ஆர்.பி. சவுத்ரி என்கிற ரத்தன்லால் பகத்ராம் சவுத்ரி (Ratanlal Bhagatram Choudary) என்கிற பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தனது சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 99 திரைப்படங்களை தயாரித்தவர். மே 5, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆர்.பி. சவுத்ரி உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது “எண்ணற்ற பேருக்கு வாழ்க்கையை கொடுத்த மகத்தான மனிதர். பல பேரை வாழ வைத்த தெய்வம் அவர்” என்று கூறி அஞ்சலி செலுத்தினார்.
வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு சேட்டுதான், தமிழ்நாட்டு நடிகர்களையும், தமிழ் திரைப்படங்களையும், சீமான் போன்ற இயக்குநர்களையும் வாழ வைக்க வேண்டியிருக்கிறது. அந்த விசுவாசம் சீமான் உடலில் ஓடுவதால்தான், வாழ வைத்த தெய்வம் என்று ஒரு வடநாட்டு சேட்டை, சீமான் நெஞ்சாரப் புகழ்கிறார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்ட போது, கந்துவட்டித் தொழில் செய்யும் மறவர் சாதியைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய சீமான், ஒரு தமிழன் தொழில் செய்வது உங்களுக்கு பிடிக்காது என்று வெகுண்டெழுந்து கேள்வி எழுப்பினார்.
“வடமாநில சேட்டுகளிடம் கைநீட்டி கடன் வாங்குவதை விட, நம் இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தொழில்முறை ரீதியாகப் பழகுவதில் என்ன தவறு?” என்பது அவரது முக்கிய வாதமாக இருந்தது.
சீமானுக்கு உழைக்கும் வர்க்கத்தின் மீதே காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. பெரும் பணக்கார முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் அடிமை சேவகம் செய்யும் சீமானுக்கு உழைக்கும் வர்க்கத்தை கண்டால், எட்டி காயாய் கசக்கத்தானே செய்யும்.
அதனால்தான், வட இந்தியாவில் இருந்து தொழில் செய்ய வந்த ஒரு சேட்டை, வாழ வைத்த தெய்வம் என்று புகழும் சீமான், வட மாநில தொழிலாளர்கள் மீது இன வெறியைக் கக்குகிறார்; உழைத்து வாழும் அருந்ததியின மக்களை தெலுங்கர்கள், வந்தேறிகள் என்று கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
சீமான் பேசக்கூடிய தமிழ் தேசியம் என்பது சாதி வெறியர்களுக்கும், கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கும் ஆதரவானது. உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதற்கு மேற்கூறிய சம்பவங்களே சாட்சியாக உள்ளது.
![]()
ராஜன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











