Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 253

தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி

தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் நூல் தொல்காப்பியம் (காணொளி உரை)

நண்பர்களே….

பொ.வேல்சாமி

மிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியத்தை நாம் அனைவரும் ஒரு இலக்கண நூலாகத்தான் கருதி வந்திருக்கிறோம். பாரம்பரியமான உரையாசிரியர்கள் பெரும்பாலும் இதேபோன்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை அவர்களுடைய உரைகள் வெளிப்படுத்துகின்றன.

தொல்காப்பியத்தை சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு அந்நூல் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் மட்டும் விவரித்துப் பேசவில்லை. பொருள் இலக்கணத்தின் ஒரு பகுதியாகத்தான் எழுத்தையும் சொல்லையும் தொல்காப்பியர் பேசுகிறார் என்று கருதுவதற்கு பல இடங்கள் தென்பட்டன. குறிப்பாக தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருளியல், மெய்ப்பாட்டியியல், உவமயியல் போன்ற மூன்று இயல்களும் பழந்தமிழ் படைப்பிலக்கியத்தின் தன்மைகளை விளக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் உலகிலுள்ள பிறமொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

படிக்க:
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !
♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி

குறிப்பாக பொருளியியல் என்ற இயலில் தொல்காப்பியர் ஒரு தமிழ்ப் படைப்பிலக்கியம் என்பது இலக்கியச் சுவையை மிகுதிப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் அதீதமான கற்பனைகளைக் கையாளலாம் என்று கூறுகிறார். இத்தகைய செய்தியை அடிப்படையாக வைத்து கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைச் சார்பாக நடத்தப்பட்டு வரும் “இணையவழித் தேசிய பயிலரங்கத்தில்” நான் பேசிய காணொளி உரையின் இணைப்பை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

https://www.youtube.com/watch?v=41-yzJ5Ofts&feature=youtu.be

இப்பதிவில் உள்ள செய்திகள் ஒரு விரிந்த நூலாக எழுதப்பட வேண்டியதின் சுருக்க வடிவம் மட்டுமே.

தொல்காப்பியம் பேசுகின்ற தமிழ்ப் படைப்பாக்கம் பற்றிய செய்திகள் உள்ள பொருளியியல் மெய்ப்பாட்டியியல் உவமயியல் ஆகிய 3 நூல்களின் உரைவளப் பதிப்புகளின் இணையதள இணைப்பை இணைத்துள்ளேன்.

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

புதுச்சேரி திருபுவனையில் செயல்படும் ஐடிசி பன்னாட்டு கம்பெனியின் சன்பீஸ்ட், மேரிகோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுக்களைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனமான வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

கடந்த ஜனவரியில் திருபுவனை தொழிற்சாலையில் உற்பத்தி ஆர்டர் இல்லை என்று சொல்லி, பீகார், உத்திரப்பிரதேசம், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு 9 பெண்கள் உட்பட 25 தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்தது நிர்வாகம்.

பணியிட மாற்றம் செய்யும் இடங்களில் தொழிற்சாலையின் கிளைகள் ஏதும் இல்லை. அதனால் தொழிற்சாலை இல்லாத இடங்களில் பணியிட மாற்றத்தில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம், அந்தந்தப் பகுதியில் உள்ள சேல்ஸ் டிவிசன்கள் முறையாக செயல்படுகின்றன. எனவே அங்கு பணியிட மாற்றத்தில் சென்று தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. சில நிபந்தனைகளுடன் பணியிட மாற்றம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பிறகும் நிர்வாகம் எந்த நிபந்தனையும் ஏற்க முடியாது என வம்படியாக மறுத்தது. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக, மே-27ஆம் தேதி துவங்கிய தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தில், மூன்று நாட்களுக்குப் பிறகு, நிபந்தனைகளை ஏற்பதாக நிர்வாகம் முன்வந்தது.

அதன் அடிப்படையில் பணியிட மாற்றத்திற்கு கால நிர்ணயம் செய்வது, பெண்களின் பணியிட மாற்றத்தையும், வெளி மாநில பணியிடமாற்றத்தையும் தடுப்பது ஆகிய நிபந்தனைகளுடன் பணியிட மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. சேல்ஸ் டிவிசனில் சென்று பணி புரியலாம். அதற்கான வசதிகள் இருக்கிறது என்று நிர்வாகம் சொன்ன விசயங்களின் அடிப்படையில், நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழிலாளர்கள் நேற்று (03.06.2020) அன்று பணியில் சேர கும்பகோணத்திற்குச் சென்றனர்.

படிக்க:
♦ புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

சேல்ஸ் டிவிசன் என்று பணியிட மாற்ற கடிதத்தில் கொடுக்கப்பட்ட முகவரியில் சேல்ஸ் டிவிசன் என்ற போர்டு மட்டுமே இருந்தது. இரண்டு பேர் அமர்ந்து பேசும் இடவசதி கூட இல்லாத ஓலை வேய்ந்த குடிசைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

20 ஆண்டுகளாக எந்திரங்களில் பிஸ்கட்டுக்களை உற்பத்தி செய்து தொழில் நுணுக்கம் வாய்ந்த வேலைகளைச் செய்து வந்த ஆறு தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்குப் பணியிட மாற்றம் செய்வதாகச் சொல்லி குடிசைக்கு மாற்றியது தான் முதலாளித்துவத்தின் குரூரம்.

மேலும், பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு தங்கவும், உணவிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. சேல்ஸ் டிவிசனாக போர்டு வைத்துள்ள இடத்தில் ஓலைக் குடிசை மட்டும் இருந்தாலும், அங்கு தான் வேல் பிஸ்கட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் உள்ளார். அந்தப் பகுதியில் உள்ள  நான்கு, ஐந்து தெருக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிலப்பிரபுவாக வலம் வருகிறார். தன்னை மீறி எதுவும் இங்கே செய்துவிட முடியாது என்கிற ஆதிக்க மனோபாவத்தையும் காண முடிந்தது.

தொழிலாளர்களைப் பழிவாங்குவதே இந்தப் பணியிட மாற்றத்தின் நோக்கம் என்பதற்கு நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சி! ஆனாலும், நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்குப் பணியாமல் அவற்றைக் கடந்து, எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக உறுதியுடன் நிற்கின்றனர் தொழிலாளர்கள்.

ஆண்டுக்கு பல கோடிகளை லாபமாகச் சம்பாதித்து சொத்து சேர்க்கும் முதலாளிகள், அந்த லாபத்திற்குக் காரணமான தொழிலாளர்களது நியாயமான குரலை கேட்கக் கூட தயாராய் இல்லை. தொழிலாளர்களது உரிமைக் குரல் முதலாளித்துவத்தை தினமும் அச்சுறுத்துகிறது. தனது அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அந்தக் குரல் தனக்குக் கேட்காமல் செய்வதற்கு, தொழிலாளர்களின் குரல்வளையை நெறித்து, அவர்களை கண்காணாத தூரத்திற்கு தூக்கி எறிகிறது. அது போர்டே இல்லாத கட்டிடமா? அல்லது கட்டிடமே இல்லாத சுடுகாடா? என்பதைப் பற்றி எல்லாம் முதலாளி வர்க்கத்திற்குக் கவலை இல்லை.

லாப வெறி பிடித்த முதலாளித்துவத்தின் கோர முகம் தொழிலாளி வர்க்கத்தின் மீது விதம் விதமாய் அடக்குமுறைகளை ஏவும் என்பதற்கு வேல்பிஸ்கட்ஸ் முதலாளியின் பணியிட மாற்றம் மற்றுமொரு உதாரணம். எனினும் அதற்கு தொழிலாளிகள் அடிபணியாமல் தொடர்ந்து உறுதியாக போராடுவார்கள்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு – 95977 89801.

கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன ? மருத்துவ நிபுணர்கள் அறிக்கை

ந்திய பொது சுகாதாரச் சங்கம் (Indian Public Health Association – IPHA), தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துக்கான இந்தியச் சங்கம் (Indian Association of Preventive and Social Medicine – IAPSM) இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் (Indian Association of Epidemiologists) இணைந்து வழங்கும் இந்தியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் குறித்தான 2ஆவது கூட்டறிக்கை – கோவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான பொது சுகாதார அணுகுமுறை (2nd Joint Statement on CoVID-19 Pandemic in India – Public Health Approach for COVID19 Control) 25 மே 2020.

கோவிட் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக IPHA, IAPSM, IAE ஆகிய மூன்றும் இணைந்து கூட்டுப் பணிக்குழு ஒன்றை உருவாக்கின. அந்தக் குழுவுக்கு கீழ்க்கண்டவாறு செயல்முறைத் திட்டம் வழங்கப்பட்டது.

1) தேசிய, மாநில, மாவட்ட அளவில் கொள்ளைநோய் குறித்தான தகவல்களைத் திரட்டுவது.

2) கோவிட் கொள்ளை நோய் மற்றும் அதன் பரவல் குறித்து வல்லுநர்கள் இடையே ஒத்த கருத்தை உருவாக்குவது, அதன் அடிப்படையில் செயல்திட்டம் வகுப்பது.

3) அவ்வாறு தயாரித்த அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்களை பொது சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை சங்கங்கள் மற்றும் தொடர்புடைய எல்லாருக்கும் பரப்புவது.

4) மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்வது.

கூட்டுப்பணிக்குழுவில் இடம்பெற்றவர்கள் :

1. Dr. A. C. Dhariwal, Former Director, NVBDCP & NCDC, and Advisor NVBDCP, MoHFW, GoI, New Delhi
2. Dr Anil Kumar, President, IAE & Dy DGHS (Deafness), Nirman Bhawan, New Delhi
3. Dr. A.M. Kadri, Secretary, IAPSM, Ahmedabad
4. Dr. Chandrakant S. Pandav, Past President IPHA & IAPSM, former Professor & Head, Centre for
Community Medicine (CCM), AIIMS, New Delhi, and President, ICCIDD
5. Dr. D.C.S. Reddy, Former Professor & Head, Community Medicine, IMS, BHU, Varanasi
6. Dr. Farooq Ahmed, Former Director NEIGRIMS, and Pro VC KBN University, Gulbarga
7. Dr. Kapil Yadav, Additional Professor, CCM, AIIMS, New Delhi
8. Dr. M. K. Sudarshan, Chief Editor, Indian Journal of Public Health (IJPH), Bengaluru
9. Dr. Puneet Misra, Past President, IAPSM & Professor, CCM, AIIMS, New Delhi
10. Dr. Rajesh Kumar, Former Professor & Head, DCM&SPH, PGIMER, Chandigarh
11. Dr. Rajib Dasgupta, Professor, Community Health, Jawaharlal Nehru University, New Delhi
12. Dr. Sanghamitra Ghosh, Secretary General, IPHA, and CMO (SG) Ministry of Defence, Kolkata
13. Dr. Sanjay K. Rai, National President, IPHA and Professor, CCM, AIIMS, New Delhi
14. Dr. Sanjay Zodpey, President, IAPSM and Vice President-Academics, Public Health Foundation of
India (PHFI), New Delhi
15. Dr. Sanjiv Kumar, Former Executive Director, NHSRC, and Chairman, Indian Academy of Public Health (IAPH), New Delhi
16. Dr. Shashi Kant, Past President IAPSM, and Professor & Head, CCM, AIIMS, New Delhi

மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்க :

Prof. (Dr.) Sanjay K. Rai, Room No. 29, Centre for Community Medicine (CCM), All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi-29. Phone – 011-26594416, Ph – 9868397358, email – drsanjay.aiims@gmail.com

அறிக்கையின் சுருக்கமும் செயல் திட்டமும்

பின்னணி:

பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவிட்-19 நோயைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு 2020 மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவிலான மருத்துவத்துறை வல்லுநர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார். IPHA மற்றும் IAPSM தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வல்லுநர்கள் மட்டத்தில் முறையான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு 2020 ஏப்ரல் 11ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், நிதி ஆயோக், சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவ ஆய்வுத்துறைச் செயலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், அதற்குப் பிறகு உலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் திரட்டப்பட்ட புதிய ஆதாரங்களை இந்தப் பணிக்குழு பரிசீலனை செய்தது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பணியாற்றி வரும் இதர சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்பட பலருடனும் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர். பல்வேறு துறைசார் சங்கங்களிடமிருந்து சமூக ஊடகங்கள் வாயிலான தரவுகளும் திரட்டப்பட்டன. அதன்படி அண்மையில் கிடைத்த ஆதாரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது கூட்டறிக்கை இது.

நிலைமையைப் பற்றிய மதிப்பீடு :

கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாகும். உலகளாவிய சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் இந்தியாவும் பேரழிவு தரும் ‘இரட்டைச் சுமை’யால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது : 145,000க்கும் மேற்பட்ட தொற்று நோயாளிகள், 4,000க்கும் மேற்பட்ட இறப்புகள் ஒரு புறம்; மற்றொரு புறம், 271,000 தொழிற்சாலைகள் மற்றும் 65-70 மில்லியன் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 11.4 கோடிப் பேருக்கு (9.1 கோடி அன்றாடக் கூலிகள், வேலை இழந்த 1.7 கோடி தொழிலாளர்கள்) வேலையிழப்பு ஏற்பட்டு மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2020 ஜனவரி 30ஆம் தேதி, முதல் நோயாளி கண்டறியப்பட்ட பிறகு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், நோயின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்தின; அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களும் கிட்டத்தட்ட முடக்கப்பட்டதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். கொரோனா தீயநுண்கிருமியைக் கட்டுப் படுத்துவது தொடர்பாகக் கிடைத்துள்ள மருத்துவ, கொள்ளைநோய் சார்ந்த மற்றும் பரிசோதனை ஆய்வுகள் சார்ந்த தகவல்கள், மனிதகுலம் ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்பதைக் காட்டுகிறது; ‘கட்டுப்படுத்துவது’ என்ற பார்வையிலிருந்து மாறி, ‘குறைப்பது’ என்பதை நோக்கி செயல்பாட்டுத் திட்டங்களை விரைவாக மறுவடிவாக்கம் செய்தாக வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அண்மையில் கிடைக்கும் ஆதாரங்கள், மருத்துவ சேவைத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கோவிட்-19 மோசமாக்கியுள்ளது என்பதையும், பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் அந்தக் கவலையை நோக்கி மையப்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த முழுமையான, பயன்தரக்கூடிய, ஆற்றல்மிக்க, நீடித்து நிலைக்கக்கூடிய செயல் திட்டங்களை வகுப்பதில் உலகளாவிய சமூகம் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து, தகவல்களைப் பரிமாறி வருகின்றது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாடும் – அந்தந்த நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் – தனக்கே உரிய தேவைகளுக்கு ஏற்பட பெரியதொரு பொது மாடல் ஒன்றை உருவாக்க வேண்டியும் உள்ளது. தரவுகளை ஒளிவுமறைவின்றி விஞ்ஞானிகள், பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள், ஏன், பொது மக்களுடனும்கூட இயன்ற அளவுக்கு விரைவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்; ஆனால் இன்றுவரை அப்படிப் பகிரப்படவில்லை என்பது கவலைக்குரியது. இவ்வாறு பகிர்வதுதான் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும்; கீழ்மட்டம் வரை ஒத்த கருத்தை உருவாக்கும்; பங்கேற்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சூழலை உருவாக்கும்.

2020 மார்ச் 25 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் கடுமையான செயல்களில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் இந்தக் காலகட்டத்திலும் கோவிட் நோய் விரைவாகப் பரவியது. மார்ச் 25ஆம் தேதி 606 என்று இருந்தது, மே 24ஆம் தேதி 138,845 என உயர்ந்தது. ஏதோவொரு செல்வாக்கு மிக்க நிறுவனம், ‘மிக மோசமான நிலையில் என்னவாகும்’ (worst-case simulation) என்ற உத்தேச மதிப்பீட்டில் தயாரித்தளித்த மாடலின் அடிப்படையில் இந்தக் கொடூரமான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது என்றே தோன்றுகிறது.

உலக அளவில் 22 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று அந்த மாடல் மதிப்பீடு செய்தது. அதற்குப் பிந்தைய நடப்பு நிகழ்வுகள், இந்த மாடலின் ஊகங்கள் உண்மை நிலவரத்துக்கு வெகு தூரத்தில் இருக்கின்றன என்பதை நிரூபித்துவிட்டன. புள்ளிவிவரங்களைக் கொண்டு கணக்குப் போடுகிறவர்களை விட, நோய்ப் பரவலைப் பற்றி மேம்பட்ட புரிதல் உள்ள கொள்ளைநோய் வல்லுநர்களிடம் இந்திய அரசு ஆலோசனை செய்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பொதுவெளியில் கிடைக்கின்ற குறைவான தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, களத்தில் பயிற்சியோ திறமைகளோ அதிகம் இல்லாத கொள்ளைநோய் குறித்தான கல்வியாளர்களும் மருத்துவர்களும் அளித்த ஆலோசனைகளின்படி அரசாங்கம் செயல்பட்டதாகத் தெரிகிறது. பொது நிர்வாக அதிகார வர்க்கத்தின் வார்த்தைகளில் கொள்கை வகுப்பாளர்கள் அதீத நம்பிக்கை கொண்டார்கள் என்று தெரிகிறது.

படிக்க:
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா
♦ தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கொள்ளைநோய், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவம், சமூக அறிவியலார் போன்ற துறைசார் வல்லுநர்களுடன் மிகக் குறைவாகவே ஆலோசனை பெறப்பட்டிருக்கிறது. அதனால்தான் நோய்ப்பரவல், பல கோடிப்பேரின் வாழ்வாதார நெருக்கடி என இரண்டு வகையிலும் இந்தியா பெரிய விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒத்திசைவற்ற மற்றும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்த உத்திகள் மற்றும் கொள்கைகள், குறிப்பாக தேசிய மட்டத்திலான நடவடிக்கைகள், தொற்றுநோயியல் அடிப்படையில் நன்கு சிந்திக்கப்பட்ட கூர்மையான செயல்பாடுகளாக அமையாமல், கொள்கை வகுப்பாளர்களின் ‘மறுசிந்தனைகள்’, மற்றும் வரும்முன் காக்காமல் ‘வந்தபிறகான நடவடிக்கை’ என்பதாகவே இருந்ததைக் காட்டுகின்றன.

கோவிட் நோயாளிகளில் பெரும்பாலோருக்கு அறிகுறிகளே இல்லை; அப்படியே அறிகுறிகள் இருந்தாலும், மிகக் குறைவாக உள்ளன, உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை. பெரும்பாலான நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவையில்லை, குடும்பத்துக்குள் ‘கட்டாய தனிநபர் இடைவெளி’ பின்பற்றச் செய்து வீட்டளவிலேயே சிகிச்சை தர முடியும். கொள்ளைநோய் துவங்கிய நேரத்திலேயே, பரவல் மிகக் குறைவாக இருந்தபோதே, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்குத் திரும்ப அனுமதித்திருந்தால், இன்றைய நிலைமை வந்திருக்காது. இப்போது ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நோய்த் தொற்றையும் சுமந்து செல்கிறார்கள் – பெரும்பாலும் கிராம மற்றும் நகரப் புறநகர்ப் பகுதிகளில் பரப்புகிறார்கள். இங்கெல்லாம் பொது சுகாதார அமைப்புகள் – மருத்துவ சிகிச்சை வசதிகளும் – பலவீனமாக உள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் சமூகப் பரவல் நிலைபெற்று விட்ட இந்தச் சூழலில், கோவிட் கொள்ளை நோயை ஒழித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு சாத்தியமற்றது. தற்போதைக்கு தடுப்பு மருந்தோ பயனுள்ள சிகிச்சையோ இல்லை, (நம்பிக்கை தரக்கூடிய சில மருந்துகள் ஆய்வில் உள்ளன என்றாலும்) அண்மை எதிர்காலத்திலும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாடுமுழுவதும் கடுமையான உரடங்கு விதிக்கப்பட்டதன் எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்த நீட்டிக்கப்பட்ட கால இடைவெளியில் நோய்ப் பரவலின் எண்ணிக்கையைக் குறைத்து, மருத்துவ சேவை வழங்கும் துறைகளின்மீது அதிக பளு விழுந்துவிடாமல் காப்பதும்தான். நான்காம் கட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு இது ஓரளவுக்கு நிறைவேறி விட்டதாகவே தெரிகிறது, ஆனாலும் பொதுமக்களுக்கு அசாதாரணமான சிரமங்களும் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டன.

உலக நாடுகளோடு ஒப்பிட்டால் நோயினால் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாகவே தெரிகிறது, அதிக ஆபத்துள்ள நபர்கள் மத்தியில்தான் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. (அதாவது, வயது முதிர்ந்தவர்கள், ஏற்கெனவே இதர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்றோர்.) ஆனால், ஊரடங்கை காலவரையின்றி நீட்டித்துக்கொண்டே போக முடியாது, ஏனென்றால், ஊரடங்கு காரணமாகவே உயிரிழப்புகள் நேரக்கூடும். (வழக்கமான மருத்துவ சேவைகள் முழுக்கவும் அடைக்கப்பட்டு, இந்திய மக்கள் தொகையின் அடித்தட்டைச் சேர்ந்த பாதிப்பேரின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதால்) ஊரடங்கால் ஏற்படும் உயிரிழப்புகள், கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதன் மூலம் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகப் போகக்கூடும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான வழிமுறைகள் நிறையவே உண்டு. இந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதுடன், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களும் உறுதிசெய்யப்பட வேண்டும். அத்துடன் கூடவே, அனைவருக்கும்– குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறவர்களுக்கும் – மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்வது அவசர அவசியமாகும்.

பரிந்துரைகள் :

இந்தியாவில் பொது சுகாதாரத்துறை கல்வியாளர்கள், மருத்துவத்துறையினர், ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளையும் சார்ந்த நாங்கள், கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்துக்கேற்ற கீழ்க்கண்ட 11 அம்ச செயல்திட்டத்தை பரிந்துரை செய்கிறோம்:

1. குழு அமைத்தல் : மக்களின் ஆரோக்கியம், வாழ்வாதார நெருக்கடி ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் கவனிக்கக்கூடிய வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ வல்லுநர்கள், சமூக அறிவியலார் ஆகியோரைக் கொண்ட குழுவை மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்க வேண்டும்.

2. தரவுகளை வெளிப்படையாக பொதுவில் பகிர்தல் : பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் (மருத்துவம், பரிசோதனைச் சாலைகள், பொது சுகாதாரம், சமூக அறிவியல்) ஆய்வு சமூகம் அணுகி, பகுப்பாய்வு செய்து, பிரச்சினைகளுக்கேற்ற தீர்வுகளைத் தருகிற வகையில் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். அரசுக்கு உடனுக்குடன் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் வகையில் குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைக்குழுக்கள் அடங்கிய பொது ஆரோக்கிய ஆணையம் ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும். தரவுகள் விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றும் மறைமுகத் தன்மையானது, கொள்ளை நோய் குறித்து சுதந்திரமாக ஆய்வு செய்வதற்கும், உரிய எதிர்வினைகளுக்கும் பெரும் தடைக்கல்லாக உள்ளது.

3. ஊரடங்கை நீக்குதல், அந்தந்தப் பகுதியளவில் (கிளஸ்டர்) கட்டுப்பாடுகள் விதித்தல் : தேசிய அளவில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நீக்கப்பட வேண்டும்; மாறாக, கொள்ளை நோயியல் மதிப்பீட்டு அடிப்படையில் அந்தந்தப் பகுதிக்கேற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அடுத்தடுத்து நோயாளிகள் எண்ணிக்கை கூடலாம் என்பதையும் கணக்கில் கொண்டு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான அளவுகோல்களும் இலக்குகளும் நிர்ணயிக்க வேண்டும். ஊரடங்கின் பிரதானக் காரணமே மருத்துவ சேவைத் துறையை தயார் நிலையில் வைப்பதுதான். இந்த விஷயத்தில் அரசு தெளிவான இலக்குகளை அறிவிக்க வேண்டும்.

4. வழக்கமான சுகாதார மருத்துவச் சேவைகளை துவக்குதல் : பிரைமரி, செகண்டரி, டெர்டியரி உள்ளிட்ட எல்லா மட்டத்திலுமான மருத்துவச் சேவைகளை வழக்கம்போல இயங்கவைப்பது மிகமிக முக்கியானதாகும். மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் இதை உடனே துவக்கியாக வேண்டும். இதய நோய்கள், வாத நோய்கள், காசநோய் போன்ற நாள்பட்ட தொற்றுநோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் இருப்பவர்களுக்காக சேவைகள், தடுப்பு மருந்துகள் வழங்குதல் போன்றவற்றை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்புகள் கோவிட்-19 நோயால் ஏற்பட்ட இழப்புகளைவிட அதிகம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. வழக்கமான மருத்துவ சேவைகளை நிறுத்தியன் தீய விளைவுகள் வருகிற நாட்களில் இன்னும் அதிகரிக்கும்.

5. விழிப்புணர்வை அதிகரித்தல், தடுப்பு நடவடிக்கைகளால் நோயின் மூலத்தைக் குறைத்தல் : கொரோனா வைரஸ் பரவலின் எல்லா நிலைகளிலும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி – கிருமியின் மூலத்தைக் (சோர்ஸ்) குறைப்பதே ஆகும். முகமூடிகளைப் (வீட்டில் செய்தவை, மற்றவை) பயன்படுத்தல், கைகளின் சுகாதாரம் (சோப்புப் போட்டுக் கழுவுதல், கிருமிநீக்கம் செய்தல்), இருமும்போது மற்றவர் மீது படாமல் மறைத்தல் ஆகிய வழக்கங்களை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் – குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்கள் பின்பற்றியாக வேண்டும்.

6. உடலால் இடைவெளியும், சமூகப் பிணைப்பும் உறுதி செய்தல், சமூக ஒவ்வாமைகளைத் தவிர்த்தல் : தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்க நபர்களுக்கு இடையிலான உடல் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். (இதுவரை சோஷியல் டிஸ்டன்சிங் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது சமூக இடைவெளி என்று தவறான பொருள் தரக்கூடியது. ஏற்கெனவே தீண்டாமையும் மதவெறியும் சாதிவெறியும் நிலவுகிற சூழலில், சோஷியல் டிஸ்டன்சிங் என்ன சொல் அபத்தமானது. இந்த அறிக்கை physical distancing என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு – மொழிபெயர்ப்பாளர்.) அதே சமயத்தில், லாக்டவுன் காரணமாக வரும் பதற்றம் மற்றும் உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகளை சமாளிக்க சமூகப் பிணைப்பை மேம்படுத்தவுது அவசியம். குறிப்பிட்ட சில குழுக்களுடன் (மதக் குழுக்கள் அல்லது திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்கள்), அவர்களில் எல்லாருமே ஆபத்துக்கு உள்ளானவர்கள் இல்லை என்றாலும் – அவர்களுடன் கோவிட்-19 நோயைத் தொடர்புபடுத்தும் சமூகப் பாகுபாட்டு ஒவ்வாமைகள் இருக்கும். கோவிட்-19 நோய்க்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு குவாரன்டீனிலிருந்து வெளிவருபவர் மீதும் இதுபோன்ற ஒவ்வாமைகள் காட்டப்படக்கூடும். மக்களை விழிப்புணர்வடையச் செய்வதிலும், நோய்க்கு ஆளானவர்களை அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்துவதிலும் அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் முனைப்பாகச் செயல்பட வேண்டும்.

7. முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு : ASHA/ANMs/MPWs மற்றும் மருத்துவ மையங்கள் (தனியார் மருத்துவமனைகள் உள்பட) மூலம் காய்ச்சலை ஒத்த நோய்கள் Influenza like Illnesses (ILI), தீவிர சுவாச நோய் Severe Acute Respiratory Illness (SARI) போன்ற நோய்களை தீவிரமாக கண்காணிப்பதும், தொற்று மூலத்தைக் கண்டறிய புவியியல் ரீதியான மற்றும் தற்காலிக குழுத்தொகுதிகளைக் கண்டறிதலும் அவசியம். உள்ளூர் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த கொள்ளைநோயியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களின் ஆதரவுடன் இதை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் எச்ஐவி நிணநீர் கண்காணிப்புத் தளமானது, கோவிட் நோய் கண்காணிப்புக்கு உதவக்கூடிய சிக்கனமான வழியாகும்; இதைக் கொண்டு நோயின் பளு எவ்வளவு, போக்கு எப்படியிருக்கிறது, தடுப்பு மருந்துகளின் தேவை, மற்றும் இதர தடுப்பு முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை மதிப்பிட முடியும்.

8. பரிசோதித்தல், கண்டறிதல், தடமறிதல், தனிமைப்படுத்தல், பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்தல் : பரிசோதனை விகிதத்தை பெருமளவுக்கு அதிகப்படுத்தியிருந்தாலும் சில மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. கொள்ளைநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் சரியான பாதையில் போவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் பரிசோதனைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன; எல்லா மாநிலங்களுக்கும் சீரான நேர நிர்ணயிப்பு அவசியம். தனியார் பரிசோதனை மையங்களில் இலவச பரிசோதனை செய்யவும் அரசு ஒத்துழைக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்படுத்தக்கூடிய தொடர்பு நபர்களின் எண்ணிக்கை, திரும்பிவரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வரும் வேளையில், வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கப்பட வேண்டும்; முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தீவிரப் பங்கேற்புடன்இதைச் செய்ய வேண்டும்.

9. தீவிர சிகிச்சைத் திறனை வலுப்படுத்தல் : நன்கு பயிற்சி பெற்ற, போதுமான அளவுக்கு பாதுகாப்புப் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே தீவிர சிகிச்சை தர வேண்டும். நோய் அறிகுறிகளையும் தீவிர சுவாசப் பிரச்சினைகளையும் ஆக்சிஜன் மற்றும் இதர உயிர்காக்கும் நடவடிக்கைகளால் திறம்பட சமாளிக்க முடியும் என்று அண்மை சான்றுகள் காட்டுகின்றன. மகாராஷ்டிராவின் மும்பையில் இடம்பெயர் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தை அடையும்போது தேவைகளை சமாளிக்க இதர நகரங்களிலும் இதேபோன்ற மருத்துவமனைகள் அமைக்கப்படலாம்.

10. முன்னணி ஊழியர்களுக்கு போதுமான பிபிஈ சாதனங்கள் : மருத்துவமனைத் தொற்று (Nosocomial infection) என்பதே மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் மன உறுதியையும் கடுமையாக பாதிக்கிற சவால் ஆகும். இந்தப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாகி ‘தீவிரப் பரப்பாளர்கள்’ ஆகிவிட்டால், தொற்றுப் பரவல் பன்மடங்கு அதிகரிக்கவும் விரைவாகப் பரவ்வும் முக்கியமான வழியாகி விடும். எனவே, மருத்துவப் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் போதுமான பிபிஈ சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்; மருத்துவர்களுக்கு ஏற்படக்கூடிய களைப்பு, நோய்ப்படும் ஆபத்துக்கு ஆளாகுதல், குவாரன்டீன் செய்யப்படுதல் போன்றவற்றை சமாளிக்க மாற்றுக் குழுக்கள் தயாராக கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியா இப்போது பிபிஈ தயாரிக்கும் திறனை மேம்படுத்தியுள்ளது, உற்பத்தியை இன்னும் வேகமாக அதிகரிக்க வேண்டும்.

11. பொது சுகாதார அமைப்புகள்/நிறுவனங்கள்/துறைகளை வலுப்படுத்தல் : பல காலமாகவே திட்டமிட்ட வகையில் பொது சுகாதாரம் என்பதை ஒரு துறை என்று கருதாமல் புறக்கணித்தது, கொள்கைகள் வகுப்பதிலும் செயல்திட்டங்கள் உருவாக்குவதிலும் பொது சுகாதார வல்லுநர்களை ஈடுபடுத்தாமல் ஒதுக்கி வைப்பது, ஆகியவற்றால் நாடு, குறிப்பாக இந்த கொள்ளைநோய் நேரத்தில், பெருத்த விலையைத் தர வேண்டியுள்ளது. சேவைகள் மற்றும் ஆய்வு என இரண்டிலும் பொது சுகாதார வசதிகளை (மருத்துவ கவனிப்பு உள்பட) விரைவாக மேம்படுத்துவதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் ஜிடிபியில் 5% இதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.

நம்பிக்கையுடனும், அதே சமயத்தில் எச்சரிக்கையுடன் இதனை முடிக்கிறோம். மனித உயிர்களுக்கும் சமூகக் கட்டமைப்புகளுக்கும் பொருளாதாரங்களுக்கும் குறைந்தபட்ச இழப்புடன் இந்தப் பேரிடரை வெல்வதற்கு ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் மற்றும் மனிதம் சார்ந்த கொள்கைகள்தான் உதவும். பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இயற்கை மீண்டும் ஒருமுரை நமக்கு நினைவூட்டியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை மனிதகுலம் கவனத்தில் கொண்டு, திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. வசுதேவ குடும்பகம் (உலகமே ஒரே குடும்பம்தான்) என்னும் கொள்கையின் அடிப்படையில் எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உகந்த நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு “ஒரே உலகம் ஒரே மாதிரியான ஆரோக்கியம்” (One World One Health) என்னும் அணுகுமுறைதான் மையமாக இருக்க வேண்டும். இந்தப் பூமியின் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் மதிப்பதும் கவனத்தில் கொள்வதும்தான் கோவிட்-19க்குப் பிந்தைய உலகின் வழியாக இருக்க வேண்டும்.

நூறாண்டுகளுக்கு ஒருமுரை உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த சவாலாக வரும் கொள்ளைநோய்களைப் பார்த்த பிறகும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், நமது வாழ்க்கை முறைகளிலும் கொள்கை வகுப்பிலும் – குறிப்பாக சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகளிலும் – அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், – அதன் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும், இப்போதைய கொள்ளை நோயில் வரலாறு காணாத உயிரிழப்புகளைக் காண நேரிடும், இதைவிடக் கவலை தரக்கூடிய ஒன்றை விரைவிலேயே காணவும் நேரிடும்.

(தமிழாக்கம் செய்யப்பட்ட அறிக்கை. ஆங்கில மூலக் கட்டுரைக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

நன்றி : ஃபேஸ்புக்கில் Shahjahan R 

தமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

தமிழகத்தின் கொரோனா மரண விகிதாச்சாரம் குறித்த விபரங்கள் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை குறித்த பதிவு !

துவரை நிகழ்ந்துள்ள பதிவுசெய்யப்பட்ட கொரோனா மரணங்களில்; 46.5% மரணங்கள் 41 முதல் 60 வயது வரை உள்ள மக்களுக்கு நிகழ்ந்துள்ளது. 46.5% மரணங்கள் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு நிகழ்ந்துள்ளது. 7% மரணங்கள் 21 முதல் 40 வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது. 20 வயதுக்கு குறைவானோரில் இதுவரை ஒரு மரணமும் நிகழவில்லை.

மேற்சொன்ன தகவல்களில் இருந்து கிடைக்கும் படிப்பினை யாது?

அமெரிக்கா / இத்தாலி / சீனாவிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 40 முதல் 60 வயதுடைய மக்களுக்கு அந்த நாடுகளில் 2% மட்டுமே மரணம் நிகழ்ந்துள்ளது. அங்கே 80% மரணங்கள் 60+ வயதினருக்கு நிகழ்ந்துள்ளது.

எனவே 46.5% மரணம் உழைக்கும் வர்க்கமாகவும் மத்திய வயதினர் என்று பொருள் கொள்ளப்படும் 41 முதல் 60 வயதினருக்கு நிகழ்ந்துள்ளதை நாம் கவனமின்றி கடந்து செல்ல முடியாது.

மேலும் 21-40 வயதினரிடையே மரண விகிதங்கள் என்பது மேற்சொன்ன உலக நாடுகளில் 1%க்கும் குறைவாக பதிவாகியுள்ளது, நம்மிடையே இது 7% பதிவாகியுள்ளது.

நம்மிடையே அதிகமான தொற்று பெறுபவர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 95% பேர் 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்.

இதிலும் மிக அதிகமான தொற்றுக்குள்ளானவர்கள் 21 வயது முதல் 40 வயதினராகவே இருக்கின்றனர். மேற்சொன்ன தகவல்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.

✅ கொரோனாவால் நூறு மரணங்கள் நிகழ்ந்தால் அதில் ஏழு மரணங்கள் 21 வயது முதல் 40 வயதினருக்கு நிகழும்.

எனவே இளைஞர்களான 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொற்றா நோய்கள் பெருமளவு இருக்காது. மிக திடகாத்திரமான உடல் நலத்துடன் இருப்பார்கள். இருப்பினும் நிகழ்ந்த மரணங்களுள் 7% பேர் இந்த வயதினருக்கு நிகழ்ந்துள்ளது இது வைரஸின் வீரியம் மற்றும் அது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தகர்க்கும் -, 0n 9B87776சக்தியை குறிக்கிறது.

21 முதல் 40 வயதினர் என்ன செய்யலாம் ???

நீங்கள் கல்லூரி செல்லும் மாணவரா? உங்களை நம்பி குடும்பத்தின் பொருளாதாரம் தற்போது இல்லையா? தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.
வெளியே வராதீர்கள். முதல் ஊரடங்கில் எப்படி வீட்டிலேயே இருந்தீர்களோ? அதே மாதிரி இருங்கள்.

நான் பார்ப்பது என்னவென்றால், இந்த வயதினர் தான் வெளியே தேவையில்லாமல் வந்து கும்பல் கும்பலாக கூட்டம் கூட்டமாக தேனீர்கடைகளில் காணும் இடங்களிலெல்லாம் நின்று துணி முகக்கவசம் கூட அணியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

படிக்க:
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

ஆனால் அவர்களுக்கே தெரியாது இந்த வயதினர் தான் நிகழும் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று.. எப்படி என்றா கேட்கிறீர்கள்??

நிகழும் கொரோனா தொற்றுகளில் 90% அறிகுறிகள் இல்லாமல் வருகிறது. இந்த தொற்றை வீட்டிற்கு வெளியே வாங்கிகொண்டு வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு கொடுப்பது யார்???

21 வயது முதல் 40 வயதுடைய மக்கள் தான். எனவே தயவு செய்து வீட்டின் பொருளாதாரத்தில் பங்கு எடுக்காத இந்த வயதினர் வீட்டிலேயே இருங்கள்.

  • வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள்.
  • கூட்டம் கூடாதீர்கள்.
  • பைக் எடுத்துக்கொண்டு வெளியே சுற்றாதீர்கள்.
  • வெளியே சென்று வீடு திரும்பினால் கை கழுவுங்கள். முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • திருமணங்கள் / சமயக்கூட்டங்களை தவிருங்கள்.
  • வேலைக்கு சென்றால் வேலை முடிந்ததும் வீடு திரும்புங்கள்.

அடுத்து 41 வயது முதல் 60 வயதினரிடையே, 46.5% மரணங்கள் நிகழ்வது என்பதை மிக மிக கவனமாக நாம் பார்க்க வேண்டும். இவர்கள் தான் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் தலைவராக இருக்கலாம்.

மேலும் இந்த வயதை குடும்பத்தலைவர்கள் நெருங்கும் போது தான் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் அரங்கேற இருக்கும். கட்டாயம் வீட்டில் உட்கார முடியாது. வேலை செய்யச்சென்றே ஆக வேண்டும். எனவே மிக அதிக கவனம் எடுக்க வேண்டியது இந்த வயதினர் தான்.

முடிந்தால் சர்ஜிகல் 3 ப்ளை மாஸ்க் வாங்கி தினமும் ஒன்று என்று அலுவல் நேரத்தில் உபயோகப்படுத்துங்கள். துணி மாஸ்க் உபயோகித்தால் அது கட்டாயம் இரண்டு /மூன்று லேயர் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் கைக்குட்டையை இரண்டு லேயர்களாக மடித்து அந்த துணிக்கவசத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

  • கண்ட இடங்களை தொடாதீர்கள்.
  • கைகளை அடிக்கடி சேனிடைசர் கொண்டு கழுவுங்கள்.
  • நேரம் கிடைத்தால் சோப் போட்டு நன்றாக கை கழுவுங்கள்.
  • ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சோப் போட்டு கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • பவர் இல்லாத கண்ணாடியை வாங்கி அணியலாம்.
  • தேவையில்லாமல் கண்களுக்கு கைகள் செல்வது தடுக்கப்படும்.
  • அலுவல் நேரத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்.
  • வீட்டுக்கு திரும்பும் போது கைகளை சோப் போட்டு கழுவுங்கள்.
  • முடிந்தால் உடையை வெளியே களைந்து விட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.
  • முடிந்தால் குளித்து விடுங்கள்.
  • கால்கள்- கைகள்- முகம் என்ற வரிசையில் சோப் போட்டு கழுவுங்கள்

நிகழும் மரணங்களில் 84% ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற ஏதேனும் தொற்றா நோய் இருப்பவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மை தொற்றா நோய்கள் 41 வயது முதல் 60 வயதில் தான் கண்டறியப்படுகிறது.

எனவே கட்டாயம் உங்களது சுகர் / பிரசர் அளவுகள் நார்மலாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்றே ஏற்பட்டாலும் நமது சுகர் பிரசர் அளவுகள் சரியாக இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மீள முடியும். தொற்று நோயாக மாறாமல் தடுக்க முடியும்.

நீரிழிவு/ ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு எடுக்கும் மருந்துகளில் கவனம் தேவை. தேவையில்லாமல் மருத்துவமனைகளை விஜயம் செய்வதை தவிர்க்கவும். வைபவங்கள் / விருந்துகள் / கேளிக்கைகள் இந்த நேரத்தில் தேவையற்றது. ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

நிகழும் ஒவ்வொரு நூறு மரணங்களுக்கு 47 மரணங்கள் உங்கள் வயதுடையோருக்கு நிகழ்ந்துள்ளது என்பதை மறவாதீர்கள். அடுத்த வயதினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள். இவர்களை பாதுகாப்பது என்பது முன் சொன்ன வயதுடையோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

காரணம். அவர்கள் தான் வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கு நோயைக் கொண்டு சென்று பரிசளிக்கின்றனர். இருப்பினும் வீடுகளிலும் முதியோர்களிடம் இருந்து ஆறு அடி இடைவெளி விட்டு இருப்பது சிறந்தது.

முதியோர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களிடம் பேசும் போது
மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களை அருகில் சென்று கவனித்துக்கொள்ளும் மக்கள் மாஸ்க் அணிவது சிறந்தது.

அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தேவையான மருந்துகளை வாங்கித்தர வேண்டும்.

அவசர தேவையன்றி மருத்துவமனைகள்/கிளினிக்குகளுக்கு அவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

கட்டாயம் திருமணங்கள்/ கூட்டங்கள் / பயணங்களை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் தனியாக கழிப்பறையுடன் கூடிய அறை இருந்தால் அதை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

மேற்சொன்னவற்றை நாம் அடுத்த ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும்

எனது அனுமானம் சரியென்றால் கொரோனா வைரஸ் தொற்று அடுத்த ஓராண்டுக்கு வீரியத்தில் குறைவின்றி சமூகத்தில் உலவி வரும். அதற்காக ஒரு வருடம் ஊரடங்கு போட முடியாது.

அப்படி கண்டிப்பான ஊரடங்கு போட்டால் ஏற்படும் பொருளாதார சரிவில் இதுவரை மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். 0-20 வயது வரை உள்ளவர்களிடையே பசி மரணங்கள் ஏற்படக்கூடும்.

இருப்பினும் நோயின் பரவலை தடுக்க இதுபோன்ற தளர்வுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது சிறந்தது. அதற்கு காரணம் நம் நாட்டின்

✅மக்கள் தொகை
✅மக்கள் தொகை அடர்த்தி
✅புலம் பெயர்ந்த மக்கள் தொகை
✅மக்களிடையே நிலவும் அறியாமை
✅80% மக்கள் அன்றாட ஜீவனத்துக்கு கட்டாயம் வெளியே வரவேண்டிய கட்டாயம்.
✅கல்லாமை
✅ வறுமை
✅ பொருளாதாரம்

இன்னும் ஓராண்டுக்கு நம்மையும் நம்மை சார்ந்தோரையும் காக்க
நம்மிடையே கொரோனா குறித்த அறிவு, எச்சரிக்கை உணர்வு நிதம் வாங்கும் மூச்சுக்காற்று போல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இன்னும் தொடர்வோம்.

***

இந்திய அளவில் இதுவரை பெறப்பட்டுள்ள கோவிட் நோய் குறித்த தகவல்களும் அதில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் !

துவரை பாதிக்கப்பட்டோரில் 100-இல் 93.63 சதவிகிதம் பேருக்கு சாதாரண நோய் தொற்றாகவே கொரோனா வெளிப்பட்டிருக்கிறது.

✅இது ஆறுதலான செய்தி✅

இருப்பினும் மீதம் உள்ள 6.33% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்த 6.33% இல், 2.94% க்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2.94% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது. 0.45% பேருக்கு வெண்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாச இயந்திர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட 6.33% பேரில் 3.5% பேரை நாம் இழந்திருக்கிறோம்.

❌இது துற்செய்தி❌

அதாவது மருத்துவமனையில் ஆக்சிஜன்/ வெண்ட்டிலேட்டர்/ ஐசியூ இந்த மூன்றில் ஏதாவது சிகிச்சை எடுப்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் இறக்கிறார் என்று அர்த்தம்.

ஒரு கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை நாம் கண்டறிந்தால், அப்போது 45000 பேருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படும் சூழல் ஏற்படும்.

நம் நாட்டில் இருப்பது 40,000 வெண்ட்டிலேட்டர்கள்.இப்போது ஒரு பத்தாயிரம் கூடி இருக்கலாம். 3.5 லட்சம் பேர் மரணிக்கும் வாய்ப்பு இருக்கிறது . (CASE FATALITY RATE AT 3.5%) சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஐசியூ அட்மிஷன் தேவைப்படும். (அதிகபட்சம் நம்மிடம் ஒரு லட்சம் ஐசியூ பெட்களுக்கு மேல் இல்லை) மூன்று லட்சம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படும்.

நான் கூறுவது அனைத்தும், நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒரு கோடி மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் போது நிகழ்ந்திருக்கும். நான் கூறியது அனைத்தும் அனுமானங்கள் அல்ல.
அறிவியல். இதுவரை நிகழ்ந்ததை வைத்து எதிர்காலத்தை திறம்பட கணிக்கும் அறிவியல்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ளும் முறைகளில் தளர்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு, யாரேனும் கொரோனாவை எளிதாக எடுத்துக்கொண்டிருந்தால் இந்த பதிவை காட்டுங்கள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

0

வேறு வழியில்லாமல் பள்ளியிலிருந்து நின்ற அப்துல் கரீம், சைக்கிள் பழுதுபார்ப்பது போன்ற கிடைக்கிற வேலையை தன் குடும்பத்துக்காக செய்து வந்தார். இறுதியாக ஒரு சிறிய ட்ரக் மூலம் பொருட்களை இந்திய நகரங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், தன்னுடைய குடும்பத்தை வறுமையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்.

வேலை, மற்றும் அதனுடன் சிறிய அளவிலான நிதி பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைக்கான முதல் படியாக இருந்தது.

இவை அனைத்தும் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீடித்த கொரோனா வைரஸ் ஊரடங்கால் காணாமல் போயின. கரீம் தனது வேலையை விட்டு வெளியேறி, வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தவிக்கிறார். மாதம் ரூ. 9,000 ஆயிரம் வருமானத்திலிருந்து சேமிக்கப்பட்ட சொற்ப பணமும் தீர்ந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி செலவுக்காக வைத்திருந்த பணமும் செலவழிக்கப்பட்டு விட்டது.

“நாங்கள் மீண்டும் திரும்பிச் சென்றதும் டெல்லியில் வேலை நிலைமை என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது” என கரீம் கவலை கொள்கிறார். “நாங்கள் பசியுடன் இருக்க முடியாது, அதனால் நான் கிடைக்கிற வேலையைச் செய்வேன்” என்கிறார் அவர்.

தொற்று நோயின் பொருளாதார அழிவின் நேரடி விளைவாக, ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும் உலகெங்கிலும் வாழும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது. இதில் கணிசமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டுக்குள் சுமார் 12 மில்லியன் இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி கூறுகிறது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 122 மில்லியன் இந்தியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களில் பணியாற்றியவர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர விற்பனையாளர்கள், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் என பலர் அடங்குவர்.

இந்தியாவின் ஏழ்மையான குடிமக்களை வறுமையிலிருந்து உயர்த்துவதாக உறுதியளித்து 2014 ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஊரடங்கிலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பிடத்தக்க அரசியல் அபாயத்தைக் கொண்டுவரலாம். சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மின்சாரம் மற்றும் பொது வீட்டுவசதி போன்ற ஏழைகளை நேரடியாக குறிவைக்கும் தனது அரசாங்கத்தின் பிரபலமான சமூக திட்டங்களின் பலத்தின் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு, ஏக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட பொருளாதார வலியின் அகலமும் ஆழமும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழிக்குக் கொண்டு செல்ல அவரது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

படிக்க:
♦ ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் ! | தி. லஜபதி ராய்
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

“பல ஆண்டுகளாக வறுமையைத் தணிப்பதற்கான இந்திய அரசாங்கம் எடுத்த பெரும்பாலான முயற்சிகள் சில மாதங்களில் நிராகரிக்கப்படலாம்” என்று பல பன்னாட்டு உதவி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் மேம்பாட்டுத் துறை ஆலோசகரான அஸ்வாஜித் சிங் கூறுகிறார்.

இந்த ஆண்டு வேலையின்மை விகிதங்கள் மேம்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட சிங், “வைரஸை விட அதிகமான மக்கள் பசியால் இறக்கக்கூடும்” என எச்சரிக்கிறார்.

குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 104 மில்லியன் இந்தியர்கள் உலக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு 3.2 டாலருக்கு கீழே வரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழக ஆய்வை சிங் சுட்டிக்காட்டுகிறார். இது வறுமையில் வாடும் மக்களின் விகிதத்தை 60% அல்லது 812 மில்லியனிலிருந்து 68% அல்லது 920 மில்லியனாக எடுத்துக் கொள்ளும் – இது பத்தாண்டுகளுக்கு முன்னர் நாட்டில் கடைசியாக காணப்பட்ட ஒரு நிலைமை என சிங் கூறுகிறார்.

உலக வங்கி அறிக்கை ஒன்று, இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மிகவும் ஏழை குடிமக்களைக் கொண்ட நாடு என்ற நிலையை இழப்பதற்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறியது. மோடியின் ஊரடங்கு அபாயங்களின் தாக்கம் அந்த ஆதாயங்களை மாற்றியமைக்கக்கூடும்.

உலக வங்கி மற்றும் இந்திய பொருளாதார கண்காணிக்கப்பகத்தின் மதிப்பீடுகள் முறையே ஏப்ரல் பிற்பகுதியிலும் மே மாத தொடக்கத்திலும் வெளியிடப்பட்டன. அப்போதிருந்து, இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, மக்கள் தங்கள் கிராமங்களை அடைய, நெரிசலான பேருந்துகள், லாரிகளிலும், நடந்தும் மிதிவண்டிகளிலோ கூட அடைய முயற்சிப்பது ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் உள்ள சமூக துறை கண்டுபிடிப்புகளுக்கான ருஸ்டாண்டி மையம், ஏப்ரல் மாதத்தில் 27 இந்திய மாநிலங்களில் சுமார் 5,800 வீடுகளை உள்ளடக்கிய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட CMIE இன் வேலையின்மை தரவுகளை பகுப்பாய்வு செய்தது.

கிராமப்புறங்களில் மிகக் கடுமையான பாதிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த பொருளாதார துயரங்கள் தொற்று நோய் பரவலைக் காட்டிலும் ஊரடங்கின் விளைவால் ஏற்பட்டதாகும். 80% க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வருமான இழப்பை அனுபவித்திருக்கிறார்கள். மேலும் பலர் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு மலிவான கடன், ஏழைகளுக்கு நேரடியாக பணம் பரிமாற்றம் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை எளிதில் அணுகுவதை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால் இவை சில ஆவணங்களைக் கொண்ட மக்களுக்கு உதவுகின்றன, அவை பல ஏழைகளிடம் இல்லை. மில்லியன் கணக்கான வறிய இந்தியர்கள் இப்போது நாடு முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பதால், உணவுப் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. குவியல்களில் உள்ள அழுகும் பழங்கள் அல்லது இலைகளை மக்கள் உண்பதாக செய்திகள் கூறுகின்றன.

வைரஸ் தாக்கிய நேரத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்கனவே பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து கொண்டுவந்தது. மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு, அதை ஆணி அடித்து, வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, நுகர்வை மூடி வைத்து, பொருளாதாரத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னதான நிலைக்கு இழுத்துச் சென்றுவிட்டது.

மே 4 முதல் இந்தியாவின் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், ஊரடங்கிலிருந்து வெளியேற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தியா இப்போது ஆசியாவின் வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆகும்.

இந்தியாவின் ஏழைகளின் மீது சுமத்திய வலி என விமர்சனத்திற்கு உள்ளான மோடி, தொற்றுநோய்களின் பொருளாதாரா இழப்பை மீளமைக்க, தனது அரசாங்கம் 265 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% செலவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் வல்லுநர்கள் கூறுகையில், அதன் ஒரு பகுதி மட்டுமே நேரடி நிதி தூண்டுதல் தரக்கூடியது என்றும் ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மொத்த சேதத்தைவிட இது சிறிய தொகை என்றும் கூறினர்.

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ரீதிகா கெரா கூறுகையில், “குறிப்பாக கவலைக்குரியது என்னவெனில் அரசாங்கத்தின் எதிர்வினைதான்”. “இந்த தொற்றுநோய் இந்தியாவில் தற்போதுள்ள மற்றும் ஏற்கனவே உள்ள உயர்ந்த ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக்கும்” என்கிறார் அவர்.

இருப்பினும், பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க சில காலம் பிடிக்கும், இந்தியாவின் தொழில்துறை மையங்களிலிருந்து தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தால், தொழில் மீண்டும் தொடங்க போராட்டத்தை சந்திக்கும்.

கடுமையான இந்திய கோடை காலம் வேறு உள்ளதால், கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கூடுதல் வலியை கொடுக்கும்.

“இங்கு எந்த தொழிற்சாலையோ அல்லது தொழில்களோ இல்லை. இங்கிருப்பது வெறும் மலைதான்” என்கிறார் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் (62 மைல்) தூரம் நடந்து வந்த சுரேந்திர ஹதியா டாமர்.
“நாங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் உயிர்வாழ முடியும், பின்னர் முயற்சி செய்து அருகிலேயே ஒரு வேலையைத் தேட வேண்டும் . என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் அவர்.

20 லட்சம் கோடி ரூபாய் என வெற்று எண்ணிக்கைகளை வாரம் இருமுறை வெவ்வேறு அமைச்சர்கள் மூலம், ஊரடங்கு பொருளாதார இழப்பை ஈடுகட்ட செலவழிக்க உள்ளதாக மோடி அரசு சொல்கிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஒற்றை ரூபாய்கூட போய் சேரவில்லை என்பதை யதார்த்தம் காட்டுகிறது. மக்களின் மீது அவலங்களை கட்டவிழ்த்துவிட்டு, கண்மூடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை தட்டி எழுப்பப் போவது யார்?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ். 

ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் ! | தி. லஜபதி ராய்

ஊட்டுப்புரைகளும் ஓட்டுப்புரைகளும் !

லக வரைபடத்தில் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இடங்கள் மூன்று.

தென் அமெரிக்காவின் தென் கோடியிலுள்ள கேப் ஹார்ண் என்ற கொம்பு முனை, ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் என்ற நன்னம்பிக்கை முனை, இந்தியாவின் தென் முனையான கேப் காமரின் என்ற குமரிமுனை.

அங்கிருந்து மேற்காக ஒரு கிலோமீட்டர் மேற்கு கடற்கரை சாலையில் தென் மேற்கிலிருந்து வீசும் இதமான பருவக்காற்றின் ஊடே பயணித்து உண்மையான தென்முனையான கல்முனையைத் தாண்டி, கடல் மணல் சூழ்ந்த கோவளம் கிராமத்தில் மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தை கடந்து, நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் நடித்த வருடம் முழுக்க தளும்பிக் கிடக்கும் தலைக்குளத்திற்கு அருகே இலந்தையடிவிளை ஊருக்கு முன் சற்று விலகி வடக்கே ஒரு கிலோமீட்டர் பயணித்தால் மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியல் , ரெட் டீ அல்லது எரியும் பனிக்காடு நூலாசிரியர் பி.எச்.டேனியல், குமரி அனந்தன் ஆகியோரது ஊரான ஏறத்தாழ ஒன்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட அகஸ்தீஸ்வரம் கிராமத்தை அடைய முடியும்.

அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் ஊர் முழுக்க ஓலைப் புரைகள் என்ற தென்னை ஓலை கூரை வீடுகளே இருந்தன, திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் பிரதிநிதியாக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மாவின் ராம ராஜ்யத்தில் அவ்வூரில் வசித்தவர்கள் ஓட்டு வீடுகள் அமைக்க அனுமதியில்லை. அவ்வூரின் முதல் ஓட்டு வீடு 1935 ஆம் ஆண்டில் மன்னராட்சி புதைக்கப்பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் கீழச்சாலையில் கட்டப்பட்டது.

அவ்வூர் மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டது 12.11.1936 ஆம் நாளில்தான். 1933 ஆம் ஆண்டில் கோவில் நுழைவை அவ்வூர் மக்களுக்கு மறுத்த அதே சி.பி.ராமசாமி ஐயர் 1936 ஆம் ஆண்டு அனுமதித்த மனமாற்றத்திற்கு காரணம் முன்னதாக
ஈழவர், தீயர், பில்லவர்கள், நாடார்கள் ஆகியோர் மதம்மாற தீர்மானித்து கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ தழுவுவது குறித்து மாநாடு ஒன்று நடத்தியதால் என டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். (1)

படம் உதவி: திரு.அய்யாசாமி பாண்டியன், அகஸ்தீஸ்வரம். 1935 ஆம் ஆண்டின் அகஸ்தீஸ்வரம் ஊரின் முதல் ஓட்டுப்புரை.

1952 ஆம்ஆண்டு வரை அங்கு ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது. அது 24.05.1954 அன்று நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. 10.06.1959 ஆம் ஆண்டு கு. காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த போது உயர்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது.

11.08.1965 ஆம் ஆண்டு 165 பியூசி மாணவர்களோடு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி உள்ளூர் பெரியவர்களால் நிலமும் பணமும் வழங்கப்பட்டு அரசு மானியத்துடன் தொடங்கப்பட்டது. கல்கத்தா ராமகிருஷ்ணா மிஷனுக்கும் இக்கல்லூரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தி.மு.க ஆட்சியின் போது 1968 ஆம் ஆண்டில் அக்கல்லூரியில் பெண்களையும் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. பிஎஸ்சி வேதியியல் , உயிரியியல் ஆகிய பிரிவுகள் தொடங்கின. பணியாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட்டது.

அகஸ்தீஸ்வரத்தில் இன்று ஞான தீபம் என்ற ஆங்கிலப் பள்ளி ஒன்று இயங்குகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி விட்டது.

விவேகானந்தா கல்லூரி முதுகலை கல்லூரியாகவும், தொழில் நுட்பக் கல்லூரியாகவும், கல்வியியல் கல்லூரியாகவும் விரிவடைந்து விட்டது.

ஊரின் தெற்கே கல்லூரிச் சாலையில் அமைந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமும் சுதந்திரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டதுதான்.

படிக்க:
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
♦ இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

சுதந்திரத்திற்கு முன் மருந்துக்கு மூன்று அரசு ஊழியர்கள் என்ற எண்ணிக்கை இன்று முற்றிலுமாக மாறி இன்று அகஸ்தீஸ்வரத்தின் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், முதல்வர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் கல்வி அதிகாரிகள் என அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கை நூறுகளைத் தொடும்.

பாம்பே இயற்கை வரலாற்று சங்க இயக்குனர் பாலச்சந்திரன், வசந்த் அன்ட் கோ வசந்த குமார், எல்லோரும் பயின்றது அரசு பள்ளிகளில்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் சாதியினரும் மட்டுமே வாழும் மாடிவீடுகள் நிறைந்த இவ்வூரில் இன்று ஒரு ஓலைப்புரை வீட்டை பார்ப்பது அரிது.

ஏறத்தாழ அகஸ்தீஸ்வரத்தைப் போன்ற கிராமங்கள்தான் கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க. 2011 கணக்கெடுப்பின்படி 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 460.(2)

33 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பக்கத்து மாவட்டமான திருவனந்தபுரத்திலேயே அதே வருட கணக்கெடுப்பின்படி மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 181.

காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் 92% கல்வியைப்பெற்றது இம்மாவட்டம்.

தமிழ்நாட்டில் மிகக்குறைந்த கல்வியறிவான 74 விழுக்காட்டைப் பெற்ற தர்மபுரியை விடக் குறைவான உத்தர பிரதேசத்தின் அலஹபாத் மாவட்டமே அம்மாநிலத்திலேயே மிகையான கல்வியறிவான 72 விழுக்காட்டைப் பெற்ற மாவட்டம்.

உத்தரப்பிதேச ஷிராவதி மாவட்டத்தில் அதே கணக்கெடுப்பில் கல்வியறிவு 49 விழுக்காடு மட்டுமே. ஒரு வேளை மாடுகளுக்கு பள்ளிகள் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசம் கல்வியில் முதன்மை பெற்றிருக்கும் .

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் அகஸ்தீஸ்வரம் போன்றவையே, ஏன் தமிழகம் முழுவதுமே அது போலத்தான்!.

காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்ற மக்கள் தங்களை கோவில்களுக்கும், பள்ளிகளுக்கும் , அரசு வேலைகளுக்கும் வெளியே நிறுத்திய மன்னன் மார்த்தாண்ட வர்மாவின், பசுக்களுக்கும் பிராமணர்களுக்குமான ராமராஜ்யத்தை கனவு காண்பதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசப் பயிற்றுவிக்கப்படுவதும் மிகப்பெரிய வரலாற்று முரண்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய கூட்டத்தினர் இன்று 10 விழுக்காடு உயர்சாதி இட ஒதுக்கீட்டைப் பெற்றது அதைவிட வேடிக்கை.

இன்று குழந்தைகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவதைப் போல திருவிதாங்கூர் அரசரது ஆட்சியில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கோவில்கள் தோறும் ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு இருமுறை பிராமணர்களுக்கு மட்டும் சத்துணவு வழங்கப்பட்டது. கோவில் இருக்கும் தெருக்களில் கூட அம்மாவட்டத்தின் மனப்பிறழ்வு கொண்ட உயர்சாதியினரால் பெரும்பான்மையான தீண்டாமை முத்திரை குத்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதே காலகட்டத்தில் 02.03.1809 ஆம் நாள் பிறந்த அய்யா வைகுண்டர் அனைத்து மக்களையும் சாதி மத பேதமற்று வழிபடவும் உணவருந்தவும் உருவாக்கிய பதிகளில் ஒன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.

1869 ஆம் ஆண்டு சிறையில் இருந்த பிராமணக் கைதிகளுக்கு தீட்டு ஏற்படாமலிருக்க அவர்கள் தினமும் உணவு வேளைகளில் சிறைக்கு வெளியே சென்று சாப்பிடும் வசதி அரசால் செய்து தரப்பட்டிருந்தது.(3)

ஐ.ஏ.எஸ் என பொதுவாக அறியப்படும் குடிமை உரிமைப் பணிகளில் தேர்வானதும் டேராடூன் பயிற்சியின் ஒரு பகுதியாக பாரத் தர்ஷன் என்றவொரு சுற்றுலா அழைத்து செல்வார்கள். எந்த வட மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், எல்லாவற்றிலும் அவை தமிழகத்தையும் கேரளாவையும் விட பின் தங்கியிருப்பதைக் கண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பயிற்சிப் பணியாளர்கள் கர்வத்துடன் தலை நிமிர்ந்து கொள்வார்கள்.

‘தமிழக பேச்சாளருக்கும் மைக்குக்கும் இடையே பெரும் சண்டை ஒன்று நிகழும், தன் முன்னால் நிற்கும் ஒலிவாங்கியை ஒரு எதிரியாக நினைத்து உரக்க சத்தமிட்டு அதன் கழுத்தை உலுக்கி, திருகி, நெரித்து அதைக் கொன்று போட்டு விடப்போகிறார் என நினைக்கத் தோன்றும்’ என ‘ஊரும் சேரியும்’ என்ற அழகிய தன்வரலாற்று நூலை எழுதிய கவிஞர் சித்தலிங்கையா கூறியிருப்பார்.

இப்போது தமிழகத்தில் பொய் கதைகளை மூலதனமாக்கி, பெரியாரின் போராட்டங்களை, அதன் பயன்களை மறுக்கும், கவிஞர் சித்தலிங்கையா விவரித்ததைப் போன்ற உணர்ச்சிவச பேச்சாளர்கள் மற்றும் பொலிட்டிக்கல் மெர்சனரீஸ் அல்லது அரசியல் கூலிப்படையினர், பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா கிராமங்கள் முழுக்க பாரத் தர்ஷன் சுற்றுலா முடித்து அதன்பின் பச்சைமட்டை அரசியல் பாடம் எடுப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

நல்ல வேளை தமிழ்நாட்டில் திருவாளர்கள் யோகியோ மோடியோ முதல்வராக இருந்ததில்லை ஒருவேளை இருந்திருந்தால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படித்த புலம்பெயர் தொழிலாளர்களாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நடந்து இந்நேரம் ஹைதராபாத் அருகே வந்து கொண்டிருப்பார்கள் .

தி. லஜபதி ராய்
23.05.2020

அடிக்குறிப்புகள் :

1. பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு- தொகுதி 16 பக்கம் 515.
2. கன்னியாகுமரி மாவட்ட அறிக்கை 2016.
3. சாமுவேல் மட்டீர் – லாண்ட் ஆஃப் சாரிட்டி Land of charity 1871 பக்கம் 75 .

நன்றி : ஃபேஸ்புக்கில் Lajapathi Roy 

கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா? – டாக்டர் சக்திராஜன்

மிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், நோயாளிகளை நிர்வகிக்கும் விதமும் சோதனைகள், மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாகவே இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் நுழைந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சேவைதான் என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சக்திராஜன். தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் சக்திராஜன், ஒரு சிறுநீரக நிபுணர். அவர் எழுதிய இந்தக் கட்டுரை, தி வயர் இணைய இதழில் வந்திருக்கிறது.

அவர் சொல்வதில் சில விஷயங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை.

1. கொரோனா பாதிப்பு ஏற்படும்வரை அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாதவை, மருத்துவம் சரியாக இருக்காது. தனியார் மருத்துவமனைகளே சிறந்தவை என்ற எண்ணம் வலுவாக இருந்தது. கொரோனா பாதிப்பு, பொது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.

2. மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பும் தூங்காமல் பணியாற்றுகிறது. மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள்வரை, இரவு பகல் பாராமல், தங்கள் உடல்நலத்தைப் பாராமல் நோயாளிகளுக்காக பணியாற்றுகிறார்கள்.

3. ஆனால், தனியார் மருத்துவமனைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளைத் திறக்க வேண்டுமென்றே உத்தரவுபோட வேண்டிவந்தது. மகாராஷ்ட்ராவில் தனியார் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கா பணியாற்றாவிட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

4. இவையெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் சமூக பொறுப்பு இல்லாமையையே சுட்டிக்காட்டுகின்றன.

5. தமிழ்நாடு பொது சுகாதாரக் கட்டமைப்பில் 18,000 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 12,000 பேர் கிராமப்புறங்களில் வேலை பார்க்கிறார்கள். லட்சக்கணக்கான செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த காலகட்டத்தில் ஒருவர்கூட ராஜினாமா செய்வதாகச் சொல்லவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் யாரும் தங்கள் கடமையை உதறிவிட்டுச் செல்லவில்லை. சமூகப் பொறுப்பினாலேயே இத்தனையும் அவர்கள் செய்தார்கள்.

படிக்க:
♦ மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

6. இந்த சமூகப் பொறுப்பு எப்படி ஏற்படுகிறது? ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்க வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இதில் முக்கியமானவர்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும் 12,000 பேரில் பெரும்பாலானவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என உறுதியாகச் சொல்ல முடியும். உயர்ந்த ஜாதியாக கருதப்படும் ஜாதியினர் இங்கு மிகக் குறைவு.

7. மருத்துவ மேல் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீடு, அவர்களை ஓய்வுபெறும்வரை அரசுப் பணியில் பணியாற்ற வைக்கிறது. ஆனால், நீட் தேர்வின் அறிமுகம் முதல் தலைமுறை மருத்துவர்கள் உருவாவதைத் தடுக்கிறது. நகர்ப்புற மேட்டுக்குடியினர் வாங்கக்கூடிய ஒரு பொருளாக மருத்துவத்தை மாற்றியிருக்கிறது.

8. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் பார்த்தவர்களால்தான், தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க முடிந்திருக்கிறது. நீட் தேர்வு ஒருபோதும் திறமையை மதிப்பிட அளவுகோலாகாது என்பதை இந்த கொரோனா உணர்த்தியிருக்கிறது. மேலும் இந்தத் தேர்வுகளை நடத்துவது இந்தியாவின் பொது சுகாதாரத் துறையை நாசமாக்கிவிடும்.

9. அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதுகலை படிப்பில் வழங்கக்கூடாது; பட்டயப் படிப்பில்தான் வழங்க வேண்டுமென்கிறது மருத்துவக் கவுன்சில். இதைச் சொல்ல அதற்கு அதிகாரமே இல்லை.

10. கடந்த ஆண்டு பட்டயப் படிப்புகள் பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களால் இதில் நுழையவே முடியாது. மேலும் அகில இந்திய பிரிவுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதனால், 2500 மாணவர்கள் வருடம்தோறும் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

11. இம்மாதிரி இடஒதுக்கீட்டை நீக்குவது, தேசிய மருத்துவ ஆணையத்தை செயல்படுத்துவது மூலம் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில்கூட பொது சுகாதாரக் கட்டமைப்பு நாசமாகப் போகிறது. மற்றொரு பெருந்தொற்றை நம்மால் எதிர்கொள்ள முடியாது.

முழுக் கட்டுரைக்கான லிங்க் கீழே.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !

0

மிழக விவசாயிகள் சங்கம் ( கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் ஐயா ம.ப. சின்னத்துரை தலைமையில் பொதுநல அமைப்புகள் சார்பாக 01.06.2020 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஐய்யா.ம.ப.சின்னத்துரை தலைமையில் முழக்கமிட்டு தொடங்கியது.

மத்திய, மாநில அரசுகள், கொண்டுவரவுள்ள “மின்சார சட்டம் திருத்தம் 2003” விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. என்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்றும், மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் சதி! என்றும் கண்டித்து பேசினர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை கீழ் கொண்டு வருவதை கண்டித்தும், இதனால் 12 டெல்டா  மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்படுவதும் 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுவர், நாட்டின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாய பகுதி, பாலைவனமாக மாறும் என கண்டித்து பேசினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிய புதிய சட்டங்களை போட்டு மோடி அரசு பொதுத்துறையை தனியார் மயமாக்குவது விவசாயிகளுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரும் மாநில அரசின் உரிமைகளை பறித்து செயல்படுவதை கண்டித்து பேசினர்.

மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் அவர்கள் பேசுகையில் ”திருச்சி திருவரம்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பம் நேற்று தனது தனது மகன் 9 மாதத்திற்கு முன்பாக விபத்தில் அடிபட்டு வீட்டில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று இறந்து விட்டார். வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு இனியும் தனது இரண்டு மகள்களின் எதிர்காலத்தை எண்ணி மனம் நொந்து ஆசிரியை எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு நெருப்பு பற்ற வைத்து தனது வயதுவந்த இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நாட்டு குடிமக்களுக்கு பொறுப்பான தமிழக முதல்வர் எடப்பாடி அரசு மக்களை பாதுகாக்க மக்களை பாதுகாக்க தவறி, உணவு, உடை இருப்பிடம் வாழ வழியின்றி கொரோனா பாதிப்பில் தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல கொலை!” என்று உணர்ச்சிபொங்க பேசினார்.

படிக்க:
♦ இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்
♦ படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச் சலுகை அள்ளிக்கொடுத்தும், கடன்களை தள்ளுபடியும் செய்கிறது. சாதாரண ஏழை மக்க குடும்ப செலவுக்கு வாழ வழியின்றி தற்கொலை செய்துகொள்கின்றனர். எடப்பாடி அரசு மக்களை பாதுகாக்காமல், கொலை செய்திருக்கிறது என்றார்.

காவல்துறையின் தடையை மீறி சுமார் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் எழுட்சியுடன் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் திரு மகேஸ்வரனும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் திரு சம்சுதீன் அவர்களும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வின்சென்ட் அவர்களும் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் திரு பஷீர் அவர்களும் மக்கள் அதிகாரம் தோழர் ராஜா மற்றும் நிர்மலா தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு ராஜா சிதம்பரம் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனது கண்டனங்களை பதிவு செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்திற்கு பல ஊர்களிலிருந்தும் விவசாயிகள், பொது நல அமைப்பினரும் பெண்களும் என 180க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டு மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளை கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர் தோழர் ரவிக்குமார் அவர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இறுதியாக… ஐயா ம.ப. சின்னத்துரை தலைமையில் பொதுநல அமைப்புகள் சார்பாக அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தினர். அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் கடன்கட்ட நெருக்கடிதரும் நபர்கள் குறித்து புகார் தெரிவித்தபோது பாதிக்கப்பட்டவர்களுடன் புகார் அளித்தால் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

லாக்டவுன் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன் அவர்களிடம் நடத்திய நேர்காணல்.

தோழர் பா.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலர், சி.ஐ.டி.யு.

ஊரடங்கு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் வாயிலாக மாதமொன்றுக்கு ஆயிரம் வீதம், நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் சொல்லப்பட்டதே, அவை எந்தளவுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது?

தமிழகம் முழுவதும் 2,65,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 96,000 பேர். இதில் முறைசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோர்கள் வெறும் 2,400 பேர்தான். அதிலும் முறையாகப் புதுப்பித்திருப்பவர்கள் 929 பேர் மட்டுமே. அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெறும் தகுதியுடையோர் இவர்கள் மட்டும்தான். இந்த 929 பேருக்கும்கூட பல்வேறு நடைமுறை சிக்கல்களின் காரணமாக முழுமையாக போய்ச்சேரவில்லை என்பதுதான் உண்மை.

சென்னையில் 96,000 ஆட்டோ ஓட்டுநர்களில் 929 பேர்தான் முறையாகப் பதிவு செய்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறதே? ஏன் மற்றவர்கள் பதிவு செய்யதில்லை?

ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் தவிர, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை உள்ளிட்ட ஏழு வகையான ஆவணங்களைக் கொண்டுதான் நலவாரியத்தில் ஒருவர் தன்னை உறுப்பினராக பதிவு செய்துகொள்ள முடியும். இதில்தான் சிக்கலே இருக்கிறது. ஓட்டுநர் உரிமம் ஒரு முகவரியில் இருக்கும், ரேஷன் கார்டு வாங்கியபோது ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தபோது வேறு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்றும் ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வழக்கமான நாட்களிலேயே, இப்படி எல்லாத்தையும் மாத்தனும்னா தாலுகா ஆபிசுக்கு போயி எழுதி கொடுத்து மாத்தணும். பொழப்பை விட்டுட்டு இதுக்காக அலைஞ்சி வாங்க முடியாது. இதைவிட, இப்படி மெனக்கெட்டு பதிவு செய்தாலும் இதனால் தனக்கு பைசா காசு பிரயோசனமில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கருதுவதும் ஒரு முக்கிய காரணம்.

முன்பு ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்க வேண்டுமென்ற நிலையில், தற்போது அதனை ஐந்தாண்டுக்கு ஒருமுறை என மாற்றியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஓட்டுநர் உரிமம், பேட்ஜை மட்டும் வைத்து நலவாரியத்தில் பதிவு செய்வதையும் புதுப்பிக்கும் நடைமுறையையும் எளிமையாக்கப்பட வேண்டும். அரசிடம் இதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இக்கட்டான நேரத்திலும், நலவாரியத்தில் பதிவு செய்திருந்தால்தான் நிவாரணம் என்று நிபந்தனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?

உண்மைதான், அரசு அப்படித்தானே சொல்கிறது. நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தால்தான் நிவாரணம் கிடைக்கும் என்று நிபந்தனை விதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. முடிதிருத்தும் தொழிலாளிகள், நெசவாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை என்றாலும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அதுபோல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் என பொதுப்போக்குவரத்துக்கான வாகனத்தை இயக்குவதற்கான பேட்ஜ் பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 16 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழு விவரம் அந்தந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கிறது. ஆதார் கார்டு, தொலைபேசி எண், கை ரேகை என அனைத்தையும் பதிவு செய்துதான் இவற்றையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஆதாருடன் இணைக்கப்பட்டு கணிணி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், நாடு முழுவதுமே ஒரு நபர் ஒரு ஓட்டுநர் உரிமம்தான் வைத்திருக்க முடியும். அவரது கையெழுத்து முதற்கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலக ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்கிறது. இதை வைத்தே மிக எளிமையாக ஓட்டுநர்களுக்கான நிவாரணங்களை அரசு வழங்க முடியும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நலவாரியங்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன? உங்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள்தானே?

நலவாரியத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் போன்றோர் மட்டுமின்றி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது சரிதான். ஆனாலும், ஆலோசணைக் கூட்டங்களை அவர்கள்தானே கூட்ட வேண்டும். நாங்கள் எத்தனைமுறை வலியுறுத்தினாலும், போர்டு மீட்டிங்கை கூட்டுவதில்லை. இன்னொன்று, பெரும்பாலும் அந்தந்த நல வாரியங்களில் அந்தந்தத் துறை சார்ந்த நபர்கள் இடம்பெறுவதில்லை. அதனால் அந்த வலி அவர்களுக்கு புரிவதில்லை. நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள் – கடமைகள் அரசு தரப்பில் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தெல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், சிஸ்டம் சரியாக இருக்கிறது; ஆனால், அவை எல்லாம் பேப்பரில் மட்டும்தான் இருக்கிறது.

புதிய வாகனத்திற்கான பதிவு, எஃப்.சி. கட்டணம் உள்ளிட்டு வாகனம் தொடர்பாக அரசு தரப்பில் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்திலிருந்தும் 1 முதல் 3 சதவீதம் வரையில் வாரியத்திற்கு போகிறது. இந்தத் தொகையே பல நூறு கோடி ரூபாய் அதன் இருப்பாக இருக்கிறது. இதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை செய்ய முடியும். ஆனால், இப்படி ஒரு நலவாரியம் செயல்படுவதையே அரசு விரும்பவில்லை.

குறிப்பாக, நலவாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாகவே குளறுபடிகள் நடக்கிறது. வேலை நடப்பதில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலும் பள்ளி படிப்பை முடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அணுகும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

லாக்டவுனுக்குப் பிறகான காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

நிலைமை சீராக எப்படியும் ஒரு வருடம் ஆகும். அதுவரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல சிக்கல்களை சமாளித்தாக வேண்டும். லாக்டவுன் காலத்தில் எஃப்.சி. முடிந்த வண்டிகள் நிறைய இருக்கும். அந்த வண்டிக்கெல்லாம் எஃப்.சி. எடுத்தாக வேண்டும். எஃப்.சி. செய்யாமல் ஆட்டோவை இயக்க அனுமதி என்று நாங்கள் கோரிக்கை வைக்க முடியாது; பயணிகளின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தியாக வேண்டுமல்லவா?

ஆனால், எஃப்.சி.க்கான அனைத்துவித கட்டணத்தையும் அரசால் ரத்து செய்ய முடியும். வண்டியை பழுதுபார்த்து முழுத்தகுதியோடு கொண்டுவருவதை வேண்டுமானால் ஆட்டோ ஓட்டுநரின் கடமையாக்கலாம். அதற்கு ஆகும் செலவுக்குக்கூட அரசு குறைந்தபட்சம் 20,000 வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். ஆட்டோ டிரைவருக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. பெரும்பாலும் சேட்டுக்களிடம்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் இதில் நீடிக்க முடியாமல் வேறு தொழிலுக்கு போக நேரிடும் அவலம் இருக்கிறது. கடும் சிரமத்திற்கு அப்பால் ஆட்டோவோடு ரோட்டுக்கு வந்தாலும், இதுவரை ஆட்டோவை நம்பிவந்த வாடிக்கையாளர்கள் பழையபடி வருவார்களா என்பதற்கு உத்திரவாதமில்லை.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதானமான வாடிக்கையாளர்கள். பொதுவாக, பொருளாதார ரீதியில் நடுத்தர மக்களை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை வர்க்கம். இதில், மத்திய தர வர்க்கத்திலேயே மேல்நிலையில் இருப்பவர்கள் கால்டாக்ஸியின் வாடிக்கையாளர்கள்; இடைநிலை – நடுத்தர வர்க்கம்தான் ஆட்டோவில் செல்பவர்கள்; மத்திய தர வர்க்கத்திலேயே கீழ்நிலையில் இருப்போர் ஷேர் ஆட்டோவின் வாடிக்கையாளர்கள்.

இதுவரை பொதுப் போக்குவரத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்தி வந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த லாக்டவுனில் பாதிப்படைந்திருக்கிறார்கள். மனைவி வேலையை இழந்திருப்பார்; சம்பளக்குறைப்பு நடந்திருக்கும். இப்படி பலவகைகளில் இதுவரை கிடைத்து வந்த வருமானத்தில் துண்டு விழும்போது, வழக்கமான செலவுகளை குறைத்துத்தான் ஆகவேண்டும். அவ்வாறு அவர்கள் குறைக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஆட்டோவில் ஏன் போக வேண்டும், ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில் பயணிக்கலாம் என்றுதான் முடிவெடுப்பார்கள். இந்த நிலைமை, ஆட்டோ ஓட்டுநர்களை கண்டிப்பாக பாதிக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கோருகிறீர்கள்?

முதலில், ஆட்டோ ஒன்றுக்கு பயணிகள் இருவரை ஏற்ற அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்க முடியாது என்றால், லாக்டவுன் முடிவுக்கு வரும் வரையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500/- நிவாரணம் வழங்க வேண்டும். எஃப்.சி.யின் பொழுது வசூலிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். எஃப்.சி.க்கு வாகனத்தை சீர்படுத்த 20,000 ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். இவைதான் இப்போதைய உடனடி கோரிக்கைகள்.

மாதிரிப் படம்

அடுத்து, சென்னையில் மட்டும் 96,000 ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2 லிட்டர் பெட்ரோல் தினமும் போடுகிறார்கள் என்றால்கூட, பெட்ரோல் – டீசல் – காஸ் மூலமாக வரியாக மட்டுமே சரிபாதியை அரசுக்கு செலுத்திவருகிறார்கள். தனக்கு வரிவருவாய்க்கு ஆதாரமான ஆட்டோ ஓட்டுநர்களை குறைந்தபட்சம் ஒரு நுகர்வோன் என்ற அளவிலாவது அரசு பார்க்கிறதா?

அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கப்போனால், கூட வந்த சிறுவர்களுக்கு பொட்டுக்கடலையோ கற்கண்டையோ கொடுப்பார்கள். இத்தகைய ஒரு பண்பாட்டை ஒரு பேரிடர்க் காலத்தில்கூட முதலாளிகளிடம் பார்க்க முடிவதில்லை. சமூகப் பொறுப்பிலிருந்து, ஆட்டோ தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை விலக்கிக் கொள்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் அவன் உற்பத்தி செய்த ஆட்டோவை வாங்குவதால்தான் அவன் அந்த தொழிலில் இலாபத்தை ஈட்ட முடிகிறது. ஆகையால், கிடைக்கும் இலாபத்திலிருந்து குறைந்தபட்சம் 1% நலவாரியத்திற்கு வழங்க வேண்டும்; அரசு இதை சட்டமாக்க வேண்டும். அவன் முதலீட்டில் ஒன்றும் பங்கு கேட்கவில்லை. இலாபத்திலிருந்து மிகச் சொற்பமாக 1% ஒதுக்கினாலே, கோடிக்கணக்கான ரூபாய் நலவாரியத்திற்கு கிடைக்கும். அதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

ஆட்டோ ஓட்டுபவனை சொந்த தொழில் செய்பவனாகப் பார்ப்பதே தவறு. அவன் என்ன குடும்பத்துக்காகவா வண்டி ஓட்டுகிறான். பேருந்துகளைப் போல பொதுப்போக்குவரத்திற்கான வாகனத்தைத்தானே ஓட்டுகிறான். பேருந்து ஓட்டுநருக்கு இருப்பதைப்போல இவனுக்கு மட்டும் ஏன் இ.எஸ்.ஐ., பி.எஃப். உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்?

ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், டாடா மேஜிக் ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் என பலரின் நிலையும் பரிதாபகரமானதாகத்தான் இருக்கிறது. காலாண்டு வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். கட்டவில்லையென்றால் பர்மிட் ரெனிவல் ஆகாது. காலாண்டு வரியை தள்ளிவைப்பதல்ல, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அதன்மீதான வரியைக் கூட்டிவருகிறது அரசு. இதனைக் கைவிட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் அரசு செய்தால்தான் குறைந்தபட்சம் ஆட்டோ தொழிலாளி மீண்டு வருவான்.

படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

அமெரிக்கா கிட்டத்தட்ட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை ஒரு போலீஸ் காரணமே இல்லாமல் கழுத்தில் மிதித்தபடி எட்டு நிமிடம் அமுக்கி மூச்சுத் திணற வைத்து துள்ளத் துடிக்க கொலை செய்திருக்கிறது.

ஒட்டு மொத்த அமெரிக்க சமூகமும் கொதித்தெழுந்திருக்கிறது.

அமெரிக்க சமூகம் என்று பொதுவாக ஏன் சொல்கிறோம் என்றால் கொதித்தெழுந்திருப்பது வெறும் கறுப்பினத்தவர் மட்டுமல்ல.. வெள்ளை, பழுப்பு, மஞ்சள், கறுப்பு கலந்த ஒட்டுமொத்த அமெரிக்க சமூகமும்தான் கொதித்தெழுந்திருக்கிறது. நம் ஊரில் சிஏஏவுக்கு எதிராக மத வேறுபாடு இல்லாமல் முஸ்லிம்களோடு அனைவரும் கை கோர்த்தோமே.. அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விதவிதமான போராட்ட வடிவங்களை கையில் எடுத்திருக்கிறார்கள்.. அதில் முக்கியமான வடிவம் மண்டியிட்டு குரல் கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வது.. (Kneel down) ஆச்சரியகரமாக அதில் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல.. சில போலீசாரே பங்கெடுத்து அரசுக்கு எதிராக மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு கழுத்தின் மீது முழங்கால் அழுத்தப்பட்டு உயிர் போய்க் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில் ஃப்ளாய்டு மறுபடி மறுபடி சொன்னது ஒன்றே ஒன்றுதான்.. : I can’t breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை.. அல்லது மூச்சுத் திணறுகிறது.

இதுவே எதிர்ப்பாளர்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. அனைவரும் இந்த I can’t breath என்ற வாசகங்களை கையிலேந்தி போராடிக் கொண்டிருககிறார்கள்.

பல்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்புப் பேரணிகள் கலவரங்களாக மாறி பல கார்கள் எரிக்கப்படுகின்றன.. போலீஸ் நிலையங்கள் முற்று முழுக்க எரிக்கப்படுகின்றன.. கலவரக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகளால்தான் சுட்டோம் என்று போலீஸ் சொல்லுகிறது. ஆனாலும் துப்பாக்கிச் சூட்டில் ஓர் இளைஞர் பலியாகி இருக்கிறார்.

போலீஸ் தரப்பிலும் பலர் காயம்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்..

ட்ரம்ப்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டிடங்களின் முன்புதான் இந்த ஆவேசப் போராட்டங்கள் உச்சமாக நடந்து வருகின்றன.

உங்களது தகவலுக்காக சொல்கிறேன். இந்த ட்ரம்ப் டவர் வணிகக் கட்டிடங்கள் உலகெங்கும் உள்ளன.. இந்தியாவிலும் ட்ரம்ப் டவர்கள் உள்ளன.. சமீபத்திய ட்ரம்ப்பின் இந்திய விசிட்டின் முக்கிய காரணங்களில் ஒன்று இந்த ட்ரம்ப் டவர்கள் என்கிறார்கள். இந்தியாவில் கொரோனா பேரிடருக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறையின் பெரும் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அதன் காரணமாக இந்த ட்ரம்ப் டவர்களின் பெரும்பான்மை வணிக மையங்கள் விற்பனையாகாமல் இருந்தன.. அந்த நஷ்டங்களைத் தவிர்க்க தனக்கு பல சலுகைகள் வேண்டும் என்று நம்ம மோடியிடம் அதட்டிப் பெற்றிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.

இந்த எதிர்ப்புகள் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் துவங்கி இருக்கின்றன.. அனைத்து நாடுகளின் அமெரிக்கத் தூதரகங்கள் முன்பும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை காட்டத் துவங்கி இருக்கின்றனர்.

டிரம்ப் அரசுக்கு இது மாபெரும் தலைவலியாக மாறி வருகிறது. அடக்க அடக்க போராட்டங்கள் அமெரிக்கா முழுக்கப் பரவி வருகின்றன..

டிரம்ப் கோபமாக அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள் என்று ட்வீட் செய்திருந்தார்..

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

இந்த ட்வீட் சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று ட்விட்டர் நிர்வாகமே ட்வீட்டை ரிமூவ் செய்திருக்கிறது. ட்ரம்ப் கொதித்துப் போயிருக்கிறார்.

இந்தப் போராட்டங்களுக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை.. நம் நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் மாதிரி, தூத்துக்குடி போராட்டம் மாதிரி மக்கள் தன்னெழுச்சியாக புறப்பட்டு வீதிக்கு வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலை மீறி தெருவுக்கு வந்து ஆக்ரோஷமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ட்ரம்ப் அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப்பின் உளவுத்துறை ஒரு விஷயத்தை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு சமூகம் இருக்கிறது. அதை ஏன் சமூகம் என்று சொல்கிறோம் என்றால் அது ஓர் அரசியல் அமைப்பு அல்ல.. கட்சியும் அல்ல. ஏன் இயக்கம் கூட இல்லை.. அதற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை.. ஒருங்கிணைப்போர் என்றும் யாரும் இல்லை. பொதுவாக கார்ப்பரேட்டுகளிடமும் பெரும் செல்வந்தர்களிடமும் பணம் குவிவதையும் சாதாரண குடிமக்கள் வரி என்கிற பெயரில் வஞ்சிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இவர்கள்.. தங்களது நம்பிக்கைக்கு Antifa என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் விரிவாக்கம் Anti-fascist (பாசிச எதிர்ப்பு) என்பதாகும்.

இது ஒரு பொதுவான நம்பிக்கையாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொதுவாகவே கம்யூனிசம் என்றாலே முதலாளித்துவத்துக்கு பற்றிக் கொண்டு வரும்.. இவர்கள் பேசுவது கிட்டத்தட்ட கம்யூனிசம் மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.. இதை extreme and far left movements என்று brand செய்ய ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது.

இதை ஓர் இயக்கம் என்றும் இந்த இயக்கம்தான் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது என்றும் டிரம்ப் அரசு நினைக்கிறது.

இன்று டிரம்ப் கடும் கோபத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் : ஆன்ட்டிஃபா மாதிரியான இயக்கங்கள் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது அந்த வலதுசாரி அரசு.

இவர்கள் யாரை இதன் காரணம் என்று தடை செய்யப் போகிறார்கள்.. யாரை கைது செய்யப் போகிறார்கள் என்றுதெரியவில்லை.. சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரி செய்ய அமெரிக்க அரசியல் அமைப்பிலேயே வழியில்லை என்று கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் ட்ரம்ப்போ தனது அமைச்சரவை சகாக்கள், தீவிரவாதத் தடுப்புத் துறை என்று அனைவரோடும் ஆலோசனைகளைத் துவங்கிவிட்டார்.

டிரம்ப்பின் கையில் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற பெரும் கார்ப்பரேட் செய்தி சேனல்களும் உள்ளன.. அந்த சேனல்களைப் பயன்படுத்தி பொய் செய்திகளைப் பரப்பி எப்படியாவது இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவிட டிரம்ப் அரசு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இயக்கம் என்றால் அதன் தலைமைகளை கைது செய்து போராட்டங்களை அடக்கி விடலாம். ஆனால் இது போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை ஒடுக்க அரசுகள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் படுகொலைகள்தான்.

தூத்துக் குடியில் நடந்ததை நம்மால் மறக்க முடியுமா என்ன..?

ஆக பிணங்களின் மீது அரசியல் செய்யும் மோடி, எடப்பாடியின் அரசியலை டிரம்ப்பும் கையில் எடுக்கக் கூடும் என்று பரவலாக அரசியல் வல்லுனர்கள் கணித்தபடி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே போலதான் march towards wall street என்றொரு இயக்கம் 2010 வாக்கில் அமெரிக்காவில் பரவியது. அதே கார்ப்பரேட் எதிர்ப்பு மற்றும் செல்வந்தர்களிடமே செல்வக்குவிப்பு நடப்பதை எதிர்த்துதான் இது துவங்கியது.

இப்போது அந்த இயக்கம் இருந்த இடமே தெரியாமல் சுவடற்றுப் போய்விட்டது. இப்போது மறுபடி ஓர் இடதுசாரிப் பார்வையுடனான போராட்டம் புறப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கப் போகிறது என்பதில்தான் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாடுகளின் எதிர்காலமும் அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால் உலக அளவில் பெரும் அரசியல் மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கலாம்..

தோல்வியுற்றால்..?

சில பிணங்களை கையில் வத்துக் கொண்டு நாம் கொஞ்ச காலம் அழுதுகொண்டிருப்போம்.. அவ்வளவுதான்..

நன்றி : ஃபேஸ்புக்கில் நந்தன் ஸ்ரீதரன் 

தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

“ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலை அகற்றும் வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போர் ஓயாது” என்பதை நிரூபித்த தியாகிகளின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 22-05-2020 அன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்களிலும், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் படங்களை வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள், திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, அமமுக, விசிக, தமிழ் புலிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பலரும் நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு (2019) மே-22 முதலாமாண்டு நினைவு தினம் நெருங்குகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம பிரதிநிதிகள், மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு-107 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட சார்பு ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். மேலும் காவல்துறையால் இளைஞர்கள்-மாணவர்களின் முகநூல், வாட்ஸ்அப் கண்காணிக்கப்பட்டு அவர்கள் சட்டவிரோத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உளவுத்துறை மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டனர். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தை நாடியவர்கள் மீதும் குவி.மு.ச பிரிவு 107-ன் படி பெண்களென்றும் பாராமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும், அமைப்புக்களுக்கும், கட்சிகளுக்கும் ‘சட்டம் ஒழுங்கு கெடும், என்ற பொய்யான காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாண்டில் நினைவு தினம் வருவதை ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கவிடாமல் நெருக்கடிகள் முன்னணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியுடன் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் வெள்ளையம்மாள், பண்டாரம்பட்டியில் கிராம நாட்டாமைகள், சகாயம், சந்தோஷ், கன்னியம்மாள், சுதா, மாரியம்மாள் உள்ளிட்டோர் மீது பெண்களென்றும் பாராமல் ஸ்டெர்லைட் கைக்கூலிகளிடமிருந்து புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீளவிட்டானைச் சேர்ந்த A.S.முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.

ஆனாலும் இந்த பொய் வழக்குகளும் கைதுகளுகம் இவர்களின் உறுதியை அசைத்துக் கூட பார்க்கவில்லை. “துப்பாக்கி குண்டுகளை சந்தித்தவர்கள் இந்த பேப்பர் குண்டுகளுக்கு பயந்து விடுவோமா” என்கிறார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சட்டப்படியான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை கொரானோவை காரணம் காட்டி மறுத்தது. ஆனாலும் இந்தாண்டு இத்தனை ஒடுக்குமுறைகளையும் தாண்டி இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு பிரிவினரும் நினைவஞ்சலி செலுத்தியதோடு, நினைவு தினத்தை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் நினைவஞ்சலி செய்திகளை பதிவு செய்தனர். கடந்தாண்டை விடக்கூடுதலாக பல இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நினைவஞ்சலியை சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பகிர்ந்தனர்.

காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட அச்சத்தை தகர்த்து இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?

இன்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் விடாப்பிடியாக உள்ள கிராம – மாநகர பகுதி மக்களும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உறுதியாக களத்தில் நிற்கும் இளைஞர்களும் ஆவார்கள்.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

காவல்துறை மற்றும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறை, ஸ்டெர்லைட்டின் பணபட்டுவாடா, ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி உட்பட இவற்றையெல்லாம் இடைவிடாமல் எதிர்கொண்டு, புறமுதுகு காட்டாமல் இறந்த போராளிகளை நெஞ்சிலேந்தி வழக்கு-கைதுக்கு அஞ்சாமல் எதிர்வினையாற்றும் சாதாரண பாமர மக்கள்தான், அவர்களுடைய போராட்டம்தான், நிரந்தரமாக மூடாமல் ஓயமாட்டோம் என்று ஒலிக்கும் அவர்களுடைய குரல்கள் தான் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களின் அச்சத்தை தகர்த்துள்ளது.

தனி ஒரு கிராமமாக பகுதியாக போராடி சோர்வு கொள்ளாமல், தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு முறையில்தான், ஒரு கூட்டமைப்பு முறையில்தான் மத்திய-மாநில, சர்வதேச அரசுகளின் ஆசி பெற்ற பெரும் வேதாந்தாவை உறுதியோடு எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718,
7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0

ந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்புகளால் முடங்கிப் போயிருக்கிறது. மாநில அரசுகள் கடுமையான நிதிச் சுமையில் சிக்கியுள்ளன. மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறுவதற்கு நிபந்தனையாக 4 முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்துள்ளது மோடி அரசு.
பொதுவாக மாநில அரசுகள் தங்களது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.5% அளவிற்கான தொகையை மத்திய அரசிடமிருந்து கடனாகப் பெறலாம்.

கொரோனா பிரச்சினையால் அனைத்து மாநிலங்களும் நெருக்கடியில் உள்ளநிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் கடன் தொகையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5% என்ற அளவில் இருந்து 5% வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் கூடுதலாக கொடுக்க இருக்கும் 1.5% தொகைக்கு 4 முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது மத்திய அரசு.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம், தொழில் செய்வதற்கான நிலைமையை மேம்படுத்துதல், மாநில மின் விநியோக நிறுவனங்களை இலாபமாக இயக்கும் வகையில் சீர்திருத்தங்கள், நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரித்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனையிட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 1.5% கூடுதல் தொகையில் ஒவ்வொரு நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கும் 0.25% அதிகரிக்கும். ஆக நான்கு நிபந்தனைகளுக்கு மொத்தமாகச் சேர்த்து 1% வரை அதிகரிக்கப்படும். மீதமுள்ள 0.5% கூடுதல் தொகை, மூன்று நிபந்தனைகளோ அதற்கு மேலோ நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை இரண்டு நிபந்தனைகளை மட்டும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 0.5% மட்டுமே கூடுதல் கடன் வழங்கப்படும். மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 1.25%-மும், நான்கையும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே 1.5% மூம் கூடுதல் கடனாக வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த நிபந்தனைகளுடன் கூடிய கடனை, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதில் மற்ற மாநிலங்கள், தங்களுக்கு மத்திய அரசு வரி வருவாயில் தர வேண்டிய பணத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடி வருகின்றன. ஆனால் தமிழக அரசோ பாஜக அரசின் கொத்தடிமையாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடியில், கொரோனா கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார வீழ்ச்சியின் பழிபாவத்தைத் தன் மீது ஏற்றுக் கொண்டுள்ளது கொரோனா. “எரியும் வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்” என்ற வகையில்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பில் சிக்கிக் கிடக்கும் மக்களை இன்னும் வக்கிரமாகச் சுரண்டும் வகையிலேயே மாநில அரசுகளுக்கான இந்த நிபந்தனைகளை விதித்துள்ளது. முதல் நிபந்தனையான, ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு போன்ற திட்டங்கள் அனைத்தும், மாநில சுயாட்சியை ஏட்டுச் சுரைக்காயாக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவின் ஒரு பகுதியாகவும், கார்ப்பரேட்டுகளின் திறந்தவெளிக் கொள்ளைக்கு ஏற்றவகையிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் மலிவான மனித உழைப்புச் சக்தி தட்டுப்பாடில்ல்லாமல் கிடைக்கவும் ஏற்றவகையில்தான் “ஒரே நாடு ஒரே ரேசன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிறது மோடி அரசு.

இரண்டாவது நிபந்தனை, தொழில் தொடங்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல். இந்தியா முழுவதும் தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு விதிமுறைகளை சட்டத்துக்குப் புறம்பாக மீறி சுற்றுச் சூழல் சீர்கேடுகள், தொழிலாளர்களை சுரண்டுதல், வரி ஏய்ப்பு, மின்சாரத் திருட்டு ஆகியவற்றை செய்து வருகின்றன. அதனை சட்டப்படி அவர்களுக்கு செய்து கொடுப்பதற்கான உபாயத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறது மத்திய அரசு. யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு முடக்கி வைத்திருப்பது ஒரு உதாரணம்.

அடுத்ததாக மின் விநியோகம் தனியார்மயமாக்கும் மசோதாவை இரண்டு மாதங்களுக்கு முன்பே கருத்துக் கேட்புக்கு விட்டிருந்தது மத்திய அரசு. அதன் சாராம்சமே மின் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியார்மயப்படுத்துவதும், மின் தட பராமரிப்பை மட்டும் அரசின் தலையில் கட்டுவதும் தான். அதன் ஒரு அம்சமாக மாநில மின்சார வாரியங்கள் மானியங்களைக் குறைத்து இலாபமீட்டலில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது மோடி அரசு.

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

மாநில அரசுகளுக்கு விவசாயிகள் நலனில் அக்கறையில்லை என்றாலும்கூட தங்களது ஓட்டு வங்கியில் அக்கறையுண்டு. அதற்காகவாவது, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தின் மீது கைவைக்கத் தயங்குவார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியாத ரகசியமல்ல. இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கப்படும் மானியத் தொகையை ரத்து செய்வது, அதன் மூலம் மின்சார விநியோகத்தை முழுக்க தனியார் கையில் எவ்விதப் பிரச்சினையுமின்றி தாரைவார்க்கவே இந்த நிபந்தனையையும் மோடி அரசு வைத்திருக்கிறது.

நான்காவதாக, நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க வேண்டுமென்கிறது. சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர்வரி உள்ளிட்டவற்றை அதிகரிப்பதுதான் அத பொருள். மக்களிடமிருந்து வரி மூலம் கூடுதல் பணத்தைக் கறக்க மாநில அரசுகளை நெட்டித் தள்ளவே இந்த நயவஞ்சக கடனளிப்பு ‘சலுகையை’ வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்ட ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய சேவை நிறுவனங்கள் கையாளும் மிகக் கீழ்த் தரமான நடைமுறைதான் கடன் கொடுத்து அடிமைத் தனமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்வது. இதனையே தனது சொந்த மாநிலங்களுக்கு நடைமுறைப்படுத்துகிறது மத்திய அரசு
மாநிலங்களின் வரி உரிமையை ஜி.எஸ்.டி மூலம் பறித்ததோடு, மாநிலங்களுக்கான பங்கையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. ஏழைகளின் இக்கட்டான தருணங்களில், “பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டி அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சொத்தையும் கொள்ளையடிக்கும் கந்துவட்டிக் கும்பல் போல, கொரோனா நெருக்கடியும், தொழில் முடக்கமும் மக்களை முடக்கியிருக்கும் சூழலில், மாநில அரசுகளுக்கு பணத்தைக் கடனாகக் கொடுக்கக் கூட அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டு வாங்குகிறது மோடி அரசு.


நந்தன்
நன்றி : த பிரிண்ட். 

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி !

வேல் பிஸ்கட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதுச்சேரி திருபுவனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஐ.டி.சி பன்னாட்டு நிறுவனத்தின், சன் பீஸ்ட், மேரி கோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுகளைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனம் தான் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமும், சிறுபான்மைச் சங்கமாக INTUC சங்கமும் செயல்படுகின்றன. அதில், பு.ஜ.தொ.மு சங்கத் தொழிலாளர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவி வந்தது நிர்வாகம்.

ஒவ்வொரு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போதும் சங்க முன்னணியாளர்கள் மீது பொய்யான குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் ஊதிய உயர்வை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சங்க முன்னணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து, சங்கத்தையும் கலைத்து விட வேண்டும்! என்பதை நிர்வாகம் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது. இருந்த போதிலும், ஒவ்வொரு முறையும் எமது சங்கம் சட்டரீதியாகவும், பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களாலும், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தாலும் நிர்வாகத்தின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்ற முறை கிட்டத்தட்ட 52 நாட்கள் உள்ளிருப்புப்_போராட்டம் நடந்த போது, உற்பத்தியை நடத்த வேண்டும் என்பதற்காக, போட்டி சங்கத்தையும், ஒப்பந்த தொழிலாளர்களையும், சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டது. தொழிலாளர் என்ற பெயரில் உள்ளூர் ரவுடிகளை இறக்கி விட்டு மோதலை உருவாக்க முயற்சித்தது. ஆனால், நிர்வாகத்தின் அத்தனை தகிடுதத்தங்களையும் முறியடித்து போராட்டம் வெற்றிகரமாக முன்னேறியது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் ஒன்றும் செய்ய முடியவில்லை! முக்கிய சங்க நிர்வாகிகளை மாதக்கணக்கில் வெளியே தூக்கிப் போட்டாலும், அந்த இழப்புக்களை எல்லாம் தாங்கிக் கொண்டு வெட்ட வெட்ட முளைக்கும் மரம் போல, மீண்டும் – மீண்டும் எழுந்து நிற்பதைப் பார்க்க நிர்வாகத்தால் பொறுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரம் தலைக்கேறி, இந்த முறை, “நம்மை எதிர்ப்பவர்கள் யாரும் இந்த ஏரியாவிலேயே இருக்கக் கூடாது!” என்று முடிவு செய்தது. தான் செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்தும், சங்க முன்னணி தோழர்கள் வேலை செய்யும் லைன் III-யில் உற்பத்தி ஆர்டர் இல்லை என அந்த லைனை பிரித்து கம்பெனியிலேயே வைத்துக் கொண்டது. இயந்திரத்தில் வேலை செய்த தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்கு மாற்றுவதாகச் சொல்லி கம்பெனியே இல்லாத ஊர்களிலும், கடைகளுக்கும் என 09 பெண் தொழிலாளர் உள்ளிட்டு 25 பேரை கண்மூடித்தனமாக பந்தாடியது. ஏற்கனவே எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த ஒரு தொழிலாளியை கும்பகோணத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்றிய ‘இழி பெருமை’ இந்நிறுவனத்திற்கு உண்டு என்பது தனிக்கதை.

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் பணியிட மாற்றத்தை தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிக்க வேண்டும் என்று இப்பிரச்சினையின் ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பணியிட மாற்ற நடவடிக்கைகள் சட்டவிரோதம் என தொழிலாளர் துறையில் முறையீடு செய்த போது, பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. நீதிமன்றத்தில் பெற்ற தடை உத்தரவையும் மதிக்கவில்லை. பணியிட மாற்றத்தை எப்படியாவது நிறைவேற்றி, சங்கத்தையே இல்லாமல் ஒழித்து விடுவது என்பதில் தான் நிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது. மேலும், பணியிட மாற்றத்தில் செல்லாததைக் காரணம் காட்டி தற்காலிக பணிநீக்கம் செய்வதை அடுத்தகட்ட மிரட்டலாகக் கையில் எடுத்தது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி, தொழிலாளர்களை இன்னும் கூடுதலாக பழிவாங்கத் துடித்தது நிர்வாகம். அதன்படி நிறுவனம் செயல்படும் பகுதி கொரோனா தொற்று சிவப்பு மண்டலமாக புதுச்சேரி சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்டு பகுதி சீல் வைக்கப்பட்ட போதும், “தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால் தான் ஊதியம் தர முடியும்” என அச்சுறுத்தியது.

படிக்க:
செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

மேலும், ஊரடங்கு காலத்திற்கு எந்த சம்பளமும் தரமுடியாது என அடாவடியாக மறுத்ததுடன், பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டியது. குடும்ப நெருக்கடி, வறுமையின் காரணமாக வேறு வழியின்றி கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த சூழலிலும், அந்தப் பகுதியில் வசித்த சில தொழிலாளர்கள் மறைந்து மறைந்து பணிக்கு செல்லும் அவலத்திற்கு தள்ளியது. இந்த நிலைமையை அந்தப் பகுதி போலிசு நிலையத்தில் முறையிட்ட அடிப்படையில், நிறுவன அதிகாரிகளை அழைத்து போலிசு இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு அனுப்பிய பிறகு தான், தொழிலாளர்களை பணிக்கு வரக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தியது. இருப்பினும், இன்று வரை ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் தராமல் மறுத்து வருகிறது.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில், வெளியூருக்கு பணியிட மாற்றம் செல்வது சாத்தியமில்லை என்றும், கொரோனா முடிந்து போக்குவரத்து உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, அரசின் அறிவுறுத்தலின் படி உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்கக் கோரியும், பணியிட மாற்றம் குறித்து பேசி முடிவெடுக்கலாம் எனக் கேட்டும், பணியிட மாற்றம் சென்று தான் ஆக வேண்டும் என்று கூறி வம்படியாக மறுத்து விட்டது.

பணியிட மாற்றம் என்ற பெயரில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வறுமை, பசி, பட்டினி என கடும் நெருக்கடியுடன், கொரோனா தொற்று சூழலும் சேர்ந்து, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடங்கி விட்ட சூழலில், நிர்வாகத்தின் ஈவு இரக்கமற்ற செயல்களும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகமாக்கியது.

அதனால் வேறு வழியின்றி, கடந்த மே-27 அன்று காலை 06.00 மணிக்கு உள்ளிருப்புப் போராட்டம் துவங்கப்பட்டது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியிலும் ஆண், பெண் தொழிலாளர்கள் என அனைவரும் இரவு, பகல் என்றும் பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தை அறிவித்தவுடனேயே, உள்ளூர் போலீசைக் குவித்து மிரட்ட ஆரம்பித்தது. மற்றொரு சங்கமான ஐஎன்டியூசி சங்கத் தொழிலாளர்களை வைத்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களை இறக்கியும் உற்பத்தியைத் துவங்க முயற்சித்தது.

ஆனால், நமது தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தையும் தாண்டி, தொழிலாளர் துறை, போலீசு துறை அதிகாரிகளை உடனுக்குடன் அணுகி, பிரச்சினைப் பற்றிய சரியான பார்வையை உருவாக்கியதாலும், நமது பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களை சங்க நிர்வாகிகள் கடைபிடித்து, தொழிலாளர்களை உணர்வூட்டி நடத்திய ஒற்றுமையான, விடாப்பிடியான போராட்டத்தாலும், உற்பத்தியை துவக்கும் நிர்வாகத்தின் முயற்சி பலனளிக்காமல் போனது. நமது சங்கத்தின் நோக்கம், உற்பத்தியை நிறுத்துவதோ, முடக்குவதோ அல்ல என்பதையும் தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உள்ளூர் போலீசு முதல் தொழிலாளர் துறை வரை ஏற்கனவே தொடர்ச்சியாக பேசி வந்தோம்.

மறுபுறம், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நமது முயற்சிகள் பற்றியும், நிர்வாகத்தின் அடாவடிகளைப் பற்றியும் போலீசும் அறிந்திருந்தது. மேலும், தொழிலாளர்களின் விடாப்பிடியான போர்குணமிக்க தொடர் போராட்டத்தினால் வேறு வழியின்றி காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினால் தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வரவைத்தது. அது காவல்துறையை தொழிலாளர்கள் எதிர்கொண்ட விதம்தான் காரணமாக அமைந்தது. எனவே வேறு வழியே இல்லை என போலீசு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த ஆரம்பித்தது.

இதனால், வேறு வழியின்றி, நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்ததுடன், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக 25 தொழிலாளர் குடும்பங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பணியின்றி இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதை பிரதானமான கோரிக்கையாகவும், மற்ற கோரிக்கைகளை அடுத்தடுத்து பேசுவது எனவும் முன் வைக்கப்படது. அதன் அடிப்படையில் பெண்கள் பணியிட மாற்றத்தில் செல்வதை தடுப்பது, வெளி மாநில பணியிட மாற்றத்தை நிறுத்துவது, காலவரையற்ற பணியிட மாற்றத்தை ஆறு மாத காலமாக வரையறுப்பது என்ற நிபந்தனைகளுடன், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் யார் மீதும் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது,
தற்போதைய உடனடி நிலைமைகள் தமக்கு சாதகமில்லை என்பதை உணர்ந்த நிர்வாகம், நமது நிபந்தனைகளை ஏற்றதுடன், இந்தப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி இழப்பை மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் உற்பத்திச் செய்து ஈடுகட்ட வேண்டும் என்ற நிர்வாகத்தின் வேண்டுகோளுடன் போராட்டத்தை நான்கு நாட்களுக்குப் பிறகு மே-30 அன்று இரவு 07.00 மணிக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இப்போராட்டம் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ள முழு வெற்றியாகக் கொள்ள முடியாது. எனினும், முதலாளித்துவத்தை நிலைகுலையச் செய்துள்ள பொருளாதார நெருக்கடியை, கொரோனா வைரஸ் தொற்றின் பெயரால், ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் வர்க்கத்தின் மீது ஏவி வருகிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மோடியின் சட்டத் திருத்த நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகள் என நம்முன் கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் சூழ்ந்துள்ள இந்த சூழ்நிலையில் வரம்புக்குட்பட்ட வகையில் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சிறு, சிறு போராட்டங்களையும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான நம்பிக்கையாக கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில் இப்போராட்ட வெற்றியை தொழிலாளி வர்க்கம் இனிப்போடு கொண்டாடுவதை விட, தொழிலாளர்களை வர்க்க உணர்வோடு வளர்த்தெடுப்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 8980

செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !

றுபது நாட்களைக் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? லாக்டவுனுக்குப்பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

”இந்த மூனு மாசமும் ஹிந்திக்காரன்தான் சார் எனக்கு சோறுபோட்டான். பத்து அடிக்கு பத்து அடி போலீசா நின்னுச்சு அதையும் மீறி வண்டி ஓட்டுனேன். கிண்டி ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரலுக்கு போக வழக்கமா 300 – 350 வாங்குவோம். அஞ்சு அஞ்சு பேரா ஏத்திகிட்டு சவாரி போனேன். ஆளுக்கு அம்பதோ நூறோ அவன்கிட்ட இருந்தத வாங்கிட்டு ஓட்டுனேன். வயசான ஒருத்தரு 100 ரூபாய்தான் இருக்கு, என்ன அங்க விட்டுருன்னாரு. வழக்கமா அவர் சொன்ன இடத்துக்கு போக 300 வாங்குவோம். என்ன பன்றது, கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஏதோ நம்மால ஒரு உதவி. ஒன்னும் இல்லாம இருக்கிற நமக்கு அவரு கொடுக்குற நூறு ரூபா உதவினு நினைச்சுதான் ஓட்டுனேன். ஏதோ போயிருச்சி, இனிதான் என்ன ஆகுமுன்னு தெரில.

வீட்லே இரு வீட்லே இருன்னு சொன்னா எப்படி சார் இருக்க முடியும்? குடும்பத்த யாரு பாக்கிறது? தில் இருந்தாதான் பிழைக்க முடியும். அதான் கொரோனாவது எதாவதுனு வண்டி ஓட்டிட்டுருக்கேன். இதுவரைக்கும் ரெண்டு வாட்டி போலீசு மறிச்சிச்சு. பத்திரிகைக்காரர் ஒருத்தர விட்டுட்டு திரும்புறப்ப ஐஸ்ஹவுஸ் பக்கம் போலீசு மறிச்சி, லத்தி உடையற அளவுக்கு அடிச்சது. அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்து ஊசி போடவச்சி அனுப்பிவச்சாரு. இந்தா இன்னும் கைய வழக்கம் போல மடக்க முடியல. அப்புறம் கோயம்பேடு பக்கம் போனப்ப மதியம் 2 மணிக்கு புடிச்சி ராத்திரி 11 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சி திட்டி அனுப்பினாங்க.

இந்த மூனு மாதமா இந்திகாரன்தான் எனக்கு சோறு போட்டான். கிண்டியிலிருந்து சென்ட்ரலுக்கு அஞ்சு அஞ்சு பேரா ஏத்திட்டுப் போவேன்; ஆளுக்கு அம்பதோ நூறோ கொடுப்பாங்க என்கிறார் மோகன்ராஜ்.

”அதான் கவருமெண்ட் வண்டி ஓட்டக்கூடாதுனு சொல்லிருக்குல்ல… அப்புறம் ஏன் ஓட்டுறனு” கேட்டாரு ஒரு போலீசுகாரர். ”நான் திருடன் ஆயிட்டா சந்தோஷமா? வழிப்பறிக் கொள்ளை செஞ்சா ஒன்னும் பண்ண மாட்டீங்களா?”னு கேட்டேன். வண்டிய ஓட்ட விட்டா, ஏதோ கிடைக்கிறத வச்சி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு பொழப்ப ஓட்டிட்டு போயிடுவோம்” என்கிறார், மோகன்ராஜ்.

”மனைவியின் சேமிப்பிலிருந்து மார்ச் மாசம் சமாளிச்சிட்டோம். தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி ஏப்ரல் மாசத்தை ஓட்டிட்டோம். அடுத்து என்னதான் பன்றதுனு குழப்பத்துல இருக்கிறப்பவே, வாட்சப் குரூப் வழியா தொடர்புகொண்ட பள்ளி நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து கொடுத்த உதவியிலிருந்து மே மாசத்தையும் கடந்தாச்சி. அடுத்து என்ன என்பது கேள்விக்குறிதான்.

நானே ராஜா, நானே மந்திரி எவன்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் ஒரு சுயதொழிலாக நினைத்து ஆட்டோ ஓட்ட வந்தேன். 23 வருசத்தையும் அப்படித்தான் கடந்திருக்கிறேன். தற்போது, பள்ளி நண்பர் ஒருவர் எனது நிலைமையைப் பார்த்து உதவி செய்திருக்கிறார். இருந்தாலும், சுயமாக சம்பாத்தியம் இல்லை என்பது மனசுக்கு பாரமாகத்தான் இருக்கிறது. வாங்கிய பணத்தை சூழ்நிலை பொறுத்து திரும்பக்கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனாலும் மனதை அறுக்கிறது” என்கிறார், ஜெயராமன்.

மூனுமாசம் வாடகை குடுக்கல; கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்; இனி என்ன செய்யப்போறோமுன்னு தெரியல… என்கிறார் ராஜேஷ்.

”22 வயசுல ஆட்டோ ஓட்ட வந்தேன். பத்து வருசமா ஓட்டிட்டிருக்கேன். பேங்க் பேலன்ஸ் பத்து பைசா இல்லை. அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். அதவச்சி குடும்பம் ஓட்றதே பெரும்பாடு. மூனுமாசம் வாடகை குடுக்கல. கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்.” என்கிறார் ராஜேஷ்.

”யார் கையையாவது எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்பக்கூட பக்கத்து தெருவில் நாலுமணிநேரம் காத்திருந்து நிவாரண உதவி வாங்கியாந்தேன். ஹவுஸ் ஓனருக்கு முழுசா வாடகை கொடுக்கலை. கிடைச்ச காசுல கொஞ்சம் கொடுத்திருக்கேன். முந்தி மாதிரி அவரும் நம்மகிட்ட சரிவர பேசுறதில்லை; ஒருமாதிரி நடத்துறாரு. அதுவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.

ஆட்டோ தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி, குடிசைத்தொழில் மாதிரி, அஞ்சு ரூபா பாக்கெட்ல மசாலா பொருள் போட்டு மளிகைக்கடைக்கு சப்ளை பண்ணிகிட்டு இருந்தேன். முத மாசம் அந்த தொழில செய்வோம்னு ஆரம்பிச்சேன். அடுத்த மாசம் அதக்கூட தொடர முடியல. 400 ரூபாய்க்கு வித்த பொருள் 600 ரூபாய்க்கு வித்தா அஞ்சு ரூபாய்க்கு நான் எப்படி பாக்கெட் போட முடியும்? வேற வழி என்னன்னு வீடுங்களுக்குத் தண்ணீர் கேன் போட்டுகிட்டு இருக்கேன். இப்படித்தான் போகுது” என்கிறார், முத்து.

பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா என மவுண்ட் ரோட்டின் ஒரு ஓரத்தில் காத்திருந்தார் மணி. சென்னையில் ஆட்டோக்கள் ஓடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களே, நீங்கள் எப்படி வேலைக்கு வந்திருக்கிறீர்கள்? என்று பேச்சு கொடுத்தோம்.

ஒருபக்கம் போலீசு, மறுபுறம் வயிற்றுப்பசி. நிற்காதே, ஓடு என இரண்டுமே துரத்துகிறது. மவுண்ட் ரோட்டில் பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்திருக்கும் மணி.

”வீட்டில இருந்தா யாரு சாப்பாடு போடுறது? முப்பது வருசமா ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அரசாங்கம் என்ன உதவி செஞ்சிருச்சி? ஆயிரம் ரூபாய வச்சிகிட்டு எத்தன மாசத்தை ஓட்டுவீங்க? ரேஷன்ல அரிசி போட்டோம்னு சொல்றாங்களே, சட்டதிட்டம் போடுறவன் தின்பானா சார் அந்த அரிசியை? ஆட்டோ தொழில விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது. அம்பது வயசாவுது இனிமே நான் எந்த வேலைக்கு போறது. நல்லதோ கெட்டதோ, ஆண்டவன் விட்ட வழி அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்கிறார், மணி.

சொந்தமாக தொழில் செய்த நாங்கள், அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்து.

”ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், கிண்டி ரயில்வே கிளையின் தலைவராக இருக்கிறேன். நான் ஆட்டோ ஓட்ட வந்தப்ப இதே கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல 32 பேர் இருந்தோம். இப்ப பழைய ஆளுங்க 4 பேருதான் இருக்கோம். வருமானம் இல்லைன்னு, எல்லாம் வேற வேற தொழிலுக்கு மாறி போயிட்டாங்க. ஸ்டேண்ட்ல இப்போ 16 ஆட்டோதான் ஓடுது. ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு 30 – 40 ஆட்டோ நிற்கும். ஓலா உபேர் வந்து எங்க பொழப்ப கெடுத்தது இல்லாம, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைப்பு வாகனம்னு விட்டதுல எங்களுக்கு பெரிய அடி. கிண்டி ஸ்டேஷன்லருந்து டி.எல்.எஃப்.க்கு ரெகுலர் சவாரி கிடைக்கும். வேற வழியில்லாம, நாங்களும் மூனுபேரு நாலு பேர சேர்த்துக்கிட்டு ஷேர் ஆட்டோ மாதிரிதான் ஓட்டிகிட்டு இருந்தோம். இப்போ அதுவும் இல்லாமப் போச்சு. இந்த நிலைமையில ஆட்டோவுக்கு ஒருத்தரத்தான் ஏத்தனும்னா வண்டி ஓட்ட முடியுமா?” என்கிறார், முத்து.

ஈகிள் ஃபிளாஸ்க் கம்பெனி மூடினதால ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப ஆட்டோ ஓட்டவும் வழியில்ல, 50 வயசுக்கும் மேலே இனி, எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், முகம்மது ரபி.

”வண்டி புதிதாக போட்டு 4 மாசம்தான் ஆகுது. மாசம் 7600 டியூ கட்டனும். இன்னும் 3 வருசம் கட்டியாகணும். டியூ கட்ட டெய்லி 250 ரூபா தனியா எடுத்து வச்சிருவேன். உடம்புக்கு சுகமில்லைன்னாலும் அந்த காசுல கை வைக்க மாட்டோம். சோத்துக்கே வழியில்லை, இப்போ டியூ எங்க கட்றது? டியூ கட்டலைன்னு வண்டிய எடுக்க வந்தான்னா, உன் பொருள் எடுத்துட்டுபோனு விட்றுவேன். வேறு என்ன பன்ன சொல்றீங்க” என்கிறார், முகம்மது ரபி. கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவந்த ஈகிள் பிளாஸ்க் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்த முகம்மது ரபி, கம்பெனி மூடிய பிறகு, ஆட்டோ தொழிலுக்கு மாறியவர். மீண்டும் நான் எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், அவர்.

”பத்துவருசம் ஓடுன வண்டிக்கு எல்லாம் பெர்மிட் புதுப்பிக்கப் போறதில்லைனு பேசிக்கிறாங்க. அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா என்னால இப்போ இருக்குற நிலைமைக்கு புது வண்டி போட முடியாது. வருசம் 3000 இருந்த இன்சூரன்ஸ் பத்தாயிரமாச்சு. எப்.சிக்கு 25,000 ரூபாய் எடுத்து வைக்கணும். எல்லாமே கடன்தான் வாங்கியாகணும். எங்களுக்கு பேங்க்ல கடனும் கொடுக்க மாட்டான்; சேட்டுக்கிட்டதான் வண்டிய ரீ பைனான்ஸ் போட்டு காசு வாங்கியாகணும்.

டீ பத்து ரூபாய் ஆனபோதே கடையில் டீ-சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். யாரா இருந்தாலும் சென்னையில் மிக சாதாரணமா பத்தாயிரம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது. பத்தாயிரத்துக்கு என்ன வழி? தொழிலை தொடரமுடியாது. இதுவரை ஆட்டோவை நம்பி, வாங்கிய கடனை கட்டிவந்தோம். இனி அந்த நேர்மையை காப்பாற்ற முடியாது என்ற அச்சம் வாட்டுகிறது.”

வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன் என்கிறார் ஜெயராமன்.

”இனிமே குனிஞ்சு நிமிந்து வேற வேல செய்ய முடியுமா? உக்காந்தே வேலை செஞ்சு உடம்பு பழக்கமாயிடுச்சு. கூரியர் கம்பெனிக்கு போலாமா? செக்யூரிட்டி வேலைக்குப் போலாமான்னு யோசனையில் இருக்கேன். வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன். பொண்ணுக்கு ஆண்டுக்கு 25,000 ரூபாய் கல்விச்செலவு ஆகும். இறுதியாண்டு முடிக்க வேண்டும். பையன் பி.எச்.டி. படிக்க ஆசைப்படுகிறான். மகனை வேலைக்குப் போ என தொரத்துகிறார் மனைவி. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்பது குடைச்சலாக இருக்கிறது.” என்கிறார் ஜெயராமன்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்”, கிண்டி ரயில் நிலையம் (மேற்கு) பகுதியின் பொருளாளராக இருப்பவர் ஜெயராமன் கூறும்போது. ”முன்னெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்தா எப்படியும் 600 ரூபாய்க்கு வண்டி ஓட்டிரலாம்னு நம்பிக்கை இருந்துச்சி. டெய்லி வீட்டுக்கு 300 ரூபாய கொடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, கைச்செலவுக்கு 100 ரூபாய எடுத்துட்டு, சங்க வேலை பார்க்க கிளம்பிவிடுவேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், தொழிலாளர்களை சந்திக்கிறதுனு அரசியல் வேலை செய்வேன். இருக்கிற நிலைமையில அதையெல்லாம் தொடர முடியுமானு அச்சமா இருக்கு” என்கிறார்.

”வண்டி ஓடலை, வருமானம் இல்லைனு இப்போ அமைதியா இருக்காங்க; இதே நிலை தொடர்ந்துச்சின்னா, சும்மா இருப்பாங்களா?. இப்பவே, குடும்பத் தேவைன்னா உன்கிட்டதானே கேட்கமுடியும்னு சொல்லி சண்டை போடுறாங்க; இது மேலும் அதிகமாகி, அவங்க ஒன்னு பேச நா ஒன்னு பேச குடும்பத்துல பிரச்சினைதான் வரும். வீட்டில் அவமானத்தை சந்திக்க நேரிடும்” என்கிறார் முத்து.

சுனாமி வந்தப்போ மீன் வெட்டுறத விட்டுட்டு, ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப கொரோனா வந்ததால திரும்பவும் மீன் வெட்ட போகவேண்டியதுதான் என்கிறார், தனசேகர்.

”இதுக்கு முன்ன, கிழக்கு கடற்கரையில மீன் வெட்டிகிட்டு இருந்தேன். சுனாமி வந்திச்சி, பொழப்பும் போயிருச்சு, ஆட்டோ ஓட்ட வந்துட்டேன். பதினஞ்சி வருசம் ஓடிருச்சி. இந்தா இப்ப கொரோனானு இன்னொரு சுனாமி வந்துருக்கு; திரும்பவும் கிழக்கு கடற்கரைக்கு ஓட வேண்டிதான்” என்கிறார், தனசேகர்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

“1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.

“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. ”

“தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.”

சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது

பகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

“இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது” என்கிறார் சாவர்கர்.

“அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை”.

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

படிக்க:
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

“ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிரஞ்சன்.

அவருக்கு சாக்லேட்டுகளும் ‘ஜிண்டான்’ பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

“சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார். அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. ”

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை. சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.”

“நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்”.

கீழே உள்ள புகைப்படத்தில்: நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)