அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு என்கிற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வன்புணர்வு செய்த பார்ப்பன இந்துமத வெறியர்கள் அனைவரையும் விடுதலை செய்தபோது எதையும் கிள்ளி போடாத நீதிமன்றம் தற்போது மாட்டை கடத்தினால் ஆயுள் தண்டனை என்று கூறுகிறது.அப்படி அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.இப்படி எல்லாத் துறையும் முழுங்கிவிட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காவி கும்பல் தற்பொழுது நீதித்துறையும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரச்சனை என்பது என்ன விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அதற்கு எதிராக பேசமால்,பசு மாட்டை கட்டி பிடிக்க சொல்கிறார்கள். பசுமாட்டை மட்டும் கட்டி பிடிக்க சொல்லும் இவர்கள் எருமை மாட்டை கட்டிப்பிடிக்க சொல்வார்களா? எருமை மாடு மட்டும் என்ன கேவலமா? பசு மாட்டை எங்களுடைய பயன்பாட்டிற்கும் உணவுக்காகவும் பயன்படுத்துகிறோமே தவிர கடவுள் நம்பிகை,புனிதமாக கூறுகிற ஆரிய பார்ப்பணிய கலாச்சாரத்திற்காக நாங்கள் பின்பற்றுவது இல்லை. இந்துராஷ்டிரத்தை நிறுவ அதற்கேற்றார் போல் இன்னொரு மாற்று பண்பாட்டை நம் தலையில் கட்டுகிறார்கள்.சொல்லப்போனால் இடது பக்கம் இருந்த ஒன்றை வலது பக்கம் நோக்கி சுற்ற நினைக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றாக மாற்றி அவர்கள் நினைக்கும் இந்துராஷ்டிரம் அமைவதற்கு ஏதுவான எல்லா சித்தாந்தங்களையும் மாற்றி அமைப்பார்கள்.ஏற்கனவே கல்வியை காவிமயப்படுத்தி கொண்டிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தற்பொழுது நம்முடைய பண்பாட்டிலும் காவிமயத்தை பூசி வருகிறது. நம்முடைய பண்பாட்டிற்கு எதிரானது பார்ப்பனிய பண்பாடு. அப்படிப்பட்ட பிற்போக்கான பண்பாட்டை இங்கு விதைக்க துடிக்கிறார்கள் காவி கும்பல்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

 1. அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி. மிகச்சரியான அரசியல் நிலைப்பாடு. இதற்கான தரவுகளை மேலும் ஆழமாக்கி தனிநபர் பயங்கரவாதிகளைவிட பொருளாதார பயங்கரவாதிகள் நாட்டை நம் கண்ணெதெரிலேயே அழிப்பவர்கள் என்று நிறுவ வேண்டும்.
  மோடி அரசையே மொத்தமாக இந்த கோட்பாடு அடிப்படையில் பகுத்தாராய்ந்தால் வாசகர்களுக்கு புதிய அரசியல் பார்வை கிடைக்கும்.
  பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம், மேலும் கூராகும்.
  ஒளிரும்.

  தோழர்களின் கவனத்திற்கு,
  காயலாங்கடைக்குப்போன அரசியல் அநாதை நெடுமாறன்,தமிழ்,ஈழ போராட்ங்களை காட்டிக்கொடுக்கும் ரா உளவாளி. ஈழப்போராட்டம் சரியான வழியில் சிங்கள மக்களோடு இணைந்து பயணிப்பதை கீழறத்துப்போட ஆர்எஸ்எஸ் அண்ணாமலை,முருகன் தமிழன் போர்வையில் ஈழத்தில் களம் இறங்கிவிட்டார்கள்.அவர்களின் முள்பொறுக்கிதான் இந்த அரசியல் கழிசடை. நெடுமாறன் போன்ற போலிதமிழ் தேசீய அரசியல் தரகர்களை உடனே தோலுரிக்க வேண்டும்.
  வைக்கோ, நந்திக்கடல் அழிவுக்கு இந்தியாவில் இருந்து சுருக்குவலை வீசியவர்.இந்திய தேசீய வலையத்திற்குள் ஈழத்தை இழுக்க, இந்திய உதவி என்று புலித்தலைமையை நம்மவைத்து கழுத்தறுத்து போட்டவர்.
  நமது,ஈழத்து அரசியல் பார்வை உலகம் முழுக்க இருக்கும் ஈழப்போராளிகளால் தொடர்ந்து,கவனம் பெற்றது தனி வரலாறு.
  80 களின் ஆரம்பத்திலிருந்து இந்த அரசியல் இழை அறுபடாமல் தொடர்கிறது.இப்போது நாம் உடனே முன்கை எடுக்க வேண்டும். ஈழத்தில் மக்கள் கதறுகிறார்கள்.
  https://minnambalam.com/political-news/feel-our-pain-eelam-tamils-on-nedumaran-interview/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க