ஒரு மாதத் திருமணம்பாலியல் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வரும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பணக்கார முஸ்லீம் ஆண்கள், மாதக் கணக்கில் ஒப்பந்த மனைவிகளை மணந்து கொண்டு, ஒப்பந்த காலம் முடிந்தவுடன் தலாக் செய்கின்றனர். இதன் மூலமாக அவர்களின் பாலியல் வக்கிரத்தை தீர்த்துக்கொள்வதோடு, மதத்தின் புனிதத்தையும் காத்துக்கொள்கின்றனர் ( விபச்சாரத்தில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு எதிரானதாம்).

இத்தகைய ஒப்பந்தத் திருமணங்கள் தென் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அதிகரித்து வருகின்றன என்று இஸ்லாமிய பெண்கள் உரிமைக்காக பாடுபடும்  அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பணம் கொழுத்த வெளிநாட்டவர்கள், உள்ளூர் ஏஜென்ட் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ‘ குவாஸி ’ என்று அழைக்கப்படும் இஸ்லாமிய மதகுருவின் துணையோடு ஏழ்மையில் உழலும் முஸ்லீம் குடும்பங்களின் மீதும் அவர்கள் வீட்டு இளம்பெண்களின் மீதும் இந்த அநியாயத்தை திணிக்கின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த17 வயது இஸ்லாமிய இளம்பெண் நௌஷீன் தபசூம் தனக்கு நடந்த இத்தகைய ஒப்பந்தத் திருமணத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

உறவுக்கார பெண் ஒருவரால் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நௌஷீன், அங்கு ஏற்கனவே இருந்த 3 பதின்ம வயது பெண்களுடன் சேர்த்து சூடான் எண்ணெய் கம்பெனி மேல் அதிகாரி ஒருவரிடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

மணமகன் உசாமா இப்ராகிம் முஹம்மதுக்கு வயது 44, திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சூடான் தலைநகர் கார்டூமில் வாழ்ந்து வருபவர். ஹோட்டலில் பார்த்த நான்கு பெண்களில் நௌஷீனை தேர்வு செய்தவர், பெண்ணின் வீ ட்டிற்கு முறைப்படி வந்து, குவாஸி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நான்கு வாரத்துக்கு ஒப்பந்த மனைவியாக இருப்பதற்காக £1200 – இந்திய மதிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் – அவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.

திருமணமான மறுநாள் நௌஷீன் வீட்டிற்கு வந்த உசாமா தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி அவளை கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு நௌஷீன் ஒத்துழைக்கவில்லை.

பணம் தந்து ஏமாந்த உசாமாவிற்கு, மகளை எப்படியும் சமாதானப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து அனுப்பிவைத்த நௌஷீனின் பெற்றோர், அவளை அடித்து புடைத்துள்ளனர். ‘புது மாப்பிள்ளைக்கு இணங்கவில்லை என்றால் தண்டனை’ உறுதி என்று எச்சரித்தனர்.

பெற்றோரின் கட்டாயத்திற்கு அடிபணியாத நௌஷீன், தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு ஹைதராபாத் மோகல்புரி பகுதியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி ரோந்து போலீஸாரிடம் சரணடைந்திருக்கிறார். நடந்த கொடுமையை தைரியமாக விளக்கிய நௌஷீன், போலீஸாரிடம் குற்றத்தையும் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு மாத மாப்பிள்ளை உசாமா, நௌஷீனின் உறவுக்கார பெண், திருமணத்தை நடத்திய குவாஸி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நௌஷீனின் பெற்றோர்கள் தலைமறைவாகி விட்ட காரணத்தால் அவர்களை கைது செய்ய பிடியாணையுடன் போலீஸார் காத்துக் கொண்டு இருக்கின்றனர். 18 வயது கூட அடையாத மைனர் பெண்ணை திருமணம் முடித்ததற்காகவும், பெண்மையை மானபங்கம் செய்யும் விதத்தில் கிரிமினல் சதியில் பங்கெடுத்ததாகவும் நௌஷீன் பெற்றோர்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசாமா சல்லாபத்திற்காக வழங்கிய1 லட்சம் ரூபாய் பணம், நௌஷீனின் உறவுக்கார பெண் மும்தாஜ் பேகத்திற்கு20,000 ரூபாயும், பெற்றோருக்கு70,000 ரூபாயும், குவாஸி மற்றும் உருது மொழி பெயர்ப்பாளருக்கு தலா5000 ரூபாய் விகிதத்தில் பங்கிட்டு பைசல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறுகிறார் .

மேலும் திருமணச் சான்றிதழில் ‘ மணமகனின் சுற்றுலா பயணம் முடிவில் இருவருக்கும் விவாகரத்து வழங்கும் ஒப்புதலுடன் கூடிய நிபந்தனைகள் தலாக்னாமா என்ற பிரிவின் கீழ் தெளிவாக இடம் பெற்றுள்ளன’ என்றும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விவரித்தார்.

நௌஷீன் தந்தையைவிட வயதில் மூத்த உசாமா, சூடானில் பாலியல் உல்லாசத்தில் களிக்கவேண்டும் என்றால் இங்கு செலவு செய்ததைவிட3 மடங்கு அதிகமாக செலவழிக்கவேண்டும். விபச்சாரம் தடை செய்யப்பட்ட சூடானில் குறைவானே பெண்களே இதில் ஈடுபடுகின்றன. ஆகவே பாலியல் இன்பம் தேவையெனில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

அதிகமான பெண் குழந்தைகள் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் அவர்களை பராமரிப்பை தாண்டி எல்லாருக்கும் திருமணம் முடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே ஒன்றுக்கும் அதிகமான இந்த ஒப்பந்த திருமணங்கள் மூலமாக பணம் ஈட்டி எதிர்காலத்தில் திருமணம் நடத்த சேமிக்கிறார்கள், ஏழை இசுலாமிய பெற்றோர்கள்.

ஹைதராபாத் பெண்கள் மற்றும் குழந்தை நல வாழ்வு சமூக அமைப்பை சேர்ந்த ஷிராஸ் அமீனா கான் என்ற பெண், ‘ நகரத்தில் ஒரு மாதத்திற்கு15 ஒப்பந்த திருமணங்கள் நடப்பதாகவும் அவை அதிகரித்துக் கொண்டே போவதாகவும்’ கூறியுள்ளார்.

நகரத்தில் சட்டத்திற்கு புறம்பான பல திருமணங்கள் நடக்கின்றன என்று ஒப்புக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இப்போது கைது ஆகி இருக்கும் உசாமா, ‘ கார்டூமில் நண்பர் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த போது 40 நாள் மனைவியை ஒப்பந்த முறையில் மணமுடித்து வைத்து இருந்ததாக கேட்டு, அதை தானும் அனுபவிக்கும் நோக்கத்துடன் இந்தியா வந்ததாக’ அளித்த வாக்குமூலத்தை குறிப்பிடுகிறார்.

பெற்றோர்கள் வீட்டிலிருந்து தப்பித்த நௌஷீன் இப்போது அரசாங்க பெண்கள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘தனக்கு நடந்ததைப் போல பிற பெண்களுக்கு இனிமேல் நடக்கக் கூடாது’ என்பதற்காக தன் குடும்பத்தினரை எதிர்த்து போலீஸில் புகார் தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

“அறியாமையில் நடப்பது என்னவென்று தெரியாமல் இந்த திருமணத்திற்கு நான் ஒப்புக்கொண்டேன். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினார்கள். என் உண்மையான வயதை மறைத்து பொய் சான்றிதழ் தயாரித்து என்னை24 வயது பெண்ணாக காண்பித்தனர். பெண்களை தங்கள் இன்பத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள், அதனை அம்பலப்படுத்தவே நான் போலீஸிடம் சென்றேன்.”

“என் பெற்றோரை எதிர்க்க எனக்கு துணிச்சல் தேவைப்பட்டது. எனக்கு வீட்டுக்குப் போக பயமாக இருப்பதால் மறுபடியும் அங்கு செல்ல விருப்பமில்லை” என்று தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பிறர் நலத்திற்காக பகிரங்கமாக்கியிருக்கிறார் நௌஷென் தபசும்.

‘பெண்கள் மேடை ஏறி பாடினால் இஸ்லாமியத்துக்கு விரோதமானது, இளம் பெண் பர்தா அணியாமல் வெளியில் வந்தால் காமத்தை தூண்டுகிறாள்’ என்று பெண் அடிமைத்தனத்தை இறுக்கமாக பிடித்துவைத்து இருக்கிறது இஸ்லாம்.

‘பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்’ என்று போதிக்கும் மதம், காம வெறி பிடித்த ஆண்களை தண்டிப்பதற்கான அடித்தளமில்லாமல், பாலியல் இன்பத்தை தீர்த்துக்கொள்ள அலையும் ஆண்களுக்கு நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது. அந்த திருமண உரிமையைத்தான் அரபு ஷேக்குகள் விபச்சாரமாக பயன்படுத்துகின்றனர்.

நடக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த திருமணங்களில் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக பணம் கொடுத்து ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி ஒரு பண்டத்தைப் போல நுகர நினைக்கும் அட்டுழியத்தை நினைப்பதற்கே ஆபாசமாக உள்ளது.

மேற்கத்திய சீமான்கள் காம வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள, பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாவாக, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஹைதரபாத்திற்கு மட்டும் அரபுலக சீமான்கள் வருகின்றனர். இந்தியாவின் ஏழை முஸ்லீம் சிறுமிகளை கிழட்டு முஸ்லீம் ஷேக்குகளுக்கு திருமணம் முடிப்பதின் இன்னொரு வடிவம்தான் இப்போது நடக்கும் இந்த ஒப்பந்த திருமணங்கள்.

இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கமோ, பிற்போக்கு வாத இஸ்லாமிய மதவாதிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஏனெனில் இருவருக்கும் அரபு ஷேக்குகளின் பணம் தேவை!

ஜென்னி

மேலும் படிக்க

Teenager exposes Indias one month wives sex tourism

75 மறுமொழிகள்

 1. உயிரினும் மேலான நபிகளாரின் பொன்மொழிகளை உதாசீனப்படுத்தலாமா அப்புறம் காபிராகி விடுவார்களே 🙂

  • சில காம கொடூர அரபுகள் அதை செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 2. ஏனுங்கொ… சிறுபான்மை மத ஆட்களிடம் பெரும்பான்மை இந்து மத ஆளுங்கொ மோசமா நடந்துகிறாங்கொ.. அதை எதிர்க்காம சப்போர்ட் பண்றிங்க.. முற்போக்க்கு பட்டம் என்னறது… உடனே கட்டுரைய மாத்தி எழுதுஙக…

 3. காஜிக்கு கிடைக்கும் பணம் போச்சே; பொழப்புல மண்ண போடுரீங்கலே

  திருச்சி டவுன் காஜி

 4. திருமணம் என்பதே விபச்சாரம் என்று பெரியார் சொன்னதாக நினைவு?????? சரியா

  • உங்க அம்மா, அப்பாவுக்கு ‘அந்த’ இடத்தில் கட்டி வந்தா என்ன செய்வாங்களோ, அதை தான் அவரும் செய்வார். அரிகுமாரு இதெல்லாம் ஒரு பொழப்பு!

   (தந்தை பெரியாரை அறிவு ரீதியாக எதிர்கொள்ள முடியாத முண்டங்கள் அவரை இப்படியெல்லாம் தங்கள் ‘தகுதிக்கு’ ஏற்ப கிண்டல் செய்து தங்கள் வயித்தெரிச்சலை போக்கிக் கொள்கின்றன.)

 5. இது ஓரு அப்பட்டமான பொய் செய்தி. வினவு அமெரிக்க அடியாள்.
  எனவே இஸ்லாம் இதற்கு பொறுப்பு மற்றும் பருப்புகளை ஏற்காது..

  என சொல்ல வரும் கூட்டத்தின் சங்க உறுப்பினர்களுக்காக கொஞ்சம் hints
  😛 😛 :-)))

 6. //ஆகவே ஒன்றுக்கும் அதிகமான இந்த ஒப்பந்த திருமணங்கள் மூலமாக பணம் ஈட்டி எதிர்காலத்தில் திருமணம் நடத்த சேமிக்கிறார்கள், ஏழை இசுலாமிய பெற்றோர்கள்.//

  புரட்சியெல்லாம் செய்ய வந்து எப்படி நாசூக்காவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது? 🙂

  • ஏழை ‘இந்துப்’ பெண்கள் வறுமை காரணமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு சீனு ரூம் போட்டு அழுவதாகவும் அவரை தேற்றுவார் யாருமில்லை என்பதும் பிரேக்கிங் நியூஸ்!

   • வினவு அவர்கள் பதில் உப்பு இருக்கிறதா என்றால் பருப்பு உள்ளது என்பது போல் உள்ளது

 7. புதுநிலா! பெரியார் சொன்னது மிகச்சரியானதே! பலனை எதிர்பார்த்து, தன் மகிழ்வுக்காக அன்றி அடுத்தவரை மகிழ்விக்கும் எந்த செயலும் விபச்சாரமே! ஆனால் அதைத்தான் பிழைக்கும் வழி என்று இன்றைய சமூகம் நினைக்கிறது! ப்ரொமொஷனுக்காக பல்லிளிப்பதும் கூடத்தான்!

 8. யாரையும் காணோம். ஷேக்குகளையும் முகம்மதுகளையும் டவுசர அவுத்து அலைய வுட்டுட்டானே இந்த நாசமாப்போன வினவு காபீர். வாங்க. வந்து குமுறுங்க.

 9. இது இஸ்லாம் அனுமதிக்காத செயல்… இதற்க்கும் இஸ்லாத்திற்கும் அரபு ஷேய்க்குகளுக்கும் சமந்தமில்லை… ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுக்கு இது வாய்ப்பாக அமைகிறது..

  இதே வேறு மதக்காரன் செய்தால் அவன் மதம் விமர்சிக்கபடாது.. முஸ்லிம்கள் செய்தால் உடனே மதம் மட்டுமே உங்களுக்கு தெரியும் … சரி அது இருக்கட்டும் …

  மற்றவன் வைப்பாட்டி வைத்து இருக்கான் .. அப்ப அப்ப காசு கொடுத்து போயிட்டு வரான் .. அதுக்கு இந்த அரபு ஷேய்க் பயலுக செய்றது கொஞ்சம் பெட்டெர்..

  ஆனால் உங்களுக்கு தான் கல்யாணம் என்றாலே பிடிக்காதே ..

  உங்கள் கலாச்சாரம் நல்ல புதிய கலாச்சாரம் தான் பாஸ்..

  • கருத்து 7 மறக்காமல் வாசிக்கவும்.

   இங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு அப்பவே தெரியும்..

   • //இது இஸ்லாம் அனுமதிக்காத செயல்…///

    ///அதுக்கு இந்த அரபு ஷேய்க் பயலுக செய்றது கொஞ்சம் பெட்டெர்.. ///
    என்று சொல்லி அடுத்த வரிகளில் அங்கிகாரம் கொடுக்கிறீர்கள்

    • அங்கிகாரமா ? யார் கொடுத்தது …. விபச்சாரத்திற்கு மரணதண்டனை கொடுத்துள்ள இஸ்லாத்தில் நாங்கள் ஏன் அங்கிகாரம் கொடுத்தது … அதைவிட கேடுகட்ட விஷயங்கள் இங்கே நடக்கிறது .. லைசென்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள் .. விபச்சாரத்தை செய்து விட்டு விரும்பி தானே செய்தேன் என்று சப்பகட்டு வேற … அட போங்க பாஸ் ..

  • ஓ.கே. இது இஸ்லாம் அனுமதிக்காத செயல் என்கிறீர்கள். இதற்கு என்ன தீர்வு? இப்படி தேடி வரும் ஆசாமிகளின் துடிப்பை ஆசிட் ஊற்றி கருக்கி (சுருக்கி) விட வேண்டும். இது குறைந்தபட்ச தண்டனை. பிறகு அதற்கு ஏஜெண்டாக செயல்படும் ஆசாமி, பின் பணத்திற்காக திருமணம் நடத்தி வைக்கும் அந்த ஆசாமி, கடைசியில் அந்த அபலைகளின் பெற்றோர்கள் இவர்களுக்கு அதிகபட்சமாக தண்டனை கொடுக்க வேண்டும்.
   இப்படி வறுமையில் வாடும் குடும்பங்களை மேலேற்றுவதற்கு உங்களில் இருக்கும் அமைப்பு என்ன செய்கிறது? மைக்கை பிடித்துக் கொண்டு மணிக்கணக்காக பேசும் அந்த அமைப்பினரை அடுத்த முறை சட்டையைப் பிடித்து கேளுங்கள்.

   • //ஓ.கே. இது இஸ்லாம் அனுமதிக்காத செயல் என்கிறீர்கள். இதற்கு என்ன தீர்வு? //

    தலையை வெட்டுங்கள் பாஸ் … சவுதில செஞ்சா அவனுங்க தல இருக்காது … அது நாலாதான் அந்த நாரப்பயளுங்கள் இந்தியாவில் வந்து விபச்சாரம் செய்துவிட்டு போறான் …

    இந்திய நாட்டில் தான் எதைவேண்டுமாலும் செய்யலாமே .. நல்ல சட்டம்டா …

    சேரி டெல்லி மாணவி கற்பழித்த பிறகு தொடர்ந்து பல மாணவிகள் ,சிறுமிகள் கற்பழிக்க படுகிறார்களே உங்களால் என்ன செய்ய முடிந்தது …

    சட்டம் மட்டும் இருந்தா போதாது , அதை அமல்படுத்தும் நிலையில் அரசு இருக்க வேண்டும் .. அது வரைக்கும் இப்படி தான் இருக்கும் இந்தியா

    • இசுலாமியர்கள் அல்லாவுக்கு பயப்படவில்லை, சட்டத்துக்கு மட்டும் பயப்படுகிறார்கள் என்கிறீர்களா?

 10. //இது இஸ்லாம் அனுமதிக்காத செயல்…//
  (ரெண்டாவது, மூணாவது, நாலாவது) (வயசு வித்தியாசம் பார்க்காம) திருமணம் செய்வதையும் சில வாரங்களுக்குள் விவாகரத்து செய்வதையும் இஸ்லாம் அனுமதிக்குதா, இல்லையா?

  //அதுக்கு இந்த அரபு ஷேய்க் பயலுக செய்றது கொஞ்சம் பெட்டெர்.. //
  அவனுங்களுக்கு எதிரா ஜிகாத் நடத்தாம, இப்படி சொல்றதாலதான் இஸ்லாத்தை விமரிசிக்கிறாங்க.

  //இதே வேறு மதக்காரன் செய்தால் அவன் மதம் விமர்சிக்கபடாது..//
  எந்த மதக்காரன் இப்படி செய்தான்னு விவரம் இருந்தா அவங்களையும் விமரிசிப்பாங்க.

  • (ரெண்டாவது, மூணாவது, நாலாவது) (வயசு வித்தியாசம் பார்க்காம) திருமணம் செய்வதையும் சில வாரங்களுக்குள் விவாகரத்து செய்வதையும் இஸ்லாம் அனுமதிக்குதா, இல்லையா?

   இஸ்லாம் திருமணம் செய்வதை அனுமதிக்கிறது … இதற்க்கு நிபந்தனை இருக்கிறது ஆனால் சில வாரங்களுக்குள் விவாகரத்து செய்வதை முன்னிறுத்தி திருமணம் செய்வதை அனுமதிக்க வில்லை ..

   //அவனுங்களுக்கு எதிரா ஜிகாத் நடத்தாம, இப்படி சொல்றதாலதான் இஸ்லாத்தை விமரிசிக்கிறாங்க.//

   பாஸ் நீங்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதை வரவேற்கிறோம் .. ஆனால் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் …

   பாஸ் இது அரசாங்கம் செய்ய வேண்டியது , நம்ம இந்தியாவில் இருக்கிற நாம தப்பு செஞ்சாவே இந்திய சட்டம் தண்டிக்காது , இதுல வெளிநாட்டுகரனை எப்படி தண்டிக்கும் ..

   அதனால தான் அவங்க இங்கே வராங்க … சவுதில செஞ்சா தல இருக்காது.

   //எந்த மதக்காரன் இப்படி செய்தான்னு விவரம் இருந்தா அவங்களையும் விமரிசிப்பாங்க.//

   இதெல்லாம் சும்மா .. நித்தியானந்தா மாதிரி பெரிய ஆளுங்க மாட்டினால் கூட நீங்கள் அவங்கள விமர்சிக்கிரீர்கள் ஆனால் அவங்க மத சட்டங்களை விமர்சிப்பதில்லை …

   அதற்க்கு பல கரணங்கள் இருக்கு… அதற்க்கு உள்ளே போனால் நான் மற்ற மதங்களை விமர்சிக்க வேண்டி வரும் ..ஆதலால் வேண்டாம்

  • அவனுங்களுக்கு எதிரா ஜிகாத் நடத்தாம, இப்படி சொல்றதாலதான் இஸ்லாத்தை விமரிசிக்கிறாங்க.

   it is a good answer mr. செழியன் குமரன்

 11. வினவுக்கு என் பணிவார்ந்த நன்றிகள். உண்மையில் சமூக அக்கறையோடு நேர்மையோடு அடித்தள மக்களின் உணர்வுளை நெஞசுரம் மாறாமல் எழுதுகிற உங்கள் எழுத்துக்கு என் தலை தாழ்ந்த வனக்கங்கள். சாதி மதங்களுக்கு அப்பால் பணத் தேவையின் காரண்மாய் பெற்றவர்களே தன் குழந்தையை தவறான பாதைக்கு வழிகாட்டும் நிலமை. துணிச்சலுடன் பெற்றவர்களின் குற்றத்தை வெளிப்படுத்திய இளம்பெண் மெச்சப்பட வேண்டியவர். தேவையை தாண்டி பொருள் ஈட்டுவது மனித மனங்கள் தவறான பாதையில் செல்ல வழியாகி விடுகிறது.ஸுடான் நாட்டில் சூடாகிப்போனவருக்கு இந்திய பெண்களின் மீது கண்கள்.குறைந்த விலையில் தரமான சரக்குகள் என கருதும் பண்பாடு கெட்டநிலை. அளவுக்கு மீறி சம்பாதிப்பதை எளியவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒட்டு மொத்த மனித சமூகமும் உணர வேண்டும். சாதி மதங்களை மறந்து ஒழுக்கநெறிகளை வளர்ப்போம். ——— ஸ்ரிதரன் பாண்டிச்சேரி

 12. இம்மாதிரியான திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை ..தவறு இதில் சம்பந்தப்பட இஸ்லாமியர்கள் மீதுதான் ..

  உங்கள் கட்டுரையில் பெண் விபசாரம் செய்தால் கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் .. இரு பாலரும் குற்றவாளிகளே ..இருபாலருக்கும் தண்டனை பொதுவானதே..

  அன்புடன்
  ராஜகனி

 13. Islamic teachings is very clear. If some muslims misuse the religion don,t blame the Islam. Prophet Muhammad said, without the permission of the women marriage become null and void. Women have the right to chose their groom. If you want more explanations I will explain t u and if you want to come for debate that one also welcomed.

  • Just one thing,

   Is there a time limit until which Talaq cant be given?

   Like they say in Mounaragam when revathi & Mohan want to get a divorce,they are asked to wait for one year.

   • @Hஅரி Kஉமர்…விவாகரத்தை மௌனராகம் படத்தில் சொல்ற மாதரி தள்ளி போடுவதால் என்ன நடக்கும்???…பல வீடுகளில் ஸ்டவ் வெடிக்கும் , இல்லை என்றால் கணவன் மனைவியை நடத்தை கெட்டவள் என்று நீதிமன்றத்தில் கூறுவான் விரைவாக விவாகரத் கிடைப்பதற்கு.இல்லை என்றால் மனைவி நீதிமன்றத்தில் தன்னுடைய கணவன் ஆண்மை இல்லாதவன் என்று கூறுவாள் விரைவாக விவகாரத்து கிடைக்க . இதுதான் நடக்கும். இஸ்லாத்தின் படி திருமணம் இருமனம் இணையும் ஒரு உடன்படிக்கை.அவர்களுக்கு இடையே பிடிக்கவில்லை , ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று ஆகுமானால் அவர்கள் பிரிந்து செல்லலாம். அவர்கள் 2 வருடம் , 3 வருடம் காத்திருக்க வேண்டியது இல்லை. நாம் திருமணம் முடிக்கும் போது நீதிமன்றத்தை அணுகி ஒப்புதல் பெறுவதில்லை. அதே மாதரி விவாகரத்தையும் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும் நீதி மன்ற ஒப்புதலுக்கு போக வேண்டியது இல்லை

    • Then there is no way you can stop this.

     This way two people can do whatever they want and get off whenever they want.

     I dont know why they need a Qazi for this,maybe it is a Mama calling himself Qazi.

    • @Mydeen
     //இஸ்லாத்தின் படி திருமணம் இருமனம் இணையும் ஒரு உடன்படிக்கை………….
     அவர்கள் 2 வருடம் , 3 வருடம் காத்திருக்க வேண்டியது இல்லை. நாம் திருமணம் முடிக்கும் போது நீதிமன்றத்தை அணுகி ஒப்புதல் பெறுவதில்லை. அதே மாதரி விவாகரத்தையும் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும் நீதி மன்ற ஒப்புதலுக்கு போக வேண்டியது இல்லை//

     ஜடியா நல்லா இருக்குது. அரபு சேக்கை விட நான் கூடுதலா நான் காசு தாரேன். ஓப்பந்தம் பண்ண எங்க விண்ணப்பிக்க வேண்டும். அப்படியே கொஞ்சம் இதுல எங்க பெண்ணுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது என்பது விளக்கினால் நல்லது..

        • ///ஜடியா நல்லா இருக்குது. அரபு சேக்கை விட நான் கூடுதலா நான் காசு தாரேன். ஓப்பந்தம் பண்ண எங்க விண்ணப்பிக்க வேண்டும்.//

         இதுக்கு பதில் சொல்லுங்க

         • கல்நெஞ்சம்,

          நீங்க அந்த கேசா. திருமணத்தில் ஒப்பந்தம் என்பது நாட்கணக்குக்காக அல்ல. ஆண் பெண் இருவரின் முழு சம்மதத்துடன் எப்படி இணைகின்றார்களோ அதேபோல பிணக்கு ஏற்படும்போதும் பிரிந்து போகும் உரிமை வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம். இப்போ நாம் ஈழத்தமிழர்களுக்கு பிரிந்து போக வாக்கெடுப்பு நடத்து என கோரிக்கை வைக்கிறோம் இல்லையா அப்படி. கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்களே பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய ஒப்பந்தம் என்று. அப்படி

          • மைதீன்
           அப்ப சவுதி சேக்கு போடுவது என்ன மணிக்கனக்கு ஓப்பந்தமா?? அது நாட்கணக்கு ஓப்பந்தமா??

          • அப்படி கேளு கல்லு. அந்த ஷேக்கு செய்தது நாட்கணக்கு ஒப்பந்தம்தான். அரபுகளிடம் இருந்த இந்த வழக்கம் இஸ்லாம் தோன்றிய துவக்க காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்ததுதான். அதன் பிறகு தடுக்கப்பட்டிருக்கிறது. முன்னமே ஏன் தடுக்கவில்லை என கேட்காதீர்கள், ஏன்னா நான் இங்கு இஸ்லாத்தை புனிதப்படுத்த முயலவில்லை. இருந்தாலும் நாம் உண்மையை பேசனும் இல்லையா.

 14. இது ஒரு அவசியமான பதிவு .காமகொடுரர்களின் வெறியில் இருந்து பெண்களையும் , குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் அதாவது முஹம்மது நபி அவர்களுக்கு முன்னாடியே அரபுகள் மது அருந்துவது, வட்டி வாங்குவது, வட்டிக்கு கொடுப்பது , வாடகை மனைவியை வைத்துக்கொள்வது போன்ற விசயங்களை வழக்கமாகா கொண்டிருந்தார்கள். வணிகம் செய்ய பக்கத்து நாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாடுகளில் உள்ள பெண்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டும் திருமண வாழ்க்கை என்று உடன் படிக்கை எடுத்துக்கொண்டு மனம் முடித்து கொண்டு வாழ்க்கை நடத்திவிட்டு தனது சொந்த நாட்டிற்கு திரும்பும் போது விவாகரத்து செய்துவிடுவார்கள். இதற்க்கு அவர்கள் மணப்பெண்ணிற்கு ஒரு குறிப்பிட தொகையை பேசி கொடுத்துவிடுவார்கள். முஹம்மது நபி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மக்கள் மத்தியில் வைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கிய பொழுது அரபு மக்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள் , அதே நேரம் தங்களுடைய பழக்கத்தியும் தொடர்ந்து வந்தார்கள். வட்டி,மது, வாடகை மனைவியை ஆரம்பத்தில் இஸ்லாத்தில் தடை செய்ய படாமல் இருந்தது. ஆகையால் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்களும் இதை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள்.ஆனால் மக்கா வெற்றிக்கு பிறகு , இறை செய்தி கிடைத்தவுடன் முஹம்மது நபி அவர்கள் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பேசும் பொழுது “வாடகை திருமணம் இன்றோடு இஸ்லாத்தில் தடை செய்யபடுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள்.அதே போல மதுவும், வட்டியும் தடை செய்ய பட்டுவிட்டது. இதுதான் இஸ்லாம் சொல்வது. இன்றும் சில காம கொடூர அரபுகள் அதை செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை நம் இந்திய சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஒரு விஷயத்தை கட்டுரையில் வெளியிடும் போது அதை பற்றிய ஆழமான அறிவு தேவை என்பதை வினவு புரிந்து கொள்ள வேண்டும் …இல்லை என்றால் மற்ற பத்திரிக்கைக்கும் , வினாவுக்கும் என்ன வித்யாசம்???….இதை வினவிடம் நான் எதிர்பார்க்குறேன்.

  • ///இன்றும் சில காம கொடூர அரபுகள் அதை செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை நம் இந்திய சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.///

   அது சரி, அரபு நாடுகளில் இஸ்லாம் சட்டப்படி என்ன தண்டணை…இதை உங்களிடம் நான் எதிர்பார்க்குறேன்

    • இஸ்லாமிய கிரிமினல் சட்டம் எங்களுக்கு வேண்டும் என்று தான் நாங்களும் சொல்கிறோம் ..

     அதை தந்தாலாவது எங்கள் சமூகமக்களின் தவறுகளை நாங்கள் இனம் கண்டு தண்டிக்க முடியும்…

     யாரும் இதை எதிர்க்கவில்லை பாஸ் … நாங்கள் அதை தான் கேட்டுகொண்டு இருக்கிறோம்..

  • ஒரு விஷயத்தை கட்டுரையில் வெளியிடும் போது அதை பற்றிய ஆழமான அறிவு தேவை.
   wow. it is clear detail. i agree

 15. ஸ்ரிதரன் பாண்டிச்சேரி மற்றும் மைதீன் கருத்துகளே சரியான்வை! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெரியாரை தாக்குவதாக நினைத்து அம்மணப்பட்டு போகும் அரிகுமாருக்கு அனுதாபஙகள்! மதங்கள் தோன்றிய காலத்தில் அனுமதிக்கப்பட்ட மனிதாபிமானம் அற்ற செயல்கள், தற்போது படித்தவர்களால் கைவிடப்பட்டுவிட்டன ! படிக்காத பாமரர்களே இன்னும் மூடனம்பிக்கைகளில் சிக்குண்டு தவிக்கின்ற்னர்! பொட்டு கட்டி விடுதலும், பாலிய விவாகமும், சட்டம் தடை செய்தாலும் இன்றும் நடக்கின்றன! மதஙகள் போதிக்கும் நல்ல விடயஙளை யாரும் கடைபிடிக்காமல், மத வெறியை தூக்கிவைத்து கொண்டு ஆடுவது அவர்களின் சுயநலத்துக்காகவே! மதமான பேய் எனை பிடியாதிருக்க வேண்டும் என வள்ளலாரும், கடவுலை மற; மனிதனை நினை என்று பெரியாரும் சொன்னதையும் அனைவரும் (அம்பிகள் உட்பட) சிந்திக்கவேண்டும் !

 16. இது ஒரு அவசியமான பதிவு .காமகொடுரர்களின் வெறியில் இருந்து பெண்களையும் , குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் அதாவது முஹம்மது நபி அவர்களுக்கு முன்னாடியே அரபுகள் மது அருந்துவது, வட்டி வாங்குவது, வட்டிக்கு கொடுப்பது , வாடகை மனைவியை வைத்துக்கொள்வது போன்ற விசயங்களை வழக்கமாகா கொண்டிருந்தார்கள். வணிகம் செய்ய பக்கத்து நாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாடுகளில் உள்ள பெண்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டும் திருமண வாழ்க்கை என்று உடன் படிக்கை எடுத்துக்கொண்டு மனம் முடித்து கொண்டு வாழ்க்கை நடத்திவிட்டு தனது சொந்த நாட்டிற்கு திரும்பும் போது விவாகரத்து செய்துவிடுவார்கள். இதற்க்கு அவர்கள் மணப்பெண்ணிற்கு ஒரு குறிப்பிட தொகையை பேசி கொடுத்துவிடுவார்கள். முஹம்மது நபி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மக்கள் மத்தியில் வைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கிய பொழுது அரபு மக்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள் , அதே நேரம் தங்களுடைய பழக்கத்தியும் தொடர்ந்து வந்தார்கள். வட்டி,மது, வாடகை மனைவியை ஆரம்பத்தில் இஸ்லாத்தில் தடை செய்ய படாமல் இருந்தது. ஆகையால் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்களும் இதை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள்.ஆனால் மக்கா வெற்றிக்கு பிறகு , இறை செய்தி கிடைத்தவுடன் முஹம்மது நபி அவர்கள் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பேசும் பொழுது “வாடகை திருமணம் இன்றோடு இஸ்லாத்தில் தடை செய்யபடுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள்.அதே போல மதுவும், வட்டியும் தடை செய்ய பட்டுவிட்டது. இதுதான் இஸ்லாம் சொல்வது. இன்றும் சில காம கொடூர அரபுகள் அதை செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை நம் இந்திய சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஒரு விஷயத்தை கட்டுரையில் வெளியிடும் போது அதை பற்றிய ஆழமான அறிவு தேவை என்பதை வினவு புரிந்து கொள்ள வேண்டும் …இல்லை என்றால் மற்ற பத்திரிக்கைக்கும் , வினாவுக்கும் என்ன வித்யாசம்???….இதை வினவிடம் நான் எதிர்பார்க்குறேன்.

 17. இந்த பழக்கம் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அரபிகளிடம் இருந்த வழக்கம்.இதை இஸ்லாம் முழுமையாக்கப்பட்ட போது நபிகள் தடை செய்து அதையும் விபசாரமாக அவர்களுடைய மக்கா வெற்றியின் பின்னர் செய்த உரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதால் வாடகை மனைவி (முத்ஆ) இஸ்லாத்தின் அடிப்படையில் விபசாரமே.ஆனால் முஸ்லிம் அல்லாத அரபியர்கள் (1 மில்லியன் பேர்) இன்னமும் இதை விட்டுவிடவில்லை.சில பணக்கார முஸ்லிம்களின் செயலும் இஸ்லாம் அல்ல. http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vadakai_manaivi_unda/

  இஸ்லாத்தில் வாடகை மனைவி உண்டா – பதில்கள் – ஆன்லைன் பி.ஜே
  onlinepj.com
  ஆன்லைன் பி.ஜே

  • வாடகை மனைவி விபச்சாரத்தை நபி தடை செய்தார் என்று அறிவிப்பதன் மூலம் இன்றைய அரபு தேசங்கள் அதாவது நபி வழி வாழும் ஷேக்குகள் செய்யும் விபச்சாரத்தை நியாயப்படுத்துகிறீர்கள். இல்லையென்றால் அவர்களை தண்டிப்பது எப்படி? குறைந்த பட்சம் அவர்களை இசுலாத்திலிருந்து நீக்க முடியுமா? அப்படி ஒரு ஃபத்வா கொடுக்க முடியுமா? அரபு ஷேக்குளையும், அவர்களது அரசுகளையும் கண்டிக்க திராணியற்ற உங்களைப் போன்றவர்கள்தான் ஐதராபாத்தின் ஏழை முசுலீம் சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கு தார்மீக காரணமாகிறீர்கள்.

   • வினவு,
    விபச்சாரத்திற்கு தண்டனை கல்லடி மரணம். இன்னும் ஓரிரு நாட்களில் மனிதருள் மாணிக்கம் பீஜே ஷேக்குகளுக்கு எதிராக பத்வா கொடுப்பார்.

   • //வாடகை மனைவி விபச்சாரத்தை நபி தடை செய்தார் என்று அறிவிப்பதன் மூலம் இன்றைய அரபு தேசங்கள் அதாவது நபி வழி வாழும் ஷேக்குகள் செய்யும் விபச்சாரத்தை நியாயப்படுத்துகிறீர்கள். //

    இது என்ன கொடுமை .. இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை என்றால் எப்படி இதை நியாயபடுத்துவதாக அமையும் …???

    //அவர்களை தண்டிப்பது எப்படி? //

    சவுதி அரசாங்கதிற்கு ஆதாரத்தோடு இன்ன இன்ன ஷேக்குகள் என்று இந்திய அரசு அறிக்கை கொடுத்தால் … மரண தண்டனை வழங்கபடலாம் சவுதியில் .. இந்தியாவில் கனவில் கூட தண்டிக்க முடியாது …

    //குறைந்த பட்சம் அவர்களை இசுலாத்திலிருந்து நீக்க முடியுமா? ///

    இது என்ன பதினெட்டு பட்டி கிராமமா … அது நம்பிக்கை விஷயம், அதை யாரும் நிர்பந்தித்து ஏற்படுத்தவும் முடியாது , நிர்பந்தித்து எடுத்துவிடவும் முடியாது ..

    //அரபு ஷேக்குளையும், அவர்களது அரசுகளையும் கண்டிக்க திராணியற்ற உங்களைப் போன்றவர்கள்தான் ஐதராபாத்தின் ஏழை முசுலீம் சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கு தார்மீக காரணமாகிறீர்கள்.//

    கொஞ்சம் கூட விபரம் இல்லையா பாஸ் உங்களுக்கு … அரபு ஷேக் மேட்டர் ஒன்னும் கிடைத்த உடன் சீன் போடாதிங்க பாஸ் … கூத்தாடி சினிமா , போதை , விபச்சாரம் எல்லாத்தை முதலில் எதிர்பவர்கள் நாங்கள் தான் …

    இதை இந்திய அரசு முதலில் கண்டுகொள்ள வேண்டும அதை விட்டுவிட்டு சவுதி அரசை கண்டிக்கவேண்டுமாம் .. உங்க அறிவு அப்படியே மெய் சிலிர்க்க வைகிறது ..

    இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாமிய ஆட்சி ஆளர்கள் காரணம் ஆவர்கள் பொதுமக்கள் எல்லாம் எல்லாவற்றிகும் பொறுபேற்க முடியாது ..

    முடிந்தால் உங்க இந்திய சட்டத்தை வைத்து ஒருதனை தண்டியுங்கள் பார்க்கலாம் …

    பேசுறாங்க போங்க பாஸ் …

   • கொஞ்சம் கூட விபரம் இல்லையா பாஸ் உங்களுக்கு

    Dear vinavu,

    keep u r mind relax.

    மதம் என்ற பெயரில் மனிதன் பூசாரிகளிடம் அடிமைப்படுகிரான்! பூசாரியோ பணக்காரனுக்கு அடிமையாகிரான்! பணக்காரனின் தேவையை பூர்த்தி செய்யவே பூசாரி விழைகிரான்! எல்லாமே வியாபாரம்தான்! பாவம் இந்த பெண்கள்!

 18. மதம் என்ற பெயரில் மனிதன் பூசாரிகளிடம் அடிமைப்படுகிரான்! பூசாரியோ பணக்காரனுக்கு அடிமையாகிரான்! பணக்காரனின் தேவையை பூர்த்தி செய்யவே பூசாரி விழைகிரான்! எல்லாமே வியாபாரம்தான்! பாவம் இந்த பெண்கள்!

  • காஜிகள் பூசை செய்யும் பூசாரிகள் என்ற உண்மையை கண்டுபிடித்த கருத்துக் களஞ்சியமே.. இன்னும் என்னவெல்லாம் உள்ளே வைத்திருக்கிறீர்களோ..?! ஒவ்வொன்றாக எடுத்து விட்டு நாடு நலம் பெற ஆவன செய்யுங்கள்..

 19. ஊர் ஜமாத்தின் முன்னிலையில் சாட்சிகள் பங்கேற்புடன் திருமணம் முடிக்கப் போகும் ஆண் பெண் இருவரின் முழு ஒப்புதலுடன்தான் இஸ்லாத்தில் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். இதுவல்லாத செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது

  • /செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது/

   எதற்கும் இஸ்லாத்துக்கு தான் சம்பந்தம் உண்டு? ஒருவேளை தப்பு செய்தவர் ஏழையோ, தொழிலாளியோ இருந்தால் இன்னேரம் சம்பந்தம் இருந்திருக்கும. அன்று முதல் இன்றுவரை மதங்கள் பணக்காரர்கள் நன்மைகாகதான் இருக்கும் இல்லையென்றால் அந்த மதம் அழிந்துவிடும்.

   திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் வேறுபாடு என்ன?

   மனிதன் முதலில் விலங்களோடு விலங்காகதான் இருந்தான் தாய், தந்தை, மகன், மகள், சகோதரி, சகோதரர்கள் என்றெல்லாம் இல்லை வயது வந்தோர் அனைவரும் யோரோடு வேண்டுமென்றாலும் உடல் உறவு வைத்துக்கொள்ளலாம். அது கடுகு அளவுகூட தவறு இல்லை. ஆனால் அந்த நிலைமை அப்படியே இல்லை மனித நாகரீக வளர்ச்சிப்படி இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறு என்று நமக்கு நாமே ஒரு முறை நாகரீகம் என்று வகுத்துக்கொண்டு வாழ்கிறோம் .

   இன்று பர்தா முறை கூட நாகரீகமற்ற செயல். எப்படியென்றால் தாயுடன் உடல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று எது தடுக்கிறது, நாமே நமக்குள் வளர்த்துக்கொண்ட நாகரீகம், அதாவது மனதளவில் முழுமையான நாகரீகம். அதே போன்று தான் எல்லா பெண்களிடமும் முழுமையான நாகரீகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பெண் என்ற முறையில் தான் முதல் பார்வையே இருக்கிறது அது நாகரீகம் வளராத நிலைமை. பெண்ணை சக மனிதராக பார்க்கவேண்டும் அதற்குமாறாக பெண்ணாக பார்க்கிறோம் என்றால் உடல் இச்சையால் அனுகுகிறோம் என்று அர்த்தம். இது நமது மனது முழு நாகரீகமாக வளரவில்லை என்பதை காட்டுகிறது. பர்தாமுறை நாம் காட்டுமிராண்டியாக மனதளவில் நாகரீகம் வளராத நிலைமையை காட்டுகிறது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் இஸ்லாத்தில் கொஞ்சம் அதிகமாக அவ்வளவுதான்.

   அதே போன்று தான் ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் நாகரீக உயர்ந்த நிலை (நாளை மாறலாம்).

   ஒரு பெண்ணோ ஆணோ எத்தனை ஆண், பெண்ணுடனோ உறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது நாகரீகமல்ல என்ற மன நிலை தான் தடுக்கும். அந்த மன நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

   ஆனால் இஸ்லாத்தில் எப்பொழுதோ இறைவன் பெயரில் ஏற்பட்ட ஒருமுறையை ஆண்களுக்கு சாதகமாக இருப்பதால் இன்றும் கடைபிடிப்பது நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத நிலை. இஸ்லாம் சட்டம் எல்லாம் அந்த காலத்திற்கான ஏற்பட்ட சட்டம். இப்பொழுது நிலைமை வேறு.

   இறைவன் என்ற பிற்போக்குதனத்தை விட்டுவெளியே வரவேண்டும் இல்லையென்றால் நடைமுறைக்கும் மாயைக்கும் இடையில் இருந்து குழம்பித்தான் போக வேண்டும்.

   • அடப்பாவி,

    நிறைய எழுதியிருக்கிறீர்கள். அவ்வளவையும் என்னால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொன்றாக வருவோம். உங்களிடமிருந்து முதலில் ஒன்றை நான் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு கேள்வி திருமணம் அதாவது ஆணும் பெண்ணும் இணைந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட திருமணம் செய்யலாமா கூடாதா?

    • /ஆணும் பெண்ணும் இணைந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட திருமணம் செய்யலாமா கூடாதா?/

     எனது கருத்து:

     திருமணம் என்பது முட்டாள் தனமானது. ஒரு பெண்ணோ ஆணோ நமது வாழ்க்கை துணையாக இருக்கமுடியும் என்றால் சாகும் வரை சேர்ந்து வாழலாம் ஒருவேள தீர்க்கமுடியாத முரண் வந்தால் ( தீர்க்கமுடியாத முரண் முட்டாள் அல்லது நேர்மையில்லாதவர்களிடம் மட்டும் வரும்) பிரிந்துவிடலாம் அவ்வளவு தானே? இதற்கு ஒரு சடங்கு அவசியமற்றது. பெண்ணுக்கு தாளி தான் வேலி தாளியில்லாவிட்டால் வழி தவறி சென்றுவிடுவாள் என்று சொல்வது என்ன மனநிலையோ அதுதான் திருமணம் அவசியம் வேண்டும் என்று சொல்லும் மனநிலை. இப்பொழுது அவசியம் என்ன வென்றால் மற்ற பிற்போக்கு தனத்தில் மூழ்கியுள்ள மக்களுக்கு அறிவுணர்வு ஊட்டும் சாதி, மதம், சடங்கு, வரதட்சனை, தாளி etc., போன்ற பிற்போக்கு தனதிற்கு எதிரான புரட்சிக்கர திருமணம். நாளை சமூகம் பொதுவுடைமையாக மாறும்போது இதுவும் அவசியமற்றதாகிவிடும்.

     • ஒருவேள தீர்க்கமுடியாத முரண் வந்தால் பிரிந்துவிடலாம் அவ்வளவு தானே?

      அடப்பாவி,

      அவ்வளவுதான். இஸ்லாத்தில் இருவரின் ஒப்புதல்தான் முக்கியமானது இஸ்லாத்தில் திருமணத்திற்கு என்று சடங்குகள் இல்லை.

      //நாளை சமூகம் பொதுவுடைமையாக மாறும்போது இதுவும் அவசியமற்றதாகிவிடும்.//

      ஏன் இதையே பர்தாவிற்கும் நீங்கள் பொருத்திப்பார்க்கக் கூடாது? முதலாளித்துவம் நம்மை முழு மனிதனாக வளரவிடுவதில்லையே! பர்தா எனும்போது கண்ணைத் தவிர மற்றெல்லாவற்றையும் மூடியிருக்க வேண்டுமென்பதில்லை. முகத்தையும் மூட வைத்தது முல்லாக்களின் தீவிரம். இறுக்கமற்ற மேலங்கி போல அணியவேண்டும். ஸ்டாலின் தமது மகளுக்கு அறிவுரை சொல்லவில்லையா அதுபோல

      • திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும உள்ள வேறுபாடு என்னனு சொல்லுங்க?

     • உங்களுக்கு கொஞ்சம் கூட விபரம் இல்லை அடப்பாவி! பாஸ்.
      (திருமணம் என்பது முட்டாள் தனமானது) என்ன பாச்ஷ் இப்படி சொல்லிடீஇங்க.
      உங்கலுகு கல்யனெளம் அக்கலிய!

 20. அடப்பாவி …

  உங்கள் கேள்விகள் அடப்பாவி என்று தான் கேட்க வைகிறது …

  என்ன சும்மா எங்களுக்கு கவுன்ட்டர் கொடுக்கணும் பேச கூடாது … விபரம் தெரிந்தால் பேசணும் இல்ல .. மூடிகிட்டு வேடிக்கை பார்க்கணும் பாஸ் .. இப்படி காமெடி பண்ண கூடாது என்ன ..

  //எதற்கும் இஸ்லாத்துக்கு தான் சம்பந்தம் உண்டு? // ஹஹிஹி

  //மனிதன் முதலில் விலங்களோடு விலங்காகதான் இருந்தான் // ஆரம்பமே பிரச்சினை தான் உங்களுக்கு..

  //ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் நாகரீக உயர்ந்த நிலை (நாளை மாறலாம்)//
  என்ன ஒரு அறிவு கொழுந்து … முடியல

  //இஸ்லாத்தில் எப்பொழுதோ இறைவன் பெயரில் ஏற்பட்ட ஒருமுறையை ஆண்களுக்கு சாதகமாக இருப்பதால் இன்றும் கடைபிடிப்பது நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத நிலை. இஸ்லாம் சட்டம் எல்லாம் அந்த காலத்திற்கான ஏற்பட்ட சட்டம். இப்பொழுது நிலைமை வேறு.

  இறைவன் என்ற பிற்போக்குதனத்தை விட்டுவெளியே வரவேண்டும் இல்லையென்றால் நடைமுறைக்கும் மாயைக்கும் இடையில் இருந்து குழம்பித்தான் போக வேண்டும்.///

  சாரி பாஸ் … உங்களிடம் பேசுவதும சும்மா இருப்பதும் ஒன்றே ..

  ஒரு விசயத்தில் தெளிவில்லாமல் விமர்சிப்பது நல்ல கருத்து பரிமாற்றத்தை தராது ..

  ஓகே பாஸ் .. அடப்பாவி என்கிறீர்களா … ஹிஹி

 21. இக்கட்டுரையை படிப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் அல்லது இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் என்று கருதுவதால் “வாடகை மனைவி என்பது அரபுகளின் வழக்கம், இசுலாத்தில் இதற்கு அனுமதியில்லை” என்று இசுலாமியர்கள் அனைவரும் ஒன்றுபோல புழுகுகின்றனர். முகம்மது, தான் போருக்கு அழைத்துச் சென்றவர்கள் இவ்வாறு ஒருசில தினங்களுக்கு மட்டும் திருமணம் செய்துகொள்ள அனுமதித்துள்ள நபிமொழிகள் பல உள்ளன. அதனை தடை செய்யதாக சிலரும் அனுமதித்ததாக சிலரும் கூறுகின்றனர். இன்றும் ஷியாக்கள் அனுமதிக்கப்பட்டதே என்று கூறுகின்றனர். அரபுகளின் வழக்கம் என்பதால் ஒருமுறை மட்டுமே அனுமதித்தார் என்று வைத்துக்கொள்வோம். ( கடைசியாக மக்காவை கைப்பற்றும்போதும்கூட அனுமதித்துள்ளார். அதற்கு முத்ஆ திருமணம் என்று பெயர். ( விரிவாகப் படிக்க http://iraiyillaislam.blogspot.in/2012/12/blog-post_27.html ) ஒருமுறை மட்டும் அனுமதித்தது ஈனச்செயல் இல்லையா? அரபுகளிடம் விபச்சாரமும் இருந்ததுதான். அதனால் விபச்சாரத்தை ஒருமுறை அனுமதிப்பார்காளா? அரபுகளிடம் சிலை வணக்கமும் இருந்ததுதான். “உங்கள் மதம் உங்களுக்கு, எனது மதம் எனக்கு” என்று சொன்ன உத்தமர் அரபுகளை அவர்கள் விருப்பப்படி சிலை வணக்கம் செய்துகொள்ள அனுமதிக்கவில்லையே. முத்ஆ திரமணத்திற்கு மட்டும் ஏன் இந்த கரிசனம்?

 22. அடப்பாவி அவர்களே, இச்சுலாமியர்களிடம் போய் மனித வராலாற்றைப்பற்றி கூறுகிறீர்களே. இன்னும் நீங்கள் சரியாக இசுலாமியர்களை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

  • நந்தன்,

   உங்களை வைத்து கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் என எடை போடமுடியுமா?

 23. முத்ஆ திருமணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இதுபோன்ற காமவெறிபிடித்த ஒப்பந்த திருமணங்களை ஷரியத் சட்டப்படி தண்டிக்க முடியாது. ஒருவர் நான்கு பெண்களை ஒரே நேரத்தில் மனைவிகளாக வைத்துக்கொள்ள ஷரியத் அனுமதியளிக்கிறது. அதன்படி அவருக்கு தனது ஊரில் மூன்று மனைவிகள் இருந்தால் இந்த திருமணம் அல்லாவின் அனுமதியாகும். வயது எல்லையும் ஷரியத்திற்கு இல்லை. பால்யவிவாக சட்டமும் மயிருதான் அவர்களுக்கு. அதுபோல தலாக் சொல்லுவதற்கும் எந்தக் காலகெடுவும் இல்லை. காரணமும் தேவையில்லை.
  மைதீன் என்பவர் எழுதியுள்ளதை படியுங்கள். அது பினவருமாறு: {பின்னோட்ட எண்:15.1.1} விவாகரத்தை மௌனராகம் படத்தில் சொல்ற மாதரி தள்ளி போடுவதால் என்ன நடக்கும்???…பல வீடுகளில் ஸ்டவ் வெடிக்கும் , இல்லை என்றால் கணவன் மனைவியை நடத்தை கெட்டவள் என்று நீதிமன்றத்தில் கூறுவான் விரைவாக விவாகரத் கிடைப்பதற்கு.இல்லை என்றால் மனைவி நீதிமன்றத்தில் தன்னுடைய கணவன் ஆண்மை இல்லாதவன் என்று கூறுவாள் விரைவாக விவகாரத்து கிடைக்க . இதுதான் நடக்கும். இஸ்லாத்தின் படி திருமணம் இருமனம் இணையும் ஒரு உடன்படிக்கை.அவர்களுக்கு இடையே பிடிக்கவில்லை , ஒன்று சேர்ந்து வாழ முடியாது என்று ஆகுமானால் அவர்கள் பிரிந்து செல்லலாம். அவர்கள் 2 வருடம் , 3 வருடம் காத்திருக்க வேண்டியது இல்லை. நாம் திருமணம் முடிக்கும் போது நீதிமன்றத்தை அணுகி ஒப்புதல் பெறுவதில்லை. அதே மாதரி விவாகரத்தையும் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும் நீதி மன்ற ஒப்புதலுக்கு போக வேண்டியது இல்லை
  மைதீன் சொல்லியுள்ளபடிதான் ஷரியத்தை பாதுகாக்க அவர்கள் பசப்பித் திரிகின்றனர். ஆக திருமணம் செய்தவன் தனக்கு பிடிக்கவல்லை என்ற ஒன்றைவரியில் தலாக் சொல்லிவிடலாம். இதுதான் ஷரியத் சட்டத்தின் அவலம். பிறகெப்படி சட்டப்டி தண்டிப்பது?

 24. மைதீன், என்னில் எதைவைத்து கம்யூனிஸ்ட்களே இப்படித்தான் என்று எடைபோடுகிறீர்கள்? குறிப்பிட்டுச்சொல்லவும்

 25. துருக்கியில் கமால் பாட்ஷா என்பவர், பல சீர்திருத்தஙகளை புகுத்தி, மற்ற அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையாக மத சீர்திருத்தம் செய்ததாக படித்தநினைவு! முகமது அவர்களின் முக்கிய கருத்துக்களை வைத்துக்கொண்டு, பழக்க வழக்க மாற்றஙகளை ஏற்றுக்கே கொள்ளலாம்! முக்கியமாக, பிராமணர்களின் பூணுல் போல, தாடி, குல்லா, பெண்மணிகளுக்கு பர்தா மிகவும் அவசியமா?

 26. வினவில் வெளிவரும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை படிக்கும்போது வினவின் தரம்பற்றிய சந்தேகம் வருகிறது அல்லது சந்தேகம் ஊர்ஜிதமாகிறது
  ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதும்போது அந்த விடயம் பற்றி அறிந்திருத்தல் ஆராய்ந்திருத்தல் வேண்டும் இது ஒரு பாமரனுக்கும் தெரிந்த விடயம் ஊடகம் என்று சொல்றீங்க இது தெரியாம இருக்கிங்க முக்கியமான விடயங்களைப்பற்றிஎல்லாம் கட்டுரை எழுதுறீங்க அப்பா எல்லாத்திலயும் இப்படிதான் உட்டடிக்கிரீங்களா
  நீங்க நாத்திகருன்னு சொல்லுறீங்க உங்களிடம்மிருந்து இஸ்லாம் பற்றிய விமர்சனங்களையோ அல்லது சந்தேகங்களையோ நாங்க எத்ர்பாக்கிறோம் துவேசம் இல்லாமல் அறிவுபூர்வமா விமர்சிங்க பார்க்கலாம்
  கருத்துப்பகுதில வினவு என்ற பெயருடன் வரும் கருத்துக்களை பார்த்தால் நீங்கள் பேசும் விடயத்தில் உங்களுக்கு தெளிவோ தேடலோ இல்லை என்பது தெரிகிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க