ரசின் வருமான வரி அடக்குமுறைகளால் தன்னுடைய தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறி தற்கொலை செய்துகொண்டார் காஃபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி. சித்தார்த்தா. அப்போது மோடி அரசின் வருமான வரி அடக்குமுறைகள் குறித்து சில தொழிலதிபர்கள் விமர்சித்திருந்தனர். அதில் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தர் ஷாவும் ஒருவர்.

Kiran Mazumdar-Shaw
பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தர் ஷா

தனது கருத்து குறித்து அரசு தரப்பிலிருந்து பேசிய அதிகாரி ஒருவர், “இதுபோன்ற கருத்துக்களை சொல்லாதீர்கள்” என சொன்னதாக கிரண் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் அந்த அதிகாரி, “மோகன்தாஸ் பை -கூட இப்படிப்பட்ட கருத்தை பேசியிருக்கக்கூடாது. இதை நான் ஒரு நண்பர் என்ற வகையில் சொல்கிறேன்” என கூறியதாகும் டெலிகிராப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கிரண் தெரிவித்துள்ளார்.

மோடியின் ‘நல்ல பணி’யை ஆதரித்து வந்த, முன்னாள் இன்போசிஸ் இயக்குனரான மோகன்தாஸ் பை, கிரணுக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான் என கூறியுள்ளார்.

இது அரசு தரப்பிலிருந்து வந்த மிரட்டலா அல்லது அறிவுரையா என்ற கேள்விக்கு கிரண், இரண்டும்தான் என பதிலளித்திருக்கிறார்.

படிக்க:
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
♦ கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!

“எனக்கு வருமான வரித்துறையுடன் எப்போதும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், கார்ப்பரேட் உலகம் ஆழ்ந்த மவுனத்தில் இருக்கிறது. யாரும் யாரையும் குழப்பவில்லை. நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வரிகளை செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏன் கார்ப்பரேட் உலகம் இவ்வளவு அமைதியாக உள்ளது?” என அவர் வினவியுள்ளார்.

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் நான் வெளிப்படையாக பேசியிருக்கிறேன்” என்கிற கிரண், கார்ப்பரேட் உலகம் பேச முன்வர வேண்டும் என்கிறார்.

Mohandas Pai
முன்னாள் இன்போசிஸ் இயக்குனரான மோகந்தாஸ் பை

மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், திரையுலக பிரபலங்கள் எப்படி மிரட்டலுக்கு ஆளாகிறார்களோ, அதுபோல கார்ப்பரேட் நிறுவனத்தினரும் மிரட்டலுக்கு ஆளாவதாக மோகன்தாஸ் பை கூறுகிறார்.

ஐ.மு.கூ. அரசு வர்த்தக பிரிவினருக்கு எதிராக செயல்பட்டது, ஆனால், தே.ஜ.கூ. அரசு அதை ஒழுங்குபடுத்துவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்து, மேலும் அந்தப் பிரிவினரை அழுத்துகிறது. சித்தார்த்தாவின் மரணம், வரி தீவிரவாதத்தின் அபாயத்தை முடுக்கிவிட்டிருக்கிறது என்கிறார் பை.

“நமது சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். வருமான வரி அதிகாரிகளுக்கு எவரை வேண்டுமானாலும் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது. இதுபோன்ற அதிகாரங்கள் துன்புறுத்தலில்தான் போய் முடியும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

வர்த்தக சூழலும் மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறும் பை, “தற்போது வர்த்தக சூழல் மிக மோசமாக உள்ளது. காரணம் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது. வாகனம் மற்றும் நுகர்வோர் துறைகளில் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் சந்தையில் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. நிதி நிறுவனங்கள் புதிய கடன்கள் தருவதை நிறுத்திவிட்டன. கடன்களை நிறுத்திவிட்டால், நுகர்வு அதிகரிக்காது.” எனவும் அவர் கூறுகிறார்.

மோடி அரசுக்கு நெருக்கமானவராக கருத்தப்பட்ட பை, மோடியும் அமைச்சர்களும் வர்த்தக துறையினருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்கிறார்! மோடி தன்னை போன்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

அதானி, அம்பானிகளின் பரந்துபட்ட தொழில் ராஜ்ஜியங்களை விரிவுபடுத்தவும் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டு தப்பியோடிய குஜராத் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்தான் மோடி.

அவரது வருமான வரித்துறையை கண்டித்து அன்னாரின் காதிலும் சூட்கேசிலும் ‘முறையாக’ விசயத்தைப் போட்டிருந்தால், கமுக்கமாக நிறைவேறியிருக்கும். அதைவிட்டு விசயத்தை இப்படி பொதுவெளியில் பேசினால், இப்படிப்பட்ட ‘கண்டிப்புகள்’ வரத்தானே செய்யும் ?. ‘அமாவாசையை’ ராஜராஜசோழன் எம்.எல்.ஏ.-வாக மாற்றியவர்களின் புலம்பலையும் நிலைமையையும் நாம் ‘அமைதிப்படை’ படத்திலேயே பார்த்திருக்கிறோம் அல்லவா ?


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க