முகப்புவாழ்க்கைபெண்கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

-

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார். இவ் விசயத்தில் இஸ்லாமியர்கள்  பாசித்தை விமர்சித்தாலும், இஸஃலாமிய கொள்கையை தூக்கி பிடித்தனர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் பாசித் திருமணம் செய்ததால் அவரை அமைப்பை விட்டு நீக்கிவிட்டோம் என்றும் பிறகு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும்” கதை அளந்தனர்.

ஆனால் பாசித் மரைக்காயர் சிறையில் அடைக்கப்பட்ட போது தவ்ஹித் ஜமாத்துதான் அவருக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர். இன்று ஒருபடி மேலே சென்று முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரிலும், போனிலும் கிரிமினல் வழக்கை வாபஸ் பெறக் கோரியும், சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மிரட்டுகிறார்கள்.

“நீங்கள் காபிர்களின் (தோழர்களின்) பேச்சை கேட்டு போலிசுக்கு சென்றதால் உங்களுக்கு பாசித் எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர்கள் சொல்வதை கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் பணமும் இருக்கின்ற ஒரே வீடும் வழக்கு செலவுக்காக காலியாகிவிடும்.” என்று மிரட்டி பார்த்துள்ளனர்.

தலாக் தலாக் தலாக்
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஆனால் இந்த மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாத அப்பெண் “எனக்கு இஸ்லாமியர்களைவிட தோழர்கள் மீதுதான் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது; என் வாழ்க்கை பாசித்தால் நாசமாய் போய்விட்டது; இனி எந்த இஸ்லாமிய பெண்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது”. என பதில் கூறியுள்ளார்.

இதனால் இந்த இஸ்லாமிய காவலர்கள் (பாசித்தின் தவ்ஹீத் ஜமாத்வாதி கூட்டாளிகள்) தங்களது இஸ்லாமிய சட்டபுலமையை வெளிபடுத்தும் விதமாக அந்த அப்பாவி பெண்ணுக்கு பதிவு அஞ்சல் (Register Post) மூலம் விவாகாரத்து அனுப்பியுள்ளனர்.

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.

1. இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?

2. கடிதம், தொலைபேசி மற்றும் வேரொறு சாட்சியும் இல்லாமல் விவாகாரத்து செய்யும் இந்த நடைமுறைகள் இஸ்லாத்தை தவிர, வேறெந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லையே… எங்கே இருக்கிறது இஸ்லாத்தில் பெண்ணுரிமை? பெண்ணுரிமை என்பதை “மைக்ரோஸ்கோப்” வைத்து கண்டுபிடித்து இஸ்லாமிய அறிஞர்கள் அறியத்தர வேண்டுகிறோம்.

3. முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூறக்கூடாது என்று வாய்கிழிய பேசும் தவ்ஹீத் ஜமாத்தினர், தன்னுடைய உறுப்பினர்க்கு காட்டியுள்ள வழி முத்தலாக்கையும் ஒரே தடவையில் அதுவும் பதிவு அஞ்சலில் அனுப்பும் வழியைத்தான். எங்கள் அமைப்பிலுள்ளவர்கள்தான் அக்மார்க் இஸ்லாமியர்கள் என்று பிதற்றுகிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்துள்ள தவ்ஹீதுவாதியின் லட்சணமோ?

4. கோபத்தில் கூட ஒரு கணவன் “தலாக், தலாக், தலாக்” என சொல்லிவிட்டால் அந்த தலாக் செல்லும் என்றும், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப் பெண்ணை வேறொருவர்க்கு திருமணம் செய்து, பின்பு விவகாரத்து பெற்று மீண்டும் பழைய கணவர்க்கு புதிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே. இதுதான் எளிய மார்க்கம் இஸ்லாமா?

5. தவ்ஹித் ஜாமத்தை விட்டு பாசித்தை நீக்கிவிட்டதாக கூறினீர்கள்.. ஆனால் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்திற்கும், பிரசாரத்திற்கும், ஊரில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் பாசித்தான் முக்கிய புள்ளி. தலை இல்லாம வால் ஆடமுடியுமா? ஆணாதிக்கவாதிகள் இல்லாமல் இஸ்லாமோ அல்லது தவ்ஹித் ஜமாத்தோ நிலைத்து இருக்கமுடியுமா?

6. கந்துரி விழாக்களை (தர்கா நிகழ்ச்சிகள்) தடை செய்ய கூறும் தவ்ஹித் ஜாமத், பாசித் தனது இரண்டாவது மனைவியை அருகில் உள்ள கோட்டைபட்டினம் மகான் ராவுத்தர் அப்பா தர்கா கந்துரி விழாவிற்கு அழைத்து டூர் சென்றரே அதற்கு எந்த ஹதிஸ்லேயாவது விதிவிலக்கு உள்ளதா? (முதல் மனைவி பாசித்திற்கு பிடிக்காமல் போனதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் மனைவி தர்காவிற்கு செல்கிறார் என்பதுதான்)

சரி விஷயத்திற்கு வருவோம் கடிதம், தொலைபேசி மூலம் விவகாரத்து செய்தால் செல்லுமா? செல்லும் என்றால் இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு என்னதான் உரிமைகள் வழங்கி இருந்தாலும் அது தலையில்லா முண்டத்திற்கு சமம் தானே? பெண்களை போகப்பொருளாக பயன்படுத்த உரிமை வழங்கி இருக்கும் மதம் தான் இஸ்லாமா? அதன் விளைவுதான் பாசித் போன்றவர்களா?. ஆனாலும் உள்ளூர் ஜமாத் அவர் அனுப்பிய தலாக் கடிதத்தை புறக்கணித்ததுடன் கண்டித்தும் உள்ளனர்.

பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும். இதனையே கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள் நமக்கு திமிருடன் அறிவித்து இருக்கிறார்கள்.

இனி இஸ்லாமிய பெண்கள் அந்த ஆணாதிக்கவாதிகளின் நடைமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்.

 ___________________________________________________

– ஜமால்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

 1. கொடுமைகள் கண்கூடாகத் தெரிந்தாலும் அதற்காக வாய்திறக்கப் போவதில்லை. பெண்கள் தாமாகப் புரிந்துகொண்டு, தங்கள் விடுதலைக்காக அணிதிரண்டு போராடாதவரை, இதுபோன்ற ஆணாதிக்கத் திமிரை ஒடுக்க வழியில்லை.

 2. அது சரி நர்மல் அ இது இந்து மத சம்பந்த பட்டதா இருந்தா நெரடிய மதத்தை குறிப்பிட மறக்க மாட்டிஙக ஆனா இன்ஜ ஏன் வெரும் ஆனாதிக்க வக்கிரம்?நல்லா இச்லாமிய வக்கிரம்நு போட வென்டியதுதன?

  • தம்பிறி அனானி கட்டுரைய முழுசா படிமா.. தலைப்ப படிச்சிட்டு கமென்ட் போட்டு எங்க உயிர வாங்காத

   • சீனு,
    கடையநல்லூர்ல இஸ்லாமிய மதவெறின்னு வினவு தலைப்பு வச்சதுனால மனசொடிஞ்சு நீங்க தற்கொலை பண்ணிகிட்டிங்களோன்னு நினைச்சேன்… நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல 😉

 3. Idhu vinavu vera oru katturaikku kodutha thalaippu:

  “09 March 2012
  காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!”

  Idhil engirundhu edharku mudichu podugiraar.

  இந்தியாவில் காதலர் தினத்தன்று இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா கும்பல் பொது இடங்களுக்கு சென்று காதலர்களை வேட்டை நாய்களாக துரத்துவதின் பாகிஸ்தானிய கிளைதான் மாயாகான். அதெப்படி, மதவாதிகள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?

 4. வழக்கம் போல இஸ்லாத்தை வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்….அந்த பாசித் இஸ்லாமிய முறை தவறி செய்வதற்கு அவனையும்..அவன் சார்ந்த கூட்டத்தையும் எழுதிக் கொள்ளலாம்.இங்கே பாசித் செய்யும் அயோக்கிதனத்தனத்த்ற்கு இஸ்லாத்தின் மீது சேறு இறைக்க பார்க்கிறீர்கள்.

  • //வழக்கம் போல இஸ்லாத்தை வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்….அந்த பாசித் இஸ்லாமிய முறை தவறி செய்வதற்கு அவனையும்..அவன் சார்ந்த கூட்டத்தையும் எழுதிக் கொள்ளலாம்.இங்கே பாசித் செய்யும் அயோக்கிதனத்தனத்த்ற்கு இஸ்லாத்தின் மீது சேறு இறைக்க பார்க்கிறீர்கள்.

   //

   1. தவ்த் ஜமாத் தான் தான் ஒரே உண்மையான இஸ்லாமிய அமைப்பு என்று கூறிக்கொள்கிறது. கொஞ்சம் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகளை கேட்கிறீர்களா?

   2. இசுலாம் மதம் இதற்கு மேலும் எப்படி பெண்ணுரிமை கொடுக்கிறது என்பதை சற்றே விளக்கினால் தெரிந்துக்கொள்கிறோம்…

   • க்ளிங்//. இசுலாம் மதம் இதற்கு மேலும் எப்படி பெண்ணுரிமை கொடுக்கிறது என்பதை சற்றே விளக்கினால் தெரிந்துக்கொள்கிறோம்…///

    உங்கள் வீட்டு பெண்களுக்கு என்ன உரிமைகள் கொடுத்துள்ளீர்களோ, உங்கள் கம்யுனிசம் என்ன உரிமைகள் கொடுத்துள்ளதோ அதை விளக்குங்கள்

 5. //பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும்.//

  மிக சரியான உண்மை.

 6. ஒரு மனிதன் செய்யும் தவறை எடுத்து கொண்டு இஸ்லாத்தின் மீது பாய்வது

  காழ்புணர்ச்சியின் உச்சகட்டம் தான் வினவு ஒரு வீண் தளத் தான்…

  • எப்புடியெல்லாம் தலாக் சொல்லலாம்னு குரானும் ஹதீதும் சொல்லுதுன்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கண்ணே.

   • sujith kaan ,குர்ஆனை படியுங்கள் .நபிவழி செய்திகளை படியுங்கள் தெளிவாக விளக்கம் உள்ளது

  • மேலும் இஸ்லாம் பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது என்பதற்கு மூச்சு விடவில்லை. இப்படி தனி மனிதன் ஒருவன் அவனை ஆதரிக்கும் தவ்த் ஜமத்தை எதிர்க்க தைரியமில்லாமல், வினவு தளத்தை பற்றி பேச வந்துவிட்டார்.

  • ஒரு அர்ச்சகர், அல்லது ஒரு ஜயேந்திரர் செயலை வைத்து ஒட்டு மொத்த பார்ப்பனர்களையும் வினவு எழுதுவது சரியா பாய்..

 7. ஒரு பெண்ணும் இதையே பதிவு தபாலில் விவாஹா ரத்து செய்ய கூடாது என்னும் போதுதான் அங்கே பெண் உரிமை மறுக்க படுகிறது.
  இரண்டு பேரில் யாரவது ஒருவருக்கு சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலும் குடும்பம் சிதைந்துவிட்டது என்று அர்த்தம்.
  அதை பெரியவர்களால் சேர்ந்து ஒட்ட வைத்து கொடுமை படுத்துவதை விட இது தேவலாம்.

  இப்போது பெண்ணை பெற்றவர்கள் 498a கேசை போட்டு பணம் பன்னுகிராகள். என்னுடைய நண்பன் ஐந்து வருடமாக நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறான்.ஆக இஸ்லாம் ஆணுரிமை கொடுத்திருகிறது என்று பாராட்டுகிறேன்

 8. If you are not happy with this article, please do not shout. Instead, please try to think twice and answer the questions raised here. Nowadays it very common to see comments which are deviating from the main theme or beating around the bush.

 9. இது ஒரு விதிவிலக்கான நிகழ்வு. இப்படி ஒவ்வொரு இடத்திலும் நடக்க ஆரம்பிக்க கூடாது என்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆக கூடாதென மற்ற பெண்களுக்கு தரப்படும் எச்சரிக்கை இதற்கு காரணம் வினவு.எல்லோரும் கவனிக்கும் படி இதை பெரிதாக்கி மத சுதந்திரத்தில் வினவு தலையிடுவது சரியல்ல.தவறு செய்யும் ஒரு ஆணோ பெண்ணோ தண்டிக்கப்பட்டால் ஆணுரிமை பெண்ணுரிமை மதம் எல்லாவற்றையும் இழுக்க கூடாது.

 10. தவ்ஹித் ஜமாஅத் நேர்மையாகவே செயல்படும் .முத்தலாக் முறை நடைமுறையில் இருப்பதை கண்டித்து அவ்வாறு ஒரே சமயத்தில் முத்தலாக் கூடாது என்று குர்ஆன் வசனங்களை ஆதாரம் காட்டி எடுத்துரைத்ததும் தவ்ஹித் ஜமாத் தான்.பாசித் கடிதம் மூலம் முத்தலாக் சொல்லியிருந்தால் அதை தவ்ஹித் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளாது.அவரை தவ்ஹித் ஜமாத்திலிருந்து நீக்கிவிட்ட பிறகு அவரையும் தவ்ஹித் ஜமாத்தையும் இணைத்து எழுதுவது இரண்டாம் தர செயல் அந்த ஊர் ஜமாத்த் அதை ஏற்றுக் கொள்ளவில்லை .இருப்பினும் தோழர்களின் தொடர்பால் போலிஸ் நடவடிக்கைக்கு பயந்து அவ்வாறு செய்திருக்கக் கூடும் .அதே சமயத்தில் தோழர்கள் பின்னால் அலைவதை தவிர்த்து விட்டு ஜமாஅத் மூலம் சரியான் நடவடிக்கை எடுப்பதுதான் அப்பெண்ணுக்கு உரிய செயலாக இருக்கும் .தோழர்களும் அப்பெண்ணுக்கு ஜமாத் மூலம் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்குவதுதான் நாகரீகம். பெண்ணுரிமை என்ற பெயரில் அந்த பெண்ணின் வாழ்க்கையில் தோழர்கள் விளையாடுவது நல்ல பண்புகள் அல்ல.

  • ஆம்…தோழர்களுக்கு இவ்வாறு எழுதுவதில் என்ன அற்புத சுகம் கிடைக்கிறது என்று புரியவில்லை…

 11. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டம் வேண்டும். பொதுவான கிரிமினல் சட்டம் உள்ளது. யாரும் ஆட்சேபனை செய்வதில்லை. அதாவது இஸ்லாமிய ஷாரியத் அடிப்படையிலான கிரிமினல் சட்டம் (சவுதி போன்ற நாடுகளில் உள்ளதை போல்) இங்கும் வேண்டும் என்று யாரும் கோருவதில்லை. ஆனால் சிவில் சட்டத்தில் மட்டும், பொது சிவில் சிட்டம் கூடாது என்று பல குழுவினரும் (இஸ்லாம், கிருஸ்துவ மற்றும் முன்பு இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள்) கோருகின்ற்ன ! வினோதாமான முரண்பாடு.

  அரேபிய பாலைவன பகுதியில் கடுமையான அனல் காற்றும், மணல் காற்றும் வீசும். இரவில் கடுங்குளிர். இதற்கேற்ப்பவே அங்கு உடைகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் ஏறக்குறைய ஒரே போல் உடை. மணல் சூறாவளிகளை தாங்கும், இரவின் குளிரை தாங்கும் உடை. ஆனால் இந்தியா வெப்பத்திற்க்கு, முக்கியமாக humidity அதிகம் உள்ள, கடுமையான வேர்வையை உருவாக்கும் நம் வெப்பத்திற்க்கு இந்த பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் சரிபடாது. கடுமையான கோடை வெய்யிலில், முழுமையான கருப்பு துணியால் ஆன பர்த்தாவில் செல்லும் இஸ்லாமிய பெண்களை பார்த்தால் பரிதாபம் தான் தோன்றும். அவர்கள் ’விரும்பியே’ அணிகிறார்கள், யாரின் ‘கட்டாயத்திலும்’ அப்படி அணிவதில்லை என்றும் அன்பர்கள் ‘விளக்கம்’ சொல்வார்கள். Socio-economic conditioning என்று ஒன்று உண்டு.

  கருப்பு நிறும் தான் வெப்பத்தை மிக மிக அதிகம் ஈர்க்கும். எப்படி தான் இந்த கோடை வெய்யிலில் அதை முழுமையாக அணிந்து, வெயிலில் செல்கிறார்களோ. லூஸான, வெளிர் நிற பருத்தியிலான சட்டைகளே எமக்கு தாஙக்முடியவில்லை. கொடுமையிலும் கொடுமை. இஸ்லாமிய நண்பர்கள் brain washed செய்யப்பட்டவர்கள் போல் பேசுவதால், அவர்களிடம் rational argument இங்கு சாத்தியமில்லை.

  படித்த, அதிக வருமானம் உடைய, வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது அபூர்வம். ஏழை மற்றும் நடுத்தர வர்க பெண்கள் தான் பாவம்.

  • அதியமான் ///இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டம் வேண்டும். பொதுவான கிரிமினல் சட்டம் உள்ளது. யாரும் ஆட்சேபனை செய்வதில்லை. அதாவது இஸ்லாமிய ஷாரியத் அடிப்படையிலான கிரிமினல் சட்டம் (சவுதி போன்ற நாடுகளில் உள்ளதை போல்) இங்கும் வேண்டும் என்று யாரும் கோருவதில்லை. ஆனால் சிவில் சட்டத்தில் மட்டும், பொது சிவில் சிட்டம் கூடாது என்று பல குழுவினரும் (இஸ்லாம், கிருஸ்துவ மற்றும் முன்பு இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள்) கோருகின்ற்ன ! வினோதாமான முரண்பாடு.////

   முரண்பாடு அல்ல .உடன்பாடு தான் .இஸ்லாமிய சரியத் அடிபடையிலான சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் ஆகியவற்றை பொது சட்டங்கள் ஆக கொண்டுவருவதில் முஸ்லிம்களுக்கு உடன்பாடுதான். சிவில் சட்டம் மட்டும் இஸ்லாத்தின் அடிப்படையில் கேட்கும் முஸ்லிம்கள் கிரிமினல் சட்டத்தை ஏன் கேட்கவில்லை? நாங்கள் கேட்கிறோம் ,அதை செயல்படுத்த முஸ்லிம் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் நியமியுங்கள்..அவர்கள் அரசு அங்கீகாரத்துடன் நடைபெறும் மதரசாவில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சும்மா கிரிமினல் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் கொண்டு வந்தால் மோடிகளுக்கும் கலவரம் இல்லாமல் முஸ்லிம்களை கைமா பண்ணிடலாம்.போலிஸ் அரிப்பில் முஸ்லிம்களின் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்றுவிடும்.

   முஸ்லிம்களின் ஷரியா சிவில் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ,மற்ற சிவில் சட்டங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் என்பதே உண்மை. நீங்கள் மறுத்தால் அதற்குரிய புள்ளிவிவரங்களை தாருங்கள்.

   ///அரேபிய பாலைவன பகுதியில் கடுமையான அனல் காற்றும், மணல் காற்றும் வீசும். இரவில் கடுங்குளிர். இதற்கேற்ப்பவே அங்கு உடைகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் ஏறக்குறைய ஒரே போல் உடை. மணல் சூறாவளிகளை தாங்கும், இரவின் குளிரை தாங்கும் உடை. ஆனால் இந்தியா வெப்பத்திற்க்கு, முக்கியமாக humidity அதிகம் உள்ள, கடுமையான வேர்வையை உருவாக்கும் நம் வெப்பத்திற்க்கு இந்த பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் சரிபடாது. கடுமையான கோடை வெய்யிலில், முழுமையான கருப்பு துணியால் ஆன பர்த்தாவில் செல்லும் இஸ்லாமிய பெண்களை பார்த்தால் பரிதாபம் தான் தோன்றும். அவர்கள் ’விரும்பியே’ அணிகிறார்கள், யாரின் ‘கட்டாயத்திலும்’ அப்படி அணிவதில்லை என்றும் அன்பர்கள் ‘விளக்கம்’ சொல்வார்கள். Socio-economic conditioning என்று ஒன்று உண்டு.///

   மருத்துவ பணியாற்றும் நர்சுகள் தலை முதல் கால்கள் வரை இறுக்கமான ஆடைகள் அணிகிறார்களே அவர்களுக்கு கடுமையான கோடை வெயிலினால் அவதிபடமாட்டர்களா?அவர்களுக்காக அதியமான் கவலை பட்டதுண்டா?அரபு நாட்டில் கடும் சூறாவளியை,குளிரை தாங்கும் வண்ணம் இருபாலருக்கும் அது போன்ற ஆடை சரி என்கிறீர்கள்.ஆனால் முஸ்லிம் ஆண்கள் அது போன்ற உடைகளை அணிவதில்லை.பெண்கள் மட்டுமே அது போன்று அணிகிறார்கள்.அதனால் நீங்கள் சொல்லும் காரணம் சரியன்று.பெண்களை இஸ்லாம் அந்த காரணத்திர்க்காக பர்தா அணிய சொல்லவில்லை .தனது இருகைகளையும் முகத்தையும் மறைக்கும் வணணம் ஆடை அணிய சொல்லுகிறது இஸ்லாம். அவ்வாறு மறைக்கும் வணணம் சுடிதார் ,கமீஸ் ,பேன்ட் ,சர்ட் ஆகியவற்றை இறுக்கமாக அல்லாமல் ,பெண்களின் கவர்ச்சிகளை வெளிகாட்டவண்ணம் ,அவளை மனுசியாக காட்டும் வண்ணமாக இஸ்லாம் உடை அணிய சொல்லுகிறது.மேலும் பர்தா அணியும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணிவதில்லை.

   ///கருப்பு நிறும் தான் வெப்பத்தை மிக மிக அதிகம் ஈர்க்கும். எப்படி தான் இந்த கோடை வெய்யிலில் அதை முழுமையாக அணிந்து, வெயிலில் செல்கிறார்களோ. லூஸான, வெளிர் நிற பருத்தியிலான சட்டைகளே எமக்கு தாஙக்முடியவில்லை. கொடுமையிலும் கொடுமை. இஸ்லாமிய நண்பர்கள் brain washed செய்யப்பட்டவர்கள் போல் பேசுவதால், அவர்களிடம் rational argument இங்கு சாத்தியமில்லை./////

   உங்களால லூசான வெளிர் நிற பருத்தி சட்டைகளை தாங்கமுடியவில்லை என்றாலும் எத்தனையோ ஆண்கள் கோடையிலும் இறுக்கமான ஜீன்ஸ் அணிகிறார்கள்.மருத்துவ பிரதிநிதிகள் ,இந்த கோடையிலும் கழுத்தை நெருக்கி டை கட்டி முழுக்கை சட்டை ,பேன்ட் ,சூ சாக்ஸ் அணிகிரரகளே அவர்களுக்கெல்லாம் தாங்கள் கவலை பட்டதுண்டா? இதையெல்லாம் சிந்திக்காமல் பர்தாவுக்கு எதிராக நீங்கள் மூளை சலவை செய்யப்பட்டது போல் பேசவில்லையா? உங்களது வாதங்களில் நியாயமில்லை என்பதால் முன் எச்சரிக்கையாக rational argument இங்கு சாத்தியமில்லை என்று கூற வருகிறீர்களா?

   ///படித்த, அதிக வருமானம் உடைய, வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது அபூர்வம். ஏழை மற்றும் நடுத்தர வர்க பெண்கள் தான் பாவம்.///

   படித்த அதிக வருமானம் உடைய பெண்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் பர்தா அணிவது அபூர்வமாக் இருக்கலாம்./ஆனால் செல்வம் படைத்த பெண்கள் வேலைக்கு செல்லாத பெண்கள் பர்தா அணிந்து கொள்வது அதிகம்.

   • விண்வெளிக்கு போகிறவர்கள், இதை விட இறுக்கமா அணிகிறார்கள். அதையும் தெரிவித்திருக்கலாம்.

    • சொதப்ப வேண்டாம் .மண்ணுலகத்தில் எதை அதியமான் சொல்லியுள்ளாரோ,அதற்கு மண்ணுலகிலே ஆதாரம் சொல்லியுள்ளேன் .அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

   • எனக்கு தெரிஞ்சு இருபத்தி நாலு மணி நேரமும், தங்கள் பணி நேரம் போகவும் – எந்த நர்ஸும், சீருடை அணிந்து கொண்டே இருப்பதில்லை.

    • இஸ்லாமிய பெண்கள் மட்டும் ஏன் 24 மணி நேரமும் பர்தா அணிகிறார்கள்?

    • நிஜா, முஸ்லிம் பெண்கள் வெளியில் செல்லுகையில் மட்டுமே பர்தா அணிவார்கள் .வீட்டில் அவர்கள் நைட்டி அணிவதையோ ,அல்லது திருமணம் செய்ய தடை உள்ள ஆண்கள் மத்தியில் அதைவிட அவர்கள் சவுகரியமாக ஆடை அணிந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

   • There is a huge difference between a religious choice and a cultural choice.The Pant shirt also is a christian invention and in hot weather it is better to wear dhotis but we cannot.But it is possible tomorrow that we can go to work in dhotis(dreaming!!!) but these religious edicts are irreversible but nonetheless,ideally there are no issues if a bunch of people want to wear a certain type of clothes but the bigger issue is not these things,it is what they encompass to be.

  • .அதியமான் ///கருப்பு நிறும் தான் வெப்பத்தை மிக மிக அதிகம் ஈர்க்கும். எப்படி தான் இந்த கோடை வெய்யிலில் அதை முழுமையாக அணிந்து, வெயிலில் செல்கிறார்களோ. ///
   அதியமான் சார்,கருப்பு நிறத்தில் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை.எந்த நிறத்திலும் அணியலாம்.பெண்கள் அதிகமாக் அந்த நிறத்தை தேர்ந்தெடுத்ததுக்கு என்ன காரணம் அறியேன் .

   • இஸ்லாமிய ஆண்கள்தான் காரணம். பெண்களை தீய சக்தியாகக் காட்டுவதற்காக கருப்பு உடையை அணிவிக்கிறார்கள்.

  • I believe Athiyaman does not know anything but Islamic bashing. veil is considered a socio-economic status and the purdah was introduced to the Mughals only through the practice adopted by the Rajputs when the Mughals invaded them. It was after this, purdah came into existence and not as you are trying to portray. More research has been done on the concept of “veil” and all yours are just empty rhetoric and is a result of the hindutva influence on your mind and body. My key question, why do you people bother about what others dress? Whether they are fully covered or half covered, what’s your problem? It is their personal issue and is certainly not anyone’s public domain. You do not have any right to comment on the dress culture of others even if it hurts you. If it hurts you, then it is you who should consult a psychiatrist. Even if they lie, none of us have any right to poke our nose into theirs. Moreover, why don’t you apply the same logic to other people who are fully covered. It is a sheer waste of time in discussing with you about this issue.

   • are u sure that the mughals got it from the rajputs and not the other way around?

    I dont see the rajputs influencing culture as far as Arabia,infact the Arabian peninsula didn’t learn anything from the Rajputs of all people,who were their arch enemies.

 12. விவாகரத்து (அதாவது தாலக் முறை), சொத்துரிமை, மறுமணம், போன்ற சிவில் விசியங்களில் மட்டும் இஸ்லாமிய மத சட்டம் தான் வேண்டும் என்பவர்கள் கொலை, கொள்ளை, போர்ஜரி போன்ற கிரிமினல் குற்றங்களுக்கு, இந்திய கிரிமினல் சட்டத்தை ஏற்ப்பதில் எந்த ஆட்சேபனையும் செய்வதில்லை. உதாரணமாக ஒரு கொலை மற்றும் கொள்ள வழக்கில், குற்றாவாளி அல்லது கொலைசெய்யப்பட்டவர் முஸ்லிம் என்று வைத்துகொள்வோம். அல்லது இரு தரப்பினரும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். சவுதி அரேபியாவில் உள்ளது போல் ‘நீதி விசாரணை’ நடத்தி, கல்லால் அடித்து கொலை அல்லது கழுத்தை வெட்டி மரண தண்டனை, சவுக்கடி, கையை வெட்டுதல் போன்ற ‘தண்டனைகளை’ (அப்பீல், கருணை மனு என்ற பேச்சே இல்லாமல்) ஏற்பார்களா என்ன ? அதென்ன சிவில் விசியங்களில் மட்டும் Islamic personal law ? ஆணாதிக்கவாதிகள் தான் இப்படி பேசுவார்கள். மனித உரிமைகளை மதிப்பவர்கள், ஆண் பெண் (மற்றும் திருநங்கைகள்) அனைவரும் சமம் என்று கருதும் மனித நேயர்கள் என்றும் பொது சிவில் சட்டத்தையே முன்மொழிவார்கள்.

  40கள்வரை உயர் சாதி இந்துக்களிம் இப்படி தான் வாதாடினார்கள். குழந்தை திருமண தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள். Civil marriage actஅயும் கடுமையாக எதிர்த்தார்கள். மதவாதிகள் எல்லோரும் ஒரே போல் தான்.

  • அதியமான் ///மனித உரிமைகளை மதிப்பவர்கள், ஆண் பெண் (மற்றும் திருநங்கைகள்) அனைவரும் சமம் என்று கருதும் மனித நேயர்கள் என்றும் பொது சிவில் சட்டத்தையே முன்மொழிவார்கள்.///

   பொது சிவில் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளதா? இஸ்லாத்திற்கு எதிராக் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்லுகிறீர்களா?அல்லது புள்ளிவிவரங்கள் அடைப்படையிலா?

  • You have said one of the best comments .. I really appreciate your view which is perfect. even though i dis agree with you in lot of issues… i have taken by surprise for this really in depth correct view of yours. congrats.

 13. முஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்யும் வேளைகளில் சரியத் சட்டத்தை கடைபிடிப்பதில்லை.பொதுவில் இந்தியாவில் உள்ளவர்கள் திருமணம் செய்வதை போன்றே செய்கிறார்கள்.வரதட்சணை முதல் அனைத்து சடங்குகளும் ஹிந்துக்களை போலவே செய்கிறார்கள் நிகழ்ச்சிக்கு பெயரை மற்றும் அரபுவில் உர்துவில் அல்லது தனி தமிழில் வைத்துக் கொள்கிறார்கள். பெண்ணை பெற்றவனுக்கு செலவே வரக் கூடாத திருமணத்தில் பெண்ணை பெற்றவனை கசக்கி பிழிந்து சக்கையாக்கி விடுகிறர்கள்.இப்படி திருமணம் செய்பவர்களுக்கு சரியத் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது .
  சரியத் சட்டப்படி திருமணம் செய்பவர்கள் பெண்ணுக்கு அவர் கேட்கும் மகர்தொகை கொடுக்க வேண்டும் .அதற்கு வரம்பு இல்லை.திருமண செலவுகள் அனைத்தையும் ஆண்தான் செய்ய வேண்டும்.திருமண விருந்து என்னும் வலிமா வையும் ஆணே நடத்த வேண்டும் .ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சரியத்துக்கு மாற்றமாக ,தமிழக வழக்கப்படி ,பெண் வீட்டு செலவிலே மாப்பிள்ளை ஊர்வலம் முதல் ஆண் பெண்ணுக்கு மகர் கொடுப்பதற்கு பதிலாக அவளிடம் வரதட்சணையாக தகுதிக்கு தகுந்தவாறு பெற்றுக் கொள்கிறான்.சரியத் சட்டத்தை ஏமாற்ற ஆயிரம் ரூபாய் மகர் கொடுத்ததாக திருமண பதிவு ஏட்டில் பதிவு செய்து விடுகிறான்.தங்க நகைகளை பவுன் வசதிக்கு ஏற்றவாறு கட்ட்யாபடுத்துகிரர்கள் .ஜமத்தாரும் அவர்களுடன் ஒத்துழைக்கிறார்கள்.மேலும் திருமண விருந்தை பெண் வீட்டாரே செய்கிறார்கள் .மறுநாள் வலிமா என்ற பெயரில் மாப்பிளை விருந்து வைக்கப்படுகிறது.திருமண அன்று பெண் வீட்டார் மூன்று லட்ச ரூபாய் செலவில் விருந்து வைத்தால் ,மாப்பிள்ளை வீட்டாரோ ஐம்பதினாயிரம் செலவில் விருந்து வைத்து முடித்துவிடுவார்கள்.இப்படி சரியதுக்கு மாற்றமாக செயல்படும் ஆண் திருமண முறிவில் சரியத்தை தேடி அலைகிறான் .இது கடும் கண்டனத்துக்கு உரியது.தவ்ஹித் ஜமாஅத் இந்த பழக்கத்தை ஒழிக்க பாடுபடுகிறது . பெண் வீட்டு செலவில் நடைபெறும் திருமணம் ,நெருங்கிய உறவினர் திருமணமாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தந்து அமைப்பினருக்கு நெறிமுறையாக அமுல்படுத்தி வருகிறது. இன்று எங்களது கிராமத்தில் ,இறை அருளால் ,தவ்ஹித் ஜமாத்தின் தாக்கத்தினால் இன்று வரதட்சணை கேட்பவர்களுக்கு பெண் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

 14. இசுலாமைப்பற்றி விமர்சனம் செய்தால் நூற்றுக்கண்க்கான பின்னூட்டம் போடுரீங்க அதில் ஒன்றுகூட அறிவியல் பூர்வமாக இல்லையே?

 15. பெண்களுக்கு என்று முதன் முதலில் சொத்துhpமை கொடுத்து சட்டம் உள்ளது இஸ்லாமில் மட்டும் தான். ஏனென்றால் முஹம்மதிய சட்டமுறைகள் அல்லாஹ்வினால் வஹீ என்று சொல்லப்படும்முறை மூலம் நபிபள் நாசயகத்திற்கு தொpவிக்கப்பட்டு அது குh;ஆன் வடிவம் பெற்றது. இவ்வாறு நடந்தது 75 சதவீதம் எல்லாம் ரமலான் மாதத்தில் என்பதால் தான் இஸ்லாமியா;கள் ரமலான் மாதம் சிறப்பு மிக்க மாதமாக கருதப்பட்டு இம்மாதத்தில் இஹஸலாதியா;கள் நோன்பு நோற்று அதிகமாக இறைவழிபாட்டில் ஈடுபட்டு பின்பு ரம்ஸான் பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
  இக்குh; ஆனை முழுமையாக படிப்பவா;கள் இது ஒரு மதம் சாh;ந்த புத்தகம் அல்ல என்றும் இது முழுமையாக வாழ்க்கை நெறிமுறைகளை கூறும் கோட்பாடுகள் என்பதும் நன்கு விளங்கும்.
  இதே குh; ஆனில்தான் முஹம்மதியா;களின் திருமண முறைகள் பற்றியும் விவாகரத்து கூறும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
  முக்கியமாக ஓh; ஆணுக்கு பலதார மணத்தை பாராட்டியும் அதற்கு எல்லையாக நான்கு பெண்கள் வரை திருமணம் புhpந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பலதார மணங்களை ஓh; ஆண் எப்போது செய்ய வேண்டும் என்றும் இவ்வாறு செய்து கொள்ளும் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நபிகள் நாயகத்தின் பேரன்களாகிய ஹஸனாh; மற்றும் ஹுஸைனாh; அப்போது இருந்த முடியாட்சி நீங்கி குடியாட்சி அமைந்திட போh; புhpந்து உயிh; நீத்த கால கட்டங்களில் ஏற்பட்டிருந்த ஆண் பெண் விகிதாச்சாரத்தில் பெண்களின் எண்ணிக்கை மிகுந்தும் ஆண்களே இல்லை என்று கூறுமளவு ஆண்கள் அனைவரும் குடியாட்சிக்காக தங்கள் உயிரை மாய்த்திருந்தனா;. ஆகையால் பெண்கள் திருமணமாகாமலும் அநேகம்போ; விதவைகளாகவும் இருந்தனா;. ஆகையால் சமுதாயத்தில் பெண்கள் ஒழுக்கம் கெட்டு போகக்கூடிய சூழ்நிலையும் பெண்கள் முதிh; கன்னிகளாகவும் இளம் விதவைகளாகவும் இருந்தனா;. சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்தது. இவற்றையெல்லாம் மனதில் வைத்து விதவைகளுக்கு மறுமணம், தன்னிடம் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் நோ;மையாக நடக்க முடியவில்லை என்றாலோ அல்லது இருவருக்கும் இடையே முறையற்ற ஓh; உறவு ஏற்பட்டு விட்டாலோ அல்லது அக்கால கட்டத்தில் ஆண்களின் பற்றாக்குறை காரணமாக அபண்கள் முதிh; கன்னிகளாக இருக்கும் நிலையை மாற்ற என்று அபண்களின் சமூக அந்தஸ்து சமுதாயத்தில் எப்போதும் தாழ்ந்து போய்விடக்கூடாது என்று முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மனதில் வைத்து ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
  அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கும் சில அறிவுரைகள் கூறப்ப்ட்டுள்ளது. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஒரு ஆண் விரும்பினால் அது முதல் மனைவி சம்மதத்துடனோ அல்லது விவிhகரத்து செய்த பின்னோ தான் செய்ய வேண்டும், ஆணின் உணா;வுகளுக்கு மதிப்பு கொடுக்காத பெண்களை விவாகரத்து செய்ய குh; ஆன் வழி வகுக்கிறது. இஸ்லாமிய திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே. அதனால் அது மிக சுலபமாக ரத்து செய்யப்படுகிறது. திருமணம் செய்து கொண்ட மனைவிகளை சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விவாகரத்து செய்யும் உhpமை ஆணுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மனைவி விவாகரத்தை விரும்பும் பட்சத்தில் திருமணத்தின் போது நிச்சயிக்கப்பட்ட மஹா; தொகையை இழந்து விடவேண்டும் என்றும் கூறுகிறது. இதற்கு கணவனும் மனைவியும் சோ;ந்து விவாக முறிவு ஒப்பந்தம் என்று ஒன்று எழுதி அதை வைத்து திருமணத்தை ரத்து செய்து கொள்ளும் முறைக்கு குலா என்று பெயா;.

  இவ்வாறு கூறப்பட்டுள்ள திருமணத்தை பொறுத்த சட்டதிட்டங்கள் இக்கால கட்டத்திற்கு எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதை பாh;க்க வேண்டியது அவசியமாகிறது. அப்போது இருந்த கால கட்டத்திற்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளை இன்னும் வைத்துக் கொண்டு அதையே பின் பற்றுவேன் என்று கூறி பெண்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் இஸ்லாமிய ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களாலும் இதைப் பயன்படுத்தி பெண்களை போகப் பொருளாக நினைக்கும் காமக் கொடுரன்களும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி சமுதாயத்தில் தவறுக்கு மேல் தவறாக செய்து இஸிலாதின் பெயரை கெடுத்து வருகின்றனா;. முறையற்ற வகையில் கொடுக்கப்படும் தலாக்கினால் அவா;களை அடக்கம் செய்யும் இடத்தில் புல் பு+ண்டு கூட முளைக்காது என்று ஆண்டவன் கூறுகிறான். ஆண்வனை நேசிக்கும் யாரும் அம்மதத்தை முழுமையாக பின்பற்ற வேண்டுமே தவிர அதில் உள்ள கருத்துக்களை மேலோட்டமாக பாh;த்து தவலு செய்பவா;கள் தனக்கு நாதகமாக இருப்பதாக கூற முடியாது. இதில் அற்றொரு முக்கியமான செய்தி என்னவென்றால் இப்படி பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டே போகிறவா;கள் தான் தற்போது அதிகமாக உள்ளனா;. கேட்டால் தாங்கள் சிறந்த இசுலாமியவாதி என்று ஹதீசுகள் கூறிக்கொண்டு நபிகள் நாயகத்தை பின் பற்றி நடப்பதாக கூறிக்கொண்டு தங்களின் அட்டூழியங்களுக்கு மதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை அடிப்படைத் தன்மையை மாற்றி தங்களுக்கு சாதகமாக மட்டும் பேசிக்கொள்ளும் தண்டனைக்குள்ளாகிறவா;களாகிறாh;கள்.
  பிரச்சனைகளுடன் உள்ள பெண்கள் நடவடிக்கை எடுத்தால் உடனே தலாக் கூறிவிடும் ஆண்களின் மத்தியில் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. தந்தைக்கு முன் மகன் இறந்துவிட்டால் தந்தையின் சொத்தில் இறந்து போன மகனின் மனைவிக்கோ குழந்தைகளுக்கோ தந்தையின் சொத்தில் பங்கு கிடையாது மற்றும் மூன்றில் ஒரு பங்குசொத்துக்கு மட்டுமே அதுவும் உயில் இல்லையென்றால் சொத்துக்கு வாhpசுகளோ அவா;களின் சம்மதத்துடன்தான் உயில் எழுதப்படமுடியும் என்று முஸ்லிம் சட்டம் கூறுவதால் ஏற்படும் சாதகங்களும் பாதகங்களும் எண்ணற்றவை. எனவே இச்சட்ட சிக்கல்கள் நிச்சயமாக ருnகைழசஅ உiஎடை உழனந மூலம் தீh;வு காணப் படவேண்டிய பிரச்சனைகளாகும் இதில் இஸ்லாம் மதத்தை குறை கூற வேண்டிய அவசியமே கிடையாது. ஏன் எந்த முஸ்லிம் அல்லாத ஆணுமே பலதார மணம் புhpவதில்லையா? ஆல்லது பெண்களை ஏமாற்றுவது கிடையாதா? தவறு செய்பவா;கள் எல்லா இடத்திலும் உள்ளனா; என்பதை வழனவு புhpந்து கொள்ள வேண்டும் இதற்கு மதச்சாயம் பு+சுவது தவறாகும்.

 16. அதியமான்,

  RSS கும்பலின் ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே கலாச்சாரம் என்ற மதவெறி கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களா.பல்வேறு தேசிய இனங்கள்,பல்வேறு மொழி பேசும் மக்கள்,[கவனிக்கவும்.தேசிய ஆட்சி மொழியாக திணிக்கப்படும் இந்தியை தாய்மொழியாக கொண்டோர் இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரே] பரந்து விரிந்த வேறுபட்ட பல கலாசாரங்களை பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் ஒருமைபாட்டுக்கு உலை வைக்க இதை விட முட்டாள்தனமான ஒரு கொள்கை இருக்க முடியுமா.

  இசுலாமிய நாடாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள பாகிசுதானில் இந்து மக்களுக்கு தனியே உரிமையியல் சட்டம் இருப்பது உங்களுக்கு தெரியுமா.அதில் திருத்தம் செய்வது தேவைப்படும்போது இந்தியாவிலிருந்து இந்து மதத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்று உதவுவது உங்களுக்கு தெரியுமா.

  பார்க்க.http://pakistanhindupost.blogspot.in/2011/01/indian-lawyers-to-help-draft-pakistani.html

  மதசார்பு நாடான பாக்கில் இந்த அளவுக்கு சிறுபான்மையினர் மத உரிமையில் சனநாயகம் பேணப்படும் போது இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் போட்டுவிட்டு எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மதசார்பற்ற நாடு என பீற்றுவது.இப்போது இருப்பதே போலி மத சார்பின்மை.மதசார்பின்மை பேசிக் கொண்டே அப்பட்டமான இந்து மத சார்புடன்தான் இந்தியா இருக்கிறது.சான்று தேடி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.மத உணர்வுகளை தூண்டி,மக்களிடையே பகைமையை வளர்க்கும் அமைப்புகள் தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது என சொல்லும் அரசியல் சட்டம் அமுலில் உள்ள நாட்டில்தான் பா.ச.க. நடுவணிலும்,பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வர முடிகிறது.அது மட்டுமல்ல பவுத்த நாடுகளான தாய்லாந்திலும் இலங்கையிலும் மத சிறுபான்மையினருக்கு தனியே உரிமையியல் சட்டங்கள் உள்ளனவே.

  அண்மையில் நார்வே நாட்டில் கையால் சோறு ஊட்டிய குற்றத்துக்காக குழந்தையை பெற்றோருடமிருந்து பிரித்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும்போது என்ன வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
  ”எங்கள் கலாச்சாரப்படி எங்கள் குழந்தைகளை வளர்க்க எங்களுக்கு உரிமை உண்டு”.இதுதானே.ஆக நார்வேயில் சென்றேறிகள் கோரும் உரிமையை இந்த நாட்டின் ஆதிகுடிகளான முசுலிம்களுக்கும் கிருத்துவ சீக்கிய மக்களுக்கும் மறுப்பது என்ன வகை நீதி.

  முசுலிம் தனியார் சட்டம் நான்கு பொருட்களில் மட்டுமே செல்லுபடியாகும்.வாரிசுரிமை,திருமணம்.மணமுறிவு,வக்பு சட்டங்கள். இந்த நான்கும் முசுலிம் சமூகத்தினர் அவர்களுக்குள்ளாகவே நடத்திக் கொள்வன.அப்படி செய்து கொள்வதால் பிற பிரிவு மக்களுக்கோ,இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ ஏதேனும் குந்தகம் விளைந்து விடும் என்று சொல்லமுடியுமா.

  ஏனைய உரிமையியல் விவகாரங்கள் அனைத்தும் பொதுவான சட்டத்தின் கீழ்தான் வருகின்றன.எடுத்துக்காட்டாக,ஒரு முசுலிம் வாங்கிய கடன் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த வழக்கில் அந்த முசுலிம் தனது மத சட்டங்களின்படி வட்டி தர வேண்டியதில்லை என வாதிட முடியாது.இப்படியாக பிற பிரிவு மக்களுக்கு இடையூறு தராத வகையில் இசுலாமிய மக்கள் தனி சட்டம் கொண்டிருப்பதில் குறை கூற என்ன இருக்கிறது.

  • பாகிஸ்தானில் மதநிந்தனை சட்டத்தைப் பயன்படுத்தி அங்குள்ள இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும் இந்துக்களையும் கொடுமைப்படுத்துவது உங்களுக்குத் தெரியுமா?

   • \\பாகிஸ்தானில் மதநிந்தனை சட்டத்தைப் பயன்படுத்தி அங்குள்ள இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும் இந்துக்களையும் கொடுமைப்படுத்துவது உங்களுக்குத் தெரியுமா?//

    ஏற்கனவே இது பற்றி நடந்த விவாதத்திலிருந்து

    பாகிசுத்தானிய ஆளும் வர்க்கம் இசுலாத்தின் பெயரால் நடத்தும் மதவெறி செயல்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இந்திய முசுலிம்களுக்கு இல்லை.பாகிசுதானின் இசுலாமிய மதவெறியர்கள் 1986 ல் கொண்டுவந்த Blasphemy Act உண்மையில் இசுலாமிய நெறிகளுக்கே எதிரானது.
    பார்க்க.
    https://www.vinavu.com/2012/02/17/kadayanallur-islamists/#comment-57351

    சீனு மற்றும் அணில் எடுத்து வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு எழுத முனையாமல் பொம்மை படம் போடுவதும்,வேறு ஒரு திசையில் விவாதத்தை தள்ளுவதும் ஏனோ.

     • பொம்மை படம் போடுவது என்ன என்னதான் ஆகும் என சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.சொல்லப்படும் கருத்தை ஏற்க மறுத்து பழிப்பு காட்டுவது என்பதை தாண்டி அதுக்கு ஒரு பொருளும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

      என்ன கைய புடிச்சு இழுத்தியா என்று அபாரமாக வாதிடும் வடிவேலுவின் வாத திறமையை போன்றதுதான் எதுவுமே சொல்லாமல் பொம்மை படம் போடுவது.

       • எதுவுமே சொல்லாமல் வாதிடுவதுதான் அந்த வடிவேலு பாணி.இங்கு எதுவுமே சொல்லாமல் வாதிடுவது யார்.ஆகவே ”அந்த வடிவேலு” பட்டம் யாருக்கு உரியது.

    • //பாகிசுத்தானிய ஆளும் வர்க்கம் இசுலாத்தின் பெயரால் நடத்தும் மதவெறி செயல்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இந்திய முசுலிம்களுக்கு இல்லை.//
     நான் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தைப் பற்றி சொல்லவில்லை. பாகிஸ்தானிய மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் அல்லாதவர்களைத் துன்புறுத்துகிறார்கள். இஸ்லாம் நெறிகளுக்கு முரண்பாடுகளுக்கு எதிரானது என்பதெல்லாம் தப்பிப்பதற்காக சொல்லப்படும் வெற்று வார்த்தைகள்தான்.

     • மாற்று மதத்தவர்களை கொடுமைப்படுத்துவோர் மத வெறியர்கள் என்று நான் சொல்கிறேன்.நீங்களோ மட்டைக்கு இரண்டு கீத்தாக பிளந்து கட்டுவது போல் ஆளும் வர்க்கம்,மக்கள் என அந்த மத வெறியர்களை பிரித்துக் காட்ட முயல்கிறீர்கள்.ஆளும் வர்க்கங்களின் மதவெறி கள்ளப் பரப்புரைக்கு பலியாகும் மக்களில் ஒரு பிரிவினர் மதவெறியர்களாக மாறுவது உண்டு.ஆனால் ஒட்டு மொத்தமாக அனைவரையும் மத வெறியர்கள் என முத்திரை குத்த முடியாது.மத அவதூறு குற்றம் சாட்டப்பட்ட கிருத்துவ பெண்ணுக்கு ஆதரவாக நின்றதால் மத வெறியர்களால் கொல்லப்பட்ட பஞ்சாப் மாநில ஆளுநர் ஒரு முசுலிம் என்பதையும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்களில் முசுலிம்கள் பெருவாரியாக பங்கெடுப்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.

      இந்தியாவிலும் பாபர் மசூதியை இடிக்க ரத யாத்திரை கலவரம் நடத்தி முசுலிம்கள் மீது கொலைவெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட,குசராத் இனப்படுகொலை நடத்த மதவெறியர்கள் லட்சக்கணக்கில் மக்களை திரட்டவில்லையா.அதற்காக இந்து மக்கள் அனைவரும் மத வெறியர்கள் என்று சொல்ல முடியாது.

      \\இஸ்லாம் நெறிகளுக்கு முரண்பாடுகளுக்கு எதிரானது என்பதெல்லாம் தப்பிப்பதற்காக சொல்லப்படும் வெற்று வார்த்தைகள்தான்.//

      மத அவதூறுக்கு சாவுத்தண்டனை வழங்க இசுலாத்தில் இடமில்லை என்று நான் சொல்கிறேன். அது வெற்று சொல் என்றால் அதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்கவேண்டும். இல்லை என்பதற்கு ஆதாரம் தேவை இல்லை.இருக்கிறது என்று மெய்ப்பிக்கத்தான் ஆதாரம் தேவை.போகிற போக்கில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்வது என்ன வகை நேர்மை.

   • I guess most of the “Indians” – (Hindians/Hindus) are carried away by the Hindutva wave whose only agenda is Islamic bashing. At the drop of a hat, all these people start criticizing Islam and Indian Muslims as if they are more secular, neutral and everything is good in their aspects. India claims that it is a secular country, then why the hell should they complain about Krishna in a Russian court. After all it is only a myth. Can we call this act secular? How can and what moral right do they have in demanding equal rights for Hindus in an Islamic country or Christian country? Have the Hindu brethren protected their muslim counterparts in need of crisis – all the riots? Where were these self-proclaimed anils, Seenus, ramasamy’s et al…. when the modern Hitler Narendra Modi’s government was butchering Muslims and created a genocide of all sorts. Have in Independent India any person been convicted for their role in any communal riots? All the committee reports appointed by the Government of India after independence were chaired only by the Hindus. Even they had their own conscience to tell the truth and pointed only the administration and confirmed the role of Hindutva elements in all the riots. Saffronisation has crept into all elements of admimistration – police, army, IB, RAW, CBI, navy, and the list is endless. You people are taunting Indian Muslims and foisting them false cases, then why the bloody hell should you expect some gratitude from them towards you. There is no compassion among you guys and so is religious tolerance though Hindu religion preaches tolerance towards other cultures. First try to be a GOOD HINDU then point your finger against others. While you point fingers at others, only one finger is pointing towards your opponent but the remaining four fingers points towards you and YOU ONLY.

     • சுப்பிரமணி மறுபடியும் moron ன்னு திட்ட கிளம்பிட்டீரே.இதுக்கு முன்னால இப்படி நீர் ஏகத்துக்கு திட்டுனத கடுமையா கண்டிச்ச பிறகு கொஞ்ச நாள் ஒழுங்கா பேசுனீர்.இப்ப மறுபடியும் வேதாளம் முருங்க மரம் எறிக்கிச்சே.

      .’ஏய்யா நீர் திட்டுற மனுஷன் இப்பத்தா வினவு பக்கம் வந்துருக்காரு.அவரு சொன்ன கருத்துக்கு வாதத்துக்கு பதில் சொல்ல முடிஞ்சா சொல்லணும். இல்லன்னா வாய மூடிட்டு இருக்கணும்.ஆனா திட்டி தொரத்த பாக்குறியே நீரெல்லாம் என்ன படித்து என்ன பிரயோஜனம்.உண்மையில் நாகரீகமற்ற moron நீர்தானய்யா.

  • திப்பு,

   நீங்க தீவிர மார்க்சியவாதி. எதிர்காலத்தில், இந்தியாவில் வினவு தலைமையில் செம்புரட்சி உருவாகி, பாட்டாளி வர்க சர்வாதிகாரம் உருவானால், பிறகு இங்கு பொது சிவில் சட்டம் கண்டிப்பாக உடனடியாக கொண்டுவருவார்கள். இந்த தலாக் பிஸினஸ் எல்லாம் ஒழித்துக்கட்டப்படும். சந்தேகம் இருந்தால் வினவுவிடம் கேளுங்க. நீங்க மார்சியவாதியா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது. உண்மையான மார்க்சியவாதி, மத அடிப்படையிலான சிவில் சட்டங்களை ஏற்க்கமாட்டார். பொது சிவில் சட்டத்தை தான் முன்மொழிவார்.

   விவாகரத்து, சொத்துரிமை, திருமணம் போன்ற விசியங்களில் பொது சிவில் சட்டம் தான் சரியாக, நியாயமாக, இருக்கும். இல்லாவிட்டால் இந்த பதிவின் மையவிசியம் போல் அநியாயம் தான் நிகழும். that doesn’t mean that people will be prevented from following their religious codes and rituals. மத சடங்குகள், வழிப்பாடுகள், திருவிழாக்களை தடை செய்ய யாரும் சொல்லவில்லை. அந்த சுதந்திரங்களை நசுக்க கோரவில்லை. ஆனால் தலாக் போன்ற பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க அநியாயங்களை இன்றும் தொடர்வது நியாயமில்லை. 1500 வருடங்களுக்கு முன்பு இருந்த எல்லா முறைகளையும், சட்டங்களையும் அப்படியே இன்று இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை. (கிரிமினல் சட்டம் போல்). வட்டி வாங்காமல், கொடுக்காமல் இன்றைய நவின வங்கு முறை மற்றும் கடன்கள் சாத்தியமில்லை. இதில் எல்லாம் மாற்றத்தை ஏற்ப்பவர்கள், தலாக் போன்ற விசியங்களிலும் மாற்றங்களை ஏற்க்க முன்வருவதே சரியான நிலைபாடாக இருக்கும்.

   மேலும் பார்க்கவும் :

   http://athiyamaan.blogspot.in/2008/10/blog-post_08.html
   இஸ்லாமிய சமுதாயம் முன்னேற சில யோசனைகள்

   • \\செம்புரட்சி உருவாகி, பாட்டாளி வர்க சர்வாதிகாரம் உருவானால், பிறகு இங்கு பொது சிவில் சட்டம் கண்டிப்பாக உடனடியாக கொண்டுவருவார்கள். இந்த தலாக் பிஸினஸ் எல்லாம் ஒழித்துக்கட்டப்படும்.நீங்க மார்சியவாதியா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது. உண்மையான மார்க்சியவாதி, மத அடிப்படையிலான சிவில் சட்டங்களை ஏற்க்கமாட்டார். பொது சிவில் சட்டத்தை தான் முன்மொழிவார்.//

    அதியமான்,

    தனியார்மய,தாராளமாய,உலகமயமாக்கலை எதிர்ப்பவர்கள்,தமிழர் இன,மொழி உரிமைக்கு,இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக,இந்திய ஏகாதிபத்தியத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, உலக மேலாதிக்க ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரெல்லாம் பொதுவுடைமைவாதிகள் என நீங்கலாக கற்பனை செய்து கொள்வீர்கள் போலும்.அந்த வகையில் என்னையும் அப்படி நீங்கள் கருதியிருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.பொதுவுடைமையும்,புரட்சியையும் ஆதரித்து நான் எழுதியிருப்பதாக ஒற்றை பின்னூட்டத்தை கூட உங்களால் காட்ட முடியாது.

    இன்றைய இந்து மத சார்பு கொண்ட ஆளும் வர்க்கங்களின் இந்தியாவை விட பொதுவுடைமையாளர்கள் ஆளும் இந்தியா நிச்சயம் முசுலிம்களுக்கு வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.ஒரே ஒரு செய்தியை எண்ணிப் பார்த்தால் இதை உண்மை என விளங்கிக் கொள்ளலாம்.இன்றைய இந்தியாவில் முசுலிம்களின் உயிர் வாழும் உரிமைக்கே உத்தரவாதமில்லை என்ற நிலையை RSS என்ற பயங்கரவாத கும்பல் உருவாக்கியுள்ளது. ஒரு மதத்தை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்து விட்ட குற்றத்திற்காக கொல்லப்படும் அவல நிலையை நிச்சயம் பொதுவுடமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.உடனே சோவியத் ஒன்றிய.செஞ்சீன கொலைப்பட்டியல் என அள்ளிக் கொண்டு வராதீர்கள்.அது விரிவானதொரு விவாதப்பொருள்.அது பற்றி நீங்களும் தோழர்களும் ஏற்கனவே இங்கு விரிவாக விவாதித்துள்ளீர்கள். திறந்த மனதுடன் அதை படிப்பவர்கள் எது உண்மை என முடிவு செய்து கொள்ளலாம்.இன்றைய இந்திய ஆளும் வர்க்கம் பொது உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் நிச்சயம் அது பார்ப்பனிய இந்து மத கலாச்சாரத்தை அனைத்து பிரிவு மக்கள் மீதும் திணிப்பதாகவே இருக்கும்.அதற்கான அடிப்படையை இப்போதே பல மாநிலங்கள் இயற்றியிருக்கும் பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றில் காணலாம்.

    \\விவாகரத்து, சொத்துரிமை, திருமணம் போன்ற விசியங்களில் பொது சிவில் சட்டம் தான் சரியாக, நியாயமாக, இருக்கும். இல்லாவிட்டால் இந்த பதிவின் மையவிசியம் போல் அநியாயம் தான் நிகழும்.//

    பாசித் போன்ற மனிதப்பதர்களை நல்வழிப்படுத்த சட்டங்களே போதும் எனபது எதார்த்தத்தை புரியாத அறியாமை. மனித உருவில் நடமாடும் மிருகங்களுக்கு எரிவளி உருளை வெடிப்பு [gas cylinder blast] மருமகளை தீர்த்துக்கட்டி ஒரே நாளில் மணமுறிவு பெற்றுத்தரும் அயோக்கியத்தனத்தை யார் தடுப்பது.அப்படிப்பட்ட கைக்கூலி சாவு [dowry death] ஒன்று இசுலாமிய குடும்பங்களில் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை.

    \\ தலாக் போன்ற பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க அநியாயங்களை இன்றும் தொடர்வது நியாயமில்லை//

    தலாக் எனபது மணமுறிவை குறிக்கும் சொல்.அது மனித சமுதாயம் முழுவதும் நடப்பதுதான். பொதுப்புத்தியில் உறைந்திருப்பது போல் மணவிலக்கு விரும்பும் முசுலிம்கள் மிக எளிதாக மணவிலக்கு பெற்று விட சமுதாய பெரியோர்கள் அனுமதிப்பதில்லை.பாசித்தின் மணவிலக்கை கூட சமாஅத் ஏற்கவில்லை எனபது பதிவிலேயே உள்ளது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    பலதார மணம்,மண விலக்கு சட்டங்கள் அனைத்தும் இசுலாமியர்களை பொறுத்தவரை ஏட்டளவில்தான் உள்ளன.உங்களுக்கு அறிமுகம் உள்ள முசுலிம்களில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருக்கிறார்கள்,எத்தனை பேர் மணவிலக்கு கொடுத்துள்ளார்கள் என எண்ணிப்பாருங்கள்.அநேகமாக ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

    இசுலாமிய பெண்கள் குறித்த முந்தயதொரு பதிவில் இட்ட பின்னூட்டத்திலிருந்து பொருத்தம் கருதி சில வரிகள்.
    https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-39438
    இந்த பதிவையும் இதற்கான பின்னூட்டங்களையும் படிக்கும்போது இசுலாமியர்கள் பெண்களை கொடுமை செய்து வருவது போன்ற கற்பனையில் பலர் இருப்பதை உணர முடிகிறது.அவர்களின் பார்வைக்கு ஒரு சில சொற்கள்.

    இசுலாமியர்களும் மனிதர்கள்தான்.அவர்களும் உங்களை போலவே தாயின் மீது,தங்கையின் மீது,மகள் மீது, மனைவியின் மீது பாசம் கொண்டவர்களே.

    ”மனிதர்களில் சிறந்தவர் தன மனைவியிடம் நற்பெயர் பெற்றவரே” என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மதித்து நடப்பவர் எவரும் மனைவியை புண்படுத்தி இன்புறமாட்டார்.

    .

 17. முகமது நபி[அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்களது ஆட்சிக்கு பிறகு உமர் [இறைஅருள் கிடைக்கட்டும்]அவர்களது ஆட்சியில் பெண்கள் தங்களை திருமணம் செய்யும் ஆண்களிடம் அதிகமாக மகர்தொகை கேட்கிறார்கள்.ஆண்களால் கொடுக்க இயலவில்லை.இதனால் ஆண்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் .அவர்கள் ஜனாதிபதியான உமர்[இ.உ] அவர்களிடம் ,தங்களது நிலைமையை முறையிடுகின்றனர்.தங்களால் பெண்கள் கேட்கும் மகர் தொகை கொடுக்க இயலவில்லை.இதனால் பெண்களுக்கு மகர் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்க வேண்டும்.என்று கூறுகின்றனர்.ஜனாதிபதியும் அதை ஏற்று சட்டசபையாக செயல்பட்ட பள்ளிவாசலிலே மக்கள் கூடும் ஜும்மா நாளிலே நானூறு திர்ஹமுக்கு மேல் பெண்கள் இனி மகர் கேட்க கூடாது என்று அறிவிக்கிறார்கள் .அப்போது அந்த அவையில் இருந்த ஒரு பெண் ,ஆண்களே !நீங்கள் மஹராக “ஒரு பொருட்குவியலே கொடுத்திருந்த போதிலும் ,,,,,,, என்ற
  குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி,”ஜனாதிபதி அவர்களே !இறைவன் மஹராக ஒரு பொருட் குவியலே கொடுக்க சொல்லுகிறான் .ஆனால் நீங்களோ நானூறு திர்ஹமுக்கு மேல் வாங்கக் கூடாது என்று சட்டம் சொல்லுகிறீர்கள்.அல்லாஹ்வின் சட்டத்தை கேட்பதா?உங்களது சட்டத்தை கேட்பதா?”என்று கேட்கிறார். ஜனாதிபதி உமர்[இ.உ]அவர்கள் நியாயத்தை உணர்ந்து தனது சட்டத்தை திரும்ப பெறுகிறார்.
  இங்கே ஜனநாயகத்தை பாருங்கள் .இன்னும் எத்தனை மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் இப்படி ஒரு ஜனநாயகத்தை யாரால் காட்ட முடியும்?
  பெண் உரிமையை,கல்வி அறிவை பாருங்கள்.யாருக்கும் பயப்படாது இறைவன் அளித்த உரிமையை ஜனாதிபதி மறந்தாலும் அதை சுட்டிக்காட்டி தங்களது உரிமைகளை நிலை நாட்டும் முகமாக போர்குணம் வெளிபடுவதை பாருங்கள்

  • உங்கள் ஜனநாயக வெட்கை நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால்

   குரான்படி காலீஃபாக்கள் அல்லாவின் பிரதிநிதிகள் (காலீஃபாத்துல்லா), மக்களின் ஜனாதிபதியல்ல.

   காலீஃபா உமர் பின்வாங்கியது ’ஜனநாயத்தால்’ அல்ல, ’நபிகள் நாயகத்தின்’ குரான் வசனங்களை மீறுகிறோமோ என்ற அச்சத்தால்.

   ஜனநாயகம், ஜனாதிபதி என்று உங்கள் மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் கூறி ’அல்லாவின் அடிமைகளை’ அவனுக்கு ‘இணை’ வைக்கிறீர்கள் என்று உங்கள் மீது ஃபத்வா விடப்படலாம், கவனம்..!!!

 18. பெண்களை பொறுத்த வரை இஸ்லாம் ஒரு இரும்புக்கோட்டை.. அக்கோட்டைக்குள் கருப்பு அங்கிக்குள் அடைபட்டு வாழ்ந்து இறக்கும் உயிரினமே பெண்ணாகப்பட்ட நம்மை பெற்றெடுத்த தாய்க்குலம்… உலகம் முழுமையும் உள்ள மனித வள ஆர்வலர்கள் பெரும்பாலோனோர் இந்த கருப்பு கோட்டைக்குள் நுழைந்து பெண்ணுரிமை பேசுவது பயனற்றது என பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் தளர்ந்த நிலையில் தான் இன்று இருக்கின்றனர்…

  ஆனால் இன்றைக்கு இந்த கருப்பு கோட்டையின் இரும்பு கதவுகளை அசைத்து பார்க்க கூடிய ஒரு முயற்சியை தோழர்கள் செய்திருக்கின்றனர்.. இதுவும் வழக்காமான தோல்வியைத்தான் தரும் அச்சம் இருப்பினும், கோட்டையின் கீறல்களுக்கான அறிகுறி தெரிகிறது… மடை திறந்த வெள்ளம் போல கருப்பு கோட்டையின் மதில்கள் சுக்கு நூறாகட்டும்.. சம காலத்திய கம்யுனிச இழப்புகளை ஈடு செய்யும் சாதனையாக இது மலரட்டும்.. மதங்களை மறுக்கும் புரட்சிகர கம்யுனிசத்தின் மறுமலர்ச்சி மனமாச்ச்சயரிங்கள் மறந்து மதங்களை சுத்தகரிப்பதில் தொடங்கட்டும்… வாழ்த்துக்கள்… !

  • தோழர்களா …. அய்யய்யோ.. மாணிதன்.. முடியல..
   இஸ்லாமிய ஆடுகள் நனைகிறதே என்ற உங்களின் அங்கலாய்ப்பு ஏனோ ஓநாய்களை ஞாபகப்படுத்துகிறது.

   சரி.. குஜராத்தில் நம்மை பெற்றெடுத்த அதே தாய்க்குலம் வயிறு கிழிக்கப்பட்டு கொல்லப்படும்போது உங்களால் ரசிக்க முடிந்ததே.. அது எப்படி?
   மாதிரி ஆட்களெல்லாம்… ச்சே…

   • வினவுக்கும் ஆதரவு பின்னூட்ட அன்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
    உங்களால் பரிதாபமாகப் (ஓநாயின் பரிதாபம்) பார்க்கப்படும் அந்த பெண்கள்… எங்கள் சகோதரிகள்…
    அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதிலும் அவர்களின் நல் வாழ்விலும் எங்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. மேலும் வஞ்சகம் நிறைந்த ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. அதனை நாங்கள் நன்றாகவே அறிந்து இருக்கிறோம்.

    எங்கள் வீட்டுப் பெண்களின் பர்தாவை கழட்ற சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?.. இது போன்று உங்கள் வீடு பெண்களின் உரிமையில் நாங்கள் தலையிட முடியுமா? நிச்சயமாக அது எங்களுக்கு தேவை இல்லை. பர்தாவை உங்கள் வீட்டுப் பெண்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை. சுமத்த உரிமையும் இல்லை. அது போன்று அதை கழற்ற சொல்லும் உரிமை உங்களுக்கு நிச்சயமாக இல்லை.

    • \\இஸ்லாமிய ஆடுகள் நனைகிறதே என்ற உங்களின் அங்கலாய்ப்பு ஏனோ ஓநாய்களை ஞாபகப்படுத்துகிறது.\\
     ஓநாய்களின் மீதுள்ள கோபத்தினால் உங்கள் வீட்டு ஆடுகள் நனைவதை நீங்கள் கவனிக்க மறுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை…

     \\உங்களால் பரிதாபமாகப் (ஓநாயின் பரிதாபம்) பார்க்கப்படும் அந்த பெண்கள்… எங்கள் சகோதரிகள்…\\
     ஆனால் அவர்களில் நான்கைந்து பேரை நான் ஒருவனே திருமணம் செய்வேன், பிறகு முத்தலாக்கை ஒரு வரி பதிவு தபாலில் அனுப்புவேன் என்பது என்ன சார் வியாக்கியானம் ?

     \\அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதிலும் அவர்களின் நல் வாழ்விலும் எங்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. \\
     அவர்களின் உரிமை இன்னும் நிலை நாட்டப்படவில்லை, அவர்கள் நல்வாழ்வு வாழவில்லை என்ற வாக்கு மூலத்துக்கு நன்றி…

     \\வஞ்சகம் நிறைந்த ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. \\
     இஸ்லாமிய ஆண்கள் அனைவரும் ஓநாய்கள் என்கிறீர்களே ? அபத்தம்.. !
     எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்.. கற்காலத்தில் கூட பெண்கள் ஆண்களை விட அறிவும் புத்தி கூர்மையும், வீரமும் உடையவர்களாக இருந்திருக்கின்றனர்… நீங்கள் பாதுகாப்பதற்கு அவர்கள் என்ன கோழி, புறாவா ?

     \\பெண்களின் பர்தாவை கழட்ற சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது\\
     பெண்களின் மீது பர்தாவை சுமத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? இது சம்பந்தப்பட்ட பெண்களின் உரிமை சார்ந்த பிரச்னை, இதில் ஆண்கள் தலையிட எந்த அருகதையும் இல்லை…

     • மிக அதிகமான விளக்கம்.. ஆனால் பயன் அற்ற உளறல்கள்.
      நான் பச்சையாகவே சொல்லிவிடுகிறேன்… ஓநாய் என்று நான் குறிப்பிட்டது முஸ்லிம் ஆண்களை அல்ல… முஸ்லிம்களுக்கு
      எதிரான எந்த குற்றத்திற்கும் தண்டனை பெற தேவை இல்லாத இந்துத்துவ வெறியர்களை தான்.

      சம்மந்தப்பட்ட பெண்ணின் பிரச்னை என்று கூறி விட்டு சம்பந்தம் இல்லாத நீர் ஏன் நீலி கண்ணீர் வடிக்கிறீர்.

      குஜராத்தில் செய்த படுகொலைகளை தமிழ் நாட்டிலும் செய்து பார்க்க துடிக்கும் உனது ஆசை ஒருபோதும் நடக்காது.

      பக்கத்துக்கு வீட்டுகாரனின் பெண்ணை ரகசியமாய் ரசிக்க துடிக்கும் உன்னை போன்ற கயவர்கள் பெண்ணுரிமை பற்றி பேசுவது வியப்புதான்.

      • இஸ்லாமியப் பெண்களை துன்புறுத்தும் இஸ்லாமிய ஆண்களும் ஓநாய்கள்தான்.

      • \\பக்கத்துக்கு வீட்டுகாரனின் பெண்ணை ரகசியமாய் ரசிக்க துடிக்கும் உன்னை போன்ற கயவர்கள்\\

       பார்ரா… பர்தா தேவையா என்று கேட்டால், பெண்ணை ரசிக்க துடிக்கும் கயவன் என்று பழி சொல் கூறுவதை… உங்கள் கடைசி ஆயுதத்தையும் உபயோகித்து விட்டீர்கள்…தோல்வி பயம் தெரிகிறது… ஆனாலும் இரும்புக்கோட்டை இடிந்து சுக்கு நூராவதை தடுக்க முடியாது…

     • மனிதன் ////ஓநாய்களின் மீதுள்ள கோபத்தினால் உங்கள் வீட்டு ஆடுகள் நனைவதை நீங்கள் கவனிக்க மறுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை…///
      எங்கள் வீட்டு ஆடுகள் நனியக் கூடாது என்றுதான் பர்தா அணிந்திருக்கிறார்கள் நமது பல நகரங்களில் எத்தனையோ பெண்கள் தினசரி கற்பழிக்கப் படுகிரறாக்கள் .விவாக ரத்து செய்யப் படுகிறார்கள் .வாழ வெட்டியாக விரட்டப்படுகிரறாக்கள்.விபச்சார் விடுதிகளுக்கு அனுப்பப்படுகிரறாக்கள் அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
      அப்புறம் உங்களது கம்யுனிசத்தில் பெண்களுக்கு என்ன உரிமைகள் கொடுத்துள்ளீர்கள் ?நாங்கள் அந்த உரிமைகளை கொடுக்கவில்லை? இன்னும் பெண்களுக்கு உரிமைகள் வழங்க நீங்கள் யார்? அவர்களுக்கு இறைவன் கொடுத்த உரிமைகளை அவர்களாக எடுத்துக் கொள்வார்கள் .
      ///ஆனால் அவர்களில் நான்கைந்து பேரை நான் ஒருவனே திருமணம் செய்வேன், பிறகு முத்தலாக்கை ஒரு வரி பதிவு தபாலில் அனுப்புவேன் என்பது என்ன சார் வியாக்கியானம் ///
      உங்களால் முடிந்தது நான்கைந்து நபரை திருமணம் செய்த ஒரு நபரை காட்டுங்கள்
      ///இஸ்லாமிய ஆண்கள் அனைவரும் ஓநாய்கள் என்கிறீர்களே ? அபத்தம்.. !
      எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்.. கற்காலத்தில் கூட பெண்கள் ஆண்களை விட அறிவும் புத்தி கூர்மையும், வீரமும் உடையவர்களாக இருந்திருக்கின்றனர்… நீங்கள் பாதுகாப்பதற்கு அவர்கள் என்ன கோழி, புறாவா ?////
      நீங்கள் அவர்களின் உரிமைகளை பேசி பாதுகாப்பதாக கூறுவதற்கும் இது பொருந்தாதா?
      ////பெண்களின் மீது பர்தாவை சுமத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? இது சம்பந்தப்பட்ட பெண்களின் உரிமை சார்ந்த பிரச்னை, இதில் ஆண்கள் தலையிட எந்த அருகதையும் இல்லை////
      பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டுவதுதான் அவர்களது உரிமையா? ஏன் நீங்களும் உங்கள் பாதி வயிறு தெரியுமாறு ஆடை அணிவதுதானே .உங்கள் அலுவலகத்துக்கு சார்ட்சும் ஸ்லீவ்லெஸ் பனியனும் அணிந்து செல்வதுதானே .… அவர்கள் அரைகுறை ஆடை அணிவதுதான் பெண்கள் உரிமையா? ஆண்களைவிட பெண்களுக்கே மறைக்கப்பட்ட வேண்டிய அவயங்கள் உள்ளன. அவாறு இருக்க அவர்கள் அரைகுறை ஆடையுடனும் நீங்கள் முழுமையாக மறைத்தும் ஆடை அணிவது எங்ஙனம் சரி?

  • மனிதனின் சந்தர்ப்பவாத சாகசம்.

   இந்த பதிவு முசுலிம்களை விமர்சிப்பதால் மனிதனுக்கு பொதுவுடைமை இப்படி வெல்லமாக இனிக்கிறது.

   \\சம காலத்திய கம்யுனிச இழப்புகளை ஈடு செய்யும் சாதனையாக இது மலரட்டும்.. மதங்களை மறுக்கும் புரட்சிகர கம்யுனிசத்தின் மறுமலர்ச்சி மனமாச்ச்சயரிங்கள் மறந்து மதங்களை சுத்தகரிப்பதில் தொடங்கட்டும்… வாழ்த்துக்கள்… !//

   பிராமீன் பதிவு பார்ப்பனியத்தை விமரிசிக்கும்போது அதே பொதுவுடைமை இப்படி வேப்பங்காயாக கசக்கிறது.

   \\செத்துப்போன குழி தோண்டி புதைக்கப்பட்ட கம்யுனிச புரட்சி கருத்துக்களை அறவே விரும்பாத ஜனநாயக நாட்டின் மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முயன்று தோற்றுகொன்டிருக்கும் உங்களின் செயல், செல்லத்துரை மற்றும் இரமாமூர்த்தியின் செயலை விட மோசமானது…//.

 19. ##அவரை தவ்ஹித் ஜமாத்திலிருந்து நீக்கிவிட்ட பிறகு அவரையும் தவ்ஹித் ஜமாத்தையும் இணைத்து எழுதுவது இரண்டாம் தர செயல்## இபுராகிம் பின்னோட்டம் எண் 11.

  மறுபடியம் பாசித்தை அமைப்பிலிருந்து விலக்கிவிட்டதாக இபுராகிம் புளுகுகிறார். கட்டுரையை நன்றாக படிக்கவும். தவ்ஹீதின் வாழ்வுரிமை பிரச்சாசரத்திற்கு பாசித்தான் முக்கிய புள்ளியாம். வேடிக்கையைப்பார்த்தீர்களா !ஒரு பெண்ணின் வாழ்வுரிமையைப் பறித்தவன் வாழ்வுரிமை பிரச்சாரம் செய்யும் நேர்மையை.