privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!

இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 24

 ”இராணுவம், துணைஇராணுவம், போலீசுத்துறைஆகியவற்றில்முசுலீம்களுக்குஒதுக்கீடுசெய்யவேண்டுமென்றுஅபாயகரமானகோரிக்கைஒன்றுஎழுந்துள்ளது. இராணுவத்தில்மதத்தைவைத்துஒதுக்கீடுசெய்வதுஎன்பதுதேசப்பாதுகாப்புக்குஊறுவிளைவிக்கும்செயலாகும்.

 நாட்டைப்பாதுகாக்கஇந்துமுன்னணிவைக்கும்  கோரிக்கைகளில்ஒன்று.

 ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது. உண்மையில் பாதுகாப்புப் படைகளின் யோக்கியதை என்ன?

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995-ஆம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீசின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீசும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார். ஆக முசுலீம்களுக்கெதிரான கலவரம் வார, மாதக் கணக்கில் நீடிப்பதிலிருந்தே போலீசின் நடுநிலை இலட்சணம் என்ன என்பது தெரிகிறது. அடுத்து இந்துக்கள் மட்டும்  போலீசைத் தமது நண்பர்களாகவும், முசுலீம் – சீக்கிய மக்கள் போலீசைத் தமது வில்லன்களாகவும் கருதுவதாக விபூதி நாராயணன் ராய் குறிப்பிடுகிறார். இப்படி போலீசின் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்பது அரசின் மீதான நம்பிக்கை இழப்புக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறுகிறார்.

உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒரு ‘இந்து’ உளவுத்துறை அதிகாரியே போலீசு என்பது இந்துக்களின் காவலன் என்பதை நிரூபித்துவிட்டபோது வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இந்தியாவின் அதிகார வர்க்கம், நீதித்துறை, இராணுவ – போலீசு நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனீய இந்துமதத்தை இயல்பாகக் கருத்திலும், செயலிலும் ஆதரிக்கின்றன. அதன்படி இந்துமத வெறியர்களின் சித்தாந்தத்திற்கு நெருக்கமாகவே உள்ளன. இராணுவ – உளவுத்துறைகளின் உயர் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகப் பின்பற்றப்படுவதும் இதனால்தான்.

வேறு எந்தக் கட்சியையும் விட அதிகாரிகள் விரும்பிச் சேரும் கட்சியாக பா.ஜ.க.தான் இருக்கிறது. 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்க்பட்ட இராமன் சிலையைப் பாதுகாத்த மாவட்ட நீதிபதி நாயரும், 1987 இல் பூட்டை உடைத்து இராமனைக் கும்பிடத் தீர்ப்பளித்த நீதிபதியும் ஓய்வு பெற்றபின் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பா.ஜ.க.வில் நிரம்பி வழிகின்றனர். முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இராஜேந்திர சிங் உ.பி. மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேசபக்தி பற்றி வகுப்பெடுத்திருக்கிறார்.

எனவே, கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற மகத்கலவரங்கள் அனைத்திலும் அதிகார வர்க்கம் – போலீசு – இராணுவம் – நீதித்துறை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாகவே செயல்பட்டன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். ’87 மீரட் கலவரம் – ஹஷிம்புரா மலியானா படுகொலையிலும்’, ’89 பகல்பூரிலும்’, ’97 கோவை கலவரத்திலும்’ போலீசு – அரை இராணுவப் படைகள் ஏராளமான முசுலீம் மக்களைக் கொன்றன. ’93 பாபர்மசூதி இடிப்பை’ வேடிக்கை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், பின்பு வழிபாடும் நடத்தினர். ’93 பம்பாய்க் கலவரத்தில்’ முசுலீம்களை வேட்டையாடிய 20 போலீசு அதிகாரிகளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுகிறார். இன்றுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறியர்கள் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரத்துக்கு இப்போதே அடியாட்படை தயாராகிவிட்டதைத்தான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. முசுலீம் மக்களுக்கு எதிராக மட்டுமலல தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான மேல் சாதி வெறியோடும்தான் போலீசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. கொடியங்குளம் முதல் ரன்பீர்சேனா படுகொலை புரியும் பீகார் வரை அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. எனினும் போலீசு – இராணுவத்தில் முசுலீமைச் சேர்க்காதே என்ற ஆர்.எஸ்.எஸ். இன் பகிரங்கக் கோரிக்கை மதச்சார்பின்மை கோவணத்தையும் உருவி அரசை அம்மணமாக்குகிறது. இந்துமத வெறியர்களின் இக்கோரிக்கைக்குக் காரணம் என்ன?

பஞ்சாப் பிரச்சினையில், நீல நட்சத்திர நடவடிக்கையை எதிர்த்து இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்ட் கலகம் செய்தது வரலாறு. முசுலீம்களைப் பெருந்திரளாகப் போலீசும் பிரிவுகளில் சேர்த்தால் அவர்களும் கலகம் செய்வார்கள் – அப்பாவி முசுலீம் மக்களைக் கொல்ல மறுப்பார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் கவலை. இனிமேல்தான் இப்படி நடக்கும் என்பதல்ல. ஏற்கனவே அப்படித்தான் நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஜம்மு காசுமீர் போலீசின் வேலை நிறுத்தத்தைக் குறிப்பிடலாம். மத்திய அரசின் இராணுவ, துணை இராணுவப் படைகள் காசுமீர் முசுலீம் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைக்கு உள்ளூர் காசுமீர்  போலீசு உட்னபட மறுத்தது. அதனால் ஏற்பட்ட முரண்பாடு பின்பு பெரும் வேலை நிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது.

இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் இப்படிப் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அந்த இன மக்களைக் கொண்ட தனிச்சிறப்பான போலீசுப் பிரிவுகள் – தனிச் சிறப்பான – பயிற்சி அதிக சம்பளத்துடன் உருவாக்கப்படுகின்றன. அதாவது துரோகிகளுக்கான படை உருவாக்கப்படுகிறது. அசாம் ரைபிள்ஸ், காசுமீர் ரைபிள்ஸ் போன்றவை இப்படித்தான் உருவாக்கப்பட்டன. இப்படி அவர்கள் எத்தனை துரோகப் படைகளை உருவாக்கினாலும், படைகளுக்குள் நிச்சயம் முரண்பாடு ஏற்படவே செய்யும்.

ஆனால், இத்தகைய கலகங்கள் மதத்தோடு மட்டும் நின்றுவிடாது. பார்ப்பனிய இந்துமதம் என்பது இன, மொழி, மத, வர்க்க சாதி ஒடுக்கு முறைகளை உள்ளடக்கிறது என்பதால் கலகங்கள் இந்தப் பிரிவுகளுக்குள்ளிருந்தும் எழும். அப்படி எழக்கூடாது என்பதற்காகத்தான் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வேறு வேறு இன இராணுவப் பிரிவுகள் கவனமாக அனுப்பப்படுகின்றன. மேலும், இந்திய இராணுவத்தின் பல பிரிவுகளும் சாதி ரீதியாகவே உருவாக்கப்பட்டு, இன்றும் பராமரிக்கப்படுகின்றன. மராத்தா, ஜாட், ராஜ்புதன, சீக்கிய, கூர்க்கா ரெஜிமண்டுகள் இத்தகைய அப்பட்டமான சாதியப் பிரிவினையின் உதாரணங்களே. இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான இராணுவ, துணை இராணுவப் பிரிவுகள் அனைத்தும் தேசிய இன, சாதி ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் இயங்குகின்றன. அதனால்தான் ஒரு இன மக்கள் போராட்டத்திற்கு, வேற்று இன இராணுவத்தை அனுப்பி தற்போது அடக்கி வருகிறார்கள்.

தமிழகத்து இந்தி எதிர்ப்பை அடக்க கேரளத்தின் மலபார் போலீசு, வடகிழக்கு தேசிய இனப் போராட்டங்களைம் அடக்க மராட்டியத்தின் மராட்டா ரெஜிமெண்ட், காசுமீருக்கு மதராஸ் ரெஜிமண்ட், ஈழத்துக்கு பஞ்சாப் ரெஜிமண்ட் என ஒன்றுக்கு எதிராய் வேறு இனத்தை நிறுத்துகிறார்கள். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியும், நாடகமும் எத்தனை நாள் நடத்த முடியும்? விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் முற்றி வெடிக்கும்போது இராணுவமும் வர்க்க ரீதியாகப் பிளவுபடும். 1942 காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பம்பாயின் கப்பற்படை வீரர்களிடையே தோன்றிய எழுச்சி அதற்கோர் உதாரணம். இன்று இராணுவத்தில் முசுலீமை நம்பாதே, அசாமியனை நம்பாதே, தமிழனை நம்பாதே எனத் தொடங்குவது இறுதியில் சிப்பாயை நம்பாதே என்று முடியும்.

தன் நிழலைத்தவிர யாரையும் நம்ப இயலாத நிலைக்கு ஆளும் வர்க்கமும் அதன் அடிவருடிகளான இந்து மதவெறியாளர்களும் தள்ளப்படுவார்கள். அப்போது உழைக்கும் மக்களும் ‘போலீசை நம்பாதே, இராணுவத்தை நம்பாதே’ என்று கையில் ஆயுதம் ஏந்துவார்கள்.

– தொடரும்

__________இதுவரை____________

  1. // உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒரு ‘இந்து’ உளவுத்துறை அதிகாரியே போலீசு என்பது இந்துக்களின் காவலன் என்பதை நிரூபித்துவிட்டபோது வேறு என்ன ஆதாரம் வேண்டும்? //

    விபூதி நாராயண்ராய் விபூதி பூசிக் கொண்டு விசாரணை நடத்தினாரா என்று தெரியவில்லை.. பெரியாரை யாரெல்லாம் ராம்ஸ்வாமி என்ற ’இந்து’ என வடக்கே மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை..

  2. என்ன சொன்னாலும் சரி…

    வினவு போன்று எழுதிவிட்டு நாட்டில் ஜெயிலில் லாடம் கட்டுவார்களோ என்று பயந்து திரிய வேண்டிய அவசியமில்லை இந்தியாவில்…

    உலகில் பலநாடுகளில் இப்படி எழுதினால் உங்களுக்கு ஜெயில் தான்…

    இது சற்று ஓவர் கற்பனை…

  3. பார்பன இந்துமதவெறியர்கள் தனது பிரித்தாலும் சூழ்ச்சியை மட்டும் கொள்கையாக கொண்டு செயல்படுவது ,அதை எல்லா துறைகளிலும் புகுத்தி உள்ளது நாடறிந்த உண்மை.

  4. மத சாயம் கொண்டு அரசியல் நடத்தும் கட்சிகள் இருக்கும் வரை , நம் நாட்டில் மதக்கலவரத்தை தடக்க முடியாது.

  5. ஆர்.ஸ்.ஸ் நடத்தும் ரானுவப் பள்ளியையும் அதில் இருந்து நேரடியாக இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களையும் பற்றி கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

Leave a Reply to fact பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க