♠ ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின. அடோல்ப் ஹிட்லரின் தாத்தா பெயர் யாருக்கும் தெரியாது. அவரது பாட்டி ஒரு யூத செல்வந்தர் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தார். ஆகையினால் அடோல்ப் ஹிட்லரின் தந்தை ஆலோயிஸ் ஹிட்லர் உண்மையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்திருக்கலாம். அவரது தந்தை ஒரு யூதராக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஹிட்லரின் உறவினர்களின் DNA எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வட ஆப்பிரிக்க அரேபியர்கள், அல்லது மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட அஷ்கனாசி, செபெர்டிம் யூதர்களின் DNA உடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. ஆகவே உண்மையில் யூதக் கலப்பில் பிறந்த ஹிட்லர் தான் தீவிரமாக ஜெர்மானிய இனத் தூய்மைப் பேசி வந்தார். ஒருவேளை அவர் இதன் மூலம் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். உண்மையில் அந்தக் காலத்தில் யூத இனக் கலப்புக் கொண்ட ஜெர்மானியர்கள் ஏராளம் பேர் இருந்தனர்.

  • சீமான் குடும்பத்தில் மலையாளிக் கலப்பு இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஏற்கனவே சிலர் இது குறித்த ஆதாரங்களைத் தேடி உள்ளனர். உண்மையில் DNA சோதனை செய்து பார்த்தால், சீமானும் அவரது நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் தமிழர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்படும். ஆனால் அவர்கள் தான் இன்று மிகத் தீவிரமாக தமிழினத் தூய்மை குறித்துப் பேசி வருகின்றனர்.

படிக்க :
♦ ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
♦ சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

♠ ஹிட்லரின் கொள்கை ஜெர்மானிய இனத்தை மட்டும் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடவில்லை. ஜெர்மன் மொழியையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஜெர்மன் மொழியில் அன்றாடப் பாவனையில் இருந்த யூதர்களின் ஹீபுரு மொழிச் சொற்கள் அகற்றப்பட்டன. அத்துடன் நவீன ஜெர்மன் மொழியில் ஏராளமான பிரெஞ்சு சொற்கள் கலந்திருந்தன. அவற்றிற்குப் பதிலாகத் தூய ஜெர்மன் சொற்கள் கொண்டுவரப் பட்டன.

  • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப்படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாடப் பாவனையில் இருந்த சமஸ்கிருத, ஆங்கில சொற்களுக்குப் பதிலாகத் தூய தமிழ்ச் சொற்கள் கொண்டுவரப் பட்டன.

♠ ஹிட்லர் இளம் வயதில் எந்த விதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக வியன்னா சென்று கலைக் கல்லூரியில் சேர்ந்துப் படித்தார். சிறிது காலம் ஓவியங்கள் வரைந்து விற்று வருமானம் ஈட்டினார்.

  • சீமான் இளம் வயதில் எந்தவிதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. எதிர்காலத்தில் ஒரு சினிமா டைரக்டராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு சென்று சிறிது காலம் சினிமாத் துறையில் வேலை செய்து வந்தார். அதன் மூலம் வருமானம் ஈட்டினார்.

♠ ஹிட்லர் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை ஆதரித்தார். மரபுவழி கிறிஸ்தவ மதம் யூதர்களின் கதைகளை கூறும் பழைய ஏற்பாட்டை பைபிளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் “யூதக் கலப்பு” இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது.

  • சீமான் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். திராவிடர் கழகக் கூட்டங்களிலும் உரையாற்றினார். ஆனால், பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் இந்து மதத்தை ஆதரித்து முப்பாட்டன் முருகன் என்று கொண்டாடினார். “ஆரியக் கலப்பு” இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது.

♠ ஹிட்லர் அரசியலுக்கு வந்த காலத்தில் ஜெர்மானிய தேசியவாதிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக் குழுவை ஆதரித்த குற்றத்திற்காக மியூனிச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனைக் குறைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட “ஜெர்மன் தேசிய சோஷலிசத் தொழிலாளர் கட்சி” (NSDAP) என்ற அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார்.

  • சீமான் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழீழ தேசியவாதிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக் குழுவை ஆதரித்த குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட “நாம் தமிழர் கட்சி” (NTK) எனும் அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார்.

♠ ஹிட்லர் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப் பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் “எனது போராட்டம்” என்ற பெயரில் நூலாக வெளியானது. நாசிக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர்.

  • சீமான் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப் பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் “திருப்பி அடிப்பேன்” என்ற பெயரில் நூலாக வெளியானது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர்.

♠ நாசிக் கட்சியான NSDAP ஹிட்லர் உருவாக்கியது அல்ல. ஹிட்லர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அது போன்று பல ஜெர்மன் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப்படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த NSDAP கட்சியை ஹிட்லர் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் ஹிட்லரின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், NSDAP கட்சி பவாரியா மாநிலத்தில் பிரபலமானது.

  • நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கியது அல்ல. அது சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய இயக்கம். சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அது போன்ற பல தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப்படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் சீமானின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மாநிலத்தில் பிரபலமானது.

♠ நாசிக் கட்சி கொடியில் உள்ள ஸ்வஸ்திகா சின்னம் கூட ஹிட்லரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தூலே கேமைன்ஷாப் போன்ற சில அமைப்பினரால் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் ஸ்வஸ்திகா சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். நாசிக் கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது.

  • நாம் தமிழர் கட்சிக் கொடியில் உள்ள புலிச் சின்னம் சீமானின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இயங்கிய சில தமிழ்த் தேசிய இயக்கங்களாலும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. சீமான் புலிச் சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். புலிக் கொடி நூறாண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது.

♠ ஹிட்லர் வாழ்ந்த காலத்தில், “சியோன் ஞானிகளின் இரகசியக் காப்புவிதிகள்” என்ற நூல் பிரபலமாக இருந்தது. அது இலுமினாட்டிக் கதை போன்று புனைவுகளால் எழுதப்பட்டது. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, யூதர்கள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதை உண்மை என ஹிட்லர் நம்பினார். அதனால் யூதர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து ஜெர்மன் மக்களைப் பாதுகாக்கப்போவதாக சொல்லிக் கொண்டார்.

படிக்க :
♦ கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்
♦ நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

  • சீமான் வாழும் காலத்தில் இலுமினாட்டிகள் பற்றிய புனை கதைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, இலுமினாட்டிகள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதை உண்மை என சீமான் நம்பினார். அதனால் இலுமினாட்டிகள் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கப்போவதாக சொல்லிக் கொள்கிறார். அன்று ஹிட்லர் யூதர்கள் என்று நேரடியாக சொன்னதை, இன்று சீமான் இலுமினாட்டிகள் என்று மறைமுகமாக சொல்கிறார். ஆனால், இருவரும் ஒரே விடயத்தை பற்றித்தான் பேசுகின்றனர்.

கலையரசன்
நன்றி : கலையகம்

6 மறுமொழிகள்

    • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப்படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாடப் பாவனையில் இருந்த சமஸ்கிருத, ஆங்கில சொற்களுக்குப் பதிலாகத் தூய தமிழ்ச் சொற்கள் கொண்டுவரப் பட்டன.

      what is wrong in this???

  1. தமிழ்நாட்டில் அரசியல் கூட்டம் என்றாலே குவாட்டர், பிரியாணி தலைக்கு பணம் என திராவிட கலாச்சாரம் இருக்கையில் ஒரு தனி மனிதன் தன் கருத்துக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்ப்பது அதிசயம். தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் காட்டியும் கூட்டியும் கொடுத்து சுரண்டிய திராவிட குள்ள நரிகளும் எடுபிடிகளும் எவ்வளவு பதற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக வெளியிடப்படும் இம்மாதிரியான கட்டுரைகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழர்களின் ஆளும் உரிமை குறித்து தமிழ்நாட்டில் பேசினாலே இந்த வந்தேறி கூட்டத்துக்கு எரிகிறது. தமிழ்நாட்டில் மெயின்ஸ்ட்ரீமில் இருக்கும் கம்யூனிஸ்டுகளே கால் காசுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். 25 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு ஜால்ரா தட்டி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்த மகஇக, அகமுக, எகஉக முதலிய சில்லறைகளின் அலப்பறை வேறு. ஆர்எஸ்எஸ் அமைப்பும் திராவிடர் கழகம் மாதிரி சமூக சீர்திருத்த இயக்கம்தான். இந்த உண்மையை நம் தொண்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என திருகை மலர்ந்து எழுதியது யார்?

  2. இதிலுள்ள ஒப்பீடு நல்ல நகைச்சுவை உணர்வுடன் உள்ளது. எழுத்தாளர் கடும் உழைப்பை அளித்துள்ளார். இன்னும் சில பொருத்தங்களை எழுத்தாளர் விட்டுவிட்ட படியால், இதோ இங்கே:

    – இருவரும் ஹோமோசேபியன் என்ற மனித இனத்தில் ஆண் என்ற பாலினத்தைச் சார்ந்தவர்கள்
    – இருவருக்கும் மைக்கைப் பயன் படுத்தி பேசும் போது வலக்கை முஷ்டியை அடிக்கடி தூக்கிப் பிடிக்கிறார்கள்.
    – இருவருக்கும் தனித்துவமான மீசை உள்ளது.

    கருத்தியலில் ஒப்பீடு மட்டுமே உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும். இத்தகைய கண்டதையும் ஒப்பிடும் போது சீமான் எதிர்ப்பை வெறும் பிழைப்பிற்கு செய்பவரின் முயற்சியாகத் தோன்றுகிறது. அதனால் அறிவுடையோர் நமுட்டுச் சிரிப்புடன் கடந்து சென்று விடுவர்.

    • @ragu
      >அதனால் அறிவுடையோர் நமுட்டுச் சிரிப்புடன் கடந்து சென்று விடுவர்.

      இந்த பதிவைப்படித்துவிட்டு சிரிக்காமல், சிந்திப்பவர்கள் அறிவில்லாதவர்களோ?

  3. கருத்தியலா பேசச் சொல்லி இங்கே களமாடுகிற சீமான் ரசிகர்கள் அப்படி பேசுபவர்கள் வீட்டுப் பெண்களை நாம் டம்ளர் தும்பிகள் கெட்ட கெட்ட வார்த்தைகள் மூலம் பல தலைமுறைகளையும் தாண்டி பெருமைப் படுத்துவது ஹிட்லர் வகையறாக்களிடம் கூட காணப்படாத ஒன்று.
    குறைந்தபட்சம் வினவில் பெரியஸ்வாமி, ரகு, VPEL போன்றோர் தும்பிகள் போலல்லாமல் அரசியல், சமூக மற்றும் தத்துவார்த்த.🤣 ரீதியாக வாதிடுவது சீமான் பெசலாக தனிப்படை கட்டி வியூகம் அமைப்பது தெரியவருகிறது.
    இவற்றையெல்லாம் காணும்போது சீமான் தமிழ்நாட்டின் அதிபராவதை தடுக்க முடியாது என்றே மனம் பதைபதைக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க