செய்தி -80
முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. இந்த சுவரொட்டிகள் தமிழக தொழிலாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை பெற்றது. அந்த சுவரொட்டிகள் ஓசூர் பகுதியிலும் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
ஓசூரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை படம் எடுத்துக் கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அதிலிருந்த வாசகங்கங்களை எல்லாம் திரித்து பு.ஜ.தொ.மு வை பயங்கரவாத சங்கமாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை தொடர்ந்து பு.ஜ.தொ.மு வை தடை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் ஜெயலலிதாவிடம் அளித்த கோரிக்கையையும் வெளியிட்டிருந்தது. இந்தியாவிலேயே இந்த செய்தியை வெளியிட்ட ஒரே குப்பை இந்த டைம்ஸ் ஆப் இந்தியா மட்டும் தான்.
டைம்ஸ் ஆப் இந்தியா எவ்வளவு கேவலமான குப்பை என்பதை இந்து பத்திரிகையின் ஊரகப்பிரிவு ஆசிரியர் சாய்நாத் கடந்த மே மாதம் 10 ம் தேதி இந்துவில் எழுதியுள்ள கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார். கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பி.டி பருத்தியை ஆதரித்து எழுதிய யோக்கிய சிகாமணி தான் இந்த டைம்ஸ் ஆப் இந்தியா.
அந்த பத்திரிகை தான் பு.ஜ.தொ.மு வை பயங்கரவாத சங்கம் என்றும், தடை செய்ய வேண்டும் என்கிற முதலாளிகளின் அறிக்கையையும் வெளியிடுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த கைக்கூலித்தனத்தை கண்டித்து பு.ஜ.தொ.மு கடந்த 9.8.12 அன்று ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு மாவட்டத் துணைத்தலைவர் தோழர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் வரதன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பிற சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவேசத்துடன் கண்டன முழக்கமிட்டனர்.
சிறப்புரையாற்றிய தோழர் வரதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ ஒட்டிய சுவரொட்டி வாசகங்களை திரித்தும், அவதூறு செய்தும் ஒரு வன்மமான அவதூறு செய்தியை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. 1000 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள மாருதியில் நடைபெற்ற வன்முறையை தமிழகத்திலிருக்கும் இந்த சங்கம் வாழ்த்தி வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற அமைப்புகள் வளர்ந்தால் தமிழகமே லாக்கவுட் தேசமாகிவிடும், தொழில்துறையின் அமைதியே கெட்டுவிடும் என்றெல்லாம் எழுதியுள்ளது என்று கூறியவர்,
இந்த பத்திரிக்கை ஏன் இவ்வாறு அவதூறாக எழுதுகிறது ? தனது எஜமானர்களான முதலாளிகளை காப்பாற்றுவதற்காகவும், அவர்களின் வன்முறைகளை மூடிமறைப்பதற்காகவும் தான் இப்படி எழுதுகிறது. மேலும் இது ஒரு மக்கள் விரோத, தேசவிரோத, ஏகாதிபத்திய ஊதுகுழல் பத்திரிக்கை என்பதையும் பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இந்த நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது முதலாளிகளால் கட்டவிழத்துவிடப்படும் பயங்கரவாதத்தாக்குதல்களை பு.ஜ.தொ.மு அம்பலப்படுத்துவதால் தான் இந்த கைக்கூலி பத்திரிகை அவதூறு செய்கிறது.
எனவே உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். காணும் இடங்களில் எல்லாம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்தார்.
இறுதியில் கமாஸ் வெக்ட்ரா ஆலையின் கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டம் தொழிலாளர்கள், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.
______________________________________________________
தகவல் பு.ஜ.தொ.மு ஓசூர்
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?
- புரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!
- மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
- மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!
- மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!
- மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
- மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!
- மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!
- மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!
- இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!
In today’s TOI first page, there is a news with title “Organic food not healthier: Study”
http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOIBG&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&AW=1346816424968
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2012/09/05&PageLabel=1&EntityId=Ar00101&ViewMode=HTML
They are doing this intentionally in the first cover page. No idea about the money they received from Seed companies like Monsanto and other fertilizer & pesticides manufacturers.
Monsanto and other fertilizer & pesticides manufacturers…..have they bought the newspaper?.they are the one that should be finished off immediately.organic food vs conventional food a study,this was their headings could any one ever think or dare to say or write organic is not conventional…. sons of bitches.
இது டைம்ஸ் ஆப்ஸ் இன்டியாவின் கயமைதனத்தை காட்டுகின்றது
How absurd organic food nt healthier ? hw misleadn dis food article caption.nvr imagined TOI wud stoop so low
http://www.vikatan.com/pasumaivikatan/Special-categories/23791-.html#cmt241
”பி.டி. விதைகளுக்கு வருகிறது தடை!”