ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்!

49
புர்கா

செய்தி -73

புர்காபாகிஸ்தானில் லாகூரைச் சேர்ந்தவர் ஆசாத் அலி, போலிசாக வேலை பார்ப்பவர். இவரது தங்கை நஜ்மா பீபி(22) ’ஆண்களின்’ உடைகளை குறிப்பாக ஜீன்ஸ் பேண்டு அணிவது அவரது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் எச்சரிக்கை, பிறகு மிரட்டல் என்று போகிறது. அண்ணனின் மிரட்டலிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென ஷதாரா காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார் நஜ்மா. ஆனால் போலிசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு 20.7.12 அன்று இசுலாமியர்கள் அனைவரும் தொழுகை செய்யும் வெள்ளியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட நஜ்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார் ஆசாத் அலி.

பாகிஸ்தானில் இசுலாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இசுலாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் ஒரளவுக்கு செல்வாக்குடனே இருக்கிறது. முழு நாடும், பொருளாதாரமும் அமெரிக்க அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் போது இத்தகைய மதவாதிகள் தங்களது புனிதத்தை அப்பாவிப் பெண்களின் மீது தேடுகிறார்கள்.

மதப்புனிதத்தைக் கட்டிக் காப்பாற்றுபவர்களாகப் பெண்களை மட்டும் எல்லா மதங்களும் நியமித்திருக்கின்றன. தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் முழு உடலை மறைக்கும் துணியோடும், ஆண்களின் துணையோடும் சவுதியின் வீராங்கனை ஒருவர் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கே இத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றது. ஜீன்ஸ் பேண்டு அணிவதை கொலையால் தடுத்து நிறுத்த நினைக்கும் இசுலாமியர்களின் ஆணாதிக்கமும் விரைவில் புதைகுழிக்குப் போவது உறுதி.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

49 மறுமொழிகள்

 1. வினவு திருந்திடுச்சா அல்லது திருந்தின மாதிரி ‘ஆக்ட்’ கொடுக்குதா?

 2. என்னங்க நீங்க… இசுலாமியர் ஆணாதிக்கம் ஒழியணும்னு எழுதறிங்க… இசுலாமும் ஆணாதிக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கம்தானே… உங்களால இசுலாம ஒண்ணும் சொல்ல முடியாது..ஏன்னா முற்போக்கு பட்டம் போயிரும்… இவ்வளவு ஓட்டை உள்ள தாலிபானிச இசுலாம் உமக்கு முற்போக்காத் தெரியுது…ஒரு வகையில் பிஜேபி சொல்றது சரிதான்.. கம்யூனிஸ்ட் எல்லாரும் போலி முற்போக்காளர்கள்தான்…

  • நாகராசு, இஸ்லாம் முற்போக்கானதுன்னு வினவு எழுதியிருக்கா, அடடே, உங்களுக்கு மூளை மட்டும்தான் டம்மின்னு நினைச்சேன்.. ஐம்புலன்ல பலபுலன்கள் அவுட்டு போலிருக்கே

  • இசுலாமும் ஆணாதிக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கம்தானே —

   இந்த எழவு இஸ்லாம், கிறுத்துவம், பார்ப்பனிய இந்துமதம் எல்லாத்துக்கும்தான் பொருந்தும்
   குறைந்தபட்சம் வினவு பதிவுகளின் தலைப்பை வாசித்தால் கூட இது புரியும், இதே பதிவுக்கு கீழே இருக்குற தொடர்புடைய பதிவுகளின் தலைப்பையாவது படிச்சு பாருங்க.

  • இஸ்லாம் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என்று எங்க சொல்லி இருக்கு ஆண்களும் பெண்களும் உங்கள் மர்மச்தானங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று தான் கட்டளை இடுகிறது ஒரு காவல் அதிகாரி தன தங்கை ஜீன்ஸ் அணிந்ததற்கு சுட்டு கொன்று இருக்கிறார் என்றால் அவர் இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை, இந்த செயலை இவர் சவுதியில் செய்து இருந்தால் ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை கொடுத்திருப்பார்கள், கொலைக்கு கொலைதான் தீர்ப்பு.
   ஆணாதிக்கம் பற்றி நீங்கள் எல்லாம் பேச கூடாது, கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏற வேண்டும் என்று பெண்களை உயிருடன் தீயில் போட்டு கொளுத்தி இருக்குறீர்கள் அதற்க்கு ஆதாரமாக உங்களின் இந்து மத நூல்களை ஆதாரம் காட்டி பெண்களை கொலை செய்து இருக்குறீர்கள் வெள்ளை காரன் வந்து சட்டம் போட்டு இந்த கொடுமைகளை தடுத்து இருக்கிறான்

   • முதலில் எப்படி இந்த உடன் கட்டை ஏறும் பழக்கம் இந்து மதத்தில் எப்படி வந்தது என்று தெரியுமா முஸ்லிம் படை எடுத்து ஆண்களை கொன்ற பின் பெண்களை பிடித்து சென்று தங்கள் பாலியல் வக்கிரகங்களை தீர்த்து கொண்டார்கள் இந்து பெண்களுக்கு தங்கள் கற்பை காக்கும் வேறு வழி தெரிய வில்லை அதனால் இந்த சதி உடன்கட்டை தோன்றியது பின்னாளில் அது ஒரு கலாசாரமாக வடிவெடுத்தது பிழையானது என்று தெரிந்தால் அதை கைவிடுவதட்கும் இந்து மதம் பின் நிற்பது இல்லை

    • தூக்கிட்டு போய் கற்பளிக்கனும்னு முடிவு பண்ணிட்டா கணவனை இழந்த பெண் என்ன? கன்னிப்பெண்களை கூட தூக்கிட்டு போகலாமே? ஏன் விதவைகள் மட்டும் உடன் கட்டை ஏறினார்கள்? நீங்கள் மதத்தின் பெயரால் செய்த தவறுக்கு முஸ்லிம் தான் காரணம் என்று சொல்கிறீர்கள். தூக்கிட்டு போறவன் விதவைகளா பார்த்தா தூக்கிட்டு போவான், கொஞ்சம் நம்புற மாதரி சொல்லுங்க.
     உடன் கட்டை தவறு என்று நீங்கள் சொல்லவில்லை வெள்ளைக்காரன் சொன்னான் அவன் தான் சதி என்று ஒரு சட்டத்தை போட்டு தடுத்தான்

    • ew reliable records exist of the practice before the time of the Gupta empire, approximately 400 AD. After about this time, instances of sati began to be marked by inscribed memorial stones. The earliest of these are found in Sagar, Madhya Pradesh, though the largest collections date from several centuries later, and are found in Rajasthan. These stones, called devli, or sati-stones, became shrines to the dead woman, who was treated as an object of reverence and worship.

     http://en.wikipedia.org/wiki/Sati_%28practice%29

     Do not talk rubbish by reading some idiotic RSS articles

     • எpன்னுடைய தவறான கருத்து பதிவுக்கு மிக தாழ்மையுடன் மன்னிப்பு வேண்டுகிறேன் உடன்கட்டை என்பது முன்பே இருந்தது என்றாலும் அரச சத்திரியர் களுக்கு உரிய வழக்கமாவே இருந்து பின்னாளில் பொது வழக்கு ஆகி இருக்கிறது முகலாய படை எடுப்பின் பின் அது கூடி சென்று உள்ளது என்பதை மறுக்க முடியாது எரியும் தீயில் ஒருவரை இறக்க செய்ததை நினைத்து பார்க்கவே முடியவில்லை தடை செய்தவர்களுக்கு நன்றிகள்

      • உண்மையை உணர்ந்தமைக்கு நன்றி, ராஜபுத்திரர்கள் ஏன் அப்படி செய்தார்கள் தான் அனுபவித்த மனைவியை வேறு யாரும் தொட கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி பெண்களை உயிருடன் கொளுத்தினார்கள், ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு மறுமணம் செய்ய சொல்கிறது, அப்படிப்பட்ட இஸ்லாம் பெண் அடிமைத்தனம் என்று கூறுகிறீர்கள், இன்று இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் செய்யும் குற்றத்திற்கு இஸ்லாத்தை குறை கூறாதீர்கள், அவர்களின் புரிதல் குறைவு

       • தவறான கருத்தை வெளியிட்ட பேரமா மன்னிப்பு கேட்கிறார். நீங்களோ

        “ராஜபுத்திரர்கள் ஏன் அப்படி செய்தார்கள் தான் அனுபவித்த மனைவியை வேறு யாரும் தொட கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி பெண்களை உயிருடன் கொளுத்தினார்கள்”

        என்று தவறான கருத்தை பதிவு செய்கிறீர்கள். ராஜபுத்திர பெண்கள் தங்களை மாய்த்து கொள்வது ‘சதி’ அல்ல. அதற்கு பெயர் ‘ஜெளஹார்’. போரில் முகலாயர்களிடம் தங்கள் படை தோற்ற செய்தி கேட்டதும் அரண்மனை மகளிர் தங்களை மாய்த்து கொண்டனர். முகலாயர் மேல் தவறான பழி போடும் போது வாதிடுங்கள். அதற்கென்று அவர்கள் தவறு செய்யவே இல்லை என்று கூறுவது, ஒரு படி மேலே போய் மற்றவர்களைப் (இங்கே ராஜபுத்திரர்கள்) பற்றி இழிவாக கூறுவது சரி அல்ல.

       • anubavitha manaivi?

        Indha aala ellam yaaruya uyiroda vittadhu,

        This guy says enjoyed the wife,he is talking about marriage like a product a man bought from the shelves.

        What a twisted logic it is,a woman dies to avoid rape and he is talking about widow remarriage.

        This is exactly why people have a problem with muslims.

        • anubavitha manaivi what is the problem, women can enjoy from men and a man can enjoy from women

         “his is exactly why people have a problem with muslims”
         Paarpanan have no problem
         http://thathachariyar.blogspot.com/
         visit this site, a person name Agnihotra Thaathachaariyaar wrote all your prblems and how you people cheat other communites written briefly

         • I dont need any Thatha or paati chariyar A marriage is not enjoyment,it is a consentual union of two souls.You talk of it like it is some exploitative deal,this tells us the level of your mind,your morals and thus your social sense also.

          I am happy you live faraway and not as my neighbour.This is why we dont rent houses to people like you or share social activities with people like you.

          • you need or not need who cares? in his website he written about paarpana tolerance to other communities. if you do not give your house we dont have any problem, we live on our own, we will not stand on the road, we know how to survive

       • அரச சத்ரியர் என்று சொல்வதற்கு பதில் ராஜ புத்திரர் என்று சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்

 3. தூய இஸ்லாத்தில் ஆண்களும் பெண்களும் இறுக்கமான ஆடை அணிந்து உடல் கவர்ச்சியை வெளிப்படுத்தாதீர்கள். என்று மட்டுமே சொல்லியுள்ளது.அதையும் மீறி அவர்கள் ஆடை அணிந்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கவே இஸ்லாம் வற்புறுத்துகிறது.அவர்களை தண்டிக்க இவர்களுக்கு உரிமை இல்லை .எவனோ ஒரு ஆசாத் அலி செய்ததெல்லாம்இஸ்லாம் அல்ல.
  கோடிக்கணக்கில் அநீதியாக சம்பாதித்தவர்கள்,உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி பணம் சேர்த்தவர்கள் பலர் ஏழை வரிகளும் தர்மம்களும் செய்யாமல் ,இஸ்லாமிய விதிகளுக்கு மாறாக பலர் உள்ளனரே அவர்களை இந்த ஆசாத் அலிகளால் கொல்ல முடியுமா?

 4. ‘இந்து’ என்றால் மதவெறியர்கள்.. ‘இஸ்லாம்’ என்றால் மதவாதிகள்… எதோ தப்பா தெரியுதே…

  • ஆமா தப்பாத்தான் தெரியுது, போய் உங்க கண்ணை டாக்டராண்ட காமிங்க
   பதிவின் டேகிலேயே இஸ்லாமிய மதவெறின்னு இருப்பதைச்சொன்னேன்

 5. VINVIN KARUTTHU ENNAVO………..JEANS PODAMA ANUKKU NEKAR PENNUM MELAADAI PODAMAL VANDHAAL DHAAN PENURIMAI NILAI NATTAPADUMA ALLADHU ISLAMIYA PARDHA POTTU IRUKKUM PENKALAI RASIGA AASAYAAAA.

  • ஓ அப்துல்லா அப்ப பர்தா போடாம சேலை சுடி போட்டிருக்கும் பக்கத்துவீட்டுக்காறன் பொண்டாட்டியை தெனோம் பாத்து ஜொள்ளுவுட்டு ரசிச்சிடிருக்கீரா பலே பலே இது உம்ம சம்சாரத்துக்கு தெரியுமா?

   • ஐயா ஊசி இந்தகாலத்துல சேலை கொஞ்சம் கவனகுறைவா விலகுனாகூட உடனே இன்டர்நெட்ல போட்டோவா வந்துருது அப்படிப்பட்ட நவீன காலமா இருக்கு. மொபைல கைல வச்சிக்கிட்டு இதுக்காகவே அலையுரானுங்க. எத்தன பெண்களோட போட்டோ அவர்களுக்கே தெரியாமல் இணையத்துல உலா வர்ரது தெரியுமா? அப்புறம் அரகுறையா டிரஸ்ஸபோட்டுகிட்டு ஒரு பெண் எதிர்ல வந்தா உங்கள மாதிரி கண்ணமூடிகிட்டு(உண்மையில் கண்ணை மூடுவீங்களா) போறதுக்கு ஆண்கள் அனைவரும் உங்கள மாதிரி உத்தமர்கள் கிடையாதப்பு…

    • குத்தூசி அப்ப செல்போன் – இன்டெர்நெட்டு மேல எல்லாம் பர்தா போடமுடியாது என்பதையால் அதையெல்லாம் தடை செஞ்சிட்டா பெட்டரா இருக்காது? பெண்களுக்கும் ஒரு நல்லது செஞ்சாப்புல இருக்கும்ல…

     • “”குத்தூசி அப்ப செல்போன் – இன்டெர்நெட்டு மேல எல்லாம் பர்தா போடமுடியாது என்பதையால் அதையெல்லாம் தடை செஞ்சிட்டா பெட்டரா இருக்காது? பெண்களுக்கும் ஒரு நல்லது செஞ்சாப்புல இருக்கும்ல…”” இது காமெடியா ??? அல்லது எதாவது சீரியஸா சொல்லவர்ரீங்களா?? எனக்கு நிஜமாகவே புரியல

   • இப்படி உன் பொண்டாட்டிய பக்கத்துக்கு ஊட்டு காரன் ரசிக்க கூடாதுன்னுதான் இஸ்லாம் கண்ணியமான முறையில் ஆடை அணிய சொல்கிறது, இதை புரியாமல் பெண்ணுரிமை, பெண்ணடிமை என்று பேச வந்துடீங்க

    • so from ur point if the other mans wife did not wear burdha u will enjoy her beauty… No Self control in ISLAM… So all Muslims are sex maniacs if women do not wear burdha they can’t control themselves ??? do u agree all the above ???

     • ஜெனில் ,ஹெல்மெட் அணிய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உடன் அபராதம் விதிக்கப்படுகிறது
      ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.ஏன்?
      ஹெல்மெட் அணியாதவர்கள் எல்லாம் செத்துவிட்டார்களா என்ன ?

      • Ur comparison itself speaks for u…. So u compare Women with humans and uncontrolled vehicles with MEN ??? Thats what iam asking even without burdha we have millions of men live and die with one women … If MUSLIMS specifically need burdha means muslim men are sex maniacs … Do u agree this???.. WHat u r saying by restricting WOMEN(wearing helmet) we can achive a mimimal security for women.. This is an outdated idea which won’t fit for mordern world(not saudi arabia) where all humans are equals.. What we need is to teach men that women are also humans so we have to treat them with diginity(ask the vehicles to run with control)…

       • ஜெனில்,மனிதர்கள் அனைவரும் சமமே ,ஆனால் ஆண்கள் ஆடை அணிவதிலும் பெண்கள் ஆடை அணிவதிலும் சமமானவர்களா?
        கவர்ச்சி பொருட்களாக கருதப் பட்டு வந்த பெண்களை மனுசிகளாக மாற்றியதே இஸ்லாம் தான் .
        அடுத்து பர்தா என்பது நடைமுறையில் உள்ளது மட்டும் அன்று.தனது கவர்ச்சி உறுப்புகளை பிறரை கவராத வண்ணம் எவ்விதமான ஆடைகளைக் கொண்டும் முகமும் கைகளும் தவிர மறைத்துக் கொள்வதே ஆகும் .
        அரைகுறை ஆடை அணிந்த பெண்களே அதிக வன்புணர்ச்சிக்கு பலியாகியுள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை.இப்போது அதை மாடன் வேர்ல்ட் என்னும் பர்தாவால் மறைக்க வேண்டாம்

     • prevention is better than cure, it is not compulsory to wear burdha, islam told to wear a complete dress for both men and women.
      but men in all the relegions and countries wear in good way, they covered full body, but womens only all over the world reducing the size

   • ஊசி பக்கத்துவீட்டுக்காரர் பொண்டாட்டிய பார்த்து ஜொள்ளுஉடுறாரா இல்லையாங்கறது இருக்கட்டும். உம்ம பக்கத்துவீட்டுக்காரர் உங்கள மாதிரி உத்தமனா இல்லாமல் ஒரு சாதாரண ஆண்மகனா இருந்துடபோறாரு

    • அப்ப இஸ்லாமிய சர்வாதிகார/குடியரசு நாடுகள்லல்லாம் ஒரு பய கூட உத்தமன் இல்லயா? நான் நம்பமாட்டேன் 🙁

 6. இந்த ஜீன்சு ரொம்ப கீழ போய்கிட்டே இருக்குதே.. கொஞ்ச நாள்ல ஜிப்பே இல்லாம ரெண்டு குழாயக் குடுத்து இதாண்டா ஜீன்சுன்னு சொல்லப் போறானுவ, நம்ம பசங்களும் அத்த மாட்டிக்கிட்டு திரியப் போகுதுங்க.. ஒரே டெரரா இருக்கப் போவுது போ..

  • பாகிஸ்தான்லே டி.வி. பாத்தாலே, கவாலி கேட்டாலே அடிவிழுது.. அதுவும் யாருக்கு.. இஸ்லாமிய மத தீவிரவாதிகளை ஆதரிக்கும் டெய்லி நியூஸ் நாளேட்டின் ஆசிரியருக்கு…

   http://ibnlive.in.com/news/editor-of-pak-daily-beaten-up-for-watching-tv/287801-56.html

   இந்தியா பரவாயில்லைன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறீங்களே…

   • அம்பி பாகிஸ்தான் இந்தியாவை விட நல்ல நாடுன்னு இங்க யாரு சொன்னாங்க? ஒய் திஸ் சம்பந்தமில்லாத ஸ்டேட்மென்ட்

 7. // அப்ப இஸ்லாமிய சர்வாதிகார/குடியரசு நாடுகள்லல்லாம் ஒரு பய கூட உத்தமன் இல்லயா? நான் நம்பமாட்டேன் 🙁 //

  அங்கெல்லாம் ஒரு உத்தமன் கூட இல்லையான்னு நீங்களே ஒரு கேள்வியக் கேட்டு, நம்ப முடியாம வருத்தப்பட்டீங்களே.. அதான் இந்தியாதான் ரொம்ப நல்ல நாடுன்னு பெருமையா ஒரு ஸ்டேட்மெண்ட்ட விட்டேன்..

 8. அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஜீன்ஸ் டீ ஷர்ட் போடுவதற்கு தடை. எதுக்கு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க