கள் தயங்கமாட்டார்கள்.
யேபா இந்த பெருமாளு சிவன் ஓரினசேர்க்கைல தான் அய்யப்பசாமி பொறந்துச்சு!
அப்படிப்பட்ட பாரம்பரியமிக்கநாட்டுல வினவு மட்டுமில்ல உச்சநீதிமன்றமே சொன்னா கோட ஓரின சேர்க்க சரி தாம். ஏன்னா அட்கு பல வேத காலத்துல இருந்தே இருக்குற சமாச்சாரம் தான் !
மாரிமுத்து அவர்களே! நம்மை நாமளே இப்படி கேவலப்படுத்திக்கொள்ள்க் கூடாது. பிறகு பல அய்யப்பசாமிகள் புலியில் ஏறி புறப்பட்டு வந்து விடுவார்கள்.
//மாரிமுத்து அவர்களே! நம்மை நாமளே இப்படி கேவலப்படுத்திக்கொள்ள்க் கூடாது. //
பெயரில் மட்டும் தான் அறிவு என அய்யம்ற்றிருந்தேன், ஆனால் பரவாயில்லை நச்சுனு ஒரு வார்த்தை சொன்னீர், இது போல் ஒரு மதத்தை அவதூறாக எழுதுவது, தன்னைத்தானே கேவலப்படுத்திக்கொள்வது தான், உனக்கு மதநம்பிக்கைகள் இருந்தால் உன்மதத்தை இவ்வாறு தரக்குறைவாக விமர்சித்தால் ஒக்கேவா மரியம் முத்டு கான்..
ஆமாம் அய்யப்பசாமிகள் புலி மேலே ஏறிதான் வருது… டோய்…
“இந்த பெருமாளு சிவன் ஓரினசேர்க்கைல தான் அய்யப்பசாமி பொறந்துச்சா இல்லியா?”
பையா :: என்ன பொறந்துச்சா இல்லியா
மனித இனம் ஆதாம் ஏவாள இல் இருந்து பிரந்தவன்னா ஆதாம் ஏவாளுக்கு பிறந்த பிள்ளைகள் புணர்ந்து மனித இனம் விரிவடைந்திருக்க வேண்டும் அல்லது பெத்த அப்பனோ அல்லது ஏவாலோ தமது பிள்ளைகளை புணர்ந்து மனித இனம் விரிவடைந்திருக்க வேண்டும்!ஐயோ அப்போ மொத்த மனித இனமே ஹராமா? உச் உச் …இதுக்கு
இதை இன்னும் நீங்கள் கடைபிடிக்கிறீர்களா என்ன?
அவர்களின் மத கூற்றுப்படி அப்படி நடந்ததது என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம். ஏனெனில் அது அறிவு வளர்ச்சி அடையாத காலம். இந்த 21 ஆம் நூற்றாண்டில் தகப்பன் தன் மகளை புணர்ந்த கதை எத்தனை வேண்டும் உங்களுக்கு. அதுவும் நம் புனித இந்து மதத்தில் இருப்பவர்கள் செய்த கூத்துக்கள் மிக அதிகம் செகப்பன் அவர்களே.
அவுரு எஸ்கேப்பு! அய்யப புராணம் படிக்க போயிருக்காரு!ஆறு மாசம் கழிச்சு வரலாம்!
னாகரீகமற்ற காட்டுமிராண்டிகளிடம் பேசி புண்ணியம் இல்லை..
அது ஒன்னும் இல்ல..நம்ம பையா அவரு ஊட்டு கண்ணாடியை பாத்து பேசிகிட்டு இருக்காப்ல… அதான் அவரே ஒத்துகிட்டாரே… கருப்பன்,அறிவுள்ள மனிதன் எல்லாம் அவங்க அவங்க வேலையை பாருங்கப்பா….!!!
“னாகரீகமற்ற காட்டுமிராண்டிகளிடம் பேசி புண்ணியம் இல்லை..”
நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்களடா ஏதாவது மருந்த்தடிச்சு கொல்லுங்கடா….
இவர்களை Benny Hill – எபிசோடுகள் பார்க்க சொல்லுங்கள். அவைகள் link கீழே உள்ள link -ல் உள்ளது!
http://www.nambalki.com/2012/03/blog-post_29.html
Every one knows that Pramod Mahajan ( BJP ) was killed by his own brother….For he sake of power, Yedyurappa can go to any exent…to get the support of Hindus he started renovating the temple ponds ( Ex:Someswara temple,Ulsoor, Bangalore
and others)…THAN VINAI THANNAI CHUDUM…..let the leaders understand this…
dear one sided persons,
it is our Hindu culture in any of its guidelines never discriminated sex.it is the religion allows kama to be preached.and also tells the danger when you go behind your senses.hope you know five senses.there is no hard and fast rules in Hinduism as in Islam.budhism tried:jainism tried:Islam tried in a very vulgur and violent methods:christianity tried.nothing could be successful to pluck even the small hair of a Hindu.ok ?.