கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்

யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி

காஞ்சிபுரம் ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வருகிது யமஹா நிறுவனத்தின் மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலை. தொழிலாளர்கள் மீதான யமஹா நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகளையும், தொழிலாளர்களை சங்கமாக ஒருங்கிணைத்த சங்க முன்னணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்ததையும் கண்டித்து யமஹா தொழிலாளர்கள் அங்கே போராடி வருகின்றனர்.

இரண்டு நாளுக்கு மேல் விடுமுறை எடுத்தால் “அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வா..” எனக் கூறுவது, தொழிலாளர்களின் பெற்றோர்களைக் கூப்பிட்டு மிரட்டுவது.. என பால்வாடி மாணவர்களை நடத்துவது போல தொழிலாளர்களை நடத்துகி்றது யமஹா நிர்வாகம்.

இதற்கு எதிராக தொழிற்சங்கம் அமைத்தால் தொழிற்சங்க நிர்வாகிகளை முன்னணியாளர்களை வீட்டிற்குச் சென்று மிரட்டுகிறது.

அப்பா இறந்துவிட்டார் என விடுமுறை கேட்டால், இறந்ததற்கு ஆதாரம் கேட்கிறார் ஒரு மனிதவளத்துறை அதிகாரி. இவர்கள் மனித உணர்வற்றவர்களாகவே இருக்கின்றனர். ஒரு தொழிலாளியை சக மனிதனாகக் கூட பார்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு எதிராக சங்கம் அமைத்த தொழிற்சங்க முன்னணியாளர்கள் பணிநீக்கம். இவற்றைக் கண்டித்து யமஹா நிரந்தரத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பு : இந்தப் பதிவில் இருந்த வீடியோக்கள் தொழிலாளிகள் கோரிக்கை காரணமாக தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க