நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.
சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை
"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?
பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
ஐந்து மாநிலத் தேர்தல்: பா.ஜ.க. கும்பலின் இந்துத்துவ பிரச்சாரம்!
தெலுங்கானா மாநிலத்தின் அசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள குமுராம் பீமில் ஒரு பேரணியில் உரையாற்றும் போது யோகி ஆதித்யநாத் “முஸ்லீம் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. அது எந்த வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.
தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!
சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு லட்சம் பின் தொடர்பவர்கள் அல்லது ஐந்து இலட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இன்ஃப்ளூசியர்களுக்கு பி.ஆர்.எஸ் கட்சி இரண்டு முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துத் தனது தேர்தல் பிரச்சாரகர்களாகக் களமிறக்கிவிட்டுள்ளது.
தெலங்கானா: முஸ்லிம்கள் காங்கிரஸை ஆதரிப்பது ஏன்?
மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தங்கள் நலனுக்கு எதிரானது என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர். மீண்டும் தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். வெற்றி பெற்றால், அந்த ஆட்சி தங்களுக்கு எதிராக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து தான் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் காங்கிரஸிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?
சந்திரசேகர் ஆட்சியின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை அறுவடை செய்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
சத்தீஸ்கர்: விவசாய மானியங்களை அள்ளிவீசிய காங்கிரஸ் – பா.ஜ.க.!
2018-இல் இம்மாநிலத்தில் தனக்கு (பா.ஜ.க.வுக்கு) ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து கொள்ள விவசாயிகளை கவரும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்துத்துவ கட்சியைப் போல செயல்படும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி!
கோயில் மற்றும் அர்ச்சகர் பிரிவு என்ற ஒன்றும் இருக்கிறது. கோயில் நிர்வாகங்கள் அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதற்காக இந்தப் பிரிவு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிவருவதைத் தான் மத்தியப்பிரதேச காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.
எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!
பா.ஜ.க.வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இதுபற்றியெல்லாம் விவாதித்து ஒருமித்த கொள்கை முடிவுக்கு வந்தாக வேண்டும். பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்துகொண்டு, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதற்கு பெயர் பாசிச எதிர்ப்பு அல்ல.
இந்தியா கூட்டணி கட்சிகளே, உங்கள் நிலைப்பாடுகளை சொல்லுங்கள்?
“பா.ஜ.க-விற்கு மாற்று நாங்கள் தான்” என சொல்லி மக்களின் பா.ஜ.க. மற்றும் பாசிச எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும் கட்சிகள் ஒவ்வொன்றும் தனிதனியாகவும் கூட்டணியாகவும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தங்களது நிலைப்பாடுகளை சொல்லியாக வேண்டும்.
தெலங்கானா: பாசிச மோடி அரசின் ஏமாற்று வாக்குறுதிகள்
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன் 13-வது அட்டவணையின் கீழ், இந்திய அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் தலா ஒரு பழங்குடி பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். ஆந்திராவில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும், தெலங்கானாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை.
ராமரும் பசுவும் எங்களுடையது! சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ்
“கோதான் நியாய யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் பசு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசே விலைக்கு வாங்கிக் கொள்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்
இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமாக கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது காங்கிரஸ். தேர்தல்களில் பிரச்சாரமும் செய்தது.