திருப்பரங்குன்றம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிப்போம்! | பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்திருப்பதை வைத்துத் தொடர்ந்து பல்வேறு பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு மதக் கலவரத்தை தூண்டிவிட்டு நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறி இந்து முன்னணி உள்ளிட்ட சங்கிக் கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் சங்கிக் கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவே கொக்கரித்து வருகிறது.

சமூக நல்லிணக்கத்தை குலைத்து மதக் கலவரத்தை உருவாக்க நினைக்கும் சங்கப் பரிவார கும்பலை எதிர்த்து மதுரையில் உள்ள ஜனநாயக அமைப்பினர், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வமைப்பினர் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் – நடவடிக்கைகள்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க