மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலையிழப்பும் இலாப இழப்பும் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு ( All India Manufacturers Organisation) மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையினரின் கூட்டமைப்பாக உள்ளது அனைத்திந்திய உற்பத்தியாளர் அமைப்பு உள்ளது.

விற்பனையாளர்கள், சிறு- குறு- நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அமைப்பு  34,700 மாதிரிகளிடம் சேகரித்ததில் மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல இன்னல்களை தொழில்துறையினர் சந்தித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.  வர்த்தகப் பிரிவில் 43% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறுந்தொழில் பிரிவில் 32%, சிறு தொழில் பிரிவில் 35%, நடுத்தர தொழில் பிரிவில் 24% வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு சொல்கிறது.

இந்த கூட்டமைப்பின் தலைவர்  கே. இ. ரகுநாதன், வர்த்தகர்கள் மற்றும் சிறு- குறு- நடுத்தர தொழில் துறையினர் ஆபத்தான சிவப்பு கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய அரசின் உடனடி கவனமும் தீவிரத்தன்மையுடைய அணுகலும் இந்தத் துறைகளுக்கு தேவை எனவும் தெரிவிக்கிறார்.  அதோடு, 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வு வர்த்தகர்களின்  இலாப இழப்பு 70% குறைந்துள்ளது என்கிற அதிர்ச்சி தகவலையும் கூறுகிறது.

“குறு தொழில் நிறுவனங்களில் இலாப இழப்பு 43%- ஆகவும் சிறு தொழில் நிறுவனங்களின் இலாப இழப்பு 35%-ஆகவும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 43% இலாபத்தையும் இழந்துள்ளது. இது மிகப்பெரிய அடி.  மேலும் இழப்புகளை ஏற்படாமல் தடுக்க உடனடி கவனம் தேவை. பலர் ஏற்கனவே மீள முடியாத நிலைக்குச் சென்றுவிட்டனர்” என்கிறார் ரகுநாதன்.

படிக்க:
சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !
மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !

மோடி அரசு பதவியேற்றதன் பின்பான 2015-16 ஆண்டுகளில் தொழில்துறையினரிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்ததாக இந்திய தொழில்துறை சார்ந்தவர்கள் மற்றும் பங்குதாரர்களின் நேர்காணல்களில் மூலம் தெரிவந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்த ரகுநாதன், “ஆனால் அடுத்த ஆண்டே எதிர்ப்பார்ப்புக்கு எதிராக பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டது அரசு. அதன் பின் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏற்பட்ட நிதியின்மை, அரசுக்கு செலுத்த வேண்டிய அதிகப்படியான தொகை, பல சிக்கலான விசயங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறைகளை மோசமாக்கின” என்கிறார்.

பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.

கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இதையும் பாருங்க…

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க  பாடல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க