பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ
மற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.
ஆகமம் அவாளுக்குத்தான் – இந்துக்களுக்கில்லை ! வீடியோ
நாங்கள் அனைவரும் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தோம். மற்ற அனைத்து வேலைகளுக்கும் தகுதி தான் முக்கியம் என்கிறார்கள். மற்ற வேலைகளில் தகுதி தேவை ஆனால் அர்ச்சகருக்கு மட்டும் சாதிதான் தேவையா ?
உச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக !
உச்சநீதிமன்ற நெருக்கடி, மக்கள் அதிகாரத்தின் அரங்கக்கூட்டம். நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5:00 மணி. இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை. வினவு தளத்திலும் இக்கூட்டம் நேரலையாக ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள் !
சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் !
சாதகமான தீர்ப்பைப் பெற வேண்டுமென்றால், “பிரசாதம் தேவை. நாம் பிரசாதம் கொடுக்க வேண்டும். கொடுத்தே தீர வேண்டும்” என லஞ்ச விவகாரத்தில் சதி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பேசியுள்ளனர். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.
ஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ஜேப்பியார் பொறியியல் கல்லூரித் தொழிலாளர் நிரந்தரப் பணியிடத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக காண்டிராக்ட் முறைக்குத் தள்ளிய உயர்நீதிமன்றம்! விசாரணை இழுத்தடிப்பது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு !
பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ
ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.
சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !
“நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும்.”
உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !
இனி யாரிடமும் முறையிட்டுப் பயனில்லை. மோடி அரசின் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளிலிருந்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு.
சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !
தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லிவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அமல்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு.
ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !
“நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்”
செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !
மாதம் ரூ. 2 இலட்சம் ஊதியம், குடியிருப்பு, கார், போன், உதவியாளர் என சகலமும் குடும்பத்துடன் அனுபவிக்கும் மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதியரசர்கள், செவிலியர்கள் போராட்டம் பொதுமக்களைப் பாதிப்பதாகவும் ரூ.7,700/-சம்பளம் கட்டுப்படியானால் வேலையை செய் அல்லது வேலைவிட்டுப்போ என தடை விதித்தனர்.
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்!, மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!, நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!, ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!, பணிந்தால் பதவி! மறுத்தால் மரணம்!! , அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!....
ஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது !
“அரசியல் சட்டம் மனித உரிமைகளை வழங்குவதாகக் கூறினாலும் உண்மை அப்படி இல்லை. அது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். முதலாளி தொழிலாளி சமூக உறவுகளின் துணை விளைவு தான் மனித உரிமை. எனவே உண்மையான தீர்வு என்பது சமுதாய மாற்றத்தில் தான் இருக்கிறது.”
இன்று PRPC – 14வது ஆண்டுவிழா ! அனைவரும் வருக !
மொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்கள் எங்கு செல்வது? மாற்று என்ன?