“பாசிச பாஜக ஒழிக” – கொண்டாடும் சிறுமிகள்

சோஃபியாவுக்கு ஆதரவாகவும், "பாசிச பாஜக ஒழிக" என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் அசரத் பேகம், ஜென்னி காணொளி !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளின் கூட்டாளியான பாஜக-வின் தமிழிசை சவுந்தரராஜனின் முன்னர், விமானத்தில் வைத்தே “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழங்கியுள்ளார் சோஃபியா என்ற ஆராய்ச்சி மாணவி.

சோஃபியா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கிறாயா என நீதிபதி கேட்டதற்கு, மன்னிப்புக் கேட்க முடியாது என மறுத்திருக்கிறார் சோஃபியா.

சோஃபியாவின் உறுதிக்கு இந்தியா முழுவதும் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் பக்க பலமாக இருந்தனர். சோஃபியா விடுதலை செய்யப்பட்ட போது சுமார் ஆயிரம்பேர் அவரை வரவேற்கச் சென்றிருக்கின்றனர்.

இதோ இங்கு சோஃபியாவுக்கு ஆதரவாகவும், “பாசிச பாஜக ஒழிக” என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் ! திருச்சி சுமதி – அசுரன் தம்பதியினரின் மகள்கள் அசரத் பேகம் (6-ம் வகுப்பு) மற்றும் ஜென்னி (3-ம் வகுப்பு) ஆகியோர், சோஃபியாவை வாழ்த்தி முழக்கமிடும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு..

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க