மீண்டும் அழைக்கிறது காசா!
இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்!
குண்டு பிளந்த கட்டடங்கள்
எலும்புக் குவியல்கள்
இரத்தக் கவிச்சி வீசும்
மண்ணைத் தவிர..
ஆயினும்..
அவர்கள் வருகிறார்கள்
பாட்டுப்பாடி!
மேளம் தட்டி!
இறுதியாக நாம் மீண்டும் வந்தோம்
(Finally we return)
இதுவே இன்றைய காசாவின்
நம்பிக்கை குரல்!
விடுதலையின் ராகம் புரியாதவர்கள்
இடிபாடுகளின் சத்தங்களையே
இன்னும் கேட்கிறார்கள்!
உயிருக்குப் பயந்தவர்களே
பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்!
பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்!
தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது
தாய் நிலம்!
இடிபாடுகளுக்கிடையில்
இன்னும் மிச்சமிருக்கிறது...
இதோ வருகிறார்கள்!
இதோ வருகிறார்கள்
பாசிச இருளைக்கிழிக்கும்
நம்பிக்கை ஒளியேந்தி
வருகிறார்கள்
எழுபதாயிரம் டன்கள்
வெடிமருந்தைச்
சுமந்து
தாய்
தந்தை
மனைவி
கணவன்
குழந்தை
என மொத்த குடும்பங்களையும்
இழந்து வருகிறார்கள்
தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள்
தகர்க்கப்பட்ட
தங்கள் வீடுகளைக்காண
படித்த பள்ளிகளைக்காண
ஓடி விளையாடிய
திடல்களைக்காண
ஓடோடி வருகிறார்கள்
இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன
இருந்த போதும்
தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள்
காணாமல் போன பிள்ளை
தாயின் திசையறிந்து
வருவது போல
துள்ளிக்குதித்து வருகிறார்கள்
அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல...
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தனக்கு தனிவகை சலுகைகள் வழங்கப்படுகின்றன என ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சமயம் அதை எப்போதும் ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்கித் தள்ளி வந்திருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணா.
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.
பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது,
இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு
அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.
தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள்.
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.
உனக்கான அரசியல் பேசு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின்
புதிய பாடல்
https://youtu.be/pa0wufw7XBI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உனக்கான அரசியல் பேசு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின்
புதிய பாடல் | டீசர்
https://youtu.be/45Id9gZEPBU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram






















