Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 155

கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே!
கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இம்மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்கள், தன்னெழுச்சியாக திரண்ட மாணவர் – இளைஞர்கள் மற்றும் ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் தீவிரமடைந்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது அமைந்தது.

இப்பள்ளிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம், அதைத் தொடர்ந்த விவாதங்கள், அரசின் அடக்குமுறை ஆகியவை நம்மிடம் பல கேள்விகளை முன்வைக்கிறது. மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்போதும் போலீசும் அரசு நிர்வாகமும் உரிய நாளில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம் என்று சொல்பர்களின் நோக்கம் என்ன? நீதி கேட்டுப் போராடியவர்களை இந்த அரசு கொடூரமான ஒடுக்குவது ஏன்? என்பது போன்ற இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி ஆகியோரின் மகள் ஸ்ரீமதி. சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி மாடியில் இருந்து குதித்துவிட்டார் என்று கூறப்பட்டது. பள்ளி நிர்வாகத்தால் ஸ்ரீமதி உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நேரமும் மருத்துவமனையில் சொல்லப்பட்ட நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது; ஸ்ரீமதி உடலில் கீறல்கள், இரத்த கரைகள் இருந்ததையும் கண்ட பெற்றோர், இந்த இறப்பு தற்கொலையால் நடந்தது அல்ல; பள்ளியும் சம்பந்தப்பட்டிருக்கிறது என உறுதியாய் நம்பினர்.

இதுகுறித்து பள்ளி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், கோபமுற்ற உறவினர்களும் ஊர் மக்களும் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளியை முற்றுகையிட்டனர். சிறிதளவில் தொடங்கிய இப்போராட்டம் சமூக வலைதளம் வாயிலாகப் பரவி தீவிரமடைந்தது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம், தற்கொலைக்கு முன்பு ஸ்ரீமதியால் எழுதப்பட்டது என்று கடிதம் ஒன்றை வெளியிட்டது. கடிதத்தில் இருப்பது ஸ்ரீமதியின் கையெழுத்தே இல்லை என ஸ்ரீமதி தாய் செல்வி மறுத்தார்.


படிக்க : கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்


நான்கு நாட்களாக அரசு, போலீசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டு ஆத்திரமடைந்து தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினார்; இப்போராட்டம் வன்முறையானது. பள்ளி வளாகத்தில் உள்ள வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கண்ணாடி சன்னல்கள் நொறுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்ததன் பின்னணி என்ன?

முன் திட்டமிடல் இல்லாமல் குறுகிய காலத்திற்குள் இப்படிப்பட்டதொரு போராட்டம் சாத்தியமா? சாத்தியம். பிரச்சினையின் தீவிரம், போராட்டம் நடக்கும் களம் ஆகியவை இத்தகைய சூழலில் பங்காற்றுகிறது.

கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஓமலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரம் என்பது தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதியாகும். தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 8,000 பள்ளிகள் இச்சுற்றுவட்டாரத்தில் உள்ளன.

இங்குள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் அதிகம்; கட்டண கொள்ளையால் பெற்றோர்களும் அலைக்கழிக்கப் படுவார்கள்; மாணவர் தற்கொலைகள் அதிகம் நடக்கும் பகுதி. தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்ற பகுதி என்று விளக்குகிறார் நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்.

சான்றாக, 2007-ல் ஓமலூர் கிறித்துவ தனியார் பள்ளி ஒன்றில் ஸ்ரீமதி மரணத்தைப் போலவே மாணவி ஒருவர் உயிரிழந்தார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 2011-ல் ஊத்தங்கரையில் உள்ள பள்ளி ஒன்றில் நிர்வாக அலட்சியத்தால் மாணவர் ஒருவர் விபத்தில் இறந்தார். இங்கும் பெரியளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்ரீமதி இறப்பு நடந்த இதே கள்ளக்குறிச்சியில், 6 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லாத எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரியின் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பும் இக்கல்லூரியில் அடிப்படை வசதிக்காகவும், கட்டண கொள்கைக்கு எதிராகவும் பல போராட்டங்கள் நடந்துள்ளன.

தற்போது ஸ்ரீமதி மரணமடைந்த இந்த பள்ளியும் இதற்கு விலக்கல்ல. சில கால இடைவெளியில் இப்பள்ளியிலும் பல மாணவர்கள் இறந்துள்ளனர். பள்ளி வாகனம் மோதி ஒரு மாணவி உயிரழந்துள்ளார். கட்டிட சுவர், கூரை இடிந்து விழுந்து பல மாணவர்கள் தங்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.

ஆக, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தின் அராஜகத்தையும் அட்டூழியத்தையும், மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகளையும், கட்டண கொள்ளையையும் நேரில் உணர்ந்தவர்கள்; தனியார் பள்ளிகளால் தங்களது பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் இழந்தவர்கள்; நிர்வாகத்தை எதிர்த்தப் போராட்ட அனுபவமும் அவர்களுக்கு உண்டு. இவைதான் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி தொடங்கப்பட்டப் போராட்டத்தில், குறுகிய காலத்துக்குள் ஆயிரக்காணோரை திரண்டெழச் செய்தது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் திட்டமிட்ட வன்முறையா?

இங்கும் அதே கேள்விதான்; வேறு தொனியில் கேட்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்களால் மட்டும் இத்தகைய போராட்டத்தை நடத்தியிருக்க முடியுமா? இவர்களுக்கு பின்னே நிச்சயமாக அமைப்புகள் உள்ளன என்கிறார்கள்.

“மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருப்பதை மூடிமறைக்கதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. இப்படிப்பட்டதொரு கலவரத்தை நடத்தியுள்ளது” என முற்போக்காளர்கள் பலரும் கூறினர். “அமைதியான வழியில் நடந்துகொண்டிருந்தப் போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டார்கள்” என போலீசும் கூறியது.

பள்ளி முன்பு கூடியவர்களுக்கு கலவரம் செய்வது, கொள்ளையடிப்பது மட்டுமே நோக்கமென்றால், போராட்டத்தன்று வீடியோ எடுத்திருக்க மாட்டார்கள்; அப்பள்ளி முதல்வர் அறையில் ஆணுறைகள் கிடந்ததை அம்பலப்படுத்தியிருக்கமாட்டார்கள். சரி, தடயங்களை அழிக்க வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.காரர்கள் என்றால், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் வந்து அழித்திருக்கலாமே. பட்டப்பகலில் ஒட்டுமொத்த பள்ளியையே சூறையாடிதான் தடயங்களை இல்லாமல் செய்திருக்கவேண்டுமா என்ன?

மேலும் இப்பள்ளியை வைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வித கலவரங்களையும் தூண்டமுடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஏன் இவ்வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது. 2021 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டமும் இதுவே. இப்பட்டதொரு போராட்டத்தினை அரசு கொஞ்சம்கூட எதிர்ப்பார்த்திருக்காது.

அரசின் பாராமுகம் காரணமாகவே போராட்டம் தீவிரமடைந்தது என்பது விவாதப் பொருளானால் தங்களது சமூக நீதி ஆட்சி விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் என்பதால் தி.மு.க ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள் “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. திட்டமிட்டு நடந்திய கலவரம்” என்பதை பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

கடந்தாண்டு பெண் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய ஃபாக்ஸ்கான் போராட்டத்தையும் தி.மு.க விரோத சக்திகள் பரப்பிய வதந்தி என்று இதே திராவிட மாடல் ஆதரவாளர்கள் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள் மீதான ஒடுக்குமுறை ஏன்?

சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து தனியார் பள்ளிகளை காலவரையறையின்றி மூடப்போவதாக அறிவித்தார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார். எங்கே தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவினால், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிலைமை மற்ற பள்ளிகளுக்கு வருமோ என்று அஞ்சியதன் வெளிப்பாடாக அது இருந்தது.


படிக்க : உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ


தனியார் பள்ளியின் மீது புகார் வந்திருந்தும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஏனென்றால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலும் தனியார் பள்ளிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்க்கும் ‘தனியார் பள்ளி முதலாளிகளாக’ உள்ளனர் என்பதே தி.மு.க.வின் மௌனத்திற்கு காரணம். இவர்களின் வர்க்க பாசம்தான் தனியார் பள்ளிகளின் அரணாக இருந்து சேவையாற்றி வருகிறது. ஆக, திராவிட அரசும் தனியார்மயம் தாராளமயத்திற்கு எதிரானதல்ல என்பது நிரூபனமாகிறது.

நீதித்துறை, போலீசுத்துறை உள்ளிட்டவை கள்ளக்குறிச்சியில் நடந்தது திட்டமிட்ட கலவரம் என்கிறது. கலவரத்திற்கு பின்னணியில் இருப்பவர்களை சிறப்புப் படை அமைத்து ஒடுக்கவேண்டும் என்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியே இனி யாரும் யோசிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு எந்திரம் செயல்படுகிறது.

போராட்டகளத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் எண்களை வைத்தும் வீடியோவில் தெரியும் நபர்களின் அடையாளங்களை வைத்தும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பலர் ‘பாத்ரூம்மில் வழுக்கி விழுந்துவிட்டார்கள்’’ என்று கூசாமல் பொய் சொல்கிறது போலீசு. மெரினா, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட மாணவர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசு படையை குவித்துவைத்துள்ளது. வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களை வலைவீசி தேடி வருகிறது.

தனியார் பள்ளிக்கு அச்சுறுத்தும் இப்படிப்பட்டதொரு போராட்டம் இனி நடைபெறக் கூடாது என்பதே இத்தகைய அவதூறுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணம். ஆனால், எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பது அடங்காது. தனியார் பள்ளிகள் மாணவர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவு எழுதப்படும் வரை, ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் தொடரும்…


ரவி

திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

ழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன.

மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். இதுவரை மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாயுடுவும் முர்முவை ஆதரித்திருக்கிறார். இவர்கள் தவிர அசாம் மாநிலம் உட்பட சில மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர்.

பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல் போனால், பழங்குடிகள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கிகளை இழந்துவிடுவோம் என்று அஞ்சிய எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் முர்முவை ஆதரித்தார்கள், மற்றொரு பிரிவினர் முர்முவை எதிர்க்கவில்லை.

எனவே முர்மு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றார். குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியினப் பெண், இளம் வயது குடியரசுத்தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆகிய பெருமைகள் வழிய பதவியேற்றுக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யாரை நிறுத்தும் என்ற ஊகங்கள் முன்னரே கிளம்பி இருந்தன. வெங்கையா நாயுடுவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தென்மாநிலங்களில் தன்னுடைய பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கும் இந்துத்துவ பாசிச இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வும் எங்கே அடித்தால் சரியாக விழுமோ அதை நோக்கியே இருப்பது போல இப்போதும் இருந்திருக்கிறது.

***

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம், உபர்பேடா என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முர்மு, இக்கிராமத்தில் இருந்து கல்லூரி சென்ற முதல் பட்டதாரி ஆவார். ஆசிரியர்; 1997-ம் ஆண்டு கவுன்சிலர்; 2000, 2004-ம் ஆண்டுகளில் இருமுறை சட்டமன்ற உறுப்பினர்; பிஜூ ஜனதா தளம் – பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் எல்லாவற்றையும் தாண்டி பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு தலைவராகவும் இருந்தவர் திரௌபதி முர்மு.

இவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்த (2015 – 2021) காலத்தில், பழங்குடி இன மக்களின் மீது மத்திய – மாநில அரசுகள் நடத்திய அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். குறிப்பாக, 2018-ல் பலாமு புலிகள் சரணாலயம் அமைந்திருக்கும் பகுதியில் புலிகள் மற்றும் விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு எட்டு பழங்குடி கிராமங்களை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியபோது பழங்குடியினப் பெண்ணான முர்மு ஏழை பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்தாரா என்ன?


படிக்க : இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !


பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு 10 லட்ச ரூபாய் அல்லது 5 ஏக்கர் நிலம் என்று பரிந்துரைத்தாலும், ஜார்க்கண்ட் அரசிடம் நிலம் இல்லாததால் 10 லட்ச ரூபாயை வீசியெறிவோம் எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடு என்று உத்தரவிட்ட மாநில அரசின் ஆளுநராக இருந்தவர் அவர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

2019-ல் பழங்குடிகளின் நிலத்திலிருந்து விரட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்தில் பழங்குடிகளின் நில உரிமையை வலியுறுத்தும் பிரிவுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நடுகல்லாகச் செதுக்கிவைத்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர் ஜார்கண்ட் பழங்குடிகள். மாபெரும் பதல்காடி இயக்கம் என்றழைக்கப்படும் இப்போராட்டத்தை ஒடுக்க 10,000 பழங்குடியினர் மீது தேசத்துரோக வழக்குகளை மாநில அரசு பதிவு செய்தபோதும் அம்மாநில ஆளுநராக தொடர்ந்தவர் முர்மு.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் நிலம் கனிம வளமிக்கது. அந்த கனிமவளங்களை அதானி போன்ற கார்ப்பரேட்டுக்கு வாரிக்கொடுத்து விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய – மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடி மக்களிடமிருந்து நில உரிமையைப் பறிக்க முயன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதலே வீரஞ்செறிந்துப் போராடி வருபவர்கள் பழங்குடிகள். அம்மக்களின் கோரிக்கைக்காக தோள் கொடுத்துப் போராடிவரும் மாவோயிசப் போராளிகளை ஒடுக்குவது என்ற பெயரில் கொல்லப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

நில உரிமையிலும் சுயமரியாதையிலுமே பழங்குடி மக்களின் கவுரவம் இருக்கிறது. முர்மு குடியரசுத் தலைவரானதில் இல்லை. சொல்லப்போனால் தங்களின் நில உரிமையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பணியை – கார்ப்பரேட் அடியாள் வேலையைத் திறம்பட மேற்கொண்ட முர்முவுக்கு கிடைத்ததே இப்பதவி.

***

இளையராஜாவின் இசையை ரசிக்காதவர் யாருமுண்டோ எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரபலமானவர் அவர். கடந்த மாதம் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப்பேசினார். அதற்கெதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற முடியாது என்று உறுதியாக இருந்தார். இளையராஜாவின் பிற்போக்குத்தனமான அரசியலைப் புறந்தள்ளி அவரது இசைக்கு அடிமைகளாக இருந்தவர்கள் கூட அவருக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இளையராஜா தலித் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று சிலர் தங்கள் அடையாள அரசியலின் இழிநிலையை வெளிப்படுத்திக்கொண்டனர். இளையராஜாவுக்கு பம்பர் பிரைஸ் (Bumper Prize) கிடைக்கும் என எதிர்பார்த்தபடியே இம்மாதம் மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. அளித்துள்ளது.

இளையராஜாவின் இசை அறிவுக்கு அடிப்படையே இந்த நாட்டின் உழைக்கும் மக்கள்தான். அவரது அண்ணன் பாவலர் தன் தம்பிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் பல கிராமங்களுக்குச் சென்று பெற்ற அறிவு அது. ஆனால் அந்த இசை அறிவுக்கு தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் கடவுள் தனக்கு அளித்த வரம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கும் ‘ஞானி’ அவர்.

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனீய தீண்டாமைக்கெதிராகவும் ஆதிக்க சாதியினரின் வன்முறைக்கு எதிராகவும் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாதவர். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தைத் திணித்த போதும், கொடியங்குளத்தில் வீடுகள் சூறையாடப்பட்ட போதும், மாஞ்சோலையில் தாமிரபரணியில் தள்ளிவிடப்பட்டு ஆற்றிலேயே அடித்துக் கொல்லப்பட்டபோதும் என்ன செய்தார் இளையராஜா? ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக ஏன் பேச மறுத்தார் என்பதில்தான் இளையராஜாவின் பார்ப்பனீய அடிமைத்தனம் இருக்கிறது.


படிக்க : ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !


ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற அரச வன்முறைக்கு எதிராக வாய்திறக்காமல் அமைதியாக இருந்த இசைஞானிக்குத்தான் கோடிக்கணக்கானோர் ரசிகர்கள் என்பது தமிழகத்தின் இழிநிலை.

தன்னை தலித் என்று யாராவது கூறினால் கடுமையாக எதிர்க்கும் இளையராஜா, திருவண்ணாமலை கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கு சில இலட்சங்களைக் கொடுத்தார். ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகத்துக்கூட வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்து முடித்தார். மனமுருகத் திருவாசகத்திற்கு இசையமைத்த ராஜாவுக்கு, திருவாசகத்தைப் பாட அடிபட்டு, உதைபட்டுப் போராடி இறந்த போன ஆறுமுகசாமியைப் பற்றி தெரியாமலிருந்திருக்குமா என்ன?

எல்லா நிகழ்வுகளுக்கு ஒருவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா? கருத்துச் சொல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளியா? என்று யாரும் எதிர் கேள்வி கேட்கலாம். ஆனால் நமது கேள்வி என்னவென்றால், எதற்கும் வாய்திறக்காத இளையராஜாவுக்கு மோடியோடு அம்பேத்கரை இணைத்துப் பேசமட்டும் எப்படி வாய்வருகிறது என்பதுதான். மேலும் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா இசுலாமியராக மாறியபோது, அது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தாரே, அதுவே அவர் யாருக்காக சிந்தித்தார் என்பதைக் கூறும்.

***

தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களில் எவர் ஒருவர் அம்மக்களுக்கு எதிராகவே காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறாரோ, எந்த அளவு அம்மக்களுக்கு துரோகம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு பதவிகளையும் வெகுமானங்களையும் பா.ஜ.க. அள்ளி வீசும். அப்படித்தான் அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி, எல்.முருகன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் வெகுமதிகளையும் பதவிகளையும் பெற்றிருக்கின்றனர்.

குஜராத் கலவரத்துக்குப் பின்னர் உலக அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவை சரிக்கட்ட அப்துல்கலாம் பா.ஜ.க.வால் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த, பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை எதிர்த்த கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக கலாம் நிறுத்தப்பட்டார். குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட முசுலீம் மக்களின் படுகொலைகளை மூடி மறைத்து இசுலாமியரின் ரத்தக்கவுச்சியை நுகர்ந்தபடிதான் குடியரசுத் தலைவர் ஆகமுடியும் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் கலாம்.

அவர் இறந்த பின்னர் “ஒரு கையில் கீதையும் மறுகையில் ஏவுகணையும் வைத்திருந்தவர்” என்று ஆர்.எஸ்.எஸ். ஊடகத்தால் பாராட்டப்பட்டவர். தன்னுடைய பிழைப்பிற்காக எதையும் எப்போதும் செய்யத்துணிந்தவராக இருந்ததால்தான் அவரால் குடியரசுத்தலைவராக முடிந்தது. அந்த துரோக வரிசையில் தற்போது திரௌபதி முர்முவும் இளையராஜாவும்!


மருது

கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக முனைவர் ப.ரமேஷ் பணியாற்றி வருகிறார். அவர் மீது புகார் எழுந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

தன்மீது தவறு ஏதும் இல்லையென்று நீதிமன்றத்தின் மூலம் தடை ஆணை பெற்று கோவையிலுள்ள தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் Deputation ஆக பணியாற்றி வருகிறார். வருகை பதிவேடு, சம்பளம் போன்ற தேவைக்காக இதுவரை பணிபுரிந்த அதே கல்லூரிக்கு சென்று வருகிறார்.

25.07.2022 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்கள், கோவை அரசு கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் முனைவர் ப. ரமேஷ் மீது எழுந்துள்ள புகாரை “விசாகா வழக்கு” அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோரப்பட்டது.

இந்நிலையில், 11.08.2022 அன்று விசாரணைக்காக கோவை அரசு கல்லூரிக்கு முனைவர் ரமேஷ் வந்துள்ளார். அப்போது அவர் மீது புகார் கொடுத்த முனைவர் ராஜ ராஜேஸ்வரி மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் வீரமணி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட பேராசியர்கள் முனைவர் ரமேஷ் என்பவருக்கு எதிராக கோசமிட்டனர்.


படிக்க : கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !


அதே நேரத்தில் முனைவர் ரமேஷ்-க்கு ஆதரவாக அவருடைய நெறியாளுகையில் கீழ் பயிலும் பி.எச்.டி இரு மாணவிகள் மற்றும் தமிழ்த்துறையை சேர்ந்த இரு ஆய்வு மாணவிகளும் போராடினர். முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லை, இக்கல்லூரியில் சாதிய பாகுபாடு பார்க்கின்றனர், ஊழல் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்கு அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வெளியேற்றியுள்ளனர் என்று கூறினர்.

அடுத்த நாள் காலை இந்த 4 மாணவிகள் மற்றும் ஒரு மாணவியின் தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராடினர். கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வதாக போலிசு மிரட்டிய பின்னரும் “கலெக்டர் எங்களை வந்து சந்திக்க வேண்டும்” என உறுதியாக நின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து “நேர்மையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்” என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

***

அருணா என்ற மாணவி 01.07.2019 முதல் முனைவர் அ. ராஜ ராஜேஷ்வரி நெறியாளுகையின் கீழ் “கொங்கு வட்டார புதினங்களில் வெளிப்பட்டுள்ள சாதிய ஆணாதிக்க அதிகாரங்கள்” என்ற தலைப்பில் முழுநேர ஆய்வு படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார்.

மாணவி மிகவும் பிற்ப்படுத்தபட்ட  சமூகத்தை (MBC) சேர்ந்தவர், சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். மாணவியின் ஆய்வுக் கட்டுரையை படித்த போது கணவரின் சாதியை சுட்டிக்காட்டி “அந்த சாதி இழிந்த சாதி என்பதால் நீ இம்மாதிரி எழுதுகிறாய்” என்றும், “உன் ஆய்வு தவறானது நான் நெறியாளராக இருக்க மாட்டேன் வேறு நெறியாளரை மாற்றிக்கொள்” என்று கூறிவிட்டு “நீ முனைவர் பட்டத்தை எப்படி முடிக்கிறாய் என்று பார்க்கிறேன்” என்றும் கவுண்டர் சாதிய வன்மத்துடன் பேசியுள்ளார்.

அருணா என்ற மாணவியின் ஆய்வு படிப்பை ரத்து செய்ய கடிதம் கொடுத்து தனது சாதிய வன்மத்தை கக்கியுள்ளார். ஆய்வு படிப்பை கற்பிக்கும் ஆசிரியருக்கே மாணவி கட்டுரை எழுதிக் கொடுத்து அதனை ஆசிரியரின் பெயரில் பதிவிட்டு கொண்ட கேலிக்கூத்தும் அரங்கேறியுள்ளது.

இம்மாணவி எம்.பில் செய்த பேராசிரியரான ப.ரமேஷ் என்பவரிடம் பி.எச்.டி ஆய்வு படிப்பை தொடர கல்லூரி ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் 04.04.2022 பின் பேராசிரியர் ரமேஷ் என்பவரிடம் ஆய்வு படிப்பை தொடர்ந்துள்ளார்.

முனைவர் ராஜ ராஜேஷ்வரி 08.04.2022 தேதியிட்டு உயர்கல்விச் செயலர் அவர்களுக்கு மாணவியை முனைவர் ரமேஷுடன் தொடர்புபடுத்தி அவரை கல்லூரியை விட்டு துறத்த திட்டமிட்டு புகார் கடிதத்தை அனுப்பினார். அதன் பெயரில் கல்வி இணை இயக்குநர் உலகி என்பவர் தலைமையில் உறுதி செய்யப்படாத குற்றத்தை நிரூபிக்க வேண்டி விசாரணையை நடத்தி ரமேஷ் என்பவரை பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மாணவியை விசாரிக்கும் போது, “தங்களுக்கும் முனைவர் ரமேஷ் அவர்களுக்கும் என்ன தொடர்பு? உறவினரா? நண்பரா?” என்று கேட்டுள்ளனர். இதே போல் முனைவர் ரமேஷிடமும் கேட்டுள்ளனர். விசாரணையில் 18 பேராசிரியர்கள் கலந்துக்கொண்டதில் 11 பேராசிரியர்கள்(பெண் பேராசிரியர்கள் உட்பட) முனைவர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லையென எழுதிக் கொடுத்ததாக கூறியுள்ளனர். அவரை எப்படியாவது கல்லூரியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வன்மத்துடன் விசாரணை நடைபெற்றுள்ளது உறுதியாகிறது.

***

முனைவர் ரமேஷ் என்பவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அவர் கல்லூரியின் துணைத் தேர்வு கட்டுப்பாடு அலுவலராகவும், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், யூஜிசி கல்வி உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான நோடல் அலுவலராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும், ஒற்றை பெண் குழந்தை கல்வி உதவித்தொகை (Single girl child scholarship), யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் கல்வி தொகை பெற மாணவர்களுக்கு தன்னார்வ வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளார். பல மாணவர்கள் அவரை சந்தித்து உரையாடுவதும், ஆலோசனை பெறுவதும் இவர் மாணவர் நலனில் அக்கரைக்கொண்டவராக செயல்பட்டு வந்தது தெரிகிறது.

இக்கல்லூரியில் இவரும் இவரது நண்பரும் மாணவர்களிடம் முற்போக்கான கருத்துக்களை கூறுவது மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜனநாயகமாக நடந்து கொள்ளும் பண்பு போன்றவற்றால் இந்த கல்லூரி நிர்வாக கட்டமைப்பு எதிர்ப்பதை இந்நிகழ்வின் மூலம் உணர முடியும்.

கடந்த வருடம் 31.10.2021-ல் பொறுப்பேற்று கல்லூரி முதல்வராக இருக்கும் முனைவர் கலைச்செல்வி அவர்களிடம் சென்று ராஜ ராஜேஷ்வரி  “நானும் நீங்களும் ஒரே சமூகத்தை(கவுண்டர்) சேர்ந்தவர், இங்கு எஸ்.சி சாதியினர் ஆதிக்கம் அதிகமாக உள்ளது, இவர்களை இதற்கு முன்னால் இருந்த முதல்வர் சித்ரா வளர்த்து சென்றுள்ளார் நீங்கள் அவ்வாறு செய்ய கூடாது” என்று தனது கவுண்டர் சாதியத் திமிரை வெளிப்படுத்தி நிர்வாகத்தில் உள்ள sc சமூகத்தினரை ஒழித்து கட்ட கல்லூரி முதல்வரிடம் கோரியுள்ளார்.

முனைவர் கலைச்செல்வி ஆதிக்க சாதியாக இருந்தாலும் முற்போக்கு கருத்து பேசும் குடும்பப் பின்புலம் இருப்பதால் ராஜேஷ்வரி கூறியதை உயர்கல்வி துறை செயலருக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார். இதனை முனைவர் ரமேஷ் RTI மூலம் பெற்றிருக்கிறார்.

தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி (பட்டியலின சமூகம்) வகுப்பிற்கு முறையாக செல்லாமலும் கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டியும் வந்துள்ளார். “பாடம் எடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் பூங்கொடி, ஜோதி, சிவகாமி ஆகியோர்களை வேலையை விட்டு துறத்துங்கள்” என்று மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடிதம் எழுதி cm cell-ற்கு அனுப்பியுள்ளனர். முனைவர் பூங்கொடி வகுப்பில் பேசும்போது “cm cell address-யே தெரியாது, கலெக்டர் எப்படி உட்கார்ந்திருப்பார் என்று கூட தெரியாது நீ எல்லாம் பேசுவியா?” என்றும் “UG படிக்கும் போது எவ்வளவு மார்க் எடுத்தாலும் PG சேர விடமாட்டேன்” என்றும் அதிகார வெறிபிடித்த திமிரோடு மாணவர்களிடம் பேசியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 20-ம் தேதி ரகுநாதன் என்ற பேராசிரியர் மீது மாணவிகளால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. அவருக்கெதிராக மாணவர்களின் போராட்டத்திற்கு பின் கைது செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர்மீது பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை என்று மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்விசயம் தெரிந்ததும், பேராசிரியர் ரகுநாதன் துறையை சேர்ந்த முன்னாள் மாணவிகள் “மீண்டும் ரகுநாதன் கல்லூரிக்கு வந்தால் இதுவும் ஒரு கள்ளக்குறிச்சியாக மாறும்” என எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்.

கல்லூரியில் முன்னாள் முதல்வர் சித்ரா என்பவர் பணிபுரிந்த காலத்தில் தாவரவியல் துறைக்கு யூஜிசி அளித்த ஆராய்ச்சிக்கான 41 லட்சம் ரூபாய் நிதி சரியாக கையாளப்படவில்லை. இவர் பதவி வகிக்கும் போது முதல்வர் அலுவலக 3 நாற்காலிகளை தலா ரூ.33 ஆயிரம் என ரூ.99 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக் கணக்கு காட்டியுள்ளனர். அதனால் முன்னாள் முதல்வர் சித்ரா பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தற்போது முதல்வராக பணிபுரியும் கலைச்செல்வி என்பவர் அந்த முறைகேட்டை அம்பலப்படுத்தினார்.

முனைவர் ராஜேஷ்வரி, துறைத்தலைவர் முனைவர் பூங்கொடி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் வீரமணி  ஒன்று சேர்ந்து  திட்டமிட்டு இந்த மாணவியின் ஆய்வு படிப்பைப் பயன்படுத்தி முனைவர் ரமேஷ் என்பவரை பழி வாங்கப்பட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு கல்லூரிக் கல்வி நிறுவனத்தில் ஊறி கிடக்கும் சாதிய வன்மமும் பதவிக்கான அதிகாரப் போட்டியும் காரணமாக அமைகின்றன.

முனைவர் ரமேஷ் என்பவரை பழித் தீர்த்துக்கொள்ள மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரை பயன்படுத்தியுள்ளனர். உலகி மற்றும் ராஜ ராஜேஷ்வரி உறவினர்கள், வீரமணி என்பவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதை ரமேஷ் கண்டித்துள்ளார். இவர்கள் அனைவரும்  இணைந்து திட்டமிட்டு முனைவர் ரமேஷ் மீது சாதிய விசத்தை கக்கியதற்கு பின்னால் ஒளிந்திருப்பது பார்ப்பனிய கண்ணோட்டமே.

***

கவுண்டர் சாதியை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரியும், பட்டியிலின சாதியிலே உயர்ந்த பிரிவு என காட்டிக்கொள்ளும் துறைத்தலைவர் பூங்கொடியும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த வீரமணி ஆகியோரும் சேர்ந்துக்கொண்டு முனைவர் ரமேஷ் அவர்களை கல்லூரியை விட்டே வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்களின் அதிகாரப் போட்டி மனபான்மையும், தாழ்த்தப்பட்டவனை எப்படி முன்னேற விட முடியும்? என்ற சாதிய வன்ம விசத்தை கக்குவதற்கு இக்கட்டமைப்பு உறுதுனையாக இருந்துள்ளது.

கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் முனைவர் ரமேஷ் அவர்களுக்கு நற்பெயர் இருக்கிறது. மண்டல கல்வி இணை இயக்குநர் உலகி என்பவரின் அதிகாரத் திமிரும், கவுண்டர் சாதிய வன்மமும் வைத்து பாலியல் புகார் எனும் பொய் புகாரை தயார் செய்து பழிவாங்க அனுமதித்துள்ளது இந்த கல்லூரி நிர்வாகக் கட்டமைப்பு.

இவர் மீது எந்தவொரு மாணவியும் பாலியல் புகார் கொடுக்கவில்லை, முனைவர் ராஜ ராஜேஷ்வரி பாலியல் புகார் என்ற சொல்லை புகாரில் பயன்படுத்தவே இல்லை. ஆனால் முனைவர் ரமேஷ் உடன் பணிபுரிந்த மாநில ஆசிரியர் கழக தலைவர் வீரமணி என்பவர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாக போராட்டத்தில் பேட்டியளிக்கிறார். அதனை ஊடகங்கள் பாலியல் குற்றவாளியாக முனைவர் ரமேஷ் என்பவரை சித்தரித்துள்ளது.


படிக்க : கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


இக்கல்லூரியில் நிகழும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு எதிராகவும், பாலியல் புகாருக்கு எதிராகவும் கடந்த 10 மாதத்தில் பல்வேறு மாணவர் போராட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் முனைவர் ரமேஷ் என்பவருக்கு ஆதரவாக மாணவர்கள் போராடும் மனநிலையில் இருந்துள்ளனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்தி வந்துள்ளார். அருணா என்ற மாணவியை வைத்து இந்த பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் கடந்த 3 மாதமாக மீண்டும் அவரை கல்லூரிக்கு கொண்டுவர cm sell-ற்கு கடிதம் அனுப்புவது, கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்புவது, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பல்வேறு வகையில் 4 மாணவிகளும் போராடி வருகின்றனர்.

இந்த மாணவிகளை துறை ரீதியாக மிரட்டி வருவதும், மாணவர்களை மிரட்டி போராடும் மாணவிகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு எதிராகவும் திசை திருப்புவது அரங்கேறி வருகிறது.

நேர்மையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு துணை நிற்பதும், களத்தில் போராடும் மாணவிகளுடன் போராடுவதும் மாணவர்களாகிய நமது அனைவரின் கடமையாகும்.

இது போன்ற அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.

வினவு செய்தியாளர்,
கோவை.

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்

  • இந்திய உழைக்கும் மக்களை கொடியை ஏற்றச்சொல்லி நிர்பந்தம் படுத்து மோடி அரசு.
  • அதானி – அம்பானி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு.
  • இந்தியாவின் இயற்கை வளங்களை – மனித வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்கும் மோடி அரசு
  • கொரோனா காலங்களில் பசி பட்டினியில் வேலையின்றி சித்திரவதைக்குள்ளானார்கள் உழைக்கும் மக்கள் – ஆனால் அதானி அம்பானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது.
  • கார்ப்பரேட் சுதந்திரத்தை(போலி சுதந்திரத்தை) தேசிய கொடி என்ற மூவர்ண்ண திரைபோட்டு மறைக்கும் மோடி அரசு!

கேலிச்சித்திரம்:
தோழர் ரூபாவதி,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

***

ஆகஸ்ட் 15 : யாருக்கு சுதந்திரம்?

நன்றி – புதிய தொழிலாளி

சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது மிகப் பரவலாகப் பேசப்பட்டது ‘குஜராத் மாடல்’ என்ற சொல்லாடல். குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த மோடி அம்மாநிலத்தை ஐரோப்பாவுக்கு நிகராக வளர்த்துள்ளதாக ஒரு உலகமகா மோசடி வைரலாக பரப்பிவிடப்பட்டது. உண்மையில் மோடி தலைமையிலான குஜராத் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடு. ஆர்.எஸ்.எஸ். அமைக்க விரும்பிய இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை. 2002 குஜராத் கலவரத்திற்கு பின்புதான் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளால் மோடி தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார்.

அந்த வகையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி ‘குஜராத் மாடலை’ தேசியமயமாக்கியிருக்கிறது. எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து காலூன்றியுள்ளதோ, அங்கெல்லாம் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். வேலைசெய்து பல்வேறு மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கின்றது. எட்டாண்டு காலத்தில் சுமார் 10 ஆயிரம் மதக் கலவரங்களை நடத்தியிருக்கின்றன சங்க பரிவார கும்பல்கள்.

இசுலாமியர்கள் நிலை :

பெரும்பான்மை இந்துக்களுக்கும் இந்த நாட்டிற்கும் முசுலீம்களால்தான் ஆபத்து என்ற கருத்தை கிட்டத்தட்ட நூறாண்டுகளாகப் பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டமைப்பதற்காகவே காவி கும்பல் பல வழிகளில் வேலைசெய்கிறது. மாட்டுக் கறி, லவ் ஜிகாத், மதமாற்றம், நாட்டுக்கு எதிரான சதி என பல காரணங்களை வைத்துள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பசுப்பாதுகாப்புப் படை, லவ் ஜிகாத் எதிர்ப்புப் படை என பல வன்முறை அமைப்புகளையும் கட்டிவைத்துள்ளது.

2016 தில்லியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அக்லக் என்ற முதியவர் அடித்தே கொல்லப்பட்டார். 2017-ல் மாட்டைக் கடத்துவதாகக் கூறி ஹரியானாவைச் சேர்ந்த பால் வியாபாரி பெஹ்லுகான் இந்துமதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் 2019-ம் ஆண்டின் அறிக்கைப்படி, அதுவரை குறைந்தபட்சம் 44 பேர் பசுப்பாதுகாப்பு குண்டர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு காஷ்மீரின் கத்துவா பகுதியில் எட்டு வயதேயான முசுலீம் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி முசுலீம் என்பதாலும் வல்லுறவு குற்றவாளி இந்து என்ற ஒரே காரணத்திற்காகவும் குற்றவாளியைப் பாதுகாப்பதற்காக தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போனது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


முசுலீம்களை நான்காந்தர குடிமக்களாக்க விழையும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இசுலாமிய மக்கள் நடத்திய ஷாகின்பாக் போராட்டங்களையும், ஜே.என்.யு, ஜாமியா பல்கலைக்கழகங்களின் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கியது பாசிச பா.ஜ.க. டெல்லியில் காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் போல உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, கர்நாடகா என தன்னுடைய இந்துராஷ்டிர சோதனைச் சாலைகளை விரிவுபடுத்திக் கொண்டே உள்ளது ஆர்.எஸ்.எஸ்.

ராம ஜென்ம பூமி இயக்கத்தின்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கலவரம் வெடித்த நிலையில், பெரிய அளவில் சலனங்கள் இல்லாத மாநிலங்களில் திரிபுரா முக்கியமானது. ஆனால் காவி கும்பல் ஆட்சி அமைத்த பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மசூதிகளை அடித்து நொறுக்கியும் முசுலீம்களின் வீடுகளுக்குத் தீவைத்து கொளுத்தியும் வெறியாட்டங்களை நிகழ்த்தியுள்ளது காவி கும்பல். ஹிஜாப் அணியத் தடை, ஹலால் ஜிகாத் என கர்நாடகத்தில் அடுத்தடுத்து இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களை இதுவரை அம்மாநிலம் கண்டதே இல்லை எனலாம்.

தங்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக இசுலாமியர்கள் திரண்டெழுந்து போராடினால் புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடித்துத்தள்ளுகிறது காவி அரசு. ராமநவமி கலவரங்களின் போதும், நபிகளை அவதூறாகப் பேசிய நுபுர் ஷர்மாவிற்கு எதிராகப் போராடிய போதும் புல்டோசரைக் கொண்டுவந்து போராட்டங்களை ஒடுக்கினார்கள் காவிகள். சட்டவிரோதமான இந்த இடிப்பை நீதிமன்றங்கள் ஆதரித்து நிற்கின்றன. இஸ்ரேலில் யூத இனவெறி அரசு பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குவதற்கு ஒப்பாக, இந்தியாவில் புல்டோசர் இடிப்பு திகழ்கிறது.

நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ணைய லால் இரண்டு இசுலாமியர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியைத் தூண்ட முயற்சித்த பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹரியானா மகாபஞ்சாயத்தில் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் “தேவைப்பட்டால் குஜராத்தை மீண்டும் நடத்துவோம்” “இந்துராஷ்டிரத்தை அடைவதற்கு உயிரையும் கொடுப்போம்” என்று கூச்சலிட்டுள்ளார்கள் காவிகள்.

கடைசியில் இசுலாமியர்களான அந்த இருவரும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் என்று அம்பலமானது. கண்ணைய லால் படுகொலையை வைத்து மிகப்பெரிய மதக்கலவரத்தை நடத்த முயன்ற காவிகளின் சதித்திட்டம் இதன் மூலம் வெளிவந்திருக்கிறது.

பிப்ரவரி 26 அன்று சர்வதேச அளவில் நடைபெற்ற இணையவழியிலான உச்சிமாநாட்டில், இந்தியா இனப்படுகொலைக்கான பாதையில் பயணிப்பதாக ஐநா மன்றத்தில் பொறுப்பு வகிக்கக்கூடியவர்களும் மற்றும் பலதுறை அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்துடன் ஒப்பிடத்தக்கது என்று இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன்னதாகவே, உத்தரகாண்டில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட்டில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று காவி பாசிஸ்டுகள் வெளிப்படையாக அறைகூவினார்கள்.

தலித்துகள் நிலை :

2016 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டம், மோட்டா சமதியாலா கிராமத்தில் செத்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக தலித் குடும்பத்தினர் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு உன்னவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தலித் இளம்பெண்ணின் உடலை பெற்றோரிடம்கூட ஒப்படைக்காமல் நள்ளிரவிலேயே சட்டவிரோதமாக தீ வைத்து எரித்தது உ.பி. போலீசு.

மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக, குஜராத்தில் கட்டி வைத்து அடிக்கப்படும் தலித் குடும்பத்தினர்

தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், வன்கொடுமைகள், கொலைகள் ஆகியவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் அம்மாநிலங்களின் பிற்போக்குத் தன்மை. இரண்டாவது முக்கியக் காரணம் அதிகாரத்திலிருக்கும் காவிகள், ஆதிக்க சாதி வெறியர்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறார்கள் என்பதுதான். தேசிய குற்றவியல் ஆணவக் காப்பகப் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களில் 25.3 சதவிகிதம் யோகி தலைமையிலான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கிறது.

இடைச்சாதிகளில் உள்ள சாதி வெறியர்கள் இயல்பாக இந்துமதவெறியர்களின் கூட்டாளியாகவும் உள்ளார்கள். தமிழகத்தில் பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில் வன்னியர் சாதிவெறியர்களோடு சேர்ந்துகொண்டு தலித் மக்களின் வீடுகளைச் சூறையாடியது இந்து முன்னணியும்தான்.


படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !


கிறித்தவர்கள் மீதான தாக்குதல் :

கிறித்தவ தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்துக்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறும் காவிகள், நாடுமுழுக்க கிறித்தவர்கள் மீது பரவலான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு கிறித்துமஸ் தினத்தில் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடாகா என பல மாநிலங்களிலும் தேவாலயங்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவ பொம்மையைக் கொளுத்தினார்கள். கிறித்தவ பள்ளிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், தென் மாவட்டங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிறித்துவப் பள்ளிகள் மீது மதமாற்றக் குற்றஞ்சாட்டி, இந்து முன்னணி பல முறை கலாட்டாக்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்துராஷ்டிர கொடுங்கோல் அரசு :

1976 கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத்தில் 9.3 சதவிகிதமாக இருந்த முசுலீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாசிஸ்டுகள் தேசிய அரசியலில் செல்வாக்கடைந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு 5 சதவிகிதமாகச் சுருங்கியது.

பெரும்பான்மை ஓட்டுக் கட்சிகள் இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். நாம் இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஆளாவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாக இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்சிகளும்கூட அவர்களுக்கு பொதுத்தொகுதிகளை ஒதுக்குவதில்லை. முசுலீம்கள் அடர்த்தியாக வாழக்கூடிய தொகுதிகளில் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்துமதவெறி அரசியல் மைய நீரோட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.

காமன் காஸ் (Common Cause) என்ற என்.ஜி.ஓ.வின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கை, போலீசுத் துறையில் இருக்கக்கூடிய 50 சதவிகிதம் பேர் முசுலீம்களை தன் இயல்பிலேயே வெறுப்பவர்களாக, குற்றவாளிகளாகக் கருதுபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறது. மேலும் அவர்கள் முசுலீம்களுக்கு எதிரான வழக்குகளை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கான நிதியும் அத்திட்டங்களின் கீழான பயனாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளன. இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் முசுலீம் மக்களுக்கு எதிராகவும் காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் உருக்கி வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவைப் பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட மென்மையான இந்துத்துவம் பேச வேண்டியிருக்கிறது.

பசுப்பாதுகாப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடைச்சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், பொதுச்சொத்து சேத தடுப்புச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை, ஹிஜாபுக்கு தடைவிதித்த நீதிமன்ற உத்தரவு என இசுலாமியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவே பாசிச நடவடிக்கைகள் ஏவப்படுகின்றன.

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன. “நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு இந்துராஷ்டிரக் கொடுங்கோலாட்சிக்கு உகந்த வகையில் மாற்றப்பட்டுவிட்டது, இனி இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வில்லை” என்பதுதான் இவைகளின் பொருளாகும்.


சந்திரசேகர்

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism!

dear working people!

We are living under the clutches of an evil regime. Does this regime allow the working people to lead a peaceful life? Our life is being ruined because of the rise in prices of essential commodities, increase in taxes, unemployment and loss of livelihood due to destructive pro-corporate policies!

Domestic LPG which was sold at Rs. 410 in 2014 has now almost touched the Rs. 1100 mark. Petrol which was sold at Rs. 66 had crossed Rs. 100. The people can’t even afford basic goods like rice, pulses, milk and curd. The prices are galloping because of GST. Though the prices continue to rise, the salaries remain the same. More than 20 crore people sleep hungry every night as they can’t afford to cook.

Within one year of the implementation of GST, one-fifth of the MSME businesses fell into the abyss. The retail businesses are facing a disaster because of the government’s decision to allow 100% FDI (Foreign Direct Investment) and the encouragement of e-commerce penetration.

The backbone of the farmers had been fractured because of the hike in prices of agricultural inputs, inadequate procurement prices, acquisition of the farming lands to hand over to the corporates in the name of development and the planned cut in agricultural subsidies; and the farm laws were being amended in order to corporatize the farming sector.

The Modi government, which introduced servitude contractual schemes such as NEEM and FTE, amended labour laws with the sole aim of snatching away the rights of the labourers.

The rate of unemployment is at a 40-year high. According to a statistic, 43.7% of the job seekers are youngsters between the age group of 20 to 24 years. During the first seven years of the Modi regime, student suicides rose by 55% and the suicides of the unemployed rose by 58%. The suicides of the farmers and the daily wagers rose by 139.37%. This fascist regime is pushing us towards suicide.

The RSS-BJP is hiding its anti-national activities and is provoking religious fanaticism by projecting Muslims as the enemies of the country and religious conversion as the biggest threat.

The saffron thugs are orchestrating riots by targeting the Muslim populated areas and are openly calling out for genocide. In the BJP-ruling states Muslims are prohibited from wearing hijab, Azan is banned and Muslim vendors are being prohibited from conducting businesses. If they fight against these injustices, their houses are being bulldozed. Muslims are being turned into refugees in their own country. Various laws such as Citizenship Amendment Act, love jihad law, Cow Protection Act, Prevention of Damage to Public Property Act have been brought with the sole purpose of suppressing the minorities.

Those who oppose the RSS-BJP are annihilated lawfully. 16 members, including advocates, professors and social activists, were arrested by the police using a doctored letter and a cooked up story of ‘conspiracy to kill Modi’; the arrest of Teesta Setalvad, who accused Modi in the Gujarat pogrom; the arrest of the Alt News founder Zubair, who exposed the fake news propaganda of the RSS-BJP; it was made as a rule that sedition and UAPA will pounce upon anyone who speak against Modi.

The true benefactors of the RSS-BJP regime are the corporates; that too in particular Adani and Ambani. In the last 10 years, the value of assets of Adani rose by 1830% and Ambani by 400%. Modi’s foreign trips had won many international contracts such as coal mines in Australia, power project in Sri Lanka to Adani-Ambani. Adani, who was in the 313rd position in the Hurun global rich list, had moved to the 12 position due to Modi’s efforts (According to Hurun India Report).

Public assets, i.e., from ports, airports, coal mines to the 5G spectrum, are being sold to a very few corporates such as Adani, Ambani, Tata at cheaper rates. Amending various laws such as the Farm Laws, Labour Laws, Environmental Impact Assessment and allowing FDI in retail businesses and military, National Monetization Pipeline are being done to ease the plundering of the corporates.

The recolonizational policies of liberalization-privatization-globalization were imposed by the imperialists in the 90’s. These policies were designed to stop the governments from being welfare States and direct them to act only as brokers to the corporates. The corporates including Adani and Ambani unanimously back the fascistic BJP regime led by Modi knowing well that it will ferociously implement these pro-corporate policies. That’s why 82.5% of the election funds of the corporates is being donated to the BJP.

The BJP is not just another vote bank party. It is the political wing of the RSS, a fascistic-terrorist organisation. Its aim is to establish a Hindurashtra by dividing the people into hundred bits along caste lines and thereby modernizing the brahmanical dominance and caste hierarchy. On the other hand, the aim of Adani and Ambani is to exploit the natural resources and the people and contest in the world billionaire race. These saffron fascist groups have partnered among themselves and are enforcing a fascist rule.

In order to assist their aforesaid two aims, all the sectors including the judiciary, Election Commission, CBI, Reserve Bank, police, military are being filled with RSS-BJP cadres. Not only the parliament, but also the entire State structure has been occupied by the fascists.

Many judgements such as the Babri masjid judgement, hijab verdict, Gujarat pogrom judgement were pronounced in favour of the saffron mob and against the Muslims; It is not new that the CBI is being used against the members of the opposition parties and the cases are being dropped if they defect to the BJP; It is historical that the Reserve Bank had transferred the emergency funds to the BJP government; A statistic reveals that 50% of the police force is anti-Muslim; the administrators in the corporate companies are being appointed in various government departments as Joint Secretaries and Directors.

Can this be overturned if we just bring another political party to power? The track record shows that the BJP had captured power in 10 states by horse trading of the MLAs. Haven’t the RSS running parallel governments in the states ruled by the opposition by appointing governors like R.N.Ravi?

Therefore, the RSS-BJP, Ambani-Adani fascism can only be brought down by a popular uprising outside of the electoral system. We should protest by organizing the working people including the labourers, farmers, micro-small scale businessmen, students and the youth. It is the only way to defeat fascism!

Let’s unite as Anti-Fascist People’s Front to bring down the RSS-BJP Ambani-Adani Fascism!

Let’s get away from this illusion of pseudo-democracy! Let’s create an anti-fascist uprising!

Let’s establish an Anti-Fascist Democratic Republic!

 

12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து யாருக்காக விமான நிலையம்?

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, மத்திய அரசாலும் மாநில அரசாலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசால் தேர்வு செய்யப்பட்ட இப்பகுதி விவசாயம் செய்யும் பகுதியாகவும் நீர் நிலைகள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக 30 ஏரிகளும் 40 குளங்களும் இப்பகுதியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பரந்தூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், கூத்தவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாதிப்படைகிறது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இக்கிராமத்தில் 800 வீடுகளும் அதில் 2500-க்கும் மேற்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். புதிதாக இப்பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதால் இம்மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்தனர். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.


படிக்க : வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!


“எங்களுக்கு தெரிந்தது விவசாயம் மட்டும்தான். நாங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் மட்டுமே நம்பி இருக்கிறோம். இதை தவிர வேறெந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. திடீரென்று வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம்? நீங்கள் தருகின்ற மூன்று அல்லது நான்கு செண்ட் கொண்ட மாற்று குடியிருப்பு வீட்டை வைத்து நாங்கள் என்ன செய்வது?” என்று அம்மக்கள் இந்த அரசை பார்த்து கேள்வி எழுப்பினர்.

மேலும் “நாங்கள் விமான நிலையம் வருவதை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு விமான நிலையங்களை அமைத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறினர்.

விவசாயத்தை அழித்து தான் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்றால் வரும் காலங்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்றும் மக்கள் கேள்வி கேட்டனர். நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்றும் இதற்காக எதையும் இழக்க தயாராக உள்ளோம், ஏன் உயிரை கூட இழக்க தயாராக இருக்கிறோம் என்றும் அம்மக்கள் கூறினர்.

ஒட்டுமொத்த கிராம குடியிருப்பும், ஏக்கர் கணக்கான விவசாய நிலங்களும், மிகபெரிய நீர்நிலைகளும் மத்திய அரசு வெளியிட்ட அங்கீகரிக்கப்படாத வரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களோ மக்கள் இதை மிகவும் வரவேற்கின்றனர் என்று வெட்கமின்றி ஆளும் வர்க்கத்துக்கு துதி பாடி கொண்டிருக்கின்றன. “ஏதாவது தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்து கொள்ளுங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிடுங்கள்” என்று ஏகனாபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கான எதிர்ப்பு குரலை அவ்வூடகங்கள்  தனது “நடுநிலை” வாதத்திற்கு கூட எடுத்துக் கொள்வதில்லை.

அரசு தொடர்ச்சியாக சென்னையை உருவாக்கிய பூர்வ குடி மக்களின் வீடுகளை நீர்நிலைப் பகுதியில் உள்ளது என்று இடித்து அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி வரும் நிலையில், இப்பொழுது அரசே நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து விமான நிலையங்களை கொண்டு வருவது விந்தையாக உள்ளதல்லவா? அதற்கு காரணம் இது முதலாளிகளுக்கான தேவை. மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து போன்ற வசதிகள் உருவாக்குவது முதலாளிகளின் தேவைக்காகவும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வசதிகளுக்காகவும் தான்.

அதற்காக இந்த அரசு எந்த எல்லைக்கும் செல்லும். எத்தனை ஆயிரம் மக்கள் என்றாலும் கண்மூடித்தனமாக வெளியேற்றும். வெளியேற்றப்பட்ட மக்களுக்கு முறையாக வாழ்வாதாரம் அமைத்து தருமா என்றால் அதுவும் இல்லை.


படிக்க : காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”


இதுவரை உழைக்கும் மக்களிடம் இருந்து பிடுங்கிய எந்த நிலத்திற்கும் முழுமையான இழப்பீடு தந்ததாகவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து தந்ததாகவோ சரித்திரமே இல்லை. மந்தையில் இருந்து ஆடு மாடுகளை அவிழ்த்து துரத்தியடிப்பதை போல தான் இந்த அரசு அவர்களை கையாண்டுள்ளது. மக்களிடம் முறையான அனுமதியோ தகவலோ கூட தெரிவிக்கப்பட்டது கிடையாது. அதனால் தான் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி எள்ளளவும் சிந்தனையின்றி ஒட்டுமொத்த கிராமத்தையும் வரைப்படத்திற்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

4500 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும் 2500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் 800 வீடுகளை அழித்து விமான நிலையம் கொண்டு வருவதால் பயனடைய போவது யார்? இந்நாட்டின் பூர்வகுடி மக்களா? இல்லை இந்நாட்டின் பூர்வகுடி மக்களின் உழைப்பை சுரண்டி தின்னும் முதலாளி வர்க்கங்கள் மட்டுமே.

ஒரு பக்கம் உழைக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் வெளிப்பகுதிக்கு துரத்தியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் அவர்கள் உருவாக்கிய நகரங்களோ பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு போராடுவது மட்டுமே அவர்கள் உருவாக்கிய நகரத்தை, அவர்களே தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே தீர்வு.

செழியன்

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்! | கருத்துப்படங்கள்

ஆகஸ்ட் 15 – ‘சுதந்திர’ தினத்தை கோவணத்துடன் கொண்டாடுவோம்!

***

வளர்ச்சியை ( Growth ) எட்டி உதைத்துவிட்டு, போலி ‘சுதந்திர’ கொண்டாட்டமாம்!

***

தேசியக்கொடி – அம்பானி மோடி…
எதிலும் கார்ப்பரேட் நலன் தான்!

***

ஆகஸ்ட்: 15
வாழ்வுரிமை பறிப்பும்
கார்ப்பரேட் கொள்ளையும்!
கொண்டாட என்ன இருக்கு?

கருத்துப்படங்கள் : புதிய தொழிலாளி

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ

உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான பல்வேறு சதித்திட்டங்களையும்… கள்ளக்குறிச்சி மக்கள் மீதான போலீசின் அடக்கு முறைகளையும்… தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!!

காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேல் “குண்டு மழையை பொழிந்து உள்ளது”. இவ்வான்வழி தாக்குதலின் மூலம் 16 குழந்தைகள் உட்பட 45 அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து பிள்ளை கறி தின்று இரத்த ருசிபர்த்து உள்ளது இசுரேல். 2000-லிருந்து இதுவரை 2,200க்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுவத்தில் அடிக்கும் சாணியை போல் பாலஸ்தீன மக்களின் உடல்கள் இஸ்ரேல் வீசும் குண்டில் அவர்கள் மண்ணிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி சிதறி கிடக்கின்றன. மேலும் அரிதாகவே செயல்பட்டுக் கொண்டிருந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நிரம்பி வழிந்துள்ளன.

காசாவில் வாழும் சுமார் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இசுரேலிய மற்றும் எகிப்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். வெறும் 141 சதுர மைல்கள் மட்டுமே கொண்ட அதாவது டெட்ராய்ட் நகரத்திற்குச் சமமான பரப்பளவில் உள்ள ஒரு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் என்று செய்தி ஊடகங்களுக்கு தலைமை தாங்கி பிரச்சாரம் செய்த நியூ யார்க் டைம்ஸ் இசுரேலின் அட்டூழியங்களை “கடுமையான எல்லை தாண்டும் சண்டை” என கூறுகிறது. இது சண்டை அல்ல!, ஆக்கிரமிப்புப் போர்!, என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகிறது. இந்த முதலாளிதத்துவ வேசி ஊடகங்கள் ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு இரு தரப்பினருக்கு இடையிலான சண்டை என்றே சித்தரித்து வருகின்றது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள்.

தஞ்சம் பிழைக்க வந்தவர்களை “பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள்”. ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதன் முதலில் அங்கீகரித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவது தான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசம் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றப்பட்டு காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் இப்பொழுது நடந்துள்ள தாக்குதலுக்கு கைகாட்டியது ஜோ பைடனே என்பது அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளுடனும் ராணுவ படை பலத்துடன் குவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து Palestinian Islamic Jihad (PIJ) என்ற பாலஸ்தீன போராளி குழு தன்னிடம் இருக்கும் ராக்கெட் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நியூ யார்க் டைம்ஸ் வெளியீட்டு உள்ள அறிக்கையில், “காசா இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது “பாலஸ்தீன மக்களுக்கோ கடந்த 70 ஆண்டுகள் போர் மட்டுமே இயல்பு நிலையாக உள்ளது”.

இது மீள முடியாத ஒரு இயல்பு நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. மேலும் , 50 சதவிகித வேலையின்மை விகிதம் மற்றும் நொறுங்கி போன உள்கட்டமைப்பு வசதிகள் பாலஸ்தீனத்தின் அடிவயிற்றை இருக்க பற்றி கொண்டு உள்ளது. பாலஸ்தீனத்தில் வசிப்பதற்காக ( breathing space ) ஏதோ மின்நிலையம் இயங்கி வந்தன ஆனால் அதுவும் இப்பொழுது ஒழிக்கப்பட்டுள்ளது .இதற்கு வீசிய குண்டு காரணமல்ல, மாறாக அது இயங்க தேவையான எரிபொருளை இஸ்ரேலும் எகிப்தும் விநியோகிக்க தடை விதித்த குண்டினால்.

இப்பொழுது நம் மனதில் ஒரு கேள்வி எழலாம், பாலஸ்தீனத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
எந்தவொரு பிற்போக்குத்தனமான தேசியவாத ஆட்சிகள் மூலமாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான சூழ்ச்சிகள் மூலமாகவோ உலகத்தின் மையமான வாஷிங்டனால் நடத்தப்படும் “சமாதான” பேச்சுக்கள் எல்லாம் உலக மேலாதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக உள்ளது.

சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரபு, இஸ்ரேலிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தின் மூலமும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேச இயக்கத்தின் மூலம் மட்டுமே இயல்பு நிலையை கொண்டு வர முடியும்!

சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் வரிசையில், தெற்காசியாவில் பாட்டாளி வர்க்கத்தின் சூறாவளியாக மையம் கொண்டுள்ள சூறாவளி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கு தோள் கொடுத்து உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றிணைவுக்கு முன்னேறுவோம்.

எழிலன்

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மாணவர் கொலைகள்! | நேர்காணல் வீடியோ

ள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் அடாவடிதனங்களையும், அப்பள்ளியை காப்பாற்ற துணை நிற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு பற்றியும் தமிழக அரசியல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஊடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா மற்றும் தோழர் மருது ஆகியோரின் பேட்டி காணொலிகளை இங்கே பதிவிடுகிறோம்!

https://youtu.be/hqgElKRKX_s

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்! – வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை அம்பலப்படுத்தும் மகனை இழந்த பெற்றோர்!

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி தங்களிடம் படிக்கும் மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறது என்பதை பற்றியும் தன் மகன் இறந்ததை பற்றியும் மிகவும் உருக்கமாக இக்காணொலியில் விளக்குகிறார்கள் தன் மகனை அப்பள்ளியில் பறிகொடுத்த பெற்றோர்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்

கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தின் உண்மை அறியும் குழுவை சார்ந்த வழக்கறிஞர்கள் சென்றார்கள் ஆனால், அவர்களுக்கு கிடைத்த உண்மைகளை விடவும், அதிகாரவர்கத்திடம் தான் உண்மை பொதிந்து கிடக்கிறது. அது எக்காரணத்திற்காகவும் வெளியே வராது. அதாவது உண்மைகள் அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு இல்லை என்றால் வெளியிவருவே தவிர, அதற்கு பாதகம் என்றால் கண்டிப்பாக வெளிவிட வாய்ப்பே இல்லை.

கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!

காணொலியை பாருங்கள் பகிருங்கள்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மை அறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு !

ள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை!

வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு!
நாள் : 10.08.2022

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை: “கல்லாக” கிடக்கும் நோயாளிகள் – கள ரிப்போர்ட்

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் துளியும் இல்லாமல் நோயாளிகளை அல்லாடும் நிலைக்கு தள்ளியுள்ளது திமுக அரசு.

ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள், தனியார் மருத்துவமனையில் இலட்சக்கணக்கில் செலவுச் செய்து சொகுசாக படுத்து கிடக்க, ஓட்டுப் போட்ட மக்களோ அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத அரசு மருத்துவமனையில் அநாதையாக தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

ஒரு அறையில் 20 படுக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் 40-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைத்து, குப்பை வண்டியில் குப்பைகளை அடைப்பதுபோல் நோயாளிகளை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். போதிய காற்றோட்ட‌ வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. ஒரு நோயாளிக்கும் இன்னொரு நோயாளிகளுக்கும் இடையே விடப்படும் இடைவெளி கூட விடமால் நெருக்கமாக‌ படுக்கைகளை அமைந்துள்ளனர்.

குளுக்கோஸ் ஏற்றுவதற்கு சரியான உபகரணங்கள் இல்லாமல் ஜன்னல் கம்பிகளில் குளுக்கோஸ் பாட்டிலை மாட்டி தொங்க விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் கட்டிடத்தில் லிப்ட் வசதிகள் கிடையாது. மூன்றாவது மாடி என்றாலும் நோயாளிகள் நடந்துதான் செல்ல வேண்டும். உணவு வாங்குவதற்கு கூட நோயாளிகள் இறுதி தளத்திற்கு நடந்து வருகின்றனர்.


படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !


போதிய மருத்துவர்கள் வசதியும் கிடையாது. தினமும் ஒரு மருத்துவர்தான் வருகிறார். அறைகளில் அடைத்து வைக்க முடியாத நோயாளிகள், நோயாளிகளை கூட்டி செல்ல பயன்படுத்த படும் சறுக்கு படிக்கட்டு‌க்கு அருகே படுக்கை அமைத்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவொரு பேன் வசதியோ, அவசர சிகிச்சை அளிப்பதற்கு உபகரணங்கள் வசதிகளோ கிடையாது. நோயாளிகளுக்கு பாதுகாப்பு வசதி துளியும் இல்லை. நோயாளிகளின் பொருட்கள் வைப்பதற்கும் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

ஒரு பெண் நோயாளியை சந்தித்து பேசியபோது, “செவிலியர்கள் சரியாக வருவது கிடையாது பலமுறை கூறியும் குளுக்கோஸ் ஏற்றுவது கிடையாது. எனக்கு ரத்தம் ஏற்ற வேண்டும், ஆனால், அதை யாரும் தயார் செய்துக் கொடுக்க முன்வரவில்லை. கொசுக்கடி மத்தியில் இந்த படிகட்டு அருகே தனியே அமர்ந்து காத்திருக்கிறேன்” என்றார்.

நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சந்தித்து பேசியபோது, “நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இதுவரை ஒரு முறைதான் எனக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். சரியான கவனிப்பு இல்லை. செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர் சொன்னால்தான் எங்களால் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருமுறைதான் மருத்துவர் வருகிறார். அதுவும் எல்லா‌ நோயாளிகளையும் பார்த்து முடிப்பதற்குள் 12 மணி ஆகிவிடுகிறது. நீங்கள் கொஞ்சம் மருத்துவரிடம் சொல்லி உடனே பார்க்க சொல்லுங்கள் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது” என்று இறுதியாக நம்மிடம் கூறினார்.

செவிலியர்களை சந்தித்து பேசியபோது, ”இங்கு செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை நாங்கள் எல்லோரையும் பார்த்து கொள்கிறோம். எல்லா நோயாளிகளையும் சந்தித்து பேசி மருந்துகளை வழங்கி வருகிறோம். ஆம், இங்கு இருக்கும் செவிலியர்கள் மனிதாபிமானத்தோடு தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் இந்த அரசோ இவர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் ஏதுமில்லை. 40-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கு கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நிலையும் இதேதான். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் இங்கு கிடையாது. இருக்கும் ஒன்று, இரண்டு பேர்தான் தலைக்குமேல் சுமைகளை போட்டுகொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார்.

2019-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 3400 செவிலியர்களை கான்ட்ராக்டர் முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு மூன்று முறை கான்ட்ராக்டர் கால‌ நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால், இவர்களுக்கு பணி நிரந்தரம் இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டு முறை போராட்டம் நடத்தியும் இவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

கொரோனா காலத்தில் தேவதைகளாக பார்க்கப்பட்ட செவிலியர்களை தற்போது குப்பை காகிதமாய் தூக்கி எறிந்துவிட்டது அரசு. கொரோனா காலத்தில் உயிரை விட்ட மருத்துவர்களுக்கும் இதுவரை சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை.


படிக்க : மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை


உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, அப்பாவி மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை, ஆனால் இந்த அரசு பல நூறு கோடி செலவு செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துகிறது அரசு.

குஜராத்தில் எப்படி மோடி திரையிட்டு சேரிகளை மறைத்தாரோ அதேபோன்று சாலைகளில் எல்லாம் சதுரங்க விளையாட்டு பலகை வரைந்து ஏழைகளின் நிலை வெளியே தெரியாமல் மறைத்துள்ளது திமுக அரசு. நேப்பியர் பாலத்தை மிக பெரிதாக சதுரங்க பலகையாக மாற்றத் தெரிந்த அரசின் கண்ணுக்கு, அதன் கொஞ்ச தொலைவில் நீண்ட ஆண்டுகளாக இடிந்த குடிசையில் வாழும் சத்தியா நகர் மக்களை தெரியவில்லை.

செஸ் போட்டியில் பங்கு பெற்ற நபர்களுக்கு 3500 உணவுப் வகைகளை அரசு தயார் செய்துள்ளது. அதில் எந்த வகை உணவும் “ரிப்பீட்” ஆகாது என்றும் கூறியுள்ளது. காலை சாப்பிட்ட உணவு  மதியம் கிடைக்குமா என தவித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மத்தியில், பன்னாட்டு வீரர்களுக்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி படையல் வைத்து கொண்டிருக்கிறது திமுக அரசு!


பாரி