இந்தக் காலத்தில் இப்படியொரு கொடுமையா என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்துவெறி பா.ஜ.க. ஆளும் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ள தீண்டாமைக் கொடூரம்.
ம.பி.யின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கணேஷ்புரா கிராமத்தில் கடந்த ஜூன் 13 அன்று, பொதுக் குழாயில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற புரான் யாதவ் என்ற ஆதிக்க சாதிவெறியனது டிபன் பாக்ஸ் மீது அந்தச் சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால் அவனது உணவு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதைத் தொடர்ந்து, அந்த ஆதிக்கசாதி வெறியனின் மனைவியும் குடும்பத்து பெண்களும் திரண்டு அச்சிறுமியை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு மிருகத்தனமாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க பொதுக்குழாய் பக்கம் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இத்தாக்குதலின்போது, அமைதியான பார்வையாளர்களாக இருந்த அப்பகுதிவாழ் ஆதிக்க சாதியினருக்கு இது சமூகக் கொடுமையாகவே தெரியவில்லை. அதன் பிறகு, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி அச்சிறுமியுடன் அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்ததாலேயே இந்த கொடுஞ்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.
இது ஏதோ விதிவிலக்கான விவகாரமல்ல. நாடெங்கும் தொடரும் தீண்டாமைக் கொடுமையின் துலக்கமான வெளிப்பாடுதான் இது. தாழ்த்தப்பட்ட பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த மே மாதத்தில் உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளன. மகாராஷ்டிராவின் அஹமத் நகர் மாவட்டத்தின் ஷிரடி நகரில், கடந்த மே மாதத்தில் சாகர் ஷேஜ்வால் என்ற ஒரு தலித் இளைஞர், அம்பேத்கரைப் போற்றும் பாடலை செல்போனின் ரிங்டோனாக வைத்திருந்த குற்றத்துக்காக மராத்தா சாதிவெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் ஏற்றி கொல்லப்பட்டார். உயர் கல்விக்கான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளியின் இரண்டு மகன்கள் தெரிவு செய்யப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல், உ.பி. மாநிலத்தின் பிரதாப்கார் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டின் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இவற்றையெல்லாம் அதிர்ச்சியூட்டும் விவகாரமாகப் பார்க்கும் சமுதாயம்தான், கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதையும், சவ ஊர்வலத்திற்கு தாழ்த்தப்பட்டோரை பறையடிக்கச் சொல்வதையும், சவ அடக்க வேலைகளை தாழ்த்தப்பட்டோரைச் செய்ய வைப்பதையும், வாடகைக்கு வீடு கேட்டால் நீங்கள் சைவமா, அசைவமா என்று வீட்டு உரிமையாளர்கள் நைச்சியமாக விசாரிப்பதையும் இயல்பான சமூகப் பழக்கவழக்கங்களாக ஆதிக்க சாதி மனோபாவத்துடன் அணுகுகிறது. நவீன காலத்திலும் இத்தகைய சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி, அதனைக் கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.
சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக நிற்க வேண்டிய அரசோ, துப்புரவு வேலைகளை தாழ்த்தப்பட்டோர் மட்டுமே செய்ய வேண்டுமென நிர்பந்திப்பதோடு, மாட்டுக்கறிக்குத் தடைவிதித்து சாதியாதிக்கத்தை மேலிருந்து சட்டபூர்வமாக நிலைநாட்டுகிறது. ஒரு அளவுக்கு மேல் சாதிய அடக்குமுறைகள் போகக்கூடாது என்றும், அந்த அளவைத் தாண்டுவதைத்தான் அதிர்ச்சியூட்டும் தீண்டாமைக் கொடுமையாகவும் அரசும், ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் பார்க்கின்றன. அளவோடு தொடரும் தீண்டாமையை இயல்பான சமூக பழக்கவழக்கமாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மக்களைப் பழக்கப்படுத்தி, மிதவாத சாதியத்தைக் கட்டிக் காக்கின்றன. இந்நிலையில், தொடரும் தீண்டாமையை இயல்பான சமுதாயப் பழக்கவழக்கமாக அங்கீகரித்துக் கொண்டு, இதனை நாகரிகமிக்க சமுதாயம் என்று நாம் இன்னமும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா?
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

இவனுகலெல்லம் காட்ரை சுவாசிக்காமல் செத்துத் தொலயட்டும் அவன் டிப்பன் பாக்சில் காட்ரும பட்ரிருக்கும்
The people who threaten the child should be kept as untouchable. I wish the child should not forgot this incident and has to grow up as fire.That child should attain the respectful position in society.Dear child keep this incident in your mind and work hard every day you will touch the peak. Please take this message to the ears of the child.
“Changes is the one that cannot be changed ”
Earth always revolve don’t ever forgot this. One day people at bottom will come to up and people at upper will go down. That day is not much far. I don’t know the person who frame the rules and separate people. Each and every one has born in same path from your mother’s womb. There is no external identification by nature then what makes you people to do separate and categorize people. Who gave permission / rights to call/identify people with their caste name. Who named it ? If there is God i will fight with them as one woman army.
One day truth will be relieved to world at that time no one can hide it .
I am waiting!!!!!!!!!!
Miss/Mrs. Angavai…..
//If there is God i will fight with them as one woman army.//
There’s No need to fight with god. Even there’s no need to fight with any one. All We need is to Struggle against the imbalanced society.To struggle against all the inequalities, injustice, untouchability in our society, and also mainly against brahmanical tyranny, bourgeois exploitation. To struggle against all these social nerds you don’t need to fight as one woman army. Join In any revolutionary organization, (women’s liberation front will be more fine) and give your greatest contribution towards eradicating all social injustice. A revolutionary social conversion is a urgent need to accomplish all our dreams. wishes n regards …
Brother there is no need for revolutionary organization. If people are been categorized to be untouchable there is fault on both sides.with or without knowing they also cooperating. According to my point of view providing education ,uplifting their status will provide them healthy society for them.
Mr.Siddharth
More than 2000 yrs we people are suffering this injustice society.So many tragedy passes.Of course i am contribution my part to the society and will continue.I cannot be calm on seeing such ___ incident.
I too don’t want to fight alone. I was so nervous while reading this news so i commented in such ways.I like to make my point clear.
//If there is God i will fight with them as one woman army.// I stated this sentence to intimate that there is no God . I doesn’t mean i won’t join hands with all.
Its my pleasure to join you all. I wish more youngster to join my hands sorry our hands.
Thank you
I suggest there is no need for fight , struggle and no need of organization provide education and guide youngster in right path will do revolutionary social conversion.
” One man development will lead to society development.”
I am happy to see your suggestion . Hope you too contributing more to our society.
Joining organization is easy.I like to know can you tell me the safest place for SC/ST young woman [according to others view] where we can contribute.
Miss/Mrs. Angavai…
Happy to see your feed backs on joining your hands with us. Like you quoted an individual development is quite possible in the society which is independent from all the yokes of caste,creed, political intervention and especially from all sort of oppression,old inequalities,economical discrimination, male domination. The society has to liberate itself from all these above problems by over throwing all these above perversion which is contaminating our society. By casting away the old presence and to form a new social structure, which gives new democracy to all the oppressed and working peoples.
To attain this social progress, constant battle has to be waged on the owners of the means of production, the capitalist class (Which runs schools,educational institutions,dispensary,hospitals n other essentials for the public),oppressor class mainly against brahmmanical hindutuva despotism, which bifurcates the humans in the name of caste as said in this article. To struggle against all these social putrefaction we need a stable, dedicated enthusiastic organization which leads the majority of the society towards the new society. This big task cannot be done by a individual. A group of society which is well organised by an movement for the welfare of social is vital.
Like you said a safest, studious and mainly non carrier organisation is much needed. In that sense you can take part and contribute your best for the social conversion by joining Women’s Liberation front (பெண்கள் விடுதலை முன்னணி). Hence i give u some articles regarding this. Here is there contact No:- 9841658457. 99411 75876. You can seek more details. wishes N regards…
https://www.vinavu.com/2014/02/21/bus-conductor-driver-punished-for-misbehaving-with-women/
https://www.vinavu.com/2014/03/04/march-8-wlf-hall-meeting/
https://www.vinavu.com/2013/02/15/women-fighting-abuses/
Go through these articles even there is lot more…
Society criticize women but it adversely criticize and under-estimate SC/ST women.So i think it would be better to have SC/ST Women’s Liberation Front. Now there is emergency need for SC/ST Women’s Liberation Front.Let me know their contribution in vachathi incident.
Miss/Mrs. Angavai………….
//So i think it would be better to have SC/ST Women’s Liberation Front. Now there is emergency need for SC/ST Women’s Liberation Front.//
The above said women’s liberation front is the top most organization for Sc/St women’s safe guard. Definitely women’s liberation front is the One and only organization which’ll bring all the lost dignity, honor,self respect in the above said(Sc/St) women’s life for sure. And i promise you for sure. To know more about vacchathi incident. pls call to their number and inquire. here’s the number: 99411 75876.
It is too bad these people go unpunished.
பள்ளிகளில் தீண்டாமை கொடுமைகளை பற்றி வடமாநிலங்களில் சரியாக கற்றுக்கொடுப்பதில்லை. நம் ஊரிலும் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. ஆனால் இங்கு எதிர்த்து போராட ஊருக்கு நாலு பேர் இருக்கிறார்கள். அங்கு இதெல்லாம் சகஜம் என்ற நிலையில் இருக்கிறார்கள்.
தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வடமாநிலங்கள் இன்னும் பின்தங்கி தான் உள்ளன.
மாணவர்களிடம் பள்ளி வயதிலிருந்தே இதை பற்றி தெளிவாக எடுத்துரைத்தால் அடுத்த சந்ததியினராவது தீண்டாமை கொடுமையிலிருந்து வெளியே வருவார்கள்.