னித உரிமைகளுக்கு மாபெரும் எதிரியான பார்ப்பன இந்துமதத்தின் புரட்டுக்களையும், இழிவுகளையும் எதிர்ப்பது என்பது அடிப்படையில் ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். வரலாற்று அறிவியலின் அடிப்படையில் தொல்லியல் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முன்வைத்த உண்மைகளை தூக்கி யெறிந்து விட்டு, மத நம்பிக்கை என்ற அடிப்படையில் துளசிதாசர் இராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டாடும் உச்சநீதி மன்றம். நேர்மையான முன்னாள் இராணுவ வீரர் நல்லகாமனை மனித உரிமைக்கு எதிராக அடித்து அரைநிர்வாணமாக்குவதும், கிரிமினல் சங்கராச்சாரி ஜெயேந்திரன் மலம் கழிக்க தலைவாழை இலை அறுக்கும் காவல் நிலையங்கள்.

இப்படியொரு முறைகேடான வெட்கக்கேடான சூழல் நிலவும்போது வெறும் சட்டவரம்புகளில் மட்டும் நின்று சமூக விடுதலையை சாதிக்க முடியாது. சட்டவரம்பிற்கு அப்பாற்பட்ட முறையில் மட்டுமே சமூகத்திற்காக சரியாகச் சிந்திக்க முடியும் என்பதை காலம் உணர்த்துகிறது. ஏற்கெனவே சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடினால் தீட்டு என்று கொக்கரிக்கும், சிவனடியார் ஆறுமுகச்சாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் தில்லை வாழ் அந்தணர்களின் திமிருக்கு எதிராகப் போராடி வருகிறோம் நாங்கள். இப்போது ராமன் பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை’ என்று புதிய கதை எழுதும் உச்சநீதி மன்ற தில்லிவாழ் அந்தணர்களுக்கு எதிராகவும் அவாளோடு சேர்ந்து ராம பஜனை பாடக் கிளம்பியிருக்கும் புதிய பார்ப்பனர்களுக்கு எதிராகவும் நாங்கள் செய்துவரும் வேலைகளின் ஒரு பகுதியாக இந்தக் கவிதை நூலைக் கொண்டு வருகிறோம். நூற்றாண்டுகளாக நம்மை நசுக்கும் பார்ப்பனி யத்துக்கு எதிரான வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை. அதை தீர்ப்பதற்கான அரசியல் திசை வழியை அடையாளம் காட்டும் இந்தக் கவிதை நூலை வழக்கம் போல நீங்கள் வரவேற்று ஆதரியுங்கள். (நூலின் முன்னுரையிலிருந்து…)

கதிருக்கு அடிக்க வேண்டிய
பூச்சி மருந்தை
தன் உயிருக்கு
அடித்துச் சாகிறான் விவசாயி;

காரணமான உலகமயம் பற்றி
நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த
குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி
நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!…

மசாஜ் பார்லர் வைத்து
ஆளைப்பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனுதர்மத்தை வைத்து
ஆளைப் பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்

மாமனை வைத்து தொழில் செய்தால்
அதற்குப் பெயர் விபச்சாரம்;
ராமனை வைத்துத்
தொழில் செய்வதற்குப் பெயர்
ராமாயணம்.

ராமனையா பழிப்பது
என கோவணத்தை வரிந்து கட்டும்
கோபாலா….

ஆ… ஊ… என்று அரற்றி வரும்
அக்கிரகாரத்து சூத்திர்வாலே
‘ஏ’வும் ‘யு’வும் போட்டு
ஓட்ட வேண்டிய
உங்கள் ராம காவியத்தை
உள்ளது உள்ளபடி ஓட்டுவாயா?…

அன்று:
ஊரான் மாட்டை
அவாள் ஓசியில் தின்றது
உபசாரம்;
இன்று:
உழைத்திடும் மக்கள்
காசுக்கு வாங்கிக் கறி தின்றால்
அபச்சாரம் அபச்சாரம்.

அவாள்
சாராயம் குடித்தால்
அது தீர்த்தம்;
நம்மாள் குடித்தால்
நாத்தம்.

பார்ப்பானோடு பழகி
கெட்ட பழக்கங்கள் வந்தது போதும்
பஞ்சமரோடு/பறையரோடு பழகடா
பாட்டாளி வர்க்க
உழைப்பைக் கற்று உயரடா…

நம்ம மேல சாமி வந்தா
நாக்குல கம்பியைக் குத்துது!
பார்ப்பான் சாமி மேலே வந்தா
போய் அடுத்தவனை வெட்டுது!
எனவேதான் சொல்கிறோம்
பக்தி என்ற பெயரிலே
பார்ப்பான் பின்னே செல்லாதே!

இந்து என்ற நினைப்பிலே
ராமன் பின்னே செல்லாதே!…

எய்ட்ஸ்… ஆர்.எஸ்.எஸ்.
இரண்டும் ஆபத்து
உள்ளுக்குள் விட்டால் உயிரின்
எதிர்ப்புணர்வு குன்றிவிடும்
உள்ளே விட்டதனால்
இதோ-உருக்குலைந்து தமிழ்நாடு!…. ( நூலிலிருந்து…)

நூல்: இந்து என்று சொல்லாதே… ராமன் பின்னே செல்லாதே!
ஆசிரியர்: துரை.சண்முகம்

வெளியீடு: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை.
158, சேதுபதி குறுக்குத் தெரு, இராமையா தெரு கடைசி,
ஜெய்ஹிந்த் புரம், மதுரை – 11.
தொலைபேசி: 94434 71003

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

1 மறுமொழி

  1. திருப்பூர் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கு உள்ளதா தோழர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க