Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 251

அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

ந்த அனுபத்தை எழுதலாமா. அல்லது இது பலரை பயமுறுத்திவிடுமா என்று பல சிந்தனைகளுக்கு பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன்.

நான் மனோபாரதி. அடையாறில் ஒரு ‘ப்ராண்டிங் ஏஜென்சி’ நடத்தி வருகிறேன். மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கும் முன்பிருந்தே கோவிட்-19 தொடர்பான எல்லா விஷயத்திலும் ரொம்பவே கவனமாகவும் சூதனமாகவும் இருக்க பழகிக் கொண்டோம். லாக்டவுன் அறிவித்த பின்பு மே மாதம் வரை அலுவகத்திற்கு தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் தேவையான நபர்களை வைத்து செய்து கொண்டோம். யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சில தளர்வுகளை கொண்டுவந்த பின்பு மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து நான்காவது வாரம் வரை மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்தோம்.

மே 29ம் தேதி மாலை எனக்கு லேசான காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் ஏற்பட்டது. பயத்தின் காரணமாக அன்று இரவு திருவான்மியூரில் நான் எப்போதும் செல்லும் மருத்துவரிடம் சென்று செக்-அப் செய்துகொண்டபோது எனது உடலில் 97.1 temperature இருந்தது. ஜுரம் இல்லை, சளி இல்லை, தலைவலி இல்லை, இருமல் இல்லை. டாக்டர் மூச்சு விடச் சொல்லி பார்க்கும்போது ‘மூச்சு விடும்போது difficulty இருக்கா?’ என்று கேட்டார்.

‘அப்படி எதுவும் இல்லை டாக்டர். உங்களுக்கு எதுவும் தெரியுதா? கோவிட் இல்ல-ல்ல’ என்று பதட்டத்துடன் கேட்டேன்.

‘ஆன்டி-பயாடிக் தர்றேன். ஜுரம் இல்ல. அதனால இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது’ என்று கூறி ஒரு ஊசியும் சில மாத்திரைகளும் கொடுத்தார்.

மே 30ம் தேதி உடலில் சோர்வு ஏற்பட்டது. வீட்டில் சமைத்த உணவின் ருசி தெரியவில்லை. சமைக்கும் வாசனையும் சரியாக உணர முடியவில்லை. அன்று முழுவதும் உடல் சோர்வாகவே இருந்தது. பயம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக வீட்டில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு எதுவும் பரவிட கூடாது என்பதற்காக என்னை தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கென தனி தட்டும், நான் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், தனியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்தும் வைத்துக்கொண்டேன். அன்று மாலை ஒரு அரைமணி நேரத்திற்கு உள்ளுக்குள் ஜுரம் இருப்பதாக உணர்ந்தேன். நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தபோது உடலில் உஷ்ணம் எதுவும் இல்லை. அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டும் இருந்தேன். மறுநாள் மே 31 காலை 5 மணி முதல் 7:30 மணிவரை தூங்கினேன்.

படிக்க:
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

மே 31 காலை 8.30 மணிக்கு, முன்னர் சென்ற அதே டாக்டரிடம் சென்றேன். தூக்கமில்லை என்றும் அவ்வப்போது ஜுரம் வருவதுபோல் ஒரு உணர்வு இருப்பதையும் சுவையோ வாசனை உணர்வோ இல்லை என்பதையும் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பதையும் சுட்டிக் காட்டினேன். 98.3 temperature இருந்தது. மூச்சு விடுவதில் சிக்கல் எதுவும் இல்லை தெளிவாக இருப்பதாக டாக்டர் சொன்னார். மீண்டும் ‘கோவிட் 19’ இருக்கிறதா என்று கேட்டேன். அதிகமான ஜுரம் மற்றும் ‘ரன்னிங் நோஸ்’ இருந்தால் மட்டும் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார். ஊசி போட்டுக் கொண்டேன். சில மாத்திரைகளை மாற்றி எழுதினார். தூக்கம் வர மாத்திரை கேட்டேன். வேணாம் என்று கூறி, ‘நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா சாப்புடுங்க’ என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. இரவில் புலம்பியதாக நண்பன் கூறினான். பயம் அதிகமாக இருந்தது.

ஜூன் 1 மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டேன். முந்தைய தினம் போன்றே காலை 5 மணிமுதல் 8:30 மணிவரை தூங்கினேன். அதற்குமேல் உடல் சோர்வாக இருந்தது. பகல் முழுதும் சுறுசுறுப்பாக இருந்தேன். இரவில் மீண்டும் தூக்கம் வரவில்லை. ஜுரம் இல்லை. சளி இல்லை. தலைவலி இல்லை. சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லை. இருமல், தும்மல் இல்லை. விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிடுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன். எனக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சொந்த ஊர்.

ஜூன் 2. காலையில் டிராவல்ஸ்-ல் பேசி வாடகை கார் ஒன்று பேசிவிட்டு அதன் தகவல்களை வைத்து இ-பாஸ் அப்ளை செய்தேன். 30 நிமிடத்தில் கிடைத்தது. மதியம் 2.30 மணிக்கு தேவையாக உடை, லேப்டாப், ஏற்கனவே வாங்கிய மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கும்பகோணம் தாண்டி திருப்பனந்தாள் என்னும் ஊரில் கார்-ஐ நிறுத்தி இரண்டு இட்லி சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொண்டேன். வலங்கைமான் செக்-போஸ்ட்-இல் போலீஸ் நிறுத்தினார்கள். இ-பாஸ்க்காக நான் கொடுத்த என்னுடைய அத்தனை தகவல்களையும் மீண்டுமொருமுறை சரிபார்த்தார்கள். என்னுடைய அம்மா நீடாமங்கலத்தில் துணை வட்டாட்சியராக இருந்ததாலும், அப்பா நீடாமங்கலத்தில் இந்தியன் வங்கியில் துணை மேலாளராக இருந்ததாலும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு எங்கள் குடும்பத்தை ஏற்கனவே பரிட்சயமாக தெரிந்திருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த காரணத்தினால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று temperature செக் செய்துவிட்டு வீட்டுக்கு செல்லும்படியும் செய்யவில்லையென்றால் மறுநாள் காலை மருத்துவ குழு வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்கள். அதனால் என் அப்பாவுக்கு போன் செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.

மன்னார்குடி வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30. அங்கே எனக்கு temperature 98.4. என்னுடைய தகவல்கள் மீண்டும் ஒருமுறை சரி பார்க்கப்பட்டது. நான் வந்த காரை அனுப்பிவிட்டு நானும் அப்பாவும் மட்டும் அங்கே கோவிட்-19 டூட்டி-யில் இருந்த SI-யுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் அப்பாவுக்கு நன்றாக தெரிந்தவர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் Pregnancy Ward இருப்பதனால் கோவிட்-19 சோதனை கிட் அவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது என்றும் உடனடியாக நாங்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். மணி 11 ஆகிவிட்டதால், காலை செல்லலாம் என்று நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

மாதிரிப் படம்

ஜூன் 3. காலை 10 மணி. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம். voluntary testing கொடுப்பதற்கு வந்திருப்பதாக பெயரை பதிவு செய்துகொண்டோம். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரும்வரை இரண்டு நாள் அங்கேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதற்கு தயாராகவே வந்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். மதியம் 3.15 மணியளவில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். அன்றிரவு தூக்கம் சரியாக வரவில்லை. சரியான நேரத்தில் சாப்பாடு தந்தார்கள். இத்தனை பெரியவர்களையும் குழந்தைகளையும் டெஸ்ட் செய்யும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமாக பராமரிப்பட்டிருக்கலாம்.

ஜூன் 4. மதியம் 4.30 மணி. ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து திருவாருர் மெடிக்கல் காலேஜ்-க்கு அழைத்து செல்வார்கள் என்றும் கூறினார்கள். அதற்கு முன் என் சென்னை முகவரி, ஆபிஸ் முகவரி, மன்னார்குடி வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். அதே போல் நான் சந்தித்த நபர்கள், கூட தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோருடைய தகவல்களும் வாங்கிக் கொண்டார்கள். 6:30 மணிக்கு திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டு-ல் சேர்த்தார்கள்.

எனக்கு ரிசல்ட் வரும்வரை இருந்த பதட்டம் ரிசல்ட் வந்ததும் இல்லை. சரி. பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இனி சரியாவதை பற்றி யோசிப்போம் என்று மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டேன்.

ஜூன் 4ம் தேதியிலிருந்து ஜூன் 13ம் தேதி வரை திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தங்கி சிகிச்சை பெற்றேன்.

ஜூன் 4. உடல் சோர்வைத் தவிர எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. பசி இல்லை. முக்கியமாக எனக்கு சத்து இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக சாப்பிடாததால் உடம்பு ரொம்ப சோர்வாக இருந்தது. இன்னொன்று மாத்திரை எடுத்துக் கொண்டதால் வாய் கசப்பாகவும் அதனால் சாப்பிட முடியாத நிலைமை இருந்தது. அன்றிரவு இசிஜி, XRAY, Blood Test, Pulse, Temperature, BP எடுத்தார்கள். எல்லாமே நார்மல்.

படிக்க:
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஜூன் 5. டாக்டர்களிடம் சென்று பசிக்காகவும் உடல் சோர்வுக்காகவும் மருந்து கேட்டேன். இந்த ப்ராசஸ்-ல் இது வரத்தான் செய்யும், பல்லை கடித்துக் கொண்டு நன்றாக சாப்பிட்டு விடுங்கள் சரியாகி விடும் என்று கூறினார்கள். அன்றிரவுதான் வாழ்க்கையின் கோரமான பூதத்தை சந்தித்தேன். இருமல் ஆரம்பமானது. இருமல் என்றால் பேய் தனமான இருமல். இருமினால் எல்லோருக்கும் தொண்டையை அட்ஜஸ்ட் செய்த திருப்தி இருக்கும் அல்லவா. இது அப்படியில்லை. நெஞ்சில் துப்பாக்கியால் துளைத்ததுபோல ஒரு வலி, எவ்வளவு இருமினாலும் போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி சளி இருக்கா இல்லையா வெளியே வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருமி இருமி இரண்டு கண்களும் பிதுங்கி வெளியே நின்றது. சாதாரண ஜுரத்துக்கே நமக்கு யாரவது ஒத்தாசையாக இருந்து பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கும். இது ஒரு கையறு நிலை. யாரும் நெருங்ககூட முடியாது.

ஜூன் 6. எனக்கு வயது 31. இத்துணை வருடத்தில் இப்படி ஒரு கோரமான கொடூரமான ஒரு இருமலை நான் உணர்ந்ததே இல்லை. கிட்டத்தட்ட மரணம் நெருங்குகிறது என்று ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நான் தீர்க்கமாக நம்பினேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக இருமினால் என் உயிர் பிரிந்துவிடும் என்று பயம் வலுத்துக் கொண்டே இருந்தது. நெஞ்சு வலி வேறு. இரவு உறங்கச் சென்றால் தூக்கத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று பயமாக இருந்தது. இருமலுக்கு மாத்திரை தந்தார்கள். சீக்கிரமே தூக்கமும் வந்துவிட்டது. நீண்டநாட்களுக்கு பிறகு ஆழ்ந்த உறக்கம்.

ஜூன் 7. இந்த ஒரு நாளில் மட்டும் நான் வாழ்வது அன்றுதான் கடைசி என்று என்னவோ சொல்லிக் கொண்டே இருந்தது. இருமலுடன் சேர்ந்து சளியும் வெளிவரத் துவங்கியது. சளியுடன் ரத்தம் அதிகமாக வந்தது. அதுதான் பயத்தை அதிகமாக்கி பீதியின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. பல நேரங்களில் இதுபோல் நடக்கும். வானிலை மாற்றம், பனிக்காலம் என பல சந்தர்ப்பங்களில் இப்படி ரத்தம் வரும். ஆனால் கொரோனாவை சிவப்பு கலரிலேயே நிறைய இடத்தில் காட்டி விட்டதால் பீதியாகிவிட்டது. இருமல், மரணபயம், பசியின்மை, உடல் சோர்வு, மாத்திரை, தூக்கம்.

ஜூன் 8. இருமல் வெகுவாக குறைந்திருந்தது. கால்களை தரையில் ஊன்றினால் நிதானமாக நடக்க முடிந்தது. கொஞ்சம் வலிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. முட்டையும் மதிய உணவும் சாப்பிட்டு நன்றாக தூங்கினேன். எழுந்து இரவு உணவு சாப்பிட்டு மீண்டும் தூங்கினேன்.

ஜூன் 9. ஜுரம் இல்லை. இருமல் இல்லை. சளி இல்லை. சுவாசப் பிரச்சனை இல்லை. பசித்தது. உடல் ஆரோக்கியமாக மாறுவதாக உணர்ந்தேன். நன்றாக சாப்பிட்டேன். மாத்திரை எடுத்துக் கொண்டேன். நன்றாக தூங்கினேன்.

ஜூன் 10 முதல் ஜூன் 12ம் தேதி வரை எல்லாமே மாறிவிட்டது. நன்றாக சாப்பிட்டேன். முழுக்க எனெர்ஜியுடன் இருந்தேன். எல்லோருக்கும் போன் போட்டு நன்றாக இருப்பதாக சொன்னேன். தூக்கம் வரும்போது தூங்கினேன். ஜூன் 12ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி காலை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அன்று மதியம் 12 மணிக்கு திருவாரூரிலிருந்து கிளம்பி 1:00 மணிக்கு மன்னார்குடிக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் டிராப் செய்தார்கள். நிம்மதியாய் ஒரு குளியலை போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டு தூங்கினேன். வாழ்க்கை வழக்கம் போல் மீண்டும் அழகானது.

உணவு.
காலை 6 மணிக்கு மஞ்சள் கலந்த பால்
காலை 8.30 மணிக்கு நெல்லித்தண்ணி, கபசுர குடிநீர், பொங்கல் (அ) இட்லி, சாம்பார்.
காலை 11 மணிக்கு வாழைப்பழம், அவித்த முட்டை (அ) சாத்துக்குடி ஜூஸ்.
மதியம் 12.30 மணிக்கு காய்கறி சூப்
மதியம் 1.30 மணிக்கு சாம்பார், சாதம், ரசம்,கூட்டு, நீர் மோர்
மாலை 4 மணிக்கு மஞ்சள் பால், சுண்டல், பிஸ்கட்
இரவு 9 மணிக்கு ஏதாவது உப்மா மற்றும் சாம்பார் அல்லது முட்டை குழம்பு.

சிகிச்சை.
ஜூன் 4 முதல் 13 வரை சிகிச்சையில் இருந்தேன். காலை ஒரு 12 மாத்திரைகளும், மதியத்திற்கு 4 அ 5 மாத்திரைகளும், இரவு 4 அ 5 மாத்திரைகளும் தந்தார்கள். சத்துக்கு, பாரா செட்டமால், சளி, இருமல், ஜிங்க் என்று தனி தனி மாத்திரைகள். அதில்லாமல் ஊசி எதுவும் போடவில்லை. தினமும் மருத்துவர்கள் PPE கிட் அணிந்து உள்ளே வந்து நலம் விசாரிப்பார்கள். சந்தேகத்தை பூர்த்தி செய்வார்கள். நம்பிக்கை சொல்வார்கள். எந்த இடத்திலும் யாருமே பயமுறுத்தவே இல்லை.

நான் சிகிச்சைக்காக சேரும்போது 11 பேர் இருந்தோம் நான் வெளிவந்த நாளில் 57 பேர் இருந்தார்கள். இதில் யாருமே உயிருக்காக போராடவெல்லாம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு மருத்துவர்களுடையது. 10, 10 நாளாக யாரோ குணமாகி போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் மருத்துவர்களுக்கு எங்கள் முகமெல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியாது. வாய்ப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் கைகளில் ஒரு முத்தமிட்டு வந்திருக்க ஆசைப்பட்டேன். அவ்வளவு பேரும் ஏதோ போருக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சீக்கிரம் வென்று விடுவார்கள் என்று நம்புவோம்.

இந்த வைரஸ் கிருமி நம்மில் யாருமே எதிர்பார்க்காதது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவர்களுக்குதான் எவ்வளவு நம்பிக்கை. எல்லாத்தையும் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று ஒவ்வொரு வருடமும் நல்ல மாணவர்களை தேர்ச்சி செய்து அனுப்பி வைத்துவிட்டு அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு தயாராகும் ஆசிரியர்கள் போல பலரையும் குணப்படுத்தி அனுப்பிவிட்டு நம்பிக்கையோடு அடுத்தடுத்த நோயாளிகளை வைத்தியம் பார்க்க பறந்துகொண்டிருக்கிறார்கள்.

தேவதைகள் என்றால் அப்படித்தானே.

சிகிச்சை கட்டணம்
Rs.0/- (ஜூன் 3 – ஜூன் 13, 2020)

நன்றி என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னுடைய பிசினஸ் க்ளையன்ட்ஸ். இவர்கள் தந்த நம்பிக்கையும் செய்த பிரார்த்தனைகளும்தான் எனக்கு மீண்டும் மீண்டும் என் மீதும் இந்த வாழ்க்கையின் மீதும் அதீத நம்பிக்கையை தந்துகொண்டே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் முத்தங்களும்.

– Mano Bharathi
14.06.2020

நன்றி : ஃபேஸ்புக்கில் மரு பிரபு மனோகரன் 

டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !

Finally டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி, தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைத்திருக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

படம் : நன்றி – பி.பி.சி

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.

ஏராளமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

இதில் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது ஏதோ புதிய, விலை உயர்ந்த மருந்து அல்ல என்பதுதான். ஏற்கனவே சந்தையில் உள்ள, மிக மிக விலை மலிவான மருந்து இது.

அதாவது 20 மாத்திரைகளின் விலை வெறும் ரூ. 3.74 தான். இந்த மருந்து 1960களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆர்த்திரிட்டிசிற்கும் ஆஸ்துமாவிற்கும் அளிக்கப்பட்டுவந்த ஸ்டீராய்ட் மருந்து இது.

படிக்க:
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !
♦ கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.

நோய்க்கு எதிராக உடல் ஆற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்குப் பெயர் ‘சைட்டோகைன் புயல்’ (cytokine storm). இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.

தற்போது உலகில் கொரோனாவுக்கு ரெம்டிசீவர் மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை இன்னும் தெளிவாகவில்லை. இந்த மருந்து கொரோனா அறிகுறிகளை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகக் குறைக்கிறது என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. மரணத்தைக் குறைக்கிறதா என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.

ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை எதையும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதையும் மனதில் கொண்டு இந்தச் செய்தியைப் படிக்கவும்.

இது தொடர்பான பிபிசி செய்திக்கான லிங்க் கீழே.

  • டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !

னசோர்வோடு நீங்கள் 29 வார்டுக்கு சென்றால் இந்த தங்கமான செவிலியரை காணலாம், ஆனால் இப்போது காணமுடியாது…

ஒதுக்கப்பட்ட மக்கள் வாழ்ற மாதிரிதான் septic ward29 இருக்கும், சீழ்பிடித்த கரங்கள், கால், கைகள் வெட்டப்பட்டு, அழுகிய நிலையில், அந்த துர்நாற்றத்தில் யாராலும் இருக்கவே இயலாது, ஆனால் தான் வாழ்ந்த வரையிலும், தன்னுடைய சேவை அனைத்தும் அந்த விளிம்புநிலை மக்களுக்காகவே இருந்தார்.

வார்டின் ஒரு பக்கத்தில் பெயர், ஊர் தெரியாத unknown நோயாளிகளை அக்கறையுடன் உணவளித்து பார்த்து கொள்வார்.

டாக்டர் நீங்க சாப்படிங்களா, டீ குடிக்கிறீங்களனு ஒவ்வொரு முறையும் ward ல் செல்லும் போது கூறுவார், இப்பொழுது எந்த மாணவருக்கு, போராசிரியருக்கு யார் கூறுவார் இப்படி💔,….

மூத்த செவிலியர் என்ற எந்தவிதமான அகங்காரம் இல்லாமல் சிரித்தப்புன்னகையோடே இருப்பார், அவரின் வேலையில் அசாத்திய பொறுப்புணர்வு வெளிப்படும்..

படிக்க:
♦ தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

She was very helpful & nice human being taking care of patient. she is one of the dedicated staff nurse.

சில தேவதைகள் தங்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் தங்கம் staff மட்டுமே கண்ணில் தோன்றுவார்கள்..

இன்றைக்கு தங்கம் தங்கமே
மீளாதுயரில் நானும்,
சென்றுவாருங்கள் தங்கமே😥
என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.
#ripstaffthangam💔

IOT,MMC RGGGH
(முன்னால் முதுநிலை மருத்துவமாணவர்கள்)

மரு பிரபு மனோகரன்
14/06/2020

நன்றி : ஃபேஸ்புக்கில் மரு பிரபு மனோகரன் 

தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !

0

பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, மற்றும் செயற்பாட்டாளர் வரவர ராவ் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 புகழ்பெற்ற அறிவுஜீவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இருவரும் “ஜோடிக்கப்பட்ட வழக்குகளில்” கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பெரும் கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் அவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நோம் சோம்ஸ்கி, ஜுடித் பட்லர், பார்தா சாட்டர்ஜி, ஹோமி. கே.பாபா, ப்ரூனோ லட்டூர், ஜெரால் ஹார்னெ, ங்கூகிவா தியாங்கோ ஆகியோரும் கையெழுத்திட்டோரில் அடங்குவர். மேலும் பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் போதுமான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கப் பெறாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கவிஞர் வரவர ராவ் மற்றும் பேராசிரியர் சாய்பாபா(வலது).

அந்த அறிக்கையில், “அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை என்பது அவருக்கு ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிகுமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை “பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்படும் தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே” குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளரும், புகழ்பெற்ற அறிவுஜீவியுமான 80 வயது கவிஞர் வரவர ராவ்-வும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

கடந்த மே28 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்ததையும் அதைத் தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, ”அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப்” பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பி அரசாங்கம் “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்” குறிப்பிட்டிருக்கிறது. “அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?

“ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரின் உடல் நிலை மற்றும் சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை உடனடியாக பிணையில் வெளிவிட்டு, அவர்களின் உயிர் வாழும் உரிமையை அவர்க்ளுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம். “ என்று அந்த அறிக்கை கோருகிறது.

முழு அறிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அறிவுஜீவிகளும் சமூக நீதி செயற்பாட்டாளர்களுமான பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரை விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

பெருங்கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

முறையான மருத்துவ பராமரிப்போ, தனது சக்கர நாற்காலி கூட கிடைக்கப் பெறாமல் இந்தியப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இந்தியாவில் உள்ள சிறையில் தற்போது நலிவுற்றிருக்கிறார். பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் சிறையில் அவர் நகர்வதற்கு – குளிக்கச் செல்வது போன்ற அடிப்படையான உடல்ரீதியான இயக்கங்களின் – உதவி செய்யக்கூட ஏற்பாடு செய்ய சிறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளனர்.

அவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

பேராசிரியர் சாய்பாபா மே 9, 2014 அன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறியதும் கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சியான இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-னுடனான இவரது தொடர்புகளை நிரூபிக்கும் ஆவணங்களையும், கடிதப் போக்குவரத்தையும் கண்டெடுத்ததாக போலீசு குற்றம் சாட்டியது. ஆனால் சாய்பாபாவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையில், அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுக்கோ அல்லது அவர் “அரசின் மீது போர் தொடுத்த” குற்றச்சாட்டுக்கோ தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.

“ஜி.என். சாய்பாபாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை மற்றும் அவரது வழக்கு விசாரணை, சர்வதேச வழக்கு விசாரணை தரத்தில் நடத்தப்படவில்லை.” என தாம் நம்புவதாக அம்னெஸ்டி இண்டர்நேசனல் என்னும் அமைப்பு சாய்பாபாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மீதான தனது கருத்தைக் கூறியுள்ளது.

படிக்க:
♦ கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

நம்பகத்தன்மை அல்லது விசாரணை, தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, முறையான மருத்துவ பராமரிப்பும் மருத்துவப் பிணையும் பெற பேராசிரியர் சாய்பாபா-வுக்கு உரிமை இருக்கிறது. தற்போது இந்திய சிறை அமைப்புகளில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகையில், ஆயுள் தண்டனை என்பது சர்வசாதாரணமாக மரண தண்டனையாக மாறிவிடும்.

அவரது கால்களின் பயன்பாட்டைத் முடக்கியுள்ள போலியோ பாதிப்புகளால் துன்புற்றுவரும் நிலையில், பேராசிரியர் சாய்பாபா சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டுள்ளார். தனது இயலாமையையும் கடந்து, அவர் ஓய்வற்ற சமூக நீதி செயல்பாட்டாளராகவும், உறுதியான மனித உரிமைகள் பாதுகாவலராகவும் இருந்துவந்தார். ‘ஆபத்திலிருக்கும் அறிவுத்துறையினர்’ என்ற அமைப்பின் சமீபத்திய அறிக்கை, பேராசிரியர் சாய்பாபா, “தனிச்சிறப்பான சமூகங்களின் இடப்பெயர்வு மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தி கனிம வளங்களைக் கொள்ளையிடும் தேசிய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தும் மற்றும் விசாரணை மேற்கொள்ளும் இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறது.

அவரது செயல்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைக்கான அவரது ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டதாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டு, பலரும் கூறியிருக்கின்றனர்.

கூடுதலாக, அவரது தாய் மொழியான தெலுங்கில் கடிதங்கள் பெறவோ, அனுப்பவோ சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத அவரது தாய் அவரைப் பார்க்க வருகையில், அவரையும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தனக்கு விருப்பமானவர்களோடு தொடர்புகொள்வது மறுக்கப்பட்டதோடு, மருத்துவ பராமரிப்பும் மறுக்கப்பட்டதொரு அரசியல் சிறைவாசியான தனது மகன் சிறையில் துன்புறுகையில், தற்போது அந்தத் தாய் தனது மரணப் படுக்கையில் இறுதிநிலை புற்றுநோயுடன் போராடிவருகிறார்.

இந்த பெருந்தொற்று காலத்தில் சாய்பாபாவின் பிணைக்கான கோரிக்கை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். விடுவிக்கப்பட்டால் சாய்பாபா யாரோடு தங்குவாரோ அந்த சகோதரர், கோவிட்-19 பாதிப்புக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது பொய். சிறையில் கோவிட்-19 நோய்த் தொற்றுவதற்கான பேராபத்தில் பேராசிரியர் சாய்பாபா இருப்பதாகவே தெரிகிறது.

தற்போது பேராசிரியர் சாய்பாபா சிறையில் அவ்வப்போது நினைவு தப்புவதும் நினைவு திரும்புவதும் என்ற நிலையில் இருக்கிறார். உதவிக்கு ஆள் இல்லாமல் கழிவறைக்குக் கூட செல்ல முடியாதநிலையில் இருக்கிறார். அவருக்கு உதவி வழங்க தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சாய்பாபாவை மோசமாக நடத்தும் இந்திய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் கொடூரத்தால் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். அவரது சிறைக்காவலர்கள் தொடர்ச்சியாக அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்குவதற்கு தங்களது இயலாமையையோ, அல்லது ஆர்வமின்மையையோ வெளிப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாகவும், கொரோனா வைரஸ் தற்போது இந்திய சிறைகளில் பரவிவருவதன் காரணமாகவும், பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டிருக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

80 வயதான கவிஞர் வரவர ராவ், புகழ்பெற்ற அறிவுஜீவியும் குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளருமாவார். கடந்த 60 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக உறுதியான கடப்பாட்டோடு செயல்பட்டுவருகிறார். பல பத்தாண்டுகளாகவே இந்திய அரசு பல போலி வழக்குகளில் இவரை இணைத்ததன் மூலம், இவரது குரலை ஒடுக்க நினைக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், 25 பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன.

விசாரணைக் காவல் காலத்திலேயே சுமார் 8 ஆண்டுகள் சிறையில் செலவிட்டுள்ளார். ஆனால் முந்தைய அனைத்து வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்பட்ட தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே கடந்த நவம்பர் 2018-ல் வரவர ராவ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மராட்டிய மாநிலம், நாவி மும்பையின் தலோஜா சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார். பல சர்வதேச அறிஞர்களும் PEN போன்ற சர்வதேச அமைப்புகளும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.

18 மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகும், அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் பதியப்படவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக மராட்டிய மாநிலம் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுப்பது முக்கியமானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மும்பை தலோஜா சிறையில் சிறைவாசி ஒருவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது அரசாங்கம். கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் துன்புற்றுவரும் வரவர ராவ், மிகவும் பலவீனமான மருத்துவ நிலையில் இருக்கிறார்.

சமீபத்தில், மே28, 2020 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்தார். அவர் நிலை மோசமானதும் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது. அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.”

ஜி,என். சாய்பாபா மற்றும் வரவர ராவின் நலிவுறும் ஆரோக்கிய நிலைமைகளையும், சிறைகளில் கோவிட்-19 பரவிவரும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அவர்க்ள் இருவரின் உயிருக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவே நம்புகிறோம். அவர்களது உயிர்வாழும் உரிமையைக் காக்க அவர்களை உடனடியாக பிணையில் வெளியே விடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர். 

விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் ! | கலி. பூங்குன்றன்

விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் !

ந்திரம் என்பது 6 அங்கங்களைக் கொண்டதாம்! மந்திரத்தை கூறியவர் 1 – ரிஷி, 2 அந்த மந்திரத்திற்கான உச்சரிப்புகள் -சந்தஸ், 3. அந்த மந்திரத்திற்கான – தேவதை, 4. மந்திரம் அடங்கியுள்ள பகுதி – பிஜம், 5. மந்திரத்தின் ஆற்றல் – சக்தி, 6. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது – கீழகம் போன்றவையாம். ஆனால் இன்றைய நிலை என்ன?

அதாவது ‘இந்த உலகம் கடவுளுக்கு அடக்கம், கடவுள் மந்திரத்திற்கு அடக்கம், மந்திரம் பார்ப்பனர்களுக்குள் அடக்கம், ஆகவே பார்ப்பனர்கள்தான் கடவுளை விட உயர்ந்தவர்கள் என்று கூறும் பார்ப்பனர்கள், எந்த வித பெரும் பிணி, பீடை, பெருநாசம் போன்றவற்றையும் மந்திரத்தால் அடக்கிவிடுவோம் என்கிறார்கள். வைணவப் பார்ப்பனர் கூறுகிறார் – துளசி தீர்த்தம் போதும் பெரு நோய் ஓட என்று! சைவப் பார்ப்பனர் கூறுகிறார் வில்வமே பெருநோய்க்கு மருந்து என்று! இடைப்பட்ட மக்கள் வேப்பிலை, துளசி, வில்வம் என மூன்றையும் தண்ணீரில் போட்டு மஞ்சள் கலந்து தெளிக்கிறார்கள். கேட்டால் எந்த நோயும் அண்டாது என்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒரு வேடிக்கை, கோவில்களில் ஆல்கஹால் (சாராயம்) கலந்த கிருமி நாசினியைத் தெளிக்கிறார்கள். ஏன் தெரியுமா? பொதுவாகவே கோவில்களில் பூஜை செய்யும் கற்சிலைகள்மீது நெய், பால், தயிர் உள்ளிட்ட பல பொருட்களை ஊற்றிக் கொட்டி அதை பிசுபிசுப்பாகவே வைத்திருப்பார்கள். காற்றில் எந்த ஒரு கிருமிகள் வந்தாலும் மிகவும் எளிதாக இந்த பிசுபிசுப்புகளில் ஒட்டிக்கொள்ளும், ஆகவே, கரோனா தொற்று முடிவிற்கு வரும்வரை சிலைகளில் எந்த ஒரு பொருளாலும் அபிஷேகம் செய்யமாட்டார்களாம். முடிந்தவரை சிலைகளை நன்றாக பிசுபிசுப்பு நீக்கி சுத்தப்படுத்தி காய வைக்க வேண்டும். பிசிபிசுப்பு நீங்க ஆல்கஹால் கலந்த திரவம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெறும் தண்ணீரை ஊற்றிக் கழுவினால் பிசுபிசுப்பு போகாது. இவர்கள் கூறுவதுபோல் இலை, மஞ்சள், தண்ணீர் போன்றவைகளை ஊற்றி கழுவினால் கிருமிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளத்தில் அதிகம் பேர் நீராடி அந்த நீர் மிகவும் சீர்கெட்டுவிட்டதாகவும், அப்பகுதி சேறுகளில் ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளது என்றும் கூறி மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி தெளிக்க முயன்றபோது, இதே பார்ப்பனர்கள் என்ன கூறினார்கள்?

கும்பகோண மகாமகக் குளத்து நீரின் புனிதத் தன்மையைக் கேலி செய்வதா? நோய்ப்பிணி நீக்கும் தெய்வீகக் குளத்து நீர் மாசடைந்து விட்டது என்றும், அதன் கரைப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என்றும் கூறுவது கோடிக் கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. கோடிக் கணக்கில் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கூடும் மக்கள் இருந்த போதிலும் உத்தரப்பிரதேச அரசு கிருமிநாசினி தெளிப்பதில்லை காரணம் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தமாட்டார்கள்; மேலும் கும்பமேளாவில் கூடும் மக்களின் ஆன்மீகப் பலத்தால் அவர்களுக்கு எந்த நோயும் அண்டாது. ஆனால், தமிழகத்தில் ஆளும் அரசு இந்து விரோத செயல்களைச் செய்கிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பொங்கித் தள்ளவில்லையா?

அதில் பலர், இந்து அறநிலையத்துறை அரசின் கைகளில் இருப்பதால்தான் இதுபோன்ற நம்பிக்கைச் சீர்குலைவு நடவடிக்கையில் இறங்குகிறார்கள். ஆகவே, அரசு கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பதைக் கைவிட்டு பக்திமான்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட கோவில் நிர்வாகிகளின் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும் என்று முழங்கினார்கள்.

படிக்க:
கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

இன்று என்ன நடக்கிறது? சிலைகளுக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்க முதலில் கொதிநீரை ஊற்றிக் கழுவுகிறார்கள். பின்னர் அதை ஏர் டிரையர் என்னும் காயவைக்கும் கருவி கொண்டு காயவைக்கிறார்கள். அதன் பிறகு சாராயக் கலவை அதிகம் கொண்ட கிருமிநாசினி கொண்டு தூய்மைப் படுத்துகிறார்கள். கரோனா தொற்று முடியும் வரை சிலைக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யமாட்டார்களாம். அதே போல் மாலைகள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களை சாத்த மாட்டார்களாம். முக்கியமாக பக்தர்கள் கொண்டுவரும் எந்த பொருளையும் சாமிக்கு படைக்க மாட்டார்களாம். பக்தர்களே தூரமாக நின்று சிலைக்கு முன்னால் அவற்றைக் காண்பித்துவிட்டு அப்படியே சென்றுவிடவேண்டுமாம். பார்ப்பன அர்ச்சகர் தட்டில் விழும் காசையும் நோட்டையும் கையில் கிளவுஸ் போட்டு சில்லறைகளைத் தனியாக பிரித்து கொதிநீரில் போடுவார்களாம். ரூபாய் நோட்டுகளை அயன்பாக்ஸில் வைத்து தேய்த்துக் கொள்வார்களாம்.

அர்ச்சகர்கள் பெரும்பாலும் முகக்கவசத்தோடுதான் அர்ச்சனைத் தட்டை நீட்டுவார்கள். இன்னும் எத்தனைப் பாதுகாப்பு? இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப்பானுக்கு நன்றாகத் தெரியும் கற்சிலைக்கு எந்த சக்தியும் கிடையாது. அதனால்தான் சிலைக்கு அருகில் இருந்து பூஜை செய்யும் தனக்குக் கரோனா நோய்த்தொற்று வந்துவிடுமோ என பயந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இவ்வளவும் செய்கிறார்கள்.

கரோனா பல கெடுதல்களைச் செய்துள்ளது – ஆனாலும் கடவுள் சக்தி என்ற பொய்யைத் துடைத்துத் தூர எறிந்து விட்டது என்பது மட்டும் உண்மையே!

நன்றி : ஃபேஸ்புக்கில் கலி. பூங்குன்றன் 

டைப் – 1 நீரிழிவும் அதற்கான அருமருந்தும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

12 வயதான பெண் பிள்ளை, உடல் மெலிந்து நலிந்திருந்தாள். முகத்தில் தோல் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. காது கேட்காத பாட்டியுடனும், தாத்தாவுடனும் தங்க லாக்டவுனுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்தவள் பள்ளி விடுமுறையாதலால்
இங்கேயே தங்கி விட்டாள்.

தாத்தா பாட்டி வீட்டில் அதிக செல்லம் ஆதலால் தினமும் சாக்லேட் / க்ரீம் பிஸ்கட் என்று உண்டிருக்கிறாள். அவளது உடல் எடை கடந்த நான்கு மாதங்களில் பத்து கிலோ குறைந்துள்ளது.

சோர்வு, எதிலும் நாட்டமின்மை, கவனக்குறைவு, எப்போதும் தூக்கம், எப்பொதும் பசி – பசியென்றால் அகோரப்பசி – எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள்.

என்ன சாப்பிட்டாலும் எடை போடவில்லை என்பது பாட்டியின் கவலை, இரவு நேரம் தன்னைப்போலவே மூன்று முறை சிறுநீர் கழிக்கிறாள் என்பதும் பாட்டியின் கூடுதல் கவலை..

இந்த அறிகுறிகளை வைத்து அந்த பெண் பிள்ளைக்கு வந்திருக்கும் நோயை 95% யூகித்து விட்டேன்.

உடனே ரத்த சர்க்கரை அளவு பார்க்கும் மானியை எடுத்து விரல்களில் குத்தி சர்க்கரை அளவுகளை பார்த்தேன். எண்ணியது போலவே 594mg/dl என்று காட்டியது.

ஆம்… இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான டைப் ஒன்று நீரிழிவு திறன் படைத்தோர்களில் ஒருத்தியாய் இணைந்து விட்டாள் அந்த குழந்தை. சரி.. இனி தான் எனக்கு சவால் ஆரம்பிக்கிறது

அந்த காது கேளாத பாட்டியிடமும், எதுவும் புரியாமல் இருக்கும் அந்த குழந்தைக்கும் பேதைக்கும் இடையில் உள்ள பருவத்தில் இருக்கும் பிள்ளைக்கும், டைப் ஒன்று நோயைப்பற்றி பேசி புரிய வைத்தேன். (என்பதை விட தொண்டை தண்ணீர் வற்ற வற்ற கத்தி புரியவைத்தேன்.)

காரணம் நான் பேசியது அவளது பாட்டிக்கு கேட்கவில்லை, நான் போட்டிருந்த முகக்கவசத்தை தாண்டி அந்த பாட்டியின் பழுதடைந்த செவிப்பறைகளை என் குரல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கிட்டத்தட்ட நான் கத்திக்கொண்டிருந்தேன்.

பாட்டி படிக்காதவர், அதனால் நான் கூறியது பாதிக்கும் பாதி புரியவில்லை. என்னால் இயன்ற அளவு அந்த குழந்தைக்கும் பாட்டிக்கும் புரிய வைத்து விட்டு முடிக்கும் போது அவளது தாத்தா உள்ளே வந்தார்.

அவருக்கு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். ஆனால் இம்முறை அதிக ஒலி தேவைப்படவில்லை. அவர் ஓரளவு புரிந்து கொண்டார். உடனடியாக சில ஆயிரங்களுக்கு பரிசோதனை எடுக்கும் அளவு வசதி கிடையாது.

தந்தை மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் ஆட்டோ ஓட்டுகிறார். தாய் இவளின் இன்னும் சில சகோதரிகளை பார்த்துக்கொண்டு அங்கு இருக்கிறார். இன்சுலின் பரிந்துரைத்தேன்.

அதை ஏன் போட வேண்டும்?
ஏன் அதை நிறுத்தக்கூடாது?
அதை எப்படி போட வேண்டும்?
எந்த அளவுகளில் போட வேண்டும்?
எங்கு போட வேண்டும்?
எப்போது போட வேண்டும்?
என்று வரிசையாக கூறினேன்.

அடுத்து அந்த குழந்தையிடம் லோ சுகர் குறித்தும் அப்படி ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிறு பாடம் நடத்தினேன்.

தாத்தாவிடமும் பாட்டியிடமும் இந்த பிள்ளைக்கு இன்சுலின் போட்டால் மட்டுமே குணமாகும் டைப் ஒன் டயாபடிஸ் நோய் வந்துள்ளது. இதற்கு இன்சுலின் மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு மருந்து. எனவே இன்சுலினை ஒரு போதும் நிறுத்தக்கூடாது.
யார் கூறினாலும் நிறுத்தக்கூடாது என்று அறிவுரை எச்சரிக்கை வழங்கினேன்.

அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள், அடுத்து அந்த குழந்தையிடம்
உணவு கட்டுப்பாடு குறித்து விளக்கி எழுதிக்கொடுத்தேன். அவள் அதன் மீது பெரிய அக்கறை காட்டியது போல் தோன்றவில்லை.

படிக்க:
♦ O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

இருப்பினும் இனிப்பு / பேக்கரி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மட்டும் கடுமையாக கூறினேன். அவளும் ஆமோதித்து தலையாட்டினாள், அவளது தாத்தா இன்சுலினை வாங்கி வந்தார். அதை எப்படி எப்படி கொடுப்பது என்று ஒரு டெமோ காட்டினேன்.

அவளது வீட்டருகே ஓய்வு பெற்ற செவிலியர் இருக்கிறார் என்பதும் அவர் இந்த ஊசியை போட்டுவிடுவார் என்பதும் ஒரு நிம்மதி பெருமூச்சு. இப்படியாக இன்று ஒரு டைப் ஒன்று நீரிழிவு திறன் கொண்ட ஒரு குழந்தையைக் கண்டறிந்தேன்.

படத்தில் தாங்கள் பார்ப்பது இன்சுலின் ஊசி கிடைக்கப்பெற்ற டைப் ஒன்று நோய் பாதிக்கப்பட்ட சிறுவன்.

fஒரு நோயைக் கண்டறிவதைக் காட்டிலும் அந்த நோய்க்கான சிகிச்சையை முன்னெடுத்துச் செல்வது, அதை நோயாளியை முழுமையாக உடன்படுமாறு செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயாதலால் இந்த நோயை முதன்முதலில் கண்டறியும் வாய்ப்பு என்பது ஆயிரத்தில் ஒரு மருத்துவருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இன்று அந்த நல்லவாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றியும் புகழும்.

உலகில் வாழும் டைப் ஒன்று நோயாளிகள் அனைவருக்கும் உயிர் காக்கும் அமிழ்தம் இன்சுலின் திரவத்தை கண்டறிந்த பாண்டிங் மற்றும் பெஸ்ட் சகோதரர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

சில நாட்களில் மரணடைந்திருக்க வேண்டிய அந்த சிறுவன் பல ஆண்டுகள் நவீன மருத்துவ கண்டுபிடிப்பான இன்சுலினால் உயர் வாழ்ந்தான் என்பது வரலாறு.

இறைவனுக்கே புகழனைத்தும்

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !

0

மாணவ செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கரின் சிறைவாசம் மற்றும் அவரது பிணையை மறுப்பதில் நீதிமன்றங்களின் கடமை ஆகியவை அரசியலமைப்பின் உயிர்ப்பை சார்ந்து, சில அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன. இது முதலில் ஸர்கரைப் பற்றியது, ஆனால் அவர் கட்டாயமாக, இந்தியாவின் ஆன்மாவைத் தேடும் ஆழமான, தேடலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் சமூகவியலில் ஆய்வு அறிஞரான 27 வயதான ஸர்கர், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 10 ஆம் தேதி, போக்குவரத்தைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை பெற்ற பின்னர், 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் ஏப்ரல் 13 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி இறுதியில் டெல்லியைச் சுற்றி வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் ஒரு சதித்திட்டத்தில் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சஃபூரா சர்கார்

உண்மையில், ஸர்கர் பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அமைதியான பெண்கள் மற்றும் மாணவர்கள் தலைமையிலான எதிர்ப்பில் பங்குபெற்றிருந்தார். குறிப்பாக டெல்லியின் ஷாஹீன் பாக் சுற்றுப்புற பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சஃபூர் ஸர்கர் கர்ப்பமாக இருந்தார்.

ஒரு பெருநோய்த் தொற்று ஊரடங்கின் போது அமைதி வழியைப் பின்பற்றிய ஒரு கர்ப்பிணி முஸ்லீம் எதிர்ப்பாளருக்கு எதிரான அரசின் மிருகத்தனம், இந்த நேரத்தில் நமது அரசியலமைப்பு சிக்கியுள்ள ஆழமான அபாயங்களைப் பற்றி, நாம் மிக கீழான நிலையை அடைந்துவிட்டோம் எனக் கூறுகிறது. ஸர்கரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை வேண்டுமென்றே மறுப்பதும் பெருநோய்த் தொற்று சூழலில் சிறைக்குள் அடைப்பதும் அரசு அடக்குமுறையின் ஒரு பகுதியாகும்.

விவரிக்க முடியாத அரசு நடவடிக்கை

வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் பிரிவு 21 -இன் மீறலை விட இது மிகவும் கடுமையானது. இந்த அரசின் சேவையில் உள்ள ஆயுதமேந்திய இந்துத்துவா படைகள், ஊடகங்களில் அதன் ஆதரவாளர்கள், ஆயுதமேந்திய போலீசு மற்றும் அதன் கூட்டு குற்றவியல் நீதி அமைப்பு ஆகியவை ஸர்கர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்தே அவரை காவலில் வைக்கின்றன. அவருக்கு எதிரான வழக்கு தெளிவாக குறிவைக்கப்பட்ட ஒன்று, நிர்வாகத்தின் பழிவாங்கும் தன்மை உடையது இல்லையா?

ஸர்கரின் எதிர்ப்பு மற்றும் அரசியலமைப்பு பெயரில் நீதிமன்றங்களால் அவர் சார்பாக தலையிடுவதற்கான அவசரம் இல்லாதது பற்றி என்ன சொல்கிறது? அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நியாயத்தன்மை, வரையறுக்க முடியாத அரசு நடவடிக்கைக்கு அவர்கள் மறைமுகமாக மதிப்பிடுவதன் மூலம் பாதிக்கப்படுகிறது.

படிக்க:
♦ கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

ஸர்கர் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம், 1967 கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் போலவே, அரசின் தண்டனையையும் கருத்தில் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எந்தவொரு எதிர்ப்பையும் இது குற்றமாகவே பார்க்கிறது. இதில் இரண்டு வெவ்வேறு வகை குற்றங்கள் உள்ளன: “சட்டவிரோத நடவடிக்கைகள்” மற்றும் “பயங்கரவாத நடவடிக்கைகள்”.

2008 மற்றும் 2013 -க்கு இடையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தரங்களுக்கு விடாமுயற்சியுடன் செயல்படுவதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டத்தின் பிரிவு 2 (ஓ) “சட்டவிரோத செயல்பாடு” என்பதை வரையறுக்கிறது “அத்தகைய தனிநபர் அல்லது சங்கம் (ஒரு செயலைச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேசுவதன் மூலமாகவோ அல்லது எழுதப்பட்டதாகவோ அல்லது அறிகுறிகளால் அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால் அல்லது வேறுவிதமாகவோ), – (ii) இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும், கேள்விகள், இடையூறுகள் அல்லது நோக்கம் கொண்டவை; அல்லது (iii) இது இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தும் அல்லது நோக்கமாகக் கொண்டது ”. அத்தியாயம் IV-VI (பிரிவுகள் 15-40) பயங்கரவாத குற்றங்கள் மற்றும் அமைப்புகளை மையமாகக் கொண்டுள்ளது.

ஜூன் 4 ம் தேதி டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஸர்கரின் பிணை விசாரணையில் அரசு தரப்பு வழக்கு, மற்றும் நீதிபதி ஒப்புக் கொண்டார், “ சட்டம் மற்றும் ஒழுங்கின் ஒரு கோளாறு அல்லது இடையூறு உருவாக்கும் போக்கைக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு, முழு அளவிலும் நகரம் அதன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது மற்றும் முழு அரசாங்க இயந்திரங்களும் ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு வரப்படுகின்றன, இதுபோன்ற செயல்பாடு 2 (ஓ) உபா’ என்பதன் அர்த்தத்திற்குள் சட்டவிரோத செயலாக கருதப்படும். பிப்ரவரி 23 அன்று ஸர்கர் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு வழிவகுத்த ஒரு தூண்டும் விதமான உரையை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, இது அவரது வழக்கறிஞர்களால் தவறானது என மறுக்கப்பட்டது.

நீதிபதியின் பார்வையில் வழக்கின் தகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், நீதிமன்ற உத்தரவின் ஒரு ஆய்வு, வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் அறிக்கைகளிலிருந்து நீதிபதி பாதுகாப்பாக ஊகித்திருப்பதைக் காட்டுகிறது, குறைந்தபட்சம் “சாலையை முற்றுகையிடுவதற்கான சதித்திட்டம்” இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது ”. இது ஒரு “சட்டவிரோத கூடுமை” ஆகும், ஏனென்றால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கூட்டுவது “எந்தவொரு குற்றத்தையும் செய்ய பொதுவான பொருள்” அது சட்டவிரோதமானது.

சதி குற்றச்சாட்டுகள்

“குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இவ்வளவு அளவிற்கு இடையூறு விளைவிக்க சதி செய்துள்ளனர், இது ஒரு முன்னோடியில்லாத அளவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும்” என அரசு தரப்பு சொன்னதை நீதிமன்றம் மறுக்கவில்லை. இது தொடர்பாக எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை.

அரசு தரப்பில் சொல்லப்பட்ட சதி குற்றச்சாட்டு தொடர்பில் சொல்லப்பட்ட நிகழ்வில் ஸர்கர் உடல் ரீதியாக அந்த இடத்தில் இல்லை என்ற காரணத்தினால் சதி குற்றச்சாட்டு மறுக்கப்பட்டபோது, நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று வழக்கை முன்கூட்டியே கவனித்தது, சதித்திட்டத்திற்கு முதன்மையான ஆதாரங்கள் இருப்பதால், உடல் ரீதியாக இல்லாதபோதும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே எனக்கூறியது.

அவரது பாதிக்கப்படக்கூடிய உடல் நிலை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அது “சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளருக்கு” அவருக்கு “ஆபத்தான மருத்துவ நிலை” கொடுக்கப்பட வேண்டிய போதிய மருத்துவ உதவியை வழங்குமாறு அறிவுறுத்தியது.

மூன்றாவது முறையாக பிணை மறுக்கப்பட்டது, ஏனெனில் கற்றறிந்த நீதிபதியின் வார்த்தைகளில், “நீங்கள் நீருபூத்த நெருப்புடன் விளையாடுவதைத் தேர்வு செய்யும்போது, அதில் இருக்கும் தீப்பொறியை சற்று தூரம் கொண்டு சென்று நெருப்பைப் பரப்பியதற்கு காற்றைக் குறை கூற முடியாது”.

நீதிமன்றம் “ஆவணங்களில் கிடைக்கும் பொருட்களின் புனிதத்தன்மை குறித்து அக்கறை இல்லை, இருப்பினும், ஆவணங்களில் கிடைக்கும் பொருள்களைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரர் / குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கூற முடியாது” என கூறியது. எவ்வாறாயினும், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் 2 (ஓ) இன் கீழ் “சட்டவிரோத நடவடிக்கை” மற்றும் 2 (ப) “சட்டவிரோத கூடுகை” தொடர்பான வழக்கு விசாரணையால் செய்யப்பட்ட வழக்கு என்றாலும், நீதிமன்றம் “சட்டரீதியான” பிரிவு 43 (டி) (5) [இது] இன் கீழ் தடை விதிக்கப்படுகிறது, இது உடனடி வழக்கில் கவனத்துக்கு வருகிறது ”.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

நீதித்துறை கோழைத்தனம்

இது அத்தியாயங்கள் IV (“பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தண்டனை”) மற்றும் VI (“பயங்கரவாத அமைப்புகள்”) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிபந்தனைகளை வகுக்கும் ஒரு பிரிவு. பிரிவு 43 (டி) (5) இன் படி, பிணையை பரிசீலிக்க மறுப்பது “அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்மையானது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்ற நீதிமன்றத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்”.

தனிப்பட்ட சுதந்திர விவகாரத்தில் முக்கியமான நீதித்துறை விவேகம், நீதிமன்றத்தால் “சட்டரீதியான தடை” என்று பொருள்படும் “நீதித்துறை கோழைத்தனம்” என்ற உன்னதமான எடுத்துக்காட்டில் – இது மறைந்த நீதிபதி லீலா சேத் பயன்படுத்திய மற்றும் 2018 இல் நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் பாராட்டப்பட்ட மேற்கோள் ஆகும்.

இன்னும் கடுமையான குறைபாடுகள் உள்ளன. வழக்கின் உண்மைகள் பற்றிய விவாதம் “பயங்கரவாத நடவடிக்கைகளை” குறிக்கவில்லை. பதிவுசெய்யப்பட்ட பொருள் கடுமையான குறைபாடுகளைக் கொண்டிருக்கக்கூடும் என்று நீதிமன்றம் ஒப்புக் கொண்டது, ஆனால் ஸர்கரைக் காவலில் வைக்க போதுமான தீவிரமான வழக்கு இருப்பதை ஏற்றுக்கொண்டது. இந்த உத்தரவின் மிக மோசமான பிழை என்னவென்றால், வழக்கு 43 இன் (டி) (5) இன் கீழ் அரசு தரப்பு வாதத்துடன் இணங்குவதற்கும், பிணையை மறுப்பதற்கும், நீதிமன்றம் “சட்டவிரோத செயலை” “பயங்கரவாத நடவடிக்கைகளுடன்” தொடர்புபடுத்தியது. வழக்கு விசாரணையின் ஒரே குறிப்பு “சட்டவிரோத நடவடிக்கைகள்”.

பிரிவு 43 (டி) (5) இன் “சட்டவிரோத” நடவடிக்கைக்கு (“பயங்கரவாத நடவடிக்கை” அல்ல) வெளிப்படையாக தன்னிச்சையாக விண்ணப்பிக்கப்படுகிறது, இதன் விளைவாக விசாரணைக்கு முன்பே முறையற்ற தண்டனை கிடைக்கும்.

இறுதியாக, அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்படி இந்தியாவுக்கு எதிரான அதிருப்தி என்று நீதிமன்றத்தால் விளக்கப்படுகிறது.

பிணை விசாரணையில், வெற்று பெட்டிகள் மற்றும் பாட்டில்கள், கற்கள் மற்றும் செங்கற்கள் தொடர்பான கஜூரி காஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இருந்து அரசு தரப்பு ஒரு குறிப்பை சமர்ப்பித்தது. எனவே முற்றிலும் சூழலுக்கு வெளியே, “டெல்லி கலவரங்கள் நகரத்தின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைப்பதற்கும், வலுக்கட்டாயமாகவும் வன்முறையிலும் ஈடுபடுவதன் மூலம் அரசாங்க இயந்திரங்களை முடக்க ஒரு பெரிய சதித்திட்டத்தின் விளைவாகும்” என்று நீதிமன்றம் கருதியது.

குற்றவியல் பொறுப்பை பொருத்துதல்

பெருந்திரள் வன்முறை மற்றும் உயிருக்கு மற்றும் சொத்துக்களுக்கு அளவிட முடியாத தீங்கு, மற்றும் வன்முறையைத் தூண்டுதல் பிப்ரவரி பிற்பகுதியில் வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்களை குறிவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட உண்மைகள், விவரங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து எந்தவொரு நீதித்துறை கலந்துரையாடலும் அல்லது கவனமும் இல்லாமல், இந்த வழக்கில் ஒரு முஸ்லீம் பெண் மீது குற்றவியல் பொறுப்பை பொருத்த நீதிமன்றம் விரைவாக செயல்பட்டது. பிப்ரவரி 26 ம் தேதி தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார், கலவரத்திற்கு முன்னதாக அவர்களின் தீங்கு விளைவிக்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பட்டன, ஆன போதிலும்..

இதைப் புரிந்துகொண்டு பகிரங்கமாக விவாதிக்க வேண்டும். எவை நீருபூத்த நெருப்பு, எந்த காற்று, எந்த தீப்பொறி, எவ்வளவு தூரம், எந்த நெருப்பு? இது தனிப்பட்ட சுதந்திரத்திற்கான ஒரு வழக்கு. அடிப்படை உரிமைகளை பின்வாங்காத கொள்கை – உண்மையில் அரசியலமைப்பு ஒழுக்கநெறி – உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். மேலும் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை முழுமையாக அனுபவிப்பது ஆகியவை கண்ணியமான மனிதத்துக்குரிய உட்பொதியாக உள்ளன.

இந்தியாவின் ஆன்மாவின் வரையறைகளை வடிவமைத்த ஐந்து அடித்தள நபர்கள் எனக்கு முன் பீனிக்ஸ் போல எழுகிறார்கள். அவர்கள் பி.ஆர்.அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ஜெய்பால் சிங், தாட்சாயணி வேலாயுதன், எம்.கே. காந்தி. monumental Framing of the Indian Constitution: A Study in 1968 -இல் பி.சிவராவ் இவ்வாறு பதிவு செய்கிறார்: “அம்பேத்கருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆலோசனை இருந்தது: பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, குறைந்தபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளை தங்கள் தொகுதிகளில் சிறுபான்மை சமூகங்கள் வாக்களிக்க வேண்டும் இது பெரும்பான்மை சமூகங்கள் மீது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒருவித தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதாக இருந்திருக்கும்… ”

அரசியலமைப்பு சபையில் சிறுபான்மையினர் நிச்சயமாக மத சிறுபான்மையினர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடியினரைக் குறிப்பிடுகின்றனர் – எனவே அம்பேத்கர் பரிந்துரைத்திருப்பது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பெரும்பான்மை வேட்பாளர் மீதான ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்கெடுப்பாகும் (பிரிவினைக்குப் பின்னர்). அவரின் தனிமையான குரல் (பெரும்பாலும் நடந்ததைப் போலவே) – இந்த முன்னறிவிப்பானது, குறிப்பாக ஸர்கர் நமக்கு முன் வைத்த கேள்விகள் மற்றும் அவரது சிறைவாசத்தை முன்னறிவித்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில் குறிப்பாக நினைவுகூறத்தக்கது.

ஆசாத் குறித்த தனது படைப்பில் சயேதா ஹமீத் சுட்டிக்காட்டுகிறார்.., சுதந்திரத்துக்கு முன் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வைத்து, தடுப்பதிகார உரிமை குறித்து அம்பேத்கரின் யோசனையை எதிர்பார்த்தார், 1940 இல் அவர் அறிவித்தார்: “எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வடிவமைக்கப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பும், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும். அவற்றை பாதுகாப்பதற்குரிய தேவையான பாதுகாப்புகள் என்ன…? இந்த தீர்ப்பு சிறுபான்மையினருடன் பெரும்பான்மையுடன் இல்லை [மற்றும்]… எனவே, அவர்களின் ஒப்புதலால் வடிவமைக்கப்பட வேண்டும், பெரும்பான்மை வாக்குகளால் அல்ல. ”

ஷாவுன்னா ரோட்ரிக்ஸ் தனது “அபுல் கலாம் ஆசாத் மற்றும் இந்திய அரசியலமைப்பின் இஸ்லாமிய நியாயப்படுத்தலுக்கான உரிமை” என்ற கட்டுரையில் ஆசாத்தின் அரசியல், சவால் செய்யப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எல்லைகளை மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டது. “நெறிமுறை, தார்மீக மற்றும் இறையியல் வாதங்கள்” இந்திய மரபுகளின் பிற ஆதாரங்களில் இருந்து, இஸ்லாம், ஒரு மாறுபட்ட மக்களுக்கான ஒருங்கிணைந்த சட்ட விதிகளின் தன்மை, நியாயப்படுத்துதல் மற்றும் விமர்சனம் ஆகியவற்றைப் பற்றியது ” என வெளிப்படுத்தியது.

இதைச் செய்வதில், சுதந்திர இந்தியாவில் சுய ஆட்சியின் பன்மை அடித்தளங்களையும், சட்டத்தின் ஆட்சியையும் அவர் சுட்டிக்காட்டினார், இது அரசியலமைப்பை வடிவமைப்பதில் ஒரு உறுதியான பங்கைக் கொண்டிருந்தது.

காலனித்துவ மற்றும் பெரும்பான்மை அடிபணியலின் ஆதிவாசி அனுபவத்தின் மீதான அரசியல் வரைபடத்தின் பிற பரிமாணங்களை தன்னுடைய சுய ஆட்சியின் வரையறையில் கொண்டு வந்த ஜெய்பால் சிங் : “புதிய அரசியலமைப்பு தீர்மானிக்கப்படுவது சிறுபான்மையினருக்கான ஏற்பாடுகளால் அல்ல, ஆனால் அவை செயல்படும் முறையால் அவர்களின் சிறந்த நன்மைக்காக” அரசியலமைப்பு சபையில் உள்ள ஒரே தலித் பெண் தாட்சாயணி வேலாயுதனின் அனுபவங்கள் தீண்டாமையை எதிர்ப்பதற்கான தலித்துகளின் துன்பம், பின்னடைவு மற்றும் எதிர்ப்பு ஆகியவை அரசியலமைப்பை உருவாக்கின.

1922 இல் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியின் அறிக்கையை நாம் மறக்க முடியுமா: “ஈர்ப்பை சட்டத்தால் தயாரிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது… ஒரு அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைவது ஒரு நல்லொழுக்கமாக நான் கருதுகிறேன், இது முந்தைய எந்தவொரு முறையையும் விட இந்தியாவுக்கு அதிக தீங்கு விளைவித்தது… அத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கும், அமைப்பு மீது ஈர்ப்பை வைத்திருப்பதை பாவமாக நான் கருதுகிறேன். ”

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய அரசாங்கம், இஸ்லாமோபோபிக், இந்துத்துவ ஆட்சிக்கு எதிராக சஃபூரா சர்கர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க அவர் போராடுகிறார். அவர், துப்பாக்கிகளாலோ மற்றும் எரியக்கூடிய பொருட்களாலோ அழிவு மற்றும் சித்திரவதை ஆயுதங்களாலோ இதைச் செய்யவில்லை. மாறாக அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மூலம். வெகுஜன வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் மூலமாக அல்ல, ஆனால் அறமற்ற, அரசியலமைப்புக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய ஒற்றை கவனம் செலுத்துவதன் மூலமாக அதைச் செய்தார்.

மேலும் அவர் நூறாயிரக்கணக்கானோருடன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதுவும் நமது வழிவழியாக வந்ததுதான். நெறிமுறை கருத்து வேறுபாடு மற்றும் ஒத்துழையாமை. அரசியலமைப்பின் ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் மீறும் வகையில் – வெளிப்படையாக இலக்கு வைத்து குடியுரிமைக்கான ஒரு படிநிலையை உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதை, அரசுக்கு எதிரான பெரும்பான்மை வன்முறைக்கான தூண்டுதல் என நீதிமன்றம் சொல்கிறதா?

கட்டுரை: கல்பனா கண்ணபிரான்
தமிழாக்கம் – கலைமதி
நன்றி : ஸ்கரால்.

குறிப்பு : கல்பனா கண்ணபிரான் ஹைதராபாத் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் பேராசிரியராகவும் இயக்குநராகவும் உள்ளார்.

கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

0

கோவிட்-19 தாக்குதல் தீவிரமடைந்த பின்னர், இந்தியா முழுவதும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை சரிவை சந்தித்துக் கொண்டிருக்கையில் சாதியப் படுகொலைகள் மட்டும் அதே அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தில் நடைபெற்ற சாதியப் படுகொலைகளே அதற்குச் சான்று.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த தோம்கெரா எனும் ஊரில், கடந்த ஜூன் 6 – சனிக்கிழமை இரவு விகாஸ் ஜாதவ் என்ற ஒரு 17 வயது தலித் சிறுவனை சுட்டுக் கொன்றிருக்கிறது ஆதிக்க சாதிக் கும்பல்.

கடந்த மே 31 – அன்று இரவு விகாஸ் ஜாதவும் அவனது உறவினரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளனர். அப்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஹோரம் சவுகான் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கு வந்துள்ளனர். விகாஸை கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதி மறுத்துள்ளனர். இதனைத் தொடந்து அங்கு வாக்குவாதம் நடந்துள்ளது, கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை ஒட்டி கடந்த ஜூன்1 அன்று காலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் 6 அன்று இரவு சவுகான் மற்றும் அவனது கூட்டாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து, வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த விகாஸை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.

இந்தக் கொலையை சாதி வெறிப் படுகொலையாக பதிவு செய்யாமல், இரு தரப்புக்கும் இடையில் இருந்த பணத் தகராறு காரணமாக நடந்த படுகொலை என்ற வகையில் மடைமாற்றி எடுத்துச் சென்றிருக்கிறது போலீசு.

***

ராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தாடிப்பவனி எனும் நகரில் குன்பி எனும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சாதி வெறியர்களால் தலித் செயல்பாட்டாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 27-ம் தேதியன்று சாதி எதிர்ப்புப் போராளியும், சமூக செயற்பாட்டாளருமான அரவிந்த் பன்சோட் என்ற 32 வயது இளைஞர் தனது நண்பர் ரவுத்தோடு அருகில் உள்ள தாடிப்பவனி நகரத்திற்கு ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அரவிந்த் பன்சோட், “வஞ்சித் பகுஜன் அகாதி” என்ற சாதி எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அரவிந்த் பன்சோட்

அரவிந்த் பணம் எடுத்துக் கொண்டிருக்கையில், அருகில் உள்ள எரிவாயு உருளை முகமைக்கு (Gas Agency) ரவுத் சென்றிருக்கிறார். பின்னர் அம்முகமையின் தொடர்பு எண்கள் அதன் முகப்புப் பலகையில் இருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார். அதனைக் கண்டு, அந்த கடையின் உரிமையாளரான மயூரேஷ் என்பவர் ரவுத்தின் அலைபேசியைப் பிடுங்கியுள்ளார். ரவுத் இதனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் பணம் எடுத்துவிட்டு, எரிவாயு உருளை முகமைக்குச் சென்ற அரவிந்தும் தனது நண்பர் ரவுத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தலித் சாதியைச் சேர்ந்த உங்களுக்கு எங்களை எதிர்த்துப் பேசும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என மயூரேஷும் அவனது நண்பர்களும் சேர்ந்து அரவிந்தையும் ரவுத்தையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர் . சாதிய ரீதியாக மிகவும் இழிவாகப் பேசியுள்ளனர்.

கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் கடையைவிட்டு வெளியே தள்ளிவிட்டுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட அரவிந்தை அமரச் செய்து விட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட சென்றுள்ளார்.

ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பி வந்து பார்க்கையில் அரவிந்த் கையில் விச பாட்டிலோடு மயக்கமடைந்து கிடந்திருக்கிறார். உடனடியாக ஒருவாகனத்தை ஏற்பாடு செய்ய ரவுத் முயற்சிப்பதற்குள்ளாக மயூரேஷும் அவனது நண்பர்களும் ஒரு காரில் அரவிந்தை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அந்தக் காரில் ரவுத் ஏற முயற்சிக்கையில் அவரை கீழே தள்ளிவிட்டு அரவிந்தோடு கிளம்பிவிட்டனர்.

மயூரேஷ் திட்டமிட்டே ரவுத்தை காரில் ஏற்றிக் கொள்ளாமல், அரவிந்தை மட்டும் ஏற்றிக் கொண்டு அவரது மரணத்தை உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது. இல்லையெனில் ரவுத்தை அவர்கள் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

படிக்க:
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

மயூரேஷின் தந்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். மயூரேஷும் அந்தக் கட்சியின் உள்ளூர் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கை தற்கொலை வழக்காக முடிக்க எத்தனித்தது போலீசு. பின்னர், பிரகாஷ் அம்பேத்கர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் தம்காட்கே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதி எதிர்ப்புப் போராளிகள் உள்ளிட்ட பலரும் இவ்விவகாரத்தில் தலையிட்ட பின்னரே, போலீசு இதை சாதிய வன்முறைப் படுகொலையாக பதிவு செய்துள்ளது.

***

தே மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் எனும் கிராமத்தில் விரஜ் ஜக்தப் என்ற 20 வயது கல்லூரி மாணவர் ஆதிக்க சாதி வெறியர்களால் டெம்போ ஏற்றி கொல்லப்பட்டார்.

புனே அருகில் உள்ள பிம்பிள் சௌதகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விரஜ் ஜக்தப், அதே பகுதியைச் சேர்ந்த மராத்தா சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். சில மாதங்களுகு முன்னரே, இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரிந்து விரஜ்-ஐ மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து விரஜும் அந்தப் பெண்ணும் காதலித்துள்ளனர்.

விரஜ் ஜக்தப்

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் தந்தை ஜெகதீஷ் காடே, கடந்த ஜூன் 7 அன்று இரவு 9.30 மணியளவில், கூடுதலாக ஐந்து மராத்தா சாதிவெறியர்களோடு சென்று விரஜ் ஜக்தப்-ஐ தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன் பின்னர், விரஜ் மீது டெம்போவை ஏற்றியிருக்கின்றனர். கடுமையாக காயம்பட்ட நிலையில், விரஜ் – மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒரு நாள் கழித்து இறந்துள்ளார்.

மராத்தா சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்த ‘குற்றத்திற்காக’ இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட 6 பேரில் 2 பேர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் விரஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே போலீசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் போலீசு வழக்குப் பதிவு கூட செய்ய முன்வரவில்லை. அப்போது விரஜ் மருத்துவமனையில் உயிரோடுதான் இருந்திருக்கிறார். அங்கு தனது வாக்குமூலத்தை உறவினர்களிடம் கூறியிருக்கிறார். போலீசு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. மறுநாள் ஜூன் 8 அன்று விரஜ் இறந்த பின்னரே, வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீசு.

மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில்தான் சாதிவெறிப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜல்னா, ஹிங்கோலி, பர்பானி ஆகிய மாவட்டங்களில் சாதி வெறிப் படுகொலைகள் அதிகம். மாராட்டிய மாநிலம் முன்னேறிய மாநிலம் என்று கூறப்பட்டாலும், சமூகம் இன்னும் சாதி வெறி ஊறிப் போன சமூகமாகவே இருக்கிறது.

இந்த நிலைமை மராட்டிய மாநிலத்தில் மட்டுமல்ல, பார்ப்பனியத்தில் ஊறிப்போன இந்தியா முழுமைக்கும் இது பொருந்தும் என்பதுதான் கசப்பான உண்மை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர், இந்துஸ்தான் டைம்ஸ். 

கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

அனுப்புதல்
அமிர்தா
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

பெறுதல்
மாநகராட்சி ஆணையர்,
சென்னை மாநகராட்சி.

பொருள் : கொரோனா நோய் தொற்றிலிருந்து சென்னை மக்களை காக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தல்…..

ஐயா வணக்கம்,

கொரோனோ நோய்த்தொற்றில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனோ தொற்று நோயின் தீவிரம் மிக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .

கடந்த சில நாட்களாக தொற்று நோயின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது என்பது மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அரசு அளித்துள்ள புள்ளிவிபரங்களின்படி ராயபுரம், கோடம்பாக்கம் ,திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

தற்பொழுது கொரோனா பாதிப்பு என்பது சம்பந்தப்பட்ட நபர் தானாகவே சென்று அல்லது வேறு நோய்களுக்கு மருத்துவமனைக்கு வரும் பொழுது பரிசோதனை செய்யும்போது தெரிய வரும் முடிவுகளாகவே இருக்கின்றன.

ஆகவே

  1. தற்பொழுது ஒருவருக்கு கொரோனோ தொற்று நோய் உறுதி செய்யப்பட்டால் அவரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்ப்பது என்பது நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அவருடைய குடும்பத்தாருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்வதில்லை. இதனால் அப்பகுதியில் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்ட உடனேயே அவருடைய குடும்பத்தாரையும் அக்கம்பக்கத்தினரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.அவர்களை சிறப்பு முகாம்களில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  2. தற்பொழுது வீட்டிற்கு வரக்கூடிய சுகாதார பணியாளர்கள் பொதுவாக சளி, இருமல் போன்ற தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டு விட்டு செல்கிறார்கள். சமீபத்தில் முதல்வர் அறிவித்தபடியே சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் இந்த நோய் பரவி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மண்டலங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  3. கொரோனோ நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. சென்னை மாநகரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொது முடக்கம் செய்து அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  5. சென்னையில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஆறு மண்டலங்களிலும் முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 7500 வழங்கப்படவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தேதி 15.6.2020
இடம் சென்னை

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது / மிக அரிதாக வரும் என்று ஒரு அமெரிக்க ஆய்வு முடிவைக் கொண்டு பல செய்திகள் நம்மிடையே வலம் வருகின்றன. அது குறித்த எனது குறு விளக்கம் நேற்று நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியானது. இங்கு நம் சொந்தங்களுக்கும் அது குறித்த எனது விளக்கம் பின்வருமாறு ;

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை வைத்து செய்யப்பட்ட மீளாய்வில். அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்தி தான், “O” ரத்த வகையினருக்கு மற்ற வகையினரை விடவும் 9-18% கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர்.

அவர்களும் கூட O ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை. காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் “ஓ” வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வின் முடிவில் AB ரத்த க்ரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்
என்றும் கூறப்படுகிறது. இந்த வகை ஆய்வுகளை Correlation study என்போம். அதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் மீது பழி சுமத்துவது போன்றதாகும்.

உதாரணத்துக்கு ஒரு க்ரைம் ஸ்டோரியை கற்பனை செய்து கொள்வோம்.

ஒருவரின் சாட்சியம் இது, “தூரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. நான் பால்கனியில் இருந்து பார்த்தேன். அப்போது ஒருவர் சரிந்து விழுந்து கிடந்தார். இன்னொருவர் தலையில் தொப்பியுடன் அந்த இடத்தை விட்டு ஓடினார்.” இதுவே சாட்சியம்.

படிக்க:
♦ என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
♦ ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

அவர் கூறும் ஆதாரங்களை வைத்து அந்த கொலை காரன் தலையில் தொப்பி மாட்டியிருந்தது தெரிகிறது என்று போலீஸ் கூறினால் சரியாக இருக்குமா?

மேலும் அவர் தலையில் முடி இல்லாமல் இருந்ததால் அதை மறைக்கவே தொப்பி மாட்டியிருக்கிறார். எனவே தலையில் முடியில்லாதவர்களை நாம் உடனே விசாரிக்க வேண்டும். தலையில் நன்றாக முடி வைத்திருப்பவர்களை வெளியே சுற்ற விடுங்கள் என்றும் கூறுவது அபத்தமான ஒன்றாகத்தானே இருக்கும்.

அது போல தான் பல நேரங்களில் இந்த Correlation studyகளும் அமைந்து விடும். இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு தலை சொட்டையாக இருக்கும் ஆண்களுக்கு கோவிட்19 வந்தால் மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியும் என்று கூறியது.

ஆனால் அதன் உண்மை நிலை என்ன? யாருக்கு கோவிட்19 பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது?

70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு.

அவர்கள் தலையில் முடியிருக்குமா? சொட்டையாக இருப்பார்களா?

அவர்களுள் 95% பேருக்கு தலையில் முடி இருக்காது.

இதை வைத்து ஆய்வு முடிவு வெளியிட்டு, சிறு வயதில் தலையில் சொட்டை விழும் பலரை பயமுறுத்துகிறார்கள். இதே போன்று தான் இந்த ரத்த வகை குறித்த ஆய்வு முடிவுமாகும்.

கோவிட் 19 வருவதற்கு, வெறும் 9-18% குறைவான ரிஸ்க் “ஓ” வகையினருக்கு இருக்கிறது. ‘ஏபி’ ரத்த வகையினருக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
இதுவும் ஒரு சந்தர்ப்பங்களைஅடிப்படையாக வைத்து செய்யப்படும் ஆய்வாகும்.

சந்தரப்பங்கள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை Correlation is Not causation, எனவே ஓ ரத்த வகை கொண்ட மக்கள் இந்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு சகஜமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெளியே சுற்றித்திரியலாம் என்றும் நினைக்க வேண்டாம்.

மற்ற வகை நண்பர்கள் நமக்கு கொரோனா வந்துவிடும் என்று அஞ்சி நடுங்கவும் வேண்டாம். கொரோனா தொற்று வரும் வாய்ப்பு அனைத்து ரத்த வகையினருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கிறது. நமது அலட்சியம் அதை இன்னும் எளிதாக்கிவிடக்கூடாது

அலட்சியமும் அச்சமும் தேவையில்லை
எச்சரிக்கை உணர்வு போதுமானது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்

ருச்சிகா நரேன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் இந்தியில் வந்த படம் கில்ட்டி. எப்போதும் கல்லூரி வாழ்க்கையை குதூகலமாக எடுக்கும் கரண் ஜோகர் இந்த படத்தை சற்றே வித்தியாசத்துடன் கொடுத்து இருக்கிறார் . டெல்லி ஸ்டைன் மார்ட்டின் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களுன் கதைக்களம் நகர்கிறது. டெல்லியில் இருக்கும் மிக பிரபலமான கல்லூரி அது. டெல்லியின் பெரிய கல்லுரி என்பதாலே எல்லா பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கே இருக்கின்றனர் .

கல்லூரிதான் உலகை பற்றி நாம் கற்கும் முதல் அனுபவமாக அமைகிறது. வளாகத்தில் பெரும் பணக்கார வீட்டு விஜய் பிரதாப் சிங் (வி.ஜே), இசை குழுவை ஒன்றை உருவாக்கி பாப் பாடல்கள் மூலம் பிரபலம் ஆகிறான். அவனின் காதலியாக நான்கி. நான்கி இசை குழுவில் பாடல் வரிகள் எழுதுபவளாகவும், பெண்ணியவாதியாகவும் தெரிகிறாள். அவளின் உடையும், பேச்சும், அதை ஒட்டி இருக்கிறது. தனபாத்தை சேர்ந்த இந்தி மொழி பேசும் தணு, இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த வாய்ப்பில் கல்லூரியில் படிக்கிறாள். வழக்கமாக ஒரு ஏழை வீட்டு பெண் எப்படி இருப்பாளோ அப்படி இல்லாமல் தன்னை உயர் தட்டு மாணவர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள முயல்கிறாள் தணு. இது கீழிருப்பவர்கள் மேலே இருப்போரை நோக்கி போகும் மேல்நிலையாக்கமாகவும் சொல்லலாம். கூடவே தணு, வி.ஜெ மீது ஈர்ப்பு இருப்பதாக வெளிக்காட்டி கொள்கிறாள்.

ஒரு பெண் ஆண் மீது காட்டும் அன்போ அல்லது ஈர்ப்போ எதுவாயினும் சமூகத்தின் பொது புத்தி பெண்களை மட்டுமே கேள்வி கேட்பதாகவே உள்ளது. தணு வி. ஜே உடனான நெருக்கம் காரணமாக நான்கி தணுவின் மீது கோபம் கொள்கிறாள். பின்பு ஒரு நாள் காதலர் தினத்தன்று இசை நிகழ்ச்சியின் இரவில் வி.ஜே மற்றும் அவனது நண்பர்களும் சேர்ந்து குடிக்கின்றனர். அப்போது தணுவும் வி.ஜே -யுடன் குடித்து விட்டு விடுதிக்கு செல்கிறாள்.

அன்றிரவே வி.ஜே தன்னை பாலியில் பலத்துகாரம் செய்தாக கல்லூரியின் தலைமை பேராசிரியரிடம் தணு சொல்கிறாள். இதை தொடந்து வி.ஜே வின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசுக்கு வழக்கு போகிறது. போலீசின் மூலம் தணுவிடம் சமரசம் பேசப்படுகிறது. ஆனால் தணு மறுக்கிறாள். இதனை தொடர்ந்து வி.ஜே மீது வழக்கு பதியப்படுகிறது. இப்போது தவறு யார் மீது என்பதை பொதுப்புத்தியிலிருந்து பார்த்தால் தனுதான் குற்றவாளியாக பார்க்கப்படுவாள். ஆனால் கல்லூரியில் செயல்படும் ஒரு அமைப்பு தனுவிற்கு ஆதரவாக நிற்கிறது. ஏறக்குறைய #Metoo தொடங்கிய ஓரு வருடத்திற்கு பின் இந்த சம்பவம் நடப்பதாக காட்சிப் படுத்திருக்கிறார் இயக்குநர். இங்கு சமுகத்தின் கட்டமைப்பில் பெண்ணின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அவளின் பின்புலம் சார்ந்தே பார்க்கப்படுகிறது. பெண்கள் ஆடை , குடிப்பழக்கம் போன்றவற்றை கேள்வி கேட்கும் சமூகம் ஆண்களை அதிலிருந்து விட்டு விடுகிறது. உண்மையை பாதிப்பு அடைந்தவர்களின் பார்வையில் பார்க்கவும் முற்படுவதுதில்லை.

வி.ஜே -வின் தந்தை அரசியல்வாதி என்பதால் ஒரு பெரிய வழக்கறிஞர் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. வி.ஜே -வின் நண்பர்கள் எல்லோரிடமும் கேள்வி முன் வைக்கப்படுகிறது. அவனது நண்பர்களின் பதில்கள் தணுவின் நடத்தை அதாவது அவளது குடிப்பழக்கம், உடைப்பழக்கம் போன்றவற்றை வைத்து அவளது ஒழுக்கத்தை வரையறுக்கின்றனர். ஆடை என்பது ஒருவருடைய தேவை மற்றும் விருப்பம் சார்ந்த சுதந்திரத்தை வைத்து உருவாகிறது. அதை வைத்தும் குடிப்பழக்கத்தை வைத்தும் தணுவின் மீது குற்றம் சாட்டுவது ஆண் ஆதிகத்தின் மனோபாவம். அதுவும் இந்து பேசும் மாநிலங்களில் பார்ப்பனிய நிலவுடமை சமூகத்தில் இந்த ஆணாதிக்கம் கடுமையாகவே வெளிப்படுகிறது. பெங்களூருவில் பஃப்புகளுக்கு சென்று இந்துத்துவா அமைப்புகள் அங்கிருக்கும் பெண்களை தாக்குவது இதற்கு ஒரு சான்று.

படத்தின் துவக்கத்தில் பெண் சார்ந்த பிரச்சனைகளுக்காக வரிந்து கட்டிப் பேசும் நான்கி தற்போது குற்றம் தன் காதலன் மீது என்றவுடன் தணுவை கைநீட்டி கன்னத்தில் அறைவதோடு Bitch என்றும் திட்டுகிறாள். காதலின் சுயநலம் அவளது பெண்ணியப் பார்வையை மறைத்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கவேண்டிய பொறுப்பை கைகழுவச் செய்து விடுகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் நான்கி பின்னர் மெல்ல மெல்ல குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள். தொடர் விசாரணையும் நீதிமன்ற விவாதங்களும் நான்கிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வழக்கறிஞர் கேட்கும் கேள்விக்கு பதிலை தேடுகிறாள் நான்கி. ஆனால் அவளால் பதில் சொல்ல இயலவில்லை. அதனாலேயே வி.ஜே மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப் படுகிறான். பின்னர் பாதிப்புக்குள்ளான தணுவின் மீது மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். தணுவோ கல்லூரியை விட்டு போகிறாள். அன்றிரவு நடக்கும் ஓரு பார்ட்டியில் விட்டுப்போன கேள்விக்கான விடையை கண்டுபிடிக்கிறாள் நான்கி. மறுநாள் நடக்கும் இசை நிகழ்ச்சியில் தணுவை மேடை ஏற்றுகிறாள் நான்கி. அங்கே உண்மை உடைகிறது. விஜே தான் குற்றவாளி என்பது பொதுவெளிக்கு வருகிறது.

படிக்க:
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
♦ தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

சிறு வயதில் தனது காப்பாளராக இருக்கும் பேராசிரியர் தன்னை பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தியதை சொல்கிறாள் நான்கி. இங்கு தான் படத்தின் பெயர் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. “கில்ட்டி” யாருக்கானது? குற்றம் செய்தவர் மீதா அல்லது குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் மீதா என்பதை கில்ட்டி பேசுகிறது. சில போலி முற்போக்குவாதிகள் (Pseudo progressive) உடனே Consent sex என குரல் கொடுப்பதை பார்க்க முடிகிறது. Consent Sex என்பது இரு நபர்களுக்கு இடையான private space ஆக இருக்கும் வரை அதன் மீது யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை. இதில் தணுவிற்கு வி.ஜே மீது உள்ளது காதலோ அல்லாது காமமோ எதுவாயினும் இருவருக்கு மட்டும் உள்ளவரை அது தவறாக தெரிவதில்லை. இருவரும் அதை உடன்பட்டு செய்யும் வரை பிரச்சினையுமில்லை. அதை காணெளி எடுத்து பொதுவெளியில் பகிர்வது, நண்பர்கள் முன்னிலையில் பாலியில் வன்முறைக்கு உட்டப்படுத்துவது, பாலியில் ரீதியான குறுஞ்செய்திகளை பிறிரிடம் பகிர்ந்து கொள்வது இவையெல்லாம் தெரிவிப்பது என்ன? பெண்ணை தனக்கு பணிந்தே ஆக வேண்டிய பண்டமாக கருதும் ஆணாதிக்க வக்கிரமின்றி வெறென்ன?

Consent sex குறித்து குறிப்பான இலக்கணமென்ன? ஆணாதிக்கம் நிலவும் சமூகத்தில் இந்த வார்த்தை பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? ஒவ்வொருக்கும் மாறுப்படும் இந்த வார்த்தை இளைஞர்களுக்கிடைய தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பது உண்மை. இதிலும் தணு வி.ஜேவுடன் இருக்க நினைத்தது உண்மை எனில் அதை பயன்படுத்தி நண்பர்கள் முன் கீழ்த்தரமாக வி.ஜே நடந்து கொள்வது பாலியில் வன்முறையின் உச்சம். சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம், கன்னியாகுமாரி காசி போன்ற பாலியில் வன்முறை எல்லாம் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்ப்தை தெரிவிக்கிறது. காசி ஒரு விசாரணையில் ‘பெண்கள் எல்லாம் என் அழகில் மயங்கி என்னுடன் இருந்தார்கள்…’ என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேச காரணம் ஆண் அப்படி தான் இருப்பான் என்ற ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. அதாவது பெண்களுக்கு தான் அறிவு இல்லை என்று சொல்கிறான் காசி.

இதை போன்றே பொள்ளாச்சி சம்பவத்தின் காணெளியில் அந்த பெண் “உன்னை நம்பி தானே வந்தேன்…” என்று அழுவது தான் யதார்த்த பெண்களின் பிம்பம். அதை வைத்து பல்வேறு ‘அறவேக்காடுகள்’ எல்லாம் இங்கே கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனார். இங்கே ஆண்கள் ஏன் இப்படி விலங்குகளாய் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பாமல், பெண்களை மட்டும் பொறுப்பாய் இருக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். சமீபத்தில் திரைத்துறையில் வைரமுத்து பெண்களை பாலியில் சீண்டலுக்கு அழைத்தது குறித்து பாடகி சின்மயி #Metoo இயக்கத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்தார். உடனே “ஏன் இவ்வளவு கால தாமத்திற்கு பிறகு அவர் மீது குற்றச்சாட்டு…” என்று தொடர் கேள்விகளை பலரும் அப்போது கேட்டனர்.

உடலின் தேவைக்கும் உள்ளத்தின் உணர்வுக்கும் உள்ள வேறுபட்டை பிரித்தரியாமல் காதல் என்ற வகையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியில் வன்முறை ஆபத்தில் முடிகிறது. இந்த படத்தில் நான்கி  தான் பாலியல் வன்முறை செய்யப்பட்டு இருக்கிறேன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் உடைக்கிறார். இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது அதிலும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுவதாகவும் அதுவும் தெரிந்தவர்கள் மூலம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இயற்கை ஆண் பெண் தேவைகளை சார்ந்தே கட்டமைப்பு உள்ளது. அதுவே அவர்களை வீழ்த்தும் ஆயுதமாக இச்சமூகம் பயன்படுத்துமேயானால் இந்த சமுகத்தின் மீது  கேள்விகளை முன் வைக்கிறது கில்ட்டி  எனும் இத்திரைப்படம்.

கியாரா அத்வாணியின் நடிப்பும் கௌசிக் மௌனிர் வரிகளும், பின்னணி இசையும் இரண்டு மணி நேரம் நம்மை படத்தினுள் அழைத்து சொல்கிறது. படத்தில் சில தவறுகள் இருப்பினும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை இயக்குனார் நன்றாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது. சமீப காலமாக இதுபோன்ற படமுயற்சியில் பாலிவுட் திரை இறங்கியுள்ளது, அதில் தப்பட், பிங்கு போன்ற படங்கள் பெரும் வரேவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் பதிவிட விழைகிறேன்.

சிந்துஜா சமூக ஆர்வலர்.

சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

கொரோனா : சென்னை மக்கள் உதவிக் குழு – மக்களுக்கான நிவாரண பணியில், 50 நாள் நிறைவு !

ந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி, நிதியுதவி என அனைத்து வழிகளிலும் 08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.

மேலும் நம் குழுவானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்போது, நம்மை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி நம்பிக்கை தெரிவிப்பது நமக்கு இந்த பணியில் ஈடுபட்ட மன நிறைவை தருகிறது.

துவக்கத்தில் வருமானம் எதுவும் ஈட்டாத மாணவர்கள், இளைஞர்கள் நம்மால் என்ன செய்யமுடியும் என யோசித்தோம். ஆனால் கடுமையான சிக்கலில் இருந்த மக்களின் நிலைதான் எங்களை செயல்பட தூண்டியது. அப்படிப்பட்ட பயணத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒரு சில…

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டீ விற்றுக் கொண்டிருந்த அம்மா ஒருவர், வியாபாரமாகாத டீயை கண்ணெதிரே தரையில் ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து, மனம் பொறுக்காமல் அவரிடம் பேசினோம்.

“யாரும் டீ வாங்குறதில்ல, எனக்கு 2 பொம்பள புள்ளைங்க, புருஷன் இறந்துட்டாரு, வாடகையும் கட்ல, என்ன செய்றதுனே தெரியலப்பா” என அவரது பாரத்தை நமது குழவின் நண்பர் அக்பரிடம் பகிர்ந்து கொண்டார்.

உடனே போன் மூலம் குழுவில் பேசி முடிவெடுத்து அத்தியாவசிய பொருட்கள், வீட்டு வாடகைக்கு முடிந்த உதவியை எங்கள் சென்னை மக்கள் உதவிக்குழு செய்யுமென உறுதியளித்து வந்தோம். உறுதியளித்தது போலவே நம் குழுவினரால் நிதியுதவி அளிக்கப்பட்டது. அதனை பெற்று கொண்ட அந்த அம்மா, “பெத்த புள்ளைங்கபோல உதவிசெஞ்சீங்க, ரொம்ப நன்றிப்பா” என நெகிழ்ச்சியோடு கூறினார், அந்த தாய்..

இத்தகைய நிகழ்வுகளில், ஒருமுறை அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் கடைக்காரரிடம் நம்முடைய சென்னை மக்கள் குழுவின் செயல்பாடுகளை விளக்கியதும், அவர் சுமார் ₹1000 ரூபாயை தன்னுடைய பங்களிப்பாக வைத்து கொள்ளும்படி சொன்னது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இம்மாதம் மேற்கொண்ட சில வேலைகள்… பாரிமுனை சுற்றியுள்ள பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் சுமார் 70 பயனாளிகளுக்கு, வடசென்னை மக்கள் உதவிக்குழு தோழர்களுடன் இணைந்து, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் பங்களிப்போடு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் சென்னை கொருக்குப்பேட்டை – பாரதிநகர் – ஜெ.ஜெ நகர் – அண்ணா நகர் – கோவிந்தசாமி நகர், வியாசர்பாடி என பல்வேறு பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் என 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

உதவிக்குழு சென்னையின் பெயரில் இருந்தாலும், குழுவின் உறுப்பினர்களான சட்ட மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளதால், செங்கல்பட்டு, காரைக்குடி, தருமபுரி, கோவை, கடலூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலும் நமது பணி நடந்து வருகிறது.

எல்லா நெருக்கடியான நேரத்திலும் மக்களுக்கு உதவ, மக்கள் தான் உதவுவார்கள் என ஏற்கனவே பல நெருக்கடியான தருணங்களில் நாம் கண்டுள்ளோம். அதேபோல தற்போதைய இந்த பேரிடர் காலத்திலும் நம் குழுவில் உள்ள நண்பர்கள் தம்மால் முயன்ற பங்களிப்பினை செலுத்தியதும், உதவி பணிகளை பார்க்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக தரும் நிதி மற்றும் நிவாரண பொருட்களும் தான் 50 நாட்களை தாண்டி நீடித்து வரும் வெற்றிக்கு காரணம். இந்த மகத்தான பணியில் நிதியுதவி அளித்த மற்றும் உறுதுணையாக நின்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

லாக்டவுன் 5 -ல் இருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலத்தில் பேருந்து, ரயில் ஓடவில்லை. இன்னும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பவில்லை. உதவிகள் கேட்டு நமக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நமக்கு தொடர்ந்து உதவிக் கொண்டும் இருக்கின்றனர். தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

நன்றி !

சென்னை மக்கள் உதவிக்குழு,
தொடர்புக்கு : 99401 57731.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

தஞ்சை போலீசு நடத்திய படுகொலை ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

PP Letter headமக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

12.06.2020

தஞ்சை போலீசு நடத்தியப் படுகொலை !

ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்க நகரங்கள் எல்லாம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

போலீஸ் அமைப்பையே கலைக்க வேண்டும், போலீசு துறைக்குக்கு நிதியை வெட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க மாநிலங்கள் போலீசு துறையை சீரமைக்கவும் போலீசின் அதிகாரங்களை குறைக்கவும் ஆலோசனைகள் செய்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை போலீசு கொல்வதும், துன்புறுத்துவதும் கேட்பாரற்ற முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் போலீசின் காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பட்டியலின பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட குறவர் இன சமூகம் முழுவதையும் குற்றவாளிகளாகக் கருதி அம்மக்கள் மீது கொடிய தாக்குதல்களை மேற்கொண்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
இது குறித்த எந்த புகார் மீதும் மாநில, மத்திய மனித உரிமை ஆணையங்களோ தாழ்த்தப்பட்ட ஆணையமோ உருப்படியான நடவடிக்கை எடுப்பதில்லை.

கடந்த 10 .6 .2020 அன்று வழக்கு தொடர்பாக தஞ்சை மானோஜிப்பட்டி பொதிகை நகரில் மணி என்பவரை கைது செய்துள்ளனர். மணி திமிறிய போது அவரிடம் இருந்த அரிவாளை எடுத்த போலீசு ஒருவர், மணியின் காலை வெட்ட முயன்றுள்ளார். மணி விலகியதும் அந்த அரிவாள் இன்னொரு போலீசின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் தப்பித்துவிட்டார் மணி. ஆனால் அவர் சில மணி நேரத்திலேயே அருகில் இருந்த மரக்கிளையில் பிணமாக தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

போலீசை வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் மணி என்று வழக்கம் போல ஜோடனை செய்து வழக்கு பதிந்துள்ளது. இதற்கு எதிராக மணியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து செய்த போராடினர். நைச்சியமாக பேசிய போலீசு அதனை கைவிட செய்துள்ளது.

படிக்க:
விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
♦ தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

இது போலீஸ் நடத்திய படுகொலை என்பது தெளிவாகவே தெரிகிறது, என்ற போதிலும் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது.

ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே மணியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தொடர்புடைய அனைத்து போலீசாரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தங்கள்
தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

0

ந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (AAI) அதானி குழுமம் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் கையில் எடுத்த விமான நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டுள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக வானூர்திப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தமக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று காரணம் கூறியுள்ளது அதானி குழுமம்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் மத்திய மோடி அரசு, 6 வானூர்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்கள் இதில் அடங்கும். இது இவ்விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான பொதுத்துறை – தனியார் கூட்டு (PPP) அடிப்படையிலான ஒப்பந்தத்திற்கான அழைப்பாகும்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மீறி இந்த ஏலத்திற்கான பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக நியூஸ் கிளிக் எனும் இணையதளம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மோடி அரசை அம்பலப்படுத்தியது. பிற அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் கொடுத்த ஆலோசனைகளை மீறியே, வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அதானி குழுமத்திற்கு 6 வானூர்தி நிலையங்கள் வழங்கப்பட்டன.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி இந்தத் துறையில் கால் பதித்திருக்கிறது அதானி குழுமம். விமான தரையிறக்கம் மற்றும் நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றின் மூலமும், விமான நிலையத்திலேயே விடுதிகள், மால்கள் மற்றும் விமான நிலைய கிராமம் போன்ற கேளிக்கை அம்சங்களின் மூலமும் வரக்கூடிய பெருமளவிலான வருவாயைக் கணக்கில் கொண்டுதான் மோடி அரசின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை மும்முரமாகப் பெற்றது அதானி குழுமம்.

இதன்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 180 நாட்களுக்குள் ரூ. 1500 கோடியைச் செலுத்தி முறைப்படி விமான நிலையத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில விமான நிலையங்களின் மீதான வழக்குகள் இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், லக்னோ, மங்களூரு, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களை மட்டும் உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி 2020-ல் அதற்கான இறுதி ஒப்பந்தத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்துடன் கையெழுத்திட்டது அதானி குழுமம். இதன்படி அதானி குழுமம் ஏப்ரல் மாதத்திற்குள் முழுத் தொகையையும் கொடுத்து இந்த மூன்று விமான நிலையங்களின் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க:
♦ தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !
♦ ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !

ஆனால் ஜூன் மாதம் முதல் வாரத்தில், தற்போது இருக்கும் கொரோனா நிலைமைகளைச் சுட்டிக் காட்டி வருமான இழப்பு ஏற்படும் என்பதால், இன்னும் 6 மாதம் கழித்து அந்த மூன்று விமான நிலையங்களையும் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது அதானி குழுமம்.

மேலும் தனது அறிக்கையில், வானூர்தித் துறையில் பெருமளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஒட்டி, இது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவெடுக்க இருப்பதாகவும், அதற்காக இன்னும் 6 மாதங்களுக்கு இத்திட்டத்தை தள்ளிப் போடப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு இருக்கும் என்பதைத் தாம் உணர்வதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.

“எதிர்பாராத / கட்டுப்படுத்த முடியாத சூழல்களில்” ஒப்பந்தத்தை தள்ளிவைப்பது பற்றிய விதிப்பிரிவின் கீழ் இந்த திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கும்படி இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஒரு கடைக்கு முன்பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்த பின்னர், லாபம் குறைவாக வருவதால் வாடகை கொடுக்க முடியாது. 6 மாதம் கழித்து வாடகை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது, அதானி குழுமத்தின் இந்த வாதம்.

ஒப்பந்தப்படி ஏப்ரல் மாதம் வானூர்தி நிலையத்தை கையில் எடுத்த பின்னர், வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குவியத் தொடங்கி இருந்தால், நான் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வருகிறது என திருப்பிக் கொடுத்திருப்பாரா அதானி ? லாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு ! இதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் பின்னணி !

பொதுவாகவே, “நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்” என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி. லாபமாக இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், சொத்துக்களையும், ஒரு அற்பமான தொகையை ஈவுத்தொகையாகக் கொடுத்து விட்டு மீதி லாபத்தைக் கல்லா கட்டுவதுதான் இந்த பொதுத்துறை – தனியார் கூட்டுத் திட்டங்களின் அடிப்படையே.
இந்த நிலைமையில் கடந்த மே மாதம், வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய 6 விமான நிலையங்களை ஏலத்திற்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பையும், அதானி குழுமத்தின் 6 மாத அவகாச அறிவிப்பையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், தற்போதைய கொரோனா மற்றும் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, அடிமாட்டு விலைக்கு விமான நிலையங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு அரசு தயாராகி விட்டதையே காட்டுகிறது!


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

“கொரானா : தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.”  – நாம் தொடுத்த பொதுநலவழக்கு விசாரணைக்கு 10.06.2020 அன்று வந்தது!

பத்திரிக்கைச் செய்தி

நாள் : 09.06.2020

COVID-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 03.04.2020 தேதியிட்டு தமிழக அரசு அரசாணை (G.O.Ms.174) வெளியிட்டிருந்தது.

நாடு முழுவதும் பேரிடராக பரவிவரும் கொரானா நோய்த் தொற்றினை தடுத்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகள் கொரானா நோயினை வைத்து கொள்ளயடிப்பதற்கே மேற்படி அரசாணை வழிவகுக்கும். எனவே, மேற்படி அரசாணையில் கொரானா சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பகுதியினை ரத்து செய்து, தனியார் மருத்துவமனைகளிலும் கொரானாவிற்கான சிகிச்சையினை இலவசமாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் (W.P.No7456/2020).

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

படிக்க:
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

இவ்வழக்கு 09.06.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக காணொளி முறையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் உடன் வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் பாலன் அரிதாஸ் உடன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் மில்டன்.

கொரானா தொற்றினை தனிப்பட்ட நோயினைப்போல கருதி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வழங்கி சிகிச்சை பெற முடிவு செய்த அரசின் முடிவு சட்ட விரோதமானது, கொரானா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய தனது பொறுப்பினை கைவிட்டுவிட்டு, தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கவே இது வழிவகுக்கும். தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரானா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். மேலும், கொரானா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் மிகுந்த நெருக்கடியில் இருக்கும் மக்கள், சிகிச்சைக்கு எப்படி செலவு செய்ய முடியும் ? என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜாரான அரசு வழக்கறிஞர் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் 2 வாரம் கால அவகாசம் கோரினார்.

இதனை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதிகள் கொரானா தொற்று பெரும் அச்சுறுத்தலாக பரவி வரும் நிலையில் இதனை சாதாரண வழக்கைப் போல பாவித்து 2 வார காலம் அவகாசம் கொடுக்க முடியாது. கொரானா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது பற்றி ஊடகங்கள் வாயிலாக தகவல் வருகிறது.

எனவே, அரசு கொரானா தொற்றிற்காக எத்தனை மருத்துவமனைகளில் (அரசு மற்றும் தனியார்) எத்தனை படுக்கை வசதிகள் ஏற்படுத்தியுள்ளது, சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, ICU வார்டுகள், செலவினங்கள், அதற்கான அரசின் நடவடிக்கைகள் ஆகிய விபரங்களடங்கிய அறிக்கையினை ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகளே தாமாக முன்வந்து மத்திய அரசையும் மனுதாரராக இணைத்து, மத்திய அரசையும், மாநில அரசையும் மேற்குறிப்பிட்ட அறிக்கை மற்றும் பதிலுரை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கினை 16.06.2020 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை.