Thursday, June 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

-

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
பாபா ராம்தேவ்

“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…

“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடைநடுங்கிகள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம்பட்டுக் கொண்டதையே மாபெரும் படுகொலைச் சம்பவமான ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிடுகிறார்கள். மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்தி ‘போராடி’ வந்த வீரர்கள், போலீசு காட்டிய சின்ன கவனிப்புக்கே அலறித் துடிக்கிறார்கள். ‘ஐயோ.. இரண்டாம் எமர்ஜென்சி’ என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இரண்டாம் ‘எமர்ஜென்சியை’ எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அவர்கள் முதலாம் எமெர்ஜென்சியை எதிர்த்த லட்சணம் என்னவென்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறோம்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாய் சொல்லிக் கொண்டு இந்த கள்ளப்பண சாமியார் தில்லியில் வந்திறங்கிய போது காங்கிரசின் நான்கு காபினெட் மந்திரிகளே நேரில் போய் வரவேற்றனர். உண்மையில் ராம்தேவை அரசு ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரது ஆசிரமத்தில் ஒரு சி.பி.ஐ ரெய்டு விட்டிருந்தாலே போதும். அது அவர்கள் நோக்கமல்ல.

இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். கோவிந்தாச்சார்யா, சாத்வி ரிதம்பர போன்ற மார்கெட்டில் விலைபோகாத ஆர்.எஸ்.எஸின் அழுகிய கத்திரிக்காய்கள் சகிதம் மேடையில் அமர்ந்து கொண்டு கருப்புப் பண ஒழிப்பையும் ஊழல் ஒழிப்பையும் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் நாட்டு மக்கள் அத்தனை பேரையும் மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது. பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது. அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை  ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

காங்கிரசோ இது போன்ற ஆபத்தில்லாத போராட்டங்களை தடவிக் கொடுப்பதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களின் அபிலாஷைகளை ஓரளவுக்கு ஆற்றுப்படுத்த முடியுமா என்று பார்க்கிறது. அதுவும் கூட தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அளவில் இருக்கும் வரையில் தான் அதனால் சகித்துக் கொள்ள முடிகிறது. இப்படி இவர்கள் இருவருமே மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமான திசைவழியில் மடைமாற்றிக் கொள்ள முயல்வதன் ஊடாக எழுந்த சிறிய முரண்பாடு தான் சனி இரவு தில்லி ராம்லீலா மைதானத்தில் வெளிப்பட்டது.

ஆனால், இவர்கள் மட்டுமின்றி பிற ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஊடகங்களும் ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் ஊற்று மூலமாய் இருக்கும் தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். அதன் எதிர்மறை விளைவுகள் யாருக்கு சாதகமான திசைவழியில் செல்ல வேண்டும் என்பதில் தான் இவர்களுக்குள் முரண்பாடு.

இதில் சிவில் சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே கும்பலோ ராம்தேவின் சாமியார் கும்பலோ மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். அதனாலேயே மக்களுக்கு எந்த வகையிலும் பதிலளிக்கக் கடமைப்படாதவர்கள். மிக அடிப்படையான ஜனநாயகப் பண்பே இல்லாத இவர்கள் முன்வைக்கும் யோசனைகளோ எந்தவகையிலும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதோடு கோமாளித்தனமானமாகவும் இருக்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க ராம் தேவ் முன்வைக்கும் யோசனைகளெல்லாம் ஏதோ ஷங்கரின் பாடாவதிப் படத்தின் திரைக்கதை போலவே இருக்கிறது. முதலில் உண்ணாவிரதம் இருந்து அயல்நாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவார்களாம், அடுத்து அதை அதிகாரிகள் மூலம் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அறுபதாயிரம் கோடிகள் மேனிக்கு பிரித்துக் கொடுப்பார்களாம். இதில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்ய அவர்களுக்கு ராம்தேவ் யோகாசனப் பயிற்சிகள் அளிப்பாராம். உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்க ஐம்பது ரூபாய்களுக்கு மேல் இருக்கும் ரூபாய்த் தாள்களை ஒழித்து விடுவார்களாம்.  பிறகு எதிர்காலத்தில் கருப்புப் பணமே தோன்றாமல் இருக்க புதிய நாணயத்தை அறிமுகம் செய்வார்களாம்.

இந்த பித்துக்குளித்தனமான யோசனைகளெல்லாம் நடக்கவே நடக்காது என்பது வேறு யாரைக்காட்டிலும் ராம்தேவுக்குத் தெரியும். ஏனென்றால், அவரிடமுள்ள எல்லா பணத்தையும் ஐம்பது ரூபாய்களாக மாற்றி பதுக்க வேண்டுமென்றால் ஸ்காட்லாண்டில் இருக்கும் அவரது தீவே காணாது.

ஆக, அண்ணா ஹசாரேவும் ராம்தேவும் மக்களை அரசியலற்ற மொக்கைகளாக்கும் ஆளும் வர்க்க நலனையே பிரதிபலிக்கிறார்கள். ஜனநாயகமற்ற இந்த கும்பலின் அரசியல் மோசடிகளை மக்கள் அறிந்து கொள்வதோடு, கருப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் அடிப்படையாக இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வீழ்த்த முன்வரும் போது தான் உண்மையாகவே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும்.

_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அதானே.. போராட்டம் புரட்சிக்கெல்லாம் நாம பேடண்டும் காப்புரிமயையும் வச்சிருக்கும்போது இவன் யாருநடுவுல… வந்துட்டாங்க ஆட்டிகிட்டு….அவன் யாதவ் ஆக இருந்தாலும் யார் அவனுக்கு போராடும் உரிமையை கொடுத்தது……

  • புரட்சிக்கு காப்புரிமை எல்லாம் கிடயாது. அனால் தகுதி இருக்கிறது. அந்த தகுதி அண்ணா ஹசாரே, ராம்தேவ் என இரண்டு பேரிடமும் இல்லை. யழினி

   • அண்ணா ஹசாரே பற்றி புகார் வாசிக்க என்ன தகுதி உனக்கு உள்ளது? first pay your tax..

    • புரியுதுங்கண்ணே நல்ல புரியுது டாக்ஸ் கட்டனவன் தான் வஇமர்சிக்கனும், நாட்ல 50% மக்கள் ஏழைங்க, ஒரு வேளை சோத்துக்கே சிங்கி தான், இவயிங்க டாக்ஸ கட்டமா யாரையும் விமர்சனம் பண்ணகூடாது..வாழ்க ஜனநாயகம்(டாக்ஸ் கட்டுபவர்களுக்கு மட்டும்)..

 2. எல்லா அஸ்திரங்களும் முட்டி மோதி மொக்கையாகிப் போனதால் இறுதியாக அண்ணா ஹசாரே, ராம்தேவ் என இரண்டு காமெடி பீஸ்களை எடுத்து தொடுத்தது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காவிப்படை. அதுவும் ராமனைப் போலவே ஒளிந்து கொண்டே தொடுத்தது. கடைசியில் காமெடி பீஸ்களும் நமுத்துப் போனதால் இனி புது அஸ்திரத்தைத் தேடவேண்டும். பாரத யுத்தம் படு தமாஷாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அண்ணா ஹசாரேயும், ராம்தேவும் இருக்க வடிவேலுவுக்கு இனி வேலை இல்லை?

  “பாரத யுத்தம்” நகைச்சுவை பட விமர்சனம் நல்லாத்தான் இருக்கு வினவு.

 3. அண்ணா ஹசாரே.ஓரு காந்தியவாதி.எனவே சட்டப்படி ஊழலை ஓழிக்க விரும்புகிறார்.வேண்டுமானால் அண்ணா ஹசாரேயின் செத்துகள்..,சாமியார்கள்,மே.வங்,கேரள,ஏன் தமிழ்நாடு கம்யுனிசவாதிகளின் சொத்துக்களை விட மிக மிகக் குறைவானதே..

  ஊளையிட்டால் மட்டும் போதாது..வினவு..அதற்கு தக்க தீர்வையும் அளித்து.அதனை செயல்படுத்த தெரியவேண்டும்.அண்ணா ஹசாரே அதனை செவ்வையாக செயல்படுத்திவருகிறார்..சில சாமியாடிகள் பெயர் சம்பாத்திக்க விரும்புகின்றனர்.

  கம்யுனிச சீனா,கெரியா,கீயுபாவில் அண்ணா ஹசாரே இருந்துதிருந்தால் உயிரோடு இருப்பது கடினமே…..
  (இதற்கு பதில் அளிக்க எந்தவொரு கம்யுனிசவாதியால் பதில் அளிக்க முடியுமா? தயவுசெய்து சீனா,கெரியா,கீயுபாவில் இருந்து உதரணங்களைத் தரவும்…ரஸ்ய பால்காரி போன்ற பழைய புராணங்களைப் பாட வேண்டாம்)

  First they laugh at you,then ignore you,then fight you and you win
  -Gandhi
  அண்ணா ஹசாரே இப்போது மூன்றாம் stageல் உள்ளார்.விரைவில் வெற்றி பெறுவார்.

  • விட்டா அண்ணா ஹசாரே ஒரு பரம ஏழைன்னு சொல்லுவீங்க போல. அண்ணா ஹசாறேவால் ராம்தேவால் ஒன்றும் செய்ய முடியாது. பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார்கள் அவ்வளவே. இதற்கு பெயர் போராட்டமே அல்ல. நான் அவருக்கு ஆதரவு கொடுக்குரம்பான்னு சொல்லி பீச்-ல ஒரு மெழுகுவத்தி ஏத்திட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போயிருவீங்க. நானும் ரவுடிதான்னு வடிவேல் சோற மாதிரி இருக்கு. மக்கள் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் போராடாமல் எந்த தீர்வும் கிடைக்காது.

   • நைனா..யார் சொன்னா இந்தியா ஏழை நாடு…எல்லாம் நாம பாக்கிற பார்வையில்தான்..

    முதல்ல…
    traffic policeட மாட்டுனா..கோட்டில் fine கட்டுறனு செல்லுங்க..
    நிலப் பத்திரம் பதிய போனா உண்மையான விலையை செல்லி கிரயம் பண்ணுங்க..
    உங்கப் புள்ள குட்டிகளை அரசு பள்ளிகளில் சேருங்க..
    கடை வெச்சு இருந்தா முறையான கணக்கு காட்டுங்க.
    (இதையெல்லாம் செய்தால் அவன் பெயர் வாழத்தெரியாதவன்…இதான் உலகம்)

    இப்படி தப்ப எல்லாம் நம்ம மேல வச்சுட்டு…நாட்டு மேல எங்க பழிபோடுறிங்க

 4. // ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்//நீங்கள் செய்வது தனிநபர் தாக்குதல் இல்லையா?

 5. தேவை ஒரு மகாத்மா; தீர்வல்ல…

  இண்டியா கேட் திறப்பினில்
  ஏகாந்தம்;
  புல்வெளிப் பறப்பின்
  வசந்தம்;
  மெழுகின்
  மெல்லிய வெளிச்சம்;
  குளிர்ந்த கோக் அல்லது
  பீரின் போதை;
  பிறந்தது காதல்.
  ஜன நாயகக் காதல்!

  சீறிக்கொண்டு வரும்
  எங்கள் போதி மரத்து
  சிந்தனையில் கல்லெறியாதே!

  குளிர்ந்த கோக்கின்
  குப்பியைத் திறந்து
  குடிக்கவிடு.
  ஏனெனில் நாங்கள்
  தாகத்திலிருக்கிறோம்.
  ஜன நாயகத் தாகம்.
  கோக்கைக் குடித்தவாறே
  காந்தியம் கதைப்போம்!

  போதை மட்டென்றாலும்
  பீரைப் பீறிட வை.
  ஏனெனில் நாங்கள்
  உற்சாகங்கொண்டு
  ஊழலின் பீறிடும்
  ஊற்றுக் கண்ணை
  உறைய வைப்போம்.

  ***

  ராம்லீலா மைதானத்தில்
  தேசப்பற்றின் மோன நிலை.
  கருப்புப் பணத்தைத்
  திருப்பித் தரக்கோரி,
  ராமனை வேண்டி,
  பஜனை கோஷ்டிகளின்
  கண்ணீரில் நனைந்த
  கோரஸ் குரல்.
  யோகா மூலம்
  ஒரு யுகப் புரட்சி.
  ஜாலியன்வாலபாக்கில்
  உயிர்ப்பலியால் ஊற்றெடுத்தது
  ஓரு பாழுங்கிணறு.
  ராம்லீலா மைதானத்தில்
  லத்தியடிக்காக
  மோன நிலை கலைந்து
  விட்டு ஓடிய
  ரப்பர் செருப்புக்கள்;
  காவிக் கோவணங்கள்.
  உயிரற்றவைதானென்றாலும்
  ஊழலெதிர்புக் கொள்கையின்
  அச்சாரமாக
  விட்டுவரப்பட்டவை.
  நாளையொரு நாள்
  நாங்கள் உயிரை விடவும்
  தயங்க மாட்டோம்.
  ஆதலாம் இந்த
  ராம்லீலா மைதானம்
  ஒரு வருங்காலத்து
  ஜாலியன் வாலாபாக் என்றே
  தாங்கள் தயைசெய்து
  குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

  சீறிக்கொண்டு வரும்
  எங்கள் யோக நிலை,
  மோன நிலை,
  பஜனைப் போராட்ட
  சிந்தனையில் கல்லெறியாதே!

  ***

  மாண்டுபோன மெழுகுவர்த்தியை
  மிளிரவிடு.
  ஏனெனில் நாங்கள்
  இருளிலிருக்கிறோம்.
  ஏமாற்றத்தின் இருளில்.
  மெழுகின் மெல்லிய ஒளியில்
  மொக்கையாகிப்போன
  ஜன நாயக இந்தியாவை
  ஜொலிக்க வைக்க
  தேடிக்கொண்டேயிருக்கிறோம்.
  மெழுகின் உருகலால்
  மெல்ல மெல்ல
  மாண்டுபோனதை
  மீட்டெடுக்க உறுதிகொண்டோம்.

  ஒபாமாவின் தேர்வில்
  ஒழிக்கப்பட்ட
  வெள்ளைப் பேதம்;
  மண்டேலாவின் மௌனப்புரட்சியில்
  மீட்டெடுத்த விடுதலை;
  கலாமின் பதவியேற்பால்
  கைகோர்த்த நல்லிணக்கம்;
  மன்மோகன் மௌனத்தில்
  கற்பிதம் செய்துகொண்ட
  அற்புதமான
  அரசியல் சாணக்கியம்;
  கருணா நிதியின் கண்ணீரில்
  கற்றுக்கொண்ட மனிதம்;
  அம்மாவின் கவுரவத்தில்
  ஆர்ப்பரித்த பெண்ணியம்;
  ரஜினியின் மூப்பில் பயின்ற
  ரவுத்திரம்;
  விஜயகாந்தின் வீர வசனத்தில்
  விதைந்த நாட்டுப் பற்று;

  இவர்களால் கற்றவை
  ஏராளம் என்றாலும்,
  ஏனோ களவு.
  இத்தனை வெளிச்சமிருந்தும்
  ஏனோ இருட்டு.
  இத்தனை கண்ணிருந்தும்
  ஏனோ திருட்டு.
  ஏதோ ஒரு குறை.
  எங்கோ இடிக்கிறது.
  அதைத்தான் தேடி
  அலைந்து கொண்டிருக்கிறோம் –
  அதி தீவிரமாய்;
  மெழுகின் வெளிச்சத்தில்;
  அஹிம்சாவழியில்.
  அன்னா அசாரேவின்
  பிரார்த்தனைகளில்,
  அல்லது
  பாபா ராம்தேவின்
  பஜனைப் பாட்டொலியில்,
  அற்புதங்கள் நிகழுமென
  அன்றாடம் காத்திருக்கிறோம்.

  இந்த
  எங்கள் எதிர்பார்ப்புகள்
  எது ஒன்றும்
  நடந்தேறவில்லையென்றால்
  எதிர்பார்த்துக் காத்திருப்போம் –
  மீண்டுமொரு மகானுக்காக;
  அல்லது
  மகாத்மாவுக்காக;
  இன்னொரு அசாரேவுக்காக
  அல்லது
  இன்னொரு பாபாவுக்காக.
  ஏனென்றால்
  எங்களின் தேவைஎன்பது
  தீர்வல்ல…
  மகான்கள்
  அல்லது
  மகாத்மாக்கள்…!

 6. யாரிவன் இத்தனை நாள் இவனுக்கு இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்ததது.அன்னா ஹாசாரே தான் இதன் காரணம். நீங்கள் ஒரு விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும். இந்தியாவில் பல பேர் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நமக்கு தெரியா விட்டாலும் உண்மை அது தான். இவ்வளவு பேர் இருக்கு, அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவு குவிய என்ன காரணம்?

  விடை மிக எளிது.மற்ற எல்லோருடைய போராட்டங்களிலும் சிறிதாவது சுய நலம் வெளிப்படையாகவே இருக்கும். உதாரணத்திற்கு நம் குழாயடில் தண்ணீர் வரவில்லை என்றோ, நம் உற்வினரை லாக்கப்-டெத் என்றோ தான் போராடிக் கொண்டு இருப்போம்.இந்த போராட்டங்கள் தற்போதைய கார்ப்பரேட் செய்தி சேனல்கள் அல்லது பத்திரிக்கைகளில் வர இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று நாம் ஃபேமஸ் ஆக இருக்க வேண்டும் அல்லது நாம் யாரை எதிர்க்கிறோமோ அவராவது அப்படி இருக்க வேண்டும்.(உதாரணம் : நம்ம வனிதா)

  அன்னா ஹசாரேவுக்கு லோக்பால் மூலம் கிடைக்க போவது ஒன்றும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை,தன் கிராமத்தை சமூக சேவை மூலம் மாதிரி கிராமமாக மாற்றியவர் , ராணுவத்தில் வேலை பார்த்தவர் போன்றவை தான் அவரை கார்ப்பரேட் செய்தி நிறுவனகங்கள் தேர்ந்தேடுக்க காரணம்! இவரை பற்றி கருத்து வேறுபாடுகள் அதிகமாய் எழ வாய்ப்பு இல்லை. இந்த தாடி வெச்ச பெருச்சாளி இந்த நேரத்துல தான் உள்ள நுழஞ்சான். நல்ல வாயன் சம்பாதிச்சு நாற வாயன் தின்ன கதையா, அன்னா பண்ண உண்ணாவிரத்தத்த சார் பலன அனுபவிச்சாரு. இங்கே நம்ம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சாமியாருங்களோட ப்ளஸ்ஸே பேரு தான். பேரு கெட்டு போச்சுன்னா எல்லாம் போச்சு! இவனுங்க சாய்பாபா முதல் இந்த பனங்கொட்ட தலையன் ராம்தேவ் வரை எல்லோரும் சமூக சேவை முகமூடிய போட்டுக்கறது அதுக்குத்தான். பல சாமியாருங்க பெருகிக்கிட்ட போட்டி கார்ப்பரேட் யுகத்துக்ல இவனுங்க பப்பு வேகனும்ன்னா நான் இந்த சமூகத்தை தாங்குறேன்ன்னு ஒரு இமேஜ் உருவாக்கனும் ( நான் ஈஷாவை இந்த பட்டியலில் சேர்க்க மாட்டேன், அதன் மேல் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் புகழுக்காக சேவை செய்வது இல்லை).

  சாய்பாபா குடி நீர் திட்டத்துக்கு கொடுத்த காசும் இதே ரகம் தான். சரி அதை விடுங்கள். இந்த டாக் என்ன பண்ணுச்சுன்னா, யோகா பண்ணப்போறேன்ன்னு சொல்லி இடம் வாங்குச்சு.அப்பறம் இந்த சீசன்ல யோக பண்ண கூட்டம் வராதுன்னு சொல்லி உண்ணாவிரத்தத ஆரம்பிச்சுருச்சு. சுற்றி ஏர்கூலர்கள், 5000 மின்விசிறிகள் என வருபர்களுக்கு வசதிகள் வேறு! அப்ப சாகும் வரை உண்ணவிரம்ன்னு சொன்னது சும்மாவா?சாகப்போகிறவர்களுக்கு இத்தனை வசதிகள் எதற்கு. உண்ணாவிரத பந்தலில் 750 குடி நீர் குழாய்கள் எதற்கு.இந்த ஊடகங்கள் என்றாவது இவனுக்கு எதிரான கருத்துக்களை போடுமா என்று உற்று நோக்குங்கள். நிச்ச்யம் இல்லை.

  இந்த காவி கபோதிகள் மக்களை வசியப்படுத்த எடுத்த ஆயுதம் தான் இந்த சூமுக சேவை மூகமூடி. ஐரோம் ஷர்மிள் மணிப்பூரில் சிறப்பு காவல் உரியமையை ரத்து செய்யக்கோரி, பெண்களை துனை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்ககோரி 10 வருஷமாக உண்ணாவிரதம் இருக்கிறாரே அவருக்கு ஏன் இந்த நாய் ஆதரவு தரவில்லை.
  கருப்பு பணம் பற்றி ஏன் இந்த தீடீர் அக்கறை?

  இவனுக்கு நிச்சயம் காங்கிரஸ் அடி பணியாது.இவன் நேற்று திருட வந்தவன் பரம்பரை பரம்பரையாக 150 வருடங்களாக திருடிகொண்டு இருப்பவனுக்கு இவனை சமாளிக்க தெரியாதா??

  • //இந்த காவி கபோதிகள் மக்களை வசியப்படுத்த எடுத்த ஆயுதம் தான் இந்த சூமுக சேவை மூகமூடி. ஐரோம் ஷர்மிள் மணிப்பூரில் சிறப்பு காவல் உரியமையை ரத்து செய்யக்கோரி, பெண்களை துனை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்ககோரி 10 வருஷமாக உண்ணாவிரதம் இருக்கிறாரே அவருக்கு ஏன் இந்த நாய் ஆதரவு தரவில்லை.
   கருப்பு பணம் பற்றி ஏன் இந்த தீடீர் அக்கறை?\\
   இந்திய அமைதி படையின் அட்டுழியங்களை எதிர்த்து அமைதி படையை உடனே விலக்கி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தீலிபன் அன்று யாழ்பானத்தில் உண்ணாநிலை தொடங்கினார் அதற்கு முன்பு நடந்த சண்டையில் வயிற்றில் காயம்பட்டதால் அவரின் குடலில் சில பகுதிகள் வெட்டி எடுக்க பட்டிருந்தன. அவர் உண்ணாநிலை மேற்கொண்டால் ஒரு வாரத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையிலும் 12 நாட்கள் வரை உண்ணாநிலையிருந்து தமிழ் தாயின் மடிமீது தலைவைத்து மாண்டுபோனான் அந்த மாவீரன் அதன் பெயர் உண்ணாவிரதமா
   அல்லது சுற்றிலும் ஏர்கூலர்கள் சுழல 500 மின்விசிறிகள் கறைபடியாதா தலையனை மற்றும் வெள்ளை விரிப்புகளுடன் இந்த காவி கூட்டம் நடத்துவது உண்ணாவிரதமா

   நீங்கள் சொன்னது போல்
   இவனுக்கு நிச்சயம் காங்கிரஸ் அடி பணியாது.இவன் நேற்று திருட வந்தவன் பரம்பரை பரம்பரையாக 150 வருடங்களாக திருடிகொண்டு இருப்பவனுக்கு இவனை சமாளிக்க தெரியாதா??

 7. ராம்தேவ்-ஐ யோகா செய்ய விடாமல் அப்புறப்படுத்திய மத்திய அரசின் காமெடியை பாரதீய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னணி போன்ற காவி கட்சிகளால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியாமல் அலறுவது பற்றி…………..

 8. @கூத்தாடி நல்லா சொல்லி இருக்கிரீர்கல். நீங்கல் சொல்லும் அதே காரனத்துக்கு தான் நான் அன்னா அசாரெ பட்ரிய கட்டுரையில் அன்னாவை ஆதரித்தேன். காவிமயமாக்கப்பட்ட போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாய்பாபா,நித்தி ஆகியோர் மனநலம் பாதிக்கப் பட்டவர்கல் என்ரு நான் நம்புகிரேன்.

 9. போலீஸ் அராஜகம் கண்டிக்கப்படவேண்டியது என்பது மிகவும் முக்கியம். பாபா ராம்தேவ் போன்ற சாமியார்கள், அவரது அடிவருடிகள், சந்தர்ப்பவாத ஆதரவாளர்களை விட்டு விடுவோம். ஒருவர் ஒரு கோமாளித்தனமான கோரிக்கையோடு நடைபெறவே முடியாத தீர்வுகளோடு உண்ணா விரதம் மேற்கொள்கிறார் அதனைக் கண்டே ஆளும் வர்க்கம் மூத்திரம் போகிறது. போலீஸை அனுப்பி அடித்து நொறுக்குகிறது!ஊடகங்கள் இதற்குக் கொடுக்கும் அதீத முக்கியத்துவம் முதலில் விமர்சிக்கப்படவேண்டியதாகும். இதே பூச்சாண்டி பாபா ராம்தேவ்தான் லோக்பால் மசோதாவுக்கு பிரதமர் கட்டுப்படவேண்டியதில்லை என்றார். இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, புதிய காலனியாக்கத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அவர் தன்னளவில் ஊழல் இல்லாதவர் என்ற பஜனை எல்லாம் இனிமேல் நடக்காது. ஆனாலும் ஒருவரை ஊரூக்குள்ளேயே நுழையக் கூடாது என்று கூறுவதெல்லாம் பாசிசம் அல்லாமல் வேறு என்னவாம்?

 10. //இந்த தொடைநடுங்கிகள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம்பட்டுக் கொண்டதையே மாபெரும் படுகொலைச் சம்பவமான ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிடுகிறார்கள்.\\

  வினவு இந்த வார்த்தைகளை பெரியாரை ஞாபகப்படுத்துகிறது.

 11. ஜெ” ஊழலை பற்றி பேசி ஜெயித்தால் சரி!. சுதந்திரம் அடைந்து 64 வருடம் ஆகி காங்கிரஸ் நம்மை 52 ஆண்டுகள் பரம்பரை ஆட்சி செய்து , செய்து கொண்டு ஊழலில் திளைத்த முதலைகள் தின்று கொண்டு சென்று சேர்த்த கருப்பு பணம் திரும்பி கொண்டு வா ..உடனே கொண்டு வா என்று ராம்தேவ் சொன்னால் தப்பா?!!
  http://www.facebook.com/venkat.india#!/note.php?note_id=222750791086707

  • இவ்வளவு நாள் இல்லாத அக்கறை திடீர் என்று வந்த மர்மம் என்ன என்பதே எங்கள் கேள்வி.

 12. ஒரு காவியின் போராட்டத்தால்
  நாட்டின் சுதந்தரம் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகிறது.
  தொடை நடுங்குகிறார்கள் ஆளும் வர்கத்தினர்.
  அதனால் கவுரவமாக அவரை அப்பாற்படுத்திவிட்டனர்.
  காவிக்கு ஒரு கவுரவம்; மரியாதை; பயம்…

  இதே போராட்டத்தை தாடி வைத்த ஒரு இமாம், முசுலீம்களைக் கூட்டி செய்திருந்தால்?
  பாகிஸ்தானின் சதி என்று ஆளும் கட்சியும், பிஜெபி காவி குரூப்புகளும் சதி செய்து,
  இரவோடு இரவாக அவரை அப்பாற்படுத்துவதற்கு பதிலாக கொளுத்திப் போட்டிருப்பார்கள்!

  இதே போராட்டத்தை ஒரு சர்ச் ஃபாதர் செய்திருந்தால், இது அமெரிக்கச் சதி அல்லது
  ஆஸ்திரேலியச் சதி என்று மன்மோகன், சிதம்பரம் போன்ற அமெரிக்கக் காவடிகளைத் தவிற,
  இந்த நாட்டின் அனைத்து கட்சிகளும் சதி செய்து இரவோடிரவாக அவரைக் கொன்றுபோட்டிருக்கும்!

   • “இது உலகில் வாழும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மீதும் விழுந்த அடி” என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரவீன் தொகாடியா மூக்கை வடிக்கிறாரே!!! இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?

    • கனி மொழியின் கைதால், தமிழகம் முழுவதுமே சோகம் ததும்பி, கண்ணீரால் நிரம்பி, களையிழந்துபோனது போலவா?
     கருணாவைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார்.
     ஜெயாவைகேட்டால் தமிழகம் ‘பட்டாசு வெடித்து தீபாவளி போலக் கொண்டாடியது’ என்பார்.

     ராம்தேவ் சிறையிடப்பட்டிருந்தால் ‘கோடிக்கணக்கான இந்துக்கள் சிறையிலிட்டதற்குச் சமம்’ என்பர்.
     ராம்தேவ் கொல்லப்பட்டிருந்தால் ‘இந்துதுவமே சமாதியாக்கப்பட்டுவிட்டது’ என்பர்.
     ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மீது விழுந்த அடிக்கு’ காவிகள் முதுகைத் துடைத்துக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை!

  • நல்ல கற்பனை…. மதமாற்றத்துக்கும், தீவிரவாதத்திற்கும் போக அவர்களுக்கு நேரம் கிடைத்தால் நீங்கள் சொல்லும் சர்ச் ஃபாதரும் இமாமும் என்றைக்காவது சமுதாயப் போராட்டங்களில் ஈடுபடலாம்…..

   • வாய்யா, அப்படின்னா இந்த நாத்தம் புடிச்சவன் சமுதாய போராட்டம் செய்யுறான்னு சொல்ல வறியா? ஆமா விகடன்ல கொசு புடுச்சிகிட்டு திரியுவன்தானே நீ இது ‘வினவு’ மதமாற்றம் தீவிரவாதம் ன்னு குடுமிய ஆட்டுன ‘டர்’ ஆக்கிடுவாங்க.

 13. முட்டல் தமிழ மக்கால், இதுல் உஙல் இச்லம் மத தின்கதெ. வினவு again SHOWING THEY ARE BELONGS TO ISLAM SORRY SORRY AGAINST THE HINDU….THEY FIGHTING FOR YOURSELF TOO. U CANT DO IT. CLOSE YOUR *****

 14. “ஒரே வார்த்தையில், ஓஹோ என்ற வாழ்க்கை!!” என்று ஒரு நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சியில் காட்டினார்கள். இந்த காவி கன்றாவிகளைப் பார்க்கும்போது, நடுரோட்டில் அமர்ந்து கொண்டு “ஊழல் ஒழிக!” என்று நாமும் உண்ணாவிரதம் இருந்தால் போதும். அவ்வளவுதான், “ஒரே நாளில், ஓஹோ என்ற புகழ் கிடைத்து விடும்” போல தெரிகிறது.

 15. //இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான்//

  இந்தியாவில் கருப்பு பணச்சுழற்சிக்கும் ஹவாலாவிற்கும், கள்ள நோட்டு புழக்கத்திற்கும் காரணம் இந்து சாமியார்களும் மடங்களும்தான் என்று கூசாமல் எழுதும் வினவு அதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல், ஆள்கடத்து வியாபாரம், பணச்சலவை, ஹவாலா என்று எல்லா விஷயங்களிலும் பாகிஸ்தானின் விஷமமும் நெட்வொர்க்கும் இருப்பது வினவின் கண்களுக்கு படாததில் ஆச்சரியமொன்றுமில்லை. இதுபற்றிய சமீபத்திய செய்திகள் இதோ:

  http://articles.timesofindia.indiatimes.com/2011-01-28/delhi/28361618_1_hawala-stone-pelters-special-cell

  http://articles.economictimes.indiatimes.com/2011-03-04/news/28657152_1_counterfeit-currency-foreign-contribution-terrorist-groups

  அமெரிக்க அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் சுட்டி:
  http://www.state.gov/documents/organization/156589.pdf

 16. கருப்புப் பணத்தை ஒழிக்க ராம் தேவ் முன்வைக்கும் யோசனைகளெல்லாம் ஏதோ ஷங்கரின் பாடாவதிப் படத்தின் திரைக்கதை போலவே இருக்கிறது. ஆமாங்க தோழர் ஒரே கண்றாவியா
  இருக்கு.அந்தப்படத்தை பார்த்தா ரசிகமானிகளுக்கு என்ன புரளுமோ? அதுதான்.வாந்திமயமாஇருக்கு

 17. மகாத்மா காந்தியே வந்தாலும் அவரிடம் குறை கண்டு பிடிக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இல்லை. சாதாரண காய்ச்சலுக்கு சாப்பிடும் மருந்தில் கூட பக்க விளைவயுகள் உள்ளது. குறை இல்லாத மனதனே இல்லை. வெறும் விமர்சனங்கள் செய்வது மிகவும் சுலபம். விளையாட்டை வேடிக்கை பார்ப்பதை விட அதில் ஈடுபட்டு தோற்பது எவ்வளவோ மேல். அதே வேலை சாமியார்களையும் காந்திய வாதிகளையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரிய முட்டாள் தனம். சற்று பிரபலமானவர்கள் தாங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தொலை நோக்கும் பார்வையுடனும் கொஞ்சம் பக்குவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். நமது மக்கள் மிகவும் மழுங்கிப் போனவர்கள். தானும் செய்ய மாட்டார்கள். செய்யும் ஒவ்வொருவரையும் எதாவது குறையும் சொல்லுவார்கள்.

 18. அஸ்ஸலாமு அலைக்கும்.அனைவரின் மீதும் ஏக இறைவனின் புறத்திலிறிந்து சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
  இந்த வினவு வலைதளத்தை நண்பர் ஒருவர் அறிமுகபடுத்தினார்.உபயோகமாக உள்ளது.பசும்பொண்தேவர் ராம்தேவ் போன்றவர்களை பற்றிய நெடுநாள் கேள்விகளுக்கு விடையும் அவர்களின் சுயரூபமும் அறிந்து கொண்டேன்.நன்றி.நான் வெளிநாட்டில் உள்ளதால் செய்கின்ற வேலைக்கு முதலிடம் அளிக்க வேண்டியுள்ளதால் பிறகு தங்களுடன் தொடர்பு கொள்கின்றேன்.
  நன்றி.
  உங்கள் குழுமத்திற்க்கு ஏக இறைவனின் புறத்திலிறிந்து சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
  அன்புடன் உங்களில் ஒருவன்
  முஹம்மது அக்பர்.

  • வினவு குழுமம் செம்புரட்சி செய்தால்தான் சமாதானம் ஆவாக. அதுக்கு உங்க இறைவன் ஏதாவது வினவு குழுமத்திற்கு உதவி செய்வாரா!

   • அஸ்ஸலாமு அலைக்கும்.அனைவரின் மீதும் ஏக இறைவனின் புறத்திலிறிந்து சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
    கோபமாக எழுபவன் நஷ்டத்துடன் அமருவான் என்ற பழமொழிக்க ஓப்ப என்னுடைய அறிமுகத்துக்கே இவ்வளவு கோபமான விமர்சனங்களா?அதுவும் சொந்த பெயரில் வராமல் போலி புனை பெயர்களில். தப்பும் தவறுமான தமிழுலிலும் சொந்த மொழியான தமிழ்மொழியை விடுத்து அயல்மொழியான ஆங்கிலத்தில்.
    “glorious religion” and its treatment of women.அதையும் படிப்போம்.
    நன்றி்.
    உங்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் புறத்திலிறிந்து சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
    முஹம்மது அக்பர்.

    • அக்பர் முதலில் துதிபாடுவதை நிருத்துங்கள். எங்களுக்கு தேவை பிண்ணுட்டம் மட்டுமே, துதி அல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க