privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

-

மாருதி-சுசுகி
மாருதி சுசுகி தொழிற்சாலை லாக்-அவுட்

தலைநகருக்கு அருகில் உள்ள மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்திருக்கும் தொழிலாளர்களின் எழுச்சி பல முதலாளிகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், அரசையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இனி ‘இந்தியாவை முழுவதுமாக தனியார் மயமாக்கி விற்று விட முடியாதோ’ என்ற பயம் அவர்களின் முதுகெலும்பில் சிலீரென்று இறங்கியிருக்கும்.

ஜியாலால் என்கிற தொழிலாளர், ராம்கிஷோர் என்கிற மேனஜரை தாக்கியதாகவும், ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்ததாகவும், அதனால் கோபமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகங்களையும் கணினிகளையும் எரித்ததாகவும் சொல்கிறது நிர்வாகம்.

உயர் அதிகாரிகள் உட்காரும் முதல் மாடியில் நுழைந்த தொழிலாளர்கள் மேனேஜர்களை தாக்கி சில இடங்களுக்கு தீ வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு கால்களும் உடைந்த நிலையில் அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார். இதுவும் நிர்வாகத் தரப்பு தெரிவித்ததுதான்.

ஒரு மேலாளர் தலித் தொழிலாளரை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், அந்தத் தொழிலாளர் அதை எதிர்த்து கேட்டதாகவும், மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகம் தொழிலாளரை தற்காலிக வேலை நீக்கம் செய்ததாகவும் தொழிலாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

மேலும் யூனியன் பிரதிநிதிகள் மனிதவளத் துறை அதிகாரிகளுடன் இதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, நிர்வாகம் சம்பளத்துக்கு வைத்திருந்த குண்டர்களை தொழிற்சாலைக்கு வெளியிலிருந்து உள்ளே அழைத்து, செக்யூரிட்டிகளிடம் கதவுகளை மூட உத்தரவிட்டிருக்கிறது.

அந்த குண்டர்கள் ஆயுதங்களால் தொழிலாளர்களை தாக்க பல தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்த குண்டர்கள் நிறுவனத்தின் பொருட்களை அடித்து உடைத்ததுடன் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர் என்றும் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் கூறுகிறது.

நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன, 96பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலை காலவரையறை இன்றி லாக்-அவுட் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி-சுசுகி
தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் ஊடகங்கள்

மாருதி சுசுகி நிர்வாகமும், முதலாளித்துவ ஊடகங்களும், அரசும் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். போராடி பெற்ற யூனியனின் அங்கீகாரம் ‘ரத்து செய்யப்பட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பு எழுதுகிறார்கள். ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனிமேல் இந்தியாவுக்கு வர பயப்படுவார்கள், அவர்களை சமாதானப்படுத்த தொழிலாளர் சட்டங்களை மாற்றி எழுத வேண்டும், விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

மாருதி சுசுகியின் முதல் தொழிற்சாலை குர்கானில் 1980களில் தொடங்கப்பட்டது. மானேசரில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழிற்சாலையிலும் நிர்வாகத்தின் எடுபிடியான ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்க’த்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது நிர்வாகம். தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, சென்ற ஆண்டுதான் தமது புதிய யூனியனுக்கான அங்கீகாரத்தை பெற்றார்கள். 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி தரப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தவே கடும் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும்.

அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம், நேரடியாக உற்பத்தியையும், லாபத்தையும் பாதிக்கும் விசயங்கள். தொழிலாளி ஒருவர் ஆலையினுள் நுழைந்து, எந்திரங்களுடன் வேலையை தொடங்கி அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, எந்திரத்துடன் ஒரு எந்திரமாகவே அவர்கள் மாறி விட வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மாருதி-சுசுகி
மாருதி சுசுகியின் தொழிலாளி

எந்திரங்கள் சம்பள உயர்வு கேட்காதல்லவா! ஆனால் தொழிலாளர்கள் தமக்குரிய நியாயமான ஊதியத்தை கேட்கும் போது நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒவ்வாத புதிய தொழிலாளர் யூனியன், அதிகரித்துக் கொண்டே போகும் வேலைப் பளு, நான்கு ஆண்டுகளாக வருமான வீழ்ச்சி என்ற சூழலில் சம்பள உயர்வு குறித்து யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சு நடந்திருக்கிறது. நிர்வாகம் அந்த பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து கால தாமதம் செய்திருக்கிறது.

தொழிலாளர்கள் கேட்கும் அதிக பட்ச ஊதிய உயர்வான ரூ 18,000ஐ எல்லா தொழிலாளர்களுக்கும் (சுமார் 2,500 பேர்) கொடுத்தாலும் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ 54 கோடிதான் செலவாகியிருக்கும். 2010-11-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ரூ 2,289 கோடி நிகர லாபம் ரூ 2,235 கோடியாக குறைய வேண்டியிருக்கும்.

தமது லாபத்தில் சுமார் 2% பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து தனக்குப் பிடிக்காத யூனியனை தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இழக்கச் செய்ய முயற்சித்தது நிர்வாகம்.

‘கடந்த ஆண்டை விட லாபம் அதிகம் ஈட்ட வேண்டும் அப்பொழுது தான் லாப வளர்ச்சியைக் காட்டி பங்கின் விலையை பங்குச் சந்தையில் ஏற்ற முடியும், அதிகாரிகள் சம்பள உயர்வு பார்க்க முடியும். ‘உற்பத்தியை அதிகமாக்கி லாபம் காட்டலாம். அதிக உற்பத்தியை குறைந்த செலவில் செய்யும் போது இன்னும் லாபம் காட்டலாம்’ என்பது நிறுவனத்தின் அடிப்படை நோக்கம்.

திங்கள் கிழமை ‘முதல் ஆண்டுக்கு ரூ 6,000தான் சம்பள உயர்வு’ என்று நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை, காலையில் வழக்கமாக நடக்கும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொழிலாளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

புதன் கிழமை காலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பணிக்கு வந்து கொண்டிருந்து சில தொழிலாளர்களிடம் ராம் கிஷோர் என்ற மேலாளர் ‘ஒருங்கிணைப்பு கூட்டத்தை புறக்கணிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் பலத்து தொழிலாளர் ஜியா லாலை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார் மேலாளர். பல நாட்கள் தொழிலாளர் மத்தியில் புழுங்கிக் கிடந்த கோபம் பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது.

இப்பொழுது நடந்திருக்கும் தொழிலாளர் போராட்டம் ஒரு அவச் சொல், பணிநீக்கம் என்பதின் வெளிப்பாடு என்று சுருக்கிவிட முடியாது.

சந்தையில் நல்ல லாபத்தில் மாருதி காரை விற்றுவிட்டு, அந்த லாபத்திற்கு சம்பந்தம் இல்லாத சொற்ப சம்பளத்தை கொடுப்பது, தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் ஆக்காமல் தற்காலிக தொழிலாளர்களாகவே வைப்பது, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது, அவர்களின் யூனியனை வேவு பார்ப்பது, ‘யூனியன் நடவடிக்கைகள் சட்டம் விரோதம் அதில் பங்கெடுக்கமாட்டேன்’ என உறுதி பத்திரத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திப்பது என இந்தியாவின் தொழிலாளர் சட்டம் என்பது தாங்கள் மலம் துடைக்க உதவும் காகிதம் என வெளிப்படையாக செயல்படுகின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். இதை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை சட்ட விரோதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது தொழிலாளர்களின் உரிமை.  அதை முதலாளிகளால் ஏற்க முடியவில்லையென்றால், முதலாளிகளுக்கு புரியும் மொழியில் தங்கள் கோரிக்கைகளை ஏற்கச் செய்வதுதான் தொழிலாளர்களிடம் உள்ள ஒரே வழி. ஆனால் தொழிலாளிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அதிகாரத்தின் துணை கொண்டு நசுக்க நினைக்கிறார்கள் முதலாளிகள்.

மாருதி-சுசுகி
கடந்த ஆண்டு போராட்டதின் போது.

மாருதி தொழிலாளர்களும் சரி மானேசரில் செயல்படும் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சரி இந்த போராட்த்தின் பாதையை திடுமென வந்து அடைந்து விடவில்லை. தொடர்ந்து பல மாதங்கள் பல அநீதிகளை ஏற்க முடியாமல்தான் அவர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடியுள்ளனர்.

தொழிற்சாலையில் வன்முறையை அவிழ்த்து விட்டு சொத்துக்களை நாசம் செய்து உயிரிழப்புக்கும் காயங்களும் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினையை திமிரோடு தருவித்துக் கொண்டது மாருதி சுசுகி நிர்வாகம்தான்.  ஒப்பந்தத் தொழிலாளரை நிரந்தரம் ஆக்க மறுப்பது, குறைந்த பட்ச ஊதிய உயர்வைக் கூட மறுப்பது என்று அதிகார ஆட்டம் போடும் மாருதி நிர்வாகத்தை தொழிலாளிகள் வேறு எப்படி வழிக்கு கொண்டு வர முடியும்?

புதிய பொருளாதாரக் கொள்கையின் படி முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்க உரிமை இல்லை, நிரந்தரத் தொழிலாளர் தேவையில்லை, குறைந்த கூலி, நீதிமன்றம் தலையிட முடியாது, தொழிலாளர் ஆணையர் கேட்க முடியாது என்று இந்தியா முழுவதும் இத்தகைய கொள்கைகளே அமல்படுத்தப்படுகின்றன.  இத்தகைய அடக்குமுறையின் தர்க்க ரீதியான எதிர்வினைதான் மாருதி தொழிலாளர் போராட்டம்.

தங்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கி லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது. ஏனென்றால்  இழப்பதற்கு நிறைய முதலாளி வர்க்கத்திடம்தான் இருக்கிறதே ஒழிய தொழிலாளிகளிடம் இல்லை. மாருதி தொழிலாளர் போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னுதாரமாண போராட்டம். இதை பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டமாக ஒருங்கிணைக்கும் போது தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல இந்திய மக்களும் தங்களது விடுதலைக்கான பாதையை கண்டடைவார்கள்.

____________________________________________

– அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

 

  1. Hi,

    within one week vinavu team went to manesar and prepared a report . Good job vinavu… What about the guy whose lost his life by one of your fellow member. you dont mentioned any word about him in this article. this shows your menntaility.how about the violence?. you have the rights only for strike. not to destroy the others money and properties. if you need more money then go for another job. who asked you to stay there. I dont know whether i am in correct side or wrong side(government or naxalites). But i believe that government and maruti management will take tough actions against those employees who are responsible for this uncivilized people’s event…

    • Vinoth,
      நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை அடிக்க ரவுடிகளை உள்ளேவிட்டு ஒரு RIOTஐ உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அந்த மனிதன் செத்துப்போனால் அதர்கு நிர்வாகமே பொறுப்பு. இதிலிருந்து அவர்களை காப்பாற்ற நீங்கள் என்ன முயற்சி செய்வது வீண்.

      இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், அப்போதெல்லாம் வன்முறை வெடிக்கவில்லையே, ஏன்?

      தயவு செய்து சிந்தித்துப்பாருங்கள்

      • hello usi ,

        Great imagination ! By this lock out maruthi is loosing 100 crore a day …do you think any company is stupid to create this riot purposly and loose so much ???

        Telling lies is one thing …but this is too much…even no workers said your kind of story sir. Get civilized

        • விஜய், கோடிக்கணக்கா நட்டமானாலும் பரவால்ல, ஆனா தொழிலாளர்கள் கேட்டுக்கும் சம்பளத்தைத் தரமுடியாதுன்னு லாக்கவுட் பண்ணவனே நிர்வாகம்தான். அவன் லாக்கவுட் பண்ணும்போதே தெரியல இது அவன் திட்டம்போட்டதுதான்னு.

          அறிவு இருந்தா மட்டும் பத்தாது, அதை யூசு பண்ணவும் தெரியனும். இல்லேன்னா இப்படித்தான் பல்பு வாங்கவேண்டி வரும்

          • Wow mayil …

            Police has taken over the plant control, even the management wish to run they are not allowed to do that….further as workers attacked almost all managers and supervisors who is there to run the factory sir ??

            All business people wont wish to loose money at any case, giving workers salary high may hit their profit but lock out will even kill their business….Maruthi 40% production is from this plant, by this lockout they will not able to fulfill the orders, so for sure they loose lots of customers to their competitors ….

            What they whould gain by locking the company for these many days ???

            • ராசா, என்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? நீங்க என்னதான் அங்கலாய்பை கொட்டினாலும், மாருதி முதலாளிகளோட நட்டத்தை பத்தி அவங்களை விட நீங்க அதிகமாக கவலைப்படமுடியுமா? முடியாது. அது ஒன்னை மட்டுமே வச்சு யோசிச்சு பாருங்க, தொழிலாளிகள் கேட்ட சம்பள உயர்வு அவர்கள் லாபத்தில் வெறும் 2% இதை கொடுக்க மனமில்லாத முதலாளி ஏன் போலீசை உள்ள வச்சுகிட்டு லாக்க்கவுட் பண்ணியிருக்கான்? போலீசை தாராளமா வெளிய போகச்சொல்லிட்டு திறந்திருக்கலாமே. தன்னுடைய நட்டத்தை விட தொழிலாளிகளின் வெற்றி ஏன் அவனை அதிகம் பாதிக்கனும்?

              யோசிச்சுப்பாருங்க

              அப்புறம் எல்லா மேனேஜர்களையும் தொழிலாளிகள் அடிச்சிட்டாங்கன்னு அளக்குறீங்க, ஒரு ஷிப்டுக்கு 6 மேனேஜர் தேருமா? ஆனா நிர்வாகம் அனுப்பிய ரவுடிகளால் அடிபட்டு பல தொழிலாளிகள் ஆஸ்பத்திரியில கிடக்குறாங்க. அதுக்கு என்ன பதில்?

              • Sir, In any manufacturing industry workers cost is one of the big part of the product price….Its cant be just 2% of the net profit sir… But I DONT SAY they should not increase workers pay …If workers dont ask anything mangament take it for granted no doubt about that….

                The prob is this barbaric incident sir…… Simple questions

                1. If it is done by rowdies …Dont you think those victims including mangemnt staff could identify the rowdies ? After all they are supervisors who know every workers over there…

                2. How many rowdies do you think need to go and attack 5000 workers and employees ??? Is it possible to attack so many people so easily ???

                3. Why no worker came and say that rowdies is the one who did this even after the incidednt ???

                4. I am not againt workers, but we all know workers are very emotional and sensitive people …If a management send rowides and hit them …we all know what would happen next

                5. If you say mangement attacked individual workers outside the factory it is belivable ….but this is too much sir….even kid wont beleive

                Last thing….. We all know you are trying hard to justify the barbaric incident ….But just fabricating a idoitic reasons is really crazy

                • என்ன கொடுமை விஜய் இது,
                  ஒண்ணு கட்டுரையை படிச்சிட்டு பேசனும், இல்லேன்னா சம்பவத்தைப் பற்றியாவது நல்லா புரிஞ்சிருக்கனும். இது ரெண்டும் இல்லாம சொம்போட பஞ்சாயத்துக்கு வந்தா என்ன செய்யுறது

                  மொதல்ல இதை படிங்க

                  @@@மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

                  அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.

                  நிர்வாகத்துக்கு ஒவ்வாத புதிய தொழிலாளர் யூனியன், அதிகரித்துக் கொண்டே போகும் வேலைப் பளு, நான்கு ஆண்டுகளாக வருமான வீழ்ச்சி என்ற சூழலில் சம்பள உயர்வு குறித்து யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சு நடந்திருக்கிறது. நிர்வாகம் அந்த பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து கால தாமதம் செய்திருக்கிறது.

                  தொழிலாளர்கள் கேட்கும் அதிக பட்ச ஊதிய உயர்வான ரூ 18,000ஐ எல்லா தொழிலாளர்களுக்கும் (சுமார் 2,500 பேர்) கொடுத்தாலும் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ 54 கோடிதான் செலவாகியிருக்கும். 2010-11-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ரூ 2,289 கோடி நிகர லாபம் ரூ 2,235 கோடியாக குறைய வேண்டியிருக்கும்.

                  தமது லாபத்தில் சுமார் 2% பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து தனக்குப் பிடிக்காத யூனியனை தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இழக்கச் செய்ய முயற்சித்தது நிர்வாகம்.@@@

                  இது இந்த கட்டுரையில் மட்டுமல்ல, இந்த புள்ளவிவரமெல்லாம் முதலாளித்துவ பத்திரிக்கையிலேயே வந்திருக்குது

                  உங்க கேள்விக்களுக்கு வருவோம்

                  தாராளமா சொல்லியிருக்கலாம், ஆனா எந்த தொழிலாளியும் கூட அப்படி குறிப்பிட்டு சொல்லலையே. போலீசு விசாரணையிலேயே இது திட்டமிட்ட சதியில்லைன்னுதான் சொல்லியிருக்காங்க. அதுக்கு என்ன பொருள், தீடீரென நடந்த கலவரமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். அப்ப இந்த கலவரத்துக்கு தூண்டுதல் எது? அது ரவுடிகளா இல்லை ஒரு சில தொழிலாளிகளா என்பதை விட தொழிலாளிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்காத நிர்வாகம்தானே முழுப்பொறுப்பு? இது ஏன் உங்களுக்கு ஏறவேமாட்டேங்குது

                  தொழிலாளர்கள் தரப்பிலிருந்து நிர்வாகம் ரவுடிகளை உள்ளே விட்டு தாக்கத்துவங்கிவிட்டார்கள் என்று தெளிவாக அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள்.
                  பல தொழிலாளர்கள் அடிபட்டு மருத்துவமனையில் உள்ளே ரவுடிகள் வர நிர்வாகத்தைத்தவிர வேறு யாரை பொறுப்பாக்குவது?

                  மனேசர்ல வேலை செய்யனும்னா நல்லா படிச்சிருக்கனுங்க, அவ்வளவு சிக்கலான திறமை சம்பந்தப்பட்ட வேலை, அவங்கெல்லாம் எடுகேடட் ஸ்கில்டு ஒர்கர்ஸ்,ரவுடிகள் இல்லை. நீங்க அவ்ங்களை இழிவாக சென்சிடிவ்னு சொல்றதெல்லாம் ரொம்ப அதிகமான பேச்சு. அவங்க உரிமைக்காக அவங்க வேலை நிறுத்தம் செய்யுறாங்க. சட்டப்படியே அதுக்கு உரிமை இருக்கு. அந்த பிரச்சனையை தீர்க்காம சும்மா இழுத்தடித்து பிரச்சனையை பெரிசாக்கிய பொறுப்பு நிர்வாகத்தினுடையது மட்டுமே

                  நீங்க சொல்றதையே திருப்பி கேட்கிறேன், மானேஜரை கொல்லனும்னா எதுக்கு பேக்டரியில வச்சு செய்யனும், வெளியே செஞ்சிருக்க மாட்டாங்களா, ஊசி சொன்னது போல இது கலவரத்தில் நிகழ்ந்த கொலை, கொன்றது தொழிலாளியாவும் இருக்கலாம், இல்லை நிர்வாகம் அனுப்பி வைத்த ரவுடிகளாகவும் இருக்கலாம். இல்ல அடிபட்டு அவர் நெருப்புல மாட்டியிருஃக்கால்ம். எப்படியானாலும் தொழிலாளியின் நியாயமான போராட்டத்தை கலவரமாக்கிய நிர்வாகமே இந்த சூழ்நிலைக்கு முழுப்பொறுப்பு.

                  நீங்க நிர்வாகத்தை ஆதரிப்பதை கேவலமாக கருத்தவில்லை, நான் தொழிலாளிகளை ஆதரிப்பதை பெருமையாக கருதுகிறேன்

                  • There is nothing to be proud of in supporting “rowdy” workers.
                    Wrong is Wrong, whoever commits it. The principal of one of the college once said in his Annual day address ” Manathaal naam anaivarum ayokiyarkal” and that is the true statement.

                    One group is the “Muthalali varkam” and other is the so called , portrayed as “innocent” such “rowdy” workers. In the end all are “Ayokiyarkal” is some sense.

                    Just for the sake of supporting dont support violence

                  • Hello mayil sir,

                    The number you all calculate is totally worng ..I mean above mentioned if they increase the salary only maruthi need to spend 54 cr extra …let me prove its wrong

                    Example:

                    Prouct Retail price = Rs 100
                    Lets say your net profit 10% (maruthi net profit is 4.5%)
                    So 10% net profit is Rs 10

                    so Rs 90 you spent for all inlcuidng workers, material, marketing, logitics..etc

                    lets say 20% of the Rs 90 goes for workers pay (in manufacturing like maruti is normally 30 ~ 40% )

                    so manpower cost per product Rs 18 …lets say you have 100 workers with avg salsy of Rs 1000 ..

                    You are sellinf millions of parts so you got Rs 100 crore profit last year … so workers asking you to increase their pay by 50%

                    Meaning your Rs 18 workers cost per product will increase by Rs 9 and now it will become Rs 27 per product

                    but you are only getting Rs 10 profit per part….so if your worker pay increase Rs 9 you will be left with only Rs 1 profit…obvioulsy you cant run company long time unless u increase product price

                    lest come to maruthi

                    Year 2011:

                    Maruthi total net profit year 2011 = 1635.1 crore
                    Total number of units sold in year 2011 =1,133,695

                    So per unit profit for maruthi is 14,423 rupees only …So if you increase workers pay by more than 50% it will be very difficuly for the company

                    Maruthi sales down 3.2% in year 2011 compared to year 2010
                    Maruthi net profit down 28.6% in year 2011 compared to year 2010

                    http://www.marutisuzuki.com/Maruti-Suzuki-financial-results-2011-12.aspx

                    • சரி விஜய், நீங்க சொல்ற கணக்கையும் (லாபம் குறைந்தது, விற்பனை குறைந்தது) எடுத்துப் பார்ப்போம்

                      மானேசர் தொழிற்சாலை உற்பத்தியால் மாருதி சுசுக்கிக்கு கிடைக்கும் மாத லாபம்:
                      1. உங்கள் கணக்குப்படி ஒரு கார் விற்பனையில் மாருதிக்கு கிடைக்கும் லாபம் – ரூ 14,423
                      2. ஒரு நாளைக்கு மானேசர் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் கார்கள் – 1,200 (இரண்டு ஷிப்டுகளில்)
                      3. ஒரு நாள் உற்பத்தியில் மாருதி சுசுகி ஈட்டும் லாபம் – ரூ 1,73,07,600
                      4. ஒரு மாதத்துக்கு வேலை நாட்களின் எண்ணிக்கை – 25
                      5. ஒரு மாத உற்பத்தியில் மாருதி சுசுகி ஈட்டும் லாபம் – ரூ 43,26,90,000 (ரூ 43 கோடி)

                      6. மானேசர் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை – 2,500
                      7. ஒரு தொழிலாளருக்கு கோரப்பட்ட மாத சம்பள உயர்வு – ரூ 18,000
                      8. ஒரு மாதத்துக்கு மொத்த செலவு – ரூ 4,50,00,000 (ரூ 4.5 கோடி)

                      இப்பவும் ஒரு மாத உற்பத்தியில் கிடைக்கும் லாபம் ரூ 43 கோடிக்கு பதிலாக ரூ 39 கோடியாக மாறியிருக்கும், சரிதானே. நீங்க சொல்லும் 1 ரூபாதான் மிஞ்சும் என்கிற கணக்கு எப்படி வருகிறது?

    • Yes Sir,
      First Please understand what is uncivilization means,
      Did the managemnet was civilized enough on the Workers?

      Yes if you do want this type of civilized morans, why the investors or management get out from manaser? why you are asking the workers to move out? So When management person dies its a huge death and lack of humanity, and if the thousands of workers tortured, it is civilized managemnt!?.. What a humanity?

      Go ahaed take your civilized working culture and managment to US or Uk and those country’s wokers will teach enough what is civilization and humanaity..

    • //if you need more money then go for another job//

      This logic fits good only for IT and BPO (My self a IT guy) because the finished product crated by IT industry is sold in US so because of the difference in currency value it seems that your salary is very high so when u move from one company to another they can give u a good hike because the actual amunt they make out of ur work is VERY VERY high.. But in other industry since the products are sold in indian market if a good hike has to be give it will hurt the owner’s pocket considerably so its NOT possible. If u still have doubts just check how much an american SW engg doing the same work as u do is getting paid

  2. //மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.//

    What explanation do “Free Economy Supporters” have for this ???

  3. தொழிலாளர்கள் திருப்பி அடித்தால் முதலாளி வர்க்கம் தாங்காது. மனேசர் போராட்டம் ஒரு உதாரணம்…

  4. நல்ல பதிவு. கொஞ்சம் தாமதமாக வந்தது ஆனால் உண்மையிலேயே இந்த நேரம் தேவைப்படுகிறது்

  5. ஒரு மண்ணும் நடக்காது… இப்ப எல்லா தொழிலாலர் வீட்டிலேயும் தினம் பிரியாணியா தின்னுவாங்களே…. ஒரே ஜாலிதான்…. இதுக்குத்தான் சொல்ரது… மூடிட்டு வேல செய்யனம்னு….

  6. Dear Vinavu
    It is very painful that some comments are supporting the Maruti Management.
    It is very very clear that the management is very repressive arrogant in nature .It is also very clear that the Maruti management is the main culprit for the calling the goondas in side the factory.

    i know the smell of the grease,oil,plastic and the pain of the rotating shifts.
    for more than 12 years I worked in rotating shifts. Now also i cannot sleep before 2 midnight due to the past .

    Any person worked hard in the factory or the farm lands or in any other place will know the pain of the Maruti workers.

    but some gentle men sitting in the very COMFORT ZONE will always oppose the workers and support the management .

    the most painfull job in the world is
    a assembly line job. which pushes our all the nerves and muscles to repeat the same work every minute every hr and every day.
    It is like taking well water with the traditional “Valli and kyiru” for continious 8 hrs in 3 rotating shifts. comfort zone fools will sit and write all eccentric and ultra eccentric comments. truth loving commentors can ignore them.

  7. yes i accept Mr g v s comment

    this is right time to show our anger atleaset by words

    mr india

    every strglle should have an kick start maruthi workers has started that people like u want to sit in comfortzone or want os enjoy modern slavery

    stop this nonsense and please dont comment about this

  8. மேலே ஒருவர் பிரியாணி சாப்பிட சொல்றார்..
    எவ்வளவு கீழ்த்தரமான சொல்..

    அவர் சாப்பிடலாம்..அவரு தொழில் அப்படி..

    ஆனா தொழிலாளர்கள் நிலை அப்படி இல்லை..30 நாளும் வேலைக்கு போனால்தான் கஞ்சியாவது குடிக்க முடியும்.

    அந்த பன்னாடை கொஞ்சம் வரலாறு படித்திருக்கும் என்று நம்புகிறேன்.

    guillotine க்கு வேலை வரும் போல் தெரிகிறது..

  9. ஒருத்தரை அடிச்சே கொன்னுருக்காங்க, அத கண்டிக்க துப்பில்லை, வந்துட்டீங்க சொம்பை எடுத்துட்டு பஞ்சாய்த்து பண்ண‌

  10. இன்னும் எத்தனை நாளைக்கு தான், ஜாதி சொல்லி திட்டிட்டான்னு ஜல்லியடிக்க போறிங்களோ, உங்களுக்கும் தெரியும், படிக்குறவங்களுக்கும் தெரியும் இது வடிகட்டின பொய்ன்னு. எத்தனை நாள் லாக் அவுட் ஆனாலும் முதலாளி தாங்குவான், நீங்க சோத்துக்கு என்ன பண்ண போறீங்க. நாலு மாசம் சம்பளம் இல்லாம குண்டி காஞ்சா தெரியும்.

    //மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். //
    எங்கே மாசம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் கொடுக்குறாங்களோ அங்க போய் வேலை பாக்க வேண்டியது தானே. யாரு கைய்ய புடிச்சா அதவிட்டுட்டு ஏன்யா புடிக்காத மொதலாளிக்காக வேலை செய்யுறீங்க.

    • //எத்தனை நாள் லாக்
      அவுட் ஆனாலும்
      முதலாளி தாங்குவான்,
      நீங்க சோத்துக்கு என்ன
      பண்ண போறீங்க.
      நாலு மாசம் சம்பளம்
      இல்லாம
      குண்டி காஞ்சா தெரியும்.// இது நிச்சயமாக மனிதனின் கருத்தல்ல. ஏன்னா..?இப்ப நாய் இருக்குதே நாய் அது என்னா நினைக்கும்ன்னா..? நம்ம எஐமான் கறிதின்னாதான் நமக்கு சூப்பர்றதுக்கு எலும்பாச்சும் கிடைக்கும்-ன்னு நினைக்கும். இந்த கருத்தை மனிதனுக்கு பொருத்துவது அபத்தம்.

    • அப்பா வினோத், விஜய், செந்தில் ராசாக்களா, நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு கவனிங்க. இன்னிக்கு நீங்க படிக்கிற the hindu பேப்பர்ல உள்ள பின்வரும் கட்டுரையையும் படிங்கப்பா

      http://www.thehindu.com/business/Industry/article3697113.ece?homepage=true

      http://www.thehindu.com/news/national/article3697122.ece

  11. கட்டுரை மிகச் சரியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு மேலாளர் கொல்லப்பட்டிருக்கிறார் என புலம்புவோரைப்பார்த்து நான் கேட்கிறேன் ரூ 6000 த்தையும் 7000 த்தையும் வைத்தக்கொண்டு நாக்கைக்கூட வழிக்கமுடியாது-அதுவும் டெல்லியில். ஆயிரமாயிரம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சுது மெல்ல மெல்ல கொலைசெய்வதற்கு ஒப்பாகாதா? அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் மாருதி விசுவாசிகளே?

    தொழிலாளர்களை மட்டும் ஒட்டச்சுரண்டவில்லை மாருதி நிருவாகம்- தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்த விவசாயிளுக்குத் தரவேண்டிய பாக்கி ரூ235 கோடியை தரவேண்டும் என ஹரியானா மாநில அரசு மார்ச் 2012 ல் நோட்டீஸ் அனப்பியும் அதை கண்டு கொள்ளவில்லை. அதனால் மீண்டும் ஜீன் 2012 ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. (நன்றி: DECCAN CHRONICLE, CHENNAI: 25.07.2012) இப்படி விவசாயிகளையும் வஞ்சித்து அவர்களையும் மெல்ல மெல்லக் கொலைசெய்து வருகிறது மாருதி நிர்வாகம்.இதற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள் மாருதி எடுபிடிகள்?

    மாருதி ஆலை நிர்வாகம் தொழிலாளர் விரோதமானது மட்டுமல்ல மக்கள் விரோத தேச விரோத நிறுவனமாகும்.

    மாருதி நிறுவனத்தைப் போல பல பன்னாட்டு மற்றும் இந்நாட்டு தனியார் நிறுவனங்களும் அவுட்சோர்சிங் – அப்ரன்டிஸ் என்ற போர்வையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஏன் அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை. எனவே மாருதி தொழிலாளர் போராட்டம் போல நாடு முழுக்க போராட்டங்கள் பற்றிப்படர வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இனி இழப்பதற்கு என்ன இருக்கு? பொங்கி எழு தோழா! போர் முரசு கொட்டு!

  12. Some gentlemen say “if you do not like the job, then get lost somewhere else ”

    Anybody who supports the Maruti Management and oppose the workers answer my questions. (Pls answer honestly )

    1,How many number of worker deaths happen in the year 2011 all over India due to work zone accident and how many number of permanent injuries happen in the same time ?
    2,How many corporate companies have been evading tax and what is the total amount of due to the G.O.I ?
    3,How many companies pay the actual PF and ESI and pass on the benefits to the workers?
    4,Name a few companies without a single black mark on Income TAX,Excise Duty,Corporate ETHICS,Pollution Control,Safety Track record,Building plan.

    • அன்புள்ள G.V.
      அலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்
      தோழமையுடன்
      வினவு

  13. Example of some Corporate companies “goods deeds”

    1,Infosys not willing to pay building tax on its campus at Thiruvanathapuram.
    Municipal Corporation is planning to take over the building.
    2,Wipro forced to pay 24 Crores pending VAT amount as court order.
    3,TCS On shore tax claiming under IT radar.
    4,Department of Revenue intelligence slaps 1450 crore fine on Hewlett packard India.
    5,Haryana govt orders MAruti to pay 230 crore for land accumulation .
    6,Department of Revenue intelligience slaps 266 Crore fine on Hyundai Motors India

    dear corporate have many supporters . that too they are ready to offer free service .

  14. கட்டுரை, பிரச்சனையை, மிகுந்த பொறுப்புணர்வுடன் பேசுகிறத. மொழி நடை, தரவு, வாசகனை, நியாயத்தின் பக்கம் இயல்பாய் நிறுத்துகிறது.

    செங்கொடியை, தம் ரத்தததால் உயர்த்தி பிடிக்கும் தெழிலாளர் தோழர்களே, இதோ, எஙகள் சயவிமர்சனத்தை தயைக்கூர்ந்து எற்றுக்கொள்ளுங்கள,பன்னாட்டு ஓநாய்களிடம் தனியாக மோதவிட்டு நாங்கள் பின்னால் நிற்றுவிட்டோம். தலைக்குனிகிறோம். நாங்களும் வெற்றிச் செய்தியை விரைவில் அனுப்புகிறோம்.

  15. போராட்டம் எல்லா இடத்திலும் பரவவேண்டும், பரவவேண்டும்……

    தொழிலாளர் போராட்டத்தை இன்னும் ஆரபிக்கவே இல்லை அதற்குள் நிறைய பேருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது…..

  16. தொழிலாளர்கல் போராட்டாம் வெல்லட்டும். மானசரோவரில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு வெல்லட்டும்.

    • உங்க்கிட்ட மட்டும் என்ன ஆதாரம் இருக்கு, நிர்வாகம் சொல்றத நீங்க அப்படியே சொல்றீங்க. இந்த நிர்வாகம் ரவுடிகளை உள்ளே விட்டிருக்குன்னு தொழிலாளிகள் தரப்பு சொல்வதுதான் நம்பும்படியா இருக்கு. ஏன்னா இதைவிட அதிக எண்ணிக்கையிம் தொழிலாளிகல் கடந்த இரண்டு ஆண்டுகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது எந்தவிதமான வன்முறையும் வெடிக்கவில்லை. தவிர இந்தியாவில் பல இடங்களில் முதலாளிகள் ரவுடிகளை உள்ளே விட்டு அடிப்பது வாடிக்கைதான்.

  17. சிவகாசி மெப்கோ சிலங்க் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கடந்த மூணு வருஷமா சம்பள உயர்வே இல்லை. சுமார் நூறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் பல மடங்குகளில் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பாளர்களை சுரண்டித் தின்னும் நிர்வாகத்தை கண்டிக்க வழி தெரியாமல் புலம்பிக் கொண்டுள்ளனர். வினவு இதை விசாரித்து ரிப்போர்ட் எழுதணும். இதுக்கெல்லாம் காரணமான கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வேலையை விட்டுப் போய்விட்டார். இருந்திருந்தால் மாருதி ஹெச் ஆர் நிர்வாகியை கொன்றது போல இங்கேயும் நடந்திருக்கும். இந்திய அளவில் முக்கியமான இடத்தை இக்கல்லூரி பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இதற்கு பெரிதும் பங்கு வகித்த இக்கல்லூரியின் தொழில்நுட்பாளர்களை ஆசிரியர்களும் நிர்வாகமும் சுரண்டித் தின்பது அவர்களின் ____த் தின்பதற்கு சமமே ஆகும்.

  18. இன்று ஒரு நிர்வாக கையால் மரணத்திற்க்கு குதிக்கம் கும்பல், இத்தனை நாள் ஆயிரம் ஆயிரம் தொழிலாலர் மரணத்திற்கு வாய் திறக்காததது ஏனோ?
    TCS Bangalore ITPL – ல் ஒரு இளம் IT Labor தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டானே, அறிந்ததாவது உண்டா நீங்கள்?

  19. do u have any evidence that officer raised caste remarks.Do u have any evidence that workers dont killed that person….. In vinavu, for their claims i dont see any evidence till now.. Most of them are unbelivable.

    • என்ன ஒரு கேள்வி? கொன்றார்கள் என்பதற்குத்தான் எவிடன்சு தேவை. குற்றம் நடக்கவில்லை என்பதற்கு எதற்கு சாட்சியம்?

      தொழிலாளர்கள் திட்டம் போட்டு கொன்றார்கள் என்றால் அதை நீரூபிக்க வேண்டியதுதானே
      அரசு-போலீசு விசாரனையிலும் எதுவும் தெரியவில்லை அதிலிருந்து இது திட்டமிட்டு நடந்த ஒன்று அல்ல என்பதே நிதர்சனம்.

      தொழிலாளர்களுக்கு கொலை செய்யும் நோக்கம்தான் என்றால் அதற்கு ஆபீஸ்தான் இடமா? கொஞ்சமாச்சும் யோசிங்க சார்.

      ஒரு மேனஜர் மட்டும் கொலையாகி பல தொழிலாளர்கள் அடிபட்டு ஆஸ்பத்திரி கிடப்பதெப்படி? சினிமா ஹீரோ மாதிரி அவர் பலரை அடித்து துவைத்து காயப்போட்டு இறுதியில் முதுகில் காயம்பட்டு இறந்தார்னு கதை சொல்லப்போறீங்களா? அடிபட்டு ஆஸ்பத்திரியில் விழுந்துகிடக்கும் தொழிலாளி செத்துப்போனால் அதற்கு என்ன பதில்?

      இது கலவரத்தில் நிகழ்ந்த கொலை, கொன்றது தொழிலாளியாவும் இருக்கலாம், இல்லை நிர்வாகம் அனுப்பி வைத்த ரவுடிகளாகவும் இருக்கலாம். எப்படியானாலும் தொழிலாளியின் நியாயமான போராட்டத்தை கலவரமாக்கிய நிர்வாகமே இந்த சூழ்நிலைக்கு முழுப்பொறுப்பு.

  20. அடப் பதருங்களா…அவன் தொழிலாளி என்பதனால் அவன் செய்யும் அராஜகம் எல்லாம் சரியாகிவிடுமா?

    அவனால் கொல்லப்பட்டவன் ஒன்னும் மாருதி ஓனர் கிடையாது அவனும் ஒரு தொழிலாளி தான்..இவர்கள் காட்டுமிராண்டிகள் இவர்கள் கண்டிப்பாகத்தன்டிக்கப்படவேண்டும்…

  21. இவளவு வாய் கிழிய பேசும் நீங்கள் எல்லோரும் …எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்யமாட்டோம் என்று சபதம் போடா வேண்டியது தானே ….இணைக்கு automation technology எவளவோ வளந்துடுச்சு சார் ……It will not take long time for business to run fully automated with out workers !!

    • ராசா எங்களுக்கு முதலாளி தேவையில்லேன்னு தான் சொல்லுறோம், சிஈஓ வரைக்கும் எல்லாரையும் வேலைக்கு வச்சுத்தானே உக்காந்து திக்குறான். அப்படிப்பட்ட ஒட்டுண்ணியை நசுக்கி கடாசிட்டு, பேக்டரியை எடுத்து நடத்த தொழிலாளியால முடியும். ஆனா தொழிலாளி இல்லாம முதலாளியால ஒரு !@#$ புடுங்க முடியாது. அதனாலதான் லாக்கவுட் பண்ணிட்டு போறான். யாருக்கு யாரு தேவைன்னு மொதல்ல புரிஞ்சுகங்க

      • ஒ அடுத்தவன் கம்பெனியை அபகரிப்பது தான் உங்க ஸ்டைலேலா ?? சார் நீங்க சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு நடத்துங்க சார்

        • எங்க உழைப்புல வளர்ந்த கம்பெனி, எங்களுடையது. இதுக்கு பயந்தீங்கன்னா போய் பெட்டி கடை வச்சு பொழச்சுகங்க, தொழிலாளியை சார்ந்த தொழில்ல இருந்திட்டு உங்க்கம்பெனின்னு சீன் போடாதீங்க

          • மையிலு யொசிச்சி பேசுங்க.நீங்க உங்க குடும்பதுக்கு சம்பாதிப்பதற்காக ஒரு நிருவனத்துல வேலை செயறிங்க, அதனால உங்களுக்கு ஒரு நிர்வாகம் தெவை படுது.அதுபோல ஒரு நிருவனத்துக்கும் நீங்க தெவை படறீங்க. இந்த பெலன்சு தவறும் போது பல தவறுகள் நிகழ்கிறது. இதுதான் உண்மை.

            • சிவகுமாரு,

              மொத்த பேலன்ஸையுமே முதலாளி ஆட்டைய போடுறதுதான் தவறுகளுக்கு முதன்மையான காரணம். இதுதான் உண்மை

          • பாருடா நல்லா இருக்கு கதை …….அப்போ நாம பொய் எதாவது கம்பெனில வேல செய்து அத ஆட்டைய போடலாம் போல…….

            This shows you have misunderstood the fundalmentals 🙂

    • Who is this Ram, is he Maruti GM or GM’s hitman? Where ever the Factory Goes, they Need the workers to do the Job, and already Gujarat Volvo Workers Have revolted and this may compel them to take it forward

  22. The fault is both ways.Companies need to pay the workers decently and more than pay,it would be better if they give them some benefits like housing/education/even good food.That would go a long way.

    But regarding compensation,manual work will never get as much pay as brain work,it is fair and this is how the world works.

    We dont know who is at fault here, but that GM(HR) did not deserve to die,we can never trust the information of vinavu.

    One more flaw/blatant lie in the post is that companies in gurgaon are cheating farm owners.The gurgaon farm owners are millionaires today and most the gujjars who live there have made a lot of money and are hardly poor.

    The bigger problem in general in society is the excessive spending of the rich which becomes very vulgar at one point.

    This is again due to people not being religious anymore and temples not working well anymore.In the olden days every temple will feed poor,homeless and the hungry regularly and today we have nothing to emulate that.

    All we have is rich people wasting money on pizzas & alcohol,rather than feeling good by feeding someone.This lack of religion caused by fake secularism & lack of faith has proven to be very harmful to the society.

  23. Dear Vinavu,

    I’m your regular reader because you are pointing out many issues with courage. I appreciate your effort even though I’m not able to accept some points mentioned by you.

    Regards,
    Siva

    • Fighting for rights is right but killing or causing cruelty in the name of revolution is definitely not acceptable.

      The main issues is with government. If government does its duty with at-least 50% of sincerity main issues can be solved and they can be even avoided.

  24. தொழிற்சாலைகளில் வேலை செய்தால் மட்டும் தான் தொழிலாளியா? அவர்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா? கஷ்டப்படும் மற்றவர்களுக்கு உரிமை ஏதும் இல்லையா? உதாரணமாக, பி.எச்.டி செய்யும் ஆராய்ச்சி மாணவர்கள். அவர்கள் எப்படி எல்லாம் சுரண்டப்படுகிறார்கள் தெரியுமா? உழைப்புச்சுரணடல் முதல் பாலியல் சுரண்டல் வரை.சமூகத்தின் பல அடுக்குகளில் இருந்து வரும் இந்த ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள். தங்களுக்கிடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத உதிரிகள்.இவர்களுடைய பிரச்சினை நாலு சுவர்களை தாண்டி வெளியே வருவது வெகு அபூர்வம். பல்கலைக்கழக வளாகங்களை தாண்டி வெளியே வருவது இன்னும் அபூர்வம். மத்திய அரசு நிறுவனங்களில் மனுதர்ம வெறியர்களிடம் சிக்கி சீரழியும் பல தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உங்கள் புலன்களுக்கு தெரியவில்லையா? முடியாமல் விட்டுவிட்டு கெட்ட பெயரோடு ஓடிப்போவதும் தற்கொலையும் சர்வ சாதாரணம். இருபதுகளின் இறுதி மற்றும் முப்பதுகளின் தொடக்கம் கொண்ட ஏறக்குறைய பத்தாண்டு இளைமைக்காலத்தை கொடூரமாக பறிகொடுக்கும் இவர்கள் சக்கையாக மனநோயாளிகளாக வெளியே துப்பப்படுவது தெரியாதா? இவர்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினீர்கள்? எத்தனை பேரை உதைத்தீர்கள்?

    • போராட்டத்தை பாதிப்புக்குள்ளாகுபவர்களுடனும் இணைந்துதான் தொடர்ந்து நடத்தமுடியும். இணையுங்கள். போராட்ட தீ பரவட்டும்.

  25. please find the “Times of india” today issue (29.07.2012) news on NDLF, hosur,about militant unionism. Maruthi is switching over to Gujarat, largest plant outside hariyana by maruthi….2 years before kovai NDLF hailed the killing of Rai George of PRICOL by the posters,for that Kovai Tholar Vilavai Ramasamy arrested and released later.

  26. தீவிரவாத தொழிற்சங்கங்கள் ஸ்ரீ பெரும்புதூர் ஆட்டோமொபைல் உற்பத்தி வளையத்தில் புகுந்திருப்பதாக முதலாளிகளின் தொழில் கூட்டமைப்பு அறிக்கை அளித்துள்ளது. இது பற்றிய செய்தி இந்து பத்திரிகையில் வந்துள்ளது. அநேகமாக அவர்கள் புரட்சிகர அமைப்புகளின் முயற்சியில் அமையப் பெற்ற தொழிர்சங்கங்களையே குறிப்பிடுவதாக தெரிகிறது. மாருதி சுசுகியின் ‘ஸ்விப்ட் டிசையர்’ மற்றும் ‘ஸ்விப்ட்’ ரக கார்கள் இந்திய மத்தியதர வர்க்கம் விரும்பி வாங்கும் கார்கள் என்று தெரிகிறது. முன்னது 65000 மற்றும் பின்னது 55000 கார்கள் புக் செய்து விட்டு நமது மத்தியதர வர்க்கம் டெலிவரிக்காக காத்து கிடப்பதாக இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஹூண்டாய், ஹாண்டா போன்றவை சமயம் பார்த்து தமது கார்களின் விலையை குறைத்துள்ளன. மானேசர் தொழிலாளர்கள் சரியாக கணித்து தம்மை சுரண்டி கொழுக்கும் ஜப்பான் மாருதி சுசுகி முதலாளிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.

Leave a Reply to கலாஷ்னிக்கோவ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க