பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த கையோடு பெட்ரோல் விலையை ஏழு ரூபாய்க்கும் மேல் உயர்த்தி மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வை யார்தான் கண்டிக்கவில்லை?
காங்கிரசு மந்திரி ப.சிதம்பரம் கூட கசப்பான முடிவு என்று ‘வருத்தப்’படுகிறார். இவர்களையெல்லாம் ஆட்சிக்கு அனுப்பியது கசப்பான முடிவு என்று மக்கள் உணர்ந்தால் இந்த கசப்பு வேடமெல்லாம் முடியுமா? காங்கிரசுக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டே திரிணாமூல் காங்கிரசும், தி.மு.கவும் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன. ஏன் விலை உயர்வைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறும் வரை ஆட்சிக்கு தரும் ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா என்று சொல்லவில்லை? கூட்டணி பிழைப்புவாதத் தருமத்தையும் மீறக்கூடாது, மக்கள் முன் நடிக்கவும் வேண்டும்.
இது போக ஆளும் கட்சி அ.தி.மு.க முதல், எதிர்க்கட்சி தே.மு.தி.க வரை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மறுகாலனியாக்கத்தை முற்றிலும் ஆதரித்துக் கொண்டே அதன் விளைவுகளின் பால் வரும் மக்கள் கோபத்தை வலுவிழக்க செய்வதற்கே ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் நாடக எதிர்ப்பு பயன்படுகின்றன.
மக்கள் வாங்கும் பெட்ரோலில் வரி இரு பங்கு, விலை ஒரு பங்கு என்று ஒரு கொள்ளை. இதை எந்த மாநில அரசுகளும் தட்டிக் கேட்பதில்லை. வரியையும் ரத்து செய்வதில்லை. அடுத்து எண்ணெய் நிறுவனங்களின் இலாபக் குறைப்பையே நட்டமென்று காட்டும் கணக்கு மோசடிகள். சென்னையிலோ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் மோசடியை மக்கள் என்று உணர்வார்கள்?
உணர்த்த வேண்டும் என்பதன் துவக்கமாக ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்தை முற்றுகையிடுகின்றன. அனைவரும் வருக!
தொடர்புக்கு – 94448 34519
_______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
வாழ்த்துக்கள்.புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ் அணி திரள்வோம்.மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்.
இன்று (29/05/12) ஆங்கில நாளிதழ்களில் ஐ ஓ சி மற்றும் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் ஆயில் இந்தியா நிறுவன ஆண்டிறுதி அறிக்கை விளம்பரமாக வெளியாகியுள்ளது. அதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோடி நிகர லாபம் காண்பிக்கப்படுகிறது. இது தவிர ஐ ஓ சி- (பாரத்) பி.பி.சி, (இந்துஸ்தான்)ஹெச் பி சி ஆகிய 3 இந்திய ஆயில் நிறுவனங்களின் அதனதன் இணைய தளங்களில் சென்று முந்தைய 6 ஆண்டுகளுக்கான லாப நட்ட கணக்கை பார்த்தால் அனைத்திலும் தொடர்ந்து லாபம் கோடிக்கணக்கில் இருப்பதை காண முடியும். அவ்வாறெனில் ஒவ்வொரு முறை விலையேற்றத்தின் போதும்- நட்டத்தை குறைக்கவே விலையேற்றம் என்ற பூச்சுத்தல் அப்பாவி இந்திய பொது மக்களின் காதுகளில் சுற்றப்படுகிறது. ஒன்று பட்ட மக்கள் போராட்டத்தின் வழியாகத்தான் இதை சரிசெய்ய இயலும்
A great Revolution is required to control the prices, especially essential commodities like Petrol, Milk, Vegetables/Groceries,
Bus Fare, Electricity etc.
The Government either at Center ot at State are power and money monkers…
The age limit of 55 yrs. musg be fixed for the Poliiicians and those who crossed 55 should not be allowed to file nominations for election…they must give room for the youngesters…advice from elders ar alwasy welcome, but they should not be allowed to rule the country…In India the President is powerless..he is a rubber stamp…Under Secretary to THE GOI is empowered to sin order on behalf of the President…The Ministers are puppets like the Prime Minister in the hands of the President of a ruling party..This trend has to b changed..hen only a concrete solution to the rising pices can be achieved.
எத்தன பேர் வந்தாங்க வினவு?
[…] பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்… […]