காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி யில் கடந்த ஏப்ரல்-11 அன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடினர். அவர்களில் 20 பேரை கைது செய்தது போலீசு.

மேலும் மாணவர்கள் இது போன்று தன்னெழுச்சியாகத் திரளக்கூடாது என்பதற்காக  “போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது” என மிரட்டல்விடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் திருச்சி மாநகர கமிசனர் அமல்ராஜ்.

போராடும் மாணவர்களை மிரட்டும் கமிசனர் அமல்ராஜ்

இந்நிலையில் காவிரிக்காக போராடிய 20 மாணவர்களுக்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் பிணை வாங்கினர். அதனடிப்படையில் இன்று அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்தனர். அப்போது சிறை வளாகத்துக்குள்ளேயே வைத்து பீர் முகமது, முகமது ஆசிம் ஆகிய இரண்டு மாணவர்கள் மீது வேறொரு வழக்கைப் புனைந்து மீண்டும் கைது செய்தது, திருச்சி போலீசு. இது மாணவர்களை பிளவுபடுத்தும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து “மாணவர்களை இந்து – முசுலீம் என பிளவுபடுத்தாதே ! நாங்கள் காவிரியின் மைந்தர்கள்! கைது செய்த பீர் முகமது மற்றும் முகமது ஆசிமை விடுதலை செய் !” என்ற முழக்கத்தின் கீழ்  திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முன்பு 9.04.18 (இன்று) புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழகத்தைப் பிளவுபடுத்த நடக்கும் இந்த சூழ்ச்சியை மாணவர்கள் புரிந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென்றும்; போலீசின் சதித்தனத்தை ஜனநாயக சக்திகள்  கண்டிக்க வேண்டுமென்றும், அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க