Tuesday, April 7, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

-

நவம்பர் 30-ல் வீசிய ஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர்.

ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர்.

ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.

விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?

பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!

 

டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் வினவு செய்தியாளர்கள் குமரி கடற்கரை கிராமங்களுக்கு நேரில் சென்றனர். அதே நாட்களில் இங்கே ஆர்.கே.நகர் தேர்தலை ஒட்டி காசி மேடு மீனவர்களையும் சந்தித்தனர்.

இந்த ஆவணப்படம் ஒக்கி புயலோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதார போராட்டத்தை தீவிரமாக எடுத்து வைக்கிறது. இந்தப் படத்தைப் பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்!

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. எத்தனை கோடி துன்பங்களை வைத்துள்ளது இந்த அரசு ,அதுவும் தமிழக மீனவர்களுக்கு இருக்கும் துயரம் சொல்லில் அடங்காது.மீனவர்களின் அறிவையும், தைரியத்தையும், உழைப்பையும் இந்த ஆவணப்படத்தின் மூலம் அறியும்போது வியப்பாகவேயுள்ளது.உலகமயம் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கவே செய்கிறது.எத்தனை அதிநவீன ஆயுதங்கள் படைகள் தொழில்நுட்பங்கள் ரேடார்கள் இன்னும் என்னென்ன… ஆனாலும் அரசு என்பது சுரண்டும் வர்க்த்திற்க்கே சேவை செய்யும் கருவி என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்தே வருகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் மொத்தமாக உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
    வினவின் இந்த ஆவணப்படம் மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்….

  2. ஆவணப்படம் மனதெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இறுதியில், அந்தக் குழந்தையின் ” அப்பா தீவுக்குள்ள கிடக்கிறாங்க ..” என்ற வார்த்தை ஒரு நிமிடம் கண்கலங்க வைத்துவிட்டது. நானும் அந்தக் குழந்தையைப் போல நம்புகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க