அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !
கைத்துப்பாக்கிகளுடன் வலம் வரும் காவிக் குண்டர்களுடன் காவி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் மாடுகடத்தல் குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்கிறது.
அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முஸ்லீம் நபர் ஒருவர் பசுக் குண்டர்களால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.
தாக்கபப்ட்ட வீடியோவில், அந்த நபரை கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த பசுக் குண்டர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார். அவரை தாக்கியவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பியதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் உள்ளூர் பஜ்ரங் தள் குண்டர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூலித் தொழிலாளி முகமது ஷோக்கீன் (38), “அன்று காலை வயலுக்குச் சென்ற சாஹிப் உசேன் (26), பசுக் குண்டர்களை கண்டது ஓடினார். அவர்கள் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டபோது, தரையில் விழுந்த அவரை கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்து வகுப்புவாத பதட்டங்களை உருவாக்கவும், ஊர்மக்களுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தவுமே அவர்கள் இங்கு வந்துள்ளனர்” என்று ஷோக்கீன் கூறினார்.
தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த உள்ளூர் தோட்டக்காரர், “அவர்கள் 20-25 ஆண்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அவர்கள் அவரை அழைத்துச் சென்றனர்” என்றார். இத்தாக்குதலை வீடியோ எடுத்த பால் வியாபாரி ஒருவரின் தொலைபேசி பசுக் குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டது.
ஏப்ரல் 23 அன்று மாலை, மேவாட் போலீசு கௌசம்வர்தன் சட்டம், 2015-ன் பிரிவுகள் 13(1) மற்றும் 13(3)-ன் கீழ் உசைன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.
இதே சம்பவத்தின் இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. முதல் வீடியோ, பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி துப்பாக்கியை நீட்டி அச்சுருத்துவதை காட்டியது. இரண்டாவது வீடியோவில், ஒரு நபரை துப்பாக்கி முனையில் பசுக் குண்டர்கள் இழுத்துச் செல்கிறது.
வீடியோக்கள் வைரலான பிறகு, மூன்று முதல் நான்கு அடையாளம் தெரியாத நபர்கள்” மீது பிரிவுகள் 286, 294, 323, 342, 506 மற்றும் ஆயுதச் சட்டம், 1959 ஆகியவற்றின் கீழ் ஏப்ரல் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது போலீசு.
இதேபோன்ற சம்பவங்கள் இரண்டு கிராமங்களில் பதிவாகியுள்ளன. பசாய் மியோ கிராமத்தில் பசுக் குண்டட்கள் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டனர்.
ரவ்லி கிராமத்தில், ஹக்முதீன் மற்றும் ரயீஸ் என்ற இரண்டு சகோதரர்களை அவர்களது வீட்டு வாயிலில் இருந்து பசுக் குண்டர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மற்றொறு சகோதரர் ஆஸ் முஹம்மது, “அவர்கள் என் சகோதரர்களைத் தாக்கினர். அவர்கள் பசு கடத்தல்காரர்கள் அல்ல. ஒருவர் கூலித் தொழிலாளி, மற்றொருவர் தாலுகாவில் போர்ட்டராக பணிபுரிகிறார். எனது சகோதரர்கள் பசுக் குண்டர்களால் கடத்தப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து போலீசு வந்தது. சகோதரகள் மீது மாடு கடத்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குருகிராமில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்துள்ளது” என்று கூறினார்.
அரியானா மாநிலத்தில் பசுக் குண்டர்களால் பல்வேறு கிராமங்களின் முஸ்லீம் இளைஞர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கைத்துப்பாக்கிகளுடன் வலம் வரும் காவிக் குண்டர்களுடன் காவி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் மாடுகடத்தல் குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்கிறது.
பாசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஊருக்குள் நுழைந்து ஆயுதங்களுடன் முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்களையும், தாக்குதலுக்குள்ளான நபர்கள் மீதே மாடுகடத்தியவர்கள் என்று பொய்வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்கும் காவி போலீசையும், அரியானாவின் பல்வேறு கிராம மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.