privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் !

ஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் !

மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 10,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

-

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 10,000 -க்கும் மேற்பட்டோர் போலீசையும், அரசையும் எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதல் ஜனநாயக விரோதமானது” என தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலை எதிர்த்து வரலாற்று ஆய்வாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பேராசிரியருமான ரொமிலா தாப்பர், மொழியியல் வல்லுநர் நோம் சாம்ஸ்கி, ஜூடித் பட்லர், அகில் பில்கிராமி, ஷெல்டன் பொல்லாக்.., இன்னும் பலர், “உலகம் முழுவதுமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழகத்தில் என்ன நிலைமை என்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சட்ட நியதிக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் எங்கள் சக மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கட்டவீழ்த்துவிடும் மிருகத்தனமான தாக்குதலை எங்களால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பேணப்பட்டு வரும் சமத்துவம், மதசார்பற்ற குடியுரிமை ஆகிய அனைத்தையும் இந்த குடியுரிமை திருத்த சட்டம் மறுக்கிறது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போலீசார், போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசியும், விடுதி, நூலகம், மசூதியில் இருந்த மாணவர்களை தாக்கியுமுள்ளனர். போலீசார் நடத்திய இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொலைத்தொடர்பு, இணையத்தையும் தடை செய்துள்ளதால் பதட்டம் இன்னும் நீடிக்கிறது” என்கின்றனர்.

படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
♦ சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

“அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. நாங்கள் ஜாமியா, அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மக்களுடன் ஒன்றுப்படுகிறோம். காவல்துறையின் வன்முறை தாக்குதலிலும், அரசின் இந்த நடவடிக்கையிலும் எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.


தமிழாக்கம் : 
ஷர்மி
நன்றி : தி வயர்.