உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
தனியார்மயம் - தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின் மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது.
முதலாளியை அடித்தால் இந்திய அரசுக்கு வலிக்கும்!
'மாலத்தீவு இப்படி நடந்து கொண்டால் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும், எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மாலத்தீவுக்கு வர மாட்டார்கள்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் மிரட்டியிருக்கிறார்.
ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?
ஐ-கேட் நிறுவனத்தின் "சதித்திட்டம் அம்பலம்" என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்!
"உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள்" என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம்.
இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!
இந்துத்துவ தேசியமோ, தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது.
மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!
ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
என்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை!
தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.
பிரான்சுக்கு மிட்டல் போட்ட பட்டை நாமம்!
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் பாதுகாவலர்களாக உள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை எதைக் காட்டுகிறது?
வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !
வடு!
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
முருகப்பாவுக்கு ‘நேரம்’ சரியில்லை !
முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ள ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி.
ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!
ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.
மண்ணிற் சிறந்த மலர்கள்!
“ஆ! ஊன்னா... சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க...! ஒழுங்கா அவனவன் பேசாம போவல! ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க”
கூவம் நதிக்கரையோரம்…..!
பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.