Sunday, October 13, 2024
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?

அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?

-

அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா? – நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கூட்டங்கள்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாகூடங்குளம் அணு உலைக்கு எதிராகப்  போராடும் மக்கள் மீது அரசு தொடுத்திருக்கும் பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளி ஆகிய இடங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கூட்டங்களை நடத்தியது.

நெல்லை கோல்டன் ஹாலில் காலை 10 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கிற்கு தோழர் சிவராசபூபதி (ம.உ.பா.மையம், நாகர்கோவில்) தலைமை தாங்கினார்.  1908 மார்ச் 8 அன்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பேசிய வ.உ.சி. மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதையும், உடனே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நெல்லை மக்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க கலகத்தையும் நினைவு கூர்ந்த தோழர் வாஞ்சிநாதன் (ம.உ.பா.மையம், மதுரை), அரசின் மீது அவநம்பிக்கை கொள்ள வைப்பது கிரிமினல் குற்றம் என்று கூறும் இந்திய தண்டனை சட்டம், பேச்சுரிமையையே ரத்து செய்கிறது என்பதை அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் தொ. பரமசிவம், அணு உலை அபாயம் பற்றி இவ்வளவு பேசிய போதிலும், அதனை எதிர்த்துப் பேச நெல்லையில் ஒரு மருத்துவர் கூட முன்வராததைக் குறிப்பிட்டு, ஒருவேளை புற்றுநோய் பரவினால் மருத்துவமனை கட்டிப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் போலும் என்று சாடினார். பாடம் நடத்தும்போது தீப்பிடித்தாலும், ஆசிரியர் தீயை அணைக்கப்போகக் கூடாது, பாடம்தான் நடத்த வேண்டுமென்ற உளவியல் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், பேராசிரியர் அமலநாதன்.

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் விற்கப் போவதாக கூறிக்கொண்டே, மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கத்தான் அணு மின்சாரம் என்று அரசு புளுகுகிறது என்றும், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் வணிகத்துக்கு உதவு வதுதான் இதன் நோக்கம் என்றும் விளக்கினார், ம.க.இ.க. இணைச் செயலர் காளியப்பன்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாசிங்குர், நந்திகிராம், போஸ்கோ, கலிங்கா நகர் போராட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றிய பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் விளக்கினார்.  இங்கெல்லாம் மக்களின் போராட்டமும், பெண்களின் துடைப்பமும்தான் பன்னாட்டு முதலாளிகளை விரட்டியிருக்கிறதேயன்றி, நீதிமன்றங்களல்ல என்று தெளிவுபடுத்தினார்.

மதியம் ஒரு மணிக்கு கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பிற்பகல் சுமார் 3 மணிக்கு இடிந்தகரையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. வழக்குரைஞர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் இணைந்து போராட்ட முழக்கங்களை எழுப்ப, எழுச்சிகரமாகத் தொடங்கியது நிகழ்ச்சி.

துவக்கவுரை ஆற்றிய சுப.உதயகுமார், “இப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நம்மோடு நிற்கிறது. இன்று நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாதாரண மக்களுக்காக இங்கே வந்துள்ளார்கள். நமக்கு வழக்கு பிரச்சனை என்றால் அவர்களைத்தான் கேட்கிறோம். அவர்கள்தான் நம் வழக்குகள் அனைத்தையும் நடத்துகிறார்கள். நெருக்கடியான நேரங்களிலும் நள்ளிரவிலும்கூட நம்மை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் கொள்கைக்காக நிற்கிறார்கள்; வழக்குகளுக்காக அவர்கள் நம்மிடம் ஒரு காசு கூடச் சம்பளம் வாங்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று கூறி வழக்குரைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் மக்கள் நேசத்துடன் கரவொலி எழுப்பினர்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா

“பொய்வழக்கு, வாய்தா, சிறை எதற்கும் அஞ்ச வேண்டாம். ஒரு முறை சிறைக்குப் போய் வந்து விட்டால் அச்சம் போய்விடும். 144 தடை போட்டபோதும் நாங்கள் வந்தோம், வருவோம், உங்களுக்குத் துணை நிற்போம். போராடுங்கள்” என்றார் தோழர் வாஞ்சிநாதன்.

“தோற்று விட்டதாகக் கூறுகிறார்கள். இன்னும் ஆட்டமே முடியவில்லையே. இது அணு உலைக்கு எதிரான ஒரு உள்ளூர் போராட்டம் அல்ல. தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம். இந்தப் போராட்டம் தொடரும். ஏனென்றால், அவர்களிடம் நீதி இல்லை. மோட்டார் வாகன விபத்துக்குக்கூட குடும்பத்தின் நிலைக்கு ஏற்ப நட்டஈடு உண்டு. அணு விபத்துக்கு கிடையாதாம். ஆனால், அணு உலை பாதுகாப்பானதாம். எப்படி இருக்கிறது இந்த நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார் தோழர் ராஜு.

“எமக்காக வழக்கு மட்டும் நடத்தவில்ல. அணு உலைக்கு எதிராக இயக்கமும் நடத்துகிறீர்கள்; கைது செய்யப்பட்ட மக்களைச் சிறை வாசலில் நள்ளிரவு நேரத்தில் பெண்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்ததை இணையம் மூலம் தெரிந்து நெகிழ்ந்தோம்” என நன்றி கூறினார் புஷ்பராயன்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாஇரவு சுமார் 8 மணி அளவில் கூட்டப்புளியில் தொடங்கியது பொதுக்கூட்டம். அந்த ஊரின் பங்குத்தந்தையும், போராட்டத்தில் மக்களுடன் நின்று, தேசத்துரோக வழக்கில் மக்களுடன் கைது செய்யப்பட்டு சிறை சென்றவருமான அருட்திரு சுசீலன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அடக்குமுறை தொடங்கியவுடன் கூடங்குளத்தில் கைது செய்யப்பட்டு, தேசத்துரோக வழக்கில் சிறை வைக்கப்பட்ட வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன், தாங்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் போராட்டத்தில் குதித்த கூட்டப்புளி மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி, அணு உலையை மூடுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

வழக்குரைஞர் மில்டன், (ம.உ.பா.மையம், சென்னை) அரசு போடும் தேசத்துரோக வழக்குகள் எதுவும் நிற்கக்கூடியவை அல்ல என்றும், அச்சுறுத்தும் நோக்கத்துக்காகவே போடப்படும் பொய்வழக்குகளே அவை என்றும் அம்பலப்படுத்தினார். “தமிழ்நாட்டு பூமி என்ன குப்பைத்தொட்டியா, அத ரசியாக்காரனுக்கு வித்துப்புட்டியா” என்று முன்னர் பிரச்சாரம் செய்ததை நினைவு கூர்ந்த வழக்குரைஞர் சுரேஷ், அதன் பயனை இப்போது காண்பதாகக் கூறினார்.

வழமையான போராட்டமுறைகளை மாற்ற வேண்டும் என்று கூறிய வழக்குரைஞர் பாலன், கோலாரில் நகராட்சி கழிவறையை சுத்தம் செய்யாத நிர்வாகத்தை எதிர்த்து, கமிசனரின் கார் மீதும், போலீசு மீதும் மலத்தைக் கரைத்து ஊற்றி போராடியதை விளக்கியபோது, மக்கள் உற்சாகத்தில் ஆரவாரித்தனர்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாஇறுதியாகப் பேசிய தோழர் ராஜு, “நச்சுப்பாம்பை பார்த்தால் அடிக்கிறோம். முடியுமா முடியாதா என்று விவாதித்து முடிவெடுப்பதில்லை. அப்படித்தான் அணு உலை விவகாரமும். கடலூரில் கெமிக்கல் நிறுவனங்கள் கழிவைக் கடலில் விடுவதால் மீன்பிடி தொழிலே அழிந்து விட்டது. இளநீரின் நிறம் மஞ்சளாகிவிட்டது. எல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் சட்டப்படிதான் நடக்கின்றது. விட்டால் இதே கதி கூட்டப்புளிக்கும் ஏற்படும். முதலில் சிலருக்கு புற்றுநோய் வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். போகப்போக பழகி, அது நம் சொந்தப் பிரச்சினையாகிவிடும். அந்த நிலை வர அனுமதிக்க கூடாது.

நம்முடைய போராட்டத்தை ஒடுக்க  8 மாவட்ட போலீசு குவிக்கப்படுகிறது. 8 மாவட்ட மக்கள் நமக்கு ஆதரவாகப் போராடியிருந்தால் போலீசைக் குவிக்க முடியுமா? போலீசு நம்மை சிதறடிப்பது போல, நாம் போலீசின் சக்தியைச் சிதறடிக்க வேண்டுமானால், பிற பகுதி மக்களுடன் நாம் திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார். உள்ளூர் ஆசிரியர் பெல்லார்மின் நன்றி கூறினார். வழக்குரைஞர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவளித்தனர் கூட்டப்புளி மக்கள்.

கைது, சிறை போன்ற அரசின் அடக்கு முறைகள் காரணமாக, அரசு  போலீசு  நீதிமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த மாயைகள் அகலத் தொடங்கியிருக்கின்றன. அணு உலை அகற்றப்படும் முன் இந்த மாயைகள் முற்றிலுமாக அகன்றுவிடும்

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. காவல் துறை மக்களுக்கு எதிரானது. காவல் துறையை எதிர்த்து மக்கள் ஓரணியில் திரளவேண்டும். அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதலை மிகவும் வெளிப்படையாக குற்றம் சுமத்தவேண்டும்,

      • இதை உங்களோடு நிறுத்திக்கொள்ளக்கூடாதா. எங்களையும் ஏன் கூட்டிச்செல்கிறீர்கள். அங்கே போனவுடனேயே சாக்கடையில் நரகலை மிதித்தது போல் இருந்தது. தினமலர் என்பது பாப்பான்கள் பல பேர் ஒன்று சேர்ந்து முந்தினம் தின்றது செரிக்காமல் தினமும் காலையில் வயித்தால போவது. அதை தின்றது மட்டுமில்லாமல் ருசியாக இருந்தது என்று கூறுகிறீர்களே.

      • அவர்கள் இறப்பு எங்களுக்கும் வருத்தம் அளிப்பதுதான். ஆனால் எங்கள் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்துதான். அலக்ஸ் பால் மேனன் கடத்தல் மற்றும் விடுவிப்பு வருந்தத்தக்க ஒன்று, ஆனால் அவசியமான ஒன்று. முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே அங்கு சென்றார். அவரது நேர்மை, கருணை எல்லாம் அவரது தனிப்பட்ட குணமாக இருக்கலாம். இந்த புரையோடிப்போன அரசாங்க அமைப்புக்கும் அதன் அநீதிக்கும் எதிராக போராடும் போது இவ்வாறான பின்விளைவுகள் தவிர்க்கவியலாதவையே. இதை அந்த பாப்பான்கள் தங்களுக்கு தேவையான மாதிரி திரித்து எழுதுவான்கள். எங்களை ஏமாற்றப் பார்க்க வேண்டாம்.

  2. ஆம் தேச துரோகம் தான் ஏகாதிபத்திய தேசதிர்க்கு அடிமை தேசத்து மக்கல் பன்னும் துரோகம் அதிலென்ன தவரு………………….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க