சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் வள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய இந்து மதவெறி பாசிஸ்டுகள் !
தலித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படும் முருகனை வளைத்துக் கொண்டு வேல் நாடகம் ஆடினார்கள். இன்று வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள். வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார்கள்.
தமிழுக்கு பூணூல் போடும் இந்து மதவெறி பாசிஸ்டுகளை அடையாளம் கண்டு தமிழர்கள் அக்கும்பலைவிட்டு தள்ளி நிற்க வேண்டும் என்பதை அன்றே தமது குறளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
குறள் :
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூவும் இல்
குறள் – 460
பொருள் :
நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை ஏதுமில்லை; அதுபோல, தீய இனத்தைவிட நம்மை துன்புறுத்தும் பகையும் வேறொன்றும் இல்லை.
கருத்துப்படம் :
கருத்துப்படம் : மு. துரை