Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 24

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 20 | செப்டம்பர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயாவிடம் விலை போகும் நீதித்துறை
  • ஜெயா – போலீசின் பாசிச தாக்குதல் சரணாகதிப் பாதையில் தமிழகப் பத்திரிகையாளர்கள்
  • திரண்டெழுந்தது தொழிலாளி வர்க்கம் ஓடி ஒளிந்தது துரோகத் தலைமை
  • ஆப்பிரிக்கக் கருப்பர்களைக் கொல்வது எது? ஆட்கொல்லி எய்ட்ஸா? அறிவுசார் சொத்துடைமையா?
  • வீதியில் ஒப்பந்த தொழிலாளி.. பீதியில் நிரந்தரத் தொழிலாளி!
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 11
  • அயோத்தி வழியில் மீண்டும் ஒரு மசூதி இடிப்பு இந்துவெறி அட்டூழியத்துக்கு அரசே உடந்தை
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அறுக்கப்படும் ஆடுகளுக்குக் கொடுக்கப்படும் அகத்திக்கீரை
  • போலீசு குண்டர்களின் வெறியாட்டம் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகம்
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம் | பகுதி 2
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 1-31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 18-19| ஆகஸ்ட் 1-31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆக்ரா உச்சி மாநாடு: தோல்வி ஏன்?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மனித உரிமைகள்: தமிழக போலீசின் உண்மை முகம்
  • தரைக்கடை வியாபாரிகள் மீது தடியடி; திருச்சி போலீசின் காட்டு தர்பார்!
  • கோகோ கோலா: விளம்பரத்துக்குப் பல கோடி தொழிலாளிக்குத் தெருக்கோடி
  • யூனிட் டிரஸ்டு மோசடி: அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் இன்னுமொரு கூட்டுக் கொள்ளை
  • நாகா போர் நிறுத்த ஒப்பந்தம்: இன விடுதலைப் போர் இனச் சண்டையாகியது
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 10
  • உலகைக் குலுக்கிய உலகமய எதிர்ப்புப் போராட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 15-17| ஜூன் 16-30, ஜூலை 1-31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வெறிநாய்களின் ஆட்சியில் சாமானியர்களின் சதி என்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அதிகார வர்க்கத்தின் நேர்மை – திறமை – நடுநிலைமை
    துடப்பத்திற்குப் பட்டுக் குஞ்சம்!
  • சட்ட விரோதக் கொள்ளையனைத் தேடும் சட்டபூர்வ கொலைகாரர்கள்
  • தவிக்குது சென்னை நகரம் கொழிக்குது தண்ணீர் வியாபாரம்
  • நேபாளம்: அரண்மனைக் கொலைகளும் அரைவேக்காடு அறிஞர்களும்
  • ஈராக்: அவலத்தின் நடுவிலும் அமெரிக்க எதிர்ப்பு
  • இவரின் மரணம் மலையைவிடக் கனமானது!
  • தொடர் கட்டுரை: பகுதி 9
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • தாராளமயத்தின் அடுத்த பலி
    கடலை விவசாயிகளின் கண்ணீர்க் கதை
  • தொடர் கட்டுரை: பகுதி 4
    தாராளமயத் தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16 – 31, ஜூன் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 13-14| மே 16 – 31, ஜூன் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழகத் தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு: அம்பலமானது சட்ட போலித்தனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அர்சத் மேத்தா, கேதான் பரீக்…. தாராளமயவாதத்தின் வளர்ப்புப் பிள்ளைகள்
  • பரவுகிறது பட்டினிச் சாவு தொடங்கட்டும் உணவுக் கலகம்
  • இந்தியா – வங்கதேச எல்லை மோதல்கள்: கிழக்கிலும் தாழ்நிலைப் போர்?
  • தொடர் கட்டுரை: பகுதி 3
    தாராளமயத் தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • தொடர் கட்டுரை: பகுதி 8
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்துக்குக் கூஜா தூக்கும் பா.ஜ.க.
  • கோவை உயிரியியல் பூங்கா: மேட்டுக்குடியின் உல்லாசத்திற்கு பழங்குடியினரின் வாழ்வு பறிப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01 – 15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 12 | மே 01 – 15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சட்டத்தின் முன் கிரிமினல்களின் விசுவரூபம்
  • விண்ணில் ‘சாதனை’ மண்ணில் வேதனை
  • தேர்தல் புறக்கணிப்பு ஏன்?
  • தொடர் கட்டுரை: பகுதி 7
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • விவசாயிகள், தொழிலாளர்கள், தேசிய முதலாளிகளின்
    மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாடு
  • இருண்ட வானில் உதித்த ஒளிக்கீற்று
  • பல்கலைக்கழகங்களில் சோதிடப் பட்டப்படிப்பு:
    இந்துவெறியர்களின் கொட்டம்
    திராவிடக் கட்சிகளின் மௌனம்
    போலி கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01 – 30, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 10-11 | ஏப்ரல் 01 – 30, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சாதி-மதவெறி, ஊழல்-கிரிமினல் கும்பல்களின் கூட்டணி
  • நாடு முன்னேறுகிறதா? வேலையின்மை முன்னேறுகிறதா?
  • ஊழல் ‘தேசிய’ங்களின் போட்டாபோட்டி
  • யார் ஆக்கிரமிப்பாளர்கள்? தரைக்கடை வியாபாரிகளா? பெரு வணிக நிறுவனங்களா?
  • தொடர் கட்டுரை: பகுதி 6
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • வரவு-செலவு அறிக்கை: நாட்டை அடகு வைப்பதில் நாலுகால் பாய்ச்சல்
  • பன்னாட்டு நிறுவனங்களின் ஊழல் ஏற்றுமதி
  • “பால்கோ” விற்பனை
    பா.ஜ.க.வின் துரோகமும் காங்கிரசின் பித்தலாட்டமும்
  • சாதி-தீண்டாமை வெறி
    சி.பி.எம். ஊழியர் பலி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”: அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்

முதல் விண்வெளி வீரர் அனுமன்!”:
அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது

“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு
| ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01 – 31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 08-09 | மார்ச் 01 – 31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழகத் தேர்தல்; அழுகி நாறும் கூட்டணி அரசியல்
  • “மேற்கு வங்கத்தைப் பார்!”
    உடைந்தது சி.பி.எம். கட்சி உருவானது பிழைப்புவாதக் கட்சி
  • குஜராத் நிலநடுக்கம்: பேரழிவை விளைவித்த கொலைகாரக் கூட்டணி
  • தொடர் கட்டுரை: பகுதி 2
    தாராளமய தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • தொடர் கட்டுரை: பகுதி 5
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • காசுமீர்
    சமாதான நாடகம் பொய்த்துப் போனது பனிமலை, குமுறும் எரிமலையானது
  • நவீன விவசாயம்
    விளைநிலத்தை நாசமாக்கி… விவசாயிகளை நாடோடிகளாக்கி…
  • அரசியல் ரவுடிகளின் கொட்டம் திணறுகிறது தமிழகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01 – 28, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 06-07 | பிப்ரவரி 01 – 28, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “தலித்” அரசியலின் விபரீத வளர்ச்சி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அமெரிக்க என்ரானின் வழிப்பறிக் கொள்ளை
  • அதிராம்பட்டினம்: அயோத்தி வழியில் ஓர் ஆக்கிரமிப்பு
  • தியாகி லீலாவதி குடும்பம்: மறந்தது துரோகக் கட்சி
  • தொடர் கட்டுரை: பகுதி 4
    முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • பெருகி வரும் பாலியல் வன்முறை அதிகாரக் கிரிமினல்கள் உடந்தை
  • தாராளமய தாசர்களும் நவீன எட்டப்பர்களும்
  • ஒரிசா பழங்குடி மக்களின் துயரக்கதை: வாழ்வைப் பறித்து முன்னேற்றமா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01 – 31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 04-05 | ஜனவரி 01 – 31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காசுமீர்: மீண்டும் சமாதான நாடகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இந்து மதவெறியர்களின் தாக்குதல் மதச்சார்பற்ற கட்சிகளின் முணுமுணுப்பு
  • மக்களுக்காகப் போராடி தியாகியான மாவீரர்
  • ”தொழிலாளர்கள் தேசங்கடந்தவர்களாக கட்டாயம் மாற வேண்டும்!”
  • அஞ்சல்துறை வேலை நிறுத்தம் அரசாங்க கொத்தடிமைகளின் போராட்டம்
  • அப்பாவிகள் மீது வக்கிர அடக்குமுறை கிரிமினல்களுக்கு ராஜமரியாதை
  • பாமாயில் இறக்குமதிக்கு எதிராக கேரள மக்களின் போர்க் கோலம்; மீண்டும் அந்நியப் பொருள் புறக்கணிப்பு சுதந்திரப் போர்!
  • ஈழ வேந்தன் நாடு கடத்தல்: தேசிய ஒருமைப்பாட்டுக்கு பலிகடா ஈழ அகதியா?
  • திருவள்ளூர் சாராய எதிர்ப்புப் போராட்டம்: சமூக உறக்கத்தைக் கிழித்த வீராங்கனைகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்! | கவிதை

யார் அவர்கள்?

நகரங்களின் அழகில் அடித்துச் செல்லப்பட்டு
காலத்தின் போக்கில் கரை ஒதுங்கியவர்கள்!

நகர்ப்புற வாழ்க்கையின் விளிம்புகளில் பாடப்படும்
யாரையும் அவ்வளவு எளிதில் தொந்தரவு செய்துவிடாத
ஓர் அமைதியான நாதியற்ற பாடல்!

மங்கலான விடியல் பொழுதுகளில்,
நகரங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில்
முதலாளித்துவத்தின் விருந்துகளில்
சிந்திய கழிவுகளைத் துடைப்பவர்கள்!

நவீனமயத்தின் கண்களில் அகப்பட்டுவிடாமல்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மலக்குழிகளின் மனித இணைப்புகள்!

ஒப்பந்ததாரர்களின் இலாபத்திற்கு இதமளிக்க
எவ்வித பாதுகாப்புமின்றி எரியூட்டப்படுபவர்கள்!

முதலாளித்துவச் சுரண்டலின் இழைகளில்
மிக்க கவனமாக இறுக்கி நெய்யப்பட்டவர்கள்!

பார்ப்பனியத்தின் சாதியச் சங்கிலியுடனும்
நவீன வர்க்க சுரண்டலுடனும் பின்னிப்பிணைந்தவர்கள்!

அந்நிய மூலதனத்தால் சீர்குலைக்கப்பட்ட நமது வாழ்வியல் கட்டமைப்பை
துடைப்பங்களால் முலாம்பூச பயன்படுத்தப்படுவர்கள்

தொழிற்சாலைகளின் மறு உற்பத்தியை நிலைநிறுத்துவதற்காக
ஒடுக்கப்பட்டவர்களிலேயே தேர்ந்தெடுத்து ஒதுக்கப்பட்டவர்கள்!

ஆம், அவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்!

பளபளக்கும் நமது நகரங்களின் இதயத்துடிப்புகள்
இன்று ஒரு விடுதலையின் கனவை சுமக்கத் தொடங்கியுள்ளனர்!

‘சமூகநீதி’ அவர்களுக்கு எதிராக
என்றோ தனது பயணத்தை தொடங்கிவிட்டிருக்கிறது!

ஆளும் வர்க்க அரசுகளோ
அவர்களது குறைந்தபட்ச இருப்பிற்கும்
இறங்கற்பா இசைத்துக் கொண்டிருக்கின்றன!

தனியார்மயத்திற்குள் மிகத்திறமையாக மூடிமறைக்கப்பட்ட
சேரிகளின் சீர்குலைவில் இருந்து வீசுகிறது
இந்த கார்ப்பரேட் வாழ்க்கையின் முடை நாற்றம்!

நகர்ப்புற வாசிகளே!

நமது சூழலியல் பாதுகாப்பு,
தலைமுறை தலைமுறையாக அடக்கிவைக்கப்பட்ட
அவர்களின் பேராசையின் வடுக்களைத் தாங்கிநிற்கிறது!

சுகாதாரமான தெருக்களும், பூங்காக்களும், பேருந்து நிலையங்களும்
அவர்களின் கண்ணியமான வாழ்வைக் காவு கேட்கின்றன!

ஒடுக்குமுறைக்கான உரிமை அவர்களின் பரம்பரை சாபமா?
கண்டிப்பாக இல்லை!

இது நமது பங்களிப்பிற்கான நேரம்!

முதலாளித்துவ ஒடுக்குமுறையின் நிழலில் அவர்களோடு ஒன்றிணைவோம்!
அவர்களோடு ஒருகுரலெடுத்து முழங்குவோம்!
தனியார்மயத்தின் குப்பைக் கிடங்குகள் வீங்கி வெடிக்கட்டும்!

வேண்டும் ஜனநாயகம்!

பாரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16 – டிசம்பர் 31, 2000 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 01-03 | நவம்பர் 16 – டிசம்பர் 31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நடிகர் ராஜ்குமார் மீட்பு நாடகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கிரிமினல் வீரப்பனை வேட்டையாட அதிரடிப்படை… தண்டிக்கப்பட்ட கிரிமினல் ஜெயாவுக்கு பூனைப்படை பாதுகாப்பா?
  • தனியார்மயம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
  • தாமிரபரணி கொலைகள்: தயார்நிலை தீர்ப்புடன் ஒரு விசாரணை கமிசன்
  • பாலஸ்தீனப் போராட்டம்: அமைதி ஒப்பந்த மாய்மாலம் அம்பலமானது
  • ரப்பர்…. தேயிலை…. மக்காச்சோளம்: அடுத்த பலிகடா யார்?
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். (பகுதி 3)
  • கழுதையின் வாரிசு குதிரையாகுமா?
  • டெல்லிக்கு ‘அழகு’ தொழிலாளருக்கு அழிவு
  • வாழ்வைப் பறித்த தீர்ப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்

ப்பொழுதுமே ஐ.டி துறை என்பது செல்வம் கொழிக்கும் ஒரு துறை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்கிற ஒரு பொதுப் பார்வை உள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை நடைமுறையில் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.

பொதுவாக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முதலாளித்துவ நிறுவனங்கள் கீழ்மட்ட தொழிலாளர்களில் இருந்து, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வரைக்கும் பல அடுக்குகளை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த அடுக்குகள் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை கொண்டதாக இருக்கும்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறை சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்ப்பதாக நினைப்பதுண்டு. ஆனால் வெளியில் நிற்கும் காவலாளியில் தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்திற்கு நாள்தோறும் வெவ்வேறு விதமான பொருட்களை கொண்டு வரும் ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலையில் ஈடுபட்டு இருப்பார்கள். அது ஐ.டி துறைக்கும் பொருந்தும்.

ஐ.டி தொழிலாளர்களில் மேல்தட்டு தொழிலாளர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏறக்குறைய முதலாளிகளின் குணாம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற தொழிலாளர்களை பிழிந்து வேலை வாங்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.

அதேசமயம், ஐ.டி துறையைப் பொருத்தவரை,10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆரம்ப நிலை ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்தான் தற்போதும் உள்ளது. ஆனால் இதை வைத்து வாழ்க்கையை ஓட்டுவது மிகவும் சிரமம். இந்த ஊதியத்தையும் தாண்டி அவர்களை ஒட்டச் சுரண்டும் வேலையை ஐ.டி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் பெரும் விவாதம் அரங்கேறியது.

படிக்க: 12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவன லாபம் இருந்த போதிலும், இந்தியாவின் ஐ.டி துறையில் பல தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, மேலாண்மை சாராத பணிகளில் உள்ளவர்களுக்கு உண்மையான ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்து விட்டன. சமீபத்தில் முதலாளி வர்க்க அறிவுஜீவிகளே தொழிலாளர் வர்க்கத்திலுள்ள நடுத்தர வர்க்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக Linkedin சமூக வலைத்தளத்தில் எழுதி இருந்தது பேசுபொருளானது.

பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனமான பீபால்கோவின் (PeepalCo) இணை நிறுவனரும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ் சிங்கால் தனது சமூக வலைதளப் பதிவொன்றில், ”அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேக்கமடைந்த சம்பளத்தால், நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார அதிர்வுகளை அமைதியாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்; பிணை எடுப்புகள் இல்லை, தலைப்புச் செய்திகள் இல்லை, எந்த உரையாடலும் இல்லை” என்று கூறியிருந்தார். “யாரும் பேசாத மிகப்பெரிய மோசடி நடுத்தர வர்க்க சம்பளம்” என்று எழுதி, அவ்வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விளக்கியிருந்தார்.

வங்கி மூலதனமானது ரியல் எஸ்டேட் துறை மூலமாக ஒட்டுமொத்த தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒருசேர கடன் கொடுப்பதால், இந்தத் துறையைக் கொண்டு முழு தொழிலாளர் வர்க்கத்தையும் ஒட்டச் சுரண்டுகிறது. அதிகமாக ஊதியம் வாங்கும் மேல் தட்டு ஐ.டி ஊழியர்களால் கூட வீடு வாங்குவது என்பது எட்டாக் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், ஏகாதிபத்திய மூலதனம் ஐ.டி தொழில்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. 8 மணி நேர வேலை என்பது காணாமல் போயிற்று என்றே சொல்லலாம். இங்கு குறிப்பிடுவது வேலை நேரத்தை மட்டும்தான்.

பெருநகரங்கள் மக்கள்தொகை வெள்ளத்தால் பெருகி வழிவதால், உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர மக்கள் தொகை பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதால், ஒரு தொழிலாளி சராசரியாக அலுவலகம் சென்றடைய ஒரு மணிநேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் வரை ஆகிறது. அதுவும் பெங்களூரு போன்ற நகரத்தில் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளது.

வெகு சில தொழிலாளர்களே அலுவலகங்களுக்கு அருகாமையில் இருக்கின்றனர். அந்த குடியிருப்புகளின் வாடகை மிக அதிகம். எல்லாத் தொழிலாளர்களாலும் கொடுக்க இயலாது. ஆகவே ஒரு ஐ.டி தொழிலாளியின் வேலை நேரம் முழுமையாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 12 முதல் 14 மணி நேரம் வரை நீள்கிறது. இங்கே குறிப்பிடுவது ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நேரடி தொழிலாளர்கள் பற்றி மட்டுமே. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இன்ன பிற தொழிலாளர்கள் வாழ்க்கை படு மோசம். வெளியில் நிற்கும் காவலாளி முதல் சமையல் சப்ளை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ அந்தோ பரிதாபம்.

இவ்வாறான பொருளாதார, வேலை நேர நெருக்கடிகள் பல்வேறு பிரச்சினைகளை ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. சில தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல தொழிலாளர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினைகள் வருகிறது. இன்னும் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் விவாகரத்து மூலம் சிதறுண்டு போகின்றன.

படிக்க: “நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தற்பொழுது சில ஐ.டி தொழிலாளர்கள் தங்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக சில தொழிற்சங்கங்களிலும் சேர்கின்றனர். அவர்களின் நெருக்கடிகளைத் தீர்க்க அது போதுமானதாக இல்லை. அதேசமயம், அவர்கள் வாழ்க்கை குறித்த உரையாடல்கள் வேறு ஒரு தளத்தில் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.

ஐ.டி தொழிலாளர்கள் தங்களின் குமுறல்களை உரையாட பிரத்யேகமாக சில செயலிகள் உள்ளன. Blind, Grapevine, Reddit, fishbowl ஆகிய செயலிகள் இதில் முக்கியமானவை.

இந்த செயலிகளின் சிறப்பம்சம் என்னவென்றால், எல்லோரும் இதில் இணைய முடியாது. அந்தந்த நிறுவன தொழிலாளர்கள் தங்களது அலுவலக இமெயில் முகவரியை பதிய வேண்டும். அது இந்த செயலிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அதனுள் நுழைய முடியும். இந்த செயலிகளில் அலுவலகங்களில் பேச முடியாத அனைத்து பிரச்சினைகளையும் தொழிலாளர்கள் பேசுகின்றனர். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகள் தொடங்கி, நிறுவனங்களை அம்பலப்படுத்தும் பதிவுகள் வரை அங்கே விவாதமாகும். சில தொழிலாளர்கள் “நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும்” என்று நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கையும் வைப்பதுண்டு. அதற்கு விருப்பங்கள் (லைக்குகள்) கொட்டுவதும் உண்டு. இதே செயலிகளில் நிறுவன ஆட்களும் உளவாளிகளாக இருப்பர். இவர்கள் விவாதங்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவர். இந்தச் செயலிகளை நிறுவனங்கள் தொழிலாளர்களின் மனநிலையை கணிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மைதான். இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் உண்மையான பெயரை குறிப்பிடாமல் பதிவிட முடிவதால் தங்கள் மனதில் தோன்றியவற்றை பதிவிடுகின்றனர். இவையெல்லாம் வடிகால் மட்டுமே.

1990-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஐ.டி துறையில் உருவான வேலை வாய்ப்புகளும் அதில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஆனால், இன்று ஐ.டி தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மற்றப்பட்டிருப்பதானது அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.

உண்மையில், ஐ.டி தொழிலாளர்கள் வாழ்க்கை என்பது ஒரு பிரஷர் குக்கர் வாழ்க்கைதான். ஒரு சில தொழிற்சங்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவர்களை பெருவாரியாக ஒன்றிணைக்க சரியான அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனமானது. இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் அறிவுஜீவிகள் உருவாகியுள்ளனர் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அவர்கள் மார்க்சியத்தை நேரடியாக படிப்பவர்களாகவும், அதனை நடைமுறைப்படுத்த ஆர்வமுள்ளவர்களாகவும், ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். பிரஷர் குக்கர் ஒரு நாள் வெடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. அப்பொழுது அவர்களை வழிநடத்த சரியான அமைப்பு உருவாகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டளை.

வினோத் வில்சன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்”: இந்துராஷ்டிர முடியாட்சிக்கான கொள்ளைப்புற வழி!

டந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 21 அன்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி மூன்று “பதவி நீக்க மசோதா”க்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார். “யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2025”, “அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா 2025” மற்றும் “ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025” ஆகியவை அம்மூன்று மசோதாக்கள் ஆகும்.

இம்மசோதாக்கள் மூலம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர்கள், ஒன்றிய-மாநில அமைச்சர்கள் 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஊஃபா கருப்பு சட்டத்தின் மூலம் அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவதை போல, எதிர்க்கட்சிகளை சட்டப்பூர்வமாகவே வேட்டையாடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இம்மசோதாக்கள் தற்போது நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திசைதிருப்பும் பாசிச அணுகுமுறை

மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு (SIR – Special Intensive Revision) என்ற பெயரில் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்து வருகிறது. இது பீகாரில் கடுமையான நெருக்கடியையும் நாடு முழுவதும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

மறுபுறம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவப்புரா சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தல் மோசடிகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள “வாக்குத் திருட்டு” பிரச்சாரம் விவாதப் பொருளாகியுள்ளது. பா.ஜ.க-வின் கைக்கூலியாக செயல்பட்டுவரும் தேர்தல் ஆணையம் முற்றிலும் அம்பலப்பட்டு நிற்கிறது.

சர்வதேச அளவில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பல்வேறு பொருளாதார தாக்குதல்களை தொடுத்து வருகிறார். உலகில் எந்தவொரு நாட்டையும் விட இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகித வரி விதித்துள்ளார். இதனால், இந்தியாவில் ஆயத்த ஆடை தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலையும், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்பின் அடாவடித்தனத்தைக் கண்டித்து தற்போது வரை வாய்திறக்காத மோடி அரசு, ட்ரம்பின் கட்டளைக்கு அடிபணியும் அடிமையாகவே செயல்பட்டு வருகிறது. இது பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில்தான், இவ்விவாதங்களை திசைதிருப்பும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நேரத்தில், இம்மசோதாக்களை மோடி அரசு நயவஞ்சகமாக தாக்கல் செய்துள்ளது.

இம்மசோதாக்கள் அரசியலமைப்பின் பிரிவுகள் 75, 164 மற்றும் 239A ஆகியவற்றில் திருத்தங்களை கோரும் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் என்பதால், இவற்றை சட்டமாக நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (சிறப்பு பெரும்பான்மை) வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், இம்மாசோதாக்களை அவசர அவசரமாக தாக்கல் செய்ததற்கு பின்னணியில் திசைத்திருப்பும் பாசிச அணுகுமுறை ஒளிந்துள்ளது.

இந்துராஷ்டிர முடியாட்சிக்கான அடித்தளம்

அரசியல் நிகழ்ச்சி போக்குகளை திசைதிருப்புவது இம்மசோதாக்களின் உடனடி நோக்கமெனில், ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்கு செப்பனிடுவதே இம்மசோதாக்களின் இலக்காகும்.

ஒன்றியத்தில் பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையிலடைப்பது, கட்சிகளை உடைப்பது, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க நிர்ப்பந்திப்பது போன்ற பாசிச அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை அடாவடித்தனமாக கைது செய்து சிறையிலடைத்தது மோடி-அமித்ஷா கும்பல். இதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

அதேபோல், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி கைது செய்து சிறையிலடைத்து, அவர்களின் பதவிகளைப் பறித்து “சட்டப்பூர்வமாகவே” ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இப்பதவி நீக்க மசோதாக்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதனை பதவி நீக்க மசோதாக்கள் என்று கூறுவதை விட “ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்” என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356, ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் அல்லது குடியரசுத் தலைவரின் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு மாநிலத்தின் மாநில அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்டுத்துவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால், “குடியரசுத் தலைவர் ஆட்சி” என்ற இந்த எதேச்சதிகாரத்தை காட்டிலும் மோடி அரசு தற்போது தாக்கல் செய்திருக்கும் மசோதாக்கள் கொடியவை ஆகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நிலைநாட்டப்பட்டு, ஆறு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அதற்கு தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சிக் கலைப்புகளே சாட்சி. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மீது அடிக்கடி அமலாக்கத்துறையை ஏவி கைது செய்து சிறையிலடைத்து, இச்சட்டத்தின் அடிப்படையில், அவர்களின் பதவிகளைப் பறித்து, நிச்சயமற்ற அரசியல் சூழலை உருவாக்க முடியும். இத்தகைய சதிகார நடவடிக்கைகள் மூலமாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கே வரமுடியாத நிலைமையை உருவாக்க இம்மசோதாக்கள் வழிவகை செய்து கொடுக்கின்றன. ஆகையால், ஒன்றிய அரசுக்கு அடிபணியாத எந்தக் கட்சியும் மாநிலங்களை ஆட்சி செய்ய முடியாத நிலைமையை இது உருவாக்குகிறது.

அதேபோல், எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதற்காக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற பாசிசத் திட்டத்தை மோடி அரசு ஏற்கெனவே தனது நிகழ்ச்சிநிரலில் வைத்துள்ளது. இதனுடன் இப்பதவி நீக்க மசோதாக்களையும் இணைத்துப் பார்க்கும்போது, அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இந்தியாவில் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க-வும் அதன் அடிமைக் கட்சிகளும் மட்டுமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான, இந்துராஷ்டிர முடியாட்சி முறையை நிலைநாட்டுவதற்கான அடித்தளமிடப்படுவதை உணர முடிகிறது.

வெட்டிச் சுருக்கப்படும் ‘தேர்தல் ஜனநாயகம்’

‘தேர்தல் ஜனநாயகத்தைக்’ கேலிக்கூத்தாக்கி, அதனை அழித்தொழிப்பதில் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு பாசிச அணுகுமுறையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பயன்படுத்தி, அதன் சந்துபொந்துகளில் புகுந்து, பாசிச சர்வாதிகாரத்தை அங்கேற்றி வருகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே முறைகேடுகளை அரங்கேற்றித்தான் ஒன்றியத்தில் மோடி கும்பல் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது என்ற விமர்சனம் கடுமையாக எழுந்தது. இதனையடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தை (EVM) பயன்படுத்துவதற்கு எதிரான இயக்கத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவற்றையெல்லாம் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று ‘இயல்பாக்கி’விட்டது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.

அதற்குப் பின்னர், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம், மோடி-அமித்ஷா கும்பலின் மதவெறிப் பேச்சுக்களை அப்படியே அனுமதித்தது. மோடி-அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உகந்த வகையில் தேர்தல் தேதிகள் விரிவாக அமைக்கப்பட்டன. தேர்தல் மோசடிகள் மிகப்பெரிய அளவில் அரங்கேறின. காங்கிரசு கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், இவை எதையும் தேர்தல் ஆணையமோ உச்சநீதிமன்றமோ பொருட்படுத்தவில்லை. இனி இப்படித்தான் தேர்தல் நடக்கும் என்ற நிலைமையை மோடி-அமித்ஷா கும்பல் நிலைநாட்டி வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததைப் பற்றி, எதிர்க்கட்சிகள்  கடந்த ஓராண்டாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தற்போது பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு  என்ற பெயரில் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து வருகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியும் அம்பலமாகியுள்ளது.

மேலும், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்காளம் பேசும் இசுலாமிய மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதன் மூலம் தனக்கான எதிர்ப்பு வாக்குகளை இல்லாமல் ஆக்கி வருகிறது.

தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களை பா.ஜ.க-வின் கிளையாக மாற்றி, கேள்விக்கிடமற்ற முறையில், தேர்தல் வழிமுறைகளை எல்லாம் சிதைத்து, தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கி, தேர்தல் என்பதையே பா.ஜ.க-வினரை எதிர்ப்பின்றி தேர்வு செய்யும் மோசடியானதாக மாற்றி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

இவை அனைத்தையும் மீறி, வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சட்டப்பூர்வமாகவே கவிழ்ப்பதற்குத்தான் தற்போது இந்த பதவி நீக்க மசோதாக்களை பாசிச கும்பல் கொண்டுவந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.

***

இம்மூன்று பதவி நீக்க மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கூட்டு குழு தனது அறிக்கையை ஒப்படைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவில், பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதையும் ‘வலுவான’ எதிர்க்கட்சி அமைந்திருப்பதையும் எதிர்க்கட்சிகள் கொண்டாடின. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை ஒரு பொருட்டாகக் கூட பாசிச கும்பல் மதிப்பதில்லை.

ஆபரேஷன் சிந்தூர் முதல் தற்போதைய பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு வரை நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென போராடிய எதிர்க்கட்சிகளின் குரலுக்கு இதுவரை மதிப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து, எதிர்க்கட்சிகளுக்கு ‘ஜனநாயக’த்தை வழங்கி, தான் விரும்பிய சட்டத்தை நிறைவேற்றும் யுக்தியை வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தின் போதே கையாண்டது, பாசிச கும்பல்.

ஆகையால், உளுத்துப்போன நாடாளுமன்ற மரபுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து, ‘ஜனநாயக’ வாய்ப்பை வழங்கி, தனது இந்துராஷ்டிரத் திட்டத்தைத் நடைமுறைப்படுத்த பாசிச பா.ஜ.க. முயற்சிக்கும்.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், 146 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மூன்று குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இம்மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு பாசிச ஒடுக்குமுறைகளையும் சதித்திட்டங்களையும் மோடி அரசு மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இந்த நாடாளுமன்றத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கைவிடுவதாக இல்லை. பாசிச மோடி அரசால் எந்த அளவிற்கு இழிவுப்படுத்தப்பட்டாலும் அவற்றையெல்லாம் துடைத்துக்கொண்டு, பாசிச பா.ஜ.க-வை நாடாளுமன்றத்தில் முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் தங்களது பணியை மட்டும் எதிர்க்கட்சிகள் கைவிடவில்லை. இதன் மூலமாக, தாங்கள் இந்துராஷ்டிர புதைக்குழியில் விழுவது மட்டுமின்றி மக்களையும் இழுத்துச் செல்ல முனைகின்றன.

கடுமையான வரி, விலைவாசி உயர்வு, அடிப்படை வசதியின்மை; பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள்; இசுலாமியர்கள், கிருத்தவர்கள், தலித் மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுவது; விவசாயிகள், பழங்குடியினருக்கு எதிராகக் கார்ப்பரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல், பா.ஜ.க. அரசு ஆகியவற்றின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள், திட்டங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கி மாற்றுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கவில்லை.

எனவே, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பலை பல்முனைகளில் முறியடிக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கிய, ஒரு மக்கள் எழுச்சியைத் தொடங்குவதே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான ஒரே வழி.

தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram