2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | வெளியீடு

பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20

2026 சட்டமன்றத் தேர்தல்:
சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க
வேண்டும் ஜனநாயகம்!

மார்ச் 7, 2026 அன்று மதுரையில் எமது அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவில், கீழ்க்காணும் ஐம்பெரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும்; சாதி, மத மறுப்பு இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைக் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும்; தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக மதுரை மண்டலத்தை அறிவிக்க வேண்டும்; இயற்கை சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற கார்ப்பரேட் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் ஆகியவைதான் இந்த ஐம்பெரும் முழக்கங்களாகும்.

இந்த ஐம்பெரும் முழக்கங்களும் பெருவிழாவில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த ஐம்பெரும் தீர்மானங்களை நடைமுறையில் நிறைவேற்றவதற்கு தொடர்ந்து போராட உறுதியேற்கப்பட்டது.

அதன் முதல் நடவடிக்கையாக, இந்த ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் “2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும்.

வெளியீடு :

2026 சட்டமன்றத் தேர்தல்:
சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க
வேண்டும் ஜனநாயகம்!

முதல் பதிப்பு : ஏப்ரல் 2026

வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.),
தமிழ்நாடு – புதுச்சேரி.

தொடர்புக்கு :

99623 66321 – 97916 53200
94448 36642 – 73974 04242

நன்கொடை : ₹ 20

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க