Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 252

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

“கொரானா : தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.”  – நாம் தொடுத்த பொதுநலவழக்கு விசாரணைக்கு 10.06.2020 அன்று வந்தது!

பத்திரிக்கைச் செய்தி

நாள் : 09.06.2020

COVID-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 03.04.2020 தேதியிட்டு தமிழக அரசு அரசாணை (G.O.Ms.174) வெளியிட்டிருந்தது.

நாடு முழுவதும் பேரிடராக பரவிவரும் கொரானா நோய்த் தொற்றினை தடுத்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகள் கொரானா நோயினை வைத்து கொள்ளயடிப்பதற்கே மேற்படி அரசாணை வழிவகுக்கும். எனவே, மேற்படி அரசாணையில் கொரானா சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பகுதியினை ரத்து செய்து, தனியார் மருத்துவமனைகளிலும் கொரானாவிற்கான சிகிச்சையினை இலவசமாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் (W.P.No7456/2020).

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

படிக்க:
தேசிய பேரிடரான கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் PRPC வழக்கு !
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

இவ்வழக்கு 09.06.2020 அன்று மாண்புமிகு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக காணொளி முறையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் உடன் வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் பாலன் அரிதாஸ் உடன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் மில்டன்.

கொரானா தொற்றினை தனிப்பட்ட நோயினைப்போல கருதி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வழங்கி சிகிச்சை பெற முடிவு செய்த அரசின் முடிவு சட்ட விரோதமானது, கொரானா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய தனது பொறுப்பினை கைவிட்டுவிட்டு, தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கவே இது வழிவகுக்கும். தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரானா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி, அதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். மேலும், கொரானா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் மிகுந்த நெருக்கடியில் இருக்கும் மக்கள், சிகிச்சைக்கு எப்படி செலவு செய்ய முடியும் ? என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜாரான அரசு வழக்கறிஞர் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் 2 வாரம் கால அவகாசம் கோரினார்.

இதனை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதிகள் கொரானா தொற்று பெரும் அச்சுறுத்தலாக பரவி வரும் நிலையில் இதனை சாதாரண வழக்கைப் போல பாவித்து 2 வார காலம் அவகாசம் கொடுக்க முடியாது. கொரானா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது பற்றி ஊடகங்கள் வாயிலாக தகவல் வருகிறது.

எனவே, அரசு கொரானா தொற்றிற்காக எத்தனை மருத்துவமனைகளில் (அரசு மற்றும் தனியார்) எத்தனை படுக்கை வசதிகள் ஏற்படுத்தியுள்ளது, சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, ICU வார்டுகள், செலவினங்கள், அதற்கான அரசின் நடவடிக்கைகள் ஆகிய விபரங்களடங்கிய அறிக்கையினை ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகளே தாமாக முன்வந்து மத்திய அரசையும் மனுதாரராக இணைத்து, மத்திய அரசையும், மாநில அரசையும் மேற்குறிப்பிட்ட அறிக்கை மற்றும் பதிலுரை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கினை 16.06.2020 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை.

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ! வென்றது மக்கள் கோரிக்கை !

0

நாள் : 09.06.2020

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு!

வென்றது பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,
மாணவர் அமைப்பினரின் போராட்டம்!

கொரானா பெருந்தொற்று பரவலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் சூழலில் சுமார் 10 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், அலுவலர்கள் கூடும் பொதுத்தேர்வை நடத்துவது மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்பினர் என ஒட்டுமொத்த தமிழகமும் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் என்று நடத்திய நீண்ட நெடிய போராட்டம் வென்றது. மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல, கொரானா பரவலின் தீவிரம் நன்கு தெரிந்தும் ’’பொதுத்தேர்வை நடத்த இதுதான் சரியான தருணம்’’ என்று நீதிமன்றத்தில் வாதாடியது தமிழக அரசு. சி.பி.எஸ்.சி க்கான தேர்வை ஜூலையில் நடத்தலாம் என மத்திய பாடத்திட்ட வாரிய அமைப்பு அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ஆகஸ்டில் நடத்தலாம் என யூ.ஜி.சி அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக்கே இவ்வளவு யோசிக்கும்போது சமூக இடைவெளி பற்றிய போதிய புரிதல், அச்சம் இல்லாத பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு யோசித்திருக்க வேண்டும். கொரானா பாதிப்பால் யாரும் வரக்கூடாது என உயர் நீதிமன்றமும், தலைமைச்செயலகமும் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மாணவர்களுக்கு மட்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து சொல்லி வந்தது ஆணவத்தின் உச்சம்.

தொடர்ச்சியான ஊரடங்கினால், அனைத்து மாணவர்களின் குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக வேலை வருமானம் இழந்துள்ள நகர்ப்புற, கிராமப்புற ஏழைக் குடும்பத்து மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில் இருப்பார்களா என்று சிந்திக்க வேண்டாமா? ஒருபுறம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே மாணவர்களை நீண்டதூரம் பேருந்துகளில் அழைத்து வருவதும், ஒரே இடத்தில் குவிப்பதும், காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்துவோம் என்று சொல்வதும், 6 மணிநேரம் தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வதும், மாணவர் விடுதிகளில் அடைப்பதும் அறிவியல்பூர்வமானதா? மனித அறிவுக்கு உகந்ததா? பொதுத்தேர்வு என்றாலே மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை கொரானா சூழலில் தேர்வு எழுதச் சொல்வது அவர்கள் மீதான வன்முறையில்லையா?

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சாதாரண பாமரனுக்கும் புரியும் இந்த விசயங்கள் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், மெத்தப்படித்த கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஏன் புரியாமல் இருந்தது.

பெரும்பான்மை மாணவர்கள் நலன், அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாத அதிகாரவர்க்க ஆணவ மனப்போக்கும், தனியார்பள்ளிகளின் நலனும்தான் என்பது முன்னெப்போதையும்விட இப்போது பளிச்சென்று அம்பலமாகியுள்ளது.

கொரானா தீவிரத்திலும் 10 வகுப்பு பொதுத்தேர்வு என்று மாணவர்கள் மீது திணிக்கப்படவிருந்த வன்முறையிலிருந்து 10 லட்சம் மாணவர்களை காப்பற்றியுள்ளோம்.

இதுவொரு போராட்டத்தின் வெற்றிதான் என்றாலும், சற்று ஆறுதலடையலாமேயொழிய மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை.

ஏனென்றால், கல்வியில் இருந்து வந்த வர்க்க ஏற்றத்தாழ்வு கொரானாவுக்குப்பின் மென்மேலும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தனியார்பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இப்போதும் இல்லை, எப்போதும் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.
அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

ஆன் – லைன் வகுப்புகளைக் காட்டி தனியார்பள்ளிகள் கட்டணக் கொள்ளையை படுவேகமாக நடத்துகின்றன.

கொரானாவினால் வேலை, வருமானம் இழந்துள்ள பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை கறாராக வசூலிக்க தனியார் பைனான்ஸ் கம்பெனிகளில் மாணவர்களை அடகுவைக்கும் ’சிறப்புத் திட்டத்திற்கும் (கொத்தடிமைத் திட்டத்திற்கும்)’ தனியார்பள்ளிகளே ஏற்பாடு செய்கின்றன. இதெல்லாம் அரசின் துணையின்றி நடப்பதும் இல்லை.

இத்தகைய தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த கொட்டத்திற்கும் முடிவுகட்டும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !

முடிவில்லா ஊரடங்கின் காலகட்டத்தில் நமது தேசிய சிறு குறு உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட சிறு முயற்சி தான் இந்த பதிவு.

அப்பள உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு. G.திருமுருகன் அவர்களை சந்தித்த போது உற்பத்தியாளர்கள், சிறு அப்பளக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கை குறித்து விவரித்தார்.

நாங்கள் பாரம்பரியமாக இந்த அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். 1998-க்கு பிறகு எங்களுடைய உற்பத்தி மென்மேலும் பெருகியது. உற்பத்தியில் 90℅, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், மாலத்தீவு, அரபு போன்ற வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம். 10% மட்டும் தான் மதுரையில் விற்பனை செய்கிறோம்.

வெளிநாட்டில் எவ்வளவு தான் தின்பண்டங்கள் இருந்தாலும் உணவு உண்ணும் போது அப்பளம் தான் அவர்களுக்கு மிகவும் பிடித்த தின்பண்டமாக இருக்கிறது.
சென்னை, கோவை திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அப்பளத் தொழில் நடைபெற்றாலும் மதுரை தான் வெளிநாட்டின் அப்பளத் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

இந்த தொழிலுக்கு தேவையான உளுந்து 70% பர்மாவில் இருந்து பெறப்படுகிறது. இந்தியாவில், தஞ்சை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இருந்து 30% உளுந்து தான் பெறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து பெறப்படும் உளுந்துக்கு பசைத்தன்மை இருப்பதாலும், அப்பளத் தயாரிப்பில் பிரயோகப் படுத்தும் அனைத்து வகையான வேலைகளும் கைகளினால் செய்யப்படுவதும் அப்பளம் சுவையாகவும், கெடாமலும் இருக்கிறது.
பர்மா உளுந்தில் பசைத்தன்மை இல்லாததால் அப்பளம் சுவையற்றதாக இருக்கிறது.
மேலும் இயந்திரத்தை பயன்படுத்தி அப்பள உற்பத்தி செய்வதால் அப்பளம் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு கெட்டு விடும்படியாகவும் உள்ளது.
அப்பளம் விலை ஏற்றத்தாழ்வுக்கு இதுவும் முக்கியமான காரணம் என்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அதாவது, மார்ச் கடைசி வாரம் ஏப்ரல் முதல் வாரம் இந்த நாட்களில் மட்டும் 90% அப்பளம் விற்பனை ஒப்பந்தம் தள்ளுபடி ஆனது. சரக்குகள் அனைத்தும் திரும்பி வந்துவிட்டது. இதனால் எங்களுக்கு 3லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு விட்டது.

என் கம்பெனியை சார்ந்து 1000 குடும்பங்கள் இருக்கின்றன. அரிசி, பருப்பு என எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்கிறோம். இவை அவர்களுக்கு போதாது என்று எனக்கு தெரியும். நாங்களே ஊரடங்கிற்கு பிறகு இழந்த இழப்பை ஈடுகட்டுவதற்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் அதிக அளவில் பணம் தேவை என்கிற சூழலில் தொழிலாளர்களின் நிலை என்பது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசால் மட்டும் தான் எங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்.

எங்கள் தொழில் GST இல்லை என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் அத்தொழிலை அழிக்கும் விதமாக சுமார் 1000 கோடி முதலீட்டுடன் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் அப்பளத் தொழிலில் கால்பதிக்க போகின்றனர்.

படிக்க:
♦ மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

எங்களுடைய பாரம்பரிய தொழில் அடுத்த தலைமுறைக்கு தொடரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என மன வேதனையுடன் கூறினார்.
சிறு, குறு அப்பள உற்பத்தியாளர்கள் நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கிதான் தொழிலை நடத்தி வருகின்றோம். இப்போதே பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊரடங்கு முடிந்தாலும் பழைய இயல்பு நிலையை எட்டுவதற்கு குறைந்தது 6 மாதம் காலமாவது ஆகும். அதுவரை எங்கள் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கும்.

இப்போது மத்திய அரசு அறிவித்திற்கும் “20 லட்சம் கோடி” சலுகை திட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் அரசிடம் கோருவது இதுதான்.

• மார்ச்சில் இருந்து மே வரைக்கும் 3 மாதம் கடனை தள்ளுபடி செய்வது.
• 1 வருடம் மின்சாரம் இலவசமாக வழங்குவது.
• உளுத்தம்பருப்பை மானிய விலையில் கூட்டுறவில் வழங்குவது.,

இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் மீண்டு வர ஒரே வழி என கூறி முடித்தார்.

***

அப்பள உற்பத்தியாளர் திரு. சீனிவாசன் : நான் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் 40 வருடமாக அப்பளக் கம்பெனி நடத்தி வருகின்றேன். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. 20,000 தொழிலாளர்கள் இருக்கின்றனர். என்னைச் சார்ந்து 300 குடும்பங்கள் உள்ளன. என் கம்பெனியில், பேக்கிங் பிரிவு, அப்பளத் தயாரிப்பு என வேலை முறைகள் உள்ளது.

நாங்கள் பெரும்பாலும் கை வேலை முறைகளில் தான் அப்பளம் தயாரிக்கின்றோம்.
இப்போது தான் அப்பளத் தயாரிப்பு இயந்திரம் வைத்து வேலை செய்கிறோம்.
ஏனென்றால் மற்ற தொழில் போன்று ஒரு சிறு காலத்திற்குள் கற்றுக் கொள்ளும் தொழில் அல்ல. இதனை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 3வருடம் ஆகும். அந்த 3வருடம் கூலி பெரிதாக கிடைக்காது என்பதால் அதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் ஆட்கள் மிகக் குறைவு. குறிப்பாக ஒரு நபர் கட்டிட வேலைக்கு சென்றால் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்கோ ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் வேலை பார்த்தால் தான் 500 ரூபாய் கிடைக்கும். இயந்திர வேலைக்கு குறைந்த ஆட்கள் இருந்தால் போதும் என்பதால் இயந்திரத்தில் அப்பளம் உற்பத்தி செய்கிறோம்.

மாதிரிப் படம்

ஆனால் கையில் தயாரிக்கும் அப்பளத்திற்கும் இயந்திரத்தில் தயாரிக்கும் அப்பளத்திற்கும் தரம் மற்றும் சுவை வேறுபாடுகள் அதிகம் உள்ளது என்றார், மதுரை ஜெய்ஹிந்த்புரம் அப்பளம் உற்பத்தியாளர்.திரு. சீனிவாசன்.

சரக்குகள் முன்புமாதிரி விற்பனையாகவில்லை. ஏனென்றால் கல்யாணம், ஓட்டல்கள், லாட்ஜ்கள் போன்றவை ஏதும் இயங்கவில்லை. இதனால் சரக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இப்போது ஒரு சில பலசரக்கு கடைகளில் மட்டும் தான் விற்பனையாகிறது என்பதால் புதியதாக உற்பத்தி செய்ய தயக்கமாக உள்ளது.

அப்பளம் உற்பத்திக்கு தேவையான உளுந்து தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தான் வருகிறது. இப்போது போக்குவரத்து இல்லை என்பதால் உளுந்து பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும் குறைவாகவே இருக்கிறது.

படிக்க:
♦ மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பளத் தயாரிப்புக்கு ஏற்ற காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து தொழிலாளர் குடும்பங்களும் அதிக உற்பத்தி செய்து வருமானம் ஈட்டுவார்கள்.  ஆனால் நிலைமை ஊரடங்கினால் முற்றிலும் மாறிவிட்டது. தொழிலாளர்கள் வருமானம் இழந்து அமைதியாக இரண்டாம் கட்ட ஊரடங்கு வரைக்கும் வீட்டில் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் எங்கள் தொழிலாளர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகள் செய்தோம். ஆனாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கே உள்ளது. எங்கள் தொழில் இனி வரும் காலங்களில் நீடிக்க வேண்டும் என்றால் அரசு நாங்கள் கோரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
• மாதம் 5000/- ரூபாய் வீதம் 6 மாதத்திற்கு வழங்க வேண்டும்.
• 6 மாதத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
• மானிய விலையில் உளுந்து, அரிசி மாவு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என கூறி முடித்தார்.

அப்பள உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்பது மத்திய மாநில அரசின் மீது உள்ள அவநம்பிக்கையை வாழ்க்கையின் எதார்த்தத்தில் இருந்து வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் தான் தத்தம் தொழில்கள் மீள முடியும் என்கின்ற நிலையில் இருக்கும் போது, இதை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் விடாப்பிடியாக போராடித்தான் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன? What is Happy Hypoxia ?

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில், 90% பேர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை நாம் அறிவோம். இதில் அறிகுறிகள் வெளியே தோன்றாத நிலையிலும் பலருக்கு இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

“ஹேப்பி ஹைப்பாக்சியா” என்றால் என்ன???

இந்த வகை மக்களுக்கு நுரையீரலில் பல்வேறு ரத்த கட்டிகள் (Blood clots) ஏற்பட்டு நுரையீரலின் நுண்ணிய ரத்த நாளங்களை அடைத்துக்கொண்டு நுரையீரலின் முக்கிய வேலையான ரத்தத்தை தூய்மை செய்து ஆக்சிஜனேற்றம் செய்வதில் தொய்வை ஏறபடுத்தும்.

இதனால் ரத்தத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்க வேண்டிய இடத்தில் குறைவான அளவு இருக்கும். இதை spO2 எனும் அளவு கொண்டு அறிய முடியும்.

spO2 என்பது Peripheral Capillary Oxygen Saturation என்று பொருள்.

நுரையீரலில் இருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப்படும் நமது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்று செய்வது ஹீமோகுளோபின் எனும் இரும்பு கலந்த புரதமாகும்.

ஹேப்பி ஹைப்பாக்சியாவில் நுரையீரல் பழுதடைவதால் தேவையான அளவு ஆக்சிஜன் உடல் முழுவதும் சென்று சேராது. பொதுவாக இவ்வாறு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத நிலையை Hypoxia (ஹைப்பாக்சியா) என்று அழைப்போம்.

இந்த வகை ஹைப்பாக்சியா நிலைகளில்
மூச்சு விடுவதில் சிரமம்
(Shortness of Breath)
மூச்சுத்திணறல் (Breathlessness)
ஏங்கி மூச்சு விடுதல் (Gasping) போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஆனால் இந்த சைலண்ட்/ஹேப்பி ஹைபாக்சியா எனும் நிலையில்
நமக்கு தேவையான ஆக்சிஜன் அளவு மிக மிக தாழ்வான நிலைக்கு குறைந்தாலும்
நமக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படுவதில்லை.

படிக்க:
♦ மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !
♦ கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

பொதுவாக SpO2 அளவு 95-100% என்ற அளவில் இருக்கும். இதில் 93%க்கு கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அது ஹைபாக்சியா எனும் அளவு என்று கொள்ளப்படும்.

இந்த ஹேப்பி ஹைபாக்சியா எனும் இந்த பிரச்சனையில் ஆக்சிஜன் அளவுகள்
90%
80%
70%
60% வரை கூட குறைந்திருந்தாலும், நோயாளிக்கு எந்த வெளிப்புற அறிகுறியும் தோன்றாமல் இருக்கும்.

ஆனாலும் நுரையீரலில் பெரும்பகுதி ரத்தக்கட்டிகளால் அடைக்கப்பட்டு அதன் செயல்திறன் மிகவும் குறைந்து விடும்.

அடுத்து குறைவான அளவு ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதால் முக்கியமான உறுப்புகளான;
1.மூளை
2. இதயம்
3. சிறுநீரகம் போன்றவற்றிற்கு தொடர்ந்து மிக குறைவான அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.

இதன் விளைவாக அந்த உறுப்புகளின் செயல்திறன் குறைந்து போனதும் சிறுகச் சிறுக செயலிழக்கும் நிலை ஏற்படும் நிலை உருவாகலாம். இதை Multi Organ Dysfunction என்று அழைக்கிறோம்.

சரி.. எப்படி இவ்வளவு குறைவாக ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் இருக்கும் நிலை வந்தாலும் வெளியே தெரியாமல் இருக்கிறது???

பொதுவாக உயர்ந்த மலையேற்றத்தில் ஈடுபடும் மக்களுக்கு அல்லது உயர்ந்த மலைவாசஸ்தலத்தில் வாழ்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும். காரணம் அவர்கள் வாழும் இடங்களில் காற்றில் தரைமட்டத்தை விட குறைவான அளவு ஆக்சிஜன் இருக்கும்.

அதற்கு ஈடாக அவர்கள் ரத்தத்தில் அதிகமான ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும். (POLYCYTHEMIA) மேலும் மலையேற்றம் செய்பவர்கள் சரசரவென்று மேலே ஏறாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு சிறு தங்கல்கள் செய்து ஏறுவார்கள். இதனால் அவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதும்… ரத்த சிகப்பு அணுக்கள் அளவுகளில் கூடுவதும் ஒரே சேர மெதுவாக நடக்கும் இதை “ACCLAMATIZATION” என்று கூறுவோம். அதாவது உயரமான இடங்களில் வாழ்வதற்கு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலை.

இந்த வகை தகவமைப்பு என்பது நுரையீரல் நல்ல முறையில் செயல்படுபவர்களுக்கு நிகழும் ஆனால்;

நுரையீரலில் கோவிட் போன்ற நியுமோனியா தொற்று இருப்பவர்களுக்கு
 உடல் பருமன் இருப்பவர்களுக்கு
 நுரையீரல் அழற்சி/ ஆஸ்துமா போன்ற நோய் இருப்பவர்களுக்கு
 வயதான மற்றும் குழந்தைகள்

போன்றோருக்கு அத்தனை சிறப்பாக நிகழாது. எனவே இவ்வகை மக்கள் மலையேற்றத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

இதே விசயத்தை கோவிட்19 மூலம் நிகழும் இந்த சைலண்ட் ஹைபாக்சியாவிற்கு பொறுத்திப்பாருங்கள். அதாவது நன்றாக இருக்கும் நுரையீரலை
கொரோனா வைரஸ் தாக்குகிறது.

அது தாக்கும் போது நுரையீரலின் சிறு குறு ரத்த நாளங்களில் பெரும்பான்மை கட்டிகளால் அடைக்கப்பட்ட நிலையில் கூட வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்

இவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் போன்ற வாய்ப்பு இருக்கிறது. உடல் முழுவதும் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால்
1. உடல் சோர்வு
2. உடல் வலி
3. மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

இவ்வாறான குறைவான ஆக்சிஜன் அளவுகளுக்கு சென்ற ஒரு நபர், இன்னும் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் அதிக வேலையைக் கோரும் வேலைகளைச் செய்தால் சைலண்ட் ஹைபாக்சியா வையலண்ட்டாக மாற வாய்ப்புள்ளது.

ஓட்டம் / மலையேற்றம்/ அதிக ஆக்சிஜன் கோரும் உடற்பயிற்சிகளை செய்யும் போது இந்த நிலை முற்றும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இத்தகைய நிலையில் மருத்துவமனையை அடையும் மக்களுக்கு ரத்த கட்டியை கரைக்கும் ஹெபாரின் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வெண்ட்டிலேட்டர் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலை இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது?

Pulse Oximeter எனும் கருவி மூலம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் அளவுகளை அறிய முடியும்.

இது கை விரல்களி்ல் மாட்டி சோதிக்கும் finger pulse oximeter கருவிகள் இப்போது பார்மசிகளில் பல ப்ராண்ட்களில் கிடைக்கின்றன.

அனைவரும் தங்களின் spo2 அளவுகளை தொடர்ந்து இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர்களை வாங்கி சோதித்து கொண்டே இருக்க வேண்டுமா???

தேவையில்லை.

காரணம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகை பல்ஸ் ஆக்சிமீட்டர்களின் தரம் குறித்து ஆய்வு செய்து கூறுவது இயலாது. அனைவராலும் அதை வாங்கி உபயோகிக்கவும் முடியாது.

ஆனால் கோவிட் தொற்று பரவி வரும் நோய் தொற்று மண்டலங்களில் இருப்பவர்களுக்கு அதீத உடல் அசதி / சோர்வு / உடல் வலி
/ மூச்சு விடுவதில் சிரமம் / திணறல் இருந்தால் மருத்துவமனையை அணுகுவதில்
நேரவிரயம் இருக்கக்கூடாது.

காரணம் நமக்கு தோன்று ஒரே அறிகுறியாக அது இருக்கலாம். சைலண்ட் ஹைபாக்சியா என்பது கோவிட் நோயின் ஒரு வடிவம் என்பதை அறிந்துகொண்டோம் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.

நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !

0
மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ?

தமிழக அரசே!

  • மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் எதிர்ப்பை அலட்சியம் செய்யாதே !
  • 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !

தமிழக மக்களே!

  • கொரானாவுக்கு மாணவர்களை ‘பலி’ கொடுப்பதை தடுக்க அனைவரும் குரல்கொடுப்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

***

பெற்றோர்களே எச்சரிக்கை !
  • தனியார் பள்ளிகளின் ஏஜெண்டுதான் அமைச்சர் செங்கோட்டையன் !
  • +1 மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கவே 10 -வது பொதுத்தேர்வு !
  • மாணவர்களை பணையக் கைதியாக்குவதை அனுமதிக்காதே !

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன ?

கொரோனாவிற்கு மருந்தே இல்லையே. மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது.

கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை.

அப்படியானால் கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன?

1. அதீத காய்ச்சல் இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள்

2. சளி இருந்தால் அது வெளியேற மருந்துகள், நுரையீரலுக்காக பிஸியோதெரப்பி

3. வாய்வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் சலைன், க்ளூக்கோஸ் போன்றவை ஏற்றுதல்

4. கொரோனா நுரையீரலைப் பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும். அதற்காக ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்

5. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைந்த அளவுக்குச் சென்றுவிட்டால் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

6. சிலருக்கு நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. அதனால் ரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் போன்ற மருந்துகள்

7. வெள்ளை அணுக்களிலிருந்து அதீதமாக வெளியேறும் சைட்டோக்கைன் (Cytokine) என்னும் ரசாயனம் வைரஸைக் கொல்கிறது. ஆனால் சிலருக்கு இது தாறுமாறாகச் சுரந்து ரத்தக் குழாய்களையும், நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் ARDS ( Acute Respiratory Distress Syndrome) எனப்படும் மூச்சுத் தினறல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க methylprednisolone, Infliximab போன்ற மருந்துகளைச் செலுத்த வேண்டும்.

8. சிலருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்படக் கூடும் . அவர்களுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை.

9. இதயத்தின் சுவர்களில் வைரஸ் பாதிப்பால் இருதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அதைச் சரிசெய்யும் சிகிச்சை.

10. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை சீராக இல்லையென்றால் அவற்றைச் சீர் செய்யச் சிகிச்சை.

11.HCQS ( Hdroxy chloroquine ) போன்று கொரோனாவைக் கொல்வதாகச் சில ஆய்வுகளில் கண்டறியப் பட்ட மருந்துகளைப் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்துவது

12. நுரையீரலில் வேறு பாக்டீரியாக்கால் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அதற்கான ஆண்டிபயாட்டிக் மருந்துகள்.

13. பொதுவாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் , (கபசுரக் குடிநீர் போன்றவையும் இதில் அடங்கும்)

படிக்க:
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

இந்தப் பாதிப்புகளையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை செய்ய அடிக்கடிக் கீழ்கண்ட பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.

அவை

1. நோயாளியின் உடல் வெப்பநிலை ரத்தத் துடிப்பு , ரத்த அழுத்தம், ரத்த ஆக்ஸிசன் அளவு (Pulse oximeter என்ற கருவி மூலம் விரல் நுனியில் அளக்கலாம்). சாதாரண நோயாளிகளுக்கு நான்கு அல்லது எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறையும், தீவிர நோயாளிகளுக்குத் தேவைப்பட்டால் தொடர்ச்சியாகவும் பார்க்க வேண்டும்

2. வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை, யூரியா, க்ரியாட்டினின், கல்லீருக்கான என்ஸைம்கள் போன்ற ரத்தப் பரிசோதனைகள்

3. ரத்தக் குழாய் உறைவை அறிய D – Dimer என்ற ரத்தப் பரிசோதனை

4. நுரையீரலில் நிமோனியா பாதிப்பை அறிய எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள்

5. ஈ.சி.ஜி , எக்கோ போன்ற இருதயத்துக்கான பரிசோதனைகள்

6. மூக்கில் அல்லது தொண்டையில் உள்ள நீரில் கொரோனா கிருமியைக் கண்டறியும் Nasal or Throat swab.

7. ரத்தத்தில் அமிலத் தன்மை , ஆக்ஸிஜன் , கார்பன் மோனாக்ஸைட் (Arterial Blood gas )- வெண்டிலேட்டரில் இருக்கும் தீவிர நோயாளிகளுக்கு

இவைதான் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்.

குறுகிய காலத்தில் பலருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இவற்றையெல்லாம் செய்ய முடியாமல் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் கவனமாக இருங்கள்!! மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக விலகல் இவைதான் இப்போதைக்கு நமக்குக் கொரொனா வராமல் காக்க உதவும் தடுப்பூசிகள்

– டாக்டர். ராமானுஜம்

நன்றி : ஃபேஸ்புக்கில் Ramanujam Govindan 

குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

‘குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை.. அதிகரிக்கும் மரணங்கள் (‘कोरोना: गुजरात के ‘हेल्थ मॉडल’ का डरावना हाल, तेज़ी से हो रही हैं मौतें)

‘குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை… அதிகரிக்கும் மரணங்கள்’ என பிபிசியின் இந்தி சேவையில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம்.

1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது.

2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 74,860 பேர், தமிழ்நாட்டில் சுமார் 28,000 பேர், தில்லியில் சுமார் 23 ஆயிரம் பேர், குஜராத்தில் சுமார் 18,000 பேர்.

3. ஆனால், மரண விகிதங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது குஜராத். மகாராஷ்டிராவில் 2587, குஜராத்தில் 1122 பேர்.

4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு மரணம் நேர்கிறது. ஆனால், குஜராத்தில் இந்த சதவீதம் மிக அதிகம். மே மாத இறுதியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் இருந்தனர். இத்தனைக்கும் தப்லீகினரோ, கோயம்பேடு மாதிரியான க்ளஸ்டரோ அங்கே இல்லை.

5. இருந்தபோதும் குஜராத்தில் கொரோனா பரவியதற்கு தப்லீகிதான் காரணம் என்றார் முதல்வர் விஜய் ரூபானி.

6. இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் அகமதாபாதும் சூரத்தும். பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அகமதாபாதில்தான் இருக்கிறார்கள். இறப்பும் இந்நகரில்தான் அதிகம்.

7. அகமதாபாதில் அம்தாவாத் நி பாட் என்ற பகுதியில் ஏழைகள் அதிகம். மக்கள் நெரிசலும் அதிகம். சமூக இடைவெளி என்பதே இங்கு சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் யாருக்காவது கொரோனா வந்தால் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அங்கே கவனிப்பும் இருக்காது, சிகிச்சையும் இருக்காது.

படிக்க:
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !

8. சற்று வசதியானவர்களாக இருந்தால் தனியார் மருத்துவமனையான எஸ்விபி மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கே சிகிச்சை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.

9. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைத்திருந்தால், கொரோனா பாதித்தவர்கள் விரைவிலேயே சிகிச்சைக்குச் சென்றிருப்பார்கள்.

10. ஆகஸ்ட் 2018 வாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1474 ஆரம்ப சுகாதார நிலையங்களே இருக்கின்றன. பிஹாரிலேயே 1899 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.

11. ஆயிரம் பேருக்கு எத்தனை படுக்கை வசதி என்று எடுத்துப் பார்த்தால், அதில் இந்திய சராசரியைவிட குஜராத் கீழே இருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு 0.3 படுக்கையே இருக்கிறது. ராஜஸ்தானில் 0.6 படுக்கையும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒதிஷாவில் 0.4 படுக்கையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1.1 படுக்கை இருக்கிறது. அதாவது குஜராத்தைப் போல நான்கு மடங்கு.

12. குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 29 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு நிபுணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களிடமும் விழிப்புணர்வு கிடையாது.

13. அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து கணபதி மக்வானா என்பவரை குணப்படுத்திவிட்டதாக டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடந்தது.

14. எல்லாம் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.

முழுக் கட்டுரைக்கான லிங்க் கீழே.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

கொரோனா விலிருந்து மீண்டெழ சுய உதவி குழுக்கள் விவசாய, வாகன கடன்களை ரத்து செய் !

கடன் கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு!

திருச்சி அரியமங்கலம், ஆழ்வார்தோப்பு, கெம்ஸ் டவுன் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம விடியல், தனியார் நுண் கடன் நிறுவனமான ஏவிஎம், ஐடிஎப்சி, சூர்யா டே நிதி நிறுவனங்களுக்காக வசூல் செய்யும் நபர்கள் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோர் கடன் வாங்கிய பெண்களிடம் பணம் கேட்டு போனில் திட்டுவதும், மிரட்டியும் வந்தனர்.

மேலும் நேரில் வீட்டிற்கு வந்து தெருவில் நின்று கொண்டு அவமானப்படுத்தியும் இழிவாகப் பேசியும் பணம் கேட்டு நெருக்கடி தந்தனர். பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி பணம் கேட்டும் மிரட்டினர். இதனால் அவமானப்பட்ட பெண்கள் ஆயிரம் இரண்டாயிரம் என கந்துவட்டிக்கு பணம் பெற்று குழு கடன் அடைத்தனர்.

“கடனை கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்களை பிடித்து கொடுப்போம்!” என்று மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் சில தினங்களுக்கு முன் ஒட்டிய போஸ்டர் எண்களை பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டனர். நிதி நிறுவனத்தினர், குழு கடனுக்காக தகாத வார்த்தையில் இழிவுபடுத்தி பேசியது பற்றி எடுத்து கூறினர். அவமானம் தாங்க முடியாமல் அழுதனர்.

இந்த பாதிப்புகளை மனுவாக எழுதி பத்துக்கும் மேற்பட்ட குழுத் தலைவி மற்றும் பெண்கள், ஆண்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி , தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் உரிமை கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கம் ( கட்சி சார்பற்றது) சார்பாக அமைப்பு நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன முழக்கமிட்டும் கையில் பதாகை உடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் தந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளே செல்ல அனுமதி மறுத்து போலீசார் தடுத்து, அதிமுக அமைச்சர்கள் கலெக்டர் ஆகியோர் மீட்டிங்கில் இருப்பதால் உடனே பார்க்க முடியாது என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எத்தனை மணி நேரமானாலும் கலெக்டரை பார்த்து தங்களுடைய பாதிப்புகளை சொல்லாமல் வீட்டிற்கு போவதில்லை! என பெண்கள் உறுதியாக இருந்தனர். “வீட்டிற்கு போனா கடன்காரன் வந்து மிரட்டுவான்… இன்னைக்கு நாங்க இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டணும்” என்று உறுதியாக சாலையிலே ஒன்றை மணி நேரம் காத்திருந்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்பு அனைவரிடமும் மனுவை பெற்றுக்கொண்டு “நான்… உடனடியாக சட்டபடி அரசு அறிவித்த உத்தரவுக்கு எதிராக செயல்படும் குழுக்கள், தனியார் நுண்கடன் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நாளை பத்திரிக்கையில் அறிக்கை வெளியிடுகிறேன். என்று கூறி உறுதியளித்தார். மேலும்…. மிரட்டி வசூல் செய்பவர்கைளை பிடித்துக்கொண்டு வர வேண்டியது தானே என கலெக்டர் கூறவே “உங்கள் உத்தரவு இருந்தால் அதையும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். நான் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதுடன் மறுநாள் ஊடகங்களுக்கு … ஆகஸ்ட் 31 வரை அரசு உத்தரவை மீறி யாரும் கடன் தொகை கேட்டு மிரட்டவோ, கட்டாய வசூல் செய்யவோ கூடாது! என அறிக்கை வெளியிட்டு உறுதி படுத்தினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்யும் போது இரண்டு நிறுவனத்திலிருந்து தொலைபேசி மூலமாக பணம் கட்டவில்லையா? என்று கேட்டு மிரட்டினர். அதை உடனே எல்லா பத்திரிகையாளர்களுக்கும் தெரியும் வகையிலும் போனில் மிரட்டியதை ஸ்பீக்கரில் போட்டு அம்பலப்படுத்தினர். பத்திரிகையாளர்கள் அமைப்பு தலைவர்கள் எதிர் கேள்வி கேட்டபோது… உடனே பணம் கேட்ட நபர்கள் பயந்துகொண்டு போனை துண்டித்து விட்டனர். ஏற்கனவே குழு கடன் கட்டுபவர்கள் மீது நெருக்கடி கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் தெரிவித்தபோது யார்? எந்த நபர்? நெருக்கடி கொடுக்கிறார்கள். என்பதை மனுவாக எழுதி கொண்டு வாருங்கள்! என்று கூறி நடவடிக்கை எடுக்காமலும் பொது அறிக்கையை வெளியிடாமல் மாவட்ட ஆட்சியர் புறந்தள்ளி பேசினர். தற்போது யாரெல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று மனுவாக எழுதி பெண்களை அழைத்துக்கொண்டு அமைப்பு தோழர்கள் சென்ற போது வேறு வழியில்லாமல் கலெக்டர் பொது அறிக்கை வெளியிடுகிறேன் என்று கூறியதுடன் அறிவிப்பும் வெளியிட்டார்.

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டும் அலட்சியமாக, பொறுப்பற்ற வகையில் இருந்ததால் கடந்த 2ஆம் தேதி திருச்சி தில்லைநகர் பகுதியில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கடன் கேட்டு மிரட்டியதை கண்டித்து அலுவலக வாசலில் 20க்கு மேற்பட்டவர்கள் போராட்டம் செய்தனர். அதன் பின் பஜாஜ் நிறுவனம் ” இரண்டு மாதத்திற்கு நாங்கள் பணம் கேட்டு மிரட்ட மாட்டோம்” என எழுதி கொடுத்தனர். இப்படி மக்கள் போராடித் தான் தங்களுடைய உரிமைகளையும் நீதியையும் பெறுகின்றனர்.

இந்த அரசு கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு பணியாற்ற, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அந்தப் பொறுப்பில் இருந்து வேலை செய்யாமல் மக்கள் வாழ வழியின்றி துயரத்துடன் தொழில் செய்து கிடைக்கும் சொற்ப காசையும் குடும்பச் செலவுகளுக்கும் பிள்ளைகளுக்கும் செலவு செய்ய விடாமல் கந்து வட்டி காரன்கள் மிரட்டி “கடனை கட்டு என பணத்தை பறித்துக் கொண்டு போவதும் ” இந்த அநியாயங்களை கண்டு அரசு நிர்வாக அதிகாரிகள் மெத்தனமாக, நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். கிராம விடியல் என்பது அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் . அந்த நிறுவனமும் தற்போது மக்களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. ரிசர்வ் வங்கி உத்தரவு உடனடியாக எல்லா ஊடகங்களும் பிரேக்கிங் நியூஸ் மற்றும் பரபரப்பு செய்தியாக வெளியிடுகின்றன.

ஆனால் நடைமுறையில் இஎம்ஐ கட்டு, அதற்கு வட்டி கட்டு என பல சிறு குறு நிறுவனங்களையும், பொதுமக்களையும் வாகன கடன் தொகையை கேட்டு மிரட்டுகின்றனர். சொல்லமுடியாத பல இன்னல்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தன்னுடைய சுகங்களை இழந்து வட்டி கட்டுவதும் கடன் தவணை கட்டுவதும் மக்கள் பரிதவிக்கின்றனர். இதை உணராத ஆட்சியாளர்களை, அமைச்சர்களை, மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்ந்து மக்களுக்காக செயல்படக்கூடிய இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து போராடி மக்களை திரட்டி இந்த உத்தரவுகளை வெளியிட வைக்கின்றோம். மேலும் மனு கொடுத்த பிறகு ஆழ்வார் தோப்பில் உள்ள மக்களை தனியார் நிறுவனம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியது அந்த நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இனி மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து தனியார் நிறுவனங்களும், சுய உதவி குழுக்கள், கிராம விடியல் போன்றவற்றின் வசூல் செய்யும் நபர்கள் வந்தால் அவர்களை பிடித்து மக்களே காவல்துறையில் ஒப்படைப்பது, என்பது தவிர வேறு வழி இல்லை. குழு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர். அமைப்புகளும் ஒன்றிணைந்து மக்களுடன் போராடுவோம் என அறிவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !

1

ரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற முதல் ஆண்டில் நரேந்திரமோடி இந்தியாவிற்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளம்வயதினரின் வேறுபட்ட தலைவிதியை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென விரும்புகிறேன்.

பெங்களூருவில் நடந்த ஒரு பொது நிகழ்வின் மேடையில், “பாகிஸ்தான் வாழ்க, இந்தியா வாழ்க” என முழக்கமிட்டதற்காக, தேச விரோதம் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிறையில் இருக்கிறார், பதின்பருவப் பெண்ணான லியோனா.

லியோனா வாழ்வதைப் பற்றிப் பேசினாரெனில், மோடி அரசின் நிதித்துறையின் இளம் அமைச்சரான தாக்கூர் கொல்வதைப் பற்றி பேசியிருக்கிறார்.
டில்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியின் மேடையிலிருந்து பாஜக ஆதரவாளர்களைக் கொண்ட பெரும் கூட்டத்தை, “துரோகிகளைச் சுடுங்கள்” என்று முழக்கமிடத் தூண்டினார். அவர் கூறும் ”துரோகிகள்” என்பது வெறும் கருதுபொருள் அல்ல. மாறாக, ஷாகின் பாக் மற்றும் பிற இடங்களில் அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பெண்களும் ஆண்களும்தான்.

ஷாஹின் பாக் போராளிகளை மிரட்டும் பாஜக தலைவர்கள். அனுராக் தாகூர், அமித் ஷா, பர்வேஸ் வர்மா.

சில நாட்களுக்குப் பிறகு, ஜாமியா மிலியா பல்கலையில் போராட்டக்காரர்கள் மீது உண்மையில் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், போலீசு இதுவரை தாக்கூருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரை காவலில் எடுக்கவும் கோரவில்லை. அமைச்சரின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசு முனைந்ததா என டில்லி கோர்ட்டில் கேட்கப்பட்டதற்கு, அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரி “இது சரியான தருணமல்ல” என பதிலளித்துள்ளார்.
லியோனாவும் தாக்கூரும் தனியாக இல்லை.

இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகு கடந்த ஆண்டை விட வேறு எந்த ஆண்டிலும், இந்தியா முழுவதும் நிறையபேர் அரசியல் காரணங்களுக்காக போலீசு காவலில் காலத்தைச் செலவிட்டது இல்லை. அதேபோல, கைது மற்றும் தடுப்புக் காவல் எனும் வாள் பலரின் தலைகளுக்கு மேல் தொங்கியதும் இல்லை. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தற்போது ஒன்பதாவது மாதமாக சிறைக் காவலில் இருக்கிறார்.

படிக்க:
♦ கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

அதே சமயத்தில் இதற்கு முன்னர், சுதந்திர இந்தியாவில் அரசுக் கட்டமைப்போடு இணைந்திருப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவதும் எப்போதும் இந்த அளவிற்கு இருந்ததில்லை. நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஆதரவாளராகவோ இருந்தால், சட்ட நீதிமன்றத்தின் முன்னால் நின்று பதிலளிக்க வேண்டியிருக்கும் என்ற கவலையின்றி, நீங்கள் ஒரு வன்முறைக்கு வழிகாட்டுதல் கொடுக்கலாம்; அதை நடைமுறைப்படுத்தவும் செய்யலாம்; மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்பலாம்; ஏழைகளை கிண்டலும் அசிங்கப்படுத்தவும் செய்யலாம்.

இந்தியாவில் உள்ள முசுலீம்களை பொருளாதாரரீதியாக புறக்கணிக்குமாறு ஆலோசனை கூறிய காரணத்துக்காக, நியூசிலாந்தில் வாழும் இந்திய பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் “அமைதிக்கான நீதிபதி” என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், கேமராவுக்கு முன்னர் நின்று கொண்டு இதையே பேசியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களது பணியில் அவர்கள் நீடிக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்க எவ்விதக் காரணமும் இல்லை என போலீசு வலிந்து கூறுகிறது.

இன்று மக்களுக்குத் தங்களது தலைவர்களைக் கிண்டல் அல்லது விமர்சனம் செய்வதற்கான உரிமைகூட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிடையாது. அல்லது ஒரு மெல்லிய நூலிழையில்தான் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில், பிரதம மந்திரியை “கப்பு” (பெருமை பீற்றி) என குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கை மத்திய பிரதேச போலீசு பதிவு செய்துள்ளது. உத்தர பிரதேச முதலமைச்சரை நாய் என்று அழைத்த நபர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் புகைப்படக்காரர் ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்துக்காக, தீவிரவாதி என முத்திரைகுத்தி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகக் கூறி கடந்த மாதம் மிரட்டப்பட்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆலை விபத்து குறித்து தொடர்ச்சியாக சங்கடமான கேள்விகளைக் கேட்டதற்காக ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டார். இத்தகைய ‘தனிநபர்’ வழக்குகள், பிறரை பயமுறுத்தி அமைதியாக இருக்கச் செய்யும் நோக்கத்துக்கு சேவை புரிகின்றன. திருத்தம் செய்யப்பட்ட ஊபா சட்டமானது, எவ்வித விசாரணையோ அல்லது வழக்குப் பதிவோ இல்லாமலும் கூட, எந்த ஒரு தனிநபரையும் ‘தீவிரவாதி’ என தீர்மானிக்கும் அதிகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கியுள்ளது.

எவ்வித தயாரிப்பும் திட்டமும் இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் மோடியால் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரழிவு மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று என இரண்டையும் அவர் கையாண்ட விதத்திலிருந்து ஒரு நிர்வாகியாக அவரது கேடுகெட்ட தோல்வி கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் கூர்மையாக கவனத்திற்கு வந்த – பயங்கரமான வகையில் உச்சநிலையடைந்த மறைநோய்க்கூறான – “ஜனநாயகத்தின் மீதான அவரது அவமரியாதை”தான், அவர் தோற்றுவித்த பேரிடர்.
அத்தகைய அவமரியாதை கொண்ட – தான் செய்வதையெல்லாம் தாண்டி தன்னால் அதிகாரத்தில் நீடிக்கமுடியும் என்று நம்பும் – ஒரு தலைவர் மட்டுமே ஓட்டுரிமை கொண்ட கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பத்தை சீர்செய்வதற்காக ஏதேனும் முயற்சி செய்வது பற்றி கண்டுகொள்ளாமலிருக்கத் துணியமுடியும்.

ஜனநாயகத்தின் மீதான மோடியின் அவமரியாதை, ஆழமாகவும் அகலமாகவும் சென்று ஆட்சித்துறையின் அதிகாரப் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தவல்ல ஒவ்வொரு அரசு நிறுவனங்களுக்கும் விரிவடைந்துள்ளது. அவர் பிரதமராக பதவிவகித்த முதல் ஐந்தாண்டுகளில் நீதித்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு நிறுவனம், நாட்டின் பல்கலைக்கழக அமைப்பு, மத்திய கண்காணிப்புக் கமிசன், தகவலறியும் உரிமை, நாடாளுமன்றம் மற்றும் அதன் கமிட்டிகள் அனைத்திற்கும் குழிபறித்தார்.
தனது இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்ததும், இந்தியாவின் ஆட்சியமைப்பு முறையில் இருக்கும் கூட்டாட்சித் தன்மையின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளார். மேலும், மத்திய தகவல் கமிசனின் உட்கூறுகளை உருவி எடுத்துவிட்டார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதான அவரது தாக்குதலை உறுதிசெய்யும் வகையில் நீதித்துறை சுதந்திரத்திற்கு குழிபறித்துள்ளார்.

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், பாஜகவின் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலின் எதிர்வினைகளைத் தவிர்க்க மேம்பாடு மற்றும் வளர்ச்சி என்ற போலிப்பகட்டை ஏமாற்று ஆயுதமாக வைத்திருந்தது. மோடியின் இரண்டாவது முறை ஆட்சியின் முதலாம் ஆண்டில் முசுலீம் விரோத மனநிலை தொடர்பானவை அனைத்தையும்தான் தனது சாதனைகளாக பாஜக சுட்டிக் காட்ட முடியும்.

தங்களது மனைவிகளை முறையாக விவாகரத்து செய்யாமல் அவர்களைக் கைவிடும் முசுலீம் கணவர்களை வலிந்து குற்றவாளியாக்கியதுதான் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (அதேசமயம், இந்து கணவர்கள் இதையே செய்திருந்தால் அவர்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை). பின்னர்தான், ஆகஸ்ட் 5 அன்று அரசியல்சாசனத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஆறுமாதங்களுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது செய்தித் தொடர்புத் தடை திணிக்கப்பட்டது. இன்றுவரை அது முழுமையாக நீக்கப்படவில்லை.

அடுத்தது, பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் 1992-ம் ஆண்டு இடித்தழித்த பாபர்மசூதியிருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற பாஜகவின் நெடுநாள் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும்வகையிலான ஒரு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து உந்தித் தள்ளிப் பெற்றுள்ளது, மோடி அரசாங்கம்.
அது தொடர்பான கிரிமினல் வழக்கு நலிவுறச் செய்யப்படும் அதேவேளையில், சட்டப் பொதுஅறிவுக்கு நேர்மாறாக, ஒரு மிகக் கொடுங்குற்றத்தை செயல்முறைப்படுத்த வழிவகுத்த ஒரு சொத்துத் தகராறு, மோடியின் வற்புறுத்தலால் விரைவாக விசாரிக்கப்பட்டது.

மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ‘சாதனையான’ குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை கடந்த டிசம்பர் மாதம் கண்டது. முத்தலாக் சட்டத்திற்குப் பின்னால் சொல்லப்பட்ட காரணத்தை, வெறும் முஸ்லீம்களுக்கு மட்டும் என்று இல்லாமல் தங்களது மனைவிகளை எவ்வித முறையான விவாகரத்து நடைமுறையும் இல்லாமல் கைவிடும் எந்த ஒரு கணவனுக்குமானதாகக் கொண்டுவந்திருக்க வேண்டும்; அதைப்போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பின் சொல்லப்பட்டுள்ள நோக்கமும், அண்டை நாடுகளிலிருந்து அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முசுலீம் அல்லாதவர்கள் மட்டும் என்று இல்லாமல், பாதிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியக் குடிமகனாக முடியும் என்று இருந்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் நோக்கமோ, சமூகத்தை முனைவாக்கம் செய்ய மதத்தைக் காரணமாக பயன்படுத்துவதிலேயே இருந்தது. அடுத்ததாக அனைத்திந்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதை நோக்கியே அரசாங்கம் முனைந்திருப்பதையே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இழிவார்ந்த ‘காலவரிசை’ நிகழ்ச்சிநிரல் உறுதி செய்தது. இந்தத் திட்டத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பின் ஆழத்தை உணர்ந்ததை ஒட்டி, அமித்ஷாவும் மோடியும் குறைந்தபட்சம் இத்திட்டத்திலிருந்து தற்காலிகமாகவேனும் பின்வாங்கச் செய்யப்பட்டனர்.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களின் உறுதியை உடைக்க வகுப்புவாதக் கலவரங்களை பயன்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் அடுத்த “சாதனையாக” இருந்தது. இந்த நடைமுறை, தோல்வியைத் தழுவியபோது அல்லது கொரோனா வைரஸால் குறுக்கிடப்பட்டபோது, இந்த வன்முறையை “இசுலாமிய – மார்க்சிய சதி”-யின் விளைவாகத் தோன்றியது என்று கதையளக்கத் தொடங்கியது மோடி அரசு. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில், முன்நின்ற செயல்பாட்டாளர்கள் பலரையும் ஊபா எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

அந்த வன்முறை முழுக்க முழுக்க முஸ்லீம்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டது என மொத்த உலகிற்கும் தெரிந்திருந்தாலும், நாஜி ஜெர்மனியில் யூதர்கள் “கண்ணாடித் துகள் இரவில்” (Kristallnacht)*1 தங்களது வீட்டையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கத் தாங்களே சதி செய்ததாகக் கூறப்பட்டதைப் போல முசுலீம்களும் தங்களது வீட்டையும் வாழ்வாதாரத்தையும் அழித்துக்கொள்ள சதி செய்தார்கள் போலும்.

ஒரு பிரதமராக ஜனநாயகத்தை ஒடுக்குவது மற்றும் முசுலீம்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை வளரச் செய்ததையே, தங்களது தலைவரின் ஆறாம் ஆண்டு ஆட்சியின் பெரும் சாதனைகளாகக் காண அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கும் அதேவேளையில், மோடியின் மூன்று மிகப்பெரும் தோல்வியில் இருந்து தப்பிச் செல்ல முடியாது. மோடி அரசின் காஷ்மீர் கொள்கை, கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் கையாண்ட விதம் மற்றும் ஊரடங்கின் அனுமானிக்கத்தக்க பின்விளைவுகளின் பாதிப்பில் இருந்து ஏழைகளையும் பலவீனமானவர்களையும் பாதுகாக்க முடியாத அவரது திறனின்மை ஆகியவையே அந்த மூன்று பெரும் தோல்விகள் ஆகும்.

பாதுகாப்புக் காரணங்களின் பெயரில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4G சேவையை திருப்பியளிப்பதற்கும், அனைத்து அரசியல் தலைவர்களையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், ஜனநாயக அரசியல் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கும் விருப்பமின்றி இருக்கிறது மோடி அரசு. மோடியும் அமித்ஷாவும் கூறிக் கொள்வது போல அரசியல் சாசனத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய மாயாஜாலத் தீர்வு கிடையாது என்பதை இந்த விருப்பமின்மை காட்டுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய இந்த அணுகல்முறை தொடரும்வரை, காஷ்மீர் பிரச்சினைக்கு “மக்கள்தொகை வரைவியல்” தீர்வு குறித்த காஷ்மீர் மக்களின் அச்சம் அதிகரிக்கும்.

பெருமளவிலான கைதுகள் அல்லது இணையத் தடை குறித்து எதுவும் செய்ய மறுப்பது, வெறுமனே அரசியல் சாசன சட்டப் பிரிவு 370 மற்றும் சி.ஏ.ஏ. நடவடிக்கைகள் ஆகியவற்றின் சட்டரீதியான கேள்விகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் போக்குகளையும் மோடி அரசாங்கத்தின் மற்றொரு பெரும்சாதனையாக கண்டிப்பாக குறிப்பிடலாம். பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் கோகாய் பாராளுமன்றத்தின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி நினைத்து ரசிப்பதும் மோடியின் சாதனைகளில் ஒன்று.

அதிகபட்ச நோய்த்தொற்றும் குறைந்தபட்ச ஆளுமையும்
பிரதம மந்திரியின் இடைக்கால, அவசர கதியிலான, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, ஜனநாயகமற்ற செயல்பாட்டு முறைதான் அவரது செயல்பாட்டுமுறையின் அடையாளமுத்திரையாகும். இந்த நிலைமை இந்தியாவுக்கும் நரேந்திர மோடிக்கும் வருந்தத்தக்க வகையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில், நீதித்துறையே கூட பிரதமரைக் காப்பாற்றமுடியாத அளவுக்கு பெரும் தவறுகளைச் செய்ய வழிவகுத்திருக்கிறது. உண்மையில், புலம்பெயர் தொழிலாளர்களை அரசாங்கம் நடத்திய விதத்திற்கு உச்சநீதிமன்றம் முதலில் அங்கீகாரம் கொடுத்தது. அதன் பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களின் முடிவுறாத் துயரம் இந்தியா முழுவதும் பளீரென வெளித்தெரிந்ததன் விளைவாக தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் நிர்பந்திக்கப்பட்டது.

இப்பிரச்சினை துவங்கியது முதல் இதனை மோடி கையாண்டவிதம் பேரழிவுப் பாதையிலானதாகவே இருக்கிறது. இப்பிரச்சினை துவங்கியபின் மிகத் தாமதமாக மார்ச் 13 அன்று கூட அவரது அரசாங்கம் பொது சுகாதார அவசரநிலை எதுவும் இல்லை என்று கண்மூடித்தனமாக தெரிவிக்கிறது. பின் 11 நாட்கள் கழித்து, பிரதமர் தேசிய ஊரடங்கை அமல்படுத்த அவசியமிருப்பதாக உணர்ந்தார். பொதுமக்களுக்கு வெறும் 4 மணிநேர அவகாசம் கொடுத்து தேசிய ஊரடங்கை அமல்படுத்தினார். நோய் பரவலுக்கான தீர்வாக ஊரடங்கை நம்பியதற்கு மோடியை மட்டுமே குறைசொல்ல முடியாது. உலகின் பல்வேறு தலைவர்களும் இதே போலத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் மோடிதான் எவ்வித தயாரிப்பு இல்லாமல் அதனை அமல்படுத்திய ஒரே தலைவர்.

ஊரடங்குத் திட்டத்தை மார்ச் 19 அன்றே அவர் உறுதிசெய்திருந்தால், ‘மக்கள் ஊரடங்கை’ அவர் அறிவித்த மார்ச் 22-க்குள்ளான, இடைப்பட்ட நாட்கள் தொடர்விளைவுகள் குறித்துத் திட்டமிட அவருக்கு உதவியிருக்கும்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தல், பெருந்தொற்று நோயை மதவாதமாக்குதல் போன்ற அரசியல் நோக்கங்களை தீர்ப்பதில் ஊரடங்குக்கு முன்னர் இருந்த நாட்களை வீணடித்துவிட்டு, அரசு இயந்திரத்தை முரட்டுத்தனமாக பயன்படுத்துவதன் மூலம் தனது குறைந்தபட்ச ஆளுகையைக் கொண்டு இப்பிரச்சினையைக் கடந்து சென்றுவிடலாம் என மோடி அரசாங்கம் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால் பொருளாதாரம் மற்றும் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல் பெருந்தொற்றைத் கட்டுப்படுத்துவதற்கும் இந்த ஊரடங்கு தவறிவிட்டது என்பதுதான் எதார்த்தம்.
இதற்கிடையே, சங்கபரிவாரத்தின் அருவெறுக்கத்தக்க முசுலீம் வெறுப்பு நடவடிக்கைகள், வளைகுடா பகுதியுடனான இந்தியாவின் ராஜ்ய உறவை – மோசமான பொருளாதார பின்விளைவுகளை நாட்டிற்கு ஏற்படுத்தியிருக்கத்தக்க வகையில் குழிபறித்தன.

மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில், அருண்ஷோரி பாஜக அரசாங்கத்தை, “மன்மோகன் சிங் மற்றும் கூடுதலாக பசு அரசாங்கம்” என்று பகடிசெய்தார். இன்று ஆளுகையை மத்தியப்படுத்தவும், பெரும் வியாபரங்களின் நலனை முன்தள்ளவும், மக்களின் ஜனநாயக உரிமையை ஏறிமிதிக்கவும் நீதித்துறையை சமாளிக்கவும் பெருந்தொற்று சூழலை மோடி அரசாங்கம் பயன்படுத்தும் விதத்தை வைத்துப் பார்க்கையில், மோடியின் ஆட்சி இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சியை ஒத்ததாக பெருமளவில் மாறத்தொடங்கிவிட்டது.

இந்திராகாந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள், “குறைந்தபட்சம் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடின” என்று சொல்வதுண்டு. ஆனால் மோடியின் இரண்டாவது முறை ஆட்சியால், அதைக்கூட நிர்வகிக்க முடியவில்லை. இத்தகைய விகாரமான ஓட்டத்தைத்தான், ஆறாண்டுகளாக ‘சித்தாந்தரீதியாக’ இயக்கப்பட்ட “ஆளுகை” ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி முதலமைச்சராகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த அனைத்து ஆண்டுகளிலும் நாம் அவரைப் பற்றி கற்றுக்கொண்டது என ஒன்று இருக்குமெனில், அது அவர் தனது தவறுகளில் இருந்து எப்போதும் படிப்பினை கற்றுக் கொள்வதில்லை என்பதுதான். தற்போதைய சூழல், அவரது ஆளுமையின் வழிபாட்டுப்போக்கின் விளைவேயாகும். இதற்கு அவரால் கொடுக்கப்படக் கூடிய ஒரே பதில், தனது மோசமான தாக்குதல்களை உறுதியாகப் பற்றிநிற்பது மட்டும்தான். முன்னர் பிரச்சினைகளைக் கடந்துபோக, அதிகாரத்தை மத்தியத்துவப்படுத்துவது, அதிகாரத்துவப்போக்கு மற்றும் பிரிவினைவாத-முனைவாக்க அரசியல் ஆகியவை அவருக்கு உதவி புரிந்தன. கோவிட்-19 பரவிக் கொண்டிருப்பதாலும், பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருப்பதாலும், இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை நாம் பார்த்திராத அளவுக்கு மிகப்பெரும் சேதம் உண்டாகும் என்பதை எதிர்வரும் ஆண்டு நிரூபிக்கும்.

***

குறிப்பு : Kristallnacht – 1938-ம் ஆண்டு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நாஜி ஜெர்மனி முழுக்க யூதர்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலை நாஜிக்களாலும் துணை இராணுவப்படையினராலும் நிகழ்த்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜி ஜெர்மனி முழுக்க யூதர்களின் கடைகள், இருப்பிடங்கள், தேவாலயங்கள் அடித்து உடைத்தும் தீயிட்டுக் கொளுத்தவும் பட்டன. வீதியெங்கும் நொறுக்கப்பட்ட கண்ணாடித்துகள்கள் நிறைந்திருந்ததால் அந்த இரவுகளை “கண்ணாடித் துகள் இரவு” என்று அழைத்தனர்.

செய்திக்கட்டுரை: சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் – நந்தன்
நன்றி : த வயர்.

கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி !

நண்பர்களே, 

டசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து, ஊரடங்கால் வேலை இல்லாது வருமானம் இன்றி சிரமப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தக்குழு உருவாக்கி, இதுவரை 700 குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான மளிகை தொகுப்புகளை; நிவாரண உதவிகளை செய்து வருகிறோம்.

தொடர்ச்சியான ஊரடங்கால் தொழிற்சாலைகள், கடைகள் என எதுவும் இயங்கவில்லை. ஆகையால், இங்கு வேலைப் பார்த்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.  வருமானம் இல்லை.  சொந்த ஊர்களுக்கு சென்றுவிடலாம் என்றால், ரயில்களோ, பேருந்துகளோ இல்லை.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? அரசு நம்மைப் பார்த்துக்கொள்ளுமா? என்ற பயம் ஒருபுறம்.

இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களோடு கால்நடையாகவும், சைக்கிளிலும் தொலைதூரங்களில் உள்ள தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் கைவிட்டு விட்டன. உச்சநீதிமன்றமும் அலட்சியமாக பதில் சொல்லியது.

படிக்க:
♦ தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

தமிழ்நாட்டிலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடக்கவும், சைக்கிளிலும் செல்ல ஆரம்பித்திருந்தனர். ஆகையால், அவர்களை கண்டடைந்து அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற அடிப்படையில் தேட ஆரம்பித்தோம்.

அம்பத்தூர் தொழிற்பேடையில், மணலி பகுதிகளிலும் இருக்கிறார்கள் என செய்தி கேள்விப்பட்டு அங்கு போனால், பலரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.  பிறகு மாதவரம் பகுதியில் சிரமப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.

01/06/2020 அன்று காலையில் முப்பது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியாக ஒவ்வொருவருக்கும் 5 கிலோ கோதுமை மாவு தொகுப்பை வழக்கறிஞர்கள் மில்டன், சரவணன்,  எழுத்தாளர் பாக்கியம் சங்கர், சமூக ஆர்வலர்களும் வந்து வழங்கினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரு கார்த்திக், திரு. பாலசுப்பிரமணியன், திரு. யுவராஜ், திரு. சங்கர், திரு. அரவிந்தன், திரு. ரமேஷ் பரதன், திரு. மாணிக்கவேல், திரு. சரவணன் பாண்டி, திரு. விக்டர், திரு. மல்லிகார்ஜூனன், திரு. கணபதி. மற்றும் இன்னும் பெயர் வெளியிட விரும்பாத நண்பர்களும்  கடந்த 10 நாட்களில் நன்கொடையாக இதுவரை மூன்று தவணைகளாக ரூ. 80,100 நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரவர் நட்பு வட்டங்களிலிருந்து உதவிகள் தந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருபுறம் மக்களின் தேவைகளும் அதிகரித்து கொண்டே போகிறது, இதை கருத்தில் கொண்டு இயன்றவர்கள் நிவாரணங்களை வழங்கிடுமாறு கோருகிறோம் .

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். சிரமப்படுகிறவர்களும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

வடசென்னை மக்கள் உதவிக்குழு, தொலைபேசி எண்கள் :

  • 9941314359
  • 8825643335
  • 7397468117

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி

தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் நூல் தொல்காப்பியம் (காணொளி உரை)

நண்பர்களே….

பொ.வேல்சாமி

மிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியத்தை நாம் அனைவரும் ஒரு இலக்கண நூலாகத்தான் கருதி வந்திருக்கிறோம். பாரம்பரியமான உரையாசிரியர்கள் பெரும்பாலும் இதேபோன்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை அவர்களுடைய உரைகள் வெளிப்படுத்துகின்றன.

தொல்காப்பியத்தை சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு அந்நூல் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் மட்டும் விவரித்துப் பேசவில்லை. பொருள் இலக்கணத்தின் ஒரு பகுதியாகத்தான் எழுத்தையும் சொல்லையும் தொல்காப்பியர் பேசுகிறார் என்று கருதுவதற்கு பல இடங்கள் தென்பட்டன. குறிப்பாக தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருளியல், மெய்ப்பாட்டியியல், உவமயியல் போன்ற மூன்று இயல்களும் பழந்தமிழ் படைப்பிலக்கியத்தின் தன்மைகளை விளக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் உலகிலுள்ள பிறமொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

படிக்க:
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !
♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி

குறிப்பாக பொருளியியல் என்ற இயலில் தொல்காப்பியர் ஒரு தமிழ்ப் படைப்பிலக்கியம் என்பது இலக்கியச் சுவையை மிகுதிப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் அதீதமான கற்பனைகளைக் கையாளலாம் என்று கூறுகிறார். இத்தகைய செய்தியை அடிப்படையாக வைத்து கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைச் சார்பாக நடத்தப்பட்டு வரும் “இணையவழித் தேசிய பயிலரங்கத்தில்” நான் பேசிய காணொளி உரையின் இணைப்பை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

https://www.youtube.com/watch?v=41-yzJ5Ofts&feature=youtu.be

இப்பதிவில் உள்ள செய்திகள் ஒரு விரிந்த நூலாக எழுதப்பட வேண்டியதின் சுருக்க வடிவம் மட்டுமே.

தொல்காப்பியம் பேசுகின்ற தமிழ்ப் படைப்பாக்கம் பற்றிய செய்திகள் உள்ள பொருளியியல் மெய்ப்பாட்டியியல் உவமயியல் ஆகிய 3 நூல்களின் உரைவளப் பதிப்புகளின் இணையதள இணைப்பை இணைத்துள்ளேன்.

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

புதுச்சேரி திருபுவனையில் செயல்படும் ஐடிசி பன்னாட்டு கம்பெனியின் சன்பீஸ்ட், மேரிகோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுக்களைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனமான வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

கடந்த ஜனவரியில் திருபுவனை தொழிற்சாலையில் உற்பத்தி ஆர்டர் இல்லை என்று சொல்லி, பீகார், உத்திரப்பிரதேசம், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு 9 பெண்கள் உட்பட 25 தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்தது நிர்வாகம்.

பணியிட மாற்றம் செய்யும் இடங்களில் தொழிற்சாலையின் கிளைகள் ஏதும் இல்லை. அதனால் தொழிற்சாலை இல்லாத இடங்களில் பணியிட மாற்றத்தில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம், அந்தந்தப் பகுதியில் உள்ள சேல்ஸ் டிவிசன்கள் முறையாக செயல்படுகின்றன. எனவே அங்கு பணியிட மாற்றத்தில் சென்று தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. சில நிபந்தனைகளுடன் பணியிட மாற்றம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பிறகும் நிர்வாகம் எந்த நிபந்தனையும் ஏற்க முடியாது என வம்படியாக மறுத்தது. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக, மே-27ஆம் தேதி துவங்கிய தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தில், மூன்று நாட்களுக்குப் பிறகு, நிபந்தனைகளை ஏற்பதாக நிர்வாகம் முன்வந்தது.

அதன் அடிப்படையில் பணியிட மாற்றத்திற்கு கால நிர்ணயம் செய்வது, பெண்களின் பணியிட மாற்றத்தையும், வெளி மாநில பணியிடமாற்றத்தையும் தடுப்பது ஆகிய நிபந்தனைகளுடன் பணியிட மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. சேல்ஸ் டிவிசனில் சென்று பணி புரியலாம். அதற்கான வசதிகள் இருக்கிறது என்று நிர்வாகம் சொன்ன விசயங்களின் அடிப்படையில், நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழிலாளர்கள் நேற்று (03.06.2020) அன்று பணியில் சேர கும்பகோணத்திற்குச் சென்றனர்.

படிக்க:
♦ புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

சேல்ஸ் டிவிசன் என்று பணியிட மாற்ற கடிதத்தில் கொடுக்கப்பட்ட முகவரியில் சேல்ஸ் டிவிசன் என்ற போர்டு மட்டுமே இருந்தது. இரண்டு பேர் அமர்ந்து பேசும் இடவசதி கூட இல்லாத ஓலை வேய்ந்த குடிசைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

20 ஆண்டுகளாக எந்திரங்களில் பிஸ்கட்டுக்களை உற்பத்தி செய்து தொழில் நுணுக்கம் வாய்ந்த வேலைகளைச் செய்து வந்த ஆறு தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்குப் பணியிட மாற்றம் செய்வதாகச் சொல்லி குடிசைக்கு மாற்றியது தான் முதலாளித்துவத்தின் குரூரம்.

மேலும், பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு தங்கவும், உணவிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. சேல்ஸ் டிவிசனாக போர்டு வைத்துள்ள இடத்தில் ஓலைக் குடிசை மட்டும் இருந்தாலும், அங்கு தான் வேல் பிஸ்கட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் உள்ளார். அந்தப் பகுதியில் உள்ள  நான்கு, ஐந்து தெருக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிலப்பிரபுவாக வலம் வருகிறார். தன்னை மீறி எதுவும் இங்கே செய்துவிட முடியாது என்கிற ஆதிக்க மனோபாவத்தையும் காண முடிந்தது.

தொழிலாளர்களைப் பழிவாங்குவதே இந்தப் பணியிட மாற்றத்தின் நோக்கம் என்பதற்கு நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சி! ஆனாலும், நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்குப் பணியாமல் அவற்றைக் கடந்து, எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக உறுதியுடன் நிற்கின்றனர் தொழிலாளர்கள்.

ஆண்டுக்கு பல கோடிகளை லாபமாகச் சம்பாதித்து சொத்து சேர்க்கும் முதலாளிகள், அந்த லாபத்திற்குக் காரணமான தொழிலாளர்களது நியாயமான குரலை கேட்கக் கூட தயாராய் இல்லை. தொழிலாளர்களது உரிமைக் குரல் முதலாளித்துவத்தை தினமும் அச்சுறுத்துகிறது. தனது அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அந்தக் குரல் தனக்குக் கேட்காமல் செய்வதற்கு, தொழிலாளர்களின் குரல்வளையை நெறித்து, அவர்களை கண்காணாத தூரத்திற்கு தூக்கி எறிகிறது. அது போர்டே இல்லாத கட்டிடமா? அல்லது கட்டிடமே இல்லாத சுடுகாடா? என்பதைப் பற்றி எல்லாம் முதலாளி வர்க்கத்திற்குக் கவலை இல்லை.

லாப வெறி பிடித்த முதலாளித்துவத்தின் கோர முகம் தொழிலாளி வர்க்கத்தின் மீது விதம் விதமாய் அடக்குமுறைகளை ஏவும் என்பதற்கு வேல்பிஸ்கட்ஸ் முதலாளியின் பணியிட மாற்றம் மற்றுமொரு உதாரணம். எனினும் அதற்கு தொழிலாளிகள் அடிபணியாமல் தொடர்ந்து உறுதியாக போராடுவார்கள்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு – 95977 89801.

கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன ? மருத்துவ நிபுணர்கள் அறிக்கை

ந்திய பொது சுகாதாரச் சங்கம் (Indian Public Health Association – IPHA), தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துக்கான இந்தியச் சங்கம் (Indian Association of Preventive and Social Medicine – IAPSM) இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் (Indian Association of Epidemiologists) இணைந்து வழங்கும் இந்தியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் குறித்தான 2ஆவது கூட்டறிக்கை – கோவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான பொது சுகாதார அணுகுமுறை (2nd Joint Statement on CoVID-19 Pandemic in India – Public Health Approach for COVID19 Control) 25 மே 2020.

கோவிட் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக IPHA, IAPSM, IAE ஆகிய மூன்றும் இணைந்து கூட்டுப் பணிக்குழு ஒன்றை உருவாக்கின. அந்தக் குழுவுக்கு கீழ்க்கண்டவாறு செயல்முறைத் திட்டம் வழங்கப்பட்டது.

1) தேசிய, மாநில, மாவட்ட அளவில் கொள்ளைநோய் குறித்தான தகவல்களைத் திரட்டுவது.

2) கோவிட் கொள்ளை நோய் மற்றும் அதன் பரவல் குறித்து வல்லுநர்கள் இடையே ஒத்த கருத்தை உருவாக்குவது, அதன் அடிப்படையில் செயல்திட்டம் வகுப்பது.

3) அவ்வாறு தயாரித்த அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்களை பொது சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை சங்கங்கள் மற்றும் தொடர்புடைய எல்லாருக்கும் பரப்புவது.

4) மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்வது.

கூட்டுப்பணிக்குழுவில் இடம்பெற்றவர்கள் :

1. Dr. A. C. Dhariwal, Former Director, NVBDCP & NCDC, and Advisor NVBDCP, MoHFW, GoI, New Delhi
2. Dr Anil Kumar, President, IAE & Dy DGHS (Deafness), Nirman Bhawan, New Delhi
3. Dr. A.M. Kadri, Secretary, IAPSM, Ahmedabad
4. Dr. Chandrakant S. Pandav, Past President IPHA & IAPSM, former Professor & Head, Centre for
Community Medicine (CCM), AIIMS, New Delhi, and President, ICCIDD
5. Dr. D.C.S. Reddy, Former Professor & Head, Community Medicine, IMS, BHU, Varanasi
6. Dr. Farooq Ahmed, Former Director NEIGRIMS, and Pro VC KBN University, Gulbarga
7. Dr. Kapil Yadav, Additional Professor, CCM, AIIMS, New Delhi
8. Dr. M. K. Sudarshan, Chief Editor, Indian Journal of Public Health (IJPH), Bengaluru
9. Dr. Puneet Misra, Past President, IAPSM & Professor, CCM, AIIMS, New Delhi
10. Dr. Rajesh Kumar, Former Professor & Head, DCM&SPH, PGIMER, Chandigarh
11. Dr. Rajib Dasgupta, Professor, Community Health, Jawaharlal Nehru University, New Delhi
12. Dr. Sanghamitra Ghosh, Secretary General, IPHA, and CMO (SG) Ministry of Defence, Kolkata
13. Dr. Sanjay K. Rai, National President, IPHA and Professor, CCM, AIIMS, New Delhi
14. Dr. Sanjay Zodpey, President, IAPSM and Vice President-Academics, Public Health Foundation of
India (PHFI), New Delhi
15. Dr. Sanjiv Kumar, Former Executive Director, NHSRC, and Chairman, Indian Academy of Public Health (IAPH), New Delhi
16. Dr. Shashi Kant, Past President IAPSM, and Professor & Head, CCM, AIIMS, New Delhi

மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்க :

Prof. (Dr.) Sanjay K. Rai, Room No. 29, Centre for Community Medicine (CCM), All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi-29. Phone – 011-26594416, Ph – 9868397358, email – drsanjay.aiims@gmail.com

அறிக்கையின் சுருக்கமும் செயல் திட்டமும்

பின்னணி:

பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவிட்-19 நோயைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு 2020 மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவிலான மருத்துவத்துறை வல்லுநர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார். IPHA மற்றும் IAPSM தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வல்லுநர்கள் மட்டத்தில் முறையான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு 2020 ஏப்ரல் 11ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், நிதி ஆயோக், சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவ ஆய்வுத்துறைச் செயலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், அதற்குப் பிறகு உலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் திரட்டப்பட்ட புதிய ஆதாரங்களை இந்தப் பணிக்குழு பரிசீலனை செய்தது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பணியாற்றி வரும் இதர சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்பட பலருடனும் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர். பல்வேறு துறைசார் சங்கங்களிடமிருந்து சமூக ஊடகங்கள் வாயிலான தரவுகளும் திரட்டப்பட்டன. அதன்படி அண்மையில் கிடைத்த ஆதாரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது கூட்டறிக்கை இது.

நிலைமையைப் பற்றிய மதிப்பீடு :

கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாகும். உலகளாவிய சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் இந்தியாவும் பேரழிவு தரும் ‘இரட்டைச் சுமை’யால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது : 145,000க்கும் மேற்பட்ட தொற்று நோயாளிகள், 4,000க்கும் மேற்பட்ட இறப்புகள் ஒரு புறம்; மற்றொரு புறம், 271,000 தொழிற்சாலைகள் மற்றும் 65-70 மில்லியன் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 11.4 கோடிப் பேருக்கு (9.1 கோடி அன்றாடக் கூலிகள், வேலை இழந்த 1.7 கோடி தொழிலாளர்கள்) வேலையிழப்பு ஏற்பட்டு மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2020 ஜனவரி 30ஆம் தேதி, முதல் நோயாளி கண்டறியப்பட்ட பிறகு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், நோயின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்தின; அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களும் கிட்டத்தட்ட முடக்கப்பட்டதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். கொரோனா தீயநுண்கிருமியைக் கட்டுப் படுத்துவது தொடர்பாகக் கிடைத்துள்ள மருத்துவ, கொள்ளைநோய் சார்ந்த மற்றும் பரிசோதனை ஆய்வுகள் சார்ந்த தகவல்கள், மனிதகுலம் ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்பதைக் காட்டுகிறது; ‘கட்டுப்படுத்துவது’ என்ற பார்வையிலிருந்து மாறி, ‘குறைப்பது’ என்பதை நோக்கி செயல்பாட்டுத் திட்டங்களை விரைவாக மறுவடிவாக்கம் செய்தாக வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அண்மையில் கிடைக்கும் ஆதாரங்கள், மருத்துவ சேவைத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கோவிட்-19 மோசமாக்கியுள்ளது என்பதையும், பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் அந்தக் கவலையை நோக்கி மையப்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த முழுமையான, பயன்தரக்கூடிய, ஆற்றல்மிக்க, நீடித்து நிலைக்கக்கூடிய செயல் திட்டங்களை வகுப்பதில் உலகளாவிய சமூகம் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து, தகவல்களைப் பரிமாறி வருகின்றது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாடும் – அந்தந்த நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் – தனக்கே உரிய தேவைகளுக்கு ஏற்பட பெரியதொரு பொது மாடல் ஒன்றை உருவாக்க வேண்டியும் உள்ளது. தரவுகளை ஒளிவுமறைவின்றி விஞ்ஞானிகள், பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள், ஏன், பொது மக்களுடனும்கூட இயன்ற அளவுக்கு விரைவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்; ஆனால் இன்றுவரை அப்படிப் பகிரப்படவில்லை என்பது கவலைக்குரியது. இவ்வாறு பகிர்வதுதான் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும்; கீழ்மட்டம் வரை ஒத்த கருத்தை உருவாக்கும்; பங்கேற்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சூழலை உருவாக்கும்.

2020 மார்ச் 25 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் கடுமையான செயல்களில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் இந்தக் காலகட்டத்திலும் கோவிட் நோய் விரைவாகப் பரவியது. மார்ச் 25ஆம் தேதி 606 என்று இருந்தது, மே 24ஆம் தேதி 138,845 என உயர்ந்தது. ஏதோவொரு செல்வாக்கு மிக்க நிறுவனம், ‘மிக மோசமான நிலையில் என்னவாகும்’ (worst-case simulation) என்ற உத்தேச மதிப்பீட்டில் தயாரித்தளித்த மாடலின் அடிப்படையில் இந்தக் கொடூரமான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது என்றே தோன்றுகிறது.

உலக அளவில் 22 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று அந்த மாடல் மதிப்பீடு செய்தது. அதற்குப் பிந்தைய நடப்பு நிகழ்வுகள், இந்த மாடலின் ஊகங்கள் உண்மை நிலவரத்துக்கு வெகு தூரத்தில் இருக்கின்றன என்பதை நிரூபித்துவிட்டன. புள்ளிவிவரங்களைக் கொண்டு கணக்குப் போடுகிறவர்களை விட, நோய்ப் பரவலைப் பற்றி மேம்பட்ட புரிதல் உள்ள கொள்ளைநோய் வல்லுநர்களிடம் இந்திய அரசு ஆலோசனை செய்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பொதுவெளியில் கிடைக்கின்ற குறைவான தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, களத்தில் பயிற்சியோ திறமைகளோ அதிகம் இல்லாத கொள்ளைநோய் குறித்தான கல்வியாளர்களும் மருத்துவர்களும் அளித்த ஆலோசனைகளின்படி அரசாங்கம் செயல்பட்டதாகத் தெரிகிறது. பொது நிர்வாக அதிகார வர்க்கத்தின் வார்த்தைகளில் கொள்கை வகுப்பாளர்கள் அதீத நம்பிக்கை கொண்டார்கள் என்று தெரிகிறது.

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கொள்ளைநோய், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவம், சமூக அறிவியலார் போன்ற துறைசார் வல்லுநர்களுடன் மிகக் குறைவாகவே ஆலோசனை பெறப்பட்டிருக்கிறது. அதனால்தான் நோய்ப்பரவல், பல கோடிப்பேரின் வாழ்வாதார நெருக்கடி என இரண்டு வகையிலும் இந்தியா பெரிய விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒத்திசைவற்ற மற்றும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்த உத்திகள் மற்றும் கொள்கைகள், குறிப்பாக தேசிய மட்டத்திலான நடவடிக்கைகள், தொற்றுநோயியல் அடிப்படையில் நன்கு சிந்திக்கப்பட்ட கூர்மையான செயல்பாடுகளாக அமையாமல், கொள்கை வகுப்பாளர்களின் ‘மறுசிந்தனைகள்’, மற்றும் வரும்முன் காக்காமல் ‘வந்தபிறகான நடவடிக்கை’ என்பதாகவே இருந்ததைக் காட்டுகின்றன.

கோவிட் நோயாளிகளில் பெரும்பாலோருக்கு அறிகுறிகளே இல்லை; அப்படியே அறிகுறிகள் இருந்தாலும், மிகக் குறைவாக உள்ளன, உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை. பெரும்பாலான நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவையில்லை, குடும்பத்துக்குள் ‘கட்டாய தனிநபர் இடைவெளி’ பின்பற்றச் செய்து வீட்டளவிலேயே சிகிச்சை தர முடியும். கொள்ளைநோய் துவங்கிய நேரத்திலேயே, பரவல் மிகக் குறைவாக இருந்தபோதே, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்குத் திரும்ப அனுமதித்திருந்தால், இன்றைய நிலைமை வந்திருக்காது. இப்போது ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நோய்த் தொற்றையும் சுமந்து செல்கிறார்கள் – பெரும்பாலும் கிராம மற்றும் நகரப் புறநகர்ப் பகுதிகளில் பரப்புகிறார்கள். இங்கெல்லாம் பொது சுகாதார அமைப்புகள் – மருத்துவ சிகிச்சை வசதிகளும் – பலவீனமாக உள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் சமூகப் பரவல் நிலைபெற்று விட்ட இந்தச் சூழலில், கோவிட் கொள்ளை நோயை ஒழித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு சாத்தியமற்றது. தற்போதைக்கு தடுப்பு மருந்தோ பயனுள்ள சிகிச்சையோ இல்லை, (நம்பிக்கை தரக்கூடிய சில மருந்துகள் ஆய்வில் உள்ளன என்றாலும்) அண்மை எதிர்காலத்திலும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாடுமுழுவதும் கடுமையான உரடங்கு விதிக்கப்பட்டதன் எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்த நீட்டிக்கப்பட்ட கால இடைவெளியில் நோய்ப் பரவலின் எண்ணிக்கையைக் குறைத்து, மருத்துவ சேவை வழங்கும் துறைகளின்மீது அதிக பளு விழுந்துவிடாமல் காப்பதும்தான். நான்காம் கட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு இது ஓரளவுக்கு நிறைவேறி விட்டதாகவே தெரிகிறது, ஆனாலும் பொதுமக்களுக்கு அசாதாரணமான சிரமங்களும் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டன.

உலக நாடுகளோடு ஒப்பிட்டால் நோயினால் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாகவே தெரிகிறது, அதிக ஆபத்துள்ள நபர்கள் மத்தியில்தான் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. (அதாவது, வயது முதிர்ந்தவர்கள், ஏற்கெனவே இதர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்றோர்.) ஆனால், ஊரடங்கை காலவரையின்றி நீட்டித்துக்கொண்டே போக முடியாது, ஏனென்றால், ஊரடங்கு காரணமாகவே உயிரிழப்புகள் நேரக்கூடும். (வழக்கமான மருத்துவ சேவைகள் முழுக்கவும் அடைக்கப்பட்டு, இந்திய மக்கள் தொகையின் அடித்தட்டைச் சேர்ந்த பாதிப்பேரின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதால்) ஊரடங்கால் ஏற்படும் உயிரிழப்புகள், கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதன் மூலம் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகப் போகக்கூடும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான வழிமுறைகள் நிறையவே உண்டு. இந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதுடன், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களும் உறுதிசெய்யப்பட வேண்டும். அத்துடன் கூடவே, அனைவருக்கும்– குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறவர்களுக்கும் – மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்வது அவசர அவசியமாகும்.

பரிந்துரைகள் :

இந்தியாவில் பொது சுகாதாரத்துறை கல்வியாளர்கள், மருத்துவத்துறையினர், ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளையும் சார்ந்த நாங்கள், கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்துக்கேற்ற கீழ்க்கண்ட 11 அம்ச செயல்திட்டத்தை பரிந்துரை செய்கிறோம்:

1. குழு அமைத்தல் : மக்களின் ஆரோக்கியம், வாழ்வாதார நெருக்கடி ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் கவனிக்கக்கூடிய வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ வல்லுநர்கள், சமூக அறிவியலார் ஆகியோரைக் கொண்ட குழுவை மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்க வேண்டும்.

2. தரவுகளை வெளிப்படையாக பொதுவில் பகிர்தல் : பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் (மருத்துவம், பரிசோதனைச் சாலைகள், பொது சுகாதாரம், சமூக அறிவியல்) ஆய்வு சமூகம் அணுகி, பகுப்பாய்வு செய்து, பிரச்சினைகளுக்கேற்ற தீர்வுகளைத் தருகிற வகையில் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். அரசுக்கு உடனுக்குடன் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் வகையில் குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைக்குழுக்கள் அடங்கிய பொது ஆரோக்கிய ஆணையம் ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும். தரவுகள் விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றும் மறைமுகத் தன்மையானது, கொள்ளை நோய் குறித்து சுதந்திரமாக ஆய்வு செய்வதற்கும், உரிய எதிர்வினைகளுக்கும் பெரும் தடைக்கல்லாக உள்ளது.

3. ஊரடங்கை நீக்குதல், அந்தந்தப் பகுதியளவில் (கிளஸ்டர்) கட்டுப்பாடுகள் விதித்தல் : தேசிய அளவில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நீக்கப்பட வேண்டும்; மாறாக, கொள்ளை நோயியல் மதிப்பீட்டு அடிப்படையில் அந்தந்தப் பகுதிக்கேற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அடுத்தடுத்து நோயாளிகள் எண்ணிக்கை கூடலாம் என்பதையும் கணக்கில் கொண்டு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான அளவுகோல்களும் இலக்குகளும் நிர்ணயிக்க வேண்டும். ஊரடங்கின் பிரதானக் காரணமே மருத்துவ சேவைத் துறையை தயார் நிலையில் வைப்பதுதான். இந்த விஷயத்தில் அரசு தெளிவான இலக்குகளை அறிவிக்க வேண்டும்.

4. வழக்கமான சுகாதார மருத்துவச் சேவைகளை துவக்குதல் : பிரைமரி, செகண்டரி, டெர்டியரி உள்ளிட்ட எல்லா மட்டத்திலுமான மருத்துவச் சேவைகளை வழக்கம்போல இயங்கவைப்பது மிகமிக முக்கியானதாகும். மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் இதை உடனே துவக்கியாக வேண்டும். இதய நோய்கள், வாத நோய்கள், காசநோய் போன்ற நாள்பட்ட தொற்றுநோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் இருப்பவர்களுக்காக சேவைகள், தடுப்பு மருந்துகள் வழங்குதல் போன்றவற்றை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்புகள் கோவிட்-19 நோயால் ஏற்பட்ட இழப்புகளைவிட அதிகம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. வழக்கமான மருத்துவ சேவைகளை நிறுத்தியன் தீய விளைவுகள் வருகிற நாட்களில் இன்னும் அதிகரிக்கும்.

5. விழிப்புணர்வை அதிகரித்தல், தடுப்பு நடவடிக்கைகளால் நோயின் மூலத்தைக் குறைத்தல் : கொரோனா வைரஸ் பரவலின் எல்லா நிலைகளிலும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி – கிருமியின் மூலத்தைக் (சோர்ஸ்) குறைப்பதே ஆகும். முகமூடிகளைப் (வீட்டில் செய்தவை, மற்றவை) பயன்படுத்தல், கைகளின் சுகாதாரம் (சோப்புப் போட்டுக் கழுவுதல், கிருமிநீக்கம் செய்தல்), இருமும்போது மற்றவர் மீது படாமல் மறைத்தல் ஆகிய வழக்கங்களை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் – குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்கள் பின்பற்றியாக வேண்டும்.

6. உடலால் இடைவெளியும், சமூகப் பிணைப்பும் உறுதி செய்தல், சமூக ஒவ்வாமைகளைத் தவிர்த்தல் : தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்க நபர்களுக்கு இடையிலான உடல் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். (இதுவரை சோஷியல் டிஸ்டன்சிங் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது சமூக இடைவெளி என்று தவறான பொருள் தரக்கூடியது. ஏற்கெனவே தீண்டாமையும் மதவெறியும் சாதிவெறியும் நிலவுகிற சூழலில், சோஷியல் டிஸ்டன்சிங் என்ன சொல் அபத்தமானது. இந்த அறிக்கை physical distancing என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு – மொழிபெயர்ப்பாளர்.) அதே சமயத்தில், லாக்டவுன் காரணமாக வரும் பதற்றம் மற்றும் உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகளை சமாளிக்க சமூகப் பிணைப்பை மேம்படுத்தவுது அவசியம். குறிப்பிட்ட சில குழுக்களுடன் (மதக் குழுக்கள் அல்லது திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்கள்), அவர்களில் எல்லாருமே ஆபத்துக்கு உள்ளானவர்கள் இல்லை என்றாலும் – அவர்களுடன் கோவிட்-19 நோயைத் தொடர்புபடுத்தும் சமூகப் பாகுபாட்டு ஒவ்வாமைகள் இருக்கும். கோவிட்-19 நோய்க்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு குவாரன்டீனிலிருந்து வெளிவருபவர் மீதும் இதுபோன்ற ஒவ்வாமைகள் காட்டப்படக்கூடும். மக்களை விழிப்புணர்வடையச் செய்வதிலும், நோய்க்கு ஆளானவர்களை அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்துவதிலும் அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் முனைப்பாகச் செயல்பட வேண்டும்.

7. முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு : ASHA/ANMs/MPWs மற்றும் மருத்துவ மையங்கள் (தனியார் மருத்துவமனைகள் உள்பட) மூலம் காய்ச்சலை ஒத்த நோய்கள் Influenza like Illnesses (ILI), தீவிர சுவாச நோய் Severe Acute Respiratory Illness (SARI) போன்ற நோய்களை தீவிரமாக கண்காணிப்பதும், தொற்று மூலத்தைக் கண்டறிய புவியியல் ரீதியான மற்றும் தற்காலிக குழுத்தொகுதிகளைக் கண்டறிதலும் அவசியம். உள்ளூர் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த கொள்ளைநோயியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களின் ஆதரவுடன் இதை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் எச்ஐவி நிணநீர் கண்காணிப்புத் தளமானது, கோவிட் நோய் கண்காணிப்புக்கு உதவக்கூடிய சிக்கனமான வழியாகும்; இதைக் கொண்டு நோயின் பளு எவ்வளவு, போக்கு எப்படியிருக்கிறது, தடுப்பு மருந்துகளின் தேவை, மற்றும் இதர தடுப்பு முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை மதிப்பிட முடியும்.

8. பரிசோதித்தல், கண்டறிதல், தடமறிதல், தனிமைப்படுத்தல், பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்தல் : பரிசோதனை விகிதத்தை பெருமளவுக்கு அதிகப்படுத்தியிருந்தாலும் சில மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. கொள்ளைநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் சரியான பாதையில் போவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் பரிசோதனைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன; எல்லா மாநிலங்களுக்கும் சீரான நேர நிர்ணயிப்பு அவசியம். தனியார் பரிசோதனை மையங்களில் இலவச பரிசோதனை செய்யவும் அரசு ஒத்துழைக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்படுத்தக்கூடிய தொடர்பு நபர்களின் எண்ணிக்கை, திரும்பிவரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வரும் வேளையில், வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கப்பட வேண்டும்; முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தீவிரப் பங்கேற்புடன்இதைச் செய்ய வேண்டும்.

9. தீவிர சிகிச்சைத் திறனை வலுப்படுத்தல் : நன்கு பயிற்சி பெற்ற, போதுமான அளவுக்கு பாதுகாப்புப் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே தீவிர சிகிச்சை தர வேண்டும். நோய் அறிகுறிகளையும் தீவிர சுவாசப் பிரச்சினைகளையும் ஆக்சிஜன் மற்றும் இதர உயிர்காக்கும் நடவடிக்கைகளால் திறம்பட சமாளிக்க முடியும் என்று அண்மை சான்றுகள் காட்டுகின்றன. மகாராஷ்டிராவின் மும்பையில் இடம்பெயர் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தை அடையும்போது தேவைகளை சமாளிக்க இதர நகரங்களிலும் இதேபோன்ற மருத்துவமனைகள் அமைக்கப்படலாம்.

10. முன்னணி ஊழியர்களுக்கு போதுமான பிபிஈ சாதனங்கள் : மருத்துவமனைத் தொற்று (Nosocomial infection) என்பதே மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் மன உறுதியையும் கடுமையாக பாதிக்கிற சவால் ஆகும். இந்தப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாகி ‘தீவிரப் பரப்பாளர்கள்’ ஆகிவிட்டால், தொற்றுப் பரவல் பன்மடங்கு அதிகரிக்கவும் விரைவாகப் பரவ்வும் முக்கியமான வழியாகி விடும். எனவே, மருத்துவப் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் போதுமான பிபிஈ சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்; மருத்துவர்களுக்கு ஏற்படக்கூடிய களைப்பு, நோய்ப்படும் ஆபத்துக்கு ஆளாகுதல், குவாரன்டீன் செய்யப்படுதல் போன்றவற்றை சமாளிக்க மாற்றுக் குழுக்கள் தயாராக கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியா இப்போது பிபிஈ தயாரிக்கும் திறனை மேம்படுத்தியுள்ளது, உற்பத்தியை இன்னும் வேகமாக அதிகரிக்க வேண்டும்.

11. பொது சுகாதார அமைப்புகள்/நிறுவனங்கள்/துறைகளை வலுப்படுத்தல் : பல காலமாகவே திட்டமிட்ட வகையில் பொது சுகாதாரம் என்பதை ஒரு துறை என்று கருதாமல் புறக்கணித்தது, கொள்கைகள் வகுப்பதிலும் செயல்திட்டங்கள் உருவாக்குவதிலும் பொது சுகாதார வல்லுநர்களை ஈடுபடுத்தாமல் ஒதுக்கி வைப்பது, ஆகியவற்றால் நாடு, குறிப்பாக இந்த கொள்ளைநோய் நேரத்தில், பெருத்த விலையைத் தர வேண்டியுள்ளது. சேவைகள் மற்றும் ஆய்வு என இரண்டிலும் பொது சுகாதார வசதிகளை (மருத்துவ கவனிப்பு உள்பட) விரைவாக மேம்படுத்துவதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் ஜிடிபியில் 5% இதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.

நம்பிக்கையுடனும், அதே சமயத்தில் எச்சரிக்கையுடன் இதனை முடிக்கிறோம். மனித உயிர்களுக்கும் சமூகக் கட்டமைப்புகளுக்கும் பொருளாதாரங்களுக்கும் குறைந்தபட்ச இழப்புடன் இந்தப் பேரிடரை வெல்வதற்கு ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் மற்றும் மனிதம் சார்ந்த கொள்கைகள்தான் உதவும். பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இயற்கை மீண்டும் ஒருமுரை நமக்கு நினைவூட்டியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை மனிதகுலம் கவனத்தில் கொண்டு, திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. வசுதேவ குடும்பகம் (உலகமே ஒரே குடும்பம்தான்) என்னும் கொள்கையின் அடிப்படையில் எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உகந்த நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு “ஒரே உலகம் ஒரே மாதிரியான ஆரோக்கியம்” (One World One Health) என்னும் அணுகுமுறைதான் மையமாக இருக்க வேண்டும். இந்தப் பூமியின் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் மதிப்பதும் கவனத்தில் கொள்வதும்தான் கோவிட்-19க்குப் பிந்தைய உலகின் வழியாக இருக்க வேண்டும்.

நூறாண்டுகளுக்கு ஒருமுரை உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த சவாலாக வரும் கொள்ளைநோய்களைப் பார்த்த பிறகும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், நமது வாழ்க்கை முறைகளிலும் கொள்கை வகுப்பிலும் – குறிப்பாக சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகளிலும் – அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், – அதன் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும், இப்போதைய கொள்ளை நோயில் வரலாறு காணாத உயிரிழப்புகளைக் காண நேரிடும், இதைவிடக் கவலை தரக்கூடிய ஒன்றை விரைவிலேயே காணவும் நேரிடும்.

(தமிழாக்கம் செய்யப்பட்ட அறிக்கை. ஆங்கில மூலக் கட்டுரைக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

நன்றி : ஃபேஸ்புக்கில் Shahjahan R 

தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

தமிழகத்தின் கொரோனா மரண விகிதாச்சாரம் குறித்த விபரங்கள் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை குறித்த பதிவு !

துவரை நிகழ்ந்துள்ள பதிவுசெய்யப்பட்ட கொரோனா மரணங்களில்; 46.5% மரணங்கள் 41 முதல் 60 வயது வரை உள்ள மக்களுக்கு நிகழ்ந்துள்ளது. 46.5% மரணங்கள் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு நிகழ்ந்துள்ளது. 7% மரணங்கள் 21 முதல் 40 வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது. 20 வயதுக்கு குறைவானோரில் இதுவரை ஒரு மரணமும் நிகழவில்லை.

மேற்சொன்ன தகவல்களில் இருந்து கிடைக்கும் படிப்பினை யாது?

அமெரிக்கா / இத்தாலி / சீனாவிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 40 முதல் 60 வயதுடைய மக்களுக்கு அந்த நாடுகளில் 2% மட்டுமே மரணம் நிகழ்ந்துள்ளது. அங்கே 80% மரணங்கள் 60+ வயதினருக்கு நிகழ்ந்துள்ளது.

எனவே 46.5% மரணம் உழைக்கும் வர்க்கமாகவும் மத்திய வயதினர் என்று பொருள் கொள்ளப்படும் 41 முதல் 60 வயதினருக்கு நிகழ்ந்துள்ளதை நாம் கவனமின்றி கடந்து செல்ல முடியாது.

மேலும் 21-40 வயதினரிடையே மரண விகிதங்கள் என்பது மேற்சொன்ன உலக நாடுகளில் 1%க்கும் குறைவாக பதிவாகியுள்ளது, நம்மிடையே இது 7% பதிவாகியுள்ளது.

நம்மிடையே அதிகமான தொற்று பெறுபவர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 95% பேர் 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

இதிலும் மிக அதிகமான தொற்றுக்குள்ளானவர்கள் 21 வயது முதல் 40 வயதினராகவே இருக்கின்றனர். மேற்சொன்ன தகவல்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.

✅ கொரோனாவால் நூறு மரணங்கள் நிகழ்ந்தால் அதில் ஏழு மரணங்கள் 21 வயது முதல் 40 வயதினருக்கு நிகழும்.

எனவே இளைஞர்களான 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொற்றா நோய்கள் பெருமளவு இருக்காது. மிக திடகாத்திரமான உடல் நலத்துடன் இருப்பார்கள். இருப்பினும் நிகழ்ந்த மரணங்களுள் 7% பேர் இந்த வயதினருக்கு நிகழ்ந்துள்ளது இது வைரஸின் வீரியம் மற்றும் அது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தகர்க்கும் -, 0n 9B87776சக்தியை குறிக்கிறது.

21 முதல் 40 வயதினர் என்ன செய்யலாம் ???

நீங்கள் கல்லூரி செல்லும் மாணவரா? உங்களை நம்பி குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது இல்லையா? தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.
வெளியே வராதீர்கள். முதல் ஊரடங்கில் எப்படி வீட்டிலேயே இருந்தீர்களோ? அதே மாதிரி இருங்கள்.

நான் பார்ப்பது என்னவென்றால், இந்த வயதினர் தான் வெளியே தேவையில்லாமல் வந்து கும்பல் கும்பலாக கூட்டம் கூட்டமாக தேனீர்கடைகளில் காணும் இடங்களிலெல்லாம் நின்று துணி முகக்கவசம் கூட அணியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

படிக்க:
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

ஆனால் அவர்களுக்கே தெரியாது இந்த வயதினர் தான் நிகழும் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று.. எப்படி என்றா கேட்கிறீர்கள்??

நிகழும் கொரோனா தொற்றுகளில் 90% அறிகுறிகள் இல்லாமல் வருகிறது. இந்த தொற்றை வீட்டிற்கு வெளியே வாங்கிகொண்டு வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு கொடுப்பது யார்???

21 வயது முதல் 40 வயதுடைய மக்கள் தான். எனவே தயவு செய்து வீட்டின் பொருளாதாரத்தில் பங்கு எடுக்காத இந்த வயதினர் வீட்டிலேயே இருங்கள்.

  • வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள்.
  • கூட்டம் கூடாதீர்கள்.
  • பைக் எடுத்துக்கொண்டு வெளியே சுற்றாதீர்கள்.
  • வெளியே சென்று வீடு திரும்பினால் கை கழுவுங்கள். முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • திருமணங்கள் / சமயக்கூட்டங்களை தவிருங்கள்.
  • வேலைக்கு சென்றால் வேலை முடிந்ததும் வீடு திரும்புங்கள்.

அடுத்து 41 வயது முதல் 60 வயதினரிடையே, 46.5% மரணங்கள் நிகழ்வது என்பதை மிக மிக கவனமாக நாம் பார்க்க வேண்டும். இவர்கள் தான் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் தலைவராக இருக்கலாம்.

மேலும் இந்த வயதை குடும்பத்தலைவர்கள் நெருங்கும் போது தான் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் அரங்கேற இருக்கும். கட்டாயம் வீட்டில் உட்கார முடியாது. வேலை செய்யச்சென்றே ஆக வேண்டும். எனவே மிக அதிக கவனம் எடுக்க வேண்டியது இந்த வயதினர் தான்.

முடிந்தால் சர்ஜிகல் 3 ப்ளை மாஸ்க் வாங்கி தினமும் ஒன்று என்று அலுவல் நேரத்தில் உபயோகப்படுத்துங்கள். துணி மாஸ்க் உபயோகித்தால் அது கட்டாயம் இரண்டு /மூன்று லேயர் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் கைக்குட்டையை இரண்டு லேயர்களாக மடித்து அந்த துணிக்கவசத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கண்ட இடங்களை தொடாதீர்கள்.
  • கைகளை அடிக்கடி சேனிடைசர் கொண்டு கழுவுங்கள்.
  • நேரம் கிடைத்தால் சோப் போட்டு நன்றாக கை கழுவுங்கள்.
  • ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சோப் போட்டு கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • பவர் இல்லாத கண்ணாடியை வாங்கி அணியலாம்.
  • தேவையில்லாமல் கண்களுக்கு கைகள் செல்வது தடுக்கப்படும்.
  • அலுவல் நேரத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்.
  • வீட்டுக்கு திரும்பும் போது கைகளை சோப் போட்டு கழுவுங்கள்.
  • முடிந்தால் உடையை வெளியே களைந்து விட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.
  • முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • கால்கள்- கைகள்- முகம் என்ற வரிசையில் சோப் போட்டு கழுவுங்கள்

நிகழும் மரணங்களில் 84% ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற ஏதேனும் தொற்றா நோய் இருப்பவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மை தொற்றா நோய்கள் 41 வயது முதல் 60 வயதில் தான் கண்டறியப்படுகிறது.

எனவே கட்டாயம் உங்களது சுகர் / பிரசர் அளவுகள் நார்மலாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்றே ஏற்பட்டாலும் நமது சுகர் பிரசர் அளவுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மீள முடியும். தொற்று நோயாக மாறாமல் தடுக்க முடியும்.

நீரிழிவு/ ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகளில் கவனம் தேவை. தேவையில்லாமல் மருத்துவமனைகளை விஜயம் செய்வதை தவிர்க்கவும். வைபவங்கள் / விருந்துகள் / கேளிக்கைகள் இந்த நேரத்தில் தேவையற்றது. ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

நிகழும் ஒவ்வொரு நூறு மரணங்களுக்கு 47 மரணங்கள் உங்கள் வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது என்பதை மறவாதீர்கள். அடுத்த வயதினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள். இவர்களை பாதுகாப்பது என்பது முன் சொன்ன வயதுடையோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

காரணம். அவர்கள் தான் வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கு நோயைக் கொண்டு சென்று பரிசளிக்கின்றனர். இருப்பினும் வீடுகளிலும் முதியோர்களிடம் இருந்து ஆறு அடி இடைவெளி விட்டு இருப்பது சிறந்தது.

முதியோர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களிடம் பேசும் போது
மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களை அருகில் சென்று கவனித்துக்கொள்ளும் மக்கள் மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தேவையான மருந்துகளை வாங்கித்தர வேண்டும்.

அவசர தேவையன்றி மருத்துவமனைகள்/கிளினிக்குகளுக்கு அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

கட்டாயம் திருமணங்கள்/ கூட்டங்கள் / பயணங்களை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தனியாக கழிப்பறையுடன் கூடிய அறை இருந்தால் அதை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

மேற்சொன்னவற்றை நாம் அடுத்த ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும்

எனது அனுமானம் சரியென்றால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த ஓராண்டுக்கு வீரியத்தில் குறைவின்றி சமூகத்தில் உலவி வரும். அதற்காக ஒரு வருடம் ஊரடங்கு போட முடியாது.

அப்படி கண்டிப்பான ஊரடங்கு போட்டால் ஏற்படும் பொருளாதார சரிவில் இதுவரை மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். 0-20 வயது வரை உள்ளவர்களிடையே பசி மரணங்கள் ஏற்படக்கூடும்.

இருப்பினும் நோயின் பரவலை தடுக்க இதுபோன்ற தளர்வுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது சிறந்தது. அதற்கு காரணம் நம் நாட்டின்

✅மக்கள் தொகை
✅மக்கள் தொகை அடர்த்தி
✅புலம் பெயர்ந்த மக்கள் தொகை
✅மக்களிடையே நிலவும் அறியாமை
✅80% மக்கள் அன்றாட ஜீவனத்துக்கு கட்டாயம் வெளியே வரவேண்டிய கட்டாயம்.
✅கல்லாமை
✅ வறுமை
✅ பொருளாதாரம்

இன்னும் ஓராண்டுக்கு நம்மையும் நம்மை சார்ந்தோரையும் காக்க
நம்மிடையே கொரோனா குறித்த அறிவு, எச்சரிக்கை உணர்வு நிதம் வாங்கும் மூச்சுக்காற்று போல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்னும் தொடர்வோம்.

***

இந்திய அளவில் இதுவரை பெறப்பட்டுள்ள கோவிட் நோய் குறித்த தகவல்களும் அதில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் !

துவரை பாதிக்கப்பட்டோரில் 100-இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது.

✅இது ஆறுதலான செய்தி✅

இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்த 6.33% இல், 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 6.33% பேரில் 3.5% பேரை நாம் இழந்திருக்கிறோம்.

❌இது துற்செய்தி❌

அதாவது மருத்துவமனையில் ஆக்சிஜன்/ வெண்ட்டிலேட்டர்/ ஐசியூ இந்த மூன்றில் ஏதாவது சிகிச்சை எடுப்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இறக்கிறார் என்று அர்த்தம்.

ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தால், அப்போது 45000 பேருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் சூழல் ஏற்படும்.

நம் நாட்டில் இருப்பது 40,000 வெண்ட்டிலேட்டர்கள்.இப்போது ஒரு பத்தாயிரம் கூடி இருக்கலாம். 3.5 லட்சம் பேர் மரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது . (CASE FATALITY RATE AT 3.5%) சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஐசியூ அட்மிஷன் தேவைப்படும். (அதிகபட்சம் நம்மிடம் ஒரு லட்சம் ஐசியூ பெட்களுக்கு மேல் இல்லை) மூன்று லட்சம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.

நான் கூறுவது அனைத்தும், நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒரு கோடி மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது நிகழ்ந்திருக்கும். நான் கூறியது அனைத்தும் அனுமானங்கள் அல்ல.
அறிவியல். இதுவரை நிகழ்ந்ததை வைத்து எதிர்காலத்தை திறம்பட கணிக்கும் அறிவியல்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

0

வேறு வழியில்லாமல் பள்ளியிலிருந்து நின்ற அப்துல் கரீம், சைக்கிள் பழுதுபார்ப்பது போன்ற கிடைக்கிற வேலையை தன் குடும்பத்துக்காக செய்து வந்தார். இறுதியாக ஒரு சிறிய ட்ரக் மூலம் பொருட்களை இந்திய நகரங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், தன்னுடைய குடும்பத்தை வறுமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்.

வேலை, மற்றும் அதனுடன் சிறிய அளவிலான நிதி பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைக்கான முதல் படியாக இருந்தது.

இவை அனைத்தும் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீடித்த கொரோனா வைரஸ் ஊரடங்கால் காணாமல் போயின. கரீம் தனது வேலையை விட்டு வெளியேறி, வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தவிக்கிறார். மாதம் ரூ. 9,000 ஆயிரம் வருமானத்திலிருந்து சேமிக்கப்பட்ட சொற்ப பணமும் தீர்ந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி செலவுக்காக வைத்திருந்த பணமும் செலவழிக்கப்பட்டு விட்டது.

“நாங்கள் மீண்டும் திரும்பிச் சென்றதும் டெல்லியில் வேலை நிலைமை என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது” என கரீம் கவலை கொள்கிறார். “நாங்கள் பசியுடன் இருக்க முடியாது, அதனால் நான் கிடைக்கிற வேலையைச் செய்வேன்” என்கிறார் அவர்.

தொற்று நோயின் பொருளாதார அழிவின் நேரடி விளைவாக, ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும் உலகெங்கிலும் வாழும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது. இதில் கணிசமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டுக்குள் சுமார் 12 மில்லியன் இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி கூறுகிறது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 122 மில்லியன் இந்தியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களில் பணியாற்றியவர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர விற்பனையாளர்கள், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் என பலர் அடங்குவர்.

இந்தியாவின் ஏழ்மையான குடிமக்களை வறுமையிலிருந்து உயர்த்துவதாக உறுதியளித்து 2014 ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஊரடங்கிலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பிடத்தக்க அரசியல் அபாயத்தைக் கொண்டுவரலாம். சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மின்சாரம் மற்றும் பொது வீட்டுவசதி போன்ற ஏழைகளை நேரடியாக குறிவைக்கும் தனது அரசாங்கத்தின் பிரபலமான சமூக திட்டங்களின் பலத்தின் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு, ஏக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட பொருளாதார வலியின் அகலமும் ஆழமும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழிக்குக் கொண்டு செல்ல அவரது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

படிக்க:
♦ ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் ! | தி. லஜபதி ராய்
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

“பல ஆண்டுகளாக வறுமையைத் தணிப்பதற்கான இந்திய அரசாங்கம் எடுத்த பெரும்பாலான முயற்சிகள் சில மாதங்களில் நிராகரிக்கப்படலாம்” என்று பல பன்னாட்டு உதவி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் மேம்பாட்டுத் துறை ஆலோசகரான அஸ்வாஜித் சிங் கூறுகிறார்.

இந்த ஆண்டு வேலையின்மை விகிதங்கள் மேம்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட சிங், “வைரஸை விட அதிகமான மக்கள் பசியால் இறக்கக்கூடும்” என எச்சரிக்கிறார்.

குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 104 மில்லியன் இந்தியர்கள் உலக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு 3.2 டாலருக்கு கீழே வரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழக ஆய்வை சிங் சுட்டிக்காட்டுகிறார். இது வறுமையில் வாடும் மக்களின் விகிதத்தை 60% அல்லது 812 மில்லியனிலிருந்து 68% அல்லது 920 மில்லியனாக எடுத்துக் கொள்ளும் – இது பத்தாண்டுகளுக்கு முன்னர் நாட்டில் கடைசியாக காணப்பட்ட ஒரு நிலைமை என சிங் கூறுகிறார்.

உலக வங்கி அறிக்கை ஒன்று, இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மிகவும் ஏழை குடிமக்களைக் கொண்ட நாடு என்ற நிலையை இழப்பதற்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறியது. மோடியின் ஊரடங்கு அபாயங்களின் தாக்கம் அந்த ஆதாயங்களை மாற்றியமைக்கக்கூடும்.

உலக வங்கி மற்றும் இந்திய பொருளாதார கண்காணிக்கப்பகத்தின் மதிப்பீடுகள் முறையே ஏப்ரல் பிற்பகுதியிலும் மே மாத தொடக்கத்திலும் வெளியிடப்பட்டன. அப்போதிருந்து, இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, மக்கள் தங்கள் கிராமங்களை அடைய, நெரிசலான பேருந்துகள், லாரிகளிலும், நடந்தும் மிதிவண்டிகளிலோ கூட அடைய முயற்சிப்பது ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் உள்ள சமூக துறை கண்டுபிடிப்புகளுக்கான ருஸ்டாண்டி மையம், ஏப்ரல் மாதத்தில் 27 இந்திய மாநிலங்களில் சுமார் 5,800 வீடுகளை உள்ளடக்கிய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட CMIE இன் வேலையின்மை தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

கிராமப்புறங்களில் மிகக் கடுமையான பாதிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த பொருளாதார துயரங்கள் தொற்று நோய் பரவலைக் காட்டிலும் ஊரடங்கின் விளைவால் ஏற்பட்டதாகும். 80% க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வருமான இழப்பை அனுபவித்திருக்கிறார்கள். மேலும் பலர் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு மலிவான கடன், ஏழைகளுக்கு நேரடியாக பணம் பரிமாற்றம் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை எளிதில் அணுகுவதை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால் இவை சில ஆவணங்களைக் கொண்ட மக்களுக்கு உதவுகின்றன, அவை பல ஏழைகளிடம் இல்லை. மில்லியன் கணக்கான வறிய இந்தியர்கள் இப்போது நாடு முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. குவியல்களில் உள்ள அழுகும் பழங்கள் அல்லது இலைகளை மக்கள் உண்பதாக செய்திகள் கூறுகின்றன.

வைரஸ் தாக்கிய நேரத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கனவே பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து கொண்டுவந்தது. மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு, அதை ஆணி அடித்து, வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, நுகர்வை மூடி வைத்து, பொருளாதாரத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னதான நிலைக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

மே 4 முதல் இந்தியாவின் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், ஊரடங்கிலிருந்து வெளியேற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தியா இப்போது ஆசியாவின் வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆகும்.

இந்தியாவின் ஏழைகளின் மீது சுமத்திய வலி என விமர்சனத்திற்கு உள்ளான மோடி, தொற்றுநோய்களின் பொருளாதாரா இழப்பை மீளமைக்க, தனது அரசாங்கம் 265 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% செலவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் வல்லுநர்கள் கூறுகையில், அதன் ஒரு பகுதி மட்டுமே நேரடி நிதி தூண்டுதல் தரக்கூடியது என்றும் ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மொத்த சேதத்தைவிட இது சிறிய தொகை என்றும் கூறினர்.

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ரீதிகா கெரா கூறுகையில், “குறிப்பாக கவலைக்குரியது என்னவெனில் அரசாங்கத்தின் எதிர்வினைதான்”. “இந்த தொற்றுநோய் இந்தியாவில் தற்போதுள்ள மற்றும் ஏற்கனவே உள்ள உயர்ந்த ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக்கும்” என்கிறார் அவர்.

இருப்பினும், பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க சில காலம் பிடிக்கும், இந்தியாவின் தொழில்துறை மையங்களிலிருந்து தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தால், தொழில் மீண்டும் தொடங்க போராட்டத்தை சந்திக்கும்.

கடுமையான இந்திய கோடை காலம் வேறு உள்ளதால், கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கூடுதல் வலியை கொடுக்கும்.

“இங்கு எந்த தொழிற்சாலையோ அல்லது தொழில்களோ இல்லை. இங்கிருப்பது வெறும் மலைதான்” என்கிறார் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் (62 மைல்) தூரம் நடந்து வந்த சுரேந்திர ஹதியா டாமர்.
“நாங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் உயிர்வாழ முடியும், பின்னர் முயற்சி செய்து அருகிலேயே ஒரு வேலையைத் தேட வேண்டும் . என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் அவர்.

20 லட்சம் கோடி ரூபாய் என வெற்று எண்ணிக்கைகளை வாரம் இருமுறை வெவ்வேறு அமைச்சர்கள் மூலம், ஊரடங்கு பொருளாதார இழப்பை ஈடுகட்ட செலவழிக்க உள்ளதாக மோடி அரசு சொல்கிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஒற்றை ரூபாய்கூட போய் சேரவில்லை என்பதை யதார்த்தம் காட்டுகிறது. மக்களின் மீது அவலங்களை கட்டவிழ்த்துவிட்டு, கண்மூடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை தட்டி எழுப்பப் போவது யார்?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.