தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !

இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் – தமிழ்நாடு வெதர்மேன் – அவர்கள், அவருடைய யூ-டியூப் தளத்தில் நேற்று (20.06.2019) ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட, சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவ்வப்போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னைவாசிகளுக்கு இது ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தமிழ்நாடு வெதர்மேனின் காணொளிப் பதிவைக் காண :

நன்றி : தமிழ்நாடு வெதர்மேன்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க